Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-32(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாக ஒன்றுகூடி பொழுதைக் கழித்த ஜானகிக்கு தூத்துக்குடியில் பதினைந்து நாட்களுக்கான இன்ஸ்பெக்சன் பணி ஒதுக்கப்பட்டிருக்க பழக்கமில்லாத இடம் என்பதால் அவருக்குத் துணையாக ரகுவும் சென்றார். அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் கிளம்பியிருக்க அதற்காகவே காத்திருந்தவனாக குஷா லவாவுடன் தனியே பேசினான். அவர்கள் எதைப் பற்றிப் பேசுவார்கள் என்று யூகித்த அனு அமைதி காக்க திட்டமிட்டபடி மறுநாள் லவாவுக்கு சிறுவயதில் பரிசோதித்த மருத்துவரிடமே அப்பாய்ண்ட் மென்ட் வாங்கி இருந்தான் குஷா. லவா குஷா ஆகியோருடன் அனுவும் புறப்பட நினைக்கையில் அவளுக்கு உடல் சோர்வு அதிகமாக இருக்க அவர்களை மட்டும் அனுப்பியவளோ கலவையான உணர்வில் மிதந்தாள்.
அவளுக்கு நாட்கள் தள்ளிப்போய் இருக்க அதை லவாவிடம் சொல்லி சேர்ந்து பரிசோதித்துப் பார்க்கலாம் என்ற ஆவலில் தான் அன்றிரவு லவாவுக்காகக் காத்திருந்தாள் அனு. ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டான் லவா. அதன் பின் இங்கே வந்து பத்து நாட்கள் கடந்திருக்க அதைப் பற்றியே அவள் மறந்திருந்தாள். எவ்வளவு மகிழ்ச்சியாக இதை எதிர் நோக்கியவளுக்கு இப்போது இதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமே அடங்கியிருந்தது. அவளுடைய முகத்தை வைத்தே தன்னுடைய சந்தேகங்களை எல்லாம் கேட்க நினைத்த மொட்டு,
"அனு, நான் உன்கிட்ட ஒன்னு கேப்பேன். ஆனா நீ தப்பா எடுத்துக்கூடாது..." என்று இழுக்க,
என்ன என்பதைப்போல் அனு பார்க்க,
"உனக்கும் லவாவுக்கும்... அதாவது உங்களுக்குள்ள எல்லாம் ஓகே தானே? இல்ல ஏன் கேக்குறேன்னா நீங்க போன முறை வந்த மாதிரி ஃப்ரீயா இல்ல..." என்று இழுக்க அனுவுக்கு கண்ணில் நிறைந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்று அதில் தோற்க அதை யூகித்தவளாக அவளை ஆதரவாக அணைத்திருந்தாள் மொட்டு.
"என்ன ஆச்சு அனு?" என்றதும் தங்கள் வாழ்வில் நடத்த அனைத்தையும் சொன்னவள் அன்று ஏன் குஷா அவசரமாக ஹைதராபாத் வந்தான் என்பதையும் உரைத்தாள்.
"ஹே அனு, அப்போ அவங்க இப்ப ஹாஸ்பிடலுக்கா போயிருக்காங்க?" என்று இழுக்க ஆம் என்று தலையசைத்தாள்.
"இதுக்கா நீ டல்லா இருக்க? லவாவுக்கு ஒன்னும் இருக்காது. பயப்படாத அனு. அண்ட் நீ ரொம்ப டல் ஆகிட்ட. நான் கூட ஒர்க் டென்ஷனுனு நெனச்சேன்" என்றவளுக்கு,
"மொட்டு, எனக்கு ஒரு ப்ரெக்னென்சி கிட் வேணும்" என்றதும் இன்னும் அதிர்ந்த மொட்டு சமிக்ஞை செய்ய,
"இருக்கலாம். அதுக்குத் தான் கேக்குறேன். அண்ட் இன்னொன்னு உன்கிட்ட நான் கேக்கணும்..."
"என்ன சொல்லு?"
"நீயும் குஷாவும் உங்க லைஃப் ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா?"
"அது போயிட்டே இருக்கு..." என்று தயங்கியவளிடம்,
"சாரி எல்லாம் என்னால தானே?' என்று ஃபீல் செய்ய தொடங்கியவளுக்கு,
"அனு அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான்... அது எப்படிச் சொல்ல... நான் குஷாவை விரும்புறேன்னு நினைக்கிறேன். ஆனா அவன்கிட்ட இன்னும் கன்பஸ் பண்ணல"
அதைக் கேட்ட அனுவுக்கு மனம் நிறைந்தது.
"சரி வா நாம மெடிக்கல் ஸ்டார் வரை போயிட்டு வரலாம். எனக்கு ஒரே எக்ஸைட்டா இருக்கு. குட்டி பாப்பா வருமில்ல?" என்று ஒருகணம் குழந்தையாகவே மாறி துள்ளிக் குதித்தாள் மொட்டு. ஆனால் அதை நியாயமாக அனுபவிக்க வேண்டியவளோ மௌனம் காத்தாள். அதன் பின் பரிசோதனை செய்ததும் இரண்டு கோடுகள் காட்டப்பட அனுவுக்கும் சற்று ஆறுதலாக இருந்தது. இந்நேரம் பழைய அனுவாக இருந்திருந்தால் அவளுடைய செலிபிரேசனே வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் மனமெல்லாம் லவாவின் மீதே இருக்க அதை அனுபவிக்காமல் அமைதி காத்தாள்.
"சரி நான் முதல வீட்ல சொல்றேன். அப்பத்தா கேட்டா துள்ளி குதிக்கும்" என்று அலைபேசியை எடுத்த மொட்டுவிடமிருந்து அதைப் பறித்தவள்,
"இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். யாருக்கும் தெரிய வேணாம்"
"இல்ல அனு எல்லோரும் சந்தோசப்படுவாங்க"
"தெரிஞ்சா ஒன்னு அவங்க இங்க வருவாங்க இல்ல நம்மை அங்க கூப்பிடுவாங்க. இப்போதைக்கு லவா பிரச்சனை தான் முக்கியம். சோ நம்ம ரெண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிய வேணாம்" என்றவளை சமாளிக்க முடியாமல் தவித்தாள் மொட்டு.
அங்கே லவா ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்தவர் இன்னும் சில டெஸ்ட் எடுத்து நாளை வருமாறு சொல்ல அவருடைய பாசிட்டிவ் பேச்சே சகோதரர்கள் இருவருக்கும் நிம்மதி கொடுத்தது.
வந்ததும் லவா ஓய்வெடுக்க அனுவிடம் அனைத்தையும் சொன்ன குஷா,"ஒன்னும் பிரச்சனை இல்ல. முடிஞ்சா நெக்ஸ்ட் வீக் கூட ஆப்ரேசன் செஞ்சிடலாம்னு சொல்லிட்டார். பயப்படாம இரு" என்று தங்கள் அறைக்குள் நுழைய அவனுக்காகவே காத்திருந்த மொட்டு சண்டையிட ஆரமித்தாள்.
"அண்ணனும் தம்பியும் இப்படி அமுக்கனியாவே இருப்பிங்களா? ஏன் எங்க கிட்டலாம் இதைச் சொன்னா என்ன முத்து உதிர்ந்திடுமோ?" என்று தொடங்க நீண்ட நாட்கள் கழித்து காளி அவதாரம் எடுத்திருக்கும் தன் மனைவியை ரசித்தவன் இவள் எதைப் பற்றிச் சொல்ல வருகிறாள் என்று ஒருகணம் திடுக்கிட்டான். எங்கே இவன் காதல் விஷயத்தை அவள் அறிந்து கொண்டாளோ என்று அஞ்ச,
"டாக்டர் என்ன சொன்னாங்க?" என்றதும் தான் நார்மலானான் குஷா.
பிறகு அனைத்தையும் சொல்லி முடித்தவன்,"அநேகமா அடுத்த வாரமே ஆப்ரேசன் செஞ்சிடலாம். ஆனா கொஞ்சம் பயமா இருக்கு மொட்டு" என்று அவள் சொல்ல அவன் பயத்தை அவன் முகமே காட்டிக்கொடுத்தது.
"ஏய் ஏன் பயப்படுற? அதெல்லாம் அவனுக்கு ஒன்னும் ஆகாது" என்றதும்,
"தப்பெல்லாம் என் மேல தான் மொட்டு. என் கூட இருந்த வரை அவனுக்கு எல்லாமே நான் தான் பார்த்து பார்த்து செய்வேன். அவன் ஹைதராபாத் போனதும் நான் அவனைக் கண்டுக்காம விட்டுட்டேன். நான் செல்பிஷா நடந்துகிட்டேனோன்னு தோணுது மொட்டு. இந்த கொடி தடம் படத்துல சொல்ற ட்வின் சின்ரோம் உண்மை தான் மொட்டு. ஏன்னா நாங்க ஒன்னாவே வளர்ந்ததாலோ என்னவோ எங்களுக்குள்ள எப்பயும் ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கும். அதை அவன் ரொம்ப எதிர்பார்த்திருக்கான் மொட்டு. நான் பேசாம அவன் கூப்பிட்ட அப்போவே அவன் கூட வேலைக்கு ஜாயின் பண்ணியிருக்கணும். மனசுக்குள்ள நிறைய பீல் பண்ணிருக்கான்..." என்றவன் கலங்கி நிற்க முதன் முதலாக குஷாவை இவ்வளவு பலகீனமாகப் பார்த்த மொட்டுவுக்கு நெஞ்சை என்னவோ ஒன்று சுருக்கென்று தைத்தது.
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஆனா நான் பயந்தா அவன் உடைஞ்சிடுவான். அதான் எதுவும் நடக்காத மாதிரியே வெளிய காட்டிட்டு இருக்கேன். உனக்கு போன் பண்ணாம இருந்ததுக்கும் அதான் காரணம் மொட்டு. அவனுக்கு ஒன்னும் ஆகாதில்ல?" என்று கேட்டு அவளை இறுக்கி அணைத்தான். ஏனோ அவனுக்கு அந்த கதகதப்பு அவசியமென பட அவனை ஆறுதல் செய்யும் பொருட்டு,
"என்ன இது குஷா சின்ன பையன் மாதிரி அழுதுட்டு? அவனுக்கு ஒன்னும் ஆகாது" என்று ஆறுதல் செய்தவள் அவளையும் அறியாமல் முதல் முத்தத்தை அவனுக்குக் கடத்தியிருந்தாள். அதைக் கவனிக்கும் நிலையிலும் குஷா இல்லை.
அதன் பின் நாட்கள் வேகமாக நகர இன்னும் நான்கு நாட்களில் லவாவுக்கு ஆப்ரேசன் முடிவாகியிருக்க அனுவின் அலுவலகத்தில் இருந்து தொடர் அழைப்புகள் வர ஹைதராபாத் சென்று வீட்டையும் காலி செய்துவிட்டு அனுவின் வேலையையும் ராஜினாமா செய்ய முடிவெடுத்து குஷாவும் அனுவும் மட்டும் பயணிக்க அனுவின் கர்ப்பத்தைப் பற்றி மொட்டு குஷாவிடம் தெரிவிக்க அவளை பத்திரமாகவே அழைத்துச் சென்றான் குஷா.
பயணத்தின் நடுவே அவன் காட்டிய அக்கறையைக் கண்டவள்,"என்ன மொட்டு எல்லாத்தையும் சொல்லிட்டாளா?" என்று வினவ குஷா புன்னகைத்தான்.
"அனு, உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். பேசலாமா? உன் தரப்பு கோவம் நியாயம் தான். கொஞ்சம் அவன் தரப்பு நியாயத்தையும் யோசி. இப்போ நீ ஒரு ஆள் இல்ல. உங்க லைஃப்ல ஒரு பேபி வந்தா அல்மோஸ்ட் வாழ்க்கை கம்ப்ளீட் ஆகிடும். இப்ப போய்த் தேவையில்லாம இந்த சண்ட அவசியமா? கொஞ்சம் கன்சிடர் பண்ணு அனு. ஏன்னா லவா உன் ப்ரபோசல ஹோல்ட்ல போட்டதுக்கு முக்கிய காரணமே நான் தான். எனக்கும் மொட்டுக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்திந்தா இவ்வளவு குழப்பம் வந்தே இருக்காது. அது போக இப்போ இருக்குற நிலையில நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு மன வருத்தம் அடையறது ரெண்டு பேருக்கும் நல்லதில்ல"
"எனக்கும் புரியுது குஷா. ஆனா என்னை அவன் இடஞ்சலா எப்படி நினைக்கலாம்? அது எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு அவனுக்குத் தெரிய வேண்டாமா?"
"அது அப்படியில்ல அனு. நமக்குப் பிடிச்சவங்க எப்பயும் ஹேப்பியா இருக்கணும்னு தானே எல்லோரும் விரும்புவோம்? நாளைக்கு எனக்கே எதாவது ஆனாலும் நான் மொட்டுவோட எதிர்காலத்தைப் பத்தி யோசிப்பேன் இல்ல? அது கூட அவனுக்கு உன்மேல இருக்குற அபரிதமான அன்பின் வெளிப்பாடு தான் அனு. டாக்டர் கிட்டப் பேசிட்டேன். எல்லாம் நல்ல படியாவே முடியும். இந்நேரத்துல நீ அவன் கூட சப்போர்ட்டா இருந்தா இன்னும் பெட்டரா இருக்கும் அனு. நான் இதை நம்ம குடும்பத்தோட நல்லதுக்கு தான் சொல்றேன். உன் வயித்துல இருக்கும் குட்டி பாப்பா வரும் போது எல்லாமே ஹேப்பியா நடக்கும்" என்றவன் அவளுக்கு யோசிக்க நேரம் கொடுத்து ஹைதராபாத் சென்று வீட்டைக் காலி செய்யும் நடைமுறைகளைப் பற்றி யோசிக்க இரண்டு நாட்கள் தங்கி அனுவின் வேலை ராஜினாமா செய்வது பற்றியும் முடிவெடுத்தனர்.
இங்கே லவாவிடம் பேசிய மொட்டு அவன் மனம் நோகாமல் நடந்ததை விசாரிக்க இந்த பிரச்சனை அனைத்திற்கும் தானே மூலகாரணமாக இருந்ததைக் கேட்டு அதிர்ந்தவள்,
"ஐயோ லவா அது நான் அன்னைக்கு ஏதோ கோவத்துல பேசுனது. அதை மனசுல வெச்சா நீ இப்படி நடந்திருக்க?" என்றவள் குற்றயுணர்ச்சியில் தவிக்க,
"லவா அன்னைக்கு உன்கிட்டப் பேசுனதுக்குப் பிறகு தான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா யோசிக்க ஆரமிச்சேன். எப்போ எப்படி எதுக்கு அவனை எனக்குப் பிடிக்க ஆரமிச்சதுனு எனக்குத் தெரியில, ஆனா நான் குஷாவை அதிகம் தேட ஆரமிச்சுட்டேன். முன்னாடி எல்லாம் அவன் கிட்ட வந்தாலே நான் விலக ஆரமிப்பேன். இப்போ நானாவே அவனைத் தேடிப் போறேன். இதுவரை நான் பார்த்த பேசிய பழகிய குஷாவை வெச்சு அவனை எடை போட்டிருந்தேன். ஆனா அதெல்லாம் மாயைனு நான் இந்த நாலு மாசத்துல நல்லாவே புரிஞ்கிட்டேன். அவன் மட்டுமில்ல மாமா அத்த கூட என்னோட குட் புக்ல வந்துட்டாங்க."
"அப்போ அதுல நான் இல்லையா?" என்றவனுக்கு,
"நீ தான் எப்போவும் என் குட் புக்ல இருக்கவனாச்சே?"
"நிஜமாலும் சொல்றயா மொட்டு?"
"ஹே நீ எப்பயும் என் பெஸ்ட் ப்ரெண்ட் என் வெல் விஷ்ஷெர் தானே? எனக்கு உன்னை எப்பவும் பிடிக்கும் லவா. நீ என்னுடைய லக்கி சார்ம் லவா"
"அப்போ அவன்?"
"அவன் முன்னாடி என்னோட எதிரி பிறகு பழிவாங்க கல்யாணம் பண்ண தா நெனச்ச துரோகி. பின்னாடி எனக்கு சப்போர்ட்டா இருந்த ப்ரெண்ட் இப்போ என் மனசுக்குள்ள புகுந்த ராட்ஷசன் நாளைக்கு என் குழந்தைக்கு அப்பா" என்று சொல்ல அவளுக்கே வெட்கம் வர,
"அடிப்பாவி! எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டானே? அவனைக் கண்டாலே கோவத்துல கத்தி கூப்பாடு போட்டு சண்டை போட்டு அவனை ஊசியால் குத்தி அலற வெச்ச அந்த மொட்டுவா நீ? நம்ப முடியவில்லை இல்லை இல்லை" என்று ராகமாய் இழுத்தான் லவா.
ஏனோ அன்றைய உரையாடல் லவாவுக்குள் குறிப்பிடும் படியான மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அனுவும் குஷாவும் சென்னைக்குத் திரும்பி இருக்க அனு லவாவுடன் ஓரளவுக்கு மனம் விட்டுப் பேசினாள். அங்கே குஷாவோ மொட்டுவின் கண்களில் தெரிந்த காதலைக் கண்டும் கொண்டான். அடுத்த இரண்டு நாட்களில் ஆப்ரேசன் இருக்க இங்கே நால்வருக்கும் எந்த வேலையும் ஓடவில்லை. இரவில் தூக்கம் இல்லாமல் தவித்த குஷாவை ஆறுதலாக அணைத்திருந்தாள் மொட்டு. அதை வேண்டியே காத்திருந்தவன் தன் அணைப்பின் மூலம் தன் கவலைகளை அவளிடம் இறக்கியிருந்தான்.
லவாவோ உறங்காமல் விழித்திருக்க அவன் கரத்தை ஆறுதலாகப் பற்றியவள் அவனுடன் எப்போதும் தான் துணையாக வருவேன் என்பதைச் சொல்லாமல் உணர்த்தினாள்.
இவர்கள் பயந்ததைப்போல் அல்லாமல் வெற்றிகரமாகவே ஆப்ரேசன் முடிய நான்கு நாட்களில் வீடும் திரும்பி இருந்தனர். ஆனால் அனுவும் லவாவும் முன்பு போல் நெருக்கமாக வில்லை. அதே நேரம் அவளுடைய ப்ரெக்னென்சி பற்றி லவா அறியவும் இல்லை. ஒருவேளை வீட்டில் கரடி போல் தாங்கள் இருவரும் இருப்பது தான் காரணமோ என்று அறிந்த குஷா மறுநாள் மொட்டுவுக்கு கல்லூரி தொடங்க இருப்பதால் அவளுக்கு வேண்டியதை வாங்கும் சாக்கில் வெளியேறியிருக்க லவா அனுவிடம் மனம் விட்டுப் பேச நினைத்தான்.
"அனுமா, போதும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம். இப்போ எனக்கு எல்லாமே ஓகே ஆகிடுச்சு. ப்ளீஸ் அனு என்கிட்ட நீ பழையபடி பேசு. நீயும் எவ்வளவு டல் ஆகிட்ட பாரு. இனிமேல் எப்பயும் நான் உன்ன அழ வெக்கவே மாட்டேன்" என்னும் போது அவள் சோர்வாகி அமர,
"அனு உனக்கு என்ன ஆச்சு? வா டாக்டர் கிட்டயாச்சும் போலாம்" என்றவனுக்கு,
"அதெல்லாம் வேணாம். டாக்டர பார்த்தாச்சு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு இப்படித்தான் இருக்குமாம்"
"என்னது இப்படியே இருக்குமா? என்ன சொல்ற?"
"நான் டு மந்த்ஸ் கன்ஸீவா இருக்கேன் போதுமா? இதைத்தான் அன்னைக்கு உன்கிட்ட ஆசையா சொல்ல வந்தேன். ஆனா நீ..." என்று முடிக்கும் முன்னே அவளை நெருங்கியிருந்தவன் அவள் வலிகளுக்கெல்லாம் மருந்தாகி அவர்களின் ஊடல் முடிவுக்கு வந்திருக்க மாலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸாக ஜானகியும் ரகுநாத்தும் வீட்டிற்கு விஜயம் செய்திருந்தனர். அவர்களை எதிர்பார்க்காத அனுவும் லவாவும் அதிர்ச்சியடைய சிறிது நேரத்திலே மேஜையில் இருந்த லவாவின் ரிப்போர்ட் எல்லாவற்றையும் பார்த்த ரகுநாத் அதிர்ந்து பின் சினம் கொண்டு விசாரிக்க குஷாவின் மீது கடும் கோவமாக இருந்தார். பின்னே பெற்றவர்கள் அவர்கள் இருக்கையில் எதையும் தெரிவிக்காமல் லவாவின் ஆப்ரேசன் முடிந்திருக்க ரகுவும் ஜானகியும் பதறித்தான் போனார்கள். லவா தான் குஷாவின் மீது எந்தத் தவறும் இல்லை என்று விளக்கும் முன்,
"அன்னைக்கு அப்படித்தான் கல்யாணத்தை முடிச்சிட்டு நானும் மொட்டுவும் விரும்புறோம்னு சொல்றான். இன்னைக்கு ஆப்ரேசன் முடிஞ்சு அதும் என் இடத்துல அவன் சைன் பண்ணி இருக்கான். என்ன நெனச்சிட்டு இருக்கான் அவன்? பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்?" என்னும் வேளையில் குஷாவும் மொட்டுவும் உள்ளே வந்தார்கள்.
"என்னப்பா சர்ப்ரைஸ் விசிட்? சொல்லவே இல்லை?" என்று அவன் நுழைய அவன் பின்னால் வந்த மொட்டுவிற்கு எல்லாம் ஓரளவுக்குப் புரிய,
"என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? ஏன் நாங்க என்ன செத்தாப் போயிட்டோம்? உன்னை யாரு எங்களுக்குத் தெரியாம இதெல்லாம் செய்ய சொன்னது?" என்று குரல் உயர்த்த ஜானகி மற்றும் லவா குஷாவைத் தவிர மற்ற இருவரும் ரகுவின் கோவத்தில் அதிர்ந்தனர். ரகுநாத் பெரும்பாலும் கோவப்பட மாட்டார். ஆனால் கோவம் வந்தால் அதை அடக்க முடியாமல் கொட்டிவிடுவார். பிறகு அவரே சிறிது நேரத்தில் சமாதானமும் செய்வார். ஆனால் பெரும்பாலானோர் அவருடைய கோவத்தைக் கண்டதே இல்லை. அதும் தன்னுடைய குடும்பம் சார்ந்தது என்றால் அவ்வளவு எளிதில் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அப்படியிருக்க இன்று லவாவுக்கு ஆப்ரேசன் முடிந்ததைப் பற்றி அறிந்து பொங்கி விட்டார்.
"அப்பா உங்க கோவம் நியாயம் தான். ஆனா நான்..." என்று முடிக்கும் முன்னே,
"உன் சம்மந்தப்பட்ட முடிவுகளை நீயா எடுக்கலாம் ஆனா எப்படி நீ லவா சம்மந்தப்பட்ட முடிவை அதும் எங்களைக் கேக்காம எடுக்கலாம் சொல்லு?" என்று கேட்டதும் குஷாவுக்கு இதயமே சுக்கு நூறாக உடைந்தது. என்றைக்கும் அவன் லவாவை வேறொருவனாகப் பார்த்ததே இல்லை. அப்படிப் பார்க்கக் கூடாது என்று ரகுவும் ஜானகியும் தான் சிறுவயதில் இருந்து சொல்லிச்சொல்லி வளர்த்தினார்கள். இப்போது இவ்வாறு அவர் பிரித்துப் பேசவும் அவன் மனம் தத்தளிக்க,
"அப்பா நான் எப்படிப்பா லவாவுக்கு கெடுதல் நினைப்பேன்?" என்று பேச பின்னால் இருந்த ஜானு இப்போது ஏதும் பேச வேண்டாம் என்று சைகை செய்ய அவன் மௌனமானான்.
"என்னை டென்ஷன் பண்ணாத குஷா" என்று சொன்னதும்,
"ஒரு நிமிஷம் அமைதியா இருக்கீங்களா" என்று மொட்டு குரல் கொடுக்க அவளையும் ஜானு அமைதிப்படுத்த,
"முதல என்ன நடந்ததுனு விசாரிச்சிட்டு எது சரி எது தப்புனு தெரிஞ்சு பேசுங்க மாமா. அப்படியே குஷா தப்பே பண்ணி இருந்தாலும் நீங்க இப்படித்தான் நடுவீட்ல நிக்க வெச்சு எல்லார் முன்னாடியும் திட்டுவீங்களா? குஷா உங்க பையன் தான். அவனைக் கண்டிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா என் முன்னாடி இன்னும் சொல்லப்போனா நம்ம வீட்டாளுங்க முன்னாடி எப்படி ஒரு குற்றவாளி மாதிரி கேள்வி கேக்கலாம்? உங்களுக்கு என்ன தெரியும்? அவன் நிம்மதியா சிரிச்சு பேசி தூங்கி ஏன் சாப்பிட்டு ஒரு மாசம் ஆகுது தெரியுமா? எதையும் வெளியையும் காட்டிக்காம உள்ளேயும் வெக்க முடியாம இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா நீங்க எவ்வளவு வருத்தப்படுவீங்கன்னு எல்லாம் பார்த்து பார்த்து செய்யுறான். லவாவும் அனுவும் ஏன் இங்க வந்தாங்க? அவங்களுக்குள்ள..." என்றதும்,
"மொட்டு..." என்றவன் வேண்டாம் என்பதைப்போல் தலையசைக்க,
"பொறுமையா உக்காந்து யோசிங்க. ரிப்போர்ட் எல்லாம் பாருங்க. உங்க கோவம் பதட்டம் எல்லாம் நியாயமானது தான். ஆனா அதுக்கு முன்னாடி சூழ்நிலை என்னனு விசாரிங்க" என்றவள் குஷாவின் கரம் பற்றி தங்கள் அறைக்குள் அழைத்து வந்தாள்.
அவனோ தங்கள் கட்டிலில் அமர அவனை நெருங்கியவள் ஆறுதலாக அவனை தன் வயிற்றில் சாய்த்துக்கொள்ள அவளுடைய இந்த அருகாமை அவனுக்கு அவசியமென பட அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டவன்,
"குஷா அவர் ஏதோ டென்ஷன்ல் பேசுறார். அதனால உனக்கு லவா மேல அக்கறை இல்லைனு ஆகிடுமா? இதுக்கு தான் நான் அப்போவே மாமா அத்தை கிட்ட எல்லாம் சொல்லிடலாம்னு சொன்னேன். அது சரி நீ என்னை லவ் பண்ற விஷயத்தையே இதுவரை என்கிட்ட மூச்சு விடல. அண்ணனும் தம்பியும் இந்த விஷயத்துல ஒன்னு போலவே இருங்கடா. எப்படிடா எல்லாத்தையும் உங்களால ரகசியமா செய்ய முடியுது? நான் எல்லாம் சுத்த ஓட்டைவாய். பாரு இப்ப நானா உளறிட்டேன். அதென்ன திமிரழகி? ஏன் உனக்கெல்லாம் திமிரே இல்லையா? நான் முதன்முதலா திமிரா நடந்துக்க கத்துக்குடுத்ததே நீ தான். சின்ன வயசுல என் அப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் நீ காட்டுன ஆட்டிடியூட் பார்த்து தான் நான் ஆட்டிடியூட் காட்டவே கத்துக்கிட்டேன். அப்படிப்பார்த்தா உன்னை விட எனக்கு திமிர் கம்மி தான். அண்ட் நீ ஒன்னும் திமிரழகன் எல்லாம் இல்ல. ஏன்னா நீ அவ்வளவு அழகெல்லாம் இல்ல..." என்றதும் அவன் அதிர்ந்து நோக்கி இறுதியில் முறைக்க,
"அதெப்படி டா என்னை நீ லவ் பண்ண? ஓகே நான் கொஞ்சம் அழகு தான். ஆனாலும் எப்படி என்னை நீ லவ் பண்ண? எப்படி எப்படி லவா கூட நான் பழகும் போதெல்லாம் உனக்கு காதுல புகை வருமா? எங்க வா பார்க்கலாம். அப்பறோம் எப்படி என்கிட்ட சண்டைக்கு மல்லு கட்டுவ? ஒருவேளை லவா டைரியை படிக்காம இருந்திருந்தா, இல்லை அனு லவாவை லவ் பண்ணாம இருந்திருந்தா? அப்போ என்ன பண்ணியிருப்ப?"
"...."
"கேக்கறேன் தானே பதில் சொல்லு குஷா?"
"அன்னைக்கு அனு தாத்தா கிட்ட அழுத மாதிரி நான் லவா கிட்டயும் அனு கிட்டயும் அழுது பொலம்பியாச்சும் உன்னைக் கல்யாணம் செஞ்சு இருப்பேன்"
"ஓ அப்போ கூட என்கிட்டே வந்து லவ் சொல்லாம என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ண மாதிரி தான் செஞ்சு இருப்ப இல்ல?"
"ஆமாம். பின்ன யாராச்சும் சிங்கம்னு தெரிஞ்சும் அதோட குகைக்குள்ளே புகுந்து சவால் விட முடியுமா?"
"நான் சிங்கமா டா?"
"மொட்டு சாரி டி. நான் உன்னை கார்னெர் பண்ணி நீ என்னை லவ் பண்ணதா பொய்ச் சொல்லி ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் இல்ல? எந்த மொமெண்ட்ல நீ என் மனசுக்குள்ள வந்தன்னு தெரியில. ஆனா"
"ஐ லவ் யூ குஷா"
"நானே முதல்ல சொல்லியிருப்பேன் இல்ல?"
"அப்பறோம் எப்படிக் காலத்துக்கும் வெச்சு செய்யுறது?" என்றதும் குஷா திருதிருவென்று விழிக்க, அப்போது தங்கள் கதவோரத்தில் நிழலாட,
"ஏய் யாரோ வராங்க..." என்றவன்,
"கம் இன்" என்று சொல்லியும் யாரும் வராமல் போக,
"யாரும் இல்லை குஷா... இரு நான் பார்த்துட்டு வரேன்..." என்றவள் யாரும் இல்லை என்று கதவைச் சாற்றினாள்.
குஷாவையும் மொட்டுவையும் சமாதானப்படுத்த வந்த ஜானகி அனைத்தையும் கேட்டு அதிர்ந்து அனுவிடம் விசாரிக்க அவளும் அனைத்தையும் ஒப்பித்தாள். லவாவும் ரகுவிடம் எல்லாவற்றையும் விளக்கினான்.
அடுத்தது எபிலாக். நாளை வரும்...
 
Last edited:
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாக ஒன்றுகூடி பொழுதைக் கழித்த ஜானகிக்கு தூத்துக்குடியில் பதினைந்து நாட்களுக்கான இன்ஸ்பெக்சன் பணி ஒதுக்கப்பட்டிருக்க பழக்கமில்லாத இடம் என்பதால் அவருக்குத் துணையாக ரகுவும் சென்றார். அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் கிளம்பியிருக்க அதற்காகவே காத்திருந்தவனாக குஷா லவாவுடன் தனியே பேசினான். அவர்கள் எதைப் பற்றிப் பேசுவார்கள் என்று யூகித்த அனு அமைதி காக்கா திட்டமிட்டபடி மறுநாள் லவாவுக்கு சிறுவயதில் பரிசோதித்த மருத்துவரிடமே அப்பாய்ண்ட் மென்ட் வாங்கி இருந்தான் குஷா. லவா குஷா ஆகியோருடன் அனுவும் புறப்பட நினைக்கையில் அவளுக்கு உடல் சோர்வு அதிகமாக இருக்க அவர்களை மட்டும் அனுப்பியவளோ கலவையான உணர்வில் மிதந்தாள்.
அவளுக்கு நாட்கள் தள்ளிப்போய் இருக்க அதை லவாவிடம் சொல்லி சேர்ந்து பரிசோதித்துப் பார்க்கலாம் என்ற ஆவலில் தான் அன்றிரவு லவாவுக்காகக் காத்திருந்தாள் அனு. ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டான் லவா. அதன் பின் இங்கே வந்து பத்து நாட்கள் கடந்திருக்க அதைப் பற்றியே அவள் மறந்திருந்தாள். எவ்வளவு மகிழ்ச்சியாக இதை எதிர் நோக்கியவளுக்கு இப்போது இதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமே அடங்கியிருந்தது. அவளுடைய முகத்தை வைத்தே தன்னுடைய சந்தேகங்களை எல்லாம் கேட்க நினைத்த மொட்டு,
"அனு, நான் உன்கிட்ட ஒன்னு கேப்பேன். ஆனா நீ தப்பா எடுத்துக்கூடாது..." என்று இழுக்க,
என்ன என்பதைப்போல் அனு பார்க்க,
"உனக்கும் லவாவுக்கும்... அதாவது உங்களுக்குள்ள எல்லாம் ஓகே தானே? இல்ல ஏன் கேக்குறேன்னா நீங்க போன முறை வந்த மாதிரி ஃப்ரீயா இல்ல..." என்று இழுக்க அனுவுக்கு கண்ணில் நிறைந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்று அதில் தோற்க அதை யூகித்தவளாக அவளை ஆதரவாக அணைத்திருந்தாள் மொட்டு.
"என்ன ஆச்சு அனு?" என்றதும் தங்கள் வாழ்வில் நடத்த அனைத்தையும் சொன்னவள் அன்று ஏன் குஷா அவசரமாக ஹைதராபாத் வந்தான் என்பதையும் உரைத்தாள்.
"ஹே அனு, அப்போ அவங்க இப்ப ஹாஸ்பிடலுக்கா போயிருக்காங்க?" என்று இழுக்க ஆம் என்று தலையசைத்தாள்.
"இதுக்கா நீ டல்லா இருக்க? லவாவுக்கு ஒன்னும் இருக்காது. பயப்படாத அனு. அண்ட் நீ ரொம்ப டல் ஆகிட்ட. நான் கூட ஒர்க் டென்ஷனுனு நெனச்சேன்" என்றவளுக்கு,
"மொட்டு, எனக்கு ஒரு ப்ரெக்னென்சி கிட் வேணும்" என்றதும் இன்னும் அதிர்ந்த மொட்டு சமிக்ஞை செய்ய,
"இருக்கலாம். அதுக்குத் தான் கேக்குறேன். அண்ட் இன்னொன்னு உன்கிட்ட நான் கேக்கணும்..."
"என்ன சொல்லு?"
"நீயும் குஷாவும் உங்க லைஃப் ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா?"
"அது போயிட்டே இருக்கு..." என்று தயங்கியவளிடம்,
"சாரி எல்லாம் என்னால தானே?' என்று ஃபீல் செய்ய தொடங்கியவளுக்கு,
"அனு அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான்... அது எப்படிச் சொல்ல... நான் குஷாவை விரும்புறேன்னு நினைக்கிறேன். ஆனா அவன்கிட்ட இன்னும் கன்பஸ் பண்ணல"
அதைக் கேட்ட அனுவுக்கு மனம் நிறைந்தது.
"சரி வா நாம மெடிக்கல் ஸ்டார் வரை போயிட்டு வரலாம். எனக்கு ஒரே எக்ஸைட்டா இருக்கு. குட்டி பாப்பா வருமில்ல?" என்று ஒருகணம் குழந்தையாகவே மாறி துள்ளிக் குதித்தாள் மொட்டு. ஆனால் அதை நியாயமாக அனுபவிக்க வேண்டியவளோ மௌனம் காத்தாள். அதன் பின் பரிசோதனை செய்ததும் இரண்டு கோடுகள் காட்டப்பட அனுவுக்கும் சற்று ஆறுதலாக இருந்தது. இந்நேரம் பழைய அனுவாக இருந்திருந்தால் அவளுடைய செலிபிரேசனே வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் மனமெல்லாம் லவாவின் மீதே இருக்க அதை அனுபவிக்காமல் அமைதி காத்தாள்.
"சரி நான் முதல வீட்ல சொல்றேன். அப்பத்தா கேட்டா துள்ளி குதிக்கும்" என்று அலைபேசியை எடுத்த மொட்டுவிடமிருந்து அதைப் பறித்தவள்,
"இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். யாருக்கும் தெரிய வேணாம்"
"இல்ல அனு எல்லோரும் சந்தோசப்படுவாங்க"
"தெரிஞ்சா ஒன்னு அவங்க இங்க வருவாங்க இல்ல நம்மை அங்க கூப்பிடுவாங்க. இப்போதைக்கு லவா பிரச்சனை தான் முக்கியம். சோ நம்ம ரெண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிய வேணாம்" என்றவளை சமாளிக்க முடியாமல் தவித்தாள் மொட்டு.
அங்கே லவா ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்தவர் இன்னும் சில டெஸ்ட் எடுத்து நாளை வருமாறு சொல்ல அவருடைய பாசிட்டிவ் பேச்சே சகோதரர்கள் இருவருக்கும் நிம்மதி கொடுத்தது.
வந்ததும் லவா ஓய்வெடுக்க அனுவிடம் அனைத்தையும் சொன்ன குஷா,"ஒன்னும் பிரச்சனை இல்ல. முடிஞ்சா நெக்ஸ்ட் வீக் கூட ஆப்ரேசன் செஞ்சிடலாம்னு சொல்லிட்டார். பயப்படாம இரு" என்று தங்கள் அறைக்குள் நுழைய அவனுக்காகவே காத்திருந்த மொட்டு சண்டையிட ஆரமித்தாள்.
"அண்ணனும் தம்பியும் இப்படி அமுக்கனியாவே இருப்பிங்களா? ஏன் எங்க கிட்டலாம் இதைச் சொன்னா என்ன முத்து உதிர்ந்திடுமோ?" என்று தொடங்க நீண்ட நாட்கள் கழித்து காளி அவதாரம் எடுத்திருக்கும் தன் மனைவியை ரசித்தவன் இவள் எதைப் பற்றிச் சொல்ல வருகிறாள் என்று ஒருகணம் திடுக்கிட்டான். எங்கே இவன் காதல் விஷயத்தை அவள் அறிந்து கொண்டாளோ என்று அஞ்ச,
"டாக்டர் என்ன சொன்னாங்க?" என்றதும் தான் நார்மலானான் குஷா.
பிறகு அனைத்தையும் சொல்லி முடித்தவன்,"அநேகமா அடுத்த வாரமே ஆப்ரேசன் செஞ்சிடலாம். ஆனா கொஞ்சம் பயமா இருக்கு மொட்டு" என்று அவள் சொல்ல அவன் பயத்தை அவன் முகமே காட்டிக்கொடுத்தது.
"ஏய் ஏன் பயப்படுற? அதெல்லாம் அவனுக்கு ஒன்னும் ஆகாது" என்றதும்,
"தப்பெல்லாம் என் மேல தான் மொட்டு. என் கூட இருந்த வரை அவனுக்கு எல்லாமே நான் தான் பார்த்து பார்த்து செய்வேன். அவன் ஹைதராபாத் போனதும் நான் அவனைக் கண்டுக்காம விட்டுட்டேன். நான் செல்பிஷா நடந்துகிட்டேனோன்னு தோணுது மொட்டு. இந்த கொடி தடம் படத்துல சொல்ற ட்வின் சின்ரோம் உண்மை தான் மொட்டு. ஏன்னா நாங்க ஒன்னாவே வளர்ந்ததாலோ என்னவோ எங்களுக்குள்ள எப்பயும் ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கும். அதை அவன் ரொம்ப எதிர்பார்த்திருக்கான் மொட்டு. நான் பேசாம அவன் கூப்பிட்ட அப்போவே அவன் கூட வேலைக்கு ஜாயின் பண்ணியிருக்கணும். மனசுக்குள்ள நிறைய பீல் பண்ணிருக்கான்..." என்றவன் கலங்கி நிற்க முதன் முதலாக குஷாவை இவ்வளவு பலகீனமாகப் பார்த்த மொட்டுவுக்கு நெஞ்சை என்னவோ ஒன்று சுருக்கென்று தைத்தது.
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஆனா நான் பயந்தா அவன் உடைஞ்சிடுவான். அதான் எதுவும் நடக்காத மாதிரியே வெளிய காட்டிட்டு இருக்கேன். உனக்கு போன் பண்ணாம இருந்ததுக்கும் அதான் காரணம் மொட்டு. அவனுக்கு ஒன்னும் ஆகாதில்ல?" என்று கேட்டு அவளை இறுக்கி அணைத்தான். ஏனோ அவனுக்கு அந்த கதகதப்பு அவசியமென பட அவனை ஆறுதல் செய்யும் பொருட்டு,
"என்ன இது குஷா சின்ன பையன் மாதிரி அழுதுட்டு? அவனுக்கு ஒன்னும் ஆகாது" என்று ஆறுதல் செய்தவள் அவளையும் அறியாமல் முதல் முத்தத்தை அவனுக்குக் கடத்தியிருந்தாள். அதைக் கவனிக்கும் நிலையிலும் குஷா இல்லை.
அதன் பின் நாட்கள் வேகமாக நகர இன்னும் நான்கு நாட்களில் லவாவுக்கு ஆப்ரேசன் முடிவாகியிருக்க அனுவின் அலுவலகத்தில் இருந்து தொடர் அழைப்புகள் வர ஹைதராபாத் சென்று வீட்டையும் காலி செய்துவிட்டு அனுவின் வேலையையும் ராஜினாமா செய்ய முடிவெடுத்து குஷாவும் அனுவும் மட்டும் பயணிக்க அனுவின் கர்ப்பத்தைப் பற்றி மொட்டு குஷாவிடம் தெரிவிக்க அவளை பத்திரமாகவே அழைத்துச் சென்றான் குஷா.
பயணத்தின் நடுவே அவன் காட்டிய அக்கறையைக் கண்டவள்,"என்ன மொட்டு எல்லாத்தையும் சொல்லிட்டாளா?" என்று வினவ குஷா புன்னகைத்தான்.
"அனு, உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். பேசலாமா? உன் தரப்பு கோவம் நியாயம் தான். கொஞ்சம் அவன் தரப்பு நியாயத்தையும் யோசி. இப்போ நீ ஒரு ஆள் இல்ல. உங்க லைஃப்ல ஒரு பேபி வந்தா அல்மோஸ்ட் வாழ்க்கை கம்ப்ளீட் ஆகிடும். இப்ப போய்த் தேவையில்லாம இந்த சண்ட அவசியமா? கொஞ்சம் கன்சிடர் பண்ணு அனு. ஏன்னா லவா உன் ப்ரபோசல ஹோல்ட்ல போட்டதுக்கு முக்கிய காரணமே நான் தான். எனக்கும் மொட்டுக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்திந்தா இவ்வளவு குழப்பம் வந்தே இருக்காது. அது போக இப்போ இருக்குற நிலையில நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு மன வருத்தம் அடையறது ரெண்டு பேருக்கும் நல்லதில்ல"
"எனக்கும் புரியுது குஷா. ஆனா என்னை அவன் இடஞ்சலா எப்படி நினைக்கலாம்? அது எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு அவனுக்குத் தெரிய வேண்டாமா?"
"அது அப்படியில்ல அனு. நமக்குப் பிடிச்சவங்க எப்பயும் ஹேப்பியா இருக்கணும்னு தானே எல்லோரும் விரும்புவோம்? நாளைக்கு எனக்கே எதாவது ஆனாலும் நான் மொட்டுவோட எதிர்காலத்தைப் பத்தி யோசிப்பேன் இல்ல? அது கூட அவனுக்கு உன்மேல இருக்குற அபரிதமான அன்பின் வெளிப்பாடு தான் அனு. டாக்டர் கிட்டப் பேசிட்டேன். எல்லாம் நல்ல படியாவே முடியும். இந்நேரத்துல நீ அவன் கூட சப்போர்ட்டா இருந்தா இன்னும் பெட்டரா இருக்கும் அனு. நான் இதை நம்ம குடும்பத்தோட நல்லதுக்கு தான் சொல்றேன். உன் வயித்துல இருக்கும் குட்டி பாப்பா வரும் போது எல்லாமே ஹேப்பியா நடக்கும்" என்றவன் அவளுக்கு யோசிக்க நேரம் கொடுத்து ஹைதராபாத் சென்று வீட்டைக் காலி செய்யும் நடைமுறைகளைப் பற்றி யோசிக்க இரண்டு நாட்கள் தங்கி அனுவின் வேலை ராஜினாமா செய்வது பற்றியும் முடிவெடுத்தனர்.
இங்கே லவாவிடம் பேசிய மொட்டு அவன் மனம் நோகாமல் நடந்ததை விசாரிக்க இந்த பிரச்சனை அனைத்திற்கும் தானே மூலகாரணமாக இருந்ததைக் கேட்டு அதிர்ந்தவள்,
"ஐயோ லவா அது நான் அன்னைக்கு ஏதோ கோவத்துல பேசுனது. அதை மனசுல வெச்சா நீ இப்படி நடந்திருக்க?" என்றவள் குற்றயுணர்ச்சியில் தவிக்க,
"லவா அன்னைக்கு உன்கிட்டப் பேசுனதுக்குப் பிறகு தான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா யோசிக்க ஆரமிச்சேன். எப்போ எப்படி எதுக்கு அவனை எனக்குப் பிடிக்க ஆரமிச்சதுனு எனக்குத் தெரியில, ஆனா நான் குஷாவை அதிகம் தேட ஆரமிச்சுட்டேன். முன்னாடி எல்லாம் அவன் கிட்ட வந்தாலே நான் விலக ஆரமிப்பேன். இப்போ நானாவே அவனைத் தேடிப் போறேன். இதுவரை நான் பார்த்த பேசிய பழகிய குஷாவை வெச்சு அவனை எடை போட்டிருந்தேன். ஆனா அதெல்லாம் மாயைனு நான் இந்த நாலு மாசத்துல நல்லாவே புரிஞ்கிட்டேன். அவன் மட்டுமில்ல மாமா அத்த கூட என்னோட குட் புக்ல வந்துட்டாங்க."
"அப்போ அதுல நான் இல்லையா?" என்றவனுக்கு,
"நீ தான் எப்போவும் என் குட் புக்ல இருக்கவனாச்சே?"
"நிஜமாலும் சொல்றயா மொட்டு?"
"ஹே நீ எப்பயும் என் பெஸ்ட் ப்ரெண்ட் என் வெல் விஷ்ஷெர் தானே? எனக்கு உன்னை எப்பவும் பிடிக்கும் லவா. நீ என்னுடைய லக்கி சார்ம் லவா"
"அப்போ அவன்?"
"அவன் முன்னாடி என்னோட எதிரி பிறகு பழிவாங்க கல்யாணம் பண்ண தா நெனச்ச துரோகி. பின்னாடி எனக்கு சப்போர்ட்டா இருந்த ப்ரெண்ட் இப்போ என் மனசுக்குள்ள புகுந்த ராட்ஷசன் நாளைக்கு என் குழந்தைக்கு அப்பா" என்று சொல்ல அவளுக்கே வெட்கம் வர,
"அடிப்பாவி! எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டானே? அவனைக் கண்டாலே கோவத்துல கத்தி கூப்பாடு போட்டு சண்டை போட்டு அவனை ஊசியால் குத்தி அலற வெச்ச அந்த மொட்டுவா நீ? நம்ப முடியவில்லை இல்லை இல்லை" என்று ராகமாய் இழுத்தான் லவா.
ஏனோ அன்றைய உரையாடல் லவாவுக்குள் குறிப்பிடும் படியான மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அனுவும் குஷாவும் சென்னைக்குத் திரும்பி இருக்க அனு லவாவுடன் ஓரளவுக்கு மனம் விட்டுப் பேசினாள். அங்கே குஷாவோ மொட்டுவின் கண்களில் தெரிந்த காதலைக் கண்டும் கொண்டான். அடுத்த இரண்டு நாட்களில் ஆப்ரேசன் இருக்க இங்கே நால்வருக்கும் எந்த வேலையும் ஓடவில்லை. இரவில் தூக்கம் இல்லாமல் தவித்த குஷாவை ஆறுதலாக அணைத்திருந்தாள் மொட்டு. அதை வேண்டியே காத்திருந்தவன் தன் அணைப்பின் மூலம் தன் கவலைகளை அவளிடம் இறக்கியிருந்தான்.
லவாவோ உறங்காமல் விழித்திருக்க அவன் கரத்தை ஆறுதலாகப் பற்றியவள் அவனுடன் எப்போதும் தான் துணையாக வருவேன் என்பதைச் சொல்லாமல் உணர்த்தினாள்.
இவர்கள் பயந்ததைப்போல் அல்லாமல் வெற்றிகரமாகவே ஆப்ரேசன் முடிய நான்கு நாட்களில் வீடும் திரும்பி இருந்தனர். ஆனால் அனுவும் லவாவும் முன்பு போல் நெருக்கமாக வில்லை. அதே நேரம் அவளுடைய ப்ரெக்னென்சி பற்றி லவா அறியவும் இல்லை. ஒருவேளை வீட்டில் கரடி போல் தாங்கள் இருவரும் இருப்பது தான் காரணமோ என்று அறிந்த குஷா மறுநாள் மொட்டுவுக்கு கல்லூரி தொடங்க இருப்பதால் அவளுக்கு வேண்டியதை வாங்கும் சாக்கில் வெளியேறியிருக்க லவா அனுவிடம் மனம் விட்டுப் பேச நினைத்தான்.
"அனுமா, போதும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம். இப்போ எனக்கு எல்லாமே ஓகே ஆகிடுச்சு. ப்ளீஸ் அனு என்கிட்ட நீ பழையபடி பேசு. நீயும் எவ்வளவு டல் ஆகிட்ட பாரு. இனிமேல் எப்பயும் நான் உன்ன அழ வெக்கவே மாட்டேன்" என்னும் போது அவள் சோர்வாகி அமர,
"அனு உனக்கு என்ன ஆச்சு? வா டாக்டர் கிட்டயாச்சும் போலாம்" என்றவனுக்கு,
"அதெல்லாம் வேணாம். டாக்டர பார்த்தாச்சு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு இப்படித்தான் இருக்குமாம்"
"என்னது இப்படியே இருக்குமா? என்ன சொல்ற?"
"நான் டு மந்த்ஸ் கன்ஸீவா இருக்கேன் போதுமா? இதைத்தான் அன்னைக்கு உன்கிட்ட ஆசையா சொல்ல வந்தேன். ஆனா நீ..." என்று முடிக்கும் முன்னே அவளை நெருங்கியிருந்தவன் அவள் வலிகளுக்கெல்லாம் மருந்தாகி அவர்களின் ஊடல் முடிவுக்கு வந்திருக்க மாலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸாக ஜானகியும் ரகுநாத்தும் வீட்டிற்கு விஜயம் செய்திருந்தனர். அவர்களை எதிர்பார்க்காத அனுவும் லவாவும் அதிர்ச்சியடைய சிறிது நேரத்திலே மேஜையில் இருந்த லவாவின் ரிப்போர்ட் எல்லாவற்றையும் பார்த்த ரகுநாத் அதிர்ந்து பின் சினம் கொண்டு விசாரிக்க குஷாவின் மீது கடும் கோவமாக இருந்தார். பின்னே பெற்றவர்கள் அவர்கள் இருக்கையில் எதையும் தெரிவிக்காமல் லவாவின் ஆப்ரேசன் முடிந்திருக்க ரகுவும் ஜானகியும் பதறித்தான் போனார்கள். லவா தான் குஷாவின் மீது எந்தத் தவறும் இல்லை என்று விளக்கும் முன்,
"அன்னைக்கு அப்படித்தான் கல்யாணத்தை முடிச்சிட்டு நானும் மொட்டுவும் விரும்புறோம்னு சொல்றான். இன்னைக்கு ஆப்ரேசன் முடிஞ்சு அதும் என் இடத்துல அவன் சைன் பண்ணி இருக்கான். என்ன நெனச்சிட்டு இருக்கான் அவன்? பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்?" என்னும் வேளையில் குஷாவும் மொட்டுவும் உள்ளே வந்தார்கள்.
"என்னப்பா சர்ப்ரைஸ் விசிட்? சொல்லவே இல்லை?" என்று அவன் நுழைய அவன் பின்னால் வந்த மொட்டுவிற்கு எல்லாம் ஓரளவுக்குப் புரிய,
"என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? ஏன் நாங்க என்ன செத்தாப் போயிட்டோம்? உன்னை யாரு எங்களுக்குத் தெரியாம இதெல்லாம் செய்ய சொன்னது?" என்று குரல் உயர்த்த ஜானகி மற்றும் லவா குஷாவைத் தவிர மற்ற இருவரும் ரகுவின் கோவத்தில் அதிர்ந்தனர். ரகுநாத் பெரும்பாலும் கோவப்பட மாட்டார். ஆனால் கோவம் வந்தால் அதை அடக்க முடியாமல் கொட்டிவிடுவார். பிறகு அவரே சிறிது நேரத்தில் சமாதானமும் செய்வார். ஆனால் பெரும்பாலானோர் அவருடைய கோவத்தைக் கண்டதே இல்லை. அதும் தன்னுடைய குடும்பம் சார்ந்தது என்றால் அவ்வளவு எளிதில் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அப்படியிருக்க இன்று லவாவுக்கு ஆப்ரேசன் முடிந்ததைப் பற்றி அறிந்து பொங்கி விட்டார்.
"அப்பா உங்க கோவம் நியாயம் தான். ஆனா நான்..." என்று முடிக்கும் முன்னே,
"உன் சம்மந்தப்பட்ட முடிவுகளை நீயா எடுக்கலாம் ஆனா எப்படி நீ லவா சம்மந்தப்பட்ட முடிவை அதும் எங்களைக் கேக்காம எடுக்கலாம் சொல்லு?" என்று கேட்டதும் குஷாவுக்கு இதயமே சுக்கு நூறாக உடைந்தது. என்றைக்கும் அவன் லவாவை வேறொருவனாகப் பார்த்ததே இல்லை. அப்படிப் பார்க்கக் கூடாது என்று ரகுவும் ஜானகியும் தான் சிறுவயதில் இருந்து சொல்லிச்சொல்லி வளர்த்தினார்கள். இப்போது இவ்வாறு அவர் பிரித்துப் பேசவும் அவன் மனம் தத்தளிக்க,
"அப்பா நான் எப்படிப்பா லவாவுக்கு கெடுதல் நினைப்பேன்?" என்று பேச பின்னால் இருந்த ஜானு இப்போது ஏதும் பேச வேண்டாம் என்று சைகை செய்ய அவன் மௌனமானான்.
"என்னை டென்ஷன் பண்ணாத குஷா" என்று சொன்னதும்,
"ஒரு நிமிஷம் அமைதியா இருக்கீங்களா" என்று மொட்டு குரல் கொடுக்க அவளையும் ஜானு அமைதிப்படுத்த,
"முதல என்ன நடந்ததுனு விசாரிச்சிட்டு எது சரி எது தப்புனு தெரிஞ்சு பேசுங்க மாமா. அப்படியே குஷா தப்பே பண்ணி இருந்தாலும் நீங்க இப்படித்தான் நடுவீட்ல நிக்க வெச்சு எல்லார் முன்னாடியும் திட்டுவீங்களா? குஷா உங்க பையன் தான். அவனைக் கண்டிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா என் முன்னாடி இன்னும் சொல்லப்போனா நம்ம வீட்டாளுங்க முன்னாடி எப்படி ஒரு குற்றவாளி மாதிரி கேள்வி கேக்கலாம்? உங்களுக்கு என்ன தெரியும்? அவன் நிம்மதியா சிரிச்சு பேசி தூங்கி ஏன் சாப்பிட்டு ஒரு மாசம் ஆகுது தெரியுமா? எதையும் வெளியையும் காட்டிக்காம உள்ளேயும் வெக்க முடியாம இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா நீங்க எவ்வளவு வருத்தப்படுவீங்கன்னு எல்லாம் பார்த்து பார்த்து செய்யுறான். லவாவும் அனுவும் ஏன் இங்க வந்தாங்க? அவங்களுக்குள்ள..." என்றதும்,
"மொட்டு..." என்றவன் வேண்டாம் என்பதைப்போல் தலையசைக்க,
"பொறுமையா உக்காந்து யோசிங்க. ரிப்போர்ட் எல்லாம் பாருங்க. உங்க கோவம் பதட்டம் எல்லாம் நியாயமானது தான். ஆனா அதுக்கு முன்னாடி சூழ்நிலை என்னனு விசாரிங்க" என்றவள் குஷாவின் கரம் பற்றி தங்கள் அறைக்குள் அழைத்து வந்தாள்.
அவனோ தங்கள் கட்டிலில் அமர அவனை நெருங்கியவள் ஆறுதலாக அவனை தன் வயிற்றில் சாய்த்துக்கொள்ள அவளுடைய இந்த அருகாமை அவனுக்கு அவசியமென பட அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டவன்,
"குஷா அவர் ஏதோ டென்ஷன்ல் பேசுறார். அதனால உனக்கு லவா மேல அக்கறை இல்லைனு ஆகிடுமா? இதுக்கு தான் நான் அப்போவே மாமா அத்தை கிட்ட எல்லாம் சொல்லிடலாம்னு சொன்னேன். அது சரி நீ என்னை லவ் பண்ற விஷயத்தையே இதுவரை என்கிட்ட மூச்சு விடல. அண்ணனும் தம்பியும் இந்த விஷயத்துல ஒன்னு போலவே இருங்கடா. எப்படிடா எல்லாத்தையும் உங்களால ரகசியமா செய்ய முடியுது? நான் எல்லாம் சுத்த ஓட்டைவாய். பாரு இப்ப நானா உளறிட்டேன். அதென்ன திமிரழகி? ஏன் உனக்கெல்லாம் திமிரே இல்லையா? நான் முதன்முதலா திமிரா நடந்துக்க கத்துக்குடுத்ததே நீ தான். சின்ன வயசுல என் அப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் நீ காட்டுன ஆட்டிடியூட் பார்த்து தான் ன் ஆட்டிடியூட் காட்டவே கத்துக்கிட்டேன். அப்படிப்பார்த்தா உன்னை விட எனக்கு திமிர் கம்மி தான். அண்ட் நீ ஒன்னும் திமிழகன் எல்லாம் இல்ல. ஏன்னா நீ அவ்வளவு அழகெல்லாம் இல்ல..." என்றதும் அவன் அதிர்ந்து நோக்கி இறுதியில் முறைக்க,
"அதெப்படி டா என்னை நீ லவ் பண்ண? ஓகே நான் கொஞ்சம் அழகு தான். ஆனாலும் எப்படி என்னை நீ லவ் பண்ண? எப்படி எப்படி லவா கூட நான் பழகும் போதெல்லாம் உனக்கு காதுல புகை வருமா? எங்க வா பார்க்கலாம். அப்பறோம் எப்படி என்கிட்ட சண்டைக்கு மல்லு கட்டுவ? ஒருவேளை லவா டைரியை படிக்காம இருந்திருந்தா, இல்லை அனு லவாவை லவ் பண்ணாம இருந்திருந்தா? அப்போ என்ன பண்ணியிருப்ப?"
"...."
"கேக்கறேன் தானே பதில் சொல்லு குஷா?"
"அன்னைக்கு அனு தாத்தா கிட்ட அழுத மாதிரி நான் லவா கிட்டயும் அனு கிட்டயும் அழுது பொலம்பியாச்சும் உன்னைக் கல்யாணம் செஞ்சு இருப்பேன்"
"ஓ அப்போ கூட என்கிட்டே வந்து லவ் சொல்லாம என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ண மாதிரி தான் செஞ்சு இருப்ப இல்ல?"
"ஆமாம். பின்ன யாராச்சும் சிங்கம்னு தெரிஞ்சும் அதோட குகைக்குள்ளே புகுந்து சவால் விட முடியுமா?"
"நான் சிங்கமா டா?"
"மொட்டு சாரி டி. நான் உன்னை கார்னெர் பண்ணி நீ என்னை லவ் பண்ணதா பொய்ச் சொல்லி ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் இல்ல? எந்த மொமெண்ட்ல நீ என் மனசுக்குள்ள வந்தன்னு தெரியில. ஆனா"
"ஐ லவ் யூ குஷா"
"நானே முதல்ல சொல்லியிருப்பேன் இல்ல?"
"அப்பறோம் எப்படிக் காலத்துக்கும் வெச்சு செய்யுறது?" என்றதும் குஷா திருதிருவென்று விழிக்க, அப்போது தங்கள் கதவோரத்தில் நிழலாட,
"ஏய் யாரோ வராங்க..." என்றவன்,
"கம் இன்" என்று சொல்லியும் யாரும் வராமல் போக,
"யாரும் இல்லை குஷா... இரு நான் பார்த்துட்டு வரேன்..." என்றவள் யாரும் இல்லை என்று கதவைச் சாற்றினாள்.
குஷாவையும் மொட்டுவையும் சமாதானப்படுத்த வந்த ஜானகி அனைத்தையும் கேட்டு அதிர்ந்து அனுவிடம் விசாரிக்க அவளும் அனைத்தையும் ஒப்பித்தாள். லவாவும் ரகுவிடம் எல்லாவற்றையும் விளக்கினான்.
அடுத்தது எபிலாக். நாளை வரும்...
Vaanga vaanga waiting
 
வாவ் சூப்பர் சூப்பர்???? எபி செம்ம. எல்லாரும் ராசி ஆகியாச்சு ஹேப்பி?? ஹேப்பி. குட்டி லவா ஆர் குட்டி அனு ???? ஆனால் மொமன்ட்ட ஃபுல்லா அனுபவிக்கல இட்ஸ் ஓகே அடுத்த பேபி வரும் போது அனுபவிச்சுக்கலாம்?.லவா மொட்டு ரிலேஷன்சிப் பேக் டூ ஃபார்ம்??? ரகுப்பா என்னப்பா இது இப்படி அவசரப்பட்டிங்களே☹ வாவ் குஷாவுக்காக மொட்டு பேசுறா??????? என்ன மொட்டு டைரியை படிச்சுட்டாளா????????குஷா ??? மொட்டு பேசிகிட்டது நல்லா இருக்கு??????. ஒரு வழியா உண்மை தெரிஞ்சுருச்சு. எபி???????????????
 
Rahupa aarambathula irunthe Janaki ammakku oru best companion nu ovvoru incidentlayum proove panraanga,semma compatibility, first baby vishayathula lifela ulla happy moments Anu & Lava miss pannitaanga,Kusha feel panni Mottukitta pesaratha paakumbothu avanoda care,Kusha, Lava bonding rombave bramikka vaikithu, same Lavavum...
Mottu ipalaam Kusha unarvuhalukku mathippu kodukuraa, great improvement,
Lava Anu kitta ipa manasu vittu pesinatha first pesirunthaa problem vanthe irukkathu,ok lifela ellam sahajam thaan,
Poanga Rahupa.... Kushava hurt panniteenga unga mahana pathi ungala vida yaarukku theriyum, avanum thaan before operation emotional aa break ahirunthaan,
parraa... Mottuva ... husband a sonnathum varinchu kattitu varratha....
Mottu diary padichitaalaa,ha..Ha... Kushava console panra maathiri panni diary la ezhuthinatha ellam vachu potaale podu.... wow fantastic, athum appadiye casual aa propose pannathum semma,
rightu... Rahupa, Janaki eppadi react panna porangalo?
Lovely epi
 
Paaaa...raghupa kovam pathu nanum shock ayten.athavida periya shock mottu kusha ku support panni pesinathu....athayum vida periya shock mottu diary padichathu ..... Athellam vida periya shock januma ragupa ku Ella unnaiyum therinjathu ??????mothathula epi fulla shock ohhh shock.......anuma?...lava ku cure anathu ?super
 
வாவ் சூப்பர் சூப்பர்???? எபி செம்ம. எல்லாரும் ராசி ஆகியாச்சு ஹேப்பி?? ஹேப்பி. குட்டி லவா ஆர் குட்டி அனு ???? ஆனால் மொமன்ட்ட ஃபுல்லா அனுபவிக்கல இட்ஸ் ஓகே அடுத்த பேபி வரும் போது அனுபவிச்சுக்கலாம்?.லவா மொட்டு ரிலேஷன்சிப் பேக் டூ ஃபார்ம்??? ரகுப்பா என்னப்பா இது இப்படி அவசரப்பட்டிங்களே☹ வாவ் குஷாவுக்காக மொட்டு பேசுறா??????? என்ன மொட்டு டைரியை படிச்சுட்டாளா????????குஷா ??? மொட்டு பேசிகிட்டது நல்லா இருக்கு??????. ஒரு வழியா உண்மை தெரிஞ்சுருச்சு. எபி???????????????
thank u?? athane adutha time paathukalam? ragu avasara pattathala thane mottu vayai thiranthaa??? yes
 
Rahupa aarambathula irunthe Janaki ammakku oru best companion nu ovvoru incidentlayum proove panraanga,semma compatibility, first baby vishayathula lifela ulla happy moments Anu & Lava miss pannitaanga,Kusha feel panni Mottukitta pesaratha paakumbothu avanoda care,Kusha, Lava bonding rombave bramikka vaikithu, same Lavavum...
Mottu ipalaam Kusha unarvuhalukku mathippu kodukuraa, great improvement,
Lava Anu kitta ipa manasu vittu pesinatha first pesirunthaa problem vanthe irukkathu,ok lifela ellam sahajam thaan,
Poanga Rahupa.... Kushava hurt panniteenga unga mahana pathi ungala vida yaarukku theriyum, avanum thaan before operation emotional aa break ahirunthaan,
parraa... Mottuva ... husband a sonnathum varinchu kattitu varratha....
Mottu diary padichitaalaa,ha..Ha... Kushava console panra maathiri panni diary la ezhuthinatha ellam vachu potaale podu.... wow fantastic, athum appadiye casual aa propose pannathum semma,
rightu... Rahupa, Janaki eppadi react panna porangalo?
Lovely epi
yes they are best couple! vidunga next babyla paarthupanga? yes most twins have this character... ava than kaathala vizhunthutale? avar satham potathala thane mottu vaayai thirantha? all is well? mottuku eppovum kozhanji pesa varathe? thank u?
 
Top