Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் வெயில் மாலையிலே!-3

Advertisement

praveenraj

Well-known member
Member


மும்பையின் பிரபலமான பாந்த்ரா மேற்கு பகுதியில் இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே காவலர்கள் கூடியிருந்தனர். அரேபிய கடலைப் பார்த்த வாக்கில் ஓங்கியிருந்த அந்த பதிமூன்று மாடி குடியிருப்பின் வாயிலில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். கேலக்சி அபார்ட்மெண்ட்ஸ் என்று பொன்னிற எழுத்துக்களில் மிளிர்ந்த மதில் சுவற்றை ஒட்டியவாறு கையில் மைக்குடன் இருந்தாள் நடாஷா.

"பாலிவுட்டில் வளர்ந்துவரும் இளம் நடிகரும் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கான நேஷனல் அவார்ட் வென்றவருமான சுகி கௌடா மர்மமான முறையில் தன்னுடைய குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான 'லயன் ஹெர்ட்ட்'(சிங்கம் போல் வலிமை உடையவன்) என்னும் திரைப்படம் அவருடைய நடிப்பின் மற்றொரு பரிணாமாகவே பார்க்கப்பட்டது..." என்னும் வேளையில் தடவியல் நிபுணர்கள் வந்துவிட அந்த இடமே பரபரப்பில் மூழ்கியது.

இந்த இடைப்பட்ட நாட்களில் மகாராஷ்டிராவின் ஜெய் ஜனதா கூட்டணி ஆட்சி கவிழ்ந்து எதிர் கட்சிகள் யாரும் ஆட்சியமைக்க உரிமை கோராத காரணத்தால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது.

அசிஸ்டென்ட் கமிஷ்னரின் வாகனம் அங்கே நுழைய அதிலிருந்து வெளியேறினான் தன்வீர் சிங். வழக்கமான சீக்கியர்களின் அடையாளமான டஸ்டர்(முண்டாசு) மற்றும் தாடியுடன் ஐ.பி.எஸ்கே உரித்தான உயரமும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பிலும் இருந்தான் தன்வீர் சிங்.

தன்னுடைய டீமுடன் சம்பவம் நடந்த பிளாட்டிற்குள் நுழைந்தவன் மிக நுணுக்கமாக அந்த இடத்தை ஆராய்ந்தான். இன்னும் தூக்கிட்ட வாறே இருந்த உடலைக் கண்டு அதை தரையில் கிடத்திவிட்டு தடவியல் நிபுணர்களின் வேலை கெடாதவாறு அந்த அறையை நன்கு நோட்டமிட்டான். அங்கிருந்த மேஜையில் உயர்ரக மது பாட்டில்களும் கோப்பைகளும் இருந்தது. அதில் ஒரு பாட்டில் திறக்கப்பட்ட நிலையில் முக்கால் பாகம் தீர்ந்து காணப்பட்டது. அப்போது அந்தக் கோப்பைகளில் இருந்தும் கைரேகைகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அறையை நோட்டமிட்டவனுக்கு அங்கே இருந்த அலமாரி அலங்கார பொருட்கள் முதலிய எதுவும் கலைந்ததற்கான எந்த அறிகுறியும் இன்றி இருந்தது. இன்னும் சொல்லப்போனால் மெத்தையின் மீதிருந்த படுக்கை விரிப்புகள் கூட சுருக்கம் இல்லாமல் காணப்பட்டது. அந்த அறையின் நைட் லேம்பும் ஏர் கண்டிஷனரும் மட்டும் உபயோகத்தில் இருந்தது.

"யாரு ரிப்போர்ட் பண்ணது ஷ்ரேயா?" என்று அங்கிருந்த காவல் ஆய்வாளரைக் கேட்டான் தன்வீர்.

"சார் நான் தான் முதல பார்த்தேன்" என்றவனை யாரென்று தெரியாமல் தன்வீர் பார்க்க,

"சார் நான் கணேஷ். சுகி சாரோட மேனேஜர். நாளை மறுநாள் ஷூட் இருக்கு. நானும் ரெண்டு நாளா சாருக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன். அவரை லைன்ல பிடிக்கவே முடியல. ப்ரொடக்சன் ஹவுஸ்ல இருந்து போன் மேல போன். அதான் நேர்ல வந்து பார்க்கலாம்னு"

"நீங்க வரும் போதே பிளாட் திறந்து இருந்ததா?"

"இல்ல சார். பூட்டி தான் இருந்தது. என்கிட்ட ஸ்பேர் கீ இருக்கும். அதான் நான் திறந்து உள்ளே வந்தேன்..." என்றவனை கண்ணிமைக்காமல் பார்த்த தன்வீருக்கு,

"சார் நீங்க வேணுனா கீழ அபார்ட்மெண்ட் வாட்ச் மேன் கிட்ட இருக்கும் ரிஜிஸ்டர் எடுத்துப் பாருங்க. நான் உண்மையிலே இன்னைக்கு காலையில தான் வந்தேன். இல்லைனா அபார்ட்மெண்ட் எண்ட்ரன்ஸ்ல இருக்குற சிசிடிவி பூட்டேஜ் பாருங்க..." என்றவன் நிறுத்தி பின்பு,

"வேணுனா இந்த ப்ளோர் லிப்ட் எண்ட்ரன்ஸ்ல இருக்குற கேமெராவை கூடப் பாருங்க. நான் இன்னொசென்ட் சார். எனக்கே இப்போ தான் குழந்தை பிறந்திருக்கு" என்று கணேஷ் பாட்டிற்கு அவனாகவே அனைத்திற்கும் பதிலளிக்க,

"சோ மிஸ்டர் கணேஷ், இந்த அபார்ட்மெண்ட்ல எந்த எந்த இடத்துல எல்லாம் கேமெரா இருக்குனு உங்களுக்கு அத்துப்படினு சொல்லுங்க... இது சம்மந்தமா இந்த அபார்ட்மெண்ட் செகரெட்டரியை மீட் பண்ணனும்னு நெனச்சேன். அதுக்கு இப்போ அவசியமே இல்லை போல? வாங்க கேமெராவை பார்க்கலாம்" என்று தன்வீர் முன்னே நடக்க கணேஷிற்கு தான் உடல் முழுவதும் வேர்த்து விட்டிருந்தது.

அங்கிருந்து சென்றவர்கள் சில இடங்களை எல்லாம் ஆராய்ந்து மீண்டும் அந்த பிளாட்டிற்கு வர தடவியல் நிபுணர்கள் அனைத்து தடயங்களையும் சேகரித்து விட்டதாகச் சொன்னார்கள். தன்வீர் அவர்களுடன் உரையாட கணேஷிற்கு தான் பயத்தில் உடல் நடுங்கியது.

"ஷ்ரேயா, நீங்க மிஸ்டர் கணேஷ் கிட்ட இருந்து வாக்குமூலம் வாங்கிட்டு அவரை அனுப்பிடுங்க. பாவம் அவரே பயத்துல நடுங்கிட்டு இருக்கார்" என்றவன் அவரை நோக்கி ஒரு புன்னகை உதிர்த்து,

"ஃபாரின்சிக் ரிப்போர்ட் எப்போ கிடைக்கும்?"

"டூ டேஸ்ல கொடுக்குறோம் சார்" என்று அவர்கள் விடைபெற ஷ்ரேயாவிடம் திரும்பியவன்,

"அவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா? பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பனும். அவங்க வீட்ல இருந்து எதுக்கும் ஒருமுறை பாடியை பார்க்கணும்னு ஆசைப்படலாமில்ல? சீக்கிரம் அந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் பாருங்க" என்றவன் கணேஷிடம் திரும்பி,

"இப்போ என்ன படம் பண்ணிட்டு இருந்தார் இவர்?"

"சார் இன்னும் டைட்டில் வெக்கல சார். குப்தா ப்ரொடக்சன்ஸ் தான் எடுக்குறாங்க. டைரக்டர் கூட ஷ்யாம் சுந்தர் சார் தான்"

"ஷ்யாம் சுந்தர்?"

"மதராஸி டைரக்டர் சார். இது ஹிந்தியில் அவருக்கு மூணாவது படம்"

"ஷூட்டிங் எங்க நடக்குது?"

"குல்லு, ஹிமாசல் பிரதேஷல"

"அப்பறோம் எப்படி இங்க வந்தார் இவர்?"

"ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிஞ்சி ரெண்டு வாரம் ஆகுது. இப்போ ஹீரோயின் சோலோ சாங் ஷூட்டிங் நடக்குது. நாளை மறுநாள்ல இருந்து இவரோட போர்சன்ஸ் எடுக்க இருந்தாங்க. அல்மோஸ்ட் எண்பது சதவீதம் முடிஞ்சது சார். பாவம் அந்த பிரடியூசர். இனி எப்படி இந்தப் படத்தை முடிப்பாங்களோ? ஏற்கனவே படத்தோட பட்ஜெட் இருநூறு சியை தொட்டிடுச்சு. இப்ப மறுபடியும் முதல இருந்து எடுக்க முடியாது. அதேநேரம் படம் எப்படி ரிலீஸ் ஆகுமோ? எல்லாம் அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்"

இங்கே இவ்வளவு களேபரங்கள் ஓடிக்கொண்டிருக்க இதைப் பற்றி எதுவும் அறியாமல் மும்பையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக தூத்துக்குடிக்கு பறந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

"என்ன பயமா இருக்கா?" என்று தன்னருகில் இருந்தவளின் காதில் ஓதினான் ஜெய்.

"எனக்கென்ன பயம்? பயப்பட வேண்டிய நீயே ஹாயா வரும்போது நான் ஏன் டென்ஷன் ஆகணும்?" என்று தன் கோலிகுண்டு கண்களை உருட்டியவள் பின் தன்னுடைய வழக்கமான பல கண் சிமிட்டல்களை ஒரே நேரத்தில் செய்ய,

"அதென்ன எப்போ பார் பல முறை சிமிட்டற? உனக்கு கேப் விட்டு ஈவெனா கண் சிமிட்ட வராதா என்ன?" என்றவன் மீண்டும் துடிக்க விருந்த இமைகளை தன்னுடைய கரத்தால் பிடித்து விலக்கி வைத்தான்.

"தண்ணீ வரப்போகுது ஜெய் விடு" என்பதற்குள் கண்ணீர் உருண்டோட,

"ஹே ரசகுல்லா நீ எப்படி டி என் லைப்ல வந்த?" என்றவன் சுற்றம் மறந்து அவளுடைய கன்னத்தில் இதழ் பதிக்க அவர்களுக்கு அடுத்து இருந்த அறுபதைக் கடந்த பெண்மணி அவனின் இச் சப்தத்தில் திரும்பிவிட ஜெய்யின் தொடையைக் கிள்ளியிருந்தாள் யாக்நியா கோஷ்.

"நான் தப்பான சீட்டை புக் பண்ணிட்டேன் போல?" என்று சிரித்தவர்,

"நீங்க ரிப்போர்ட்டர் தானே?" என்றதும் யாக்நியா அசடு வழிய,

"ஆக்சுவல்லி நான் ஜர்னலிஸ்ட்" என்றாள் யாக்நியா கோஷ்.

"ரெண்டு ஒன்னு தானே? இல்லையா?" என்ற பெண்மணிக்கு,

"ஜர்னலிஸ்ட் நியூஸ சேகரிப்பாங்க. அதாவது அவங்களே அதுக்காக ஒர்க் செய்வாங்க. ஆனா ரிப்போர்ட்டர் அதை வாசிக்குறதோட அவங்க வேலை முடிஞ்சிடும். சிம்பிளா சொல்லனும்னா ஜர்னலிஸ்ட் ரிப்போர்ட்டர் ஆகலாம் ஆனா ரிப்போர்ட்டர் ஜர்னலிஸ்ட் ஆக முடியாது. புரியுதா?"

அவரோ புரியாமல் பார்க்க,

"பிரிண்ட் மீடியாவுல வேலை செய்யுறவங்க ஜர்னலிஸ்ட். அதுவே டிவி ரேடியோல வேலை செய்யுறவங்க ரிப்போர்ட்டர். ஜர்னலிஸ்ட் எழுதிக் கொடுக்கும் நியூசை வாசிப்பது தான் ரிப்போர்ட்டர். நான் ஜர்னலிஸ்ட் கம் ரிப்போர்ட்டர்" என்றதும் அவர் ஒரு புன்னகையை உதிர்த்து திரும்பியவர் தான் அதன் பின் இவர்களை பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை.

"பாவம் அந்த ஆண்ட்டி. நல்லா குழப்பிவிட்டுட்ட போ" என்ற ஜெய்யின் மார்பில் குத்தியவள்,

"நான் விளக்கம் தான் கொடுத்தேன். அவங்களுக்குப் புரியாட்டி நான் என்ன செய்ய?"

"புரியுற மாதிரி சொல்லணும் ரசகுல்லா..." என்றதும்,

"ஜெய், உங்க வீட்ல என்னை ஏத்துப்பாங்க இல்ல?" என்றவளின் கண்களில் கலக்கம் தெரிய,

"ஓகே நான் உண்மையை மறைக்க விரும்பல. கண்டிப்பா வீட்ல பெரிய பிரளயமே வெடிக்கும். ரெண்டு ரீசன்ஸ், முதல நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம் வெச்சு இருக்காங்களாம். ரெண்டாவது நீ பெங்காலி நான் தமிழன். இது அவ்வளவு ஈஸி இல்ல. ஆனா நீ ஒன்னும் கவலைப்படாத. ஏன்னா அது என் பிரச்சனை. நான் சால்வ் பண்றேன். பிலிவ் மீ ரசகுல்லா..." என்றவன் அவளுடைய கரத்தில் அவன் கரம் கோர்த்தான்.

அவள் முகம் இன்னும் குழப்பத்தில் இருக்க அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான் அரிஞ்சயன்.

***************

அன்று காலை வழக்கமான நேரத்தைக் கடந்து விழித்தவன் பதறியபடி தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்து அதில் இருந்த தவறிய அழைப்புகளைக் கண்டு தன்னை சில நிமிடங்களில் தயார்படுத்திக்கொண்டு தன் உயர்ரக பென்சில் ஜிம்மை நோக்கிச் சென்றான். என்ன தான் தன் வீட்டிலே அவனுக்கு வேண்டிய வசதிகளுடன் கூடிய ஜிம் இருந்தாலும் தன் வாழ்வில் நிகழ்ந்த சில சறுக்கல்களில் இருந்து இப்போது தான் தன்னை கொஞ்சம் கொஞ்சமாய் மீட்டுக்கொண்டிருக்கிறான். தன் வாழ்வில் விடியல் என்று ஒன்று இல்லவே இல்லை என்று எண்ணியிருந்தவன் இப்போதெல்லாம் அன்றாட விடியலை நோக்கித் தவமிருக்கிறான். அந்தத் தவத்திற்கு ஒரு காரணம் உண்டு. அவள் மீது அவனுக்கு ஏற்படும் மயக்கம் இதுவரை மயக்கத்தில் இருந்த அவனை தெளியவைத்து கொண்டிருக்கிறது. நச்சத்திரம் போல் தன் மகன் மின்ன வேண்டும் என்ற காராணத்தால் அவனுக்கு ஆசையாக ரேவந்த் (மராத்தி மொழியில் நட்சத்திரம் என்று அர்த்தம்) என்று பெயர் சூட்டினார் பிரமோத், ரேவந்த்தின் தந்தை. ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவையே தன்னுடைய விரல் அசைவில் வைத்திருந்தவர். இன்றைக்கு உச்ச நட்சத்திரமாக திகழும் நிறைய நாயகர்களை அந்த இடத்தில் வைத்த பங்கிற்குச் சொந்தக்காரர்.

அங்கே ஜிம்மில் நுழைந்ததும் அவனுடைய ட்ரைனர் 'ராக்கி' அவனை முறைக்க,

"சாரி மாஸ்டர். ரியலி சாரி. இனிமேல் இது மாதிரி நடக்காது" என்றவனை சிறு தலையசைவில் மன்னித்தவர் அவனை ட்ரைன் செய்ய அனுமதித்தார். ஆனால் அவன் கண்களோ பரந்து விரிந்திருக்கும் அந்த அறையின் மற்றொரு முனையில் இயங்கும் ட்ரட் மில்லின் மீதே இருந்தது. அதில் இருந்தவள் அங்கிதா. வளர்ந்து வரும் ஸ்குவாஷ்(squash) வீராங்கனை. அடுத்த இரண்டு மாதத்தில் நடைபெறும் உலக சாம்பியன் ஷிப் போட்டிக்காக தன்னை முழு மூச்சில் தயார் படுத்திக்கொண்டு இருக்கிறாள். கடந்த இரண்டு வாரமாய் இங்கே பயிற்சி மேற்கொள்கிறாள். அவளையே வைத்தகண் எடுக்காமல் பார்க்கும் ரேவந்த்தின் அருகில் வந்த ராக்கி,

"இதுக்கு தான் இப்படி அடிச்சு பிடிச்சு வந்தியா? அவங்க பிஸ்னஸ் மேன் ஆனந்தோட பொண்ணு. ரேசி மோட்டார்ஸ் சேர்மன். பெரிய இடம்..." என்றதும் அவரை முறைத்தவனுக்கு,

"நீயும் பெரிய இடத்துப் பையன் தான். புரியுது. இருந்தாலும் அவங்க உங்களை விட பெரிய இடம் ரேவந்த். சோ கேர்புல்..." என்றதும்,

"ராக்கி, எனக்கு இந்தப் பெண்ணைப் பிடிச்சு இருக்கு. இவங்க முகத்தைப் பார்க்கும் போது ஏனோ வாழணும்னு தோணுது. எப்படிச் சொல்ல? என் வாழ்க்கையோட டர்னிங் பாயிண்டா இருப்பாங்கனு தெரியுது... லெட்ஸ் ஹோப்..." என்றவன் தன் உடற்பயிற்சியை மேற்கொண்டான்.

**************

அன்று சட்டசபையில் இருந்து வீட்டிற்குச் சென்றவர் தான். தன்னை ஓர் அறையில் பூட்டிக்கொண்டு கடந்த கால வாழ்க்கையை ஓட்டிப் பார்த்தார். அரசியல் வாதிகளுக்கு ஈவு இரக்கம் இல்லையென்று யார் சொன்னார்கள்? அரசியல் வாதிகள் போல் தங்கள் குடும்பத்தின் மீது பற்றுகொண்டவர்கள் எவரும் இல்லை. அதனால் தான் என்னவோ அடுத்த பத்து தலைமுறைக்குத் தேவையான சொத்துக்களை தன்னுடைய ஆட்சி காலத்திலே சேர்த்துவைக்க முயல்கிறார்கள். தான் இருக்கும் போதே தன்னுடைய வாரிசுகளை பதவியில் அமர்த்தி அழகு பார்க்கிறார்கள்.

எல்லோரையும் போல் ஒரு சாதாரண வாழ்க்கையைத் தான் ப்ரித்விராஜும் விரும்பினார். அவருக்கு அது கைகூடும் வேளையில் நிகழ்ந்த சில சம்பவங்கள் அவர் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டது. இவ்வாறான யோசனையிலே அடுத்த இரண்டு நாட்கள் கழிய மூன்றாம் நாள் அவருடைய மகள் மருமகன் பேரப்பிள்ளைகள் மும்பைக்கு வந்துவிட்டார்கள். அவருகென்று இருக்கும் சொற்பமான ரத்த உறவுகள்.

மகளுக்கு ஐந்து வயது இருக்கும் போது மனைவி விபத்தில் இறந்துவிட கடந்த இருபத்தி ஏழு வருடங்களாக அரசியலும் மகளும் தான் அவர் வாழ்க்கை. பேரப்பிள்ளைகளைப் பார்த்ததும் அவருக்கு மனம் இலகுவாக,

"ஏன் மாமா இப்படிப் பண்ணீங்க? போன முறை அந்த பி.எல்.பி ஆட்சிக்கு வரக்கூடாதுனு எவ்வளவு போராடி இந்தக் கூட்டணி அமைச்சோம்?" என்ற அவர் மருமகனுக்கு,

"இனி எதுனாலும் தனியாவே பார்த்துக்கலாம் மாப்பிள்ளை..."

"இல்ல மாமா, நான் சொல்ல வரது?"

"வீட்ல அரசியல் பேசக்கூடாது மாப்பிள்ளை. அதும் நான் இப்போ என் பேர பசங்களோட விளையாடப்போறேன். எலெக்சன் அனௌன்ஸ் பண்ணட்டும். பார்த்துக்கலாம்..." என்று அவர் நகர ஏனோ அவர் மருமகனுக்கு மனம் அடித்துக்கொண்டது. பின்னே இந்தக் கூட்டணிக்காக எவ்வளவு செலவு செய்திருப்பார்?

அதும் போக முதல்வரின் மருமகன் என்னும் செல்வாக்கு அவருக்குத் தேவை. ஆண் வாரிசு இல்லாத ப்ரிதிவிராஜுக்குப் பிறகு அந்த இடத்தைக் கைப்பற்றும் எண்ணமும் அவருக்கு இருக்கிறதே? சென்ற முறை பெரும்பான்மை இல்லாமல் இருந்தும் இந்தக் கட்சியையும் ப்ரித்விராஜையும் ஆட்சியில் அமரவைத்ததில் அவருடைய பங்கு ஏராளம். இதனாலே அவருக்கு கட்சியில் இருக்கும் செல்வாக்கும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இவருடைய இந்த எண்ணத்தைப் பற்றி இவர் மனைவி கூட இன்னும் அறிந்திருக்க மாட்டார். அரசியல் காய் நகர்த்தல் தொடங்கி விட்டது.

*****************

அங்கே அஜய் ராத்தோரின் வழக்கை கையில் எடுத்தவன் முதலில் அவர் குடியிருக்கும் அபார்ட்மென்டுக்கு சென்று அங்கிருந்த வாட்ச் மேனை விசாரித்ததில் அன்று மாலை அவர் கேப் புக் செய்து கிளம்பியுள்ளார் என்று தகவல் அறிந்தவன் அது எந்த கேப், யார் ஓட்டுநர், எங்கே டிராப் முதலிய தகவல்களை எல்லாம் சேகரிக்குமாறு தன் சப் ஆர்டினேட் மிஹிர் க்ரிஷ்ணாவுக்கு உத்தரவிட்டு வீடு திரும்பினான்.

வழக்கம் போல் காவலர் குடியிருப்பில் அவனுக்காகவே காத்திருந்த அவன் அன்னை செல்வி களைப்புடன் வீடு திரும்பிய தன் புத்திரனைக் கண்டு,

"என்ன இதயா ரொம்ப டல்லா இருக்க?"

"ஜீவிதா பேசினாளா மா?"

"இல்லையே? ஏன் என்னாச்சு?"

"ஒன்னும் இல்ல" என்றவன் சலிப்போடு வீட்டிற்குள் செல்ல மகனின் மனதை அறிந்தவர் அதற்கொரு விடை தெரியாமல் திண்டாடினார்.

'இந்தப் பொண்ணுக்கு இன்னும் நான் எப்படித்தான் புரியவெப்பேன்? ஈஸ்வரா சீக்கிரம் அந்தப் புள்ளைக்கு ஒரு தெளிவ கொடு' என்று வேண்டியவர் மாடி ஏறினார்.

இந்தக் கதையில நிறைய கதா பாத்திரங்கள் வருவாங்க தான். இது ஒரு க்ரைம் கதை. பல அடுக்குகள் இதுல இருக்கு. இப்போதைக்கு சொல்லிடுறேன்,

பிரித்விராஜ் - மாநிலத்தின் முன்னாள் முதல்வர்.

யாக்நியா, நடாஷா - ஜர்னலிஸ்ட்

இதயன், தன்வீர் - ஐபிஸ் முடித்த ஏ.சி.பி

ரேவந்த், சுகி கௌடா - சினிமா நடிகர்கள்

பிரமோத் -தயாரிப்பாளர்

ஷ்யாம் - இயக்குனர்

அங்கிதா - ஸ்குவாஷ் வீராங்கனை

அஜய் ரத்தோர்- வனவிலங்கு புகைப்பட கலைஞர்.

அதுல் ஜைஷ்வால், தீபக் கோவர்த்தன் - அரசியல் தலைவர்கள்

இவர்களுடன் ஜெய், மாயங்கி, ஜீவிதா, தாரா சைகோம்.


இந்தக் கதாபாத்திரங்கள் புரிந்தால் தான் அடுத்த சில எபிசோடில் வரவிருக்கும் கதா பாத்திரங்கள் புரியும்.


கதையின் கரு- மும்பையிலும் அதன் சுற்றுவட்டாரத்தில் நிகழும் குற்றங்கள் ஏன் எதற்கு யாரால் என்பதே...
 
கொஞ்சம் புரியுது..
பாரத விலாஸ் feel வருது..
அடுக்குகளை எப்படி இணைக்கிறீங்கன்னு பார்ப்போம்...
 
முடிவிலியவே முடிச்சவங்க நாங்க.... இதைப் படிக்க மாட்டோமா ???

ம்ம்ம்.... நீங்களாவது அந்த தற்கொலைக்கு ஒரு முடிவு சொல்லுங்க ??
 
கொஞ்சம் புரியுது..
பாரத விலாஸ் feel வருது..
அடுக்குகளை எப்படி இணைக்கிறீங்கன்னு பார்ப்போம்...
ஹா ஹா இந்தக் கதையே இன்னும் பல ஊர்ல ட்ராவல் ஆகும்... கண்டிப்பா எல்லாமும் ஒரு புள்ளியில் இணையும்... பார்ப்போம் உங்களுக்கு அது பிடிக்குதா இல்லையானு?? sorry for the late reply
 
முடிவிலியவே முடிச்சவங்க நாங்க.... இதைப் படிக்க மாட்டோமா ???

ம்ம்ம்.... நீங்களாவது அந்த தற்கொலைக்கு ஒரு முடிவு சொல்லுங்க ??
அதானே! முடிவிலி அளவுக்கு கேரெக்டர்ஸ் இதுல கிடையாது... சொல்றேன் ஆனா அது என்னுடைய பாயிண்ட் தான்?? sorry for the late reply.
 
Top