Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 8

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 8

"உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா இப்படி பேசுவ" என்று யமுனா கத்தினாள். அதைக் கேட்ட சத்யா அவளைப் பார்த்து முறைத்தாரன் இதைக் கண்ட யமுனா உனக்கு இல்ல உங்களுக்கு போதுமா என்று அமைதியாக கத்தினாள். "அப்போ உன் அத்தை பிரியா திவாகர் கல்யாணம் முடிவான சமயத்தில அவங்க வீட அடமானம் வெச்சு தான் உன் அத்தான படிக்க வெச்சாங்களாம் அத மீட்க அந்த அம்மா என்கிட்ட தான் 50 லட்சம் வாங்குனாங்க உன் மாமாவுக்கு வேர போன மாசம் ஹாட் அட்டாக் வந்திருக்கு அதுக்கு ட்ரீட்மெண்ட் என்னோட ஹாஸ்பிடல தான் ஃபிரியா ட்ரீட்மெண்ட் பொய்ட்டு இருக்கு அத்தோட செலவே இதுவரைக்கும் 30 லட்சம் ஆயிருக்கு இப்போவரை இதெல்லாம் திவாகர் க்கு தெரிஞ்சும் அவன் சம்பளத்துள குடும்பத்துக்கு உதவ முடியல என்கிட்ட பேசவே அவனுக்கு பயம் அன்னிக்கு என் ஆபிஸ் வந்து என்கிட்ட காலுல விழுந்து கெஞ்சுறான் உங்க பணத்த நான் திருப்பி கொடுத்திடுற எங்க அப்பாவ காப்பாட்டுங்கனு ஏனா இந்தியாலயே டாப் ஹாஷ்பிடல் என்னுடைய "தேவ் ஹாஸ்பிடல்ஸ்" உன்னோட மாமா வுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணி ருக்கு அவருக்கு திவாகர் கல்யாணத்துல உடன்பாடு இல்ல ஆனால் பிரியா அவர ஹாஷ்பிடல்ல போய் நல்லா பாத்துக்கிட்டதுனால அவ கிட்ட பாசமா தான் இருக்காரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது யமுனாவைப் பார்த்தவன் அமைதி ஆனான் ஏனெனில் தன் மாமாவிற்கு ஹாட் அட்டாக் மற்றும் ஆப்பரேஷன் நடந்திருக்கிறது என்பதை கேட்ட உடன் கண்களில் மடமடவென கண்ணீர் மூண்டது.

" அப்போது அவளுக்கு ஒரு கால் வந்தது அழைப்பை பார்த்த யமுனா அதில் தன்னுடைய மாமா கால் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்." யமூ குட்டி எப்படி டா இருக்க என்றவரின் குரல் தழதழத்தது. சேகருக்கு தற்போது 70 வயது இருக்கும் சிறிய வயதிலேயே தங்கள் அப்பா அம்மாவை இழந்த பதினைந்து வயது சேகர் தன்னுடைய எட்டு வயது தங்கை சாந்தியை ஒரு தந்தை போல் பாதுகாத்தார் அவளைப் படிக்கவைத்து இவரும் படித்து பகுதி நேரத்தில் வேலைப்பார்த்து படித்து முடித்தவுடன் அரசு பணியில் சேர்ந்தார் சாந்தியை கல்யாணம் பண்ணி வைக்கவே அவருக்கு வயது 35 ஆனது. தன்னுடைய வாழ்க்கையை தனியாக வாழலாம் என்று நினைத்த போது சாந்தி தன் கணவன் வழி சொந்தமான விஜயலட்சுமிமை மணம் முடிக்க கூறினாள். விஜயலட்சுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள் ஆனாலும் அவளுக்கு பேராசை அதிகம் தங்கை மற்றும் மாப்பிள்ளை சங்கரின் வார்த்தைக்கைக கல்யாணமும் செய்தார் திவாகர் பிறந்து மூன்று வருடம் கழித்து தான் யமுனா பிறந்தாள் நாட்கள் இப்படியே சென்ற சமயத்தில் தான் ஒரு விபத்தில் யமுனாவின் பெற்றோர் உயிரிழந்தனர். 5 வயதான யமுனாவை தன்னுடைய மகளாகவே நினைத்து தன்னோடு வைத்துக் கொண்டார் விஜயலட்சுமி எவ்வளவு முயற்சித்தும் யமுனாவை அவர் விட்டுகொடுக்கவில்லை அவளுக்கு தந்தை மற்றும் தாயாய் இருந்து நல்ல உணவு உடை இருப்பிடம் கொடுத்தார் சுட்டிப் பெண்ணான யமுனா படிப்பில் எப்போதுமே முதல் மார்க் தான்.

வருடங்கள் சென்றன. திவாகர் என்ஜினீயரிங் படிக்க வைக்கவே பத்து லட்சம் ஆனது ஐந்து லட்சத்திற்கு தன் சொந்த பணமும் மீதி ஐந்திற்கு கடன் வாங்கினார் அப்போது தான் டெல்லியில் ஒரு பெரிய யூனிவர்சிட்டியில் படிக்க நினைத்தான் திவாகர் இதற்கு விஜயலட்சுமியும் துணை போனாள். அந்த காலேஜ் பெரும் பணக்காரர்கள் படிக்கும் கல்லூரி ஒரு வருடத்திற்கு 25 லட்சம் கட்டணம் இருந்தது இதில் சேகருக்கு உடன்பாடு இல்லை ஆனால் இக்கல்லூரியில் இரண்டு வருடம் எம்பியெ முடித்து வெளியில் வரும்போது மாத சம்பளமே பத்து லட்சம் இருக்கும் என்று தங்களுடைய வீட்டை அதாவது சேகரின் பெற்றோர் வீட்டை அடமானம் வைத்தார் அதில் 30 லட்சம் கிடைத்தது மிட்ச பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் விஜயலட்சுமி தாங்கள் வசிக்கும் சொந்த வீடான சென்னை பல்லாவரம் வீட்டு பத்திரத்தை சேகருக்கு தெரியாமல் அடமானம் வைத்து 30 லட்சம் பெற்றார் நேராக திவாகரிடம் பணத்தைக் கொடுத்து முதல் கட்டணத்தை செலுத்தச் சொன்னார். சேகருக்கு இந்த விஷயம் ஒரு வாரம் கழித்து தான் தெரிய வந்தது "என்னிடம் சொல்லாமல் வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் நானே ஒரு வீட்டை அடமானம் வைத்து விட்டேன் நீ இருந்த இன்னொரு வீட்டையும் எனக்கு தெரியாமல் அடமானம் வைத்து விட்டாய் அது யாரோட வீடு என்று தெரியுமா இல்லயா உனக்கு இது சாந்தி சங்கர் மாப்பிள்ளை யோட வீடு இது யமுனா வின் வீடு அவள் கல்யாணம் முடிந்த வுடன் அவளின் மாப்பிள்ளையின் கையில் ஒப்படைக்கவே நாம் இந்த வீட்டில் வசிக்கிறோம் ஆனால் நீ பாவி என்ன காரியம் செய்துவிட்டாய்" என்று அடித்தார். நீங்க என்ன சொன்னாலும் பரவாயில்லை நான் பண்ணியது கரெக்ட் தான் அந்த பொண்ணுக்கு எவ்வளவு செலவு செஞ்சிருக்கீங்க நம்ம வீட்டுலயே என் மகனை மயக்க சுத்திட்டு இருக்கா என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளின் கழுத்தை பிடித்து நெறித்துவிட்டார். விஜயலட்சுமி அலரியதை கேட்டு ஓடி வந்த யமுனா தன் மாமாவை பிடித்து விலக்கினாள்.நடந்த அனைத்தையும் அறிந்த யமுனா "மாமா நீங்க எனக்கு கடவுள் மாதிரி இந்த வீடெல்லாம் ஒன்னுமே இல்ல அது எனக்கு முக்கியம் இல்ல திவு அத்தான நான் ஒருநாளும் தப்பா பார்த்தது இல்ல அவங்க டெல்லில படிக்கட்டும் அதான் முக்கியம் இப்போ நான் இங்க கல்லூரி ஹாஸ்டல் சேர்ந்துக்குறேன்" என்றாள். "
திவாகர் தன் தந்தையிடம் மிச்ச பணத்தை வாங்கி "ஜேகே க்ருப் ஆஃப் மானேஜ்மென்ட்டில்" இரண்டு வருடம் கட்டணம் செலுத்தி விட்டு சேர்ந்தான்.
 
மிகவும் அருமையான பப்பதிவு,
அனு ஜெய் டியர்

அடப்பாவி சத்யதேவ்
சேகர் மாமாவுக்கு இவன் ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் செஞ்சதை சொல்லி யமுனாவை எப்படி கார்னர் பண்ணுறான்?
இனி சத்யாவைக் கல்யாணம் செய்ய யமுனா ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்
அடிப்பாவி விஜயலக்ஷ்மி
யமுனாவுக்கு சொந்தமான வீட்டையும் அடமானம் வைச்சுட்டாளே
 
Top