Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது - 8

Advertisement

Sakthi bala

Active member
Member
ஸ்டேஜின் பின்புறம் யாரோ இருவர் பேசிக் கொண்டிருப்பது மதிவதனி, மனோரஞ்சன் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது

“மனோவுக்கு முதலில் அந்த பொண்ணு நித்யாவ தான் கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருந்தாங்க. இப்படி இவன் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பான்னு யாருமே எதிர்பாக்கல.நித்யாவ கல்யாணம் பண்ணிருந்தா சொத்துக்கு சொத்தும் ஆச்சு, அந்த பொன்னும் ரொம்ப அழகு.இப்போ எல்லாம் போச்சு” என்ற அந்த பெண்மணி சொல்லிக் கொண்டிருந்தார்.

மதிவதனி அதிர்ந்து போய் மனோரஞ்சனை பார்த்தாள், அவன் எதுவுமே கேட்காதது போல, கல் போல முகத்தை வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான்.’ஓ...அப்போ ஹீரோ சார் சோகமா இருக்கிறதுக்கு இது தான் காரணமா?நான் கூட தாத்தா வராததுனால தானு நினைச்சுட்டேன்.ச்சே’

மதிவதனி ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த நித்யாவை பார்த்தாள்.அவள் ஒரு விலையுயர்ந்த கண்ணைக் கூச வைக்கும் தங்க நிற கவுன் அணிந்திருந்தாள்.அதற்கு பொருத்தமாக டைமன்ட் நெக்லஸ் அணிந்திருந்தாள்.அந்தக் கூட்டத்தில் அவள் மட்டும் தனியாக ஜொலித்தாள்.அவளும் அந்த சமயத்தில் மனோரஞ்சன், மதிவதனியை தான் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்படி ஒரு பெண்ணை விட்டு விட்டு தன்னை மனந்ததற்க்கு அவன்
வருத்தப்படுவது சரியே என்று தோனிற்று. காலையில் இருந்த சந்தோஷம் எல்லாம் மதிவதனியிடம் முற்றிலுமாக வடிந்தது.இந்த ஃப்ங்ஷன் எப்போது முடியும் என்று காத்துக் கொண்டிருந்தாள்.
ஃப்ங்ஷன் முடிந்து மனோரஞ்சனும், மதிவதனியும் மட்டும் முதலில் வீடு திரும்பினர். மதிவதனி எப்போதும் போல அவள் ரூமுக்குள் செல்ல எத்தனித்தாள்.

“மதி”

ஒரு நிமிடம் மதிவதனிக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை. ‘யார் இவரா நம்மை கூப்பிட்டது?! அதுவும் மதி னு?!ஒருவேளை இது நம்ம பிரம்மையா இருக்குமோ?!’என்று யோசித்துக் கொண்டே நின்றாள்.

“மதி. நான் உன்னைய தான் கூப்பிடுறேன். நின்னுக்கிட்டே தூங்கிட்டியா?”கிண்டலாகக் கேட்டான்.

”ஆ..அது வந்து...ஒன்னுமில்லை....என்ன சொல்லுங்க?”

“ஹ்ம்ம்...இன்னிக்கு ஃப்ங்ஷன் எப்படி இருந்துச்சு?”
அவன் ஏதோ பேச நினைக்கிறான், அதை எப்படி தொடங்க என்று தெரியாமல் இப்படி பேச்சை வளர்க்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

“மதி...உன் கிட்ட ஒரு சில விஷயங்கள் பேசணும்.......”

“அது...நடந்த எதையும் நம்மால மாத்த முடியாது.நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு ஒரே வீட்ல வாழ்ந்துட்டு இருக்கோம்.இப்படி சண்டை போட்டுட்டே இருந்தா ஒரு மாதிரி இருக்கு.அதனால....”

‘இவர் என்ன சொல்ல வருகிறார்? கணவன்,மனைவியா சேர்ந்து வாழ ஆரம்பிக்கலாம்னு சொல்ல போறாரா?’அவனே தொடர்ந்தான்.

“நாம ஏன் ஃப்ரெண்ட்ஸா இருக்கக் கூடாது?!சும்மா உன் மனசுல தோன்றதை எல்லாம் என் கிட்ட ஷேர் பண்ணலாம். நானும் அப்படி சில விஷயங்கள உன் கிட்ட ஷேர் பண்றேன்..அதை தவிர உன் சுதந்திரத்துல நான் தலையிட மாட்டேன். என்ன சொல்ற? ஃப்ரெண்ட்ஸ்?”என்று அவளிடம் கையை நீட்டினான்.

ஒரு நிமிடம் மதிவதனி யோசித்தாள். பின்பு நீட்டிய அவன் கரங்களுடன் தன் கரங்களை சேர்த்து”ஓகே ஃப்ரெண்ட்ஸ்”என்று அழகாக புன்னகைத்தாள்.

அவனும் சிரித்துக் கொண்டே,”சரி மதி. நீ போய் தூங்கு”என்றான்.

அவனிடம் குட்நைட் சொல்லிவிட்டு திரும்பிய அவளை அவன் குரல் மறுபடியும் தடுத்து நிறுத்தியது.

“மதி ஒரு நிமிஷம்...”

“சொல்லுங்க”

“ஹ்ம்ம்....சரி, அது இப்போ வேண்டாம்! உனக்கு நாளைக்கு காலைல ஒரு சஸ்பென்ஸ் இருக்கு”

“சஸ்பென்ஸா என்ன அது?”

“ஹலோ....சொல்லாம இருக்கிறதுக்கு பேர் தான் சஸ்பென்ஸ். நாளைக்கு வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணு என்ன?”

“சரி....சரி....ஓகே...”அவள் அரைமனதுடன் சொல்லிவிட்டு நகர ஆரம்பிக்க அவன் மறுபடியும் அவளை அழைத்தான்.

“இன்னிக்கு சாரில நீ ரொம்ப அழகா இருந்த!” என்று சொல்லிவிட்டு வழக்கம்போல ஏதோ ட்ரெய்னை பிடிப்பவன் போல விடுவிடுவென்று அவன் அறைக்குள் சென்று விட்டான்.

அவள் தான் நகர முடியாமல் சில நிமிடங்கள் அந்த இடத்திலேயே வேரூன்றி நின்றாள்.

அன்று இரவு அவளுக்கு பல கனவுகள் வந்தது.ஒரு கனவில் மனோரஞ்சன் அவளிடம் சிரித்துக் கொண்டே வந்து கையை நீட்டினான். ஆனால் எங்கிருந்தோ வந்த நித்யா அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

மற்றொரு கனவில் அவள் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தாள்.அவளை காப்பற்ற மனோரஞ்சன் அவளை நோக்கி ஓடி வந்தான். ஆனால் நித்யா இடையில் வந்து அவனை தடுத்து விட்டாள்.

மதிவதனி மூழ்கிக் கொண்டே இருந்தாள். அவள் அப்பாவும்,அம்மாவும் அவளை கை நீட்டி அழைத்தனர்.அவள் தூக்கத்திலேயே ஏதேதோ உளறிக் கொண்டிருந்தாள். அப்பொழுது,”மதி மதி” என்று யாரோ அவளை எழுப்பிக் கொண்டிருந்தனர். யார் தன்னை எழுப்பியது என்று பார்த்த மதிவதனி ஆச்சரியப்பட்டு போனாள்.அவள் சற்றும் எதிர்பாராத விதமாக அவள் அத்தை காமாட்சி நின்றுக் கொண்டிருந்தார்.

‘அத்தை எப்போ இங்கே வந்தாங்க? அடச்சே! நம்ம ரிசெப்ஷன் பத்திக் கூட நாம அத்தை கிட்ட சொல்ல மறந்துட்டோமே! என்ன பொண்ணு நானு? எப்படி மறந்தேன்?’என்று மனதில் தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

“அத்த..அத்தை...நீங்க எப்போ வந்தீங்க?”

“நான் நேத்து சாயங்காலம் வந்தேன். ரிசெப்ஷனுக்கு நேரடியா வந்ததாலே நீ பார்த்துருக்க மாட்டே”
அத்தைக்கு ரிசெப்ஷன் பற்றி எப்படி தெரியும் என்று யோசித்த அவள் மனோரஞ்சனை திரும்பிப் பார்த்தாள்.அவன் ஒரு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.’ஓ...இவர் தான் அத்தைக்கு தகவல் சொல்லிருக்கார் போல. இது தான் அந்த சஸ்பென்ஸா?’.அவனை நன்றியுடன் பார்த்தாள்.

அவள் எண்ணங்கள் புரிந்ததுபோல காமாட்சி,”தம்பி தான் நேத்து ஊருக்கு கார் அனுப்பி என்னை கூட்டிட்டு வந்துச்சு.சரி,நான் ஊருக்கு கிளம்புறேன், அதான் உன் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்”

“அதுக்குள்ள கிளம்புறீங்களா?!ஒரு ரெண்டு நாளாவது இருந்துட்டு போகலாமே!”என்று மனோரஞ்சன் கூறினான்.

“இல்ல தம்பி. அங்க எல்லாம் போட்டது போட்டபடி வந்துட்டேன். இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்” என்று சொல்லிவிட்டு மதிவதனியை பார்த்து ஒரு சின்ன தலையசைப்புடன் கிளம்பி விட்டார்.

அவர் கிளம்பியதும் மனோரஞ்சன் மதிவதனியிடம் கோபமாக திரும்பினான்,”உன் அத்தை தானே அவங்க? அவங்க கிளம்புறேன்னு சொல்றாங்க, நீ எதுவும் பேசாம அப்படியே நின்னுகிட்டு இருக்க?! கொஞ்ச நாள் இங்க தங்கிட்டு போக சொல்லலாம்ல”

மதிவதினிக்கு எரிச்சலாக வந்தது.’ஆமா நான் சொல்லிட்டா மட்டும் அவங்க இருந்துருவாங்களாக்கும். அப்படியே என் மேல பாசம் இருக்கிற மாதிரி தான்! இது எதுவும் புரியாம இவர் வேற’மனதுக்குள் சலிப்பாக நினைத்ததை கோபத்தில் வார்த்தையாக அவனிடம் கொட்டிவிட்டாள்.

“நான் சொன்னா மட்டும் அவங்க கேட்டிருவாங்களா? அவங்களுக்கு என் மேல அக்கறையே கிடையாது! ஏன், உங்கள கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தப்போ அவங்க எனக்கு சப்போர்ட் பண்ணவா செஞ்சாங்க,இல்லியே! வாயை மூடிக்கிட்டு சும்மா தானே இருந்தாங்க. இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது? எனக்கும் எங்க அத்தைக்கும் நடுவுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்ச மாதிரியே பேசாதீங்க!என்னமோ பெருசா நான் உன் சுதந்திரத்துல தலையிட மாட்டேன்னு சொன்னீங்க?இப்போ என்னவாம்?”

மனோரஞ்சன் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்தான்,”நீ நம்புறியோ இல்லியோ உன்னையும் உங்க அத்தையும் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் உன் விசயத்துல நான் தலையிட்டது தப்பு தான். சாரி”என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு தான் பேசியது தவறு என்பதை உணர்ந்தாள் மதிவதனி. அத்தை மேல் உள்ள கோபத்தை மனோரஞ்சனிடம் காட்டி விட்டதை உணர்ந்தாள்.’ச்சே! நேற்று தான் அவர் என்னிடம் நல்லா பேசினாரு. நானே அதை கெடுத்துட்டேனே!’என்று தன்னை தானே நொந்துக் கொண்டாள்.

மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.அவன் மதிவதனியிடம் பேசுவதை குறைத்து விட்டான்.மதிவதனியே சென்று அவனிடம் பேச்சு குடுத்தாலும் அவன் வேலை இருப்பதாக அங்கிருந்து சென்று விடுவான்.மதிவதனி அவனிடம் எப்படி பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுது சூரியநாராயணன் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் குடுத்தார்.

ஒரு நாள் சூரியநாராயணன் அவளை கூப்பிட்டு,”நீ என்னமா படிச்சிருக்க?” என்று கேட்டார்.

“நான் பி.காம் முடிச்சிருக்கேன் மாமா. சில கம்ப்யூட்டர் கோர்ஸ் கூட பண்ணிருக்கேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினேன். அதுல செலக்ட் கூட ஆயிருந்தேன் மாமா” அவள் கூறியதைக் கேட்டு சிறிது நேரம் யோசித்தார்.பின்
மனோரஞ்சனை அழைத்தார்.

“மதிவதனிக்கு நீ ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணி குடேன் மனோ.வீட்டிலேயே இருக்கிறதுக்கு வேலைக்கு போனால் அவளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கும்”

“அவளுக்கு எதுக்கு பா இப்போ வேலையெல்லாம்?”

“இல்லை மனோ. ஒருத்தரோட திறமைய நாம முடக்கி வைக்கக் சுடாது. அவளுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா அவள் வேலைக்கு போகணும். நம்ம கம்பெனியில் வேண்டாம்.அவளால சுதந்திரமா
வேலை பார்க்க முடியாது.வேற கம்பெனில வேலை பார்த்தா தான்
அவளுக்கு நிறைய கத்துக்கிறதுக்கும், உலக அனுபவம் கிடைக்கிறதுக்கும் ஒரு வாய்ப்பா இருக்கும். வேற ஏதாவது கம்பெனில வேலை ஏற்பாடு பண்ணு”என்று கூறினார். சரி என்று அவன் தலையாட்டினான்.

மதிவதனியிடம் வந்து,”அப்பா உனக்கு வேலை வாங்கித் தர சொன்னார். நீ என்ன படிச்சிருக்க?” என்று கேட்டான்.
அவள் சொன்னாள்.

“எந்த கம்பெனி இன்டர்வியூல செலக்ட் ஆனே?”

“K.N குரூப்ஸ்”

ஒரு நிமிடம் அவன் கண்களில் ஆச்சரியம் மின்னியது.”சரி நான் யோசிச்சு சொல்றேன்” என்று கூறிவிட்டு சென்றான்.
கூடிய சீக்கிரம் வேலைக்கு போக போற சந்தோஷத்தில் இருந்தாள்

மதிவதனி. அதற்குள் அந்த வீட்டில் நன்றாக பொருந்திவிட்டாள்.பாட்டியிடம் சகஜமாக பேசுவாள்.தினம் அவருக்கு ‘பொன்னியின் செல்வன்’ படித்துக் காட்டுவாள்.
வந்தியத்தேவன் துடுக்குத்தனமாகவும், விளையாட்டாகவும் இருந்தாலும் அவன் வாழ்வில் பல இடங்களில் அதிர்ஷ்டம் அவனுக்கு கைக் குடுத்தது. வந்தியத்தேவன் போல வாழ்க்கையை போகிற போக்கில் இலகுவாக எடுத்துக் கொண்டால், எல்லாம் நன்மையாகவே முடியும் என்று பாட்டியிடம் தன் கருத்தை அவள் எடுத்துக் கூறும் போதே ‘அட! இது நம் வாழ்க்கைக்கும் பொருந்துமே’ என்று யோசித்தாள்.

பாட்டியுடன் சேர்ந்து பொன்னியின் செல்வனை படிக்கையில் அவளே அந்த கதைக்குள் புகுந்து ஒரு வந்தியத்தேவனாக, குந்தவையாக, வானதியாக, அருள்மொழிவர்மனாக மாறி போவாள்.

அதேபோல் நிலாவிடமும் அவள் நன்றாக பழகினாள். நிலா இவளை கலாய்த்தால், இவள் திரும்ப அவளை ஓட்டுகிற ஓட்டில் நிலா ஓடியே விடுவாள்.

தாத்தாவின் கதையே வேறு. தாத்தாவை நினைத்தாலே மதிவதனிக்கு சிரிப்பாக வரும். என்னதான் அவளிடமும், மனோரஞ்சனிடம் தாத்தா முகத்தை குடுத்துக் கூட பேசாமல் போனாலும், அவரிடம் ஒரு தனி பாசம் இழையோடுவதை அவள் உணர்ந்தாள்.

அவரின் கோபம் அவளுக்கு ஒரு சின்ன பிள்ளை தன் தாயிடம் முகத்தை திருப்பிக் கொண்டு போவதை போலவே இருக்கும். அதனால் மதிவதனி ஆனமட்டுக்கும் அவரிடம் மல்லுக்கட்டி விடுவாள். அவருக்கான பணிகளை அவளே தான் செய்வாள்.

அன்றும் அப்படி தான் அவர் வந்து சாப்பிட அமர்ந்ததும் மதிவதனி பறிமாற சென்றாள். மதிவதனியை பார்த்ததும் அவர் முகத்தை திருப்பிக் கொண்டு, “பார்வதி, பார்வதி” என்று குரல் குடுத்தார்.

“தாத்தா, பாட்டி இல்லை. கோவிலுக்கு போயிருக்காங்க. நான் பரிமாறுறேன். நீங்க சாப்பிடுங்க”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு சாப்பாடே வேண்டாம்.” அவர் எழ முயலும்போது மதிவதனி,”ஓஹோ....அப்போ பாட்டி சொன்னது உண்மை தான் போல!”

“பாட்டி சொன்னாளா? என்ன சொன்னா அவ?”

“இல்ல, நீங்க எனக்கு பயப்படுறீங்கனு பாட்டி சொன்னாங்க”

“இது என்ன புது கதை? நான் ஏன் உனக்கு பயப்படனும்?”

“ஆமா...உங்களுக்கு பயம் தான்! எங்க என் கூட பேசுனா, நான் உங்களுக்கு ஏதாவது செஞ்சா, நீங்க மனசு மாறி என்னை உங்க பேத்தியா ஏத்துப்பீங்களோனு உங்களுக்கு பயம்! அதனால தான் என்னை தவிர்க்கிறீங்க”

“யாரு நான்? மனசு மாறுவேன்?” கேட்டுவிட்டு பெரிதாக சிரித்தார். மதிவதனி அமைதியாக அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து அவர் சொன்ன பதில் மதிவதனியின் மனதை சுருக்கென்று தைத்தது.

புலரும்
 
Top