Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 10

Viswadevi

Active member
Member
Hi friends thanks for your lovely comments 😘 and support ❣.

ஜாலியான ஒரு குறுநாவல்.இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே...

1916
மா. வ‌. யோ

அத்தியாயம் - 10

அரவிந்த் சின்சியராக கார்ட்ஸ் விளையாட … இவர்கள் இருவருமே, அவர்களுக்கிருந்த கடுப்பில் ஏனோ தானோவென்று விளையாட… அரவிந்த் ஜெயித்து விட்டான். உற்சாகத்துடன் குதித்த அரவிந்த், " ஹரிணி… நான் மாப்பிள்ளையோட கொஞ்சம் பேசணும், நான் என்னோட ரூமிற்கு கூட்டிட்டு போறேன். நீ அவருக்காக காத்திருக்காமல் தூங்கு… குட் நைட் டா." என்றவன் நந்தனை கையோடு அவனது அறைக்கு அழைத்து சென்றான்.

ஹரிணியோ வெளியே செல்லும் தன் அண்ணனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நந்தனிடம் கேட்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தது. அவனோட பேச தனிமையை எதிர்பார்க்க… அரவிந்தோ, அதில் பெரியதாக ஒரு கல்லைக் தூக்கி போட்டுச் சென்றான். சரி தான் நாளைப் பார்த்துக்கலாம் என்று தூங்க ஆரம்பித்தாள்.

ஆனால் நந்தனோ, அரவிந்தை நல்லா சுத்த விட்டான்.

"மாப்பிள்ளை… நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க… எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு… "

"ப்ச் என்ன காரணம், எதுவாக இருந்தாலும் காலையில் சொல்லுங்க… இப்ப எனக்கு எதையும் கேட்கிற மூடில் நான் இல்லை. அதுவும் இல்லாமல் எனக்கு தூக்கம் வருகிறது." என்றுக் கூறி விட்டு படுத்து விட்டான்‌.

அரவிந்தோ, தூங்கும் நந்தனைப் பார்த்துக் கொண்டே, ' மாப்பிள்ளை நான் காரணம் சொல்றதுக்கு ஒரு சான்ஸ் குடுங்க.' என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

காலையில் இருந்து அந்த வீடே பரபரப்பாக இருந்தது. ஏதாவது ஹரிணிக் கிட்ட பேசலாம் என்று நந்தன் அவளையே சுற்ற … பர்த்டே பேபியோ பயங்கர பிஸியாக இருந்தாள். காலையில் குளித்தவள் தனது அறையின் மெத்தையில் இருந்த பார்சலை வியப்புடன் பார்த்தவள், அதைப் பிரிக்க நந்தனின் அழகிய கையெழுத்தில் ஒரு காதல் கவிதையுடன் பிங் நிற பட்டுப்புடவை இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவள் முகமும் சிவக்க… உற்சாகமாக சுற்றினாள்.

காலையில இருந்து ஃபோன் மேல் ஃபோனாக வந்துக் கொண்டிருந்தது.

புகுந்த வீட்டிலிருந்து எல்லோரும் ஃபோன் செய்து வாழ்த்த... அவளோ இத்தனை நாள் இல்லாத உற்சாகமுடன் எல்லோரிடமும் கலகலவென பேசினாள். தனது அத்தையிடம் மதிய உணவிற்கு எல்லோரும் இங்கு தான் வர வேண்டும் என்று கண்டிப்புடன் கூற, அவரோ "எதுக்குடா? ஈவினிங் வரோமே."என…

"நீங்கள் லஞ்ச்க்கு வரவில்லை என்றால் அப்புறம் நான் பேசமாட்டேன்." என்று செல்லம் கொஞ்சினாள் ஹரிணி.

எப்போ பேசி முடிப்பாள்? என்று நந்தன் காத்திருக்க… அதற்குள் அவளது தோழிகள் கான்ப்ரன்ஸ் கால் போட்டு பேசினர்.

நந்தனோ தலையில் கைவைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்துக் கொண்டான். அதற்குள் அரவிந்த் நந்தனை சுற்ற ஆரம்பித்து விட்டான். எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல அவனுக்கு இருந்தது. 'அவனுக்கு தானே தெரியும் மதியம் அவர்கள் வீட்டிலிருந்து எல்லோரும் வந்து விட்டால், அதற்கு பிறகு ஹரிணியுடன் தனிமை அமைவது அபூர்வம் என்பது.'

பிறகு அவன் நினைத்தது போலவே தான் நடந்தது. எல்லோருடனும் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள் ஹரிணி . எல்லோரும் புடவை சூப்பர் என… நந்தன் வாங்கி தந்ததையும்,அவனது சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி பற்றிக் கூற… நொந்துப் போனான் நந்தகுமார்.

"ஆமாம்... உனக்கு பின்க் கலர் பிடிக்காதே." என நந்தனிடம் யாமினி வினவ…

"எனக்குப் பிடிக்காது என்று யார் சொன்னா? "

" அன்னைக்கு வாகினி போட்டிருந்த லெஹங்காவை மாத்த சொன்னீயே…"

"அது வா… ஹரிணி போட்டது மாதிரியே இருந்தது‌. அதனால் வேண்டாம் என்று சொன்னேன். " என.

அங்கிருந்தவர்கள் அனைவரும் அவனை முறைக்க…. அவனோ மெதுவாக அங்கிருந்து நழுவி தோட்டத்திற்குச் சென்றான்.

நந்தனை பின் தொடர்ந்து வந்த அரவிந்த் மன்னிப்பு கேட்டான். "மாப்பிள்ளை...‌ நான் வேணும் என்று எதுவும் செய்யவில்லை உங்களுக்காகத்தான் யோசித்து இப்படி ஒரு ஐடியா கொடுத்தேன்‌. காதலிக்காக ஒன்றும் அப்படி ஒரு ஐடியா கொடுக்கவில்லை. எனக்கு ஹரிணி ரொம்ப முக்கியம். நீங்க என்னை தப்பாக நினைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு… என்னால தான் உங்க இருவருக்கும் சண்டை என்று நினைக்கும் போது எனக்கு கில்டியா இருக்கு."

அங்கு வந்த ஹரிணி, "டேய் அண்ணா… நீ தானா எல்லா குழப்பத்திற்கும் காரணம்? இது தெரியாமல் இவர் மேல் கோபமாக இருந்தேன். ஒரு மாசமா நம்மளை தவிக்க விட்டுட்டாரே… இவர நல்லா சுத்தல்ல விடணும் என்று இரவு தான் யோசிச்சு, காலையிலிருந்து இவரை பேச விடாமல் ஹர்ட் பண்ணேன். அப்படி என்ன பண்ணின? என் கிட்ட சொல்லு… " என…

அது என தயங்கிய அரவிந்த் பிறகு கடகடவென நடந்த அனைத்தையும் கூறினான். அங்கு சற்று நேரம் அமைதியே ஆட்சி செய்தது‌‌.

நந்தன் தான் அரவிந்த்க்கு சப்போர்ட்டாக, " விடு ஹரிணி… அரவிந்த் பாவம் தெரியாமல் செய்துட்டான்." என…

"நீங்க இதுல தலையிடாதிங்க நந்து…"
என்றவள் அரவிந்தனிடம் திரும்பி,
"எல்லாருக்கும் முன்பு அவர் என்னை மட்டம் தட்டுவதற்கு நீ தான் காரணமா?" என…

"அது குட்டிமா அப்பத் தான் அத்தையும், வாகினியும் உனக்கு சப்போர்ட் பண்ணனுவாங்க." என்று நெனச்சேன். அதை மாதிரியே, உனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க தானே…

" டேய் அண்ணா… அது மட்டும் போதுமா? ஒரு பொண்ணு இவ்வளவு நாள் வளர்ந்த இடத்திலிருந்து, இன்னொரு இடத்துக்கு கல்யாணம் பண்ணி போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நீங்க ஆம்பள..
மாப்பிள்ளை வேற … உங்களுக்கு தான் யோகம் … அம்மா வீட்டிலும் கவனிப்பாங்க… மாமியார் வீட்டிலேயும் மாப்பிள்ளை உபச்சாரம் நடக்கும். நாங்களோ புது இடத்தில் எப்படி நடக்கணும் என்று தெரியாமல் பயந்துக் கிட்டே இருப்போம். அப்ப இவரோட சப்போர்ட் இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? எல்லாம் உன்னால தான் …" என…

"ஹேய் குட்டிமா… ஓவரா சீன் போடாத... மாப்பிள்ளைக்கு வந்த யோகமா! எங்களுக்குத் தான் தெரியும், நாங்க படுற கஷ்டம். ஒரு ஆணோட கஷ்டம், இன்னொரு ஆணுக்கு தான் தெரியும். உங்களுக்கு என்ன... ஈஸியா சொல்லிட்ட… ஏற்கனவே அந்த வீட்ல இருக்கிற அம்மா, தங்கச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும், அப்புறம் கட்டிக்கிட்டு வந்த மனைவியையும் மதிக்கணும்‌. அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணா பொண்டாட்டி கோச்சுப்பா... பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணா அம்மா வருத்தப்படுவாங்க… இப்படி எல்லாரையும் சமாளிக்கிறதுக்குள்ள, நாங்க படுறப் பாடு அவ்வளவு தான்.

இதுல மாமியார் வீட்டில் விருந்து, அவர்களுடைய கவனிப்பு, இதெல்லாம் அவர் மகளை நல்லா பாத்துக்கற வரையும் தான்… இப்படி எல்லாரையும் சமாளிக்க நாங்க படுற கஷ்டம் இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. பாவம் என் நண்பன் கிருஷ்ணன், அவன் பட்டப்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல… அதை நான் கூட இருந்து பார்த்துருக்கேன். சரி நம்ம மாப்பிள்ளையும் அந்த மாதிரி கஷ்டப்படக்கூடாது, என்று தான் ஐடியா கொடுத்தேன்."

"டேய் அண்ணா… இது உதவியா… விட்டால் என் வீட்டுக்காரருக்கும், எனக்கும் டிவோர்ஸ் வாங்கிக் குடுத்துருப்ப… உன்னை சும்மா விட மாட்டேன்." என்று துரத்த…

அரவிந்தோ, " டேய் மாப்பிள்ளை… உன் பொண்டாட்டிக் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தாமல், நீ என்ன சைட் அடிச்சிட்டு இருக்க… "

"நந்து அண்ணாவை பிடிங்க… ஹெல்ப் மீ." எனக் கத்த…

அதுவரை அமைதியாக இருந்த நந்தனும் அரவிந்தை துரத்த ஆரம்பித்தான்.

அரவிந்த் ஓட... அவனைத் துரத்திக்கொண்டு இவர்கள் இருவரும், வீட்டிற்குள் ஓட... அங்கிருந்தவர்கள் எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி…

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

ஆறு மாதங்களுக்குப் பிறகு அரவிந்தன் கீழே இருந்த விருந்தினர் அறையில் இருந்து பட்டுவேஷ்டி, சட்டையில் தயாராகி அமர்க்களமாக வெளியே வர, அங்கு இருந்த மங்கையோ, அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு யோசனையில் இருந்தவள் பிறகு, " இன்னமும் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க போய் படுப்பா… " என…

இப்பொழுது அரவிந்தன் குழம்பிப் போய் தன் தாயைப் பார்த்தான். பின்ன இன்று தான் அவனுக்கு திருமணமாகி இருந்தது. இரவு உணவு முடிந்த பின், அவளது தங்கை மாடிக்கு வரக்கூடாது. கீழேயே தயாராகி வா என்று சொல்லி விட்டு சென்றிருந்தாள்.

'இப்போ அம்மா என்னவென்றால் போய் தூங்கு என்று சொல்றாங்க… அப்ப வாகினி எங்கே? ஏற்கனவே மாடிக்கு போய்ட்டாளோ என்று குழம்பியன், வாகினியை நினைக்கவும், ஏதேதோ கற்பனைகள் தோன்ற, ' உற்சாகமாக விசிலடித்துக் கொண்டே படியேறி அவன் அறைக்குள் நுழைந்தவன் அதிர்ந்து நின்றான்.

அங்கு அவனது தேவதை வாகினி மட்டுமில்லை, அவள் கூட ஹரிணி, நந்தன், கிருஷ்ணன், யாமினி அனைவரும் அவனது அறையில் உள்ள கட்டிலில் அமர்ந்திருந்தனர். அவனது அதிர்ந்த முகத்தைப் பார்த்து எல்லோரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். வாகினியோ தலை நிமிராமல் குனிந்து இருந்தாள்‌.

ஹரிணியோ, சின்சியராக கார்ட்ஸை குலுக்கிக் கொண்டு இருந்தாள்.மற்றவர்கள் எல்லாம், என்ன நினைப்பார்கள் என்று எதுவும் யோசிக்காமல், " அடியே ஹரிணி... நீயெல்லாம் ஒரு தங்கச்சியா? என்ன பழி வாங்க ஆறுமாதமாக காத்திருந்தியா? ஆடி மாசம் உங்களை தனியாக விடக்கூடாதுன்னு அம்மா சொன்னாங்க, என்று தான அன்னைக்கு கார்ட்ஸ் விளையாட வந்தேன். அதையே அதுக்கப்புறம் எத்தனை தடவை சொல்லி திட்டுண… நான் மன்னிப்புக் கூட கேட்டேனே… அதையெல்லாம் இன்னும் மறக்காமல் இப்படி மனசுல வச்சுக்கிட்டு, இப்படி என் ரூம்ல அலங்காரம் கூட பண்ணாமல் எல்லாரும் கூடி உட்கார்ந்து கும்மி அடிக்கிறீங்க... நான் பாவமா தெரியலையா?" என பரிதாபமாக கேட்க…

வாகினியோ வெட்கத்துடன் இருக்க… சுற்றியிருந்தவர்கள் ஆளாளுக்கு இருவரையும் ஓட்ட… கிருஷ்ணன் தான், என் நண்பனை ஓவரா தான் கலாய்க்கிறீங்க… " அரவிந்த்... இன்னைக்கு நாள் நல்லா இல்லை. நாளைக்கு தான் உங்கள் இருவருக்கும் சாந்தி முகூர்த்தம். " என்று எங்கள் பாட்டி சொல்லிட்டாங்க‌…

" என்ன உன்ன மட்டும் விட்டுட்டு போனா நீ சும்மா இருக்க மாட்ட…"என்று உன் தங்கை சொன்னா... அதனால தான் நாங்க எல்லாரும் இன்னைக்கு இங்க உன் கூட தான் இருக்கப் போகிறோம். "என்று கிருஷ்ணன் கூற…

'ஐயோ! நாம அவசரப்பட்டு விட்டோமோ.‌‌..' என்று நினைத்தவன் ஹரிணியை பார்க்க…

அவளோ புருவத்தை உயர்த்தி கேலி செய்தாள். அவள் செய்கையில் அவளை முறைத்தான் அரவிந்த்.

அதுவரை அமைதியாக இருந்த நந்தன், "அரவிந்த்... என் பொண்டாட்டிய கண்ணு வைக்காத… அவளே பாவம் உன் கல்யாணத்துல ரொம்ப அலைஞ்சிட்டா…" ம என்று ஐந்து மாதம கருவை சுமந்த தன் மனைவியை தாங்கிக் கொண்டிருந்தான்.

"போதும்… போதும்... உங்கள் ரொமான்ஸ்‌. இனிமே நாங்கதான் புது ஜோடி … அதனால அடக்கி வாசி நந்தன்… " என அரவிந்த் கிண்டலடிக்க…

" ஹே... நீங்க புது ஜோடியாய் இருந்தா எங்களுக்கென்ன… நாங்கள் வாழும் காலம் வரை காதலித்து கொண்டு தான் இருப்போம்."என்ற நந்தன் காதலோடு ஹரிணியை பார்த்தான். ஒஹோ… என்ற உற்சாக குரல் அவ்வறையில் ஒலித்தது.

'அவர்கள் என்றும் காதலுடன் மகிழட்டும்.'என்று நாமும் விடை பெறுவோம்.

முற்றும்.
 
Banumathi jayaraman

Well-known member
Member
ரொம்ப ரொம்ப ஜாலியான அருமையான குறுநாவல், விஸ்வதேவி டியர்
மீண்டும் அடுத்ததொரு பெரிய நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Top