Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முதல் காதல் ( first love ) episode - 4

Advertisement

இனிய இரவு வணக்கம் நண்பர்களே

இந்த பதிவு கதா நாயகியின் முதல் பாகம் குழப்பம் அடைய வேண்டாம்.
நடுத்தர வர்க்கத்தை ( middle class ) சேர்ந்தவர் நம் கதா நாயகி ஜனனி அவரின் தோழிகள் சற்று உயர்தர வர்க்கத்தை ( high கிளாஸ் ) சேர்ந்தவர்கள் தோழிகளின் பெயர் லட்சுமி மற்றும் ஐஸ்வர்யா...
நான் உங்கள் நண்பன் ராஜ் குமார்

சரி கதைக்குள் செல்வோம்

ஜனனி : எங்கடி இருக்கீங்க
ட்ரெயின்க்கு டைம் ஆச்சிடி

லட்சுமி : வந்துட்டோம்பா ஸ்டேஷன் கிட்ட ஒரேய் ட்ராபிக் ஜாம்

ஜனனி : சரி வாங்க

ஐஸ்வர்யா : 2 மினிட்ஸ் வந்துடறோம்..
இருவரும் ஒரு வழியாக வந்தடைந்தனர்

லட்சுமி : வந்துட்டோம்பா போதுமா

ஜனனி : ஏண்டி உங்க கிட்ட தான் கார் இருக்குல்ல அப்றம் ஏண்டி ட்ரெயின் ல தான் வருவோம் னு அடம் பிடிக்கிறிங்க

ஐஸ்வர்யா : கார் இருக்கு ஆனா என் நட்பு வர மாட்டார்களே கார்ல

ஜனனி : அது என்னவோ தெரிலமா எதை யூஸ் பண்ணாலும் என்னோட சொந்த பொருளா இருக்கணும் தோணுது அதான்

ஐஸ்வர்யா : சரி அது உன் இஷ்டம்

லட்சுமி : உன் கூட தான் நாங்க வருவோம் அது எங்களோட இஷ்டம்

ஜனனி : என்னடி நீங்க பசங்க நட்பயேய் ஓவர் டேக் பண்ணிடுங்க போல

ஐஸ்வர்யா : ஏண்டி பசங்க தான் நட்புக்காக என்னவேனா பண்ணுவாங்களா நாம பண்ண மாட்டோமா நட்பு ல என்னடி பசங்க பொண்ணுங்கனு

ஜனனி : ஏண்டி எமோஷன் ஆகுற தெரியாம சொல்லிட்டேன் போதுமா

லட்சுமி : அந்த பயம் இருக்கட்டும்

ஜனனி : ட்ரெயின் வருதுடி ஏறலாம் வாங்க

லட்சுமி : ஹேய் என்னடி லேடீஸ் கம்பாட்மென்ட் ஒரேய் கூட்டமா இருக்கு

ஐஸ்வர்யா : அப்போ வாடி ஜெனரல் கம்பாட்மெண்ட்ல ஏறிடலாம்

ஜனனி : சரி வா

லட்சுமி : ஏறு சீக்ரம் கெளம்பிட போது ட்ரெயின்

ஐஸ்வர்யா : என்ன அவசரம் பொறுமையா ஏறுடி

ஜனனி : அப்பாடா என்னா கூட்டம்

ஐஸ்வர்யா : அப்றம் சண்டே எப்படி போச்சி மச்சி

ஜனனி : எப்படி வஞ்சினும் தெரில எப்படி போச்சினும் தெரில

ஐஸ்வர்யா : எனக்கும் அதே தான்

லட்சுமி : அத விடுங்கடி ஜனனி கொஞ்சோம் அங்க பாரேன்

ஐஸ்வர்யா : எத டி பாக்க சொல்ற அவளை

லட்சுமி : ஜனனி அங்க மூணு பசங்க நின்னுட்டு இருக்காங்களே அதுல ஒருத்தன் உன்ன வச்ச கண்ணு வாங்காம பாக்குறான்

ஐஸ்வர்யா : ஆமாம் ஜனனி அப்டி தான் பாத்துட்டு இருக்கான்

ஜனனி : இந்த மாறி பொறுக்கிங்கலாம் இருக்கும்னு தான் ஜெனரல் கொம்பொட்மெண்ட்ல ஏர்றது இல்ல

லட்சமி : நாமெல்லாம் எவனாச்சி நம்பள சைட் அடிப்பானானு வெயிட் பன்றோம் ஐஸ் இவ பாரு அவனை போட்டு திட்டிட்டு இருக்கா

ஐஸ்வர்யா : ஏன் நீ பசங்கள பாத்தாலே கடுப்பாகுற

ஜனனி : பசங்க எல்லாரும் ஒரேய் மாறி தாண்டி நம்பள யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டு போவானுங்க

லட்சுமி : எல்லா பசங்களும் அப்டி இருக்க மாட்டாய்ங்கடி

நல்ல பசங்களும் நாட்ல இருக்கானுங்கடி

ஐஸ்வர்யா : ஆமாம்டி எல்லாரும் தப்பானவங்கனே நினைச்சிட்டு இருக்காதா

ஜனனி : இல்ல எனக்கு அதுல லாம் நம்பிக்கை இல்ல

லட்சுமி : சரி விடு டி அந்த பசங்க எறங்கிடாங்க

ஜனனி : இவளோ நேரம் அவனுங்கள தான் பாத்துட்டு இருந்தியா

லட்சுமி : நான் என்னவோ அவனை தான் பாத்துட்டு இருந்தன் அவன் எங்க என்ன பாத்தான் கடைசி வரைக்கும் உன்ன தான் பாத்துட்டு இருந்தான்

ஜனனி : இப்போ என்ன பண்ண சொல்ற

லட்சுமி : ஒன்னும் பண்ண சொல்லல சொன்னன் அவளோ தான் வேற ஒன்னும் இல்ல...
to be contineued

தூக்கம் வருது நண்பர்களே நாளை சந்திப்போம்

ஒரு கவிதையோடு விடை பெறுகிறேன்

(காதலும் நானும்)
காலங்கள் கடந்து போனது அவள் மீது வைத்திருந்த காதல் மட்டும் நீங்கா வண்ணம்!
நேரம் குறைந்து கொண்டே போனது மேலிருந்து கீழே விழும் மழை துளிகளின் ஓசை அவள் சிரிப்பின் நினைவலைகள்!
பௌர்ணமி நாள் முழு நிலவு நினைவுற்றும் அவளின் முகம்!
பிரிந்து செல்லும் நாள் வந்தது மரணம் என்னும் பெயர் கொண்டு வந்தது!
என் கல்லறையில் உடலோடு சேர்ந்து என் காதலும் புதைக்கப்பட்டது!
அவள் நினைவுகள் மட்டும் உயிரோடு கலந்தது.





 
Top