Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-1

Advertisement

"மணமகளே மருமகளே வா வா...
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா...
குணமிருக்கும் குலமகளே வா வா...
தமிழ்க்கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா..."

என்ற பாடலை 'வோக்கல்ஸ்' எனப்படும் பாடல் வரிகள் இல்லாமல் 'கரோக்கி' எனப்படும் பின்னணி இசையை மட்டும் தங்களுடைய மிருதங்கம் மற்றும் நாதஸ்வரம் மற்றும் ஏனைய இசைக் கருவிகளின் வாயிலில் அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்தவாறு இசைக்கலைஞர்கள் வாசிக்கத் தொடங்கிய வேளையில் அவர்களை நோக்கி அங்கே வந்தவன் அவர்களை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தவாறே அங்கு வந்தடைந்தான் 'அபி' எனப்படும் அபிலேஷ்.

தங்களை நோக்கி வந்தவனின் முகபாவத்தை வைத்தே அவனது அசௌகரியத்தையும் அவனுடைய பிடித்தமின்மையையும் உணர்ந்த இசைக் கலைஞர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு தங்கள் ஸ்ருதியைக் குறைக்கத் தொடங்கினர். ஏனோ தன்னுடைய வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் அவர்கள் இசைப்பதாய் உணர்ந்த அபி,

"நிறுத்துங்க. ப்ளஸ் ஸ்டாப் திஸ்..." என்று உச்ச சுருதியில் கத்தவும் அங்கே நிர்மலா வரவும் சரியாக இருந்தது.

"டேய் டேய் அபி... என்னடா பண்ற? ஏன் அவங்க வாசிப்பதை நிறுத்த சொல்ற? உனக்கென்ன பைத்தியமா?" என்ற நிர்மலாவுக்கு,

"ஐயோ அத்த... எனக்கா பைத்தியம்? நீங்க எல்லாம் எந்தக் காலத்துல இருக்கீங்க? நைன்டீன் சிக்டீஸ்ல வந்த பாட்டு இது... எனக்குத் தெரிந்து நம்ம மாமா கல்யாணத்துலயும் இந்தப் பாட்டு தான் வாசிச்சதா ஞாபகம்... ஒரே இரிடேட்டிங்கா இல்லையா?" என்று தன்னுடைய எரிச்சலைக் கொட்டினான் அபி.

"உன் மாமா கல்யாணம் மட்டுமில்ல என் கல்யாணம் உங்க அப்பா கல்யாணம் ஏன் நாளைக்கு உன்னுடைய கல்யாணத்துக்கும் கூட இதே பாட்டு தான் வாசிப்பாங்க... இது கிராமம்... இங்கலாம் எந்தக் கல்யாணம்னாலும் இந்தப் பாட்டு இல்லாம இருக்காது... அதுமில்லாம இப்படி மங்களகரமா பாட்டு இசைக்கும் போது இப்படித்தான் அபசகுனமா அதை நிறுத்தணும் சொல்லுவியா?" என்றவர் அந்தக் கலைஞர்களைப் பார்த்து வாசிக்குமாறு சொல்ல மீண்டும் அவரைத் தடுத்தவன்,

"அத்தை... என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் மேரேஜுக்கு வருவாங்க. என்னைய விடுங்க நம்ம மாமாஸ் ரெண்டு பேருடைய நிலையை யோசிச்சிங்களா? அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வந்திருக்காங்க... அவங்க எல்லோரும் நம்மளைப் பற்றி என்ன நினைப்பாங்க?"

"ஏன்டா அப்படி என்னடா நாம தப்பு பண்ணிட்டோம்? சரி என்ன நினைபாங்கனு நீயே சொல்லு பார்க்கலாம்?"

"நம்ம எல்லோரையும் சுத்த 'கண்ட்ரி பெல்லோஸ்'னு நினைக்க மாட்டங்களா? நாம எல்லோரும் சுத்த பட்டிக்காட்டான் மாதிரி தெரிவோம்..." என்றவன் தற்போது அந்த வாத்திய கலைஞர்களிடம் திரும்பி,

"நான் ரெண்டு மூணு கரோக்கி பிளே பண்ணி காட்டுறேன் அதைத் தான் நீங்க வாசிக்கணும்..." என்றவன் ஒரு கணம் நிறுத்தி,"ஆமா உங்களுக்கு அதெல்லாம் வாசிக்கத் தெரியும் தானே?" என்று இழுக்க அதை தங்களுக்கு நேர்ந்த அவமானமாகவே எண்ணிய அவர்கள் அவன் சவாலுக்கு ஒப்புக்கொள்ள,

"நானே வருகிறேன்...
கேளாமல் தருகிறேன்...
கண் தீண்டி உறைகிறேன்...
கை தீண்டி கரைகிறேன்..."

என்ற பாடலின் கரோகியைக் போட்டுக்காட்டியவன் அதற்கடுத்து வரவிருக்கும்,'சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே... சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே... சின்னஞ்சிறு விரல் கொடு... சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு சின்னஞ்சிறு ஆசைக்குப் பொய்ச்சொல்லத் தெரியாதே...' என்ற வரிகளுக்கு அதிகபடியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அதன் இயல்பு துளியும் மாறக்கூடாது என்றும் அழுத்தந்திருத்தமாகச் சொன்னான். அந்தக் கலைஞர்களோ தங்களை இன்னும் நம்பாமல் இருக்கும் அவனுக்கு தங்களுடைய முழு திறமையை நிரூபித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட அதை மீண்டுமொரு முறை செவிகொடுத்து தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இதைத் தடுக்க முடியாமல் அதே நேரம் இப்போது இந்தப் பாட்டை இவர்கள் இசைத்தால் இங்கு என்ன களேபரங்கள் எல்லாம் வருமோ என்ற தவிப்பிலும் அச்சத்திலும் இருந்தார் நிர்மலா.

அவ்வேளையில் வீட்டிற்குள் அவருக்கு எதிரில் சென்ற மேகலாவைக் கண்டு தைரியம் வந்தவராக அவரை அழைக்க முற்பட அதற்குள் இங்கே அந்த வாத்திய கலைஞர்கள் 'நானே வருகிறேன்' என்ற பாடலின் தொடக்க வரிகளான 'பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே... நில்லாத என் உயிரோ எங்கோ செல்லுதே...' என்ற வரிகளை அச்சு பிசகாமல் அப்படியே இசைக்க ஒரு கணம் அந்தக் கூடாரத்தில் இருந்த எல்லோரும் இவர்களையே திரும்பிப் பார்த்தனர்.

பாடல் மாற்றி இசைக்கப்படுவதைக் கேட்ட 'பாரி' வேகமாய் அவர்களை நோக்கி வந்தான். தனக்கு ஆதரவாக ஒருவன் வந்துவிட்டான் என்று அறிந்து உற்சாகப்படும் முன்னே அங்கே வந்தவன் அபியின் தோளைத் தொட்டு,"மச்சி சூப்பர் டா... யூ மேட் திஸ் டே மோர் மெமோரபில்..." என்று சொல்ல அப்போது அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராய் அங்கு பிரவேசிக்கத் தொடங்கினர்.

முதலில் அங்கே தோன்றிய சபாபதியைக் கண்ட நிர்மலா,"டேய் சபா, இங்க வந்து கொஞ்சம் என்னனு கேளுடா... பாருடா இந்தப் பசங்கள... அப்பா வந்தா என்ன ஆகும்?" என்று முடிக்கும் முன்,

"என்ன ஆகும்? என் பேரப் பசங்க எல்லோரும் என்னை மாதிரியே நல்ல ரசனை கொண்டவங்க போலன்னு அவர் பெருமை படுவார்..." என்ற பாரிக்கு ஹை பை கொடுத்தான் அபி.

இந்தச் சப்தம் கேட்டு அங்கு வந்த கனகா,"ஹே நிர்மலா அங்க என்ன பண்ணிட்டு இருக்க? டேய் சபா நீயும் என்னடா மசமசன்னு நிக்குற? அங்க பாரு வீட்டுக்கு ஒவ்வொருத்தரா வர ஆரமிச்சிட்டாங்க... அவங்களுக்கு குடிக்க எதுவும் தரலயா?" என்றவர் சந்தேகமாய் வீட்டின் முற்றத்தைப் பார்க்க அங்கு வருபவர்களை வரவேற்க யாரும் இல்லை என்பதைக் கண்டு,"ஹே நிர்மலா உன் கிட்ட நான் என்ன சொல்லி அனுப்பினேன்? நீயும் மாப்பிள்ளையும் வெளிய நின்னு வரவங்களை வரவேற்கணும்னு தானே சொன்னேன்? நீ என்ன அங்க சின்ன பசங்க கூடச் சேர்ந்து கதை பேசிட்டு இருக்க? வேலை தலைக்கு மேல இருக்குனு உனக்குத் தெரியலையா? இல்ல இதை உனக்கு வேற நான் தனியா சொல்லனுமா என்ன?... டேய் சபா நீயேன்டா இங்க நிக்குற? உன்னை நான் பின்னாடி பந்தியைப் பார்க்கத் தானே சொன்னேன்?" என்றதும் நொடியில் அங்கு கூடியவர்கள் எல்லோரும் கலைந்தனர்.

தன்னுடைய செயலுக்கு எந்த எதிர்ப்பும் எழாத மகிழ்ச்சியில் "எஸ்..." என்று ஆர்ப்பரித்த அபி அடுத்து என்னென்ன பாடல்கள் இசைக்கப்பட்ட வேண்டும் என்ற லிஸ்டை அந்த இசை கலைஞர்களிடம் கொடுக்க விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர்.

இதுவரை திருமணத்தை மண்டபத்திலோ, பார்ட்டி ஹாலிலோ, ஏன் கோவிலில் கூடப் பார்த்தவர்களுக்கு இப்போது வீட்டிலே நடக்கும் இந்த முறை ஆச்சரியமாகத் தெரிந்தது. இது கொரோனா காலகட்டம் என்பதால் தான் இவ்வாறு நடக்கிறது என்று அவர்கள் யோசிக்க அப்போது அவர்களுள் ஒருவன்,"மச்சி ஒருவேளை இது கொரோனா சீசனா இல்லாட்டியும் இவங்க மேரேஜ் இப்படித்தான் அதும் இங்க தான் நடந்திருக்கும்..." என்று சொல்ல அவனிடம் அவர்கள் எல்லோரும் அதற்கானக் காரணத்தைக் கேட்டறிந்தனர்.

அப்போது மாஸ்க் எதுவும் அணியாமல் வீட்டிற்குள் நுழைந்த பேச்சியம்மா பாட்டியிடம்,"அத்தாச்சி முகக்கவசம் போடுங்க... ஊர்ல இது அம்மை காலகட்டம் இல்லையா? நம்ம பாதுகாப்பு அவசியம்..." என்று அவருக்குப் புரியுமாறு கொரோனோவை அம்மை என்று குறிப்பிட்ட நிர்மலாவிடம்,
"என்னத்த கொரோனோவோ? நாம தான் நம்ம ஊர் கருப்பன், முனியப்பன், ரத்த மாரியாத்தா எல்லாத்துக்கும் கெடா வெட்டியாச்சே? இனிமேல் கொரோனோவாது ஒன்னாவது? அட போத்தா..." என்ற படி அவர் உள்ளே நுழைந்தார்.

இந்தக் கட்டுப்பாடுகளிலும் தங்கள் வீட்டிற்கு வரும் கூட்டத்தைக் கண்டு நிர்மலா அஞ்சிக்கொண்டிருக்க அவருடன் நின்றுகொண்டிருந்த கோபி,"ஐம்பத்தி ஒன்பது..." என்று உரைக்க,

"என்ன ஐம்பத்தி ஒன்பது? நான் என்ன சொல்றேன் நீங்க என்ன உளறுறீங்க?" என்ற நிர்மலாவுக்கு,

"இல்ல நிம்மி, இதுவரை வீட்டுக்கு வந்த கெஸ்ட் எண்ணிக்கை ஐம்பத்தி..." என்றவர் அப்போது வந்த அவ்வூரின் மளிகைக்கடைக்காரரை வரவேற்று,"அறுபது..." என்றார்.

"பரவாயில்லையே அறுபது தான் வந்திருக்கா? நான் கூட ரொம்ப பேர் வந்துட்டாங்களோனு பயந்துட்டேன்..." என்று ஆசுவாசமடைந்த நிர்மலாவிடம்,

"ஏ மண்டு... கெஸ்ட் மட்டும் அறுபது. நம்ம குடும்பத்து உறுப்பினர் எண்ணிக்கையே முப்பது தாண்டும். இதுல புள்ளைங்களோட ப்ரெண்ட்ஸ், மேளகாரங்க, சமையல் காரங்க லிஸ்ட் எல்லாம் கூட்டுனா... ஐயோ உங்க குடும்பத்துல பொண்ணு எடுத்த குத்ததுக்கு நான் இதெல்லாம் அனுபவிக்கனும் போல?" என்று அவர் வருந்த,

"ஏன் இந்தக் குடும்பத்துக்காக நீங்க ஜெயிலுக்குப் போக மாட்டிங்களா?" என்ற நிர்மலாவுக்கு,

"ஜெயிலுக்குப் போனா பரவாயில்லையே? எங்க ஒரேயடியா போயிடுவேனோனு பயமா இருக்கு..." என்று புலம்ப,

"என்ன பேச்சு இது? உங்களுக்குக் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா? நல்ல நாள் அதுவுமா இப்படிப் பேசுறிங்களே? நல்ல வேளை யாரும் கேக்கல... இல்லைனா என்ன ஆகுறது?"

"ஏன் டி உயிர் டி... போனா வராது..." என்று அவர் சொல்ல,

"அதெல்லாம் ஒன்னும் கவலைப்பட வேண்டாம்... நான் தீர்க்க சுமங்கலியா தான் போவேனாம்... என் ஜாதகம் அப்படித் தான் சொல்லுது..." என்றவர் வந்தவரை வரவேற்க,

"ஆமா உன் ஜாதகத்தைப் பற்றிய இந்த விஷயம் கொரோனாவுக்குத் தெரியுமா?" என்றவரை நிர்மலா முறைக்க,

"அம்மா அம்மா... உன்னைப் பெரியம்மா கூப்பிட்றாங்க..." என்றபடியே வந்தாள் மெல்லினி, நிர்மலா-கோபிநாத் தம்பதியரின் மூத்த மகள்.

"சரி நான் உள்ள போறேன் நீ இங்க இருந்து வரவங்களைக் கூப்பிடு..." என்றவர் தன்னுடைய கணவரிடம் திரும்பி,"அவளுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. அதனால் கூட இருந்து எல்லாம் கவனிச்சுக்கோங்க..." என்று உத்தரவு போட்டுவிட்டு உள்ளே சென்றார் நிர்மலா.

அங்கே வீட்டிற்குள் மணமக்களை அமர வைத்து திருமணம் செய்வதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்த குத்துவிளக்கை ஏற்றியபடி இருந்த சித்ராவிடம்,"அண்ணி கொடுங்க எல்லாம் நான் செய்யுறேன் நீங்க பொண்ணை ரெடி பண்ணுங்க..." என்று சொல்லி அந்த வேலையை அவர் செய்ய அப்போது அங்கு வந்த ஜானகி தன்னுடைய தங்கையைப் பார்த்து,"நிம்மி நீ ஏன் இன்னும் நகையெல்லாம் போடமா இருக்க? எங்க அந்தக் காசுமாலையைக் காணோம்? ஆசையா எடுத்தியே டி?" என்று பரிவோடு வினவிய ஜானகிக்கு,"ஆமாக்கா சரியா ஞாபகப்படுத்தனீங்க... இருங்க நான் அதைப் போட்டுட்டு வரேன்..." என்று விடைபெற அப்போது எதிர்ப்பட்ட கனகா,"நீ இன்னுமா ரெடி ஆகல நிம்மி? இந்த உமாவை எங்க ஆளையே காணோம்? அவளை நான் கூப்பிட்டேன்னு வரச் சொல்லு..." என்றவாறு தன்னுடைய மூத்த மகளான ஜானகியிடம் வந்தார் கனகா.

அப்போது அங்கு வந்த அபி,"அப்பத்தா, தாத்தாவை எங்க காணோம்? கல்யாணம் மாமன்களுக்கா இல்ல தாத்தாவுக்கா? புது மாப்பிள்ளை மாதிரி ஜோரா ரெடி ஆகுறாரோ?" என்று கிண்டலாய் உரைக்க,

"ஹாம் நல்லா சொன்ன டா. பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்ட கதையா இல்ல இருக்கு?" என்று சொல்லும் வேளையில் அவருக்குப் பின்னால் வந்து நின்றார் வைத்தியலிங்கம், சாட்சாத் சற்று முன்னர் அபிலேஷ் கிண்டல் செய்த தன்னுடைய தாத்தாவே தான் அது.
"ஏலே அபி, நான் என்ன உங்க அப்பத்தா மாதிரி கிழட்டுக் கட்டையா என்ன? என்னைப் பார்? என் மீசையைப் பாரு? என் உடல் வாகைப் பாரு? இந்த வயசிலும் நான் சீறி வரும் ஜல்லிக்கட்டு காளையை ஒத்தையாளா அடக்குவேன்லே..." என்றவாறு தன்னுடைய மீசையை கம்பீரமாக முறுக்கினார் வைத்தியலிங்கம்.

அப்போது,"ஜானகி..." என்று குரல் கொடுத்தவாறு வந்த ரகுநாத்தைக் கண்டவர், தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்த தன் பல வருடத் தோழனான நடராஜனை நோக்கிச் சென்றார் வைத்தியலிங்கம். இந்த உலகத்திலே வைத்தியலிங்கம் தன்னுடைய கம்பீரக்குரலைத் தவிர்த்து மென்மையாகப் பேசும் ஒரே நபர் என்றால் அவர் தன்னுடைய மூத்த மருமகனான ரகுநாத் ஒருவரே. பின்னே மாமனாருக்கும் மருமகனுக்கும் அப்படியொரு பொருத்தம் சாரி ஏழாம் பொருத்தம்!

அதும் போக இன்று நடக்கவிருக்கும் இந்தத் திருமணம் இவ்வாறு நடக்கும் என்று கனவிலும் கூட வைத்தியலிங்கம் நினைத்ததில்லை. பல வருடங்களாக தன்னோடும் தன் குடும்பத்தோடும் தாமரை இலை நீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் தன் மருமகன் அவர்தம் பிள்ளைகளின் திருமணத்தை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் பூர்விக வீட்டில் அதும் தான் பார்த்த வரன்களுடன் நடத்த ஒப்புகொண்டதே தன்னுடைய ஏதோவொரு முன் ஜென்மத்தின் புண்ணியம் என்று நினைக்கும் வேளையில் அவர் முன் தன் பெருமைகளைப் பேசி இதனால் வீணாக வாக்கு வாதங்களையோ இல்லை அவர் மனம் கோணும் படியோ இல்லை இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் இருக்க வேண்டியே அந்த இடத்தை உடனே காலி செய்தார் வைத்தியலிங்கம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வைத்தியலிங்கத்தின் இயலாமையாகவோ இல்லை ரகுநாத்தின் ஆளுமையாகவோ தெரியலாம். ஆனால் உண்மையில் இதற்குப் பெயர் இயலாமையோ ஆளுமையோ இல்லை. இதைச் சாமர்த்தியம் என்றோ அல்லது சமயோஜிதம் என்றோ சொல்லலாம். நம் காரியம் நடக்க வேண்டுமானால் சில விஷயங்களை நாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்பார்களே? அதுவே இது. மேலும் இதில் தன்னுடைய மகளின் வாழ்க்கை வேறு அடங்கியுள்ளதே? இந்தியாவில் மட்டும் தான் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் தங்களுடைய சுயமரியாதையைக் கொஞ்சம்(சிலரோ முழுவதும்) விட்டுக்கொடுக்க வேண்டிய அவல நிலை இருக்கிறது என்பது வேதனையளிக்கும் உண்மை... (நேரம் கைகூடும்...)

ஹாய் மக்களே, இது என்னுடைய ப்ராண்ட் நியூ நாவல். ஆம் இதொரு குடும்பம் சார்த்த கதை. என்னுடைய 'தூரிகை வாழ்க்கைக்கு'ப் பிறகு நான் எழுதும் ஒரு முழுநீள குடும்பக் கதை. பெருசா எதிர்பார்க்காதிங்க... ஆனால் இந்தக் கதை நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். வழக்கம் போல் நிறைய கதாபாத்திரங்கள் வந்திடுச்சு. அது யார் யார்னு நான் அடுத்தடுத்த அத்தியாயத்துல சொல்லிடுறேன். ஆனால் வாரம் இரண்டு அத்தியாயங்கள் தான் வரும். மன்னிச்சு... இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்??



New story ku congrats writer ji?,,,, characters neraiya irukkaanga, keerthanai niyabagam vanthutu athulayum characters neraiya irukum la then marriage scene,,,,, story ???????
 
New story ku congrats writer ji?,,,, characters neraiya irukkaanga, keerthanai niyabagam vanthutu athulayum characters neraiya irukum la then marriage scene,,,,, story ???????
thank you so much? but this story is very simple one... maximum 20 -25 epis only
 
எஸ் இரவை இன்னைக்குத் தான் அப்லோட் பண்ணேன்... நான் இதுவரை வெறும் சிட்டி சப்ஜெக்ட் ஸ்டோரீஸ் மட்டும் தான் எழுதியிருக்கேன். இந்தக் கதையும் 60% சிட்டில தான் நடக்கும். ஆனா முதல் பாதி எல்லாம் கிராமத்துல கலகலன்னு தான் போகும். ஸ்டோரியே கொஞ்சம் ஜாலி பீல் குட் டைப் தான்... சின்ன கதையும் கூட... எப்படி வருதுன்னு பார்ப்போம்... ஏன்னா நான் என் கதை எல்லாவற்றையும் ('இரவு' கதையை தவிர்த்து) ஸ்பாட் ரைட்டிங் தான் செய்வேன். அதாவது இன்னைக்கு அப்டேட் கொடுக்கணும்னா இன்னைக்கு தான் அதை எழுதுவேன். எபிசோட் எபிசோடா தான் எழுவேன். அதனால் தான் வாரம் ரெண்டு யூடினு சொன்னேன். அல்மோஸ்ட் கதை முழுசா யோசிச்சிட்டேன் இனிமேல் எழுத எழுத அப்டேட் கொடுக்குறேன். ஹோப்??? நன்றி.
thank you so much? but this story is very simple one... maximum 20 -25 epis only
Semmmma start....
Appatha
 
Top