Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி ( காதல் வலம் வர ) 23

Advertisement

சண்ட போடாமல் இருக்க முடியாது போல அங்கை மால்.இதமாக கூற வேண்டியது கண்களும் சண்டை அவனை பார்க்க முடியலனா வரும் சண்டை.பாவம்தான் ராஜன்
 
HiView attachment 263

அவனுக்கு கணக்கே தெரியலை..
அப்புறம் உன்ன மட்டும் எப்படி கணக்கு பண்ணுவான்...

நீயே எல்லா கணக்கும் போடாம..
அவனுக்கு சொல்லிக்குடேன் செல்லம்...


ரொம்ப வேணாம்..
ஒரு 143 சொல்ற அளவுக்கு போதும்?
Hahaha namma angai ku only computer kanannu mattum than theriyum... ... nenga sonna kanakku therinji iruntha than nammalu yeppavo flat agi irupane marriage ana udane...
 
ஃபிரண்ட்ஸ் காதல் வலம் வர டைட்டில் மரபு வேலி ன்னு மாத்திட்டேன்
actually இந்த டைட்டில் மாத சின்ன நாவல் க்கு குடுத்தது
ஆனா இது ரொம்ப பெருசாகிடுச்சு
இனி அங்க இதை கொடுக்க முடியாது
so காதல் வலம் வர டைட்டில் ல சின்ன கதை வேற எழுதணும்
இது மரபு வேலி ன்னு கூடிய விரைவில் புத்தகமா வரும். முடிஞ்ச அளவு வேகமா எழுதறேன்.


அத்தியாயம் இருபத்தி மூன்று :

ஆம்! அவன் கடன் பணி செய்வதே என்று ஆக்கிக் கொண்டான்.

கோவில் பூஜை முடிந்ததும் அவரவர் அவரவர் வீடு செல்ல, ரதியை மனோவிடம் கொடுத்தான். அவன் தானே ராஜனிடம் கொடுத்தான்.

மனோ முறைக்கவும் “அட, என்னங்க நீங்க? சும்மா பில்ட் அப் தான் நான், டம்மி பீஸ், அப்படி எல்லாம் உங்க தங்கையை அடிச்சிட மாட்டேன், அவ என்னை அடிக்காம பார்த்துக்கங்க” என்று இலகுவாக சொன்னவன் வேறு பேசாமல் கிளம்ப,

“ஏன் ராஜன், அத்தை எல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா?” என்றார் ராஜலக்ஷ்மி.

அதன் பிறகே “எப்படி இருக்கீங்க அத்தை?” என்றான்.

என்னவோ யாரோடும் பேச பிடிக்காமல் போயிற்று. அவன் உடன் பிறப்புகள் எல்லோரோடும் ஒரு தலையசைப்பு இல்லை ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசினான். இப்போது ராஜியிடம் பேசினால் “தொ பார்றா, மாமியார் கிட்ட மட்டும் பேசறான்” என்று வரும். அதன் பொருட்டே தவிர்த்தான். அவரையும் பார்த்து தலையசைத்தான் தான். ஆனால் அவர் தான் கவனிக்கவில்லை.

“நீயும் என் பொண்ணும் நல்லா இல்லாம, நான் எப்படி நல்லா இருப்பேன்” என்றார் அவர்.

“அதுக்கென்ன அத்தை, கண்டிப்பா நல்லா இருப்போம்”

“உடம்பை ஏன் இப்படி கெடுத்து வெச்சிருக்க பார்த்துக்கோ ராஜன்”

“நிஜம்மா அத்தை எனக்கு தெரியவேயில்லை. இனிமே கவனமா இருக்கேன், உங்க பொண்ணு கிட்ட சொல்லிடுங்க, எனக்கு ஒன்னுமில்லைன்னு” என்றவன்,

“மில்லுல வேலை இருக்கு அத்தை, நான் போகணும்” என்று அவரிடம் சொல்லி சென்று விட்டான்.

பூஜை முடிந்து மீண்டும் உறவுகள் எல்லாம் அவரவர் இடம் சென்று விட, அங்கை ஊருக்கு செல்லவில்லை. அந்த ஊரில் இருந்த அவர்களின் வீட்டில் தான் இருந்தாள்.

மனோவும் குடும்பத்துடன் கிளம்பிவிட்டான். ராஜலக்ஷ்மி மகளுடன் இருந்தார். அன்பழகன் காஷ்மீர் பார்டர் சென்றிருக்க, அவர் வருவதற்கு மூன்று மாதம் ஆகும் போல இருக்க, இங்கேயே இருந்து கொண்டார்.

மகள் தான் அவளின் வீட்டிற்கு கிளம்புவது போல தெரியவில்லையே. தனியாய் அவளை எப்படி விடுவது. தான் சென்றால் அவளும் உடன் வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் மகளுக்காக அங்கேயே தங்கினார்.

ராஜராஜனும் “நீ வீட்டிற்கு வா” என்று அங்கையை கூப்பிடவில்லை. அவளும் வருகிறேன் என்று சொல்லவில்லை.

ராஜனின் மனதினில் என்ன ஓடுகின்றது என்று ஒருவராலும் அனுமானிக்க முடியவில்லை.

ஆனால் ஓரே யோசனை அவளின் முகத்தில், இதோ இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. “அன்றும் அப்படி தான் கிளம்பு என்றான், இன்றும் அப்படி தான் சொல்லிவிட்டான்” எப்படி போவாள், அவளாய் செல்லவும் மனதில்லை, ராஜராஜனை விடவும் முடியாது.

ராஜலக்ஷ்மி கூட கேட்டார் “நான் கொண்டு போய் விடட்டுமா?” என்று, “வேண்டாம்” என்று விட்டாள்.

அவனின் நினைவாகவே இருக்க, இன்று அவனை மில்லில் சென்று பார்க்கலாமா என்ற யோசனையில் இருந்தாள்.

வெளியில் பைக் நிற்கும் சத்தம் கேட்க, அவனின் பைக் சத்தம் அவளிற்கு தெரியாதா என்ன?

வேகமாய் வெளியில் வர, கேட் வெளியே நின்றிருந்தான் ராஜராஜன். தில்லை அவனின் பைக்கில் இருந்து இறங்கினர்.

வெளியில் வந்த அங்கையை சில நொடிகள் பார்த்தவன், பின் அம்மாவிடம் “நான் அப்புறம் வர்றேன் மா” என்று பைக்கை கிளப்ப,

“நீ உள்ள வரமாட்டியா?” என்றார் பரிதாபமாக.

“எனக்கு வேலை இருக்கும்மா”

“நீ ஃப்ரீயா இருக்கும் போது கூட்டிட்டு வந்திருக்கலாம் தானே” என்றார் அவர்.

அவருக்கு தனியாக செல்ல என்னவோ போல இருந்தது.

“மா, போங்கம்மா, உங்களை என்ன கடிச்சா சாப்பிடுவா அவ, போங்க” என்று அவன் சென்று விட்டான்.

அவன் பார்த்தும் பேசாமல் சென்றது அப்படி ஒரு கடுப்பை கிளப்ப,

“நீ எப்படியோ போடா” என்று அவனை மனதிற்குள் சில கெட்ட வார்த்தைகளில் அர்ச்சித்தாள்.

தில்லை தயங்கி நிற்க, “வாங்கத்தை” என்றாள். அவளின் குரலில் வெளியே வந்த ராஜி “வாங்க அண்ணி, வாங்க” என்று உற்சாகமாக வரவேற்க,

அதன் பிறகே உள்ளே சென்றார்.

“என்ன? எங்கம்மா கூப்பிட்டா தான் வருவீங்களா? நான் கூப்பிட்டா வர மாட்டீங்களா?” என்று அவரை கேட்க,

“இல்லையே, அப்படி இல்லையே” என்று அவர் தடுமாறினார்.

“அங்கை பேசாம இரு” என்று ராஜி சொல்ல,

“அப்படி தான் பேசுவேன், கொண்டு வந்து விட்டுட்டு உள்ள கூட வராம போறாங்க இவங்க பையன். என்னை பார்த்தா எப்படி இருக்கு? வாங்க நாம ஊருக்கு போகலாம்” என்று கோபமாய் பேசினாள்.

“அது வேலை இருக்காம்” என்றார் தில்லை தயங்கி.

“என்ன அண்ணி நீங்க? இவங்க பிரச்சனை இவங்களோட, நீங்க உள்ள வாங்க!” என்று அவர் தில்லையை கை பிடித்து அழைத்து செல்ல, அதன் பிறகே தில்லை சற்று தெளிந்தார்.

ரதி உறக்கத்தில் இருக்க, “பட்டு குட்டியை பார்க்க தான் வந்தேன்” என்று அவளைப் பார்த்த படி சொல்ல,

“அப்போ என்னை பார்க்க வரலையா நீங்க” என்றாள் அதற்கும்.

தில்லை பயந்தே விட்டார்.

“அங்கை” என்று அவளை அதட்டிய ராஜி, “உள்ள போ, அத்தைக்கு தண்ணி கொண்டு வா” என்றார்.

அவள் செல்லவும், “ராஜன் வந்துட்டு பார்க்காம போயிட்டான் இல்லையா, அந்த கோபம் அண்ணி, நீங்க மனசுல வெசிக்காதீங்க” என்றவர்,

பின் உள்ளே வந்து அங்கையிடமும் “இன்னும் ரெண்டு வார்த்தை இப்படி பேசின, அவங்க அழுதுடுவாங்க, அப்புறம் உன் புருஷன் அன்னைக்கு கை தான் ஓங்கினான், இன்னக்கு அடிச்சிடுவான். பிரச்சனையை பெருசு பண்ணாத” என்று கோபமாய் சொல்லி,

“போ தண்ணி குடு, நான் சாப்பிட எடுத்துட்டு வர்றேன்” என்று அவளை அனுப்பி,

சப்பாத்தி குருமாவை எடுத்து வர,

“நான் சாப்பிட்டு தான் வர்றேன்” என்றார் அவசரமாக,

“அண்ணி ஒன்னு தான் சாப்பிடுங்க, ராஜன் இளைச்சிட்டான் இல்லையா, சரியா சாப்பிடலைன்னு இவ கிட்ட சொன்னானாம். அது தான் இதுவரை சமையல் பக்கம் எட்டி பார்க்காம இருந்தவ சமைக்க கத்துக்கறாளாம்”

“இந்த கொடுமையை ரெண்டு நாளா அனுபவிக்கறேன், இன்னைக்கு நீங்களும் அனுபவிங்க”

“அதன் பிறகு ஏன் மறுக்கப் போகிறார், உண்டு விட்டு நல்லா இருக்கு அண்ணி” என்றவர் “இன்னும் இருக்கா” என,

“இன்னும் மூணு சப்பாத்தி இருக்கு அண்ணி” என ராஜி சொல்ல,

மில்லில் வேலை செய்யும் ராமுவிற்கு அழைத்தவர் “அண்ணா இங்க வந்து போங்க” என்று சொல்லி அழைத்து, “நாம மட்டும் ஏன் அனுபவிக்கணும், அவனும் அனுபவிக்கட்டும்” என்று அவர் சொல்லும் போதே ரதி உறக்கத்தில் இருந்து விழிக்க,

அதன் பிறகு தில்லையின் நேரம் முழுவதும் அவளிடமே, இடையில் ராமு வந்து உணவு வாங்கி போக,

“நான் குடுத்து விட்டேன், அங்கை செஞ்சதுன்னு சொல்லுங்க” என்று மட்டும் தான் சொல்லிவிட்டார் தில்லை.

ஆனால் ராமு வோ ஒரு படி மேலே, சற்று நேரத்தில் அழைத்து “குடுத்தேன், தம்பி சாப்பிட்டிடுச்சு” என்று சொல்ல,

அதன் பிறகு தான் அங்கை சற்று சமன் பட்டாள்.

அப்போதும் தில்லையை விட்டால் இல்லை, “ஏன் இப்படி ஆகிட்டார், நீங்க ஏன் அவரை இப்படி விட்டீங்க” என்று கேட்க,

“எங்க அங்கை விட்டேன், என் பையனை நான் விடுவேனா, என்ன அவனை உருக்குதுன்னு தெரியலை, எதுக்கும் அவனை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வாயேன்” எனவும் அங்கை பயந்து விட்டாள் என்னவோ என்று.

அதை அவளின் முகமே காட்டிக் கொடுக்க, “மா நான் மில்லு வரை போயிட்டு வர்றேன்” என்று வண்டியில் கிளம்பினாள். அந்த க்ஷண நேர பயமே அவளுக்கு ஒரு தலை பாரத்தை கொடுத்தது.

“இவளை கூட்டிட்டு போ” என்று ரதிக்கு பால் குடிக்க வைத்து கொடுக்க, அவளை முன் புறம் நிற்க வைத்துக் கொண்டு மெதுவாய் ஓட்டினாள்.

மில்லிற்கு செல்ல அங்கே அவன் இல்லை, “இப்போ தான் வயல் வரைக்கும் போறேன்னு சொல்லிட்டு போறாங்க”

அவளின் இடம் அல்லாவா அது, அதனால் ரதியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவர்கள் அமரும் அறைக்கு சென்று கணக்கு வழக்கு நோட்டை பார்க்க, அதில் எதுவுமே ஒழுங்கில்லை, கம்ப்யுட்டரில் பார்த்தால் அதில் எதுவுமே ஏற்றப் படவில்லை.

கையில் இருந்த பில் புக்கில் தான் வியாபாரம் நடந்து இருந்தது. அதிலும் பலது அங்கைக்கு புரியவில்லை. சில இடங்களில் கணக்கு தப்பாக இருந்தது. நிறைய இடங்களில் இன்னும் பணம் வரவில்லை.

அரை மணி நேரம் பார்க்க தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல ஆகிற்று, தலைவலியும் அதிகமாகிற்று. இந்த நேரத்தில் ரதி சிணுங்க ஆரம்பிக்க, அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டாள்.

தில்லை இவள் வந்ததும் ரதியை சிறிது நேரம் கொஞ்சி விட்டு “கிளம்பறேன்” என்றார்.

“எங்க கிளம்புறீங்க, உங்க பையன் வந்து கூட்டிட்டு போனா தான் அனுப்புவேன், அதெல்லாம் போகக் கூடாது” என்றாள் கறாராக.

ராஜராஜனின் மீது இருந்த கோபத்தை எல்லாம் தில்லையின் மீது காண்பித்தாள். அவளும் தான் என்ன செய்வாள். ஒன்றரை மாதம் அவனை பார்க்கவில்லை. ஒரு அழைப்பு கூட இல்லை. தினமும் அலைபேசியில் இன்று அழைப்பானா இன்று அழைப்பானா என்று நினைக்க அழைக்கவேயில்லை. அதுவே நான் என்ன அவ்வளவு எளிதாக போய்விட்டேனா அவனுக்கு என்ற எண்ணத்தை கொடுத்திருந்தது.

நேரில் அவளாய் சென்று பார்க்கவே கூடாது என்று நினைத்திருக்க ராஜலக்ஷ்மியின் பேச்சில் அவளையும் மீறி போய்விட்டாள். பார்த்த பிறகு அவனை விடவும் முடியவில்லை, அவனை நெருங்கவும் முடியவில்லை. அவனின் அருகாமை வேறு வேண்டும் என்று மனம் ஏங்க, அவனானால் பார்த்து விட்டு பார்க்காமல் போகிறான், அவளாய் சென்றாலும் அவன் இல்லை, அது எல்லாம் அப்படி ஒரு ஆத்திரத்தை கொடுத்து இருந்தது.

“இந்தாங்க உங்க பேத்திக்கு சாப்பாடு குடுத்து தூங்க வைங்க” என்றவள் அவளின் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.

“என்ன அங்கை?” என்று ராஜி கேட்க,

“தலை வலிக்குதும்மா, அவர் வந்து அத்தையை பார்த்து கூட்டிட்டு போகட்டும். அதுவும் உள்ள வந்து ரதியை பார்த்த பிறகு அனுப்புங்க, எனக்கு தலை வலிக்குது நானா எழுந்துக்கற வரை எழுப்பாதீங்க” என்றவள் நிஜமாகவே தூங்கி போனாள்.

மதியம் வீட்டிற்கு போன ராஜராஜன் தில்லை இன்னும் வராததை பார்த்து “என்ன கிழவி இன்னும் அம்மா வரலை?” என்றான்.

“வரலையே, உங்கப்பன் வேற இன்னும் சாப்பிடாம உட்கார்ந்திருக்கான்”

“எங்கம்மா எனக்கு சாப்பாடு போடுது, நீ உன் பையனுக்கு போடமாட்டியா, ஒரு நாள் போட்டா குறைஞ்சிடுவியா?”

“நான் எதுக்குடா போடணும், ஏன் அவன் போட்டு சாப்பிட மாட்டானாமா? உங்க பெரியம்மா கூப்பிட்டா, இவன் தான் அப்புறம் சாப்பிடறேன்னு உட்கார்ந்து இருக்கான்” என்று அம்மாவும் மகனும் தமிழ்செல்வனை ஏலம் விட்டனர்.

பின் “போ போய், உங்கம்மாவை கூட்டிகிட்டு வா, உன் பொண்டாட்டியை தான் கூட்டிகிட்டு வர மாட்ட”

அதுவரை வாயடித்த ராஜன் எதுவும் பேசவில்லை,

“இதுக்கு மட்டும் வாயை திறக்காதடா, போடா முதல்ல போய் கூட்டிட்டு வா” என்றார் அதிகாரமாக.

அங்கே சென்றான் ராஜராஜன், வெளியில் நின்று ஹாரன் அடிக்க,

அவனின் செல்ல மகள் தான் முதலில் வந்து எட்டி பார்த்தால் கதவை பிடித்து, இவன் கேட்டின் வெளியே அவள் வாயில் கதவை பிடித்துக் கொண்டு கிட்ட தட்ட முப்பதடி தூரம்.

அவனை பார்த்ததும் படியில் இறங்க முற்பட, அதற்குள் தில்லை வெளியில் வந்தவர், அவளை தூக்கியிருந்தார்.

அதற்குள் இவனும் இறங்கியிருந்தான். உள்ளேயும் சென்று மகளை கையில் வாங்கினான். அப்படியே வெளி திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

ராஜியும் வெளியே வந்தவர், “உள்ள வா ராஜன்” என,

எதுவும் பேசாமல் மகளை கொஞ்சிக் கொண்டு இருந்தான்.

ஆனால் பார்வை அங்கையை எதிர்பார்த்து இருக்க,

“அவ தூங்கறா, மில்லுக்கு வந்துட்டு வந்ததுல இருந்து தலைவலின்னு படுத்துட்டா. திரும்ப ரெண்டு பேருக்கும் வாக்குவாதமா?” என்று ராஜி கேட்க,

“மில்லுக்கு வந்தாளா? எப்போ?” என்றான் அவரை நிமிர்ந்து பார்த்து.

“ஒரு பதினோரு மணி போல வந்தா, திரும்ப இங்க வரும்போது பன்னிரண்டு மணிக்கு மேல இருக்குமே”

“நான் வயலுக்கு போயிட்டேன் அத்தை, அவ வந்த போது இல்லையே”

“வந்து தான் தூங்கிட்டா”

சில நொடிகள் யோசனை, முகத்தில் ஒரு தயக்கம், பின்னே ரதியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

பெரியவர்கள் இருவரும் வெளியில் அமர்ந்து கொண்டனர்.

உள்ளே சென்றால், அங்கை பாதி உறங்கியும் உறங்காத நிலை, மிக அதிகமான ஒரு தலைவலி இது போல எல்லாம் வந்ததில்லை. வலி அதிகமாகி தூக்கம் கலைந்திருந்தது.

அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டே இருந்தாள், ராஜராஜன் வந்தது கூட தெரியவில்லை.

“அம்மா” என்ற ரதியின் அழைப்பு அவளை தீண்ட,

“பட்டு அம்மாக்கு ரொம்ப தலைவலி, நீ பாட்டி கிட்ட போ” என்று கண் திறக்காமலேயே சொல்ல,

“என்ன பண்ணுது அங்கை?’ என்ற ராஜனின் குரல் செவியை தீண்ட, வேகமாய் எழுந்து அமர்ந்தாள்.

முதலில் சில நொடிகள் அவன் தானா என்று பார்த்தவள், பின்பு ஆங்காரமாய் பேச ஆரம்பித்தாள்.

“எதுக்கு வந்த நீ? வராத போ! உன்னை நான் கூப்பிட்டேனா? போ! உன்னால தான் எனக்கு தலைவலி, இப்படி எல்லாம் எனக்கு வந்ததேயில்லை, போ! நீ போ! எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கலை”

“காலையில வந்துட்டு அப்படியே போன தானே, இப்போ மட்டும் ஏன் வந்த? போ, போ, உன் பின்னே சுத்தணும்னு தான் இப்படி பண்ணறியா, நான் சுத்த மாட்டேன், உன்னை தேடி வரமாட்டேன் போ!” என்று அப்படி ஒரு கத்து கத்தினாள். அவளின் மனதின் அழுத்தங்கள் எல்லாம் வார்த்தையாய் வந்தது.

ராஜராஜன் அவளை கண் இமைக்காது பார்த்து நின்றான். கோபத்தை எதிர்பார்த்தான் தான், ஆனால் இத்தனை ஆவேசத்தை எதிர்பார்க்கவில்லை.

“இப்படி பார்க்காதா எதையாவது உன் மேல தூக்கி வீசிடுவேன் போ, நான் ஏன் உன்னை பத்தி கவலைப் படணும், படமாட்டேன்” என்று அப்படி ஒரு சத்தம்.

ராஜலக்ஷ்மியும் தில்லையும் வேகமாய் என்னவோ ஏதோவென்று உள்ளே வர, அங்கையின் சத்தத்தில், ரதி பயந்து அவனின் அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

அப்படி ஒரு உணர்ச்சிகளின் பிடியில் அங்கை இருந்தாள்.





ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்







Pressure release ஆனாலே ங்கை சரியாடுவா
 
35 வருடங்களுக்கு முன் ...ஆன
காதல் பிரச்சனையை வைத்து
வலம் வந்த கதை.....
பிடிக்காததை...பிடித்தமாக்கி
முற்றுப்புள்ளி வைத்த கதை...
“ மரபு வேலி” யை நோக்கி நகர்கிறது.

“ மரபு வேலி...”...
காலம் காலமாக..
கடைபிடித்து வரும்....
கட்டுபாட்டுகளையும்...
பழக்க வழக்கங்களயும்..
குறிக்கிறதோ....????

மரபு வேலிக்குள் வளர்ந்த ராஜன்...
மரபுகளையே அறியாத அங்கை..
வேலிக்குள் வருவாளா....?
வேலியை தாண்டுவானா...?

ஆவலுடன் அடுத்த பதிவிற்காக...:cool::cool:
 
Top