Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 6

Advertisement

Viswadevi

Active member
Member
Hi friends wish you happy deepawali...
Thank you so much for your lovely comments ? and support

1840

அத்தியாயம் - 6
நந்தனின் தந்தை வழித் தாத்தா, பாட்டி இப்பொழுதும் கிராமத்தில் தான் இருக்கிறார்கள். நல்ல நாள், விஷேங்கள் அப்போது எல்லாம், எல்லோரும் அங்கேச் சென்று விடுவார்கள்.

நந்தன் படிப்பை ஹாஸ்டலிலும், விடுமுறையை தாத்தா வீட்டிலும் சென்று களிப்பான்.

அருகிலேயே அவரது அத்தை வீடு. அவர்களுக்கு ஒரே மகள் யாமினி.
நந்தனும், யாமினியும் சேர்ந்து செய்யாத சேட்டைகள் இல்லை.

அவர்களின் தாத்தா நந்தகிருஷ்ணனுக்கு‍, தன் காலையே சுற்றி வரும் நந்தன் என்றால் தனிப்பிரியம். அதைப் போல் ஒரே மகளின் மகளான யாழினி மேலும் பிரியம் அதிகம்.

எப்பொழுதாவது வரும் கிருஷ்ணன் மற்றும் வாகினியிடம் பிரியமாக இருந்தாலும், முதல் உரிமை என்னவோ, இவர்கள் இருவருக்கும் தான்…

கிருஷ்ணன் பெரிதாக இதை எல்லாம் நினைக்க மாட்டான். அவனுக்கு சென்னையிலே இருந்ததால் இங்கே இருக்கும் சில நாட்களை சமாளிப்பதில் தான் அவன் கவனத்தை செலுத்துவான்.

ஆனால் வீட்டின் கடைக்குட்டி வாகினிக்கு அவளை விட ஒரு வயதே பெரியதான யாமினிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவள் இள மனசை சற்று பாதிக்கத் தான் செய்தது.

ஒரு சில நிகழ்ச்சிகளுக்குப் பிறகு வாகினி கிராமத்திற்கு வருவதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் படிப்படியாக குறைந்து விட்டது.ஆமாம், வாகினிக்கு நம்மை விட பாட்டிக்கு யாமினி தான் முக்கியமா என்று ஒரு ஈகோ… சோ… நந்தன் மட்டுமே வருவான்.

யாமினியும், நந்தனும் ஒன்றாகவே ஊர் சுற்றுவார்கள். அவர்கள் இருவரும் இந்த ஊரில் சுற்றாத இடமே கிடையாது. தாத்தா, பாட்டி இருவரையும் ஏமாற்றி விட்டு சுற்றுவார்கள்.

மரம் ஏறி மாங்காய் பறிப்பதாகாட்டும், ஆற்றில் போய் நீச்சல் அடிப்பதாகட்டும், கபடி விளையாடுவதாகட்டும் எல்லாவற்றிலும் நந்தனுடன் கூட்டு சேர்ந்து கிட்டு யாமினியும் திரிவாள். தாத்தா பாட்டி ஏதாவது கண்டித்தாலும் அவளது அம்மாவிற்கும், அப்பாவிற்கும் ரொம்ப செல்லம்… அதனால் விடு மா… சின்ன பிள்ளை தானே விடுங்க… என அவர்கள் தடுத்து விடுவார்கள்.

இப்ப போலவா சிறு குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே போனாளே பயந்து இருப்பதற்கு… அவர்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது துள்ளி குதித்து விளையாட, அவர்களுக்கு எந்த கவலையும் கிடையாது, எந்த தடையும் கிடையாது. இன்று வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

யாமினி, எவ்வளவுக்கு எவ்வளவு விளையாட்டுத் தனமாக இருந்தாலும் படிப்பில் படுசுட்டி‌… ஹாஸ்டலில் தங்கி படித்து, விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் சும்மா இருப்பது கிடையாது. நந்தனுடன் விளையாடுவது‍, அது போக அமைதியாக இராமல் வீட்டில் தன் அம்மாவிற்கு எல்லா வேலையிலும் உதவி செய்வாள்.சித்திரமும் கைப் பழக்கம் போல, எல்லா வேலையையும் கச்சிதமாக செய்து முடிப்பாள்.

சமையலை மட்டும், தன் தாயிடம் கற்றுக் கொள்ளாமல், " மா… உன் சமையலை விட பாட்டி சமையல் தான் சூப்பராக இருக்கும். நான் பாட்டி கிட்ட தான் கத்துப்பேன் என்றுக் கூறி விட்டு, அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். பின்னே அவங்க அம்மா விளக்கமாற்றை எடுத்து விளாச மாட்டாங்காளா..‌

"பாட்டிக் கிட்ட, செல்லம் கொஞ்சிக் கொண்டே, சமைக்க கத்துத் தாங்க பாட்டி." என…

பாட்டியும் வாடி ராசாத்தி, நான் உனக்கு கத்துக் கொடுக்கிறேன், என்றவள் தன்னுடைய திறமையை அனைத்தையும் தன்னுடைய பேத்தி கற்றுக் கொடுத்தாள். தன் பாட்டியின் கைவண்ணம் அவளுக்கு வந்திருந்தது‌

அதுவே திருமணத்திற்கு பிறகு, அவரது இரண்டு பேத்திகளுக்கும் இடையே சண்டை வரக் காரணமாக இருந்தது.'

"என்ன அண்ணி… வீடே அல்லோலப்பட்டு கிட்டு இருக்கு. நீங்க என்ன எங்க அண்ணாவோட ட்ரீம்ஸ்ல இருக்கிறீங்களா… சின்ன அண்ணாவைப் பாருங்க செம ஃபீலிங்ல இருக்காரு. அம்மா பயங்கர கோபத்துல இருக்காங்க‌… நீங்க என்னவென்றால் நடு வீட்டில் வந்து நின்றுக் கொண்டே கனவு காணுறீங்க." என வாகினி‍, யாமினியின் காதை கடிக்க...

பழைய நினைவுகளில் இருந்த யாமினி அது இல்ல வாகி, உங்க சின்ன அண்ணனும், நானும் எவ்வளவோ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் என்று உனக்கு தெரியும் தானே‌… இப்ப எல்லாம் என்னோட சரியா பேசவே மாட்டேன்றான். என்னோட காதல நான், பர்ஸ்ட் அவன் கிட்ட தான் முதல்ல சொன்னேன். அவ்வளவு ஏன் கல்யாணமே அவன் தானே தாத்தா பாட்டிக்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணான். சின்ன வயசுல இருந்து அவன் பண்ண சேட்டையை பத்தி ஏதாவது வீட்ல சொல்லி இருக்கேனா... மாங்காய் திருடி அவன் பக்கத்து தோப்புல கட்டி வைத்து இருந்தாங்க… அப்பக் கூட நான் தான் போய் அவனைக் காப்பாற்றினேன், அதை வீட்டில யார் கிட்டயும் சொன்னது கிடையாது. பிளஸ் டூ படிக்கும் போது பதனீர் குடிக்கிறேன் என்று சொல்லிட்டு கள்ள வாங்கி குடிச்சானே அதை யார் கிட்டயாவது சொல்லி இருப்பேனா… இன்னைய வரைக்கும்‍, மொட்டை மாடிக்கு போய் திருட்டு தம் அடிச்சுட்டு வரானே யார்க் கிட்டேயாவது சொல்லிருப்பேனா… நான் அவனுக்கு எவ்வளவு சப்போர்ட்டா இருப்பேன் தெரியுமா… இதெல்லாம் உங்க பெரிய அண்ணணுக்கு கூட தெரியாமல், எவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறேன், என் கிட்டக் கூட அவன் காதலிச்சதை சொல்லவே இல்லை." என்று சத்தமாக முடிக்க…

மொத்த குடும்பமும் யாமினி கூறியதையே தான் கேட்டுக் கொண்டிருந்தது.

"அம்மா தாயே... இவ்வளவு நாள் உன்னோட நான் பேசாமல் இருந்ததற்கு, நல்லா வச்சு செஞ்சிட்ட… " என்று யாமினியிடம் சிடுசிடுக்க..

"அவளை ஏன் டா முறைக்கிற… தப்பெல்லாம் நீ செய்துட்டு… " என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எழுந்து வந்த சதாசிவம் கடிய…

நந்தன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, தன் தாயைப் பார்க்க…

அவளோ,"டேய்… உன்னைய நல்லவன் நினைச்சு உங்க அண்ணனை எப்ப பாத்தாலும் நான் திட்டுவேன், பார்த்தால் என்ன என்ன பழக்கமோ, பழகியிருக்கிற…" எனக் கோபமாகக் கூற‌…

"ஐயோ! அம்மா… அது பதநீர் என்று தான் குடிச்சேன். அப்புறம் தான் அது கள்ளு என்றே தெரியும். அதற்கு பிறகு நான் அந்த பதனீர் குடிப்பதையே விட்டு விட்டேன் மா…"

"சரி அதை விடு... இப்போ வரைக்கும் ஸ்மோக் பண்றீயே… அது தப்பு இல்லையா? " என மீண்டும் விடாமல் ஜானகி கிடுக்கிப்பிடி போட…

அது மா… என தயங்கிய நந்தன், யாமினியைப் பார்த்து முறைத்தான்.

"அவளை எதுக்கு டா… இப்படி முறைக்கிற…"

"அது டெய்லி எல்லாம் இல்லை மா… டென்ஷனாக இருக்கும்போது எப்பவாது தான் மா‌… " என்று சமாளிக்க…

"இது என்னடா கெடுதல் என்று தெரிந்தும் எப்போவாது என்று சொல்ற... விஷத்தை எப்போவாது என்று குடிப்பியா? சொல்லு.‌.. அது மாதிரி தான் இதுவும், மெல்லக் கொல்லும் விஷம். இனிமேல் நீ ஸ்மோக் பண்றதைப் பார்த்தேன் உன்னிடம் பேசவே மாட்டேன்." என ஜானகி பொறிய…

சாந்த சொரூபியான ஜானகி கோபப்பட, நந்தனோ, "சாரிமா… இனிமே நோ மா‌…" என்று சமாதானம் செய்தவன், யாமினியை முறைத்துக் கொண்டிருந்தான்.

அவன் திரும்பத் திரும்ப முறைப்பதைப் பார்த்த யாமினி, வாகினியின் காதில், " வாகி, தெரியாம சொல்லிட்டேன் அதுக்கு உங்க அண்ணன் முறைச்சிட்டே இருக்கிறார்". எனக் குறைப்பட…

" ம், பின்னே.. கொஞ்சுவாங்களாக்கும். நான் உங்கக் கிட்ட மெதுவா தானே கேட்டேன். நான் எதையோ கேட்க, நீங்கள் எதை எதையோ சொல்லிட்டீங்க... நீங்களே உங்க ரகசியத்தை, அதுவும் இவ்வளவு வெளிப்படையா சத்தமா சொன்னா, அண்ணன் டென்ஷனாக மாட்டானா? ஆனாலும் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு அநியாயமா பண்ணி இருக்கீங்க? ஆனா இப்படி க்ளோஸா இருந்த ரெண்டு பேரும் , இப்போ எப்படி சண்டை போட்டு இருக்கீங்க?" என கேட்க…

" அதை ஏன் என் கிட்ட கேக்குற? உங்க சின்ன அண்ணன் கிட்ட கேளு…" என்றுக் கூறி முறைத்தாள் யாமினி.

கேட்போம், கேட்போம் இப்ப போய் கேட்டால் என்னைய முறைச்சே பஸ்பமாக்கி விடுவான். அப்புறமா பார்த்துக்கலாம் என இவர்கள் தங்களுக்குள்ளே சலசலத்துக் கொண்டிருக்க…

வீட்டுத் தலைவர் சதாசிவம், தனது இல்லாளிடம் புலம்பிக் கொண்டிருந்தார். "ஜானகி… நாம் நம்ம பிள்ளைங்க நல்ல விதமாக தானே வளர்த்தோம், என் பசங்க என் பேச்சைக் கேட்டு கல்யாண பண்ணிக்கிட்டாங்க என்று நினைச்சுட்டு நான் பெருமை பட்டுக்கிட்டிருந்தேன். ஆனால் என் பசங்க ரெண்டு பேருமே லவ் பண்ணி இருக்காங்க... என்கிட்ட சொல்லாமல்,என்னை ஏமாத்திட்டிடாங்க… நானும் முட்டாள் மாதிரி இருந்திருக்கிறேன்." என…

" சரி விடுங்க… நடந்தது நடந்துப் போச்சு, பசங்க தான் நமக்கு தெரியாமல், இப்படி ஒரு வேலை பார்த்து வச்சிருக்காங்க… அடங்காதவனுங்க… ஆனால் நம்ம கடைக்குட்டி வாகினி நல்ல பொண்ணு... நாம சொல்றதை கேட்பா, அவளுக்கு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம் " என சமாதானம் செய்தாள்.

அவர்கள் அங்கு பேசுவதைக் கேட்ட வாகினி பேந்த, பேந்த முழிக்க… அவளது பார்வையில், அவள் காதலிப்பதைப் புரிந்துக் கொண்ட நந்தன், அவள் அருகே செல்ல… தன் அண்ணனை கண்கள் கலங்க பார்த்தாள் ‌..‌‌

"ஷ்‌.. அழதாடா… என்ன லவ் பண்ணுறீயா? "என நந்தன் கேட்க…

ஆமாம் என்று தலையசைத்தாள் வாகினி.

" நீ கவலைப்படாதே… இந்த அண்ணன், இதையும் அரேஞ்ச் மேரேஜா மாற்றி விடுறேன்‌." எனக் கூறிக் கண்ணடித்தான்.

அவனது செயலில் வாகினி முகத்தில் புன்னகை வந்தமர்ந்தது‌. யாமினியும் நிம்மதியடைந்தாள்.

ஆனால் மாப்பிள்ளை யார் என்று தெரிந்தால் வேண்டாம் என்று முதல் ஆளாக நந்தன் குதிக்கப் போவதை அப்போது, அந்த பேதைப் பெண்கள் இருவரும் அறியவில்லை‌.

தொடரும்….
 
மிகவும் அருமையான பதிவு,
விஸ்வதேவி டியர்

வாகினி யாரை லவ் பண்ணுறாள்?
அரவிந்தனையா?
 
Last edited:
Top