Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மகா லஷ்கமி-4

Crazy Queen

Well-known member
Member
மறுநாள் இரவு சிஸ்டத்தின் முன் உட்கார்ந்தாள் எழில்! அவளது ஐடி நம்பரை கொடுத்து விவரம் கேட்டாள்.

வரிசையாக மணமகனின் விபரம் பெற வயது, படிப்பு, உத்தியோகம், அழகு, குடும்பம் பாரம்பரியம் என்ற அடிப்படையில் அம்மாவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு பட்டியல் போட்டாள்.

இடைவிடாத இரண்டு மணிநேர முயற்சியில் நான்கு வரன்களை தேர்ந்தெடுத்தார்கள்!

அந்த பெண்களை போட்டோ பிரின்ட் எடுத்தாள் எழில்.

"இனிமே என்னம்மா செய்யணும்?"

"இந்த நான்கு வரன்கள் நம்ம ஜோசியர் கிட்ட காட்டுறேன். அவர் தேர்ந்தெடுத்த பின்னால, அந்த பிள்ளை வீட்டார் கூட பேசலாம்.

எழில் எதுவும் பேசவில்லை.

"நீ எதுவும் சொல்லலையே. உனக்கு மாற்றுக்கருத்து இருக்கா என்று கேட்டாள்? மகிழ்வதனி".

"இந்தப் பார்மலிடி மட்டும் போதாதும்மா!"

"வேற என்ன வேணும்?"

"அவங்க கிட்ட பேசும் போது தான் நடைமுறை சிக்கல் வரும்!"

"என்னது? உங்க அப்பா பற்றிய கேள்வியா?"

"ஆமாம்!"

"பொறுப்பில்லாத மனுசன் எங்களை விட்டு ஓடிட்டாரு. என் புள்ளைங்களை நான் தான் வளர்த்த இந்த உண்மையை சொல்றது!"

"சரி! என் உடன் பிறப்புகளை பற்றி கேட்பார்களே!"

"அதுக்கும் பதில் இருக்கே!"

"அக்கா வேற்று மதம் சேர்ந்தவரை காதல் கல்யாணம் செய்துகிட்டானு சொல்வியா?"

"சொல்லுவேன்"

"சரி! அண்ணா எல்லாம் சரியா தானே இருக்கு?"

"ஆமாம்"

"அவன் வந்த சம்பந்தம் பேச வேண்டாமா?"

"கூப்பிடறது! அவன் தானே இந்த கல்யாணத்தை நடத்த போறான்."

"கிழிச்சான்! பயப்படுவான். தன் கையை விட்டு பணம் போகுமோனு நடுங்குவான்! மற்ற எல்லா பிரச்சனையும் முன்னால் வச்சு, தான் தப்பிக்க முயற்சி செய்வான்!"

"நாம ஏன் இந்த முடிவுக்கு வரணும்?"

"அம்மா, இன்னும் நீ நம்புறியா? பொறுப்பில்லாத அப்பா, அண்ணன், மதம் மாறி போன அக்கா, இத்தனை வில்லங்கத்தை வச்சுக்கிட்டு என் கல்யாணம் நடக்குமா? ஜாதகம் மற்ற சங்கதிகளையும் பொருந்தினா போதுமா! இதெல்லாம் முன்னால வந்து நிற்காதா?"

"என்னை பலவீனப்படுத்தாதே எழில்"

"நீ பலவீனம் இல்லமா! ஆனா நம்ம குடும்ப பின்னணி ரொம்ப பலவீனமா இருக்கும்மா! அதை இனிமே நீயும், நானும் பலப்படுத்தறது கஷ்டம்! கல்யாண பேச்சுல இது அதிகம் பிரதிபலிக்கும்! அதை நீ உணரலையா?"

மகிழ்வதனி சோர்ந்து போனாள்!

"என்ன சொல்ல வர! கல்யாண முயற்சி வேண்டாம்னு சொல்றியா?"

"இல்லம்மா! உன் விருப்பப்படியே நீ பொருத்தம் பாரு! பொருந்தினவங்க கூட பேசலாம்! அப்ப தெரியும் கஷ்டம்! அப்புறம் திடமான முடிவுக்கு வரலாம்!"

"என்ன திடமான முடிவு?"

"எனக்கு கல்யாணம் வேணுமா? வேண்டாமானு?"

"அப்படி சொல்லாத டி?"

"நான் சொல்லலை, சராசரியா இருக்க இந்த சமூகம் சொல்லும்! அதைக் கேட்க, உன் காதுகளை இப்பவே திறந்து வச்சுக்கோ புரியுதா?"

மகிழ்வதனி முகம் பதற்றமாக மாறியது.

"அம்மா! உன்ன டென்ஷன் படுத்த இதை நான் சொல்லலை! நம்ம குடும்பம் இருக்கிற நிலைக்கு, உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது! நீ தெளிவான பெண்மணி! பல அடிகளையும் அவமானங்களையும் பட்டு தான் வெளியே வந்து இருக்கே! அதனால பிரச்சனைகளும், அது தர சிக்கல்களும், தோல்விகளும் இது வரைக்கும் உன்ன பாதிக்கலை! நீ துவண்டும் போகலை, இனிமேல் கூடாது என்று சொல்கிறேன்!"

"உன் கழுத்துல தாலி ஏறிய தீரும்!"

"தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ன ஒரு எம்ஜிஆர் படம் யூடியூப் ல நான் பார்த்தேன்!"

"நீயும் என்ன நோகடிக்கிறியா?"

"நிச்சயமா இல்லம்மா! உன்ன நான் தயார் படுத்துகிறேன்!"

"எதுக்கு?"

"விடும்மா! வெளிநாட்டு பிராஜெக்ட் ஒன்று நாங்கள் உழைக்கிறோம்! அது மட்டும் எங்களுக்கு சாதகமாக அமைந்ததா உலக அரங்கத்தில் நல்ல ஒரு இடம் கிடைக்கும்! என் பார்வையில் தொலைநோக்கு வந்துருச்சு! இந்த அல்ப விஷயங்களில் என்னையும் நுழைக்க நான் தயாரா இல்லை!"

"கல்யாணம் உனக்கு அல்ப விஷயமா டி?"

"நல்ல புருஷன் நல்ல குடும்பம் அமைவது அற்புதம் இல்லன்னா அல்பம் தான்!"

மகிழ்வதனி பேசவில்லை!

"சரி நேரமாச்சு தூங்கலாம். நாளைக்கு நிறைய வேலை இருக்கு! குட் நைட் மா!"

எழில் படுத்ததும் உறங்கி விட்டாள்!

மகிழ்வதனிக்கு உறக்கமே வரவில்லை. விளையாட்டாக எழில் சிரித்தபடி சொன்னாலும், அத்தனையும் ஆணி அடித்த மாதிரி கருத்துகள்!

இந்த பயம் மகிழ்வதனிக்கும் உண்டு!

எழில் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தாள் இத்தனை பிரச்சனைகளும் பூதாகரமாக வந்து நிற்கும்!

அத்தனையும் விஸ்வரூபம் எடுக்கும்!

இவளுக்கு முன் பிறந்தவர்களும், இவளை உருவாக்கிய அந்த பாவியும் எடுத்த தப்பான முடிவுகளில் இவள் தலையில் தான் உருளும் இவளது வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

"பொறுப்பின் சிகரத்தில் இவள் நின்றாலும், அது கண்ணுக்குத் தெரியாது!"

"இவள் பொறுப்பில்லாத குடும்பத்தில் பிறந்த இவ தப்பா?"

"ஓடிப்போன தகப்பன் - ஏன் ஓடினான்? அவன் பொறுப்பில்லாமல் ஓடினானா? இல்லை மனைவி ராட்சசியே? ஓட வைத்தாளா? கேள்விகள் வரும்!"

ஏன் மூத்தவன் பொறுப்பை ஏற்கவில்லை?

"எதனால் மதம் மாறிப் போனாள் மகள்!

"அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவள் ஒழுங்கா இருப்பாளா?"

"என்ன உத்தரவாதம்?"

"அம்மாவையும் கூட்டிட்டு வர போறாளா?"

"அவ பஜாரி ஆச்சே? புருஷன விரட்டி விட்டவ, மகளோடு இங்க வந்தா, நம்ம குடும்பத்தோட கதி என்ன?"

"மாப்பிள்ளையை கைக்குள் போட்டுக்கிட்டு ஆத்தாளும் மகளும் இங்கே உள்ளவர்களை விரட்டுவாளுக!"

"அம்மாவிடம் ரொம்ப நெருக்கமா இருக்க பொண்ணுங்கள கொஞ்சம் தள்ளி வைக்கணும்!"

"அதுங்க குடும்பத்தை கலைச்சிடும்!"

"கொஞ்சம் அகங்காரம் தலைத்தூக்கும்!"

"ஆம்பளை மதிச்சு, ஆலோசனை கேட்டு, அடங்கி நடந்தால் குடும்பம் இல்லை!"

"இந்தப் பொண்ணு கண்டிப்பா புருஷன் மதிக்காது!"

"போதாத குறைக்கு பதவி, நல்ல சம்பளம், நவீன படிப்புகள் போதாதா?"

"தலை உச்சிக்கு திமிர் நட்டுக்கிட்டு நிக்கும்!"

"வேண்டவே வேண்டாம்!"

"பத்துல எட்டு இந்த மாதிரி விமர்சனங்களை சந்திக்க குடும்பம் தயாராக!"

மகிழ்வதனி வியர்த்தது!

இத்தனையும் தெரியும் ஆனால் நேரடியாக செயலில் இறங்கும் வரை இந்த பிரச்சினையை தீவிரம் புரியவில்லை! இறங்கும்போது தாக்குகிறது.

நேரடித் தாக்குதல்!

எழுந்து குளிர்ந்த நீரை பருகினாள்.

எழில் ஆழமான உறக்கத்தில் இருந்தாள்!

எழில் சுலபமாக கேள்விகளைக் கேட்டுவிட்டு படுத்துவிட்டாள் ஆனால் தாயான எனக்கல்லவா இந்த வழி தெரிகிறது.

"எல்லா பாவங்களும் சேர்ந்து எழிலின் தலையில் இறங்கப் போகிறதா?"

நிற்க முடியவில்லை படுக்க முடியவில்லை!

ஒரு மாதிரி அவஸ்தை உடம்பு முழுக்க இருந்தது.

"மற்றவர்கள் தப்பித்து விட்டார்கள்!"

"இவள் மாட்டிக் கொண்டாளா?"

சுத்தமாக உறக்கம் இல்லாமல் போனது.

புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கம் வரவில்லை. விடிகிற காலையில் தான் உறக்கம் வந்தது.

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀


மறுநாள் காலையில் 🥀

காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து எழில் புறப்பட்டு விட்டாள். அதற்குள் வெளிநாட்டு ப்ராஜெக்ட் தொடர்பாக கிருஷ்ணன் இரு முறை போன் செய்து விட்டார்.

எழில் காலை உணவு கூட சாப்பிடாமல் போய்விட்டாள்.

மகிழ்வதனி 10 மணிக்கு ஜோதிடரிடம் வந்தாள்.

அந்த 4 ஜாதகங்களையும் காட்டி, எழிலின் ஜாதகத்தையும் தந்தாள்!

அவர் அலசினார்!

அதில் இரண்டை தேர்ந்தெடுத்தார்.

"ஒன்று உத்தமம் மற்றது மத்யமம் என்றார்."

இரண்டுமே தகுதி அடிப்படையில் நன்றாக இருந்தது.

வீடு திரும்பி விட்டாள் மகிழ்வதனி.

உத்தம ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பையனின் அப்பாவுக்கு போன் செய்தார்.

அவர் எடுத்தார்.

மகிழ்வதனி விவரங்களை சொல்ல,

"பெண்னோட அப்பாவே பேச சொல்லுங்க!"

"அவர் இல்லை!

"எங்கே போயிருக்கார்?"

மகிழ்வதனி தடுமாறிப் போனாள்.

"என்ன பதில் சொல்வது?"

"எங்கம்மா போயிருக்கார்?"

"சாரி அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து போய்விட்டார். நான் அம்மா நான்தான் பேசி முடிவு எடுக்கணும்!"

"சாரிமா நாங்க யோசிக்கணும்!"

அவர் இணைப்பைத் துண்டித்து விட்டார்.

மகிழ்வதனி அடிபட்டாள்!

அடுத்த மத்யமம் ஜாதகத்தைக் கையில் எடுத்துப் போன் செய்தாள்.

அங்கு ஒரு பெண் எடுத்தாள். பையனின் அம்மா!"

கொஞ்சம் ஆறுதலாக இருந்தது!

"பொண்ணுக்கு கல்யாணத்துக்கு பிறகும் வேலைக்கு போவாளா?"

"நிச்சயமா?"

"வேண்டாம்! அவ ராஜனமா பண்ணட்டும்!"

"ஏன்?"

"அவன் வேலைக்கு போறேன்! இரண்டு பேரும் வேலைக்கு போனா வீட்டை யார் பொறுப்பா பார்க்கிறது! என் பையன் நிறைய சம்பாதிக்கிறான். அதனால வேலைக்கு போற மனைவி தேவை இல்லை!"

"நான் என் மகளை கேட்டுச் சொல்கிறேன்!"

மகிழ்வதனி இணைப்பை துண்டித்தாள்!

"ஒரு காலத்துக்கும் எழில் வேலையை விட சம்மதிக்க மாட்டாள்" என் நிலைமையும் அதோகதி ஆகிவிடும்!"

தேடிப்பிடித்து இரண்டு வரன்கள் எடுத்தால் இரண்டுமே அடிபட்டு விட்டது.

இனி முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

சுலபமல்ல!

"ஒரு வரன் தேடுதலில் இத்தனை பிரச்சனையா?"

பயம் வந்தது?

அன்று இரவு 8 மணிக்கு எழில் வீட்டுக்கு வந்தாள். முகம் கழுவி இரவு உணவு சாப்பிட்டாள்.

"என்னம்மா? ஜோசியர் கிட்ட போனியா?"

நடந்தது சகலமும் மகிழ்வதனி சொல்ல.

"அத்தனையும் ஷார்ட் லிஸ்ட் பண்ணியும் ஒன்னு கூட சரியா அமையல?"

"ஆமாண்டி ! அதான் புரியல! சரி தளர வேண்டாம் ! திரும்பவும் ஆரம்பிக்கலாம்!"

"செய்!"

"தப்பு பண்ணிட்டேன் இரண்டு வருஷம் முன்னால் இதை நான் செஞ்சிருக்கணும்!"

"விடு! ஏன் கவலைப் படுறே?"

"பட்டு தாண்டி ஆகணும்! இது சுலபம் அல்ல! பயம் வருது!"

"என்னம்மா பயம்! மனசுக்கு பொருந்தினா, மேற்கொண்டு போகலாம்! இல்லனா விட்டு!"

சுலபமாக சொல்லி விட்டாள்.

நான் படுற கஷ்டம் உனக்கெங்கே புரியப்போகிறது தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான் மகிழ்வதனி.
 
Banumathi jayaraman

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 
Last edited:
Top