Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 12

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 12

தன் துணிகளை தோய்த்து முடித்து கொஞ்ச நேரம் டீவி பார்த்துக் கொண்டிருந்த யமுனா விற்கு மனதில் வேறு ஏதோ ஓடிக்கோண்டிருந்தது. பின் தன் அறைக்கு செல்லும் போது அங்கு திவ்யா தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள் "இவள் எதுக்கு அழுதுட்டு இருக்கா இவள் இந்நேரம் சந்தோஷமா தான இருக்கனும் சேரி நமக்கு என்ன" என்று தூங்கச் சென்று விட்டாள்.

ஒரு வாரம் இப்படியே கழிந்தது. அன்று காலை யமுனா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். யேய் யமுனா எழுந்திரு டீ இன்னிக்கு உனக்கு கல்யாணம் ப்ளிஸ் டீ எழுந்திரு என்றாள் திவ்யா.

நன்றாக தூங்கிக்கொண்டிருந்த யமுனா விற்கு தன்னை யாரோ உலுக்குவது எரிச்சலாக இருந்தது. அப்போது திவ்யாவிற்கு குணா விடம் இருந்து கால் வந்தது. "திவ்யா எப்போ கிளம்பி வரப்போறீங்க ஆல்ரெடி மணி ஆறரை ஆயிடுச்சு ஒன்பது மணிக்கு முகூர்த்தம் நீங்க இன்னும் கிளம்பலயா சோழிங்கநல்லுரில் இருந்து வடபழனி வரதுக்கு கண்டிப்பா ஒன்றரை மணி நேரமாகும் அதுலேயும் சென்னை டிராஃபிக் பத்தி சொல்லவே வேண்டாம் சிக்கிரம் கிளம்புங்க" என்றான்." குணா அது வந்து யமுனா இன்னும் எழுந்திருக்கவே இல்லை" என்று இழுத்தாள்." என்ன யமுனா இன்னும் எழுந்திருக்கலையா? " என்று அதிர்ச்சியில் கேட்டான் குணா." சேரி நீங்க சீக்கிரம் கிளம்புங்க நாங்க கோவிலுக்கு பொய்ட்டு இருக்கோம் அண்ணா பக்கத்துல இருக்காரு வெக்கிறேன்" என்று கட் செய்துவிட்டான் குணா.

இவர்கள் பேசிய சலசலப்பிலேயே விழித்த யமுனா விற்கு அவளுடைய செல்லிற்கு கால் வந்தது. ஏதோ தெரியாத நம்பர் என்று தூக்ககலக்கத்திலேயே அட்டெண்ட் செய்த யமுனா" ஹ... லோ!!! "என்று சோம்பல் முறித்தாள்."இன்னிக்கு கல்யாணம் இருக்குனு தெரிஞ்சும் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க யூ இடியட் இன்னும் ஒன் ஹவர்ல நீ வடபழனி கோவில்ல இருக்கனும் இல்லன்னா என்னோட இன்னொரு ஃபேஸ் நீ பார்ப்ப உன்னை சும்மா விட மாட்டா" என்று கட் செய்து விட்டான். தூக்க கலக்கம் போய் யார் இது இவ்வளவு கடுமையாக பேசியது என்று ட்ரூகாலரில் பார்த்தாள். அதில் " சத்யதேவ்" என்று இருந்தது. அதை பார்த்தவுடன் படபடப்பில் போனை கட்டிலில் போட்டாள்." ஏய் இன்னிக்கு உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சும் இப்படி தூங்குற" என்றாள் திவ்யா. அவளை கோபத்தில் எரிக்கும் பார்வையைப் பார்த்தாள் யமுனா "ஆமா இது ஆசைப்பட்டு பண்ணுற கல்யாணம் பாரு அதான் இப்படி தூங்குற நீயெல்லாம் என்னை கேள்விகேட்காத அந்த தகுதி உரிமை உனக்கு இல்லை" என்று மூஞ்சிலே அடித்த மாதிரி கூறினாள் யமுனா.

பின் பல்லைத் தேய்த்து குளிக்கச் சென்றவள் ஸவரை ஆன் செய்தாள் "அவன் எவ்வளவு திமிரு பிடிச்சவனா இருக்கான் கடவுளே எனக்கு இப்படி ஒரு நிலைமை கொண்டுவந்துட்டீங்களே கண்டவன் லாம் என்னை மிரட்டுறான் என்னை அவன் கீ கொடுத்த பொம்மை போல ஆக்கிட்டான் என்று ஸவரில் புலம்பிக்கொண்டு இருந்தவள் கடைசியில் அழுது விட்டாள்.

குளித்து விட்டு நேரே கண்ணாடி முன் வந்து "இப்பலாம் நீ ரொம்ப அழற யமுனா பீ போல்ட் அன்ட் பீ ஸ்டாங்க்" என்று தன்னையே பார்த்து சொல்லிக் கொண்டாள். "உனக்கு சாரி ப்ளவுஸ் நீ போட வேண்டிய நகைகள் எல்லாம் இருக்கு இதுல பூ இருக்கு வெச்சிட்டு கிளம்பு" என்று சொல்லும் போதே திவ்யாவிற்கு மயக்கம் வந்தது. தீடிரென்று திவ்யாக்கு இப்படி ஆன வுடன் அவளை தாங்கிப்பிடித்தாள் யமுனா " என்ன ஆச்சு" என்று தண்ணீர் தெளித்தாள். அதில் முழித்த திவ்யா "பிரக்நென்சி ஹியர்லி ஸ்டேசஸ் இப்படி தான் இருக்கும்" என்றாள்." சாப்பிடாம இருந்தா அப்படி தான் தப்பு பண்ண தெரிது ஆனா குழந்தைக்காக சாப்பிட தெரியல செல்ஃபிஷ் ஃபெல்லோஸ்" என்று புடவையை அணிந்தாள். "இதெல்லாம் என்ன" என்று கட்டிலில் இருந்த நகைகளைப் பார்த்து கேட்டாள்.

" சத்யா அத்தான் இதைப் போட சொல்லி குடுத்திருகாங்க கண்டிப்பா போடனுமாம்" என்று தலைகுனிந்து சொன்னாள். எல்லாத்தையும் வெறுப்போட அணிந்து விட்டவள் அந்த பூவை தலையில் வைத்து கிளம்பலாம் என்றாள். யமுனாவின் முதற்கட்ட நடவடிக்கையே திவ்யாவிற்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.எப்பயும் யமுனா குளித்து முடித்து விட்டு ஆபிஸ் அல்லது வெளியே கிளம்பும் போது தினமும் கண்ணாடியைப் பார்த்து "ஏய் திவி நான் அழகா இருக்கேன்ல" என்று வழிவாள்.அதை எப்போதும் திவ்யா ரசிப்பாள். ஆனால் இன்று அவள் அப்படி கேட்க வில்லை அது பரவாயில்லை ஆனால் அவள் கிளம்பி கண்ணாடியைக் கூட பார்க்கவில்லை என்றாள் அவள் மனதில் எவ்வளவு வலி வெறுப்பு இருக்கிறது என்பதை திவ்யா உணர்ந்தாள்.

இருவரும் கிளம்பி கீழே வந்தனர் யமுனா திவ்யாவிடம் பேசவில்லை பேசவும் விரும்பவில்லை. அங்கு சத்யதேவ் வரவழைத்த கார் இருந்தது அதில் ஏறினர். கார் வடபழனி கோவிலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

"யமுனா நீ பார்க்க ரொம்ப அழகா இருக்க தேவதை மாதிரி என் கண்ணே பட்டுடும் போல" என்றாள் திவ்யா. இதைக் கேட்டு தன் முகத்தை இன்னொரு பக்கம் திருப்பிக் கொண்டாள் யமுனா. நமட்டு சிரிப்பு செய்து குணா விற்கு கால் செய்த திவ்யா தாங்கள் வந்து கொண்டிருப்பதாய் கூறினாள்.

வடபழனி கோவிலில் இறங்கிய பின் திவ்யா கோவிலின் உள்ளே நடந்துக்கொண்டிருந்தாள் ஆனால் பின்னாடி யமுனா வராமல் வெளியே நின்றுக் கொண்டிருந்தாள் அவள் மனநிலை இவளுக்கு புரிந்தது ஆனால் இவளால் அங்கு என்ன செய்ய முடியும். "கடைசி நிமிஷத்தில் இந்த படத்துல லாம் வர மாதிரி வில்லனோட கல்யாணம் நின்னா நல்லா இருக்கும்ல முருகா" என்று கொடி கம்பத்தைப் பார்த்து சத்தமாக வேண்டினாள்" யமுனா."நீ வேண்டினா நடக்குறது க்கு இது படமும் இல்லை உன்னை காப்பாத்த இங்க யாரும் இல்லை ஒரு மணி நேரத்தில் இங்க இருக்கனும்னு சொன்ன ஆனா நீ முகூர்த்தத்திற்கு பத்து நிமிஷம் முன்னாடி வர" என்று அவளின் கையை முறுக்கினான் சத்யதேவ் தன் கம்பீரக் குரலில்.

" ஐயோ இவள் ஏன் இப்படி ஆப்ப விலை கொடுத்து வாங்குறா கடவுளே" என்று நினைத்த திவ்யா " ப்ளிஸ் அவளை விடுங்க டிராஃபிக் அதான் லேட் ஆயிடுச்சு சாரி" என்றாள்." ஆமாம் அண்ணா இந்த தடவை விட்டுருங்க பாவம் அவங்க" என்று தூரத்தில் இருந்தவன் சத்யதேவ் அவள் கையை முறுக்கியதைப் பார்த்து ஓடி வந்தான். பின் அவளின் கையை விடுவித்தவன்" டிஸ் ஸ் த லாஸ்ட் வார்னிங் ஃபார் யூ உள்ளே போ" என்றான்.

அவன் முறுக்கிய இடம் பயங்கரமாக வலித்தது யமுனா விற்கு அங்கு ஐயர் இரண்டு மாலைகளோடு இவர்களுக்காக காத்திருந்ததைப் பார்த்தவளுக்கு பயத்தில் வயிறு கலக்கியது. சத்யதேவ் மாலையை வாங்கிக்கிட்டு அதை அணிவித்து அமர்ந்தான் பின் யமுனாவை அமரச் சொன்னார் ஐயர் இதெல்லாம் கனவாய் இருக்க கூடாதா என்றவளின் கண்களில் கண்ணிர் எட்டிப் பார்க்க காத்துக் கொண்டிருந்தது. "யமுனா போ உன்னை தான் கூப்பிடறாங்க" என்று அவளை உலுக்கினாள் திவ்யா படபடப்பாக. "அதில் நினைவுக்கு வந்தவள் எதிர்கொண்டது சத்யதேவின் அனல் வீசும் பார்வை". "எதுக்கு இப்போ சீன் கிரியேட் பண்ற இப்போ நீயா வந்து உட்காரீயா இல்லை நான் வந்து உன்னை இழுத்துட்டு வரனுமா" என்று கர்ஜித்தான். அதில் பயந்தவள் அவளே போய் மணப்பெண் இடத்தில் உட்கார்ந்தாள். அவளுக்கு மாலையைப் போட்டாள் திவ்யா.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

யமுனா சொன்ன மாதிரி திவ்யாவுக்கெல்லாம் பேசவே யோக்கியதை இல்லை
ஆனாலும் பிள்ளைத்தாய்ச்சின்னு பரிதாபப்பட்டு பாசம் காட்டுறாளே
எவ்வளவு நல்ல பெண் இந்த யமுனா?
ஐயோ யமுனா பாவம்
கல்யாணம் நிற்கவில்லையே
என்ன இந்த சத்யதேவ் பரதேசி இன்னும் யமுனாவை மிரட்டிக்கிட்டேயிருக்கிறான்?
 
Top