Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 11

Advertisement

parvathi

Active member
Member

அத்தியாயம் 11​

லா லா ல லா ல லலலா லலா​

எஸ் ஜானகியின் இனிமையான ஹம்மிங்கில் ஆரம்பித்து ஆயிரம் தாமரை மொட்டுக்களும் ஆனந்த கும்மிகள் கொட்ட தொடங்கின. விழிகள் மூடி பாதங்கள் தாளம் போட இசையின் இனிமையில் தன்னை மறந்து லயித்திருந்த ராதா எப்எம் ரேடியோ அணைக்கப்பட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்​

"என்னடி இது அதிசயமாயிருக்கு சினிமா பாட்டு அதுவும் காதல் பாட்டெல்லாம் ரசிக்க ஆரம்பிச்சிருக்க ஊகூம் என்னவோ சரியில்ல அந்த டாக்டர் வந்து போனதிலிருந்து நீ ஒரு மார்க்கமா தான் இருக்க என்னடி சம்திங் சம்திங்கா? "​

குறும்பாக கண்சிமிட்டியவளை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள் ராதா.​

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல சினிமா பாட்டு எனக்கு பிடிக்காதா என்ன? பாட்டி ஆத்துல இருந்தால் பாட்டு கேட்க விடமாட்டாள் இப்போ பாட்டி கோவிலுக்கு போயிருக்கா அதான் தைரியமா எப்எம் கேட்டுண்டிருந்தேன்"​

"உண்மையான காரணம் அதுதான்னா சரி ஆமா ஒரு வாரமா உன்னை பார்க்கவே முடியல. அம்மிணி இந்த ஊரில் தானே இருந்திங்க?"​

"என்னடி ஆச்சு உனக்கு? நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் கேலியும் கிண்டலுமாகவே பேசிட்டிருக்க ஒரு வாரமாகவே நிறைய வேலை மாடி வீட்டை ஒழிச்சு சுத்தம் பண்ணினோம் .அதான் உன்னை பார்க்க வர முடியல அதற்காகவா இவ்வளவு கோபம்?"​

ஜானகி சிரிப்புடன் ராதாவை நெருங்கி அவள் தோளில் முகம் பதித்துக் கொண்டாள்​

"டாக்டர் நந்தகுமார் எப்போ குடி வர்றார்?"​

"அடுத்த மாசம்னு அப்பா சொன்னார்."​

"ராதா உனக்கு ஒரு விசயம் தெரியுமோ? இந்த டாக்டரை எனக்கு ஏற்கெனவே தெரியும் ஸ்ரீராம் இவரை பற்றி நிறைய சொல்லியிருக்கார் ஸ்ரீராம் நந்து நந்துனு அடிக்கடி உருப்போடுவாரே அந்த ப்ரெண்ட் நந்து இவர் தான்."​

"அப்படியா ஸ்ரீராமோட ப்ரெண்டா இவர்?"​

"ஆமா ராதா ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஸ்கூல்லருந்து காலேஜ் வரை ஒண்ணா தான் படிச்சாங்க மேற்படிப்பும் சேர்ந்து தான் பண்ணினாங்க ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் நந்தகுமார் ஸ்ரீராமை முந்திட்டார்."​

"எதுல முந்திட்டார்?"​

"கல்யாணம் பண்ணிக்கறதில் தான் நந்தகுமாரனுடைய அம்மாவுக்கு பேரப்பிள்ளைகளைப் பார்க்கனும்னு ரொம்ப அவசரம் அதுதான் நந்தகுமார் சீக்கிரமே கல்யாணம் செய்து கொண்டார் அவர் மனைவி டெலிவரிக்கு அவங்கம்மா ஆத்துக்கு போயிருக்காளாம் அதனால அம்மாவும் பிள்ளையுமா தான் குடிவருவாங்க பாரேன்"​

'ஹய்யோ ஜானா இப்படி அள்ளி விடறியே ராதா தாங்குவாளா?'​

அதட்டிய மனசாட்சியை அடக்கி கொண்டு ஜானகி ராதாவை ஓரக்கண்ணால் பார்த்தாள் .ஊகூம் அவள் எதிர்பார்த்த. ரியாக்சன் ராதாவிடம் இல்லை.​

"ஆனாலும் நீ ரொம்ப அழுத்தம்டி அம்மா "​

வாய்க்குள் முணுமுணுத்து கொண்டாள் ஜானகி​

ஆனால் உண்மையில் ராதா அதிர்ந்து தான் போயிருந்தாள்.​

"என்னம்மா ஜானகி எப்படியிருக்கே? இப்பல்லாம் உன்னை பார்க்க முடியறதில்லை படிப்பில் மும்முரமோ? "​

கேட்டுக் கொண்டே வந்த சுந்தரத்தை பார்த்து புன்னகைத்தாள் ஜானகி​

"நன்னாயிருக்கேன் மாமா நீங்களும் மாமியும் ஏதோ விசேஷத்துக்கு போயிருக்கறதா ராதா சொன்னா.."​

"ஆமாம்மா உறவுக்கார பொண்ணுக்கு கல்யாணம்."​

சுந்தரம் சொல்லிக் கொண்டிருக்கும பொழுது மீனு இடையில் குறுக்கிடடாள்​

"ஜானாக்கா ரிசப்சன்ல நான் ஸ்வீட் நிறைய சாப்பிட்டேன்னு அம்மா திட்டினா ஜலதோசம் வரும்னு கூட சொன்னா. அப்படி எதுவும் உடம்புக்கு நோய் வந்தால் ஜானாக்கா மருந்து கொடுப்பாள்னு நான் சொன்னேன் நீ கொடுப்பாய் தானே? "​

அண்ணாந்து முகத்தை பார்த்தபடி சொன்ன சின்னவளை வாரி அணைத்துக் கொண்டாள் ஜானகி​

"உனக்கு உடம்புக்கு எந்த நோயும் வராதுடி தங்கம் …."​

"பேஷ்!பேஷ்..! நீ படிப்பை முடிக்கறதுக்குள்ளே உன்னை டாக்டராக்கிட்டா மீனு சீக்கிரமே படிப்பை முடிச்சுட்டு கல்யாணம் பண்ணின்டு இவளோட விளையாட எங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடும்மா ஜானகி"​

உள்ளார்ந்த அன்புடன் சுந்தரம் சொன்னார்.​

"என்ன மாமா இப்படி சொல்றிங்க? ராதாவுக்கு என் கையால பிரசவம் பார்த்து அவ பிள்ளைகள் தான் உங்களை முதலில் தாத்தானு கூப்பிடனும்னு நான் நெனச்சுட்டிருக்கேன் நீங்க என்னடான்னா…"​

ஜானகி முழுவதுமாக பேசி முடிக்கும் முன் சுந்தரத்தின் குரல் தழுதழுத்தது.​

"எல்லாத்துக்கும் வேளைனு ஒண்ணு வரனுமேம்மா."​

அப்பாவின் வேதனை தாளாமல் ராதா வெளியேற ஜானகிஅவரை சமாதானப்படுத்த முற்பட்டாள்​

"கவலைப்படாதிங்க மாமா எல்லாம் நல்லபடியா நடக்கும்."​

"நானும் முன்னால அப்படித்தான் நெனச்சுட்டிருந்தேன் என் மகளோட அழகுக்கும் அறிவுக்கும் ராஜகுமாரன் மாப்பிள்ளையா வருவார்னு கனவு கண்டேன் ஆனால் அது வெறும் கனவு தான் இல்லையா? இன்னிக்கும் கல்யாண சந்தையில் பணம் தானே பிரதானமாயிருக்கு.."​

ஜானகிக்கு புரிந்து விட்டது கல்யாண ரிசப்சனுக்கு போய் வந்த மாமாவுக்கு தன் வீட்டிலும் கல்யாண வயதில் பெண்கள் இருக்கிறார்களே என்ற கவலை மனதில் இயல்பாக எழுந்திருக்கிறது. தன்னால் இயன்ற வரை ஜானகி அவர் மனக்கவலையை மாற்ற முயற்சி செய்தாள்.​

"மாமா இந்த காலத்தில் கல்யாணமெல்லாம் ஒரு பிரச்னையேயில்லை. கல்யாண மார்க்கெட்டில் பெண்களுக்கு தான் டிமாண்ட்னு சர்வே சொல்லுது இப்போ பெண்களுக்கு படிப்பு வேலை பொருளாதார சுதந்திரம் இதெல்லாம் தான் அவசியம் தேவை அந்த காலம் மாதிரி சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை ஏன்னா மாப்பிள்ளைகள் எண்ணிக்கை பெண்களை விட ஜாஸ்தியாயிருக்குனு சர்வே சொல்லுது அதனால் நீங்க கவலையேபடாதிங்க போதாததற்கு உங்களுக்கு துணையா மலை மாதிரி பாலு அண்ணா வேற இருக்கார் தைரியமா இருங்க மாமா நான் வரட்டுமா.."​

ஜானகி விடைபெற்று கொண்டு போய்விட்டாள். சுந்தரத்தின் மனச்சுமையை தன் ஆறுதல் பேச்சினால் பெருமளவு குறைத்தவள், அவர் மகளின் மனதில் வேண்டாத பாரத்தை அல்லவா ஏற்றி விட்டாள்.​

நந்தகுமாரன் திருமணமானவன் என்ற செய்தி ராதாவின் மனதை துவள செய்தது.​

'அவர் திருமணமானவரா ஜானகி ஒருவேளை என்னை சீண்டி பார்ப்பதற்காக அப்படி சொல்லியிருப்பாளா அவள் சொல்வது உண்மை என்றால் அவர் ஏன் என்னை தேடினார் சிரிக்க வேறு செய்தாரே அது பொய்யா'​

'நல்லாயிருக்கே உன் நியாயம் ஸ்ரீராம் உன்னை தேடியதில்லையா உன்னை பார்த்து சிரித்ததில்லையா அதே மாதிரி அவரும் ப்ரெண்ட்லியாக உன்னை நினைத்திருப்பார் நீ அதை காதல் என்று அர்த்தம் பண்ணிக்கலாமா தப்பில்லையா'​

மாறுபட்ட எண்ணங்களால் மறுகி கொண்டிருந்த ராதா அவள் பெற்றொரின் வாக்குவாதங்களை கேட்டிருந்தால் ஒரு வேளை அவள் மனம் தெளிவடைந்திருக்கும். ஜானகியின் பொய்யும் அம்பலமாகியிருக்கும் பஞ்சையும் நெருப்பையும் தெரிந்தே பக்கத்தில் வைப்பதாக காயத்ரி கவலைப்படுவதும் புரிந்திருக்கும்​

வாஸ்தவத்தில் காயத்ரிக்கு நந்தகுமாரனை மாடியில் குடித்தனம் வைப்பது பிடிக்கவில்லை​

"ஏன்னா மாடி வீட்டை அந்த டாக்டருக்கு அவசியம் வாடகைக்கு விடனுமா?"​

நந்தகுமாரன் வந்து போன நாளாய் காயத்ரி ஓயாமல் கேட்கும் கேள்வி இது தான் இந்த முறை சுந்தரம் கோபமாகவே பதில் சொல்லி விட்டார்​

"ஏண்டி நீ இதையே எத்தனை தடவை தான் திரும்ப திரும்ப கேட்பாய்? அந்த பிள்ளையாண்டான் பிடிவாதமா அட்வான்ஸ் கூட கொடுத்துட்டு போய்ட்டான். வாடகையும் நாம எதிர்பார்த்ததை விட ஜாஸ்தி வரப்போறது கூடுதல் வருமானம் நம்ம குடும்பத்துக்கு ரொம்ப உபயோகமாயிருக்கும் காயத்ரி ஆனால் நீ எதை நினைத்து கவலைப்படறேன்னும் எனக்கு புரியாமல் இல்லை. அந்த டாக்டர் வாலிப வயசுக்காரராயிருக்கார்ன்ற ஒரே காரணத்துக்காக வர்ற வருமானத்தை புறந்தள்ள முடியுமா? அதோட எனக்கு என் பெண்கள் மேல நம்பிக்கை இருக்குடி நம்மை மீறி எந்த தப்பும் நடந்துடாது கவலைப்படாதே."​

சுந்தரத்தின் நம்பிக்கைக்கு ராதா உறுதுணையாக இருப்பாளா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்​

 
Last edited by a moderator:
வழிமேல் விழிவைத்து பாவை ஏங்க,
வம்புக்கு இழுத்து தோழி சீண்ட,
வரவை நினைத்து தந்தை மகிழ,
வரும்முன் காப்போம் எனத் தாய் தயங்க,
வருங்காலம் யாருக்குத் வரம் அளிக்கப்போகிறது???
 
சீண்டலில் தோழி உரைக்க
சோகத்தில் ராதை துவழ
சங்கடத்தில் தந்தை தத்தளிக்க
சமாதனத்தில் தாய் யோசித்திட
சதி செய்யும் விதியின்
சதுரங்க ஆட்டத்தில்
சரிய போவது யாரோ....
 
அம்மாடி! ரெண்டுபேருமே கவிதையாய் கலக்கறிங்க.நெஞ்சார்ந்த நன்றிகள்.🙏🏻
 
Top