Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூந்தென்றல் தீண்டுமோ-டீசர்

Advertisement

Samyukta Ram

Member
Member
ஹாய் ரீடர்ஸ் பூந்தென்றல் தீண்டுமோ என் முதல் கதை.எழுத்துலகில் அடியெடுத்து வைத்துள்ள எனக்கு உங்கள் கருத்துகள்தான் ஊக்கமளிக்கும்.கதையின் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் ???



ஹீரோ: இளஞ்சேரல்

ஹீரோயின்:எழிற்கயல்


சிறிய டீசர்:


கதவின் தாழ் திறக்கும் சத்தம் டப்பென்று கேட்க திடுக்கிட்டு எழுந்து கதவருகில் சென்றனர் இருவரும்.

கதவு அகலத் திறக்க அப்பால் நின்ற நால்வரும் இவர்கள் இருவரைக் கண்டதும் ஹாவென வாயைப் பிளந்தனர்.பூட்டிய சாமான் அறையில் ஒரு இளைஞனும் யுவதியும் இரவெல்லாம் இருந்திருக்கின்றனர் என்ற விஷயம் அந்த திருமண மண்டபம் முழுவதும் தீயாகப் பரவிவிட்டது.

????????????

"இளா!இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சினை... இதுக்கு மேல அந்த பொண்ணை யாரு கட்டுவான் சொல்லு"என்று சிவகாமி அவனுக்குப் புரிய வைக்க முயல,

"அம்மா! நாங்க எந்த தப்பும் பண்ணல...நீங்களாவது நம்புங்க"என்று அவன் கத்த,

"நீங்க எதுவும் செய்யலைன்னு நீ சொல்றத உன்னை பெத்த நான் நம்பலாம்யா ஆனா ஊரு எப்படி நம்பும்? அதுக்கு கண்ணால கண்டது தான் நெசம்!தயவு பண்ணி கல்யாணத்துக்கு ஒத்துக்கையா!"என்று தாய் கண்கலங்கிக் கேட்க தலையை கோதி அழுத்தமாக மூச்சை வெளியேற்றியவன் அங்கே நின்ற தங்கையிடம்,

"போயி அவளை அழைச்சிட்டு வா!"என்று அவன் கூற குழலி சென்று சில நிமிடங்களில் கயலை அழைத்து வந்தாள்.

அவள் வீங்கி சிவந்திருந்த கன்னங்கள் அவள் தந்தை அடித்ததை பறைசாற்றியது.ஆனால் அழுத சுவடு அவள் கண்களில் துளிக் கூட இல்லாது ஆச்சரியத்தை அளித்தது.அவனைப் போல அவள் முகத்தில் துளிக்கூட அந்த நிலைமைக்கான பதட்டம் இல்லை.

"இத பாரு நாம எந்த தப்பும் செய்யலை... எதுக்கு இந்த வீண்பழியை சுமக்கனும்...பயப்படாம என்னோட வா எல்லாரையும் கூட்டி நா பேசறேன்"என்று அவள் தன் பின்னே வருவாள் என்று அவன் வெளியேற முயல அவளோ ஆணியடித்தார் போல நகராமல் அங்கேயே நின்றாள்.அதில் யோசனையோடு புருவத்தை சுருக்கினான் இளா.அவன் ஏதோ பேச வாயெடுக்கும் முன் திடிரென அங்கே ஓடி வந்த ஒரு ஆள்,

"மருதையா கிணத்துல குதிச்சிட்டாரு!"என்று கத்த பதறியபடி ஓடினர் அவர்கள் அனைவரும்.

????????????

அர்ச்சகர் தேவியின் பாதத்தில் வைத்து தாலி இருக்கும் தட்டை எடுத்து வந்து நீட்ட நடுங்கும் கரங்களோடு அதை கையிலெடுத்த இளஞ்சேரல் வடித்து வைத்த சிலைப் போல நின்ற எழிற்கயலின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டு தன் வாழ்க்கை துணையாக ஏற்றான்.அதுவரை வறண்டிருந்த அவள் கண்களில் இருந்து நீர் துளிகள் அவள் கன்னங்களில் இறங்க அதை கண்களில் உணர்ச்சி இல்லாமல் வெறுத்தான் அவள் கணவன்.
 
Top