Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூவிலை - 7 | இளந்தளிர் (இறுதி அத்தியாயம்) | கிருஷ்ணா பச்சமுத்து | திகில் நாவல்

Advertisement

கீழே நாவலைப் படித்துவிட்டு, என் எழுத்தைப் பற்றிய உங்கள் எண்ணத்தை பதிவு செய்யுங்கள்!

  • நீயெல்லாம் எழுத வந்ததே தப்பு.

  • ஏதோ எழுதுறப்பா.. ஒரு முறை படிக்கலாம்!

  • நல்லா இருக்குப்பா..

  • ரொம்ப சூப்பர்! கதையின் பாத்திரங்களும் கருவும் நெஞ்சில் நிற்கிறது! மேலும் நிறைய எழுதுங்கள்!

  • எழுதுவதில் நீ இன்னும் நிறைய கத்துக்கணும்!


Results are only viewable after voting.

writerkrishna

Member
Member

மூவிலை - 7

| இளந்தளிர் |​

நவம்பர் 21, 2018. முன்னிரவு | முத்துசுவாமி இல்லம்.

உள்ளே நுழைந்த ஆய்வாளர் பிரபுவுடன், பிரணிதாவும் மூன்று காவலர்களும் உடன் வந்தார்கள்.

“என்னாச்சு பிரணி..?” கேட்டுக்கொண்டே சண்முகவேல் முன்னே வந்தார்.

“உங்க பொண்ணு ஒன்னும் பண்ணல. நீங்க தான் நெறய பண்ணிருகீங்க..?” பிரபு சொன்னார்.

கேட்டவுடன் அமைதியாய் அதே இடத்தில் நின்றார் சண்முகவேல்.

"ஹலோ சார். ஐ அம் இன்ஸ்பெக்டர் பிரபு. ஈ4 ஸ்டேஷன்”

“இன்ஸ்பெக்டர் மதன்ராஜ், கபிஸ்தலம் ஸ்டெஷன். என்ன கேஸ்?”

“5 மினிட்ஸ் அப்டி வர முடியுமா?”

“எஸ்.."

இருவரும் சிறிதுநேரம் தனியே சென்று பேசினர். சில நிமிடங்களுக்கு பிறகு, சண்முகவேல் கையில் விலங்கு மாட்ட பிரபுவிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“நான் என்ன பண்ணேன்?”

“மிஸ்டர் சண்முகவேல். உங்க பொண்ணு எல்லாத்தையும் சொல்லிட்டாங்க” பிரபு சொன்னார்.

சண்முகவேல் திடுக்கிட்டு பிரணிதாவைப் பார்த்தார். பிரணிதா அவளது அப்பாவை குறுநகையுடன் தெளிவான பார்வையுடன் பார்த்தாள். சண்முகவேல் கையில் விலங்கு மாட்டப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டார். பின்னே மயிலப்பனும் கபிஸ்தலம் காவலர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துசெல்லப்பட்டார்.

**

இரண்டு நாட்களுக்கு பிறகு.

காவல் ஆணையர் அலுவலகம்.

ஆய்வாளர் பிரபு வராந்தாவில் நடந்து, ஆணையரின் அறைக்குள் நுழைந்தார். உள்ளே ஆணையர் ஜான்பால் அமர்ந்திருந்தார்,

“ஹங்.. வாங்க பிரபு..”

“சார். சுப்ரமணி கேஸ் ஓவர் சார்..”

“குட்"

“சீரியல் கில்லிங் டைப் சார். சண்முகவேல் தான் மெயின் அக்கியூஸ்ட். முத்துசுவாமி சண்முகவேலோட அப்பா. அப்பா சொன்னதுக்காக பண்ணதா வாக்குமூலம் கொடுத்துருக்கார் சார். பண்ணதுக்கு அவரோட பொண்ணு பிரணிதா விட்னஸ் சார். முத்துசுவாமி இறக்கும்போது, தாவரங்களையும் இயற்கையையும் பாதுகாக்க, சமூக செயலில் ஈடுபடனும்னு சண்முகவேலுக்கு சொல்லிருக்கார் சார். முக்கியமா ரியல் எஸ்டேட்ங்கிற பேர்ல நிறைய நிலங்கள் அழிக்கப்படுதுனும். நல்ல நிலங்கள், நகரங்களைப்போல மாற்றி அமைக்கப்பட்டு மக்கள் மேல திணிக்கப்படுவதாகவும் அதற்கு எதிரா சண்முகவேலை போராடவும் சொல்லிருக்கார். ஆனால் இப்போ இருக்குற மக்கள் முன்னிலையில் போராடிப் பயனில்லைனு முடிவு பண்ணி ரியல் எஸ்டேட் காரங்கள கடத்தி, கடத்தின அஞ்சு மணி நேரத்துக்குள்ள கொன்னு, பாடிய நேரா உரமா மாத்திருக்கார் சார். இதுவர எந்த டெட்பாடிஸும் கெடைக்கல”

“இது சாத்தியமா?”

“எஸ் சார். யூஎஸ் ல இந்த மாதிரி உடலடக்க முறை இருக்கு சார். சண்முகவேல் ரொம்ப தொடர்ச்சியா இத பண்ணாம நல்லா இடைவெளி விட்டு பண்ணிருக்கார் சார்.”

“தனியா இத்தனையும் பண்ணிருக்கானா?”

“நோ சார். சண்முகவேல் வொய்பும் இதுல இன்வால்வ் ஆயிருக்காங்க. அவங்களையும் அரஸ்ட் பண்ணியாச்சு சார்.”

“ஒகே.. குட். மத்த வேளையெல்லாம் கவனிங்க.”

“எஸ். சார்” சல்யூட் வைத்துவிட்டு வெளியே வந்தார் பிரபு.

**

இருபது வருடங்களுக்கு பிறகு.

அக்டோபர் 4, 2038. காலை.

தமிழகம் வரிசையாக பல இயற்கை சீற்றங்களை கடந்து வந்திருந்தது. சண்முகவேல் இருந்த திருப்போரூர் பங்களா முழுவதும் இடிக்கப்பட்டிருந்தது. அந்த மிகப்பெரிய நிலம் முழுவதும் உயர வளரும் மரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. விவசாய நோக்கமில்லாமல், நிலத்தடி நீரைப் பெருக்கும் மரங்கள் வளர்க்கபட்டிருந்தன. நிலத்தின் நான்கு எல்லையிலும், நடுவிலும் உருளை வடிவில் மிக குறைவான நிலத்தைக் கொண்டு மூன்று மாடியில் வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த ஐந்து வீடுகளையும் இணைக்கும்படி குறுகலான நடைபாதை அமைக்கபட்டிருந்தது. மகிழுந்து நிற்பதற்கு எல்லையிலேயே இடம் ஒதுக்கபட்டிருந்தது. உள்ளே நடந்துதான் வர முடியும். வாகனங்களுக்கு அனுமதியில்லை. மையத்திலுள்ள வீட்டில் பிரணிதாவின் அறை இருந்தது. தினமும் காலையில் வீட்டின் உச்சியில் நின்று மரங்களின் அழகை ரசிப்பதும், பறவைகளின் ஒலியை கேட்பதும் அவளுக்கு மிகப்பிடித்த செயலாய் இருந்தது. இன்றும் பிரணிதா தேனீருடன் மரங்களை ரசித்துக்கொண்டிருந்த போது, யுவராணி வந்தாள்.

"பிரணி. உன்ன யூ-டியூப் சானலுக்கு இண்டர்வியூ பண்ண டைம் கொடுத்திருந்தீங்களாமே. தே கால்டு. 10:30கு வராங்களாம். ரிமைண்ட் பண்றேனு சொல்லிருக்கேன்.."

"ஓ... எஸ் எஸ்.. ஐ வில் டேக் கேர்.."

"ஓகே.. பை.. நான் காலேஜ் கிளம்புறேன்.."

"யா.. ஓகே.. ஓகே.!"

யுவராணி! சுயமாய் வேலை செய்து படிப்பையும் தன் செலவையும் பார்த்துக்கொள்கிறாள். அன்னை இல்லத்தில் வளர்ந்தவள். நன்றாக சமைப்பவள். பிரணிதா, அவளின் சமையலுக்காகவே வைத்திருந்தாள்.

இரண்டு மணி நேரத்திற்கு பின், யூ-டியூபிலிருந்து சுவர்ணாவும் அவளது குழுவும் வந்தார்கள். எல்லா உபசரிப்புகளும் முடிந்தபிறகு துவங்கினார்கள்.

"வாங்க பிரண்ட்ஸ். “ ஹெலோ டியர்” சானலோட 'நம்ம லெஜெண்ட்' ஷோக்கு உங்கள வரவேற்பது நான் உங்க சுவர்ணா. இன்னைக்கு நாம சந்திக்க போறது சுற்றுசூழல் ஆர்வலர் பிரணிதா அவர்கள். வணக்கம் பிரணிதா!"

"வணக்கம்..!"

"எப்டி இருக்கீங்க.."

"நல்லா இருக்கேன்.. நீங்க..?"

"ரொம்ப சூப்பர்.. நீங்க ஒரு சுற்றுசூழல் ஆர்வலரா இருந்து, மரங்களைப் பற்றியும் காடுகளின் தேவையையும் தெளிவா எடுத்துசொல்லி "சூலகம்"-னு ஒரு குழுமத்தை ஏறபடுத்தி நிறைய மரங்கள் நடுதல் போன்ற சிறப்பான காரியங்கள பண்ணிட்டு வர்றீங்க! உங்க ஸ்டடீஸ் கூட சுற்றுச்சூழல் பத்திதான் படிச்சுருக்கீங்க. இந்த எண்ணம் எப்படி வந்தது உங்களுக்கு?”

“இது எங்கிட்ட இருந்து வந்ததில்ல. என்னுடைய தாத்தா, அப்பா வழி வந்ததுதான். எல்லாருக்கும் வர வேண்டிய ஒன்னுதான். என் தாத்தா, அவர்..” சொல்லும்போது அவளின் எண்ணம் முத்துசுவாமி மற்றும் சண்முகவேல் பற்றிய நினைவுகளுக்கு இழுத்துச்சென்றது. குரல் நடுங்கி லேசாய் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது. பிரணிதா இதுவரை யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை. "ஒரு நிமிஷம்” சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள். சில நிமிடங்களுக்கு பிறகு, வெளியே வந்து,

“ஐ அம் சாரி.. என்னால பண்ண முடியும்னு தோணல..” பிரணிதா கூறினாள்.

“ஓ.. இட்ஸ் ஓகே. நார்மல் ஆனதுக்கு அப்புறம் ஓகேனா எனக்கு கால் பண்ணுங்க..“ லேசான சிரிப்புடன் சொல்லிவிட்டு, திரும்பி தன் குழுவிற்கு “கிளம்பலாம்” என்பது போல் கண் ஜாடைக் காட்டினாள்.

அனைவரும் கிளம்பினர்.

தன் மீது கோபித்து, மூன்றாம் மாடியில் இருக்கும் அறைக்கு சென்றாள். அங்கு, தான் பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷங்களுள் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு, அருகிலிருந்த ஷோபாவில் விழுந்து, ஆழ்ந்து கண்மூடி யோசித்தாள். இதழ் அசையாது பேசினாள்.

“அப்பா.. நீங்க சுப்ரமணிய வீட்டுக்கு கடத்தி வரும்போதுதான், நீங்க பண்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது. அந்த வயசுல எனக்கு என்ன பண்றதுனே தெர்ல. ஏன் இப்டி பண்றீங்கனு உங்க மேல கோபமா வரும். அதே நினைப்பொட இருக்கும்போது தான் நீங்க தஞ்சாவூர் போற விஷயம் தெரிஞ்சு, உங்களபத்தி எதாவது தெரிஞ்சுக்கலாம்னு நானும் உங்க கூட வந்தேன். அப்போதான் தாத்தா வீடை பத்தியும், தாத்தாவைப் பத்தியும் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். மயில் அங்கிளோட வீடு சுத்தி பாக்கும்போதுதான் தாத்தோவோட டைரியையும், அதுக்கு கீழ அவரோட லெட்டரும் இருந்துச்சு, அத படிச்சுதான் தாத்தாவை புரிஞ்சுகிட்டேன். அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்த பின், நல்லா யோசிச்சுதான் இன்ஸ்பெக்டர் பிரபுவுக்கு போன் பண்ணேன். உங்களுக்கு இந்த தண்டனை கிடைக்கும்னு தெரியும். எனக்கும் இது வலிக்கும்னு தெரியும். ஆனால் நாம இத கடந்து வந்துதான் ஆகனும். உங்க நோக்கம் சரிதான். ஆனால் நீங்க தண்டிச்சதெல்லாம் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரல. அதான் நான் வேற மாதிரி தாத்தாவோட ஆசைய நிறைவேத்த முடிவு பன்ணினேன். இந்த இருவது வருசத்துல நெறய புயலும், வெள்ளமும், நோயும் வந்து, மக்களுக்கு கொஞ்சம் உயிர் பயத்த விதச்சுருக்கு. அதுமட்டுமில்லாம தலைமுறை மாறிருக்கு. இந்த தலைமுறைக்கு மண்மேலயும் இயற்கை மேலயும் தெளிவான பார்வை கொஞ்சமேனும் இருக்கு. அவங்கள ஒன்னா சேத்திதான் நான் இதை பண்ணிட்டுருக்கேன். இந்த வீட்டிலும், தஞ்சாவூர் வீட்டிலும் மரங்கள் நெறய வச்சு, குறைவான பரப்பளவில் வீடுகட்டி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டா வாழ ஆரம்பிச்சுருக்கேன். நீங்க தண்டனை முடிஞ்சு வெளிய வரும்போது இன்னும் நிறைய மாறியிருக்கும் பா”

தொடர்ந்து தனக்குள்ளாக பேச்சினை ஓட்டினாள். கண்கள் பேச்சிற்கான விளைவை நீர்த்தாரையால் வெளிக்கொட்டியது.

“தாத்தா.. நீங்க உங்க பகுதியை எழுதிட்டு போயிட்டீங்க. அப்பாவும் தன்னோட பகுதியை ஏதோ முறையில் எழுதிட்டார். நான் என்னோட பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் வெற்றியோடு முடிப்பேன்! தாத்தா.. நீங்கள் ஏன் இந்நாவலுக்கு பெயரை வைக்கலனு எனக்குத் தெரியும். நான் வைக்கிறேன் தாத்தா..”

சொல்லிவிட்டு, கண் திறந்த பிரணிதா, அருகில் மேசை மேலிருந்த பேனாவை எடுத்து, தன் கையில் வைத்திருந்த முத்துசுவாமியின் டைரியின் முதற்பக்கத்தில் பின்வருமாறு எழுதினாள்.

“மூவிலை”

*****************மூவிலை - முற்றிற்று*****************

மனமார்ந்த நன்றிகள்! ஏனெனில் இவ்வுலகில் மிகவும் கடினமாக கிடைப்பது, அடுத்தவர்களின் நேரம். என் படைப்பின் மீது மதிப்பளித்து, உங்கள் நேரத்தைச் செலவிட்டு இந்நாவலைப் படித்தமைக்கு, பதில்வினையாக சொல்ல என்னிடம் நன்றிகள் மட்டுமே உள்ளன. நான் உங்களிடம் கேட்டுக்கொள்ள இன்னும் ஒன்றே ஒன்று உள்ளது. கீழே ஒரு வாக்கெடுப்பு கொடுத்திருக்கிறேன். அதை படித்து வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அது என்னை செம்மைப்படுத்த உதவும். வேறு கருத்துகள் இருப்பின், கமெண்ட் செய்யவும்.

! படிப்பாரில்லையேல் படைப்பாரில்லை !

நன்றிகள்!!
வினை மட்டுமே உயிர்!
கிருஷ்ணா பச்சமுத்து​
 
கதை கரு ரொம்ப நல்ல கரு. சொல்ல போனா எல்லா இயற்கை ஆர்வலர்களுக்குள்ளயும் இருக்குற கரு. ஆனா பிரணிதா கேரக்டரோட என்னால பொருந்த முடியல. இரண்டாவது எபிலையே சண்முகவேல் தான் னு நீங்களே காமிச்சுக்கொடுக்காம இருந்துருந்தா இன்னும் விறுவிறுப்பா இயுந்துருக்கும்ஃ
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கிருஷ்ணா பச்சமுத்து தம்பி
 
கதை கரு ரொம்ப நல்ல கரு. சொல்ல போனா எல்லா இயற்கை ஆர்வலர்களுக்குள்ளயும் இருக்குற கரு. ஆனா பிரணிதா கேரக்டரோட என்னால பொருந்த முடியல. இரண்டாவது எபிலையே சண்முகவேல் தான் னு நீங்களே காமிச்சுக்கொடுக்காம இருந்துருந்தா இன்னும் விறுவிறுப்பா இயுந்துருக்கும்ஃ

பின்னூட்டம் தந்ததிற்கு மகிழ்ச்சி. நன்றிகள்!
 
Good writing... So exciting when I read .. nice to read..... வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாக எழுதுவதற்கு.
 
Top