Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 10

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 10

இது என்ன நமக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை என்று நினைத்தாள் யமுனா. "திவா அத்தான் என்னை வெறுக்கனும்னா நான் யாரையாவது கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தான அதுக்கு உங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல நான் வேற யாரையாவது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிற" என்றாள் திமிராக. "நீ என்ன லூசா பிரியா விற்கு இப்போ வயசு 26 ஆகுது நீ ஒருத்தன லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்கு லாம் இங்க டைம் இல்லை உங்க குடும்பத்துக்கு நான் கொடுத்த டைம் இன்னும் ஒரு மாசம் தான் அப்படியே நீ இந்த ஒரு மாசத்துல ஒருத்தன லவ் பண்ணி கல்யாணம் பண்ண நினைச்சாலும் நீ என்னை கல்யாணம் பண்ணா தான் திவாக்கு முறைப்படி தங்கச்சி முறை ஆயிடும் அவன் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டான் இங்கப் பாரு உன்கிட்ட சின்ன குழந்தைக்கு சொல்ற மாதிரி லாம் விளக்க முடியாது முதல்ல நம்ம இரண்டு பேர் கல்யாணம் நடக்கனும் அதுவும் அடுத்த வெள்ளிக்கிழமை நடக்கனும்" என்றான்.

" இவனுக்கு என்ன கல்யாணம்னா அசால்ட்டா போச்சா" என்று நினைத்தவளை " நீ என்னை கல்யாணம் பண்ண சம்மதிக்கலனா திவாகருக்கு வேலை போகும் அடுத்து குணா திவ்யா கல்யாணம் நடக்காது அடுத்து உனக்கும் வேலை போகும்" என்றான் தீர்மானமாக." என்னது எனக்கும் வேலை போகுமா என்ன மிரட்டுறீங்களா" என்று நேரடியாகக் கேட்டாள். ஆமா மிரட்டுறேன் இதுக்கு மேலயும் மிரட்டுவேன் என்றான்.

என்னால உங்கள கல்யாணம் பண்ண முடியாது என் மாமா குடும்பத்தை எப்படி காப்பாற்றுவதுனு எனக்கு தெரியும் என்று கிளம்பி எழுந்தாள் யமுனா." நான் பேசும் போது நீ உன் இஷ்டத்துக்கு கிளம்பி போற அவ்வளவு திமிரா உனக்கு உன்னை பார்க்கவே இரிடேட்டிஙா இருக்கு ஜஸ்ட் சிட் டௌன் இடியட்" என்று கர்ஜித்தான். "பயத்தில் அப்படியே இடத்தில் அமர்ந்த யமுனாவின் முன் இருந்த டேபிளில் தன்னுடைய செல் போனை எடுத்த சத்யதேவ் ஒரு நம்பர்க்கு கால் செய்து " ஹாய் பார்திவ் சத்யதேவ் ஹியர் உன்னோட கம்பெனியில் வேலை பார்க்கும் திவாகர் பத்தி பேசிருந்தேன்ல" என்று போனை ஸ்பீக்கரில் போட்டான். "யா சத்யா அவனை வேலைய விட்டு தூக்கிடவா அன்ட் ஆல்சோ நீங்க சொன்ன மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட்ல பேட் னு போட்டு கொடுத்தா எங்கேயும் வேலை கிடைக்காது அதையும் பண்ணிடவா" என்று கேட்டான்.

" அடப்பாவி சும்மா இவன் மிரட்டுவானு பார்த்தா உண்மையாவே பார்திவ்க்கே கால் பண்ணிட்டானே" என்று கலங்கினாள். யமுனா விற்கு தெரியும் திவாகர் வேலை பார்க்கும் பார்திவ் க்ருப்ஸ் மிகப் பெரிய நிறுவனம் என்று." பார்திவ் யா அவனை வேலைய விட்டு தூக்கிட்டு அன்ட் நம்ம பேசுன மாதிரி" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே " நான் உங்களையே கல்யாணம் பண்ணிக்கிற ப்ளிஸ் அத்தான் வேலை இருக்கனும்" என்று அழுதாள். "பார்திவ் யு ஹோல்ட் இட் ஐ வில் கால் யு பேக்" என்று கட் பண்ணி விட்டு யமுனா விடம் திரும்பியவன்" லுக் யமுனா நீ உன் வேலைய விடனும் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் நம்ம டெல்லி போறோம் அங்க தான் என்னோட பேமிலில எல்லாரும் இருக்காங்க நம்ம கல்யாணம் முடிஞ்ச அப்புறம் நீ திவாவர கன்வின்ஸ் பண்ணி பிரியா திவாவர் கல்யாணம் நடக்க வெக்கனும் அப்புறம் திவ்யா குணா கல்யாணம் எல்லாமே ஒரே மேடைல நடக்கும்" என்றான்.நான் சொல்லுற வரைக்கும் நம்ம கல்யாணம் பண்ண போறது யாருக்கும் தெரிய கூடாது திவ்யா குணாவ தவிற என்றான்.

எல்லாம் கனவு மாதிரி தோன்றிய யமுனா விற்கு இது கனவாகவே இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். ஆனால் அவள் வாழ்க்கை அவள் கையில் இல்லை என்பதை உணர்ந்த யமுனா திவ்யா வுடன் பேசவில்லை குணாவின் மூலியமாக விஷயத்தை தெரிந்து கொண்ட திவ்யாவிற்கு முதலில் தன்னுடைய கல்யாணம் நடக்க போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தவள் பின் யமுனாவின் நிலைமை அறிந்து அமைதியாக இருந்தாள்.

யமுனா விற்கு சுத்தமாக எதிலுமே விருப்பம் இல்லை அடுத்த நாள் ஆபிஸ் போன யமுனாவை எச்ஆர்டியில் இருந்து அழைத்தனர். "ஹாய் யமுனா உங்க லாஸ்ட் டேட் இந்த வாரம் ஃபிரைடே சத்யதேவ் எங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டாரு நீங்க ஒரு ரெஸிங்கனேஷன் மெயில் மட்டும் அனுப்புங்க அப்புறம் ஒன் வீக்ல ரிலீவ் ஆகுறதுனால மூன்று மாசம் சம்பளம் கட்டணும் அதை சத்யதேவ் தரேனு சொல்லிட்டாரு யமுனா" என்றான் எச்ஆர் ஹரி." அதான் நீங்களே எல்லாம் பண்ணீட்டீங்களே ஹரி அப்போ எதுக்கு என்ன கூப்பிட்டீங்க" என்றாள் கோபத்தோடு." எப்படி ஹரி இதெல்லாம் அவன் ஒரு மல்டிமில்லினியராகவே இருக்கட்டும் அதுக்காக ஒரு பொண்ணு லைஃப்ல இப்படி விளையாட கூடாது என்னை இப்படி லாக் பண்ணிட்டான் அவன்" என்று ஹரியிடம் கத்தினாள்." ஐ அம் சாரி யமுனா உங்க பிரச்சனை என்னனு எனக்கு தெரியல இது டாப் மேனேஜ்மென்ட்ல இருந்து பண்ண சொன்னாங்க அவ்வளவு தான் எனக்கு தெரியும்" என்றான்." ச்ச அவன் மேல இருக்கிற கோபத்துல இவர் கிட்ட காட்டிட்டேன்"என்று நினைத்தவள்" ஐ அம் சாரி ஹரி நான் மெயில் அனுப்பிடுறேன் அவ்வளவு தான கிளம்பலாமா" என்று கேட்டுவிட்டுச் சென்றாள்.

தன் இருக்கையில் வந்து அமர்ந்த யமுனா விற்கு ஆத்திரம் பயங்கரமாக வந்தது." என்னோட நிம்மதி சந்தோஷம் சுதந்திரம் வாழ்க்கை எல்லாமே போச்சு" என்று கோபத்தில் அமைதியாக கத்தியவள் அழுகை யோடு முடித்தாள். யமுனா பொதுவாக சீக்கிரம் அழுகிற பெண் இல்லை தன்னுடைய வாழ்க்கை முடிந்ததே என்று நினைத்து நினைத்து பைத்தியமே பிடிப்பது போல் உணர்ந்தாள்.

திவ்யா யமுனா விற்கு கால் செய்து கொண்டிருந்தாள் அவள் கால்லை எடுத்து பேச இவளுக்கு விருப்பம் இல்லாததால் வேண்டும் என்றே அட்டெண்ட் செய்யாமல் இருந்தாள் இப்படியே இரண்டு மணிநேரம் சென்றது மெயிலை அனுப்பிவிட்டு ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் யாரிடமும் தான் ரிஸைன் பண்ணுவதை சொல்லாமல் வேலைப் பார்த்தாள் ஏனெனில் திடீரென்று ஒரு வாரத்தில் திருமணம் என்று எப்படி சொல்வது அந்த டெரர் வேற இதைப் பற்றி யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிருக்கான் இதுல திவா அத்தான் வேற மெசேஜ் பண்ணிட்டே இருக்கான் ச்ச எரிச்சலா இருக்கு" என்று நினைத்தவளுக்கு தலைவலியே வந்துவிட்டது காலையில் வேற எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் கஃபடேரியாவிற்கு காபி குடிக்கச் சென்றாள்.

அப்போது மொபைலை எடுத்துப் பார்த்தாள் திவ்யாவிடம் இருந்து பதினான்கு மிஸ்ஸூடு கால்ஸ் வாட்ஸ் அப் மெசேஜ் யும் அனுப்பியிருந்தாள் " ஹாய் யமூ உனக்கு முகூர்த்தப்பட்டு எடுக்கனுமாம் இன்னிக்கு ஈவ்னிங் எங்க கிட்ட சத்யா அத்தான் பணம் கொடுத்திருகாரு நீ ஆபிஸ்ல இருந்து வையிட் பண்ணு நான் உன்னை கூட்டிட்டு போறேன் என்று அனுப்பி இருந்தாள்." பெரிய அத்தான் ச்ச இவள் எல்லாம் ஒரு பிரண்ட் னு ஹெல்ப் பண்ணேணே இப்போ என் வாழ்க்கையே போச்சு இவளுக்கென்ன இவ ரூட் கிளியர் ஆயிடுச்சுல அதான் எனக்காக வருத்தப்படாம சந்தோஷமா இருக்கா அந்த ஆள் அத்தானாம் ஒரு காபி கூட நிம்மதியாக குடிக்க முடியவில்லையே என்று கடுப்பாகி எழுந்தாள்.

மாலை யமுனா வெளியே வரும் போதே திவ்யா அவள் ஸ்கூட்டரில் காத்துக் கொண்டிருந்தாள். தன் வண்டியை எடுத்துட்டு வந்து அவளின் ஸ்கூட்டரின் பக்கத்தில் நிறுத்தினாள் யமுனா. தன்னிடம் இவள் பேசமாட்டாள் என்பதை உணர்ந்த திவ்யா அமைதியாக வண்டியை ஓட்டினாள் அவள் பின்னே இவளும் சென்றாள். தன் பின்னால் யமுனா வருகிறாளா என்று அப்போ அப்போ பார்த்துக் கொண்டே வந்தாள் திவ்யா. திவ்யாவின் வண்டி டீ நகர் உஸ்மான் ரோட்டில் அந்த பிரபல துணிக்கடையில் நின்றது. பின் யமுனா வும் அங்கே வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தாள் அங்கே குண அவர்களுக்காக காத்திருந்தான். "வாங்க யமுனா" என்றான் அதற்கு அவளிடம் எந்த ஒரு பதிலும் இல்லை பின் பட்டு சாரி செக்ஷன் சென்று அவளை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள் கடமைக்கே என்று ஒரு ஸ்கை பிளூ வண்ண பட்டு சாரியை எடுத்து விட்டு அவர்களிடம் சொல்லாமலே கிளம்பினாள். அவள் அப்படி சென்றதைப் பார்த்த இருவரும் வருத்தமாக நின்றனர். பின் சத்யதேவின் சொல்படி அவர்களும் புது உடை எடுத்தனர். யமுனாவின் அறையில் இருந்து ஒரு அளவு பிளவுஸை எடுத்து தெய்க்க குடுக்கலாம் என்று திவ்யா யோசித்தாள்.

தன்னுடைய ஹாஸ்டல் வந்தவுடன் இரவு குளித்துவிட்டு இரண்டு இட்லியை விழுங்கி விட்டு படுத்துக் கொண்ட யமுனா அழுதுக்கொண்டே இருந்தாள்.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

ச்சே என்ன ஒரு அராஜகம்?
யமுனா பாவம்
எவளோ எவனையோ கல்யாணம் செய்ய இவளுடைய வாழ்க்கை போயிடுச்சே

ப்ரெண்ட்டாவது ஆனியனாவது?
கல்யாணத்துக்கு முன்னாடியே வயிற்றை நிரப்பிய கேடுகெட்ட திவ்யாவுக்கெல்லாம் யமுனா பாவம் பார்த்திருக்கவே கூடாது

நாசமா போற திவாகர் யமுனாவிடம் லவ் சொல்லாமல் வைத்திருந்து அவளுக்கு பெரும் கொடுமை செய்து விட்டான்

திவ்யா திவாகர் இரண்டு பேரும் மோசமான சுயநல ஜென்மங்கள்
 
Top