Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மறந்தேன் உன்னால் அத்தியாயம் 1

Advertisement

Divyathiru

Member
Member

மறந்தேன் உன்னால்

அத்தியாயம் 1

சொன்னேன் கேட்டீங்களா? இப்ப பாருங்க, நான் சொன்னது போலவே ஆகிடுச்சி. அதனால தான் சொன்னேன் அப்பவே சொன்னேன்," என் அண்ணன் குடும்பமா இருந்தாலும் வேண்டாம்" வேற இடத்துல பொண்ணு பாக்கலாம்னு ...... யாரு கேட்டா?...... நான் சொல்வதைக் கேட்டால் தான் ,அப்பவே உருப்பட்டு இருப்பிங்களே.......
என்று தன் போக்கில் புலம்புவதும் திட்டுவதுமாயிருந்தார் தங்கம்.

வீட்டில் அத்தனை பேர் இருந்தும் யாரும் வாய் திறக்கவில்லை எங்கே ?" தாங்கள் வாய் திறந்தால் இவர் வாய் மூடாது ,திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிப்பார்" என்பதாலும், யாரும் வாய் திறக்கவில்லை.

அதிலும் அந்த வீட்டின் மருமகன்கள் இருவருக்கும் தங்கள் மச்சான் நினைத்து கவலையாக இருந்தது இருந்தும் தாங்கள் ஏதாவது, அவருக்காக பேசப் போய் "தங்கள் மாமியார் வாயை மூட முடியாது "என்றும் அவர் பிரச்சினையை வேறு திசையில் திருப்பி விடுவார் என்பதாளும் அமைதி காத்தனர்.

அப்போது வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அந்த வீட்டின் கடைக்குட்டி 10 வயது சிறுமி சித்ரா மூச்சிரைக்க ஓடி வந்தாள்.
ஓடி வந்தவள், தன் தாயின் முன் நின்று "அம்மா அம்மா" அண்ணனும் மதனியும் அந்த வேப்பமரத்தை தாண்டி போயிட்டு இருக்காங்க.... நானும் அவங்கள பார்த்துட்டு ஓடிப்போய் எங்க அண்ணே போற? நானும் வருவேன்னு சொன்னே ஆனா? என மூச்சு வாங்கி மறுபடியும் அம்மா அண்ணா எங்க என ஆரம்பித்தது குழந்தை.....
அதற்குள் தங்கம் சித்ராவின் ஒருகையை பிடித்து இழுத்து தனது பக்கத்தில் அமர்த்தி ஏய்! நீ எங்கடி போன உன்னை யாருடி வெளியே போக சொன்னா? என அதட்ட......
அதை காற்றில் விட்ட சித்ரா மறுபடியும் முதலிலிருந்து அம்மா அண்ணா எங்க போறாங்க? மதனியை கூட்டிட்டு போறாங்க என்ன மட்டும் கூட்டிட்டு போகல................. எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போவாங்க. இன்னைக்கு, என்ன கூப்பிடாம அவங்க மட்டும் போறாங்க.

"சொல்லுமா" அண்ணா ஏன் என்னை விட்டுட்டு போச்சு? என அழ ஆரம்பிக்க...........

தன் தங்கை அழுவதைப் பார்த்த சீதா, " பாப்பு அழாத" இங்க ,அக்கா கிட்ட வா..................

நீ போ..... என தன் கையை மேலே தூக்கி அவளைப் பார்த்து போ போ என அசைத்து மீண்டும் தன் தாயிடம் அம்மா, அம்மா, அண்ணா எப்போ வருவா? மதனி எப்போ வருவா?
ஏய்!, சும்மா இருடி....... என அதட்டிய தங்கம். ஏய்! சும்மா, சும்மா அண்ணா அண்ணா மதனி என ஏலம் விட்டு இருக்காத, இனி உனக்கு அண்ணனும் இல்ல மதனி இல்ல உனக்கு மூணு அக்காக்களும் அத்தாகளும் மட்டும்தான் உண்டு புரியுதா?சொல்லி முதுகில் தட்ட..........அழுதுகிட்டே குழந்தை தன் அக்கா நோக்கி சென்றது.
சீதா,
"இதான் சொன்னேன்",கேட்டியா? வா என அவளை உள்ளே அழைத்து கொண்டு சென்று விட்டாள்.

அதுவரை பொறுமையாக தன் மனைவி பேசுவதற்கு எல்லாம் எதிர்ப் பேச்சு பேசாமல், எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு அமைதியாக இருந்த அந்த வீட்டின் தலைவர் பெருமாள் தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே நடந்தார்.

அவர் போனதுமே தங்கத்தின் மூத்த மகள் இதுவரை நடந்த பிரச்சினைகள் எதற்கும், எதுவுமே கேட்காமல் எழுந்து தன் இரண்டு குழந்தைகளையும் தன் கணவனும் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள், தன் தாய் வீடு இருக்கும் தெருவில் பத்து வீடு தள்ளி இருக்கும் தனது வீட்டிற்கு.

அவர்களை தொடர்ந்து அவரது இரண்டாவது மகளும்," நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை மா" கூறிவிட்டு அவளும் தனது குழந்தைகளையும் தனது கணவரையும் கூட்டிக்கொண்டு பின்னாடி தெருவில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றிட்டுவிட்டாள்.
தங்கம், என்ன? ஆளாளுக்கு என்ன வில்லி மாதிரி பாக்குறீங்க? பார்க்கிறவங்க பார்த்துட்டு போங்க..................... 4 பொம்பிளை இருந்தா? நீங்களும் என்னை மாதிரி தான் யோசிப்பிங்க, யோசிக்க மட்டும் என்ன நடந்துப்பிங்க........... என தனக்குள் போறுமினார்.

தோட்டத்தில்,
தென்னைக்கு நீர் பாயிச்சி வரப்பு மாற்றிக் கொண்டு இருந்த பெருமாளைப் பார்த்தபடி அவரது அண்ணனான லிங்கம் அவருக்கு உதவியப்படி ஐயா பெருமாளு என்ன இருந்தாலும் நம்ம தங்கம் இப்படி பண்ணியிருக்ககூடாது. நம்மள விட்டா நம்ம கதிருக்கு யார் ஐயா இருக்கா? அவளும் எடுத்துச்சொல்லி கொஞ்சம் புரிய வைத்து இருக்கலாம் ஒரேடியா பிள்ளையை வெளியே போக சொல்லிவிட்டா..... நீயும் பேசாம இருந்துட்டே,

அத விடுங்க அண்ணே, அவங்க தனியா இருந்தாதான் சரி நமக்கும் இன்னும் ரெண்டு பொட்ட புள்ளைங்க இருக்கு அதையும் கரைசேர்க்கும் இல்லையா, அதனால ,"அவன் பாட்ட பார்த்துக் கொள்வது தான் அவனுக்கு நல்லது" நமக்கும் அதான் சரினுபடுதுங்க அண்ணே,
சரிப்பா பார்த்துக்குங்க என சொல்லி லிங்கம் சென்று விட்டார்
வேலை முடித்து வரப்பில் அமர்ந்த பெருமாளுக்கு, தன் வீட்டில் இன்று காலை நடந்த அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவிலிருந்து வருத்தத்தில் ஆழ்த்தியது.

அவரது சிந்தனையை கலைக்கவென அங்கு வந்து சேர்ந்தான் பக்கத்து வீட்டு வாசு
அண்ணே, என்ன அண்ணே இப்படி இருக்கீங்க? கவலைப்படாதிங்க,எல்லாமே நல்லபடியா நடக்கும் நீங்க ஏன் கவலைப்படுகிறீர்க? நம்ம புள்ள நல்லா இருப்பான், வலது கையை பிடித்து ஆறுதல் படுத்தினான்.
சரிண்ணே, நீங்க புறப்படுங்க நான் பாத்துக்கிடுதேன் .
அவரும் எழுந்து சரிப்பா, நீ மீதி வரப்பையும் மாற்றிவிட்டு நீயும் வீடு வந்து சேருப்பா என்று தன் தோளில் துண்டை எடுத்து போட்டு சென்றார்

அங்கே கதிரவன் வீட்டில்,

ஏங்க மாமா, என்ன மாமா பண்றது? என கண்கலில் தவிப்போடு தன் கணவனின் கைகளை பிடித்து கொண்டு அவனிடம் கேட்டாள் கண்மணி.
தவிப்போடு, தன் அருகில் அமர்ந்து தன் கைகளை பிடித்துக் கொண்டு," தன்னையே பார்க்கும் தன் மனைவியை ஆறுதல் படுத்தும் விதமாக, அவளது கைகளை தட்டி கொடுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான் கதிரவன்.

-மறப்பான்.
 
Attachments

  • IMG-20220119-WA0001.jpg
    IMG-20220119-WA0001.jpg
    18.6 KB · Views: 1

Nirmala vandhachu ???
Best wishes for your new story pa
 
Top