Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் வெயில் மாலையிலே!- 7

Advertisement

praveenraj

Well-known member
Member
"இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில்...
கன்று தவிப்பது போல்,
மனம் கலங்கி புலம்புகிறேன்...
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில்...
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில்...
கர்வம் அழிந்ததடி...
என் கர்வம் அழிந்ததடி..."

என்ற பாடல் வரிகள் (Indru vennilavil antha eera ninaivil song lyrics, Alaipayuthey, madhavan,shalini - YouTube) காதலின் தவிப்பையும் அது கொடுக்கும் வலியையும் ஒன்று சேர்த்து உயிரின் ஆழம் வரை பாய இங்கே ஜீவியின் கண்கள் அவளையும் அறியாமல் கண்ணீர்த் துளிகளைச் சிந்தியிருந்தது. இது தான் இதயனுடைய பெர்சனல் எண்ணின் காலர் டியூன். கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக இதயனைத் தொடர்புகொள்ளும் நபர்கள் எல்லோரும் ஒருகணம் அந்தக் குரல் கொடுக்கும் மயக்கத்தையும் வலியையும் நன்கு உள்வாங்கி கிறங்கித்தான் போகவேண்டும். அவனுக்கு அழைக்கும் பெரும்பாலானோர் தமிழ் அறியாவிட்டாலும் இந்தப் பாடலையும் இது கடத்தும் வலியையும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். காரணம் அலைபாயுதே ஹிந்தியிலும் எடுக்கப்பட்டதே! இந்தப் பாடலை யாருக்காக வைத்திருக்கிறானோ அவளே இப்போது அழைக்க திரையில் அவள் எண்ணைப் பார்த்தும் பாடல் வரிகள் முடியும் வரை காத்திருந்தவன் ஒரு வித இறுக்கத்துடனே அழைப்பை ஏற்றான்.

இரண்டுபக்கமும் இப்போது மௌனமே ஆட்சி செய்தது. கடந்த நான்கைந்து நாட்களாக தான் அழைத்தும் அவள் அழைப்பை ஏற்காததால் அவள் மீது ஊடலில்(கண்டிப்பாக ஊடல் தான்! காரணம் ஜீவியும் தானே இதயனை விரும்புகிறாள். ஆனால் அதை ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் அவள் மனம் தடுக்கிறது) இருந்தவன் அவளிடம் பேச முரண்டு பிடிக்க பெண்ணவளோ தன் மீது தாயும் மகனும் இத்தனை அன்பு வைக்க தான் அப்படி இவர்களுக்கு என்ன தான் செய்தேன் என்று வேதனையில் உழன்றது.

"போன் பண்ணாப் பேசணும்..." என்று வந்த வார்த்தைகளில் துளியும் கடுமை இல்லை. ஜீவியின் செயல்கள் இதயனுக்கு எத்தனை வலிகள் கொடுத்தாலும் ஒருபோதும் வார்த்தைகளில் கூட அவளிடம் இவன் கடுமை காட்டியதில்லை. காட்டவும் முடிவதில்லை.

"சரி நான் வெக்குறேன். எனக்கு வேலை இருக்கு..." என்று வாய் மொழிந்தாலும் இதயனின் இதயமோ அவள் குரலுக்காக ஏங்கியது.

"நான் ஊருக்கு வரேன்..." என்று அவன் செவிகளில் விழுந்த வார்த்தை நிஜமா பிரமையா என்ற தவிப்பில் இதயன் இருக்க,

"இது தான் நீ அம்மாவைப் பார்த்துக்கற லட்சணமா? அவங்களுக்கு உடம்பு முடியலையாம். போலீஸ்னா ஊர்ல இருக்கவங்க மட்டும் தான் கண்ணுக்குத் தெரிவாங்களா? வீட்ல இருக்கவங்களோட நிலை என்ன அவங்களும் மனுஷிங்க தானே அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுக்க மாட்டியா?" என்று ஜீவியின் குரலில் ஊதப்படும் பலூன் போல் கோவமும் கடுமையும் கூடிக்கொண்டே போனது.

"லைன்ல இருக்கியா இதயா?" என்றவள் ஒருகணம் தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்க்க அது இன்னும் தொடர்பில் தான் உள்ளது என்றதும்,

"எதாவது பேசு இதயா?" என்ற குரல் இப்போது இரைஞ்சியது.

"ஒரு ரெண்டு நிமிஷம் பேசாட்டியே உனக்கு இப்படி இருக்கே? அப்போ எனக்கு எப்படி இருக்கும் ஜீவி? அண்ட் என்ன கேட்ட? வீட்ல இருக்கவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பன்மையில கேட்ட இல்ல? ஐ அம் சாரி. எனக்கு வீட்ல ஒரே ஒரு ஆள் தான் இருக்காங்க. இப்போ வரை என்னை நேசிக்கும் எனக்காகத் துடிக்கும் ஒரே ஜீவன் என் அம்மா மட்டும் தான். இன்னொருத்தி இருக்கா. அவளுக்கு என் மனசு புரியவே புரியாது. அண்ட் அவ அதைப் புரிஞ்சிக்க முடியாம எல்லாம் இல்ல. நான் ஏன் அவனைப் புரிஞ்சிக்கணும்னு ஒரு எண்ணம். ஏன்னா அவளுக்குத் தான் நான் யாரோ ஆச்சே? ஆனா பாரு அவளுக்கு நாலு நாளா உடம்புக்கு முடியல. என்னை விட்டு ஆயிரத்தி நானூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கா. ஆனா இந்த நாலு நாளா என் மனசு டெல்லில தான் இருந்தது. நாலு நாள் மட்டுமில்ல. எப்போ அவளை நான் முதன் முறை பார்த்தேனோ அப்போ இருந்து..." என்றதும் ஜீவி அந்த நாளை நினைக்க ஏனோ அவள் உடல் மரத்து இருந்தது. ஆனால் ஜீவி நினைக்கும் அந்த நிகழ்வும் இதயன் நினைக்கும் அந்த நிகழ்வும் வேறு வேறு என்று ஜீவி அறிந்திருக்கவில்லை. ஒருவேளை அதை அறிந்திருந்தாலாவது ஜீவியின் மனம் இதயனை ஏற்க முயற்சித்து இருக்குமோ என்னவோ?

அதற்குள் ரத்தோரின் வழக்கு சம்பந்தமாக இதயன் கேட்டிருந்த தகவல்களை மிஹிரும் ஜான்சி ராணியும் கொண்டுவரவும்,

"நான் அப்பறோம் கூப்பிடுறேன் ஜீவி. உடம்பைப் பார்த்துக்கோ. ஏன்னா உனக்காக இங்க ஒரு இதயம் துடிக்கும். இதெல்லாம் முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டதாலோ என்னவோ என் அப்பா எனக்கு இதயன்னு பேர் வெச்சிருக்கார் போல? அண்ட் நீ எப்போ வேணுனாலும் இங்க வரலாம். உனக்கு அதுக்கான எல்லா உரிமையும் இருக்கு. பை..." என்றவன் அழைப்பைத் துண்டித்தான். ஏனோ அவன் இறுதியில் கூறிய வார்த்தை ஜீவிக்கு ஆனந்தம் மற்றும் அவஸ்தை இரண்டையும் ஒரு சேர கொடுத்தது.
அழைப்பைத் துண்டித்தாலும் இதயன் சிறிது நேரம் ஜீவி பேசியதையே நினைத்துக்கொண்டிருந்தான். 'என் மேல உனக்கு நம்பிக்கை வரலையா ஜீவிதா?' என்றவன் அந்நாளின் நிகழ்வை யோசித்து,'இல்ல டி. இப்போ வரை நீ நம்பிக்கை வெச்சிருக்க ஒரே ஜீவன் நான் தான். இந்த முறை உன்னை விடுறதில்லை'

"சார்... சார்" என்ற ஜான்சி ராணியின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன் எஸ் என்றதும் அந்தக் கோப்புகளை அவன் முன் சமர்ப்பித்தனர். அது ரத்தோர் கடைசி ஒரு மாதம் யாரிடம் எல்லாம் பேசியுள்ளார் என்ற லிஸ்ட்.

"எனிதிங் சஸ்பிசியஸ்?"

"எஸ் சார். அவர் கடைசி ஒரு மாசத்துல மட்டும் குறிப்பிட்ட நாலு நம்பருக்கு அடிக்கடி பேசியிருக்கார். ஒன்னு அவரோட சன். இன்னொன்னு அவர் பேங்காங் போய் அட்டென்ட் பண்ண காண்பேரென்ஸ் ஆர்கனைஸர். இன்னொன்னு அவரோட ஜூனியர் பொண்ணு சாரா. அண்ட் நாலாவது நம்பர் தமிழ்நாட்டுல இருக்குற ஒரு ஆளோடது. அவரைப் பத்தி இன்னும் விசாரிக்கல. இப்போ தான் அட்ரஸ் கிடைச்சிருக்கு. இந்த நம்பருக்கு அவர் பேசினத்தோட கால் ரெக்கார்டிங்ஸ் கிடைச்சா நமக்கு எல்லாம் ஓரளவுக்குப் புரியும்" என்ற ஜான்சிக்கு,

"அதெல்லாம் கோர்ட் ஆர்டர் இல்லாம கிடைக்காது. கால் டேப்பிங் அபென்சுன்னு உனக்குத் தெரியாதா ராணி? அண்ட் நம்மால இனிமேல் பேசப்போற கால் ரெக்கார்டிங்ஸ் தான் கேக்க முடியும். பழசெல்லாம் சான்ஸ் இல்ல... வேணுனா சம்மந்தப்பட்டவங்களை விசாரிக்கலாம்" என்று மிஹிர் சொல்ல,

"யூ ஆர் ரைட் மிஹிர். தமிழ்நாடு? தமிழ்நாட்டுல எங்க இருந்து?"

"எல்லாமே திருத்துறாய்..." என்று மிஹிர் தடுமாற,

"திருத்துறைப்பூண்டி..."

"எஸ் சார். அதே தான். திருவாரூர் மாவட்டம் சர்ரோண்டிங்ஸ்..."

"லாஸ்ட் ஒரு மாசத்துல அதிகமா பேசியிருக்காரு..." என்றதும் இதயன் யோசனைக்குச் சென்றான்.

அன்று அந்த கேப் ட்ரைவர் நாசரை விசாரித்து விட்டு மிஹிரும் ஜான்சியும் அந்த இடத்தைச் சென்று பார்வையிட்டனர். அது ஆறே காலனியின் குடியிருப்புகள் இருக்கும் பகுதி. அங்கிருந்து செல் போன் சிக்னல் துண்டித்த பகுதி வரை சென்றவர்களுக்கு முன்பு நான்கு பாதைகள் பிரிந்தது. நான்கும் ஆறே காடுகளுக்கும் அந்த உயிரியல் பூங்காவிற்கு செல்லும் வழிகள். சிறிது தூரம் சென்ற மிஹிரும் ஜான்சியும் இதயனின் உத்தரவையும் மீறி அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் ரத்தோரின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தனர். அவர்கள் யாருக்கும் அவரைத் தெரியாததால் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். அடுத்த இரண்டு நாட்களில் இந்த கேசில் வேறு எந்தத் துப்பும் கிடைக்காமல் போக அதற்குள் ஜீவியின் பிடிவாததால் இதயன் சற்று மனதளவில் பாதித்திருக்க இப்போது பழையபடி விசாரணை மோடிற்கு திரும்பியிருந்தான். அதன் பின் ரத்தோரின் வீடு அவருடைய அலுவலகம் அவருடைய ஜூனியர் ஆகியோரை விசாரிக்க எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது. அப்படியிருக்கையில் அவருடைய இந்த அலைபேசி விவரம் வழக்குக்கு ஒரு உந்துகோலாக இருக்கிறது.

"ஓகே, தமிழ்நாடு போலீசுக்கு அவரைப் பத்தின டீடெய்ல்ஸ் அனுப்பி விசாரிக்கச் சொல்லுங்க. கூடவே ரத்தோர் போட்டோவும் அனுப்புங்க. ரத்தோர் சன் ரோஷனை இங்க வரச்சொல்லுங்க. இதைப்பத்தி அவருக்கு எதாவது தெரியுமான்னு விசாரிக்கலாம்..."

"சார் ஒரு டௌட்" என்ற ஜான்சிக்கு,

"ரத்தோர் உயிரோட இருக்க வாய்ப்பிருக்கானு கேக்க போறிங்களா?"
அவள் தலையசைக்க,

"அவர் உயிரோட இருந்தா இந்த கேஸ் ரொம்ப சுலபத்துல முடிஞ்சிடும். ஆனா எனக்கு என்னவோ அதுக்கான வாய்ப்பிருக்குறதா தெரியில"

"சார்" என்று மிஹிர் ஜான்சி இருவரும் அதிர,

"எக்ஸ்டார்ச்சனா(மிரட்டி பணம் பறிக்கும் முறை) இருந்தா இந்நேரம் டிமாண்ட் வந்திருக்கும். அவர் மிஸ் ஆகி ஒன் வீக் ஆகப்போகுது. நாமளும் அந்தக் காட்டுக்குள்ள முடிஞ்ச அளவுக்கு தேடிட்டோம். அடர் காட்டுப் பகுதிக்குள்ள போக அந்த ஊர் பழங்குடியினரே தயங்குறாங்க. இருந்தும் ரெண்டு பேரை போகச் சொல்லி இருக்கோம். அவங்ககிட்ட இருந்து நமக்கு எந்தத் தகவலும் இல்ல..." என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் உள்ளே வந்த அவர்களது ஜூனியர்,

"சார், காட்டுக்குள்ள ரத்தோர் சாரை தேடிப்போன ரெண்டு பேர்ல ஒருத்தன் இறந்துட்டானாம். லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இப்போ தான் மெசேஜ் வந்தது..." என்றதும் மிஹிரும் ஜான்சியும் அதிர்ச்சியடைய,

"அப்போ இன்னொருத்தர்?"

"அவன் தான் இவனோட பாடியை பார்த்துட்டு கம்பளைண்ட் கொடுத்திருக்கானாம்... அந்த பாடியை வாங்காம கிராம மக்கள் போராட்டம் பண்ணறாங்களாம்... எஸ்.ஐ உங்களை வரச் சொன்னார் என்பதற்குள் இதயனை அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார் அந்த எஸ்.ஐ.

"போலாம் வாங்க" என்று அவர்களுடன் அந்த இடத்திற்குச் சென்றான்.

*************************
யாக்நியாவும் ஜெய்யும் தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மும்பைக்கு பிளைட் ஏறியிருந்தனர். ஏனோ இருவரின் முகமும் களையிழந்து காணப்பட்டது. ஏதும் பேசாமல் அமர்ந்திருக்க யாக் ஜெய்யின் தோளில் சாய்ந்தாள். நடந்த சில விஷயங்களை அவளாலும் புரிந்துகொள்ள முடிந்தது. இருவர் பேசும் போது அவர்களுடைய உடல் மொழியை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியுமே. ஜெய்யும் சந்திரசேகரும் இறுதியாக நடத்திய உரையாடல் நிச்சயம் தங்கள் காதலுக்கு அவன் தந்தை பச்சை கொடி காட்ட மாட்டார் என்பது போல் இருந்தது. அதைக் காட்டிலும் ஜெய் அவரிடம் மிக ஆக்ரோஷமாகவே பேசினான். இவ்வளவு கடுமையிலும் ஏனோ தன் மார்பில் உரசிய அந்தத் தங்கச்சங்கிலி யாக்நியாவுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது. ஆனால் அதை ஜெய்யின் பாட்டி அவள் கழுத்தில் போடும் போது ஜெய்யின் அன்னை அண்ணி மற்றும் அவன் அத்தை ஆகியோரின் முகம் போன போக்கை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஏன் அதில் கண்மணிக்கும் உடன்பாடில்லை என்று அவள் அறிந்துகொண்டாள்.

நடந்த நிகழ்வுகளை ஜெய்யும் அசைபோட்டான். நேற்று தன் தந்தைக்கு முன் யாக்நியாவோடு ஜோடியாக நிற்க ஏனோ அவன் தந்தையின் அவஸ்தையை அவனாலும் புரிந்துகொள்ள முடிந்தது. கார்த்திகேய ஆசிரியருக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அவர் தவித்தார். அதே நேரம் யாக்நியாவையும் அவரால் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதும் பேசாமல் தங்களின் தோட்டத்து வீட்டிற்கு சேகர் சென்றுவிட விமலை அழைத்துக்கொண்டு கார்த்திகேயனின் வீட்டிற்குச் சென்ற ஜெய் நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்தை நிறுத்துமாறு பேசினான். அவர்கள் அங்கு சென்றதும் அவர்களுக்கு கிடைத்த உபசரிப்பு ஜெய்யை மேலும் வருத்தியது. பிடிவாதம் அவர்கள் குடும்பத்தின் பிறவி குணம் போலும்! அதனாலே தந்தையும் மகனும் வீம்புக்கென்று செய்த காரியங்கள் ஒரு பெண்ணின் மனதை வதைத்து விடும் என்று அறியாமல் போனார்கள். ஜெய் என்றோ சிறுவயதில் மணிமேகலை கண்டிருக்கிறான். ஆனால் அவளுக்கு அவனுடைய சமீபத்திய படம் கொடுக்கப்பட அவள் இந்தத் திருமணத்திற்கு விரும்பியே சம்மதம் தெரிவித்தாள்.

ஏதோ ஒரு பதவியில் இருந்திருந்தால் கூட ஜெய் இவ்வளவு அவமானப் பட்டிருக்க மாட்டான். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துகொண்டு அவன் செய்த இந்தச் செயல் அவனுக்கே உவந்தது.

"இதெல்லாம் நியாயமா தம்பி? உங்க வீட்டுப் பொண்ணுக்கு இப்படிப் பண்ணா நீங்க சும்மா விடுவிங்களா?" என்று அவர் கேட்ட கேள்வியில் இருந்த நியாயம் ஜெய்யை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது. நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்தத்துக்கு என்று அவர்கள் வீட்டிலும் உறவினர்கள் கூடியிருந்தனர்.

இதனாலே அவன் இம்முறை ஊருக்கு வந்த நிகழ்ச்சியை நிறைவாக நடத்திக்கொடுக்காதது போல் ஒரு பிரக்ஞை. அவன் சிறுவயதில் படித்த பள்ளியின் நிறுவனருடைய பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கவே அவன் இங்கு வந்தான். அவனை அப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அந்த ஊரிலே பிரபலமான ஆசிரியர் கார்த்திகேயன். அநேகமாக இன்று அவ்வூரில் பயின்று நல்ல வேலையில் இருக்கும் பலரும் அவரிடம் ஏதேனும் ஒரு வகுப்பாவது டியூசன் சென்றிருப்பார்கள். ஜெய்யும் சென்று உள்ளான். அவருக்கும் மேடையில் இருக்கை வழங்கப்பட்டிருக்க ஜெய் தன் வாழ்நாளில் அனுபவித்திடாத சங்கடத்தை அந்த இரண்டு மணிநேர விழாவில் அனுபவித்தான். அன்று மாலை வீடு திரும்பியவன் அப்போதே ஊருக்குக் கிளம்பவும் தயாராகிவிட அவர்கள் கிளம்பும் போது அங்கே வந்த சேகரிடம்,

"அப்பா, இதுவே முதலும் கடைசியா இருக்கட்டும். இனிமேல் என் கல்யாணத்தைப் பத்தி என்னைக் கேக்கமா ஏதாவது செஞ்சா அவ்வளவு தான். அது போக நான் ஒன்னும் எங்க கல்யாணத்துக்கு உங்ககிட்ட சம்மதம் வாங்க இங்க வரல. விஷயத்தைச் சொல்லி அவளை அறிமுகப்படுத்த தான் வந்தேன். அடுத்து அவ வீட்ல பேசப்போறோம். யார் சம்மதிச்சாலும் இல்லைனாலும் எங்க கல்யாணம் நடக்கும்..." என்றதும் கண்மணி அவனை அதட்ட,

"இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். யாக்நியாவோட அப்பா ஒரு சினிமா டைரக்டர். அவங்க குடும்பமும் ஜாயிண்ட் பேமிலி தான். அண்ட் அவளோட அப்பாவும் அம்மாவும் பத்து வருஷமா பிரிஞ்சு இருக்காங்க. அவங்க அம்மா அவங்க அப்பா குடும்பத்தோட இருக்காங்க. அவர் மட்டும் தனியா தங்கியிருக்கார். ஒரு தம்பி இருக்கான்..." என்று ஜெய் பேச ஏனோ அவன் வீட்டில் உள்ளவர்களோ ஆளுக்கொரு யோசனையில் மூழ்கினர்.

"ஜெய் நீ சொல்ல..." என்று கண்மணி தொடங்கும் முன்னே,
"இதென்ன குடும்பம்? அவங்க ஏன் தனித்தனியா வாழறாங்க? அதும் போக அவங்க சினிமா குடும்பமா? இதை நீ ஏன் சொல்லவே இல்ல? என்ன நெனச்சிட்டு இருக்க நீ? ஊர்ல நம்ம குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்கு. நான் எல்லாத்தையும் விசாரிச்சிட்டு தான் முடிவைச் சொல்லுவேன்" என்று சேகரும் வீம்புக்கு நிற்க,

"முதல் ஒன்னு புரிஞ்சிக்கோங்க. அவளோட அப்பா அம்மா பிரிஞ்சிருக்காங்கன்னா அது அவங்களோட பெர்சனல் விஷயம். உண்மையைச் சொல்லனும்னா இதுல கருத்து சொல்ல அவங்க பொண்ணான இவளுக்கே உரிமை இல்ல..."

"என்ன விட்டா பேசிட்டே போற? நீ ஊருக்கு வேணுனா கலெக்டரா இருக்கலாம். இங்க நீ என்னோட பையன். என் பையனோட வாழ்க்கை எப்படி இருக்கணும்னு முடிவெடுக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இல்ல இதையும் மீறி நீயே தான் உன் முடிவை எடுப்பேனா எடுத்துக்கோ. நான் இதெதிலும் தலையிட மாட்டேன்..." என்று சேகரும் கோபத்தோடு பேச இம்முறையும் அவர்களுடைய பேச்சு புரியவில்லை என்றாலும் அது தன் குடும்பத்தைப் பற்றியது என்று யாக்நியாவால் கிரகித்து கொள்ள முடிந்தது.

"அக்கா கடைசியாச் சொல்றேன். நான் இவளைத் தான் கல்யாணம் செய்ய போறேன். அதுல நான் உறுதியா இருக்குறேன். கல்யாணம் ஊர் கூட்டி நடக்குறதும் இல்ல ரிஜிஸ்டர் ஆபிஸ்ல நடக்குறதும் உங்க கையில தான் இருக்கு. நான் கிளம்புறேன்..." என்று ஜெய் முடிக்கும் முன்னே சேகர் கோவமாக வெளியேறிவிட்டார். கண்மணி தான் அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க யாக்நியாவை அழைத்த ஜெய்யின் பாட்டி தன்னுடைய கழுத்தில் இருந்த ஒரு செயினை எடுத்து அவளுக்கு அணிவித்தார். அவரது செய்கை அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்க காரணம் அவர் அளித்த அந்த செயின். அது அவர்களுடைய பரம்பரை செயின்களில் ஒன்று. உண்மையில் சொல்லப்போனால் அவர் அந்த செயினை தன்னுடைய நான்கு மருமகள்களில் யாருக்குத் தரப்போகிறார் என்று எல்லோரும் யோசனையில் இருக்க அதை எடுத்து யாக்நியா கழுத்தில் மாட்டியிருந்தார். ஏனோ அதுவரை எரிமலையென இருந்த ஜெய்யின் உள்ளம் குளிர்ந்தது. பின்னே நம்மூரில் திருமணம் பேசியதும் அதை உறுதிப்படுத்த மணமகன் வீட்டில் இருந்து மணமகளுக்கு நகை அணிவிப்பார்களே? ஜெய்க்கு மட்டுமில்லை அங்கிருந்த எல்லோருக்கும் அப்படித்தான் தோன்றியது. அதன் பின் மாலையே தூத்துக்குடிக்குப் புறப்பட்டவர்கள் மும்பையை நோக்கிப் பயணிக்கிறார்கள்.
 
Nirmala vandhachu ???
 
Top