Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-29

Advertisement

praveenraj

Well-known member
Member
அதன் பின் அவர்கள் இரவு உணவைத் தயார் செய்ய ஆயத்தமாகிவிட மொட்டுவோ உள்ளுக்குள் எரிமலையென கொதித்துக்கொண்டிருந்தாள். வேலைகளை முடித்து குஷா தங்கள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். அப்போது தங்கள் அறையின் கதவு திறக்கப்பட உண்மையில் குஷாவிற்கு மனம் என்னவோ செய்தது. வந்தவள் அறையைப் பூட்டிவிட்டுத் திரும்ப அவள் கண்களோ அவனை உறுத்து விழிக்க முறைத்தவாறே வந்து அங்கிருக்கும் கப்போர்டில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தாள்.
"ஓகே தூங்கலாமா?" என்றவன் கட்டிலை நோக்கி நகர,
"நில்லு குஷா" என்றவளின் கூற்றில் துளியும் கோவமில்லை. ஆனால் ஒரு இயலாமை அதில் ஒலித்ததாகவே அவனுக்குப் பட்டது. முகத்தைச் சுளித்தவாறு திரும்பியவன் புருவம் உயர்த்த,
"நான் கூட உன்னை என்னவோன்னு நெனச்சேன். ஆனா பரவாயில்ல ரொம்பவே நல்லா கதை சொல்ற. நீ ஏன் இந்த சினிமாவுல திரைக்கதை எழுத முயற்சிக்கக் கூடாது? அண்ட் உன்னை மாதிரி நல்ல ஸ்க்ரீன்ப்லே ஆளுங்களுக்கு தமிழ் சினிமாவுல நிறைய டிமான்ட் இருக்கும்" என்றவளின் இந்தப் பேச்சு குஷாவுக்கு வருத்தமளித்தது ஏனோ உண்மை. எப்போதும் நேரடியாக ஒரு விஷயத்தைக் கேட்பதை விட இவ்வாறு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல் பேசுவதற்கு கூர்மை அதிகம். அது நேரடியாக நம் இதயத்தைக் குத்திக்கிழிக்கும்.
"இல்ல பனி நான் வந்து..." என்றவனை கையமர்த்தி தடுத்தவள்,
"உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாவமே இல்லையா குஷா? நீ இதை எல்லாம் எதை நெனச்சு செய்யுறேன்னு எனக்குத் தெரியில. நீ பண்ற இந்த விஷயங்கள் எனக்கு உன்மேலான நம்பகத்தன்மையை மேலும் மேலும் குறைக்கத்தான் செய்யுது" என்றவளுக்கு,
பேச்சுவாக்கில் அவளை நெருங்கியவன்,"நான் இப்பயும் சொல்றேன் பனி, எதையும் நான் திட்டம்போட்டு செய்யல. செய்யப்போறதும் இல்ல... அங்க அம்மாவும் அப்பாவும் கேள்வி கேக்கும் போது என்ன பண்ணச் சொல்ற? நாம ஏற்கனவே லவ் பண்றோம்னு அவங்ககிட்டச் சொல்லியிருக்கோம். உனக்கு ஞாபகமில்லையா?" என்று குஷா முடிக்கும் முன்னே,
"நாம இல்ல நீ. நீ தான் அப்படிப் பொய் பொய்யாச் சொன்ன"
"ஓ! அப்போ நம்ம மேரேஜ் அன்னைக்கு என் அம்மா உன்கிட்டக் கேட்டதுக்கு நீ என்ன சொன்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு" என்றதும் தான் மொட்டுவுக்கு அந்தச் சம்பவமே நினைவுக்கு வர அவளோ ஒரு கணம் தடுமாறினாள்.
அதை அவள் முகத்தில் கண்டவன் அவளை மேலும் நெருங்கி தன் கரத்தால் அவளைச் சுற்றி அணை கட்டியிருந்தான்.
"பனித்துளி உனக்கு இன்னுமா என்மேல நம்பிக்கையே வரல? எல்லாமே எதிர்பாராம நடந்தது. ஆனா அதை நாம இப்போ மாத்த முடியாது. மாத்தணும்னு நெனச்சா கூட அதுல நிறைய விபரீதம் நடந்திடும். இப்போ நான் உன்னை என்ன டி பண்ணேன்? எதுக்கு என்னை அப்படி முறைக்குற?" என்றவன் அவள் கன்னத்தை நோக்கி குனிய அவன் செய்கை புரிந்தாலும் அந்த நொடி கொடுத்த கிறக்கத்தில் அவள் தடுமாற அதை அவள் சம்மதமாக எண்ணி அவள் கன்னத்தில் முத்தமொன்றைக் கொடுத்திருந்தான் குஷா. ஆனால் அவன் முகம் முழுக்க மையலில் திளைத்திருந்தது.
மீண்டும் அதே செயலை முயற்சிக்க இம்முறை அதைச் சுதாரித்தவள் அவன் நெருங்கும் வேளையில் அவள் பலம் கொண்டு அவனைத் தள்ளியிருந்தாள்.
"நீ என்ன பண்ற குஷா?" என்றவளின் குரலில் கோவத்தை விட அதிர்ச்சியே மேலோங்கி இருந்தது.
"நான் உன்னைக் கட்டாயப்படுதலையே? நீ தடுக்கல சோ நான் மௌனம் சம்மதம்னு எடுத்துக்கிட்டேன்" என்று அசட்டையாக மொழிந்தான்.
"என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காத குஷா... என் மனசு மாறல. எனக்கு நீ இன்னும் அதே பழைய குஷாவாகத் தான் தெரியுற"
"முத்தம் மனதின் திறவுகோல்னு பொன்மொழியை நீ கேள்விப்பட்டதில்ல?"
"எந்த மடையன் அதைச் சொன்னது?"
"சாட்சாத் உன் புருஷன் தான் அந்த மடையன்" என்று அவன் புன்னகைக்க அவளோ கடும் சினங்கொண்டு முறைத்தாள்.
"என்ன முறைக்கிற? கவிஞர்கள் உருவாகுறதில்லை பனி, உருவாக்கப்படுகிறார்கள். பின்ன கம்பன் ஷெல்லி ஷேக்ஸ்பியர் எல்லாம் பொறக்கும் போதே கவிஞர்களா பிறக்கறதில்லை. அந்த அநேக கவிஞர்களுக்கு உன்னைப்போல ஒரு பொண்ணு தான் இன்ஸபிரேசனா இருந்திருப்பாங்க. அப்படிப்பட்ட கவிஞர்கள் வாயில இருந்து வரது தானே பொன்மொழிகள். இதுல விவேகானந்தர் மாதிரி சில விதிவிலக்கான ஆளுமைகளும் உண்டு. வேணும்னா..." என்று குஷா மீண்டும் முன்னேற,
"அங்கேயே நில்லு. கிட்ட வந்த கொன்னுடுவேன்" என்றவள் படுக்கையைச் சரி செய்ய குஷா ரெஸ்ட் ரூம் சென்று வருவதற்குள் அவர்களுக்கு இடையில் ஒரு தடுப்புச் சுவர் எழுந்திருக்க,
"என்ன மொட்டு இது? உனக்காக இவ்வளவு பெரிய மதில்சுவர் நான் இருக்கேன்?" என்று அனைத்து தலையணைகளையும் தூர வீசினான். அதன் பின் வாக்குவாதம் ஏதுமின்றி எப்போதும் போல் உறங்கினார்கள். ஆனால் மொட்டுவுக்குத் தான் அவன் தந்த முத்தமும் அந்த அருகாமையும் எதையோ உணர்த்தியது.
அதன் பின்னான நாட்கள் எப்போதும் போல் அழகாகவே நகர்ந்தது. ஜானகி, குஷா, ரகு ஆகியோர் பணிக்குச் சென்று விட மொட்டு தன்னுடைய எம்ப்ராய்டரிங் வேலையில் தீவிரமானாள். ஆனால் இதற்கிடையில் அவளுக்கு குஷாவைப் பற்றிப் புரிந்ததோ இல்லையோ ரகுநாத் ஜானகி ஆகியோரைப் பற்றி அதிகம் புரிந்துகொண்டாள். அவர்களுக்குள் இருக்கும் அன்பு புரிதல் ஆகியவற்றை நோட் செய்தவள் தன்னுடைய பெற்றோர்களிடம் இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தாள். ஏனோ அன்று குஷா சொன்னது தான் அவளுக்கு நினைவு வந்தது. அதேநேரம் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கும் ஜானகி ஏன் தன் தாத்தாவிற்காக கணவரிடம் பேசுவதில்லை என்று குழம்பியவள் இதைப் பற்றி ஜானகியிடம் கேட்டுவிட்டாள்.
"ஏன் மொட்டு உனக்கெதுவும் தெரியாதா?" என்றவருக்கு புரியாமல் பார்த்தாள் மொட்டு.
"சரி இப்படி வெச்சுப்போம். உனக்கும் குஷாவுக்கும் குழந்தை பிறக்குது. நாங்க யாருமில்லை. அப்போ உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குது. இன்னும் சொல்லப்போனா உன் வேலையில உனக்கு சம்பளம் அதிகம். அப்போ யாராவது ஒருத்தர் உங்க குழந்தையைப் பார்த்துக்கனும்னு முடிவெடுக்க குஷா அவன் வேலையை விடுறான். இந்தச் சமயத்துல நீ உன் ஊருக்குப் போகும் போது உன் சித்தப்பா இன்னும் ரெண்டு ஆளுங்களுக்கு முன்னாடி உன் தம்பி குஷாவை பொண்டாட்டி காசுல உட்கார்ந்து சாப்பிடுற ஆளுன்னு கிண்டல் பண்றான். இத்தனைக்கும் குஷா ஒரு நாளும் உன் தம்பியை ஒரு மச்சானா பார்க்காம கூடப் பிறந்தவன் போல நடத்துறான். அப்போ கூட இருக்குற ஆளுங்களும் அவனோட தன்மானத்தைச் சீண்டுறான். இந்த விஷயம் உன் காதுக்கு வருது. நீ என்ன முடிவெடுப்ப?" என்று கைகட்டி அவளின் முடிவை எதிர்பார்த்தார் ஜானகி.
ஏனோ இப்போது தான் மொட்டுவுக்கு அனைத்தும் புரிய ஆரமித்தது. அவள் முகம் குழப்ப ரேகைகளைச் செலுத்த,"இங்க எல்லோருக்கும் ஒரு ஈகோ இருக்கு மொட்டு. அன்னைக்கு உன் மாமா நெனச்சிருந்தா என்னை வேலையை விடச் சொல்லிட்டு பசங்களை என் பொறுப்புல விட்டிருக்க முடியும். அவரோட சம்பளத்துல அப்போதைக்கு குடும்பத்தை நடத்தியிருக்க முடியும் தான். ஆனா அப்படிச் செஞ்சியிருந்தா இன்னைக்கு இந்த அபார்ட்மெண்ட் பசங்களுக்கு நல்ல வாழ்க்கைனு எல்லாம் கிடைச்சிருக்காது. ஒரு குடும்பத்துல ஒரு குழந்தை இருந்தாலே அதுக்கு செலவு அதிகம் ஆகும். அதிலும் குழந்தைக்கு உடம்புல ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லவே வேண்டாம். எங்களுக்கு ரெட்டைப் பசங்க. லவாவுக்கு உடம்பும் சரியில்ல. குடும்பம் குழந்தைகளுக்காக எத்தனையோ அம்மாக்கள் அவங்க கனவை இழந்திருக்காங்க. ஆனா அப்பாக்கள்? உன் அப்பா செய்வானா? ஏன் என் அப்பாவே இதைச் செஞ்சியிருக்க மாட்டார். என்னால அவரை அப்பாகிட்டப் பேச சொல்லியிருக்க முடியும். ஆனா காயப்பட்டது அவர். அப்போ அவரா தான் முடிவும் எடுக்கனும். இன்னைக்கு எங்களுக்குள்ள இந்தப் புரிதல் இருக்குன்னா அன்னைக்கு நாங்க அவ்வளவு கஷ்டப்பட்டோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிறைய கஷ்டப்பட்டோம். அண்ட் ஆயிரம் இருந்தாலும் இது தான் என் குடும்பம். ஒருவேளை இவர் நடத்தை ஏதாவது சரியில்லைன்னா கூட நான் இவரை வற்புறுத்தி இருப்பேன். இது ஒரு வித மியூச்சுவல் ரெஸ்பெக்ட் மொட்டு. இன்னைக்கு வரை என்னையோ பசங்களையோ சூரக்கோட்டை போகக்கூடாதுனோ அவங்க கிட்டப் பேசக்கூடாதுனோ சொன்னதில்லை. உன் அப்பாவைக் கேட்டுப்பார். ஒரு மாமா மச்சானாவா அவங்க பழகுனாங்க? அவன் தோள்மேல கைபோட்டுத் தான் எப்பயும் பேசுவார். அண்ட் என் அப்பா கூட இவர் பேசாததுக்கு நானும் ஒரு வகையில காரணம். ஒரு முறை உன் தாத்தா இதைப் பத்திப் பேச இங்க வரேன்னு சொன்னார். நான் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன். அதனாலோ என்னவோ அந்த விரிசல் அப்படியே பெருசாகிடுச்சு. இதைப் பத்தி நான் பேசி எங்களுக்குள்ள சண்டை வந்து ஆளுக்கொரு திசையிலே வாழச் சொல்றயா? உன் அப்பா அன்னைக்கு குடிக்காம இருந்திருக்கலாம். இல்லை உன் சின்ன தாத்தா அதான் என் சித்தப்பா கூட இருக்காம இருந்திருக்கலாம். சரி நடந்தது நடந்திடுச்சு. இப்பயும் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏன் சொல்லு?"
மொட்டு புரியாமல் விழிக்க,
"நீயும் குஷாவும் தான். இன்னும் சொல்லப்போனா உங்களோட காதல் உங்க புரிதல் அதன் மூலமா இது சால்வ் ஆகும்" என்றவர் தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். ஏனோ மொட்டுவிற்கு இப்போது தான் இந்தப் பிரச்சனையின் அடிநாதம் புரியத் தொடங்கியது.
அந்த நொடியிலிருந்து மொட்டு தன்னுடைய மாமாவை வேறொரு கோணத்தில் பார்க்க ஆரமித்தாள்.
அன்று மாலை எல்லோரும் இணைந்து பேசிக்கொண்டிருக்கையில் ரகுவோ,"நீ அடுத்து என்னமா செய்யப்போற?" என்று மொட்டுவைக் கேட்க அவளோ எதைக் கேட்கிறார் என்று புரியாமல் விழித்தாள்.
"பாப்ஸ், அவ எம் எஸ் சி பண்ணப் போறா. அவளுக்கு பெரிய அளவுல இயற்கை விவசாயம் செய்ய ஆசை. அதுக்காக மேற்கொண்டு படிச்சு அதன் மூலமா இயற்கைக்கு நன்றி செலுத்தணும்னு விருப்பம். இதோ அப்பிளிக்கேஷன் கூட வாங்கிட்டேன்..." என்றதும் அவர்களைப் போல் மொட்டுவும் வியந்தாள்.
"டேய் அப்போ படிப்பை முடிக்க ரெண்டு வருஷம் ஆகுமே டா?" என்ற ஜானகிக்கு,
"ரெண்டு வருஷத்துக்கு மூணு மாசம் கம்மி... பரவாயில்ல ஆகட்டும். அது போக எனக்கும் தீசிஸ் வேலையெல்லாம் இருக்கு. சோ ரெண்டு பேரும் முடிக்க சரியாகிடும்"
ஜானகி குழப்பமாக ரகுவைப் பார்க்க அதைப் புரிந்தவன்,
"புரியுது ம்மீ. உன் எண்ணம் எனக்கு நல்லாவே புரியுது. நானும் வேலைக்குப் போறேன், நீயும் வேலைக்குப் போற அப்போ குழந்தை பிறந்தா யாரு பார்த்துக்கறது? அவளும் படிக்கனும். அவளுக்கும் ஆசை இருக்குமில்ல? ரெண்டு வருஷம் ரெண்டே வருஷம் பொறுத்துக்கோ. வேணுனா அதுக்குள்ள உன் மூத்த மகன் உன்னை பாட்டி ஆக்குறானான்னு பார்க்கலாம். ஆனா இவ படிக்கப்போறா..." என்றவன் மொட்டுவைப் பார்த்து சிரித்தவாறு கடந்தான்.
அங்கிருந்து அறைக்கு வந்ததும் வராததுமாக,"புரிஞ்சிடுச்சு எனக்கு இப்போ எல்லாம் புரிஞ்சிடுச்சு. என்னைப் படிக்க வெச்சு அதுல மட்டம்தட்டி பழிவாங்கப்போற... நல்ல பிளான். சூப்பர்..." என்றதும் இம்முறை அவள் பேச்சில் துளியும் வருத்தமடையாதவன் சிரித்தபடி நின்றான்.
"பாரு இப்போவே கிண்டல் பண்ண ஆரமிச்சுட்ட" என்றதும்,
"கொஞ்சம் கூட உன் மூளைக்கு வேலையே கொடுக்கமாட்டையா அழகி" என்றதும் அவளுக்கு கோபத்துடன் கூடவே வெட்கமும் வர,
"இப்போல்லாம் எதுக்கு என்னை பனி அழகினு கூப்பிடுற? என்னமோ ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்ச மாதிரி?" என்று இறுதியில் முணுமுணுக்க,
அவளை வழக்கம் போல் நெருங்கியவனைக் கண்டு,
"ஏய் தள்ளி நின்னு பேசு, ஆவுனா ஒட்டிக்கிறது..." என்று அங்கலாய்த்தாள்.
"எட்ட நின்னு பேசலாம் தான். ஆனா அது ஏனோ ஒரு மூணாவது ஆளு கூட பேசுற ஃபீல் தருதே? நீ என்ன மூணாவது ஆளா?" என்று நிறுத்தி குறுகுறுவென்று பார்த்தான் குஷா.
"பாரு நீ பேச்சை டைவர்ட் பண்ணுற... இப்போ எதுக்கு என்னைப் படிக்க வெக்க முயற்சிக்குற? எனக்கும் படிப்புக்கும் எவ்வளவு தூரம்னு உனக்கும் தான் தெரியுமே? நானெல்லாம் ப்ளஸ் டூ ஒரே அட்டெம்ப்ட்ல க்ளியர் பண்ணதே பெரிய புண்ணியம். இதுல அடிச்சு புடிச்சு பி.எஸ்.சி டிக்ரீ வேற வாங்கிட்டேன். அதுவே எனக்குப் போதும். எம்.எஸ்.சி எல்லாம் முடியவே முடியாது..." என்று முகத்தை அஷ்டகோணலாக்கினாள்.
"சரி போ உன் தலையெழுத்து அப்படி இருந்தா என்ன பண்ண முடியும்?" என்று உண்மையாகச் சலித்துக்கொள்வதாய் அவன் நடிக்க அதில் துணுக்குற்றவள்,
"ஏன் என் தலையெழுத்துக்கு என்ன?" என்றாள் மொட்டு.
"நீ இருபத்தி நாலு வயசுல ஒரு புள்ளைக்கு அம்மா ஆகணும்னு விதி இருக்கு போல?" என்று அவன் மீண்டும் அவளை வம்பிழுக்க அதன் மெய்ப்பொருள் உணர்ந்தவள் அதிர்ந்து அவனை நோக்க,
"என்ன ஷாக் ஆகுற? ஏதோ நீ படிச்சாலாவது பொண்டாட்டி படிக்குறா அதனால் காலம் போகட்டும்னு சொல்லிடலாம். இல்ல இன்னும் ரெண்டு மூணு மாசத்துல அம்மாச்சில இருந்து எல்லோரும் கேள்வியாக் கேப்பாங்க. இதுவும் நல்லது தான். சரி நீ சொல்லு உனக்கு பையன் பிடிக்குமா இல்ல பொண்ணு பிடிக்குமா?" என்று கேட்டவனை விழி அகலப் பார்த்தாள் மொட்டு.
"ரெடியா ரெடி ரெடியா ரெடி ரெடியா?" என்று அவன் அவளை நெருங்க அவளோ அவன் சொன்னதை எண்ணிக் குழப்பத்தில் இருந்தாள்.
"நீ அன்னைக்கு ஏதோ நல்லவன் மாதிரி பேசுன? கம்பெல் பண்ண மாட்டேன் அது இதுனு?" என்றவளுக்கு மீண்டும் வார்த்தைகள் தந்தியடிக்க,
"அதுக்குனு காலத்துக்கும் அப்படியே இருக்கறதா?" என்று சிரிக்க,
"குஷா தயவு செஞ்சு விளையாடாத?"
"ஓகே ஜோக்ஸ் அபார்ட். இங்க பொதுவா எந்த ஒரு வேலைக்குப் போகனும்னாலும் நமக்கு ஒரு டிகிரி வேணும். டிகிரி வெச்சு இருந்து பிராக்டிகல் நாலெட்ஜ் இல்லைனால் கூட நம்மை மதிச்சு வேலை கொடுப்பானுங்க. ஆனா எல்லாம் தெரிஞ்சிருந்தாலும் டிகிரி இல்லைனா ஒரு பையனும் மதிக்கவே மாட்டான். உனக்கு விவசாயத்தைப் பத்திய பிராக்டிகல் நாலேஜ் நிறையவே இருக்கு மொட்டு. ஆனா உன்னை எடைபோடுறதுக்கு உனக்கு ஒரு மாஸ்டர்ஸ் டிகிரி வேணும். நீ மட்டும் எம்.எஸ்.சி முடிச்சிட்டா உன் கனவுகளை ரொம்ப சீக்கிரம் எட்டிப் பிடிச்சிடலாம். ஒருவேளை நாளைக்கு எனக்கே ஏதாவது ஆச்சுனா கூட நீ தைரியமா வாழலாம். யாரையும் நீ டிபெண்ட பண்ணி இருக்க வேண்டாம் பாரு" என்று சிரிக்க முதலில் அவன் சொல்ல வருவது அவளுக்குப் புரியாமல் போக பிறகு புரிந்தவள்,
"வாயைக் கழுவு டா. அறிவில்ல உனக்கு? இப்படித்தான் அபசகுனமா பேசுவியா?" என்று நொடியில் பழைய மொட்டு வெளியே வந்தாள்.
"ஏ மொட்டு இதுல என்ன தப்பிருக்கு? நான் ப்ராக்டிகலா பேசுறேன். எல்லோரும் நூறு வயசு வாழ முடியுமா என்ன? என் தலையெழுத்து என்னவோ? முப்பதிலும் முடியலாம் அறுப்பதிலும்" என்று முடிக்கும் முன்னே அவனை அறைந்திருந்தாள். அதை குஷா துளியும் எதிர் பார்க்கவில்லை. இருந்தும் அவளை ப்ரவோக் செய்து பார்க்க எண்ணியவன்,
"அதான் உனக்கு என்னைப் பிடிக்காதில்ல? நான் உன்னை ஏமாத்திட்டேன் இல்ல? அப்பறோம் நான் வாழணும்னு நீ ஏன் நினைக்குற?" என்றதும் மீண்டும் அவனை அடிக்க கை ஓங்கியவளின் கரத்தைப் பிடித்தவன்,
"அவ்வளவு சுலபத்துல எல்லாம் உன்னை விட்டுப் போயிட மாட்டேன் அழகி! அதாவது திமிரழகி. பொதுவா எனக்கு ஆட்டிடியூட் காட்டுறவங்களைப் பிடிக்காது. எல்லாத்துக்கும் ஒரு விதிவிலக்கு இருக்குமில்ல? அது போல என் விதிவிலக்கு நீ தான் டி பனி. அப்போ படிக்க ரெடி ஆகு. அண்ட் எனக்குத் தெரிஞ்சு நீ ஒழுங்காப் படிக்காம போனதுக்கு காரணம் என்ன தெரியுமா? விவசாயத்துல உனக்கிருந்த அந்த அதிக பட்ச ஆர்வம் தான். ஊர்ல எப்போ பாரு ஆடு மாடு தோட்டம்னு சுத்திட்டு இருந்தா எப்படி படிக்கனும்னு எண்ணம் வரும் சொல்லு? இங்க உனக்கு அந்த டிஸ்டர்பென்ஸ் இருக்காது. சோ நீ தாராளமாப் படிக்கலாம். படிக்குற" என்றவன் நகர்ந்து,
"ஆனாலும் இது தான் சாக்குன்னு உன் ரிவெஞ்ச தீர்த்துக்கிட்ட இல்ல? அப்பா எழும்பா இருக்குற உன் அடியே இப்படி வலிக்குதே அன்னைக்கு நான் அடிச்சதை எப்படி டி தாங்குன? இந்தக் கன்னத்துல தானே அடிச்சேன்?" என்றவன் நொடியில் அங்கு முத்தமிட்டவன் மீண்டும் மொட்டுவை உறைநிலைக்கு அழைத்துச்சென்றான். ஏனோ அவன் அருகில் நெருங்கினாலே அவள் உடல் செயலிழக்க தொடங்கிவிடுகிறது போல?
'கன்னத்தில் அடிக்கும் அடி
முத்தத்தாலே வேண்டுமடி
மத்ததெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன போதும்
என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே?'
என்று பாடிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
**************
அங்கே லவா அனுவின் வாழ்க்கை அவர்கள் திட்டமிடாமலே அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்து கொண்டிருந்தது. அன்று அவளை ஆபிசில் இறக்கி விட்டு காதல் வசனம் பேசிச் சென்றவன் அதன் பின் தன்னுடைய வாழ்க்கை புத்தகத்தில் காதலதிகாரத்தை வேகமாக எழுதத் தொடங்கினான்.
இருவரும் வேலைக்குச் செல்வதால் வேலை முடித்து வீடு திரும்பவே இரவாகிவிடுகிறது. அதன் பின் உணவு உண்டு அன்றைய பொழுதில் நடந்ததை எல்லாம் பகிர்ந்துகொண்டு உறங்க சென்றாலும் சிறு அணைப்பு முத்தம் என்றே வாழ்க்கை நகர்ந்தது. என்னதான் லவா சொல்லாமலே அவன் மனதில் அவள் மீது இருக்கும் காதலை அனுவால் புரிந்துகொள்ள முடிந்தாலும் அவனிடமிருந்து ஒரு பார்மல் ப்ரப்போசலை அவள் எதிர்நோக்கி இருந்தாள்.
தங்களுடைய அந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு அன்று முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய லவா அன்று வீட்டிற்கு விரைவிலே வந்திருந்தான். வந்தவன் அவளை எவ்வாறு ப்ரபோஸ் செய்வதென்று யோசிக்க அவனுக்கு ஒரு யோசனை வந்தது. அதை திட்டமிட்டு சில வேலைகளை செய்து முடித்தவன் அனுவை 'பிக் அப்' செய்ய அவள் அலுவலகத்திற்குச் சென்றான். வழக்கத்திற்கும் மாறாக அவன் முகத்தில் தெரிந்த ஒரு தேஜஸை அனுவும் கண்டுகொண்டாள் தான். இருந்தும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவனுடன் பயணித்தாள்.
"ஹே லவா என்ன ப்ரெஷா இருக்க? உனக்கு லீவா இன்னைக்கு?" என்று அப்போது தான் அவன் உடையை கவனித்தவளாகக் கேட்க,
"இது தான் உன் டக்கா புஜ்ஜு? நல்லா வருவ போ" என்று அவன் சலித்துக்கொள்ள,
"பார்ரா யாரெல்லாம் 'டக்கை' பத்திப் பேசுறதுனு ஒரு வரைமுறையை இல்லாம போயிடுச்சு?' என்று வழக்கம் போல் அவனைக் கிண்டல் செய்தாள்.
"இன்னைக்குப் பார்ப்ப என் டக்கை" என்று அவன் வண்டியைச் செலுத்த அவளுக்கோ சொல்ல முடியாத ஒரு ஆவல் பிறந்தது.
"ஏன் என்ன பண்ணப் போற? ஒருவேளை ப்ரபோஸ் பண்ணிடுவியோ?" என்று அவள் சாதரணமாகக் கேட்க ஏனோ லவா தான் அவளுடைய அசாத்திய புத்திக்கூர்மையை எண்ணி வருந்தியவன்,
"அதுக்கும் மேல" என்றான்.
"அதுக்கும் மேலான? என்ன பர்ஸ்ட் நைட்டா?" என்று அனு கேட்ட நொடியில் வண்டியை சடன் பிரேக் போட்டான்.
"என்ன அதுதானா?" என்று அதே கிண்டலில் அவனைச் சீண்டினாள் அனு.
"ஏய் கொஞ்சமாச்சும் எக்ஸைட் ஆகுடி. கொஞ்ச நேரமாச்சும் என் சஸ்பென்ஸை பிரேக் பண்ணாம இரு. இப்படி எல்லாத்தையும் பொசுக்கு பொசுக்குன்னு சொன்னா நான் என்ன தான் செய்யுறது?" என்று அப்பாவியாய்க் கேட்டவனை வியப்புடன் பார்த்தவள்,
"அப்போ?" என்று அவள் முடிக்கும் முன்னே,
"ஆக்கப் பொறுத்தவ கொஞ்சம் ஆளவும் பொறுக்கனும்" என்று சொல்லி வண்டியை தங்கள் பிளாட்டின் முன்பு நிறுத்த,
"இப்போ நான் என்ன செய்யணும் லவா? நீ முன்னாடி போய் உன் பின்னாடியே நான் வந்தா எல்லாம் ஓகே வா?" என்று அவன் சர்ப்ரைஸா மொக்கை செய்தாலும் அவளுக்குள்ளும் மெல்லிய ஆர்வம் இருக்கத்தான் செய்தது.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீயே முன்னாடி போ" என்று அவள் பின்னாலே இவன் செல்ல இப்போது தான் அவள் ஆர்வம் விஸ்வரூபம் எடுக்க ஆரமித்தது.
முன்னே சென்றவள் கதைவைத் திறக்க அவளுக்குத் தெரிந்து பெரியதாக எந்த மாற்றமும் இல்லமால் தான் இருந்தது. அதில் உண்மையிலே அனுவும் ஏமாற்றம் அடைந்தாள். பின்னே அவளவன் அவளுக்கு தரும் முதல் சர்ப்ரைஸ் அல்லவா? அவள் எதையும் காணாததால் திரும்பி லவாவைப் பார்க்க,
"போ போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா" என்றவன் சோபாவில் அமர்ந்தான். அவளோ குழப்பத்துடன் குளியறைக்குள் சென்றவள் வெளியே இவன் எதையாவது செய்கிறானா என்று ஒட்டுக்கேட்க ஆரமித்தாள். அப்படி எதுவும் நிகழாமல் இருக்க,
'உனக்கு எதுக்குடி இவ்வளவு அவசரம்? அவனே இன்னைக்கு தான் ஏதோ ட்ரை பண்ணறான். அதையும் கெடுத்துட்ட' என்று திட்டியவாறே வெளியேறினாள்.
இப்போது பிளாட் முழுவதும் இருள் சூழ்ந்திருக்க சுவிட்ச் ஆன் செய்தும் எதுவும் வேலை செய்யவில்லை என்றதும்,
"லவா என்னாச்சு?" என்று அவள் வெளியேற அங்கேயும் காரிருள் சூழ்ந்திருந்தது.
"லவா, எங்க இருக்க நீ?" என்று அடுத்த அடியை அவள் எடுத்து வைக்க அப்போது ஒரு தீக்குச்சியின் கங்கு அங்கிருந்த ஒரு மெழுகுவர்த்தியை ஒளிரவிட அதை எடுத்தவன் சுற்றியிருந்த மெழுகுவர்த்திகளை எல்லாம் ஒளிரவிட்டான். அப்போது தான் அதைக் கவனித்தாள் அனு. டைனிங் டேபிள் மீது அந்த மெழுகுவர்த்திகள் இருக்க எதிர் எதிரே இரண்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதே வேளையில் அந்த டேபிளில் உணவுகளும் தயாராக இருந்தது.
"கேண்டில் லைட் டின்னர். நீ நான் மெழுகுவர்த்திகள்" என்று சொன்னவன் ஆங்காங்கே இருந்த மெழுகுவர்த்திகளை எல்லாம் ஒளிரவிட்டான்.
"யூ கெஸ்ட் இட் ரைட்? ஓகே! நீயே ஒரு ஆச்சர்யம் உனக்கெதுக்கு ஒரு ஆச்சர்யம்னு என்னை நானே சமாதானம் செஞ்சுக்கிறேன்" என்று அவளை நோக்கி வந்தவனின் நிழலை ரசித்தவள் இறுதியாக அவன் கூறிய ஹைக்கூவில்(? இது தான் ஹைக்கூவானு யாரும் சண்டைக்கு வரக்கூடாது) மெய்மறந்து நின்றாள்.
"லவா யூ சர்ப்ரைஸ்ட் மீ... சத்தியமா எனக்கு வார்த்தைகளே வரல... இது எல்லாம் நிஜம் தானே? எங்க கொஞ்சம் கிள்ளு" என்றவள் அவன் கரம் கொண்டு தன்னையே கிள்ளிக்கொண்டவள்,
"இது நிஜம் டா" என்று அவன் சுதாரிக்கும் முன்பு அவனை அணைத்திருந்தாள்.(நேரம் கைகூடும்!)
 
Last edited:
Mottu......unna enna solrathu.... evvalavu purinchu vachu pesara Kushava vaarthaiyaalaye hurt panraale,
ama ji... heroine a suthi anai katrathu unga heroes ellarukum kai vantha kalaiyo?
parraa...Kusha kedacha gapla laam sixer adikiratha,ha..ha... confirm aa Kusha playboy thaan,innaikulla cini heroeskellam tough competitor ivanthaan,
Janaki amma great..... sariyaana nerathula panra valuable information and explanations, inimela Mottuthaan think panni Kusha side emotions , feelings understand pannanum,
Wow..... great Kusha.... mass kaatraan, vera level purithal, evvalavu romantic aa pesaravanukku adikkadi gate potuttu irunthaa avanum ennathaan pannuvaan....Ha..Ha.... Mottu nee ettadi paanchaa naanga 16adi paaivomla,semma,Tim& Jerry paartha maathiri irukku, enakku Kusha pesa pesa Mottu mela kovam athihamahuthu.... Over kaathalla kavithai thaanaa varumo? (ungalukku)
Lava... nee nadathu.... unakku engayo macham iruku,
Ji.... Kalakiteenga
 
கவித.... கவித ???

அண்ணனும் தம்பியும் என்னமா கவித சொல்றானுங்க ??
 
Mottu......unna enna solrathu.... evvalavu purinchu vachu pesara Kushava vaarthaiyaalaye hurt panraale,
ama ji... heroine a suthi anai katrathu unga heroes ellarukum kai vantha kalaiyo?
parraa...Kusha kedacha gapla laam sixer adikiratha,ha..ha... confirm aa Kusha playboy thaan,innaikulla cini heroeskellam tough competitor ivanthaan,
Janaki amma great..... sariyaana nerathula panra valuable information and explanations, inimela Mottuthaan think panni Kusha side emotions , feelings understand pannanum,
Wow..... great Kusha.... mass kaatraan, vera level purithal, evvalavu romantic aa pesaravanukku adikkadi gate potuttu irunthaa avanum ennathaan pannuvaan....Ha..Ha.... Mottu nee ettadi paanchaa naanga 16adi paaivomla,semma,Tim& Jerry paartha maathiri irukku, enakku Kusha pesa pesa Mottu mela kovam athihamahuthu.... Over kaathalla kavithai thaanaa varumo? (ungalukku)
Lava... nee nadathu.... unakku engayo macham iruku,
Ji.... Kalakiteenga
பின்னாடி புரிஞ்சிப்பா... இருக்கலாம் என்னவோ அந்த மாதிரி அணைகட்டுனா நல்லா இருக்கும்னு தோணுச்சு? ஆனா அவன் ஆளு தான் நம்பவே மாட்டேங்குறாளே? பண்ணுவா. அதானே அவன் நெருங்க அவள் விலகினா என்ன செய்யறது? நான் ஒரு அக்மார்க் ஐ எஸ் ஐ முத்திரை குத்தின சிங்கிள் சிங்கிள் சிங்கிள். நன்றி?
 
கவித.... கவித ???

அண்ணனும் தம்பியும் என்னமா கவித சொல்றானுங்க ??
உங்களுக்குத் தெரியுது சம்மந்தப்பட்ட அந்த ரெண்டு பயபுள்ளைங்களுக்கு தெரிய மாட்டேங்குதே? என்ன பண்ண???
 
Semma kusha kalakara.... Kusha part rmba piduchu iruku... Lava rmba kastam... Unmaiya ipadi find panuna Enathan panrathu... Anu konjam wait panuma... Avanae Ipothn Lkg pass Akitu irukan
 
குஷா அண்ட் பனி செம்ம. நான் சொன்னேன்ல குஷா அதெல்லாம் சமாளிச்சுருவான்னு?? யாரு நாங்கெல்லாம்????மொட்டு என்ன யாருஸவந்தாலும் அசால்டா சமாளிச்சுருவோம். ரகுப்பா??ஜானுமா ?????. ஒரு வழியா பனித்துளி புரிஞ்சுகிட்டாளா ஜானுமா சைடு நியாத்தை. லவா??? அட அனு அவனே பாவம் இப்பதான் ரெமோவா மாறி எதோ பண்றான் இப்படி கண்டுபிடிச்சேன்னா பாவம் இல்லையா லவா. எபி ????
 

Advertisement

Top