Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-30

Advertisement

praveenraj

Well-known member
Member

அனுவின் இந்த எதிர்பாராத அணைப்பு லவாவுக்கு ஹார்ட் பீட்டை அதிகரிக்கச்செய்ய அதனூடே ஏற்பட்ட கூச்சமும் அவனை வாட்டியது. அவளை தானும் அணைக்கலாமா வேண்டாமா என்று தனக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தியவன் இறுதியில் அணைக்கலாம் என்று தீர்ப்பு சொல்லப்பட அவன் அணைக்கும் நொடியில் அவனை விடுவித்திருந்தாள் அனு.
அதில் சற்று மனம் சோர்ந்தவன் முகத்தைச் சுருக்க அதைக் கவனிக்காதவள் உணவு மேஜையை நோக்கி நகர்ந்தாள். அவள் விரலைப் பிடித்தவன்,
"அனுமா" என்றதும் திரும்பியவளுக்கு,
"நான் உன்னை லவ் பண்றேன் அனு. இப்போ இல்ல ரொம்ப நாளாவே என் மனசுக்குள்ள நீ தான் நிறைய பட்டர் பிலைஸ் பறக்க விட்டிருக்க. உன் கூட இருக்கும் ஒவ்வொரு மொமெண்ட்டும் எனக்குள்ள ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு. நானும் நீயும் ரொம்ப பழகனதில்ல தான். இன் பேக்ட் நாம அம்மாச்சி வீட்ல ஒண்ணா ஸ்பென்ட் பண்ண மொமெண்ட்ஸ் தான் நாம முதன் முதலா க்ளோசா பழக ஆரமிச்ச நாட்களும் கூட. நீ எப்பயும் என்னை டாமினேட் செஞ்சிட்டே இருப்ப. அப் கோர்ஸ் அதெல்லாம் ஜாலியான மொமெண்ட்ஸ் தான் இருந்தாலும் எனக்கு உன்னோட அந்த டாமினேட்டிங் கேரக்டர் ரொம்ப பிடிக்கும். உன்னை மாதிரி யாரும் என்னை தர்ம சங்கடமான கேள்விகளையோ இல்ல சூழ்நிலைகளையோ எனக்குள்ள ஏற்படுத்தியதில்லை. அது போக எப்பயும் எதாவது துறுதுறுனு செஞ்சிட்டு வாய் ஓயாம கதை பேசிட்டு எதையுமே மூளைக்கோ மனசுகோ ஏத்திக்காம ஒரு மாதிரி ஜாலியா உலா வரும் உன்னைக் கண்டாலே எனக்கு ஒரு ஹேப்பின்ஸ் தொத்திக்கும். நிழலின் அருமை வெயிலில் தான் தெரியுங்கற மாதிரி உன்னோட அருமை நான் திரும்ப இங்க வந்த என் தனியான நாட்கள்ல தான் தெரிஞ்சது. உன்னை நான் அதிகமா மிஸ் பண்ணியிருக்கேன். எப்படிச் சொல்ல? எனக்கு உன்னைப் பிடிக்கும். ஆனா அது காதல்னு எனக்குப் புரியல. மொட்டுவை நானும் அடிக்கடி டீஸ் பண்ணியிருக்கேன் ஆனா அவளை மேரேஜ் செய்யணும்னு நான் நெனைச்சதில்லை. அப்போ தான் நீ என்கிட்ட ப்ரபோஸ் செஞ்ச. சரி நானும் உனக்கு யோசிச்சு பதில் சொல்லலாம்னு இருக்கும் போது தான் நம்ம மேரேஜ் பத்தி வீட்ல பேசி ஜோடியை மாத்தி ட்விஸ்ட் வெச்சிட்டாங்க. எனக்கு அந்த மொமெண்ட்ல என்ன செய்யுறதுனே தெரியில அனு. ஒரு பக்கம் நீ இன்னொரு பக்கம் மொட்டு. என்ன தான் நான் மொட்டுவை விரும்பலனாலும் குஷாவுக்கும் அவளுக்கும் சுத்தமா செட்டே ஆகாதேனு நினைக்கும் போது எனக்கு ஒரு முடிவெடுக்க முடியாத சூழ்நிலை. நம்ம மேரேஜ் முடிவானதும் தான் நான் சென்னை வந்து குஷா டைரியை படிக்கும் சான்ஸ் கிடைச்சது. அப்போவே முடிவு செஞ்சிட்டேன் நான் உன்னைத் தான் கல்யாணம் செய்யணும்னு. ஆனா இதுக்கு நேர் மாறா குஷா எதுவுமே நடக்காத மாதிரியே இருந்தான். சரி இவனும் எவ்வளவு தூரம் தான் போறான்னு பாக்கலாம்னு நானும் வெய்ட் பண்ணேன். எப்படிச் சொல்ல? இந்தியா எப்படியும் ஜெய்ச்சிடும்னு தெரியும் போது ஆப்போனேன்ட் சிக்ஸ் அடிச்சாலும் நாம கவலை இல்லாம மேட்ச் பாப்போமே? அப்படியொரு நிலை. நிஜமா சொல்றேன் அனு அன்னைக்கு நைட்டுக்குள்ள குஷா என்கிட்ட இது சம்மந்தமா பேசாம இருந்திருந்தா நானே அவன்கிட்டப் பேசியிருப்பேன். ஆனா அதுக்குள்ள நீ அழுது தாத்தாகிட்டப் பேசுனதை குஷா பார்த்து என்கிட்டச் சொல்லிட்டான். அது தெரிஞ்சதும் அடுத்த நாளே நான் உனக்கு மெசேஜ் பண்ணேனே? நீ அதைப் பார்த்தும் எந்த ரிப்லையும் செய்யல... நீ கோவப்படுவன்னு நான் எதிர்பார்த்தேன் ஆனா இவ்வளவு தூரம் பீல் பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்லை அனு. சரி மேரேஜுக்கு அப்பறோம் கூட லவ் சொல்ல ஏன் இவ்வளவு நாள்னு யோசிக்கறயா? எனக்குள்ள இன்னும் மொட்டுவை ஏமாத்திட்டோம்னு ஒரு கில்டி பீலிங் இருக்கு அனு. உன் கிட்டச் சொல்ல என்ன? நம்ம மேரேஜுக்கு அப்பறோம் இத்தனை நாள்ல ஒரு முறை கூட நான் அவகிட்டப் பேசுனதே இல்ல அனு. எனக்கு அவளை பேஸ் பண்ண தைரியம் இல்ல..."
"அதே நேரம் உன்னையும் நான் ஹர்ட் செய்யுறேனோன்னு எனக்கு கில்டியா இருக்கு. ஐ லவ் யூ சோ மச் அனுமா..." என்றவன் தன் கை விரல்களை ஹெர்டின் வடிவத்தில் குவித்து அவளைப் பார்க்க மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் அவன் முகமும் விரலும் அவளுக்குத் தெளிவாகத் தெரிய ஆச்சரியத்தில் உறைந்தாள் புல்வெளி.
பிறகு தன்னிலை அடைந்தவள் மேஜையை நோக்கி நகர இவனோ எதுவும் புரியாமல் தவித்தான்.
"அனு... என்ன பதிலே சொல்லாம போற?" என்றவனுக்கு,
"முதல சாப்பிடலாம். அப்பறோம் பேசலாம். வா" என்று சொல்லி அவள் மேஜையில் அமர அப்போது அவள் கண்களில் தெரிந்த உற்சாகத்தைக் கண்டவன் ஏதும் பேசாமல் அவள் அருகில் சென்று அமர்ந்து உணவை உண்ண ஆரமிக்க,
"எல்லாம் ஆர்டர் பண்ணிட்டேன். உனக்குப் பிடிச்சது தான்..." என்றதும் அவனை நிமிர்த்து ஒரு கணம் பார்த்தவள் ஏதும் பேசாமல் சாப்பிட,
"அனு நெக்ஸ்ட் வீக் எண்ட் நீ ப்ரீ தானே?"
"ஏன்?"
"வெளிய போலாம்"
"எங்க? எனக்கு வேலையிருக்கு..." என்று அவள் சொன்னதும் அது பொய் என்று உணர்ந்தவன்,
"அப் கோர்ஸ் எனக்கும் வேலை தான் இருக்கு..." என்று விஷமமாய்ச் சிரித்தான்.
அனுவோ அதற்கு விளக்கம் புரியாமல் விழிக்க,
"அந்த வாரம் த்ரீ டேஸ் லீவ் சொல்லிடு..." என்று அவன் சாப்பிட இப்போது அனுவுக்கு விளங்க,
"அதெல்லாம் உன் இஷ்டத்துக்கு லீவ் கிடைக்காது"
"தென் வேலையை விட்டுடு"
"என்ன விளையாடறயா?"
"விளையாட தான்..." என்று கண்களில் குறும்போடு பதிலளித்தவனைக் கண்டு,
"என்ன டபிள் மீனிங்கா?"
"ச்சே ச்சே சிங்கிள் மீனிங் தான். எனக்கு பீச் கரையில விளையாடி ரொம்ப நாளானதா ஒரு பீலிங். அதான் விளையாடலாம்னு..."
அவள் நம்பாமல் பார்க்க,
"அதான் நான் சொல்றது பொய்யுனு தெரியுதில்ல? அப்பறோம் என்ன? எல்லாம் தெரிஞ்சும் நீ தெரியாத மாதிரி நடிக்குற அனு. நீ ரொம்ப மோசம்..." என்று அவன் சொல்ல,
"எனக்கு லீவ் கிடைக்குறதெல்லாம் டௌட் லவா..."
"சரி நானே வாங்கித்தரேன்..." என்று அவன் கேசுவலாக சாப்பிட,
"எப்படி வாங்குவ?"
"ஏஸ் வி ஆர் எ நியூலி மேரீட் கபில் வி ஹேவ் டு கோ பார் ஹனிமூன். சோ கைன்ட்லி கிவ் லீவ் பார் த்ரீ டேஸ்..." என்றதும் அதிர்ந்தவள் அவனைத் துரத்த அதை யூகித்தவன் தங்கள் அறைக்குள் நுழைய விவரமறியாமல் பின்னாலே நுழைந்த அனுவை பின்னிருந்து அணைத்தான் லவா. தானாகவே சாற்றிய கதவின் உதவியால் மெழுகுவர்த்திகள் அணைந்தன!
****************
அன்று விடுமுறை என்பதால் குஷாவும் ஜானகியும் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காகச் சென்றனர். போகும் போதே குஷா மொட்டுவிடம் எம்.எஸ்.சி அப்ளிகேஷன் பார்மை கொடுத்துவிட்டுச் சென்றான். மொட்டுவும் அன்று குஷாவுடன் பேசியபிறகு ஆழ்ந்து யோசனை செய்தாள். அவளுக்கும் ஒரு முயற்சி செய்து பார்த்தால் என்னவென்று தோன்ற இன்றைய நாள் நல்ல தினம் என்பதால் அதை நிரப்ப ஆயத்தமானாள். டைனிங் டேபிளில் அமர்ந்து அதை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ரகு அவளைக் கண்டு என்னவென்று விசாரிக்க அவளும் சொன்னாள். ஏனோ இன்றளவும் ரகுவிடம் மிக பார்மலான பேச்சுக்கள் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போது ஜானகியிடம் நடந்ததை எல்லாம் தெரிந்துகொண்டாளோ அப்போதே அவரிடம் ஒரு மன்னிப்பை வேண்ட நினைத்திருந்தாள் தான். ஆனால் அதற்கு ஏற்ற சமயம் வாய்க்காமல் இருந்தது.
"நான் வேணுனா ஃபில் பண்ணட்டா?" என்றவரை இமைக்காமல் பார்த்தவளிடம்,
"இந்த வீட்ல ஆபிஸ் ஒர்க்ஸ் கவெர்மென்ட் வொர்க்ஸ் எல்லாமே நான் தான் பார்ப்பேன். அண்ட் உன் வீட்டுக்காரனோட எல்லா அப்பிளிகேசனும் நான் தான் செஞ்சியிருக்கேன். அண்ட் நான் ராசியானவன்னு அவங்க சொல்லுவாங்க. நான் வேணுனா செய்யவா?" என்றார் ரகுநாத்.
முதலில் மொட்டுவிடம் அவ்வளவாகப் பேசாமல் தான் இருந்தார். ஆனால் நாளடைவில் மொட்டுவின் குணாதிசயங்கள் அவருக்குப் பிடித்தது. அதும் போக இதுநாள் வரை அவளை நந்தாவின் மகளாகவே தான் பார்த்தார். இப்போது தான் அவளை குஷாவின் மனைவியாகவும் இந்த வீட்டின் மருமகளாகவும் பார்க்க ஆரமித்தார்.
சரி என்பதைப் போல் அவள் தலையசைக்க ரகுவே அதில் ஒவ்வொரு வரிசையிலும் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதினார். கணவனின் பெயர் என்னும் இடத்தைக் கண்டு ஒருகணம் ஸ்தம்பித்தவள் பின் ப்ளோவில் குஷா என்று சொல்ல நிமிர்ந்தவர்,
"ஆழியன். குஷா இல்ல" என்று சிரித்தவர்,"கொஞ்ச நேரத்துல நானும் குஷான்னு எழுதியிருப்பேன். அப்பறோம் இன்னொரு பார்ம் வாங்கியிருக்கனும்" என்றவர் மேற்கொண்டு அவளுடைய படிப்பு விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்தார்.
"எல்லாம் ஓகே மா. நீ போட்டோவும் சைனும் பண்ணிடு குஷா போகும் போது போஸ்ட் செஞ்சிடட்டும்..." என்றவர் நகர ஏனோ மொட்டு தான் மனதிற்குள் ஒத்திகை பார்த்ததை ஒப்பிக்க தயாரானாள்.
"மாமா ஒருநிமிஷம்" என்றதும் அவர் திரும்ப,
"என்னை மன்னிச்சிடுங்க மாமா. அது அன்னைக்கு நீங்க என்னைப் பார்த்தும் கண்டுக்காத மாதிரி தான் எனக்குத் தெரிஞ்சது. அது தான் அன்னைக்கு அப்படிச் சொல்லிட்டேன்" என்றவளை என்னவென்று புரியாமல் பார்த்தார் ரகுநாத்.
"என்னைக்கு?"
"அது அப்பாவோட அப்பத்தா இறந்த போது நீங்க போன் பேச தோட்டத்துக்கு வந்திருந்திங்களே? நான் கூட பழைய கிணத்துல விழுந்துட்டேனே?" என்று என்னவோ நேற்று நடந்ததைப்போல் பல வருடங்களுக்கு முன்பு நடந்ததை ஒப்பித்தாள் மொட்டு.
யோசித்தவர் அது நினைவு வந்தவராக சிரித்து,"அதுக்கெதுக்கு என்கிட்ட இப்போ மன்னிப்பு கேக்குற? நான் அதை மறந்தே போயிட்டேன்"
"ஆனா நான் மறக்கல மாமா. நான் கொஞ்சம் விவரம் தெரியும் வரை உங்களை நான் தப்பா தான் நெனச்சேன்... அந்த விஷயத்துக்கு. அதுக்குப் பிறகும் கூட உங்களை நான் தப்பா தான் நெனச்சிட்டு இருந்தேன். ஆமா இருந்தேன் கொஞ்ச நாள் முன்ன வரை. அன்னைக்கு அத்தை சொல்லித்தான் எனக்கு எல்லாமே தெரிஞ்சது. அது... என் அப்பா செஞ்சது பெரிய தப்பு தான் மாமா. அதுக்கு நான் எந்த விதத்திலும் நியாயம் சேர்க்கப்போறதில்லை. இதெதுவும் தெரியாம நான் உங்களையும் அத்தையையும் பலமுறை திட்டி இருக்கேன்..." என்றவள் நாக்கைக் கடித்துவிட்டு,
"இதனால நானும் குஷாவும் பலமுறை சண்டை போட்டிருக்கோம். ஆனா அப்போல்லாம் குஷா உங்களுக்காக எப்படிப் பேசுவான்... சாரி பேசுவார்" என்று மீண்டும் தடுமாறியவள்,
"உங்களைப் பத்தி நான் நிறைய கற்பனை செஞ்சு வெச்சிருந்தேன். ஆனா அதெல்லாம் தூள் தூளாப் போயிடுச்சு. உங்க இடத்துல இருந்து பார்த்தா உங்க சைட் தான் நியாயம் இருக்கு. நான் மறுக்கல. ஆனா இதுல அத்தையைப் பத்தியும் நீங்க யோசிச்சிருக்கனும். அத்தையும் பாவம் தானே? அது கூட தாத்தாவும் ரொம்ப பாவம் இல்லையா? நான் உங்கள ஹர்ட் செஞ்சியிருந்தா சாரி மாமா. நீங்க உரிமையாச் சண்டை கூடப் போட்டிருக்கலாம் ஆனா இப்படி ஒதுங்கியே இருக்குறது எனக்குப் பிடிக்கல. அண்ட் நான் அதிகமாப் பேசியிருந்தா சாரி மாமா..." என்றவள் உள்ளே சென்றாள்.
ஏனோ அப்போது தான் குஷாவும் ஜானகியும் வீட்டிற்கு வந்தவர்கள் வாசலில் நின்றவாறே மொட்டுவின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒருபுறம் குஷாவுக்கு மகிழ்ச்சியில் ஆனந்த தாண்டவமே ஆடிவிடுமளவுக்கு ரெடி ஆகியிருந்தான். பின்னே அவனுக்கும் மொட்டுவுக்கும் தீர்க்கப்படாமல் இருக்கும் கணக்கு என்றால் அது இந்த ஒரு விஷயம் தானே? ஜானகிக்கும் மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் தன்னுடைய விருப்பத்தை தன் கணவனிடம் சொல்ல முயன்றிருக்கிறார் ஆனால் அதை அவரால் சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று மொட்டு அதை ரகுவின் மனம் வருந்தாமல் சொல்லி விட்டாளே என்று நினைக்கையில் தன் மருமகள் மீது அலாதி அன்பு பிறந்தது.
ரகு ஆழ்ந்த யோசனையில் இருக்க தாயும் மகனும் எதுவும் கேட்காததைப் போல் உள்ளே சென்றனர்.
அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து தான் லவாவும் அனுவும் ஒடிஷா செல்வதைப் பற்றி அறிந்த ஜானு மனம் மகிழ்ந்தாலும் இந்த வாரம் அவர்களை சென்னைக்கு வரவைக்க நினைத்தார். பிறகு ஜானகி ரகுவைப் பார்க்க அர்த்தம் புரிந்தவர் குஷாவிடம் அதைப் பற்றிப் பேச உடனே சாப்பிட்டுக் கொண்டிருந்த மொட்டுவுக்கு புரையேற அவள் தலையைத் தட்டியவன்,
"உனக்கு ஓகேனா சொல்லு அழகி நாளைக்கே போயிடலாம்" என்றதும் அவள் மருண்டு விழித்தாள். பின்பு வேடந்தாங்கல் வரை அவளை அழைத்துச் சென்று வந்தான்.
அன்று ரகுவின் நண்பன் மகனுக்கு திருமணம் இருக்க இவர்கள் நால்வரும் அதில் கலந்துகொள்ள முடிவெடுத்தனர். காலையில் தயாரானவன் காரை கழுவிவிட்டு தங்கள் அறைக்குள் நுழைய அப்போது தான் உடை மாற்றிக்கொண்டிருந்த மொட்டு வெடுக்கென்று திரும்பி குஷாவை முறைத்தாள். அவள் கிட்டதட்ட உடையை அணிந்து விட்டாள். பட்டுப் புடவையின் மடிப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.
"அறிவில்லை உனக்கு? இப்படியா கதவைத் தட்டாம வருவ?" என்று அவனை ஏச,
"பார்ரா? அவ்வளவு அறிவிருக்கறவங்க கதவைச் சாத்திட்டு டிரஸ் மாத்தனும்..." என்றவன் அறையைத் தாழிட்டு உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டவளுக்கோ உடல் அவளையும் அறியாமல் நடுங்கியது. அது பயத்தால் அல்ல. இப்போதெல்லாம் அடிக்கடி அவளிடம் உரிமை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் தயக்கம். அவனை பத்தடிக்கு முன்னாலே தடுத்தால் தான் உண்டு. அருகே நெருங்கிவிட்டான் என்றால் அவளை வசியம் செய்துவிடுகிறான். இதை அவளும் அறிந்துகொண்டாள் தான்.
"ஏ இப்போ எதுக்கு கிட்ட வர? அங்கேயே நில்லு..." என்றவளின் உதடுகள் ஊஞ்சலாட,
"இதென்ன கொடுமையா இருக்கு? ஒரு இந்தியக் குடிமகன் அவனோட பெட் ரூமுக்குள்ள இருக்குற ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி நின்னு அவனை அழகு படுத்திக்கக் கூட உரிமை இல்லையா? சத்திய சோதனை!" என்றவன் அவளை நெருங்கியிருந்தான்.
"நில்லு. நான் வெளிய போயிடுறேன்..." என்றவள் அவனை இடிக்காமல் அந்தக் குறுகிய வழியில் வர,
"குஷி இடுப்பை மட்டும் பார்த்தவன்
கண்ணைத் தொறந்து தான் பார்க்குறேன்..." என்று பாட அதில் ஒரு கணம் ஜெர்க் ஆகி நின்றாள் மொட்டு.
"அப்போ கானா தான் பிடிக்குமே
இப்போ மெலோடியும் பிடிக்காதே..." என்றவன் அவள் புடவையில் ப்ளீட்ஸ் சரியாக எடுக்காமல் இருப்பதைக் கண்டு சொல்லுவதற்குள் அவளுக்கு கால் தடுக்க அதை உணர்ந்து அவளைத் தாங்கினான்.
"ஒழுங்கா ஸரீ கூடக் கட்டதெரியாதா?" என்றதும் அதில் சீண்டப்பட்டவள்,
"இன்னும் ரெண்டு நிமிஷம் இருந்திருந்தா நான் ஒழுங்கா டிரஸ் பண்ணியிருப்பேன்..." என்று அவள் சண்டைக்கு நிற்க,
"இந்த வாய் இல்லைனா உன்னை நாய் தூக்கிட்டுப் போயிருக்கும்..." என்றவன் குனிந்து அவள் உடையைச் சரிசெய்ய ஏனோ அவனுடைய ஈகோ இல்லாத இந்தச் செயல் அவளுக்கு வியப்பளிக்க,
"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு... கண்டுகொண்டேன்" என்றவன் எழவும் ஓடப்பார்த்தவளின் கையை இழுத்தவன் அவள் தவிப்பைக் கண்டவன் தன்னுடைய போனை எடுத்து,"நாம இதுவரை ஜோடியா செல்பியே எடுத்ததில்லை தானே? லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள கிவ் மீ எ உம்மா உம்மா..." என்றவன் அவளுடைய அதிர்ந்த முக பாவத்தோடு தன்னையும் சேர்த்து ஒரு செல்பி எடுத்தவன்,
"போலாம்..." என்றதும் அவள் ஒருகணம் அங்கேயே நிற்க,
"என் கூட அப்பறோம் ட்ரீம்ல டூயட் பாடலாம் இப்போ போ டைம் ஆகுது பனி..." என்றதும் அசடு வழிந்தவள் நகர,
"பனி, தேங்க்ஸ்..." என்றான். அவளோ புரியாமல் திரும்ப,
"இப்போவாச்சும் என் அப்பாவைப் புரிஞ்சிகிட்டயே... அண்ட் இத்தனை நாள் என் அம்மாவோட மனசைப் புரியாம இருந்த எனக்கு அதைப் புரிய வெச்சதுக்கும்..." என்றதும் மொட்டு ஆச்சர்யாமாகப் பார்க்க,
"இப்போ சொல்லு என் அப்பாக்காக ஒவ்வொரு முறையும் நான் சண்டை போட்டதெல்லாம் சரி தானே?" என்றதும்,
"அதே நேரம் தப்பு பண்ணது என் அப்பா தானே? இதுல தாத்தாவை எதுக்கு அவாய்ட் பன்ணனும்?" என்று அவள் நிறுத்த,
"அப்பாவையும் தாத்தாவையும் கூடிய சீக்கிரம் பேச வெக்கணும்... நானும் உன் விஷயத்தை ஏத்துக்கறேன்" என்றவன் தயாராக குஷா நடிக்கவில்லை என்பதை முதன் முறையாக உணரத் தொடங்கினாள் மொட்டு.
அதன் பின் அந்த திருமணத்திற்குச் சென்று ரகுவும் ஜானகியும் தங்கள் நண்பர்களிடம் குஷாவையும் மொட்டுவையும் அறிமுகப்படுத்த அவர்கள் எல்லோரிடமும் புன் சிரிப்போடு எதிர்கொண்டவளுக்கு அந்தக் கணம் குஷா தன்னை ஏமாற்றி தான் திருமணம் செய்தான் என்ற விஷயமே மறந்திருந்தது.
***************
அங்கே அனுவும் லவாவும் தங்களுடைய திட்டப்படி ஒடிஷா சென்றவர்கள் தங்களுடைய ஐந்து நாள் மினி டூரை இனிதே கழித்து ஊர்த் திரும்பியிருந்தனர். இங்கே குஷாவும் அன்று தன் பெற்றோர்களுடன் மொட்டுவையும் சேர்த்து அவளுக்குப் பிடித்த இயற்கையின் வீடான வேடந்தாங்கலுக்குச் சென்று வந்தான். என்ன தான் இது சீசன் இல்லை என்றாலும் ஆங்காங்கே சில பறவைகள் இருக்க தங்களுடைய பயணத்தை இனிதே முடித்தார்கள்.
பெற்றோர்களைப் பார்த்து கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆனதால் லவா அனு இருவரும் சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் வருகிறார்கள் என்றதும் சுசி காவேரி ஆனந்தி ஆகியோருடன் வைத்தி கனகா சித்ரா மனோ ஆகியோரும் சென்னைக்கு வந்தார்கள். என்ன தான் மகளைப் பார்க்க வேண்டுமென்று நந்தாவிற்கு விருப்பம் இருந்தாலும் ரகு அழைக்காமல் அவர் இருக்கும் போது வர மனமில்லாமல் வேலை இருப்பதாகச் சொல்லி மறுத்துவிட்டார். அதே நேரம் மொட்டுவுக்கும் கல்லூரி தொடங்கவிருப்பதை அறிந்து அவளை பார்த்து விட வந்தார்கள். மொட்டு படிப்பதில் கனகா சித்ரா ஏன் நந்தாவிற்கும் விருப்பம் இல்லை என்றாலும் குஷாவும் ஜானகியும் அவளுக்கு உடன் இருப்பதால் ஏதும் பேசாமல் இருந்தார்கள். கிட்டத்தட்ட அறுபது நாட்கள் கழித்து லவாவும் மொட்டுவும் அதே போல் குஷாவும் அனுவும் சந்தித்துக்கொண்டனர். லவா அனு இருவரும் குற்றயுணர்ச்சியோடு வலம் வந்தனர்.
(நேரம் கைகூடும்)
இன்னும் இரண்டு அத்தியாயங்களில் கதை நிறைவடையும். ஆனால் இரண்டும் சற்று நீண்ட அத்தியாயங்களாக இருக்கும். இம்மாத இறுதிக்குள் கதை முடிந்துவிடும். ஆதரவளிப்பவர்களுக்கு நன்றி?
 
லவா சொன்னத படிக்கும் போதே மூச்சு வாங்குது அவன் எப்படி கேப் விடாம சொன்னான்?? அந்த 3டாட்ஸ் ரெம்ப லேட்டாதான் வந்துச்சு அப்படினா அதுலதான் அவன் கேப் விட்டுருப்பான். ஒரு வழியா எல்லாத்தையும் சொல்லியாச்சா ஆனால் அனு ரியாக்ஷன் என்ன இப்படி இருக்கு. அட போ லவா மொட்டு அங்க குஷா கூட டீரீம்ல டூயட் பாடிட்டு இருக்கா உங்களை எல்லாம் மறந்தாச்சு.
ரகுப்பா எனக்கு ஒரு டவுட்டு ஃபார்ம்ல அப்ளிகன்ட் பேரு பனித்துளி எழுதுனீங்களா இல்லை மொட்டுனு எழுதுனீங்களா?? ஆழியன் எவ்ளோ அழகான பேரு????. வீீீட்டுல மியுசிக் சேனல்தான் ஓடுதா இந்த படம் சீரியல் அந்த மாதிரி எதும் பாக்கலயோ ஒரே பாட்டா வருது. குஷா?மொட்டு?????? ரெண்டு பேரும் சூப்பர். என்ன ஒடிசாவா ஹனிமூன் பிளேசா வித்தியாாசமாதான் யோசிச்சுருக்கான். ஒடிசாலதான நம்ம துஷி, யாழ் அண்ட் ரேஷ் இருந்தாங்க. மொட்டுமா அவங்க கில்டிய கிளியர் பண்ணி விடுமா. நந்தா மாமா வந்து ரகுப்பாகிட்ட சாரி கேட்டுருக்கலாம். ஒரு வழியா அப்பாக்காக தாத்தாக்காக சண்டை போட்டவங்க இப்ப சேர்த்து வக்கனும்னு யோசிச்சாச்சு. ஆழியன்@குஷா????? சமத்து. எபி ?????????
 
என்ன பாஸ். பாட்ட ரொம்ப ரசிச்சு கேக்குறீங்க போல.. யூஸ் பண்ற சாங் எல்லாம் பயங்கரமா இருக்கு ?????????. என்ன இருந்தாலும் குஷா பண்ணது தப்பு தான. மொட்டு வோட சிட்டுவேஷன நல்லா யூஸ் பண்ணிக்கிட்டான். இவங்க கல்யாணத்தை பத்தி எல்லாருக்கும் தெரியுமா இல்லை இப்படியே மெயின்டன் பண்ணுவாங்களா கடைசி வரைக்கும். நல்லா பேசியே கவர் பண்றான். மொட்டு உன்னோட வீரம் எங்கே...? உன்னோட கோபம் எங்கே? எங்கே.....? என்னம்மா நீ... செம்மையா சண்டை போடுவன்னு பார்த்தா.. புருஷனை கண்டாலே ஸ்டன் ஆகி நிக்கிற. எப்படியோ மாமனாரும் மருமகளும் நல்ல புரிஞ்சுக்கிட்டாங்க‌. உண்மையாவே அம்மாஞ்சியா இருக்குறவங்கள நம்ப கூடாது போல ..லவா என்னம்மா பர்பாமென்ஸ் பண்ற. கேடி கேடி... பரவால்ல பெருசா இருந்தாலும் போடுங்க.... தெய்வமே.
 
Semma???lava❤️kadhal Mannan ayta man nee... proposal la superuuu.leave letter ??? mudiyala.athenna odisa. mudivili effect innum pogala polaye??...... kusha ?ennama songs padaran.paaaa therita kusha...enna sonnalum unga heroes 2 pera vida enaki raghupa than romba pidikuthe ❤️❤️❤️vera level ponga....haha 2 name vaichale ipdi than confuse agitum apapo.enakellam name 2 DOB 2 shabbaa?....mottu kalakitta.raghupa ta pesinathu ??..... finally ellarum chennai vanthachu...adada innum intha guilt pogalaya?pavame
 
லவா சொன்னத படிக்கும் போதே மூச்சு வாங்குது அவன் எப்படி கேப் விடாம சொன்னான்?? அந்த 3டாட்ஸ் ரெம்ப லேட்டாதான் வந்துச்சு அப்படினா அதுலதான் அவன் கேப் விட்டுருப்பான். ஒரு வழியா எல்லாத்தையும் சொல்லியாச்சா ஆனால் அனு ரியாக்ஷன் என்ன இப்படி இருக்கு. அட போ லவா மொட்டு அங்க குஷா கூட டீரீம்ல டூயட் பாடிட்டு இருக்கா உங்களை எல்லாம் மறந்தாச்சு.
ரகுப்பா எனக்கு ஒரு டவுட்டு ஃபார்ம்ல அப்ளிகன்ட் பேரு பனித்துளி எழுதுனீங்களா இல்லை மொட்டுனு எழுதுனீங்களா?? ஆழியன் எவ்ளோ அழகான பேரு????. வீீீட்டுல மியுசிக் சேனல்தான் ஓடுதா இந்த படம் சீரியல் அந்த மாதிரி எதும் பாக்கலயோ ஒரே பாட்டா வருது. குஷா?மொட்டு?????? ரெண்டு பேரும் சூப்பர். என்ன ஒடிசாவா ஹனிமூன் பிளேசா வித்தியாாசமாதான் யோசிச்சுருக்கான். ஒடிசாலதான நம்ம துஷி, யாழ் அண்ட் ரேஷ் இருந்தாங்க. மொட்டுமா அவங்க கில்டிய கிளியர் பண்ணி விடுமா. நந்தா மாமா வந்து ரகுப்பாகிட்ட சாரி கேட்டுருக்கலாம். ஒரு வழியா அப்பாக்காக தாத்தாக்காக சண்டை போட்டவங்க இப்ப சேர்த்து வக்கனும்னு யோசிச்சாச்சு. ஆழியன்@குஷா????? சமத்து. எபி ?????????
ஹா ஹா அனு ஓகே சொல்லிட்டாளே? மூச்சு வாங்க பேசுனா தான் அவளை சமாளிக்க முடியும். அதெல்லாம் சரியா எழுதியிருப்பார்? பாட்டு பாடுனா தானே ரொமான்ஸ் செய்ய முடியும். சீரியல் வெச்சு என்ன செய்ய? எஸ்?
 
என்ன பாஸ். பாட்ட ரொம்ப ரசிச்சு கேக்குறீங்க போல.. யூஸ் பண்ற சாங் எல்லாம் பயங்கரமா இருக்கு ?????????. என்ன இருந்தாலும் குஷா பண்ணது தப்பு தான. மொட்டு வோட சிட்டுவேஷன நல்லா யூஸ் பண்ணிக்கிட்டான். இவங்க கல்யாணத்தை பத்தி எல்லாருக்கும் தெரியுமா இல்லை இப்படியே மெயின்டன் பண்ணுவாங்களா கடைசி வரைக்கும். நல்லா பேசியே கவர் பண்றான். மொட்டு உன்னோட வீரம் எங்கே...? உன்னோட கோபம் எங்கே? எங்கே.....? என்னம்மா நீ... செம்மையா சண்டை போடுவன்னு பார்த்தா.. புருஷனை கண்டாலே ஸ்டன் ஆகி நிக்கிற. எப்படியோ மாமனாரும் மருமகளும் நல்ல புரிஞ்சுக்கிட்டாங்க‌. உண்மையாவே அம்மாஞ்சியா இருக்குறவங்கள நம்ப கூடாது போல ..லவா என்னம்மா பர்பாமென்ஸ் பண்ற. கேடி கேடி... பரவால்ல பெருசா இருந்தாலும் போடுங்க.... தெய்வமே.
எஸ் ரொம்ப வருஷமா பாட்டு கேக்குறது தான் என் முதல் டைம் பாஸ்? தெரியும் தெரியும் ஆனா எல்லோருக்கும் இல்ல அவ குஷாவின் அழகுல மயங்கிட்டா ?ஓகே நன்றி?
 
Semma???lava❤kadhal Mannan ayta man nee... proposal la superuuu.leave letter ??? mudiyala.athenna odisa. mudivili effect innum pogala polaye??...... kusha ?ennama songs padaran.paaaa therita kusha...enna sonnalum unga heroes 2 pera vida enaki raghupa than romba pidikuthe ❤❤❤vera level ponga....haha 2 name vaichale ipdi than confuse agitum apapo.enakellam name 2 DOB 2 shabbaa?....mottu kalakitta.raghupa ta pesinathu ??..... finally ellarum chennai vanthachu...adada innum intha guilt pogalaya?pavame
எவ்வளவு நாளுக்கு தான் அவனும் அம்பியாவே இருக்குறது?? சாங் பாடுனாலும் அவளை கரெக்ட் செய்ய முடியலையே? அதே அதே? நன்றி
 
Lava suddenaa romantic hero ahitaan, interesting.athum proverb vera, adikkadi neengathaan ippadi nyabahapaduthureenga, Anu parava illaye, immediate aa react pannalaye,
Rahupa always so sweet, Azhiyan evvalavu azhahana tamil name, nameku yeththa maathiriye parantha manathunaala intha name vacheengalaa Kushakku,
Rahupa..... periya manushan periya manushan thaan.... Odisha ungala romba eerthurukkuthu pola,ji... intha songs laam unga favourite collections aa,
thappu pannathu Nandha, then Chennaikku vara enna ego vendi irukku, oru sorry Rahupa kitta sonna pochu
Arumaiyaana epi
 
Top