Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 35

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻





அத்தியாயம் 35



காசி யாத்திரை முடிந்து ஊர் திரும்பிய வெங்கட்ராமனின் கூரிய பார்வைக்கு மகன் இன்னும் திருந்தவில்வை என்ற உண்மை தெரிந்து மனம் துடித்துப் போனார்.



மகனை திருத்துவதாக எண்ணி ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை பலிகொடுத்து விட்ட வருத்தமும் என்ன செய்து அந்த தப்பை சீர்திருத்தலாம் என்ற யோசனையுமாக இருந்தவர் மறுநாளே மகனிடம் இரண்டு சினிமா டிக்கெட்களை நீட்டி விட்டுச் சொன்னார்.



"என் ப்ரெண்ட் ஒருத்தர் கொடுத்தார். நீ ராதாவை அழைச்சுண்டு போய்ட்டு வா.."



மகனை ஆழம் பார்ப்பதற்காக அவர் இதைச் சொல்ல, அவனோ அவரை மிஞ்சிய அழுத்தக்காரனாயிருந்தான்.



"சாரி! எனக்கு வேற வேலையிருக்கு…"



அலட்சியமாக சொன்னவனை வெறித்தார்.



"அப்படியென்ன தலை போற அவசரவேலைனு நான் தெரிஞ்சுக்கலாமா?"



அவர் குரலிலிருந்த கேலி அவன் கோபத்தை உசுப்பி விட்டிருக்க வேண்டும்.

சட்டென்று குரல் உயர கத்தினான்.



"ஆயிரம் வேலையிருக்கும். அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லனும்ற அவசியமில்ல."



"சபாஷ்! எதைத் தான் அவசியம்னு நீ நெனச்சிருக்கே? அப்பா அம்மா மனை‌வி குடும்பம்னு யார் தான் உனக்கு அவசியம்னு தோணியிருக்காங்க? மகாலட்சுமி மாதிரி ராதா வீட்ல இருக்கறப்போ கண்ட பொண்ணுங்களோட ஊர் சுத்தறது மட்டும் தான் நீ ரொம்ப அவசியம்னு நெனைக்கற காரியம் இல்லையா? இதுவே நான் இந்த டிக்கெட்டை குடுத்து உனக்கு விருப்பபட்டவங்களை கூட்டிட்டுப் போனு சொல்லியிருந்தால் சந்தோஷமாய் போயிருப்ப. ராதாவை கூட்டி போறதுனாத் தான் வலிக்குது .இல்லே? "



ஒரு கணம் தந்தையை ஆத்திரத்துடன் முறைத்துப் பார்த்தான்.பின் மேற்கொண்டு விஷயத்தை வளர்ப்பது தனக்கு நல்லதில்லை என்று நினைத்தானோ என்னவோ கை நீட்டி டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டான்.



"ஒண்ணும் சொல்லாமல் வாங்கிண்டா என்ன அர்த்தம்? ராதாவை கூட்டிட்டுப் போறதா உத்தேசம் இருக்கா இல்லே வழக்கம் போல….."



விஷமமாய் இழுத்த தந்தையை சட்டென்று திரும்பிப் பார்த்தான் முரளி. என்றுமில்லாத திருநாளாய் தந்தை டிக்கெட் வாங்கி கொடுத்திருப்பது அவனை ஆழம் பார்க்கத் தான் என்பது புரிந்த அடுத்த நிமிடமே உணவு பரிமாறிக் கொண்டிருந்த ராதாவிடம் திரும்பி

"ஈவ்னிங் ரெடியாயிரு "

என்று அடிக்குரலில் முணுமுணுத்தவன், அப்பாவிடம் "இப்போ உங்களுக்கு திருப்தியா? " என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டு விருட்டென்று அவ்விடத்திலிருந்து நகர்ந்தான் முரளி.



மகனுக்கு இந்த அளவிற்காவது தன்னிடம் பயம் இருந்து தன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறானே என்று சந்தோஷத்துடன் சாப்பிட ஆரம்பித்தார் வெங்கட்ராமன்.



முரளி வாஸ்தவத்தில் அப்பாவின் கோபத்திற்கு பயந்து தான் அன்று மாலை ராதாவை சினிமாவிற்கு அழைத்து சென்றானே தவிர இடைவேளை வரை கூட அவனால் படத்தை ரசிக்க முடியவில்லை. அவன் சில்மிஷங்களுக்கு ஈடு கொடுத்து அவனை கிளுகிளுக்க வைக்கும் ஸ்டெல்லாவுடன் படம் பார்த்தால் மொக்கை படம் கூட ரசனைக்குரியதாக இருக்கும். அதற்கு நேர்மாறாக இந்த மரக்கட்டை ராதாவோட படம் பார்த்தால் நல்ல படம் கூட நாராசமாகத் தானிருக்கும் என்ற அவன் நினைப்பிலும் தவறில்லை தான்.



இடைவேளையில் வெளியே வந்தவன் எரிச்சலுடன் பாக்கெட்டில் சிகரெட் எடுத்து பற்ற வைக்க லைட்டரைத் தேடியபொழுது யாரோ அவன் கையிலிருந்த சிகரெட்டில் நெருப்பை பற்ற வைத்தார்கள்.



"தாங்க்ஸ்….."சிகரெட்டை உதட்டில் வைத்து புகையை இழுத்தபடி நிமிர்ந்தவன் எதிரே நின்றிருந்தவனைக் கண்டு திகைத்தான்.



மோகன்….

ரேகாவிற்காக பரிந்து பேசிய மோகன். நீ ரேகாவிற்கில்லையென்றால் என் நட்பும் உனக்கில்லொ என்று கோபமாய் விலகிச் சென்று விட்ட மோகன்.



"எப்படி இருக்கே முரளி?...."



மோகன் தான் பேசினான்.



"ம்..நல்லாயிருக்கேன்.நீ எப்படியிருக்கே?"



"நானா?..."மோகன் மகிழ்ச்சியாய் சிரித்தான் உலகத்து சந்தோஷமெல்லாம் அவனிடம் தான் என்று சொல்வது போல.



"அன்பான மனைவி அழகான மகன் அருமையான குடும்ப வாழ்க்கை எனக்கென்ன குறை?"



"ஐ சீ….கல்யாணம் வேற ஆயிடுச்சா? சொல்லவேயில்லை. ஆமா ! இவன் தான் உன் பையனா? "



அருகில் கோன் ஐஸ்க்ரீமை வாயெல்லாம் வடிய விட்டுக் கொண்டு சுவைத்த இரண்டு வயதுச் சிறுவனை சுட்டிக் காட்டி முரளி கேட்க, மோகன் ஆமாம் என்று தலையசைத்தான்.



முன் நெற்றியில் விழுந்த முடிக் கற்றையை அலட்சியமாக தலையை பின்னுக்கு தள்ளி சரி செய்தவாறு ஏறிட்டுப் பார்த்த சிறுவன் ஏதோ ஒரு வகையில் முரளியை ஈர்த்தான்.



"ஏண்டா! பையன் உன்னை மாதிரி இல்லையே. ஒருவேளை அவன் அம்மா ஜாடையோ?"



முரளி சொல்லி வாய் மூடும் முன்

என்னங்க போகலாமா?" என்று கேட்டவண்ணம் வந்து நின்றாள் அந்த பெண்.



"ரேகா…."



அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் முரளியின் கையிலிருந்த சிகரெட் நழுவி கீழே விழுந்தது. ரேகாவோ தேள் கொட்டினாற் போல் அதிர்ச்சியில் துடித்து பின் வாங்கினாள்.



"பையன் யார் ஜாடைனு இப்ப தெரியுதா முரளி?"



உதட்டின் சிரிப்பு மாறாமல் கேட்ட மோகனை வெறித்துப் பார்த்தான் முரளி.



ஓ காட்!! அப்படியும் இருக்குமோ?....



அப்படியே தான் என்று நிரூபித்தான் முரளியின் அச்சாய் நின்றிருந்த அந்தச் சிறுவன்.



"பெரிய தியாகினு பேர் வாங்குறதுக்காக நான் ரேகாவை கல்யாணம் பண்ணிக்கலே. நீ அன்னிக்கு விளையாட்டாய் சொன்னதை உண்மையாக்கினா என்னனு தோணிச்சு. தெட்ஸ் ஆல்.நான் அதுக்கு உனக்கு தான் நன்றி சொல்லனும் முரளி. ஏன்னா முன்பை விட இப்பதான் என் வாழ்க்கை அர்த்தமுள்ளதா அழகா போய்ட்டிருக்கு.

தாங்க் யூ வெரி மச்…"



மோகனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்தது முரளி மட்டுமில்லை. இடைவேளையில் வெளியே சென்ற கணவன் நீண்ட நேரமாகியும் வரவில்லையே என்ற கவலையில் வெளியே எழுந்து வந்த ராதாவும் தான்.
 
Top