Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 14

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
"லவ் மி லிட்டில்
லிட்டில் லிட்டில்
லிட்டில் லிட்டில்..."

தன் கைபேசி அழைப்பை ஏற்படுத்த.

உறக்கத்தில் இருந்து எழுந்தாள் ரித்து.

அழைத்தது யாரென்று எல்லாம் பார்க்காது கொட்டாவியை விட்டுக் கொண்டே

"ஹலோ..!" என்க

"அக்கா மாமா இருக்காரா!?" என்றான் பிரவீன்

"என்னடா பூனை காலைல கால் பண்ணி இருக்க என்ன விசயம்!?" என்றிட

"அக்கா வெட்டி பேச்சு பேசாத மாமகிட்ட போனை குடு!"

"அதுக்கு நீ அவருக்கு கால் பண்ணி இருக்கலாம் இல்ல.அவரு தூங்கறாரு என்னனு சொல்லுடா!?"

"அக்கா மாமாகிட்ட ஒன்னு கேட்கணும்!" பிரவீன் உரைக்க.

"உனக்கு எங்க கல்யாணம் முடிவானது தொடங்கி கல்யாணம் முடிஞ்ச இந்த ஒரு மாசமா அக்கான்னு ஒருத்தி இருக்கிறதே கண்ணுக்கு தெரியலையாடா பூனை!?"

"அப்படின்னு யார் சொன்னா!?"

"அப்பறம் கால் பண்ணினது எனக்கு ஆனா உன் மாமாவை கேட்கிற!"

"சரிக்கா கோபப்படாத..!"
பிரவீன் சமாதானம் செய்யும் போதே எழுந்த ஷ்ரவன் அவளின் கையில் இருந்த கைபேசியை ஸ்பீகரில் போட்டவன்

"சொல்லு பிரவீன்!" என்க

"குட் மார்னிங் மாமா!" என்றான் இளையவன் உற்சாகமாக

"வெரி குட் மார்னிங் யங் மேன்.என்ன காலைலயே உங்க அக்காக்கு கால் பண்ணி என்னை பத்தி கேட்டுட்டு இருக்க!?"

"இல்ல மாமா உங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு தான்..!" தயக்கமாக வந்த பிரவீன் குரலை கேட்டவன்

"உங்க அக்காக்கு எப்படி என்கிட்ட பேச உரிமை இருக்கோ அதே உரிமை உனக்கு இருக்கு.சோ,இனிமே எனக்கே டைரக்டராக கால் பண்ணிடு ஓகே. இல்லைனா உங்க அக்கா கோபத்தில் கண்ணை உருட்டி என்னை முறைசுட்டே பயமுறுத்துவா!"

விளையாட்டாய் கூறினாலும் 'என்னிடம் உனக்கு உரிமை உண்டு தயங்காதே!' எனும் நம்பிக்கை விதையை இளையவன் மனதில் ஆழமாய் பதிய செய்திட.

"அது என்னவோ உண்மை தான் மாமா எங்க அக்கா முழிக்கும் போது விட்டா கண்ணு முழி ரெண்டும் வெளிய வந்து குதிச்ச்சிடும் போல!" இருக்கும்.

மாமன் அமைத்த பாலத்தில் மச்சினன் பயணிக்க.

"உங்க ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தா முட்டகண்ணி மாதிரி இருக்கா!?" பிரீத்தா சண்டைக்கு வர

"ச்ச..ச்ச.. நாங்க எப்போ அப்படி சொன்னோம்!?" என்க

"என்ன அவன் கூட சேர்ந்து நீங்களும் கோரஸ் பாடிட்டு இருக்கீங்க!?"என்றவள் கணவன் கையில் 'நறுக்'கென்று கிள்ளிவிட.

அன்றைய விடியல் அமோகமாய் விடிந்தது.

"சொல்லு பிரவீன் எதுக்கு கால் பண்ணின!?"

"மாமா நான் கேட் கேம் பண்ணலாம்னு இருக்கேன் அதுதான் எங்க பண்ணினா நல்லா இருக்கும் கேட்க கூப்பிட்டேன் மாமா!?"

"ஓ..ஓகே அப்போ நான் உனக்கு ஈவ்னிங் இதை பத்தி டீட்டைல்லா சொல்லிடுறேன்!"

"சரிங்க மாமா அப்போ நான் காலேஜ் கிளம்பறேன்!" என்றபடி வைக்க சென்ற பிரவீனை தடுத்து நிறுத்தினான் ஷ்ரவன்.

"பிரவீன் வைட் அ மினிட்.!"

"சொல்லுங்க மாமா!?"

"நம்ம கம்பெனில பார்ட் டைம் வொர்க் இன்டர்ன்ஷிப்ல பண்ற மாதிரி இருக்கு பிரவீன் நீ இன்டர்வியூ அட்டென்ட் பண்றியா!?"

"மாமா அது வந்து..!"

"என்ன சொல்லு மாமா கம்பெனி தயங்குறியா? எனக்கு தான் பிரவீன் ஒரு டேலண்டட் பெர்சனை மிஸ் பண்ண மனசில்ல.அதுதான் கேட்டேன்!" என்றான் ஷ்ரவன்.

அவன் சொல்வதும் உண்மைதான் இந்த கால இளைஞர்களில் பொறுப்பும்,
திறமையும், உழைப்பும் அறிவும் இணைந்தவன் பிரவீன்.அதனை உணர்ந்து தான் ஷ்ரவன் கேட்கின்றான்.

"அப்பறம் என்னடா உங்க குருவே சொல்லிட்டாரு! உன் அயர்ன் மேன் சொன்ன பின்னாடி உனக்கு என்ன!?" சகோதரனை ஊக்கினாள் உடன் பிறந்தவள்.

"அப்போ ஓகே மாமா நான் அட்டென்ட் பண்றேன்.ஆனா ரெஸ்யூம் எல்லாம் நானே கொடுத்து நானே பார்த்துக்கறேன் எனக்கு என் திறமைக்கு கிடைச்சா ரொம்ப சந்தோசம்!" என்றான் அவன்.

"வெரி குட் அண்ட் ஆல் தி பெஸ்ட்!" பிரவீன் என்றவன் அழைப்பை துண்டிக்க.

"உங்களுக்கு என் கண்ணை பார்த்தா எப்படி இருக்கு ஹா...!?சின்ன பையன் கூட சேர்ந்துட்டு கிண்டல் பண்றீங்க. இன்னைக்கு மாதவன் அண்ணனை வரவேண்டாம் சொல்லிடுவேன்.அப்பறம் குளிக்காமல் 'கப்சி' பாயா தான் டுயூட்டிக்கு போகணும்!"

மாதவன் ஷ்ரவன் குளிப்பதற்கு மற்ற சிரமபரிகாரங்களுக்கு என்று தனியே இருக்கும் ஆண் செவிலியர்.

"ஓஹோ... நான் ஏன்டி அவருக்காக காத்திருக்கணும்!?"

"அப்பறம் என்ன பண்ணுவீங்க!?"

"அதுக்கு தான் நீ இருக்க இல்ல!"

"ஆகா கனவு தான்!" என்றவாறு குளித்து முடித்து கீழே சென்றவள் மாதவனை அறைக்கு அனுப்பி இருந்தாள்.

ஞாயிறு என்பதால் காலை உணவை முடித்துக் கொண்டு சாவதானமாக ஹாலில் தொலைக்காட்சியை இயக்கிக் கொண்டு அமர்ந்தான் ஷ்ரவன்.

எல்லாம் அங்கிருந்து பார்த்தால் அவன் மனைவி சமையல் அறையில் அங்கும் இங்குமாக வேலையில் பம்பரமாக சுழல்வது தெரியும் என்பதால் தான் அங்கே அமர்ந்திருந்தான் கள்ளன்.

சௌந்தர்யா ஹாலில் இருந்தவர் "ரித்து" என்றழைக்க.

அவரின் அழைப்பு காதில் சென்று 'சேர்ந்ததோ!? இல்லையோ!?'முதல் ஆளாக அவர் முன் தோன்றினாள் மருமகள்.

"சொல்லுங்க அத்தை!"

"இங்க வந்து உட்காரு வா.ஏன் இப்போவே வேலையை ஸ்டார்ட் பண்ணிட்ட!?"

அவர் எவ்வளவு மறுத்தும் கூட சமையல் தன் பொறுப்பு என்று கையில் எடுத்தவள் தன் குடும்பத்திற்கு என்று இன்பமாய் சமைக்கிறாள்.

"இல்லங்க அத்தை இன்னைக்கு தான் எல்லாரும் வீட்ல இருக்கோம்.அப்போ நிறைய வெரைட்டியா பண்ணினா ஆற அமர பொறுமையா சாப்பிடலாம் இல்ல!"

"அதெல்லாம் இன்னைக்கு செவ்வந்தி பார்த்துப்பா.நீ கொஞ்சம் இங்க உட்காரு" என்றவர் தன் மருமகளை அருகே அமர்த்தியவர்.

"இந்த ஒரு மாசமா விருந்து ரிசப்ஷன் பேசுறதுக்கு டைம் இல்லாம போய்ட்டு அதுதான் கொஞ்ச நேரம் பேசலாம் கூப்பிட்டேன்!"

அவர் பேச பேச அன்னையின் வாயை கவனிக்கும் பிள்ளை போல அமர்ந்திருக்கும் மருமகளை கொஞ்சத் தான் தோன்றியது சௌந்தர்யாவிற்கு.

"அழகு...!"

மனதில் தோன்றியதை வார்த்தையில் கூறினார் பெண்மணி.

"அன்னையை போல ஏன் தன்னால் அவளிடம் வெளிப்படையாக இருக்க முடிவதில்லை!?"

யோசனை வந்தாலும் அன்னை மனைவியிடம் 'என்ன சொல்ல போகிறார்!?' என்பதை கவனிக்க தயாராகினான் மகன்.

"ரித்து வாழ்கை வாழ்றதுக்கு தான்.சோ.. என்ஜாய் பண்ணி வாழுங்க! இப்போதைக்கு குழந்தை குட்டின்னு யோசிக்காம ஒரு டூ இயர்ஸ் ஜம்முனு இருந்துட்டு அப்பறம் பேபி பத்தி யோசிக்கலாம் ஓகே!?" என்றிட

"அம்மா இட்ஸ் நாட் ஃபேர்..!"

"எது கண்ணா நாட் ஃபேர்!?பொண்ணுங்க பேசிட்டு இருக்கதை நீ கேட்டுட்டு இருக்கதா!"

"நீங்க எனக்கு என்ன சொல்லி கல்யாணம் பண்ணுனீங்க!?"

"என்ன சொன்னேன்!?"

"பேர பசங்களை பார்க்கணும் சொல்லி தானே கல்யாணம் பண்ணீங்க!"

"ஓஹோ அப்போ உனக்கு அந்த பிளான் இருக்கா கண்ணா!?"

எப்பொழுதும் போல மகனிடம் வார்த்தைகளை கறக்க தொடங்கினார் சௌந்தர்யா.

"நான் இருக்கேன்.. இல்லை.. அது இப்போ விசயம் இல்லை.ஆனா உங்க பிரிவியஸ் மைண்ட் செட்ல இருந்து நீங்க மாறலாமா!?"

"ஆனா என் மருமகளுக்கு என்ன விருப்பம் தெரியணுமே கண்ணா!?" என்க.

"ஐயோ இவங்க ரெண்டு பேரும் என்னை வச்சு விலையாடுறாங்க போலவே!" ரித்து தனக்குள் எண்ணிக் கொண்டு.

"அத்தை நான் போய் கிட்சன்ல...!" என்று ஓடப்பார்க்க.

"நீ எதுக்கு டி ஓடுற ஒரு இடத்தில இருக்கமாட்ட!?" என்றவாறு அவர்களை நெருங்கினான் ஷ்ரவன்.

கணவன் இப்பொழுது நேரிடையாக பேசிட முனைகிறான் அதனை தவிர்க்க முடியாது அங்கேயே அமர்ந்து கொண்டாள் அவள்.

"நீ சொல்லு எங்க அம்மா சொல்ற மாதிரி டூ இயர்ஸ் ஆகட்டுமா!?" கேள்வியை எழுப்ப.

இவன் தானே கூறினான்,'நான் உன்னை உணரும் வரை கூடாது என்று..! இப்பொழுது இவனே வந்து இவ்வாறு கேட்டால் தான் என்ன சொல்வது!?'


காலையில் கணவன் கூறிய முட்டை முழியை விரிக்க.

அதில் இன்பமாய் தொலைந்தவன் "உன் விருப்பம் என்னடி!?" என்க.

"அவன் தான் கேட்கிறான் இல்ல ரித்து சொல்லிடு அத்தை சொன்னது போல டூ இயர்ஸ் டைம் வேணும் கேளு!"

"ஹேய் அப்படி எல்லாம் டைம் தரமுடியாது!"
கோபமாய் ஷ்ரவன் பொங்க.


"இல்ல நான் சொல்றதை அவன்கிட்ட சொல்லுமா!"

சௌந்தர்யா வாக்கியம் அமைத்துக் கொடுக்க.

"அதெல்லாம் போங்காட்டம்..!"
மகன் பாவமாய் பேச

"அது.. அதுவந்து...!" பெண்ணவளின் திணறலை கேட்க அன்னைக்கும் மகனுக்கும் சந்தோசமாக இருந்தது போல.


அவளை பதில் சொல்ல முடியா சூழலில் நிறுத்தி வேடிக்கை பார்க்க.

"உங்களுக்கு என்ன இப்போ நீ வா பாப்பா நம்ம உள்ளார போகலாம். நீங்களே சீட்டு குலுக்கி பார்த்துக்கோங்க!

மகன் உடனே வேணும்..! இல்லை ரெண்டு வருசம் கழிச்சு வேணும்னு..!

குழந்தை என்ன 'ரோபோவா' நீங்க கூப்பிட்டதும் வந்து நிற்க!?" செவ்வந்தி இடைபுகுந்து ரித்துவை காப்பாற்றவில்லை எனில் அவளின் நிலை 'என்னவாகி இருக்குமோ!?'

கண்டிப்பாக கதவின் இடுக்கில் சிக்கிய 'பல்லி' போல நசுங்கி இருக்கும்.

"ஹாஹாஹா......"

அவள் செவ்வந்தி உடன் நகரவும் அன்னையும் மகனும் சிரித்துக் கொண்டனர்.

எல்லாம் அவளின் பிள்ளை முகத்தில் மாறி மாறி வந்த உணர்வுகளை கண்டு தான்.

"வேலைக்கு செல்ல வேண்டும்!" என்ற ஆசை ரித்துவிற்கு.

ஆனால் மாமியாரும், கணவனும் அவளின் 'விருப்பம்' என்று கூறி இருக்க.

சௌந்தர்யா அவளை வேலைக்கு செல் ஆனால் பள்ளிக்கு அல்ல என்றார்.

அவளுக்கு அதை தவிர வேறு எங்கும் செல்ல மனம் வரவில்லை.

அதையும் அவரிடம் கூறி இருக்க.

திங்கள் காலை மருமகளை அழைத்துக் கொண்டு குளோபல் குரோத் பயிற்சி மையம் வந்திருந்தார்.

அங்கு வழங்கப்படும் மனஉறுதி பற்றிய வகுப்புகள் மற்றும் பயிற்சிகளில் சேர்த்துவிட்டவர் வேறு ஒன்றுமே சொல்லாது சிறு தலை அசைப்புடன் சென்றுவிட்டார்.

'வந்தார்..வென்றார்.. சென்றார்..!' என்பது போல இருந்தது சௌந்தர்யாவின் செய்கை.

அவரின் மீதுள்ள மரியாதையால் இவளும் வேறு ஒன்றும் மறுப்பு சொல்லாது வகுப்பில் இணைய.

அதனால் தானே அவரே நேரிடையாக வந்து சேர்த்துவிட்டு சென்றார்.

அவளின் வாழ்வில் புதிய உதயம் இனி தொடங்கும் என நம்பலாம்.

†******†******†**†**†******†******†

"எங்க போறோம் ஆரு!?"

"இத்தனை நாளா கேட்டு இருந்த இல்ல அங்கதான் போறோம்!"

"லேபுக்கு போறோமா ஆரு!?"

"அங்க தான் போறோம்!" என்றவன்

நீண்ட நாளாக ஆய்வுக் கூடம் செல்ல வேண்டும் என வேண்டி நின்ற காதலியை அவளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அழைத்துக் கொண்டு சென்றான்.

"தாங்க்ஸ் ஆரு!" மனதார 'நன்றி' என்றவள் அவனை ஆரத் தழுவ.

இன்பமாய் அதிர்ந்தான் சாத்விக்.

ஆய்வுக் கூடத்தை கூட விளையாட்டு மைதானத்தை கண்ட வீரன் போல,தாஜ்மஹாலை பார்ப்பது போல, குழந்தை கண்ட பூங்காவை போல ஆசையாய் பார்த்தாள் அவள்.

சாத்விக்கிற்கு, "காதலிக்கும் தன்னை கூட இவ்வாறு காணாத காதலிக்கு அவன் ஆய்வு கூடத்தின் மீது வந்த காதல் சிறு பொறாமை!" தான்.

"நாளைல இருந்து இங்க தான் உனக்கு வொர்க்!" என்றான் மேலும் அவளுக்கு இன்ப அதிர்வு கொடுக்க.

அவன் எது கொடுத்திருந்தாலும் 'இதுவா!?' என்று கடக்கும் அவள் கண்கள்.

இந்த செய்தியை கேட்டு அவனை ஆசையாய் ஒரு நொடி கட்டிக்கொண்டு பின் மீண்டது.

"இவன் கபில் இங்க சீஃப் இவன்தான்.
அப்பறம் இவன் நவீன் என்னோட அசிஸ்டன்ட் உனக்கு தெரியும் இல்ல!"

"இவ ரேமா என்னோட பியூச்சர்!"

என்றவன் "பார்த்துக்கோங்கடா!" என்றதோடு;

"லேப் சம்பந்தமா வேற உனக்கு எதுனாலும் கபில்கிட்ட கேளு,என்னை ரீச் பண்ண முடியாதா நேரம் என்னை பத்தி நவீன்கிட்ட கேளு ஓகே!"

சாத்விக்கை நோக்கி 'சரி' என்று தலையை அசைத்தாள் ரேமா.

அன்றில் இருந்து சாத்விக்கின் ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சிக்கான உதவிகள் செய்வது.

சாத்விக் கணினி பொறியியலாளர் என்பதால் சில நேரங்களில் அவனுக்கு புரியாத சிலவற்றை புரிய செய்து அவனுக்கு பெரும் உதவியாய் இருந்தாள்.

**********************************

"எனக்கு அவரு மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு கீர்த்தி!"

"ஹையோ என்னடி சொல்ற!?"

"ஏண்டி உனக்கு இப்படி ஒரு புத்தி!?"

இணைப்பில் இருந்த கிறிஸ்டி,கீர்த்தி இருவரும் கத்த.

"ச்சீ...நான் அப்படி சொல்லவரலை!"

"வேற எப்படி சொல்ல வர்ற..!?" கீர்த்தி வினவ

"நைட், நைட்.. இவரு எங்கேயோ போறாருடி!?"

கிறிஸ்டியோ, "எங்க போறாருன்னு நீயே கேளு!?"

கேட்டா,"நான் தூக்கம் வரலைன்னு மாடில இருந்தேன். தோட்டத்துல இருந்தேன்.
அப்பா ரூம்ல இருந்தேன் சொல்றாரு!"

"இங்க எல்லாம் நான் பார்த்தேனே நீங்க இல்லையேன்னு கேளு!?"

"ஆமாம் பதில் சொல்லிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பாரு..அப்படி போய் கேட்டா ஆபீஸ் வொர்க்கு அதை பார்க்க போய்ட்டேன்.நீ தூங்கிட்டு இருந்த அதுதான் எழுப்பலைன்னு சொல்லுவாரு!"

"அப்போ வேற ஒரு ஐடியா இருக்கு சொல்லவா!?"

"சொல்லுடி கீர்த்தி!" என்ற உடன் தன் திட்டத்தை கூறினாள் அவள்.

"உனக்குள்ளையும் மூளை இருக்குடி மோடுமுட்டி!!" கிறிஸ்டி கலாய்க்க.

"ஏன்டி எனக்கு மூளை இல்லைன்னு சொல்றியா!!"

"இதுக்கு மேல யாராலும் ஓபன்னா சொல்ல முடியாது கீர்த்தி..!" ரித்து கலாய்க்க.

"என்னடி ரவுண்டு கட்டி கலாய்க்கிறீங்க?"

"ஹேய் கிறிஸ்டி உனக்கு இந்த பாட்டு பிடிக்குமா!?"

"எந்த பாட்டு ரித்து!?" ஆர்வமாக கீர்த்தி வர

அதுதான்,

"உன் விரல் இடுக்குல
என் விரல் கெடக்கணும்...!"

என்று தொடங்க..


அவள் திருமணத்தில் ஶ்ரீயுடன் கைகளை கோர்த்து நின்ற தன்னை தோழி கேலி செய்வது புரிந்த கீர்த்தி

"எங்க அம்மா கூப்பிடுறாங்க நான் போறேன்!" என்றபடி ஓடி இருந்தாள்.

"சரிடி நீ பிளானை எக்சிக்கியூட் பண்ணிட்டு ரிசல்ட்டை மெஸேஜ் பண்ணிடு பாய்!" என்றபடி கிறிஸ்டியும் இணைப்பை துண்டிக்க.

கணவனை கையும் களவுமாகப் பிடிக்க காத்திருந்தாள் ரித்து.

இரவு மணி ஒன்றை கடந்து முக்கால் மணி நேரம் ஆகி இருந்தது.

ஷ்ரவன் எப்பொழுதும் தன் மனைவி உறங்கிய உடன் தன் முக்கியமான வேலையை செய்ய இரவு செல்பவன் அன்றும் கிளம்பி இருந்தான்.

அவன் அறையில் இருந்து பயணிக்க மின்தூக்கி இருக்க.அதில் ஏறி தரை தளம் சென்றான் அவன்.


அங்கே அவனுக்காக காரில் காத்திருந்தான் ரக்ஷன்.

இருவரும் பயணத்தை கிளப்பும் முன்பே அவர்களுக்கு முன்பு வ
ந்து நின்றனர் மாமியாரும், மருமகளும்.

'ஆம்!'

இதுதான் கீர்த்தி கொடுத்த யோசனை.

"நீ கேள்வி கேட்டு உனக்கு அவர் பதில் சொல்லலைனா என்ன? உன் மாமியாரே அவரை கேள்வி கேட்கறமாதிரி ஒரு சூழலை உருவாக்கு!" என்றிட.

இன்றே அதற்கு பாதை அமைத்த கணவனுக்கு மனமார நன்றியை இவள் கூற.

மனைவியின் புத்தி கூர்மையை மெச்சினான் கணவன், மனதிற்குள் தான்.
 
Top