Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 13

Advertisement

parvathi

Active member
Member

அத்தியாயம் 13​

அன்று காலையில் எழுந்து சூரிய நமஸ்காரத்திற்காக வாசல் கதவைத் திறந்த தேவகிக்கு ஒரு ஆச்சரியம் வெளியே காத்திருந்தது​

வெளி வராண்டாவில் போடப்பட்டிருந்த சோபாவில் போர்த்திக் கொண்டு படுத்திருந்த நந்தகுமாரனைக் கண்டு வியப்புடன் அருகில் சென்றாள்​

"ஹாய் குட்மார்னிங்மா"​

அவள் எழுப்பும் முன் அவனே எழுந்து விட்டான்.​

"என்னடா நந்து நைட் நர்ஸிங்ஹோமில் எமர்ஜென்சி கேஸ் இருக்கறதால அங்கேயே தங்கப்போறதால்ல போன்ல சொன்னே? அப்புறம் ஏன் வந்தாய்? எப்போ வந்தாய்? யார் உனக்கு கதவு திறந்து விட்டார்கள்?"​

கேள்விகளை அடுக்கிய தாயை பார்த்து சிரித்தான் மகன்​

"எமர்ஜென்சி கேஸ் பார்த்தது உண்மை தான்மா.ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே என் வேலை முடிந்து விட்டது வீடும் பக்கத்தில் தானேனு கிளம்பி வந்துட்டேன் நான் காலிங்பெல் அடிச்சது கூட கேட்காமல் நீ நல்ல தூக்கத்தில் இருந்தாய் போல.சுந்தரம் சாரோட பொண்ணு தான் கதவை திறந்து விட்டாங்க அவங்க வீட்டு வழியாக தான் மாடிக்கு வந்தேன் உன் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அந்த பொண்ணு கொடுத்த தலையணையும் போர்வையும் வைத்து இங்கே சோபாவிலேயே படுத்து விட்டேன்."​

"நல்ல பிள்ளை போ..இப்படியா நட்டநடுநிசியில் வருவாய்?அந்த பொண்ணு கதவு திறந்தது நல்லதா போச்சு.இல்லேன்னா வெளியில் பனியில் நனைந்து கொண்டு வாசலில் நிற்க வேண்டியது தான்."​

"நான் ஏன் வாசலில் நிற்கிறேன்? காரில்லையா? திரும்பவும் நர்ஸிங்ஹோமுக்கே ரிடர்ன் ஆனா போச்சு."​

"அது சரி இப்ப என்ன செய்யறதா உத்தேசம்? வீட்டுக்கு உள்ளே வந்து படுக்கறயா இல்லே.."​

என்று இழுத்தாள் தேவகி​

"மை குட்நெஸ்…! மறுபடியும் படுக்கறதா? நான் இங்கே படுத்துண்டா அங்கே ஹாஸ்பிட்டலில் படுத்திருக்கும் என் பேஷண்ட்ஸ் கதி என்னாகிறது? இதோ குளிச்சுட்டு உடனே கிளம்ப வேண்டியது தான்."​

அவசரமாய் போர்வையை உதறிவிட்டு எழுந்தவனை செல்லமாய் கோபித்தாள் தேவகி​

"இப்படி காலில் வெந்நீர் கொட்டின மாதிரி பறக்கறதுக்கு ஏண்டா நீ வீட்டுக்கு வர்றே? அங்கே ஹாஸ்பிட்டல்லயே இருக்க வேண்டியது தானெ?"​

"என்னை என்னம்மா பண்ண சொல்றே? தினம் கார்த்தால உன் முகத்தில் முழித்து பழக்கமாயிடுத்து உன்னை பார்க்காமல் எனக்கு எந்த காரியமும் நடக்க மாட்டேன்றதும்மா."​

"எனக்கு ஏற்கெனவே குளிர்றது நீ வேற டன் டன்னா ஐசை தூக்கி தலையில் வைக்காதே இங்கே பாருடா நந்து எனக்கும் வயசாயிடுத்து.ஒத்த பிள்ளை உன்னை கூட சரியாக கவனிக்க முடியல.நேத்திக்கு பாரு நீ வந்து பெல் அடிச்சது கூட கேட்காமல் அசந்து தூங்கியிருக்கேன். இதுவே உனக்குனு ஒருத்தி வந்திருந்தால் பொறுப்பாய் உன்னை கவனிச்சிருப்பா இல்லையா? என் ஆசைக்காக இல்லேன்னாலும் உன்னை கவனிச்சுக்கவாவது ஒரு மருமகள் இப்ப ரொம்ப தேவை நந்து நேத்திக்கு கூட அந்த ராஜசேகரன் வந்துட்டு போனார்."​

"ராஜசேகரனா?...."​

உஷார் ஆனான் நந்தகுமாரன் ராஜசேகரன் தன் மகளை அவனுக்கு மணமுடிப்பதற்காக தூண்டில் போடுவது ஏற்கெனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் அவர் வீடு வரை வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.​

"எதற்காக வந்தார்?"​

எரிச்சலுடன் கேட்டவனிடம் அலுத்து கொண்டாள் தேவகி​

"பொண்ணை பெத்து வெச்சிருக்கறவா் வேற எதுக்கு வரப் போறார்? எல்லாம் அவர் பொண்ணு கல்யாண விஷயமா பேசத்தான். உங்கிட்ட பேசினால் நீ பிடி கொடுத்து பேச மாட்டேன்றியாம். ஏண்டா நந்து அவர் பொண்ணு சுஜாதா நல்ல குணம் படிச்சிருக்கா பார்க்கவும் லட்சணமாதானிருக்கா அந்த பெரியமனுசரும் பாவம் நடையாய் நடக்கிறார் இந்த இடத்தையே முடிவு பண்ணிடலாமா,? நீ என்ன நினைக்கறே,?"​

ஆவலுடன் கேட்ட தாயைப் பார்த்து சிரித்தான் மகன்.​

"அம்மா உனக்கு நான் எத்தனையோ முறை சொல்லியாச்சு கல்யாணப்பேச்சு இப்ப வேண்டாம்னு"​

"பின்னே எப்பத்தான் நான் இந்தப் பேச்சை பேசறது? இன்னும் கிழவியான பின்னாலா? காடு வா வான்றது வீடு போபோன்றது நான் கண்ணை மூடுறதுக்குள்ள உனக்கொரு கல்யாணத்தை பண்ணி பார்க்கனும்னு ஆசைப்படறது உனக்கு ஏண்டா நந்து புரிய மாட்டேன்றது?"​

"ஹய்யோ…!என்னம்மா நீ சின்ன விஷயத்தை போய் பெரிசு பண்ணின்டு? நல்ல பொண்ணா முக்கியமா உன்னையும் என்னையும் பிரிக்க நினைக்காதவளா ஒரு மருமகள் கிடைக்க வேண்டாமா? அதற்கு நாம பொறுமையா தான்மா பார்க்கனும் அவசரப்படக்கூடாது."​

"அப்படியொரு பெண் எப்ப கிடைக்கறது? நான் எப்ப பாட்டியாகறது?."​

அன்னையின் ஆதங்கம் மகனுக்கு புரிந்தால் தானே?​

"நீ பாட்டியாகனும் அவ்வளவு தானே? கவலையை விடு கீழ் வீட்டு மீனுவை உன்னை பாட்டினு கூப்பிட சொல்றேன் போதுமா?."​

"போடா.. நீயும் உன் விளையாட்டுப் பேச்சும்"​

விருட்டென்று அங்கிருந்து விலகி சமையலறைக்கு சென்றாள் தேவகி. நந்தகுமாரன் குளித்து உடைமாற்றி சாப்பிட வந்தபொழுது சாப்பாட்டு மேஜையில் ஆவி பறக்க உணவு தயாராக இருந்தது​

"இத பார்றா..இங்க யாரோ சித்த முன்னால. வயசாயிடுச்சு ஒண்ணும் முடியலேன்னாங்க நம்பற மாதிரியா இருக்கு? ஏம்மா உன்னோட சுறுசுறுப்பு சின்ன வயசுக்காரங்களுக்கு கூட இருக்கறதில்ல தெரியுமா?"​

"நீ ஒண்ணும் எனக்கு ஐஸ் வைக்க வேண்டாம்"​

அம்மாவின் கோபம் இன்னும் ஆறவில்லை என்பது புரிந்து நந்தகுமார் அமைதியாகவே சாப்பிட்டு கிளம்பினான் ஆனால் ஹாஸ்பிட்டல் போவதற்கு முன் தாயின் கை பற்றி​

"சீக்கிரமே உன் ஆசையை நிறைவேற்ற பார்க்கிறேன் அம்மா..ப்ளீஸ் சிரியேன் என் செல்ல அம்மால்ல… "என்று கெஞ்சுவது போல் கொஞ்சவும் அதற்கு மேல் தன் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் சிரித்து விட்டாள் தேவகி​

"போடா போக்கத்தவனே"​

அம்மாவின் செல்ல திட்டுடன், கீழே இறங்கி வந்தால் அங்கே பள்ளி சீருடையில் மீனு ராதாவிடம் காலணிகள் மாட்டிக் கொண்டிருந்தாள்.​

"கொஞ்சம் அசையாமல் நில்லு மீனு அக்கா பூட்ஸ் மாட்டனுமா வேண்டாமா ஒழுங்கா நில்லேன்"​

கெஞ்சிய ராதாவிற்கு உதார் காட்டிவிட்டு நந்தகுமாரிடம் ஓடி வந்தாள் மீனு.​

"குட்மார்னிங் மீனுகுட்டி. "​

கையில் வைத்திருந்த மெடிகல் கிட்டையும் கோட்டையும் காரினுள் வைத்துவிட்டு மீனுவை தூக்கி கொண்டான்​

கருப்பும் வெள்ளையுமாய் சிறு கட்டங்களுடன்கூடிய ஸ்லாக் கருப்பு பேண்ட் கால்களில் பளபளக்கும் கருப்பு பூட்ஸ் மேனியிலிருந்து பரவிய உயர்தர செண்டின் நறுமணம் என்று ஆண்மையின் கம்பீரத்துடன் அசத்தலாய் நின்றவனைப் பார்த்தவுடன் ராதா மனதில் நினைத்ததை மீனு வாய் விட்டே சொல்லிவிட்டாள்​

"அங்கிள் இந்த ட்ரெஸ் உங்களுக்கு ரொம்ப நல்லாயிருக்கு.."​

அப்படியா?....சிரித்த நந்தகுமாரனின் பார்வை ராதாவிடம் இருந்தது​

'.உன் ஆளு கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வருதானு பார்க்கறியா….ம் வந்துட்டாலும்'​

மைண்ட்வாய்ஸ் கேள்வியும் நானே பதிலும் நானே என்று கவுண்டர் கொடுக்க. ராதா அவன் பார்வையை கவனத்துடன் தவிர்த்தாள்​

"மீனு அக்காவுக்கு காலேஜ்க்கு நாழியாச்சும்மா ப்ளீஸ் வாயேன்."​

மீனுவை நந்தகுமாரன் இறக்கிவிட ராதாவிடம் ஓடி வந்தாள் மீனு.​

"இன்னிக்கும் உன் அங்கிள் லேட்டா வந்தால் யாரும் வந்து கதவு திறக்க மாட்டார்கள் வாசல்ல தான் நிற்கனும்.."​

பூட்ஸின் லேஸ்களை முடிந்தபடி ராதா சொல்ல, நந்தகுமாரும் மீனுவின் மூலமாகவே பதில் சொன்னான்​

"நேற்று எனக்காக கதவு திறந்த தேவதை இன்னிக்கும் நிச்சயமா உதவி பண்ணும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு மீனு."​

"யாரையும் அதிகம் நம்பிடக்கூடாது மீனு."​

"நான் இதுவரை யாரையும் நம்பி மோசம் போனதில்ல. இப்பவும் யாரும் என்னை ஏமாத்திட மாடடாங்கனு தான் நினைக்கிறேன் மீனு."​

அவர்களின் பேச்சுக்கு மீனு வெறும் பகடைகாயாய் தான் பயன்பட்டாளே தவிர,அவளுக்கு ஒரு அட்சரம் கூட விளங்கவில்லை​

"அங்கிள் ! நீங்க ரெண்டு பேரும் என்ன பேசறிங்க? யார் கிட்ட பேசறிங்க? என்னிடமா பேசறிங்க? எனக்கொண்ணும் புரியலையே."​

மலர மலர விழித்து கொண்டு மீனு கேட்கவும், அடக்க மாட்டாமல் சிரித்து விட்டனர் இருவரும்.​

பயமும் நாணமுமாக ராதா வீட்டினுள் செல்ல முனையும் பொழுது, ஜானகி குரல் கொடுத்தாள்​

"என்ன டாக்டர் சார் தினம் நாங்க காலேஜ் போற டயத்துக்கு ஆஜராகறிங்க எங்களுக்கு காரில் லிஃப்ட் கொடுக்கவா?"​

"நான் லிஃப்ட் கொடுத்தால் மட்டும் ஏறிவிடவா போறிங்க? மேலிடத்தில் சாங்ஷன் ஆக வேணடாமா? என்னுடைய ஆஃபரை விட உங்க சிநேகிதியின் பர்மிஷன் தானே உங்களுக்கு முக்கியம்."​

"என்ன டாக்டர் சார் ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நினைப்பா? மேலிடத்தை பிடிக்க தான் நீங்கள் இவ்விடத்திற்கு சலுகை காட்டறிங்கனு புரியாத அளவிற்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்லை ."​

ஜானகி பளிச்சென்று பதில் சொல்ல,நந்தகுமாரன் அசட்டுச் சிரிப்புடன் அவளுடைய நேர்பார்வையை தவிர்த்தான்.​

ராதாவிற்கு ஜானகி தன்னை பொய் சொல்லி ஏமாற்றினாளே என்று ஏற்கெனவே கோபம். இந்த லட்சணத்தில் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட கதையாய் நந்தகுமாரனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக முதலில் பொய் சொல்லிவிட்டு இப்போது அவள் எதிரிலேயே அவர்கள் இருவரையும் இணைத்து பேசவும் தாங்க முடியாமல் கோபத்தில் குரல் உயர்த்தி விட்டாள்​

"ஜானகிக்கு சலுகை கொடுத்து வசியம் பண்ணினால் உடனே இந்த ராதா மயங்கிடுவான்னு அர்த்தமில்லை."​

வழக்கமில்லாத வழக்கமாக படபடவென்று பொரிந்து கொட்டிவிட்டு ஓடியவளை பார்த்து பிரமித்து நின்றனர் ஜானகியும் நந்தகுமாரனும்.​

சற்று முன் மீனுவின் வழியாக வெகு இயல்பாக அவனுடன் உரையாடிய ராதாவா இவள்? அந்த மலர்முகத்தில் கோபத்தின் ரேகை கூட படர முடியுமா?​

ஸ்தம்பித்து போனான் நந்தகுமாரன்.​

"உங்க சினேகிதியை என்னால புரிஞ்சுக்கவே முடியல ஜானா க்ராஸ் வொர்ட் புதிர் மாதிரி கலங்கடிக்கறாங்க."​

"வருசக்கணக்கா பழகற என்னாலயே அவளை புரிஞ்சுக்க முடியாதபொழுது இப்ப தான் பழக ஆரம்பிச்சிருக்கற உங்களுக்கு மட்டும் எப்படி புரியும்?ஏன் அவ மனசையே அவளால புரிஞ்சுக்க முடியுமான்றதே சந்தேகம் தான் ."​

ஜானகி நிதானமாக அதே சமயம் வேதனையுடன் சொன்னாள்.​

 
Last edited by a moderator:
மருத்துவரின்,
ஜாடை பேச்சுகளும்,
ஜொள்ளு விடும் அழகும்,

மங்கையின்,
காதல் பார்வைகளும்,
கண்டிக்கும் தோரணையும்,

தோழியின்,
வம்புச் சண்டைகளும்,
வஞ்சப் புகழ்ச்சியும்,

தங்கையின்,
கள்ளம் கபடமில்லாத கேள்விகளும்,
குறும்புச் சேட்டைகளும்,

ஆத்தரின்,
வசீகரிக்கும் எழுத்துநடையும்,
வற்றாத நேர்மறையும்,
வாவ்! வாவ்! வாவ்!
 
அண்ணல் நோக்கினான்
அன்பு பார்வையில்
அவளும் நோக்கினால்
அனல் பார்வையில்.....
அன்பு நம்பிக்கை தரும்
அனல் தள்ளி தான் வைக்கும்.... 👏🏻👏🏻👏🏻👏🏻💕💕👍🏻👍🏻💐💐🤩🤩
 
Top