Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 7

Advertisement

Sakthi bala

Active member
Member
மனோரஞ்சன் மதிவதனியை ஆழ்ந்து நோக்கி பின்பு,”சாரி” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அன்றிரவு வெகு நேரம் அவளால் தூங்க முடியவில்லை. அழுதுக் கொண்டே இருந்தாள்.காலை வெகு நேரம் கழித்து எழுந்து வெளியே வந்தாள். வெளியே மனோரஞ்சன் அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவன் இந்நேரம் ஆபீஸ் கிளம்பி போயிருப்பான் என்று நினைத்தாள்.

“ஹ்ம்ம்...நான் நேத்து அப்படி பேசுனது தப்பு தான். சாரி...ஏதோ ஒரு கோபத்தில அப்படி பேசிட்டேன்....ரியலி சாரி”

அவன் உண்மையாக மன்னிப்பு கேட்கிறான் என்பது அவன் முகத்தில் இருந்து தெரிந்தது.அவன் முதல் முறையாக அவளிடம் அப்படி பேசியதும் அவள் அதிசயத்து போனாள்.எதுவும் சொல்லாமல் வெறுமனே தலையை ஆட்டினாள்.

அவன் கிளம்பும் முன் மீண்டும் அவளிடம் திரும்பி,
“ஹ்ம்ம்....நான் பேசுனது தப்பு தான், ஒத்துக்குறேன்! ஆனால் நீ பேசுனதும் தப்பு தானே?”

“நானா? நான் என்ன தப்பா பேசினேன்?” அவள் குழம்பினாள்.

“நீ பேசுனது எப்படி இருந்துச்சுனா.....உன்னை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை பண்ணி வச்ச மாதிரி பேசுனே. நீயே உன் மனசை தொட்டு சொல்லு! நீ நினைச்சிருந்தா உன்னால இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அப்படி தானே?”

“இது ஒன்னும் அந்த காலம் இல்லை. இப்போ உள்ள பெண்களுக்கு அவங்க வாழ்க்கையை பத்தின முடிவை எடுக்கும் சுதந்திரம் இருக்கு. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சது முழுக்க முழுக்க உன்னோட முடிவு தான். அதுக்குக் காரணம் நானோ, உன் அத்தையோ, உன் ஊர்க்காரங்களோ இல்லை. என்னதான் ஊர்க்காரங்க நம்ம மேல பழி போட்டிருந்தாலும், உன் அத்தை என்ன சொல்லிருந்தாலும், நீ நினைச்சிருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்திருக்கலாம்”

“உன் எதிர்காலம் என்ன ஆகுமோன்னு உனக்கு பயம். அந்த பயம் தான் உன்னை இந்த முடிவுக்கு தள்ளிருக்கு. என்ன நான் சொல்றது சரி தானே?” அவன் பேசிய விஷயம் காட்டமாக இருந்தாலும், அவன் முகம் புன்சிரிப்பை உதிர்த்துக் கொண்டு இருந்தது.

மதிவதனி ஒரு நிமிடம் திகைத்து நின்றாள். மறுநிமிடம் சுதாரித்துக் கொண்டு,”ஓஹோ....கடைசில இது எல்லாத்துக்கும் காரணம் நான் தான்னு முடிச்சிடீங்கல்ல? இதை...இதை தான் நான் ஆணாதீக்கம்னு சொல்றேன். ஆண்கள் எப்பவுமே பண்ணின தப்பை மறைக்கிறதுக்கு பெண்கள் கிட்ட அந்த தப்பை திசை திருப்பி விட்டுருவாங்க. நீங்களும் அதே தான் செய்யுறீங்க”

“இங்க பாரு மதிவதனி....நான் பெண்கள் சரியா? ஆண்கள் சரியா? ங்கற வாதம் செய்ய வரல. நான் நம்ம விசயதுல்ல நடந்தத தான் சொன்னேன். சரி விடு. இதை பத்தி பேசுனா இப்போதைக்கு இந்த டாபிக் முடியாது. எனக்கு வேற ஆபீசுக்கு நேரமாகுது. நாம இன்னொரு நாள் பொறுமையா இந்த சண்டைய கண்டினியு பண்ணலாம்” சொல்லிவிட்டு அவள் பதிலைக் கூட எதிர்பாராமல் சென்று விட்டான்.

‘நான் நின்று பேசுவதை கூட இவர் ஒருநாளும் கேட்டதே இல்லை, இவர் பெண்களை பற்றி குறை பேச வந்துட்டார்’ அவள் மனம் யோசிக்கும் போதே ‘அவர் ஒன்னும் எல்லா பெண்களையும் பத்தி குறை சொல்லலையே? என்னை தானே சொன்னாரு’ என்று இன்னொரு மனம் இடித்தது. அதற்குமேல் எதுவும் யோசிக்காமல் அவள் மற்ற வேலைகளில் மூழ்கினாள்.

இந்த நிகழ்வுக்கு பின் மனோரஞ்சனிடம் சில மாற்றங்களை அவள் கண்டாள்.ஆபீஸ் கிளம்பும்போது அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். ஆபீசிலிருந்து வந்ததும் அவள் சாப்பிட்டு விட்டாளா என்று விசாரித்தான்.அவளை பார்க்கும் போதெல்லாம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு செல்வான்.

இதற்கிடையே அந்த வாரக் கடைசியில் அவர்கள்
ரிசெப்ஷன் வைப்பதாக முடிவாயிற்று. அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது.சகுந்தலாவும், விஸ்வநாதனும் வந்து விட்டனர். மனோரஞ்சனின் நன்பன் வினோதன் கூட அங்கு வந்து ரிசெப்ஷன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

ரிசெப்ஷனுக்கு தேவையான துணிமணிகளை எடுப்பதற்கு
மனோரஞ்சன், மதிவதனி, நிலா, வினோதன், சூரியநாராயணன், விஸ்வநாதன் அனைவரும் அவர்கள் கடையான ‘வானவில்’ சென்றனர். ராஜேஸ்வரி வர மறுத்துவிட்டார்.

மனோரஞ்சன் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட மதிவதனி விலை சற்று குறைவான டிசைனர் சேலையை தான் தேர்ந்தெடுத்தாள். தனக்கு டிசைனிங் தெரியும் என்றும் அந்த புடவையை அவளே டிசைன் செய்வதாகவும் கூறி விலை ஜாஸ்தி உள்ள புடவை எடுக்க மறுத்து விட்டாள்.

எல்லோரும் அன்று வெகு நாட்களுக்கு பின் சிறிது மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.வினோதன் அந்த வீட்டில் உள்ள எல்லோரையும் போல மிமிக்கிரி பண்ணிக் கொண்டிருந்தான்.நிலா, மதிவதனி, ரிதுநந்தன் அவன் செய்வதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.சிறிது நேரம் கழித்து எல்லாரும் கலைந்து சென்றனர்.

நிலா மட்டும் வினோதன் அருகில் சென்று யாருக்கும் கேட்காத வண்ணம்,”என்ன அண்ணா?!இப்போல்லாம் நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது?!என்ன விஷயம்?”என்று கிண்டலுடன் கேட்டாள்.நிலா எப்பொழுதும் வினோதனை அண்ணா என்று தான் கூப்பிடுவாள்.அவனும் அவளை உடன் பிறந்த தங்கை போல தான் பாவித்து வந்தான்.

“என் அன்பு தங்காய்! கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு போறியா?ஏதாவது உளறிக்கிட்டு இருக்காத!போய் படிக்கிற வேலைய பாரு. எப்போ பார்த்தாலும் யாரையாவது கிண்டல் பண்ணிக்கிட்டு!”

அவள் அங்கிருந்து சென்றவுடன், அவன் உதட்டில் ஒரு சிறு சிரிப்பு தோன்றியது.

“ஆ...நான்.பார்த்துட்டேன்...நான் பார்த்துட்டேன்...”என்று நிலா ஓடி வந்தாள்.

“ஏய்! என்னடி பார்த்த?”

“நீங்க தனியா சிரிச்சிட்டு இருக்கிறத நான் பாரத்துட்டேனே!”என்று அவனிடம் வலிச்சம் காட்டினாள். அவன் அவளை அடிக்க வரவும் அந்த இடத்தை விட்டு ஓடினாள்.

மறு நாள் மாலை ரிசெப்ஷனுக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.மதிவதனி இளஞ்சிவப்பு ரோஜா வண்ண டிசைனர் புடவை கட்டியிருந்தாள். அதில் வெள்ளி சரிகை வேலைப்பாடு செய்து, சிறு சிறு சுவரோஸ்கி கற்கள் பதித்திருந்தாள். பார்ப்பதற்க்கு தேவதை போல ஜொலித்தாள்.

“வாவ்.அண்ணி.நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க!”என்று ஆர்ப்பரித்தாள் நிலா.

“ச்சு. நிலா சும்மா ஓட்டாதே டா”

“ஐயோ அண்ணி நான் நிஜமாதான் சொல்றேன்.ஒரு நிமிஷம் இருங்க.ஆ...அண்ணா ஒரு நிமிஷம் இங்க வா”என்று மனோரஞ்சனை அழைத்தாள்.

மதிவதனி பதறி போனாள்.”ஏய்! நிலா கொஞ்சம் சும்மா இரு”என்று கெஞ்சினாள்.

ஆனால் அதற்குள் மனோரஞ்சன் அங்கு வந்து விட்டான்.”என்ன நிலா?”என்று கேட்டான்.

“அண்ணி எப்படிணா இருக்காங்க?”

அப்பொழுது தான் அவன் மதிவதனியை சரியாகக் கவனித்தான்.ஒரு நிமிடம் எதுவும் கூறாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.மதிவதனி மூச்சை பிடித்துக் கொண்டு அவன் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனோரஞ்சன் ஒரு நிமிடம் மதிவதனியை உற்று பார்த்தான். பின் சொன்னான், ”ஃபங்ஷனுக்கு நேராச்சு. ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க”என்று கூறி விட்டு சென்று விட்டான்.

மதிவதினுக்கு உள்ளுக்குள் ஏதோ நொறுங்குவது போல இருந்தது.உடனே அது கோபமாக மாறியது,’ஆமா.இவர் பெரிய இவரு! சுவரு!.என்னை பத்தியெல்லாம் சொல்ல மாட்டாராக்கும். போகட்டும். யாருக்கு வேணும் இவரோட கருத்து.ச்சே’என்று நினைத்தாள்.

“விடுங்க அண்ணி.அண்ணாவை பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே? அவன் ஒரு சாமியார். உண்மையிலே நீங்க சூப்பரா இருக்கீங்க. அதுவும் இந்த டிசைன் ரொம்ப அழகா இருக்கு. நிஜமாவே நீங்க தான் பண்ணுனீங்களா?”

“ஆமான்டா....நான் தான் பண்ணினேன்”

“சான்சே இல்லை அண்ணி. செம்ம்ம்ம.....அண்ணி.....அண்ணி.....எனக்கும் இதே மாதிரி நீங்க ஒரு டிரஸ் டிசைன் பண்ணி தரனும் ஓகே வா?”

“கண்டிப்பா உனக்கு இல்லாததா?”

“சரி சரி வாங்க போகலாம். நேரமாயிடுச்சு”

ரிசெப்ஷன் நல்லபடியாக நடந்தது.அவர்கள் பிசினஸ் வட்டத்தை சேர்ந்த பலர் வந்திருந்தனர்.பார்ட்டி மிகவும் பிரமாண்டமாக நடந்தது.எல்லோரும் மனோரஞ்சன், மதிவதனி ஜோடி பொருத்தம் அழகாக இருப்பதாக கூறினர். மதிவதனி திரும்பி மனோரஞ்சனை பார்த்தாள்.அவன் ஷெர்வானியில் கம்பீரமாக இருந்தான்.

ஆனால் அவன் முகத்தில் சோகம் குடிக்கொண்டிருந்தது.ரிசெப்ஷனுக்கு தாத்தா வர மாட்டேனென்று சொல்லி விட்டார்.அதனால் தான் அவன் சோகமாக இருக்கிறானென்று மதிவதனி நினைத்தாள்.தன்னால் தான் மனோரஞ்சனுக்கு இந்த கஷ்டம் என்று வருத்தப்பட்டாள்.

அந்த சமயம், ஸ்டேஜின் பின்புறம் யாரோ இருவர் பேசிக் கொண்டிருப்பது மதிவதனி, மனோரஞ்சன் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது. யாராவது கேட்டு விடுவர் என்ற நினைப்புக் கூட இல்லாமல் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசியது ஒரு கூடை நெருப்பை அள்ளி அவள் தலையில் கொட்டியது போல இருந்தது. இதுவரை இருந்த சந்தோஷம் எல்லாம் காணாமல் போனது......

புலரும்
 
Last edited:
அவர் பெரிய இவரு... சுவரு ?????????. ....?
 
Top