Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கவர்த்தவள் 3.1

Advertisement

Elampoorani

New member
Member
மனம் கவர்த்தவள் 3.1 பெங்களூர் டு கோயம்புத்தூர் செல்லும் ஹைவேயில் அந்த வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தது.அதில் இருந்த இரண்டு ஜோடிகளின் மனநிலையும் வெவ்வேறு விதமாக இருந்தது.விஷ்வா காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் மனதில் பாட்டியின் உடல்நிலையும் அவரை சமாளிப்பது பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தான்.தேவ் அவன் அருகில் இருந்து விஷ்வாவின் மாற்றங்களை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். பின்னிருக்கையில் கவி மற்றும் மித்ரா அமர்ந்திருந்தார்கள். கவியும் விஷ்வாவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.மித்ரா தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் நாம் எவ்வாறு இத்தகைய முடிவை ஏற்றுக் கொண்டோம் என்று யோசித்துக் கொண்டு அன்று காலை நடந்ததை நினைத்து பார்த்தாள்.அன்று காலை ஒவொருவரும் ஒவொருவரு யோசனையோடு அமர்தினிருந்தனர். விஷ்வா தான் பேச ஆரம்பித்தான். மித்ரா உங்களுக்கு என்னால உதவ முடியும். ஆன அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும். இப்ப இருக்க சூழ்நிலையில நம்ப ரெண்டு பேரும் ஒருதக்கு ஒருத்தர் உதவி பண்ணலாம். அது நீங்க என்கூட வந்து என் வீட்ல இருக்கணும் அதுவும் எனக்கு மனைவியா அப்போ என்னோட பிராப்ளம் சால்வ் உன்னோட ப்ராப்ளமும் சால்வ் என்றான் ஓர் ரகசிய புன்னகையோடு. அவன் பேசி முடித்தபோது பெண்கள் இருவரும் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேவ்கு முன்பே ஓரளவு விஷயம் தெரியும் ஆதலால் அதிர்ச்சி ஆகவில்லை. கவி என்ன விச்சு விளையாடுறியா இதெல்லாம் சாதாரண விஷயமா. நாம இருக்கும் சூழ்நிலையை கல்யாணம் பண்ண முடியுமா. அதும் திடீர்னு எப்படி இப்படி பண்ண முடியும். கவி வெயிட் இப்ப யாரும் இங்க கல்யாணம் பண்ண போறது இல்லை. மித்ராவை என் மனைவியாக நடிக்க தான் சொல்றேன். என்னால மித்ராக்கு எந்த பிரச்சனையும் வராது. அவங்க என் மனைவியா நடிச்சாலும் அவங்க அவங்களாதான் இருப்பாங்க.அவங்களுக்கு பாதுகாப்பும் கூட.கொஞ்ச நாள் அப்புறம் அவங்க பிரச்சனையும் என் பிரச்சனையும் சரியாகிடும் அப்போ அடுத்து என்ன பண்ணனும் முடிவு பண்ணலாம்.விஷ்வா நீ ஏன் இப்படி பேசற நீ எப்போ இவ்ளோ சுயநலமாய் யோசிக்க ஆரம்பிச்சே.ஒரு பொண்ணை எப்படி அவ்ளோ ஈஸியா வந்து உன் மனைவியா நடிக்கும்படி சொல்றேன். எல்லாரும் சுயநலமா யோசிக்கும்போது நானும் அப்படி யோசிக்க இல்ல தப்பு இல்லை என்றான் முகம் இறுக. இல்ல விச்சு என்று கவி மேலும் எதோ சொல்லவர கவி போதும் பேச வேண்டியவங்க முதல்ல பேசட்டும் என்றால் மித்ராவை பார்த்தபடி. தேவ் நீ ஏன் இப்படி அமைதியா இருக்க என்றாள் கவி. இப்போ இருக்கிற சூழ்நிலையில மித்ராவை பத்திரமா பாத்துக்க விஷ்வா வீடுதான் சரி. அது அவங்க ரெண்டு பேரும் பேசி முடிவு எடுக்கட்டும் நீ அமைதியாய் இரு. இதற்கு மேல் கவி ஏதும் பேசவில்லை. அமைதியாக அவர்களை வேடிக்கை பார்த்தாள். இவ்வளவு பேச்சுவார்த்தைக்கும் மித்ரா அதிர்ச்சில அமைதியாக இருந்தாள். பின்பு விஷ்வாவை பார்த்து ஏன் என்ற ஒற்றைக் கேள்வியை கேட்டாள். விஷ்வா அவள் கேள்வி புரியாது போல் என்ன ஏன் கேக்குறீங்க என்றான். மித்ரா பதில் பேசாமல் அவனை கூர்மையாக பார்த்தபடி இருந்தாள். காரணம் சொல்ல முடியாது எனக்கு ஹெல்ப் பண்ணனும் தோணுச்சுன்னா பண்ணு. முடியாதுன்னா சொல்லிடு. இன்னைக்கு நைட் வர உனக்கு டைம் இன்னைக்கு நைட் எல்லாரும் இங்க இருந்து கிளம்பறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டான். அவன் மித்ராவை ஒருமையில் அழைத்துப் இயல்பாய் பேசியது மற்ற இருவருக்கும் யோசனையைத் தந்தது. தேவ் அவனை ஆராய்ச்சியோடு பார்ப்பதை கண்ட விஷ்வா அங்கிருந்து நகர்ந்து விட்டான். பின்பு பெண்கள் இருவரையும் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு ஆண்கள் இருவரும் வெளியே கிளம்பி சென்றுவிட்டனர். அப்போது மித்ரா கவியிடம் ஏன் விஷ்வா திருமணத்தை வேண்டாம் என்கிறான் என்று கேட்டாள். தெரியல மித்ரா அவன் வீட்டில் கல்யாண பேச்சு எடுத்த போது முடியாது முடியாது ன்னு சொல்லிட்டே இருந்தான் ஒரு ஸ்டேஜ்ல எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு இனிமே என் கல்யாண பேச்சை எடுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டான். ஆனா அவங்க வீட்டில் அவன் சொன்னதை நம்பல அவன் அத்தை பெண்ணுக்கும் இவனுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். அவன் அத்தை நல்லவர்தான் ஆனால் அவன் மாமாவும் அவர் மகளும் அவ்வளவு நல்லவர்கள் கிடையாது. எப்போதும் இவனுக்கு அவர்களை பிடிக்காது. அதனால் தான் இவ்வாறு செய்கிறான். இப்படி கேட்டதால அவனை நீ தவறாக நினைக்காத மித்ரா ரொம்ப நல்லவன்.இன்னும் என்னால நம்ப முடியல அவன் எப்பவும் பொண்ணுங்க கிட்ட இருந்து நாலடி தள்ளி தான் நிப்பான்.ஒரு பொண்ண பத்தி தெரியாம திடீர்னு எப்படி இப்படி கேட்டான் என்னால நம்பவே முடியல. சரி மித்ரா நீ யோசி நீ என்ன முடிவு எடுத்தாலும் நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணனுவோம் நீ விச்சுக்கு ஹெல்ப் பண்ணினா ரொம்ப சந்தோஷப் படுவோம். உனக்கு பாதுகாப்பும் கூட என்று கூறி அங்கிருந்து நகர்ந்தாள்.
 
மனம் கவர்த்தவள் 3.1
பெங்களூர் டு கோயம்புத்தூர் செல்லும் ஹைவேயில் அந்த வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அதில் இருந்த இரண்டு ஜோடிகளின் மனநிலையும் வெவ்வேறு விதமாக இருந்தது.
விஷ்வா காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவன் மனதில் பாட்டியின் உடல்நிலையும் அவரை சமாளிப்பது பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தான்.
தேவ் அவன் அருகில் இருந்து விஷ்வாவின் மாற்றங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
பின்னிருக்கையில் கவி மற்றும் மித்ரா அமர்ந்திருந்தார்கள்.
கவியும் விஷ்வாவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
மித்ரா தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்
"நாம் எவ்வாறு இத்தகைய முடிவை ஏற்றுக் கொண்டோம்? "என்று யோசித்துக் கொண்டு அன்று காலை நடந்ததை நினைத்து பார்த்தாள்.
அன்று காலை ஒவ்வொருவரும் ஒவொருவொரு யோசனையோடு அமர்ந்திருந்தனர்.
விஷ்வாதான் பேச ஆரம்பித்தான்.
"மித்ரா உங்களுக்கு என்னால உதவ முடியும்.
ஆனா அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்.
இப்ப இருக்க சூழ்நிலையில நம்ப ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்ணலாம்.
அது நீங்க என் கூட வந்து என் வீட்ல இருக்கணும்
அதுவும் எனக்கு மனைவியா
அப்போ என்னோட பிராப்ளம் சால்வ் உன்னோட ப்ராப்ளமும் சால்வ்" என்றான் ஓர் ரகசிய புன்னகையோடு.
அவன் பேசி முடித்த போது பெண்கள் இருவரும் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தேவ்க்கு முன்பே ஓரளவு விஷயம் தெரியும்
ஆதலால் அதிர்ச்சி ஆகவில்லை.
கவி "என்ன விச்சு விளையாடுறியா?
இதெல்லாம் சாதாரண விஷயமா?
நாம இருக்கும் சூழ்நிலையில் கல்யாணம் பண்ண முடியுமா?
அதுவும் திடீர்னு எப்படி இப்படி பண்ண முடியும்?
"கவி வெயிட்
இப்ப யாரும் இங்க கல்யாணம் பண்ணப் போறது இல்லை.
மித்ராவை என் மனைவியாக நடிக்கத்தான் சொல்றேன்.
என்னால மித்ராக்கு எந்த பிரச்சனையும் வராது.
அவங்க என் மனைவியா நடிச்சாலும் அவங்க அவங்களாத்தான் இருப்பாங்க.
அவங்களுக்கு பாதுகாப்பும் கூட.
கொஞ்ச நாள் அப்புறம் அவங்க பிரச்சனையும் என் பிரச்சனையும் சரியாகிடும்
அப்போ அடுத்து என்ன பண்ணனும்ன்னு முடிவு பண்ணலாம்.
விஷ்வா நீ ஏன் இப்படி பேசற?
நீ எப்போ இவ்ளோ சுயநலமாய் யோசிக்க ஆரம்பிச்சே?
ஒரு பொண்ணை எப்படி அவ்ளோ ஈஸியா வந்து உன் மனைவியா நடிக்கும்படி சொல்றே?
எல்லாரும் சுயநலமா யோசிக்கும்போது நானும் அப்படி யோசிக்க இல்ல தப்பு இல்லை"என்றான் முகம் இறுக.
"இல்ல விச்சு"என்று கவி மேலும் எதோ சொல்ல வர கவி போதும் பேச வேண்டியவங்க முதல்ல பேசட்டும் என்றான் மித்ராவை பார்த்தபடி.
"தேவ் நீ ஏன் இப்படி அமைதியா இருக்க" என்றாள் கவி.
இப்போ இருக்கிற சூழ்நிலையில மித்ராவை பத்திரமா பாத்துக்க விஷ்வா வீடுதான் சரி.
அது அவங்க ரெண்டு பேரும் பேசி முடிவு எடுக்கட்டும்
நீ அமைதியாய் இரு"
இதற்கு மேல் கவி ஏதும் பேசவில்லை.
அமைதியாக அவர்களை வேடிக்கை பார்த்தாள்.
இவ்வளவு பேச்சுவார்த்தைக்கும் மித்ரா அதிர்ச்சில அமைதியாக இருந்தாள்.
பின்பு விஷ்வாவை பார்த்து ஏன் என்ற ஒற்றைக் கேள்வியை கேட்டாள்.
விஷ்வா அவள் கேள்வி புரியாது போல் என்ன ஏன் கேக்குறீங்க என்றான்.
மித்ரா பதில் பேசாமல் அவனை கூர்மையாக பார்த்தபடி இருந்தாள்.
காரணம் சொல்ல முடியாது
எனக்கு ஹெல்ப் பண்ணனும் தோணுச்சுன்னா பண்ணு.
முடியாதுன்னா சொல்லிடு.
இன்னைக்கு நைட் வர உனக்கு டைம்
இன்னைக்கு நைட் எல்லாரும் இங்க இருந்து கிளம்பறோம்" என்று கூறி விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.
அவன் மித்ராவை ஒருமையில் அழைத்துப் இயல்பாய் பேசியது மற்ற இருவருக்கும் யோசனையைத் தந்தது.
தேவ் அவனை ஆராய்ச்சியோடு பார்ப்பதை கண்ட விஷ்வா அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
பின்பு பெண்கள் இருவரையும் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு ஆண்கள் இருவரும் வெளியே கிளம்பி சென்று விட்டனர்.
அப்போது மித்ரா கவியிடம் ஏன் விஷ்வா திருமணத்தை வேண்டாம் என்கிறான்" என்று கேட்டாள்.
"தெரியல மித்ரா
அவன் வீட்டில் கல்யாண பேச்சு எடுத்த போது முடியாது முடியாது ன்னு சொல்லிட்டே இருந்தான்
ஒரு ஸ்டேஜ்ல எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு
இனிமே என் கல்யாண பேச்சை எடுக்காதீர்கள்' என்று சொல்லி விட்டான்.
ஆனா அவங்க வீட்டில் அவன் சொன்னதை நம்பல
அவன் அத்தை பெண்ணுக்கு இவனுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள்.
அவன் அத்தை நல்லவர்தான்
ஆனால் அவன் மாமாவும் அவர் மகளும் அவ்வளவு நல்லவர்கள் கிடையாது.
எப்போதும் இவனுக்கு அவர்களை பிடிக்காது.
அதனால்தான் இவ்வாறு செய்கிறான்.
இப்படி கேட்டதால அவனை நீ தவறாக நினைக்காத மித்ரா
அவன் ரொம்ப நல்லவன்.
இன்னும் என்னால நம்ப முடியல
அவன் எப்பவும் பொண்ணுங்கக்கிட்ட இருந்து நாலடி தள்ளிதான் நிப்பான்.
ஒரு பொண்ண பத்தி தெரியாம திடீர்னு எப்படி இப்படி கேட்டான்?
என்னால நம்பவே முடியல.
சரி மித்ரா
நீ யோசி
நீ என்ன முடிவு எடுத்தாலும் நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணனுவோம்
நீ விச்சுவுக்கு ஹெல்ப் பண்ணினா ரொம்ப சந்தோஷப்படுவோம்.
உனக்கு பாதுகாப்பும் கூட" என்று கூறி அங்கிருந்து நகர்ந்தாள்.
 
Last edited:
Top