Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே_ மொழி 8

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 8

கரும சிரத்தையுடன் காரை செலுத்தியபடி இருந்த அருள் மறந்தும் அவள் புறம் திரும்பி பார்க்கவில்லை. இஷி புசுபுசுவென மூச்சை இழுத்து வெளியேற்றியவள் ரிவியூ மிரர் வழியாக அவனை பார்ப்பதும் முணுமுணுப்பதுமாக இருந்தாள். அவனுடன் முன் இருக்கையில் அமர்வதற்கு அவளது ஈகோ இடம் தராமல் போக " நீ ஆஃப்டரால் ஒரு பாடிகார்ட். உன்கூட நான் முன்னாடி உக்காந்து வந்தா என் இமேஜ் என்ன ஆகும்." என்று முறுக்கி கொள்ள அதை அவன் சட்டை செய்பவன் இல்லையே.



விரல் நகங்களை கடித்து துப்பியபடி மொபைல் ஃபோனை கையில் எடுத்தவள் தோழிகளுக்கு குறுஞ்செய்தியை பறக்கவிட அது சரியாக சென்று சேர்ந்தது. சில வினாடிகளில் நீல நிறத்தை காட்ட அது தாங்கி வந்த செய்தி அவளுக்கு நிம்மதியை தர உதடுகள் தானாக வளைந்தது. அதற்குள் காரை கேட்டில் இருந்து வளைத்து வீட்டின் வாசலில் கொண்டு நிறுத்தியிருந்தான் அருள்.



இஷி கீழே இறங்கியவள் முன்னிருக்கையின் சன்னல் வழியாக சொடிக்கிட்டு அவனை அழைத்தபடி "நான் வெளியில போனும். இங்கேயே வெயிட் பண்ணு. புரிஞ்சுதா " புருவம் உயர்த்தி கட்டளையிட கதவை திறந்து வெளியில் வந்தவன் பொய்யாக இளித்தபடி எதிர் திசையில் நடக்க அவனது சைகை அவளுக்கு எரிச்சலை கொடுத்தது. "மேனர்ஸ்க்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத இடியட் கிட்ட என்ன மாட்டி விட்டுட்டானே..ஹர்ஷா... உன்ன" என்றபடி ஃபோனை எடுத்தவள் எடுத்த வேகத்தில் அவனுக்கு அழைக்க அவனோ அழைத்த வேகத்தில் காலை கட் செய்திருந்தான்.



" என்ன கட் பண்ணிட்டான் " என்று பாவமாக சொன்னவள் ஒரு நிமிடம் தாமதித்து "ம்ஹும்.. என் போனையே கட் பண்ணுறியா பார்த்துக்குறேன்" என்று வைராக்கியத்தை மனதில் புதைத்தபடி உள்ளே செல்ல பரந்து விரிந்த ஹாலில் கால் மேல் காலை போட்டபடி அமர்ந்திருந்தார் பத்மாவதி.



அவரை கண்டதும் முயன்று சிரித்தவள் "ஹாய் ம்மா" என்றதோடு படிகளை நாட "இஷி.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. இங்க வா" என்றார் பத்மா. இஷி மறுக்கவில்லை இரண்டு படிகளை கடந்து வருவது சிரமமாக தோன்றவில்லை அவளுக்கு. கீழே இறங்கி அவரது அருகில் சென்றவள் எதிரில் கிடந்த திவானில் அமர்ந்தாள்.



சாவகாசமாக சாய்ந்து கொண்டவள் பேக்கை டீபாயில் வீசியபடி "சொல்லுங்க.. உங்களுக்கு என்ன வேணும் இப்போ" நக்கலாக அதே வழுக்கட்டாய சிரிப்பு முகத்தில். பத்மா காஃபி கப்பை கீழே வைத்தவர் "ஹர்ஷா எடுத்த முடிவுல உனக்கு விருப்பம் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றதும் சற்றும் யோசிக்காத இஷி "ஓஹ் அப்டியா? எனக்கு விருப்பமில்லன்னு தெரிஞ்சு தான் நீங்க சைலன்டா இருக்கீங்களா.. ம்மா..நீங்க என் இடத்துல இருந்து யோசிச்சு பார்க்குறதையே என்னால நம்ப முடியல. சீரியஸ்லி...பாருங்க உடம்பே புல்லரிக்கிது. யூ நோவ் வாட்...எனக்கு பிடிச்சாலும் பிடிக்கலனாலும் நான் நீங்க சொல்ற மாதிரி தானே இருக்கேன்... இருந்திருக்கேன்" என்றவளின் பேச்சில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.



பத்மா " நான் எந்த முடிவ எடுத்தாலும் அதுல உனக்கு நல்லது தான் இருக்கும் இஷி" நிதானமாக சொல்ல அவரது நிதானம் இஷியை கொதி நிலைக்கு தள்ளியது. "எந்த நல்லத பத்தி சொல்றீங்க ம்மா.. இது என்னோட லைஃப் அத நீங்க மாத்தி அப்பா... அப்பா மாத்தி ஹர்ஷா. இப்டி எல்லாரும் வாழ்ந்தீங்கனா.. நான் எப்போ வாழுவேன். ஐம் ஃபெட் அப் மாம்.. சோ இனி என் லைஃப நானே வாழ்ந்துக்குறேன் அண்ட் ஸ்டே அவே ஃபிரம் மை லைஃப்.. ப்ளீஸ்" என்று தோளை குலுக்கியபடி எழுந்துள்ளது "நான் நைட் பார்டிக்கு போறேன். வர லேட் ஆகும்" என்று மொட்டையாக கூறிவிட்டு மீண்டும் படிகளை நாடி நடந்தாள்.



பத்மா அவள் கண்களை விட்டு மறையும் வரை பார்த்தபடி இருந்தவர் " நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல இஷி. ரொம்பவே வளர்ந்துட்ட. நீ வளர்ந்ததுக்கு சந்தோஷ படவா..? இல்ல இன்னும் உனக்கான இடம் எதுன்னு தெரியாம நீ இருக்கத நெனச்சு கவலைபடுறதா!?" என்று தனக்கு தானே பேசியபடி எழுந்து சென்றார்.



இஷி அறைக்கு சென்றவள் கையில் இருந்த விலை உயர்ந்த ஃபோனை கட்டிலின் மேல் வீசி அடித்தவள் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட சிறிது நேரம் இவ்வாறு கழிந்தது. எவ்வளவு நேரம் கடந்தது என்பதை அவள் அறியவில்லை. அவளை நிகழ்வுக்கு இழுத்து வந்தது அந்த சிரிப்பு சத்தம்.



இஷியின் கால்கள் தானாக நடந்து பால்கனியை அடைந்தது. தோட்ட வேலை செய்யும் நீலகண்டன் வாட்ச்மென் மாரியப்பன் புடைசூழ கையில் பேப்பர் கப்பை ஏந்தியபடி ஆவி பறக்கும் டீயை பருகியவன் கலகலவென நகைத்தபடி இருந்தான் அருள். அவனது சிரிப்பில் எந்த கபடமும் தென்படவில்லை. மனதார சிரிக்கிறான். இத்தனை வருட வாழ்க்கையில் அவள் முன் பின் அறியாத புதுவித உற்சாகம் அவனிடம் இருந்தது.அது தனக்கு கிடைக்காத என்று மனம் ஒரு வினாடி ஏங்கியது. வெறும் மூன்று நாட்களே அறிமுகம் வாட்ச்மென் கேட்டை திறந்தவுடன் புன்னகைப்பதையும் அவருக்கு பதில் புன்னகையை வீசியபடி தலையை அவன் அசைப்பதையும் அவள் கவனிக்க தவறவில்லை.



நீலகண்டன் தோட்டத்து பழங்களை அவனுக்கு கொடுப்பதும் சரளா சாப்பிட அக்கறையுடன் அவனை தேடுவதும் அவள் அறிவாள். ஹர்ஷாவும் அவனை உயர்வாக சொல்லித்தான் கேட்டிருக்கிறாள். அவளையும் மீறி உதடுகள் அவனது மலர்ந்த வதனத்தை பார்த்து விரிந்தது. ஆனால் இந்த மனநிலை வெகு நேரம் நீடிக்க அவளது ஈகோ விடாமல் முரண்டியது.



"சிரிக்கிறியா... இன்னிக்கு உனக்கு இந்த இஷி யாருன்னு காட்டுறேன்" என்று கருவியபடி டவலுடன் குளியல் அறைக்குள் சென்றவள் பத்து நிமிடத்தில் கருப்பு பாடிகன் உடையை அணிந்தபடி தயாராகி கீழ வர அனைவரும் அவளது தோற்றம் கண்டு திகைத்தனர்.



"சரளாம்மா" என்று உரக்க அழைத்தவள் "நான் வர லேட் ஆகும்.. ஹர்ஷா வந்தா சொல்லிடுங்க" என்று தகவல் சொன்னவள் ஹை கீல் தடதடக்க வாயிலை அடைந்தாள். அருள் காரில் சாய்ந்து நின்றபடி ஃபோனில் உறையாடிக் கொண்டிருக்க காரின் கதவை தட்டி தன் இருப்பை சொன்னாள் இஷி. "டோர் ஓப்பன்ல தான் இருக்கு" என்றவன் மீண்டும் பேச்சை தொடர காலை தரையில் ஓங்கி உதைத்தவள் காரில் ஏறிக்கொள்ள ஆர அமர பேசி முடித்துவிட்டு காரை சொலுத்தினான். அரை மணி நேர பயணத்திற்கு பின் ஒரு எலைட் பப்பில் இறங்கிக் கொண்டவள் அவனை முறைத்து பார்த்துவிட்டு விடுவிடுவென உள்ளே சென்றாள்.



சில்ட்ரன்ஸ் பார்க் மாலை நேரம் என்பதால் குழந்தைகளின் சலசலப்பு சற்றே அதிகமாக இருந்தது. கவின் ஹர்ஷாவை பார்க்க ஹர்ஷாவின் பார்வையோ அப்பார்ட்மெண்ட் வாயிலை வட்டமடிக்க அவனை அதிகம் காக்க வைப்பதை விரும்பாமல் வந்து சேர்ந்தாள் காதம்பரி.



கவின் "சார்.. நிஜமாவே அந்த பொண்ணு தான் சார்" என்று வாய் பிளக்க அவள் பின்னோடு வரும் சுஷ்மிதாவை இப்போது தான் கவனித்தனர் இருவரும். "காது... ப்ராப்ளம் வராதே?" காதுவின் காதை சுஷ்மிதா கடிக்க "பேசாம வா சுஷ்" என்று அடக்கியபடி நடக்க இருவரும் பார்கை நெருங்கியிருந்தனர்.



"சுஷ் நீ இங்கேயே இரு. நான் பேசிட்டு வரேன்" என்றபடி அவளை நிறுத்தி விட்டு முன்னே சென்றவள் "சாரி ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறீங்களா?" என்று கேட்டபடி அவள் புன்னகைக்க ஹர்ஷா உறைநிலையில் இருந்தான். அவனிடம் பதில் இல்லாமல் போக காது கையை அவன் முகத்திற்கு முன் அசைக்க "ஆன்... சொல்லுங்க. என்ன பேசனும்?" என்றான்.



காதம்பரி காதோரம் முடியை ஒதுக்கியவள் கவினை பார்க்க நாகரீகம் கருதி அவன் விலகியே நின்றான். அவனது முகத்தில் ஆச்சரிய ரேகை விரவிக் கிடக்க எச்சிலை விழுங்கிய காதம்பரி "நான் பேசனும்னு சொன்னதும் ஏன் எதுக்குன்னு கேட்காம வந்திருக்கீங்க. தேங்க்ஸ்." என்றாள்.



"அது ஓகே.. நீங்க..விஷயத்த சொல்லுங்க" தூண்டினான்.



"சுஷ்மிதா.. உங்க ஃபிளாட்க்கு எதிர்த்த ஃபிளாட்.. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. அவ..." அவள் தயங்க ஹர்ஷா பேச துவங்கினான் "உங்க ஃபிரண்ட் கவின லவ் பண்ணுறாங்க. அத பத்தி பேச தான் நீங்க என்ன கூப்பிட்டிருக்கீங்க. ரைட்?" என்றதும் மூச்சு விட்டுக்கொண்டாள் காதம்பரி.



நெஞ்சில் கை வைத்து தன்னை சீர் செய்து கொண்டவள் " அப்பாடா...நீங்க கற்பூரம் தான் போங்க. அவளுக்கு உங்க ஃபிரண்ட பிடிச்சிருக்கு. பட்.. அவர்கிட்ட அத சொல்ல பயப்படுறா. ப்ச்..அவ என்ன மாதிரி போல்ட் இல்ல. ரொம்ப ஷை டைப். பாவம்..." என்றாள்.



ஹர்ஷா சுஷ்மிதாவை பார்க்க அவள் எப்போதோ கவினின் கண்களுக்குள் தொலைந்திருந்தாள். "பாவமா... யாரு உங்க ஃபிரண்டா.. அது சரி." என்றவன் தலையை ஆட்டி சிரிக்க "நீங்க கியூட்டா சிரிக்கிறீங்க" என்றவள் அவள் பேசிய வார்த்தைகளை மறந்தாள். ஆனால் ஹர்ஷாவின் இதயம் வரை சென்று விழுந்தது அந்த வார்த்தைகள்.



"தேங்க்ஸ்.. அப்றம் நீங்க என்ன ஹர்ஷானே கூப்பிடலாம். அதான் என் பேரு" அவன் பெருந்தன்மையுடன் சொல்ல புன்னகைத்தவள் அவன் முன் கை நீட்டி "காது.. காதம்பரி" என்றவள் மையலாக சிரித்து வைக்க அந்த வட்ட முகத்தை படம் பிடித்து மனதிற்குள் புதைத்துக் கொண்டான் ஹர்ஷா.



அவளுடன் கை குலுக்கியவன் "உங்க ஃபிரண்ட் ஏன் அங்கேயே நிக்கிறாங்க? இப்டி தூரமா நின்னு பார்த்துட்டே இருந்தா.. அவங்க மனசுல இருக்கது எப்டி அவனுக்கு புரியும்" என்றவன் கவினை பார்க்க அவனோ முடிந்தவரை சுஷ்மிதாவின் பார்வையை தவிர்த்தான்.



" ம்ம்.. நீங்க சொல்றது சரி தான் பட்.. உங்க ஃபிரண்ட் கூட அப்டி தான் இருக்காரு" என்றபடி கண்களால் காட்டினான் யோசிக்காமல் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள் காதம்பரி. ஹர்ஷா அவளது சைகையில் சிரித்தவன் "எல்லாம் சரி.. அவங்க தான் அவன்கிட்ட பேச தயங்குறாங்க.. நீங்களும் அவன்கிட்டயே டைரக்டா பேசியிருக்கலாமே..என்ன ஏன் அப்ரோச் பண்ணனும்?" அவன் புருவம் உயர்த்தி அவளது முகத்திற்கு அருகில் குனிந்து கேட்க அவள் நிமிடம் கூட தாமதிக்கவில்லை "எனக்கு தோனலங்க ஹர்ஷா. அதுவும் இல்லாம நான் எப்டி சுஷ்மிதாகாக யோசிக்கறேனோ நீங்களும் அப்டி தான் யோசிப்பீங்கன்னு மனசுல பட்டுச்சு. சோ.. உங்க கிட்ட பேசி பார்க்கலாம்ன்னு நெனச்சேன். நான் செஞ்சது சரி தானே?" இப்படி கேட்பவளை அவனது மனம் கொஞ்சாமல் என்ன செய்யும்.







ஹர்ஷா அவளை மெச்சுதல் பார்வை பார்த்தவன் "நீங்க என்மேல நம்பிக்கை வச்சு வந்ததுக்காக ஒரு உண்மைய உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கிறேன்.. அவனுக்கும் இந்த பொண்ண பிடிச்சிருக்கு. என்ன நெறைய கமிட்மெண்ட்ஸ் இருக்குன்னு பயப்படுறான். பட் டோண்ட் ஒரி.. அவன நான் பார்த்துக்குறேன். சோ நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து அவங்க லவ்க்கு ஹெல்ப் பண்ண போறோம்..டீல் தான?" என்று கேட்க தலையை வேகமாக அசைத்தவள் "எனக்கு டபுள் ஓகே.. உங்க நம்பர் சொல்லுங்க.. நம்ம நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்?" என்றவள் படபடக்க ஹர்ஷா பதில் பேசாதவனாக புன்னகைக்க "ஏன் அப்டி பார்க்குறீங்க.. அவங்க ரெண்டு பேரையும் நம்ம தான மீட் பண்ண வைக்க போறோம். அப்போ நம்ம காண்டாக்ட்ல இருக்கனும்ல" என்றதும் நெற்றியில் தட்டிக்கொண்டவன் "ஓஹ்... அதில்ல.. ம்ம்.. ஃபைன் நோட் பண்ணிக்கோங்க" என்றபடி தொலைபேசி எண்ணை அவன் சொல்ல அவளோ அதை பதிந்து கொண்டாள்.
நிமிடம் தாமதிக்காமல் உடனே அவனுக்கு அழைத்தபடி ஒரு ரிங்கில் அணைத்தவள் "இது என் நம்பர் சேவ் பண்ணிக்கோங்க. நாளைக்கு மீட் பண்ணலாம். பை ஹர்ஷா" என்று கையசைத்தவள் மெல்ல நடந்து சுஷ்மிதாவை நெருங்க ஹர்ஷாவை நோக்கி பறந்து வந்திருந்தான் கவின்.ஹர்ஷா அவளது எண்ணை கத்திரிக்க என்று சிவப்பு ஹார்டினுடன் சேவ் செய்து முடித்தபடி நிமிர தோழிகள் இருவரும் பார்வைக்கு அப்பால் மறைந்திருந்தனர்.



"சார்.. அந்த பொண்ணு என்ன சொல்லிட்டு போறா?" அவசரமாக கேட்க பார்வையை காதுவின் மேல் வைத்தபடி "லவ்வ சொல்லிட்டு போறா" என்று மொட்டையாக சொன்னவன் கவினை மட்டும் இல்லாது மொத்த உலகையும் மறைந்திருந்தான்.



நேரம் கடந்த நிலையில் அருளின் பொறுமை மெழுகாக கறைந்தது. "உள்ள போய் எவ்ளோ நேரம் ஆச்சு. என்ன செய்வாளா இருக்கும். பசங்க நாங்களே மிஞ்சி போனா அறை மணி நேரத்துல வந்துடுவோம்... முழுசா மூனு மணி நேரமா என்ன செய்றா இந்த பொண்ணு?" யோசனை வயப்பட்டவனாக இருக்க அவனது மனம் ஒரு நிலையில் இல்லை. "ம்ஹூம்... ஆள் வர மாதிரி தெரியல.. நம்ம தான் உள்ள போகனும்." தனக்கு தானே முடிவு செய்தபடி பப்பை நோக்கி நடக்க துவங்கினான் ஹர்ஷா.



அவளோ "என்ன எவ்ளோ டார்ச்சர் பண்ணிட்டான். அவன் என்னிக்கு என் லைஃப்ல வந்தானோ அன்னையில இருந்தே என் ஹாப்பினஸே ஸ்பாயில் ஆயிடுச்சு. இனி நான் சும்மா இருக்க மாட்டேன் ஃபரா.. அவனுக்கு நான் குடுக்குற குடைச்சல் தாங்காம அவனே.. அவனே ஹர்ஷாகிட்ட கூட சொல்லிக்காம கொள்ளாம ஓடனும்." என்று தொலை தொடர்பில் இணைந்தபடி கையில் வைத்திருந்த கப்பின் அடியில் கிடந்த ஆரஞ்சு நிற திரவத்தை காலி செய்தாள்.



அவளது கண்கள் ஆரஞ்சு திரவத்தை ஒவ்வொரு மிடறு அருந்தும் போதும் அதன் ஒளியை படிப்படியாக இழந்து வர அவளுக்கு முன்னால் வந்து அமர்ந்து அந்த ஆடவனின் முகம் கூட அவளது மூளையில் ரிஜிஸ்டர் ஆகவில்லை. அவளது கைகளை பிடித்து அழைத்தவனிடம் மறுத்து பேச திராணி இல்லாதவளாக அவள் ஏதோ சொல்லி புலம்பியவள் மறுநொடியே கண்கள் மூடி பின்னால் சரிய அவளை நெஞ்சில் தாங்கியிருந்தான் அருள்.

 
என்ன பண்ணிட்டு இருக்க இஷி நீ.. யாரு மேலேயே உள்ள கோவத்தை உன் லைப் யில் காட்டிட்டு இருக்க..

காது நீ என்ன இப்படி இன்னொஸெண்ட் யா இருக்க ..
 
Top