Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாரத விலாஸ் – 8

Dhanuja

Well-known member
Member
பாரத விலாஸ் – 8

திருமணம் இனிதே முடிய அதனை முழுதாக அனுபவிக்க முடியாமல் தவித்தது பாரத விலாஸ்.ஒருபுறம் மகன்கள் பண்ணும் சேட்டை மறுபுறம் செல்வி அடிக்கும் கூத்துயெனக் கலை கட்டியது வீடு.தற்போது அவ்வீட்டின் உள்ள பெண்களது பொறுமை இருக்கவா செல்லவா என்ற மிரட்டி கொண்டு இருக்க வழமை போல் அவர்களைக் காப்பாற்ற வந்து நின்றார் துரை.“என்ன சத்தம் இங்க?” என்று கேட்டுக் கொண்டே பெண்களை நோக்கி வந்தார் துரைசோனு,அண்ணா நீங்களே பேசிக்கோங்க நாங்க போறோம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அண்ணி கூடப் போராடுறோம் முடியல முகத்தில் சோர்வும் கவலையும் அப்பட்டமாகத் தெரிய பெண்கள் அனைவரும் அழுகும் நிலையில் நின்றனர் (அலமேலு,தில்சாத்,சோனு,ஜோன்)அண்ணியா!...... இது எப்போ என்ற ரீதியில் செல்வி முழித்து கொண்டு இருக்க அவளை பார்த்து முறைத்த துரை மற்ற பெண்களை நோக்கி நீங்க போய் படுங்க நான் பார்த்துக்கிறேன். இந்த ஒருவார்த்தைக்காகத் தவம் இருந்தவர்கள் போல் அனைவரும் கலைந்து சென்றனர்.அவர்களது வேகம் கண்டு சிரித்து கொண்டார் துரை.அவர்கள் செல்லும் வரையும் பார்த்தவர் சென்ற பின் செல்வியிடம் பொறுமையாகத் திரும்பி“என்ன அடம் பண்ணிக்கிட்டு இருக்கச் சின்னப் புள்ள மாதிரி ஹ்ம்ம்….”மிலிட்டரி குரலை உயர்த்த தூக்கி வாரி போட்டது....அவர் மிரட்டல் பயணத்தைக் கொடுத்தாலும் வெளியில் கெத்தாக “யோவ் இன்னா மிரட்டிகினு..... அப்பால பாத்துக்கோ”“என்னடி பண்ணுவ அவர் ஓர் அடி நெருங்க முனுக்கென்று கண்ணில் தாரை தரையாகக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது”“ஏய்! எதுக்கு இப்போ அழகுற”“நீ இன்னா சொல்லி கண்ணாலம் கட்டிக்கிட்ட இப்போ இன்னா பண்ணுற”செல்வியின் அழகையும் பேச்சும் எரிச்சலை கொடுக்கச் சற்று குரல் உயர்த்தியே பேசினார் "இப்போ என்ன பண்ணுனேன்"“உன்னாண்ட போய்த் தூங்க சொல்லிக்கினு இக்கு அந்தச் சோனு அக்கா”“இதுல என்னடி இருக்கு புருஷன் கூடத் தானே போகச் சொன்னாங்க” என்றதும் இன்னும் பயம் வர ஓ!........ என்று அழுதவளை“ஏய்!... ஏய்!.... வாய மூடு இல்ல என்ன பண்ணுவேன்னு தெரியாது இம்சை” என்றவர் சில நிமிடம் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு அவளது கையைப் பற்றித் தனது அறைக்கு இழுத்து செல்ல மீண்டும் செல்வி வாயை திறக்க “ஒப்பாரி வச்ச அடுத்து என்ன செய்வேனே தெரியாது சொல்லிட்டேன் பேசாம வா” என்ற அதட்ட செல்வி கப் சிப்..அவளைத் தனது அறையில் உள்ள சோபாவில் உட்கார வைத்து அருகில் அவளைப் பார்த்தவாறு அமர்ந்தவர் பொரிந்து தள்ளி விட்டார் "ஏய் என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?... இல்ல எப்படி தெரியுதுனு கேட்டேன்” கையைஅவளது முகத்துக்கு நேராக நீட்டி பேச பயந்து பின்னால் சாய்ந்து கொண்டாள் செல்வி.“ஆத்தி இன்னா இந்த ஆளு இம்புட்டுச் சௌண்டா பேசுறார் பயத்துல தூக்கி தூக்கி போடுதே அம்மா நாகம்மா என்ன காப்பாத்திவுட்டுரு நான் தண்ணி கலக்கதா பால் இட்டாண்டு உதிக்கினே தாயே”

“என்னடி முழிக்கிற ரொம்பத் தான் பண்ணுற உன் பின்னாடியே அலையணுமா மூட்டு தேயுற வயசுல கல்யாணம் பண்ணி இருக்கேன் என்னால உன் பின்னாடி அலைய முடியாது,பாதிக் காலம் தொழில்,இழப்பு,புள்ளன்னு போச்சு இனி எனக்குத் துணை வேணும் எப்போ என்ன ஆகும் தெரியாது எத்தனை நாள் தனியா இருக்கிறது.வயசு போன பிறகு தான் எனக்குத் துணை தேடுது என்ன செய்ய.நீ என்ன நெனச்சு வரமாட்டேன் சொன்னான்னு எனக்குத் தெரியும்,வயசு திரும்புது பார் எனக்கு…… அப்படியே வாழ்ந்தாலும் புள்ள குட்டின்னு இருக்கப் போறேன்னா சொல்லு....” இந்த வார்த்தையில் தலை குனிந்து செல்வி மௌனமாகக் கண்ணீர் வடிக்க இரும்பாக அவரை வெறித்துப் பார்த்தார் துரை.“என்னத்துக்கு அழகுற உனக்கு இப்படி பேசுனாதானே புரியுது அப்போ நான் வலிக்கிற மாதிரி தான் பேசி ஆகினும்.உனக்குக் கல்யாணம் பண்ணிக்க முடியாது குழந்தை பிறக்காதுனு தெரியும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கலாம் யோசுச்சு தான் உங்கிட்ட அப்படி நடந்து கிட்டேன்”“முதல என் மனைவி பெயர் உனக்கு அதுவே பிடித்தம் வர கூடுதல் காரணம்.உன்ன பத்தி தெரியும் எந்த உறவுமே வச்சுக்கத் தயாரா இல்லனு தானே இங்க வந்து விட்டுட்டுப் போனார்…. உனக்குச் சொந்தமா? துரையின் கேள்விக்கு இல்லையென்று தலையை ஆட்ட“அப்போ தெருஞ்சவாரா?”“ஆமா” தன் நிலை கழிவிரக்கத்தைக் கொடுக்கத் தலை நிமிராமல் பதில் சொன்னாள்ஹ்ம்ம் ….இங்க பார் கல்யாணம் ஆகி இரண்டு மாசம் அவ கூட இருந்தேன் செழியன் வந்துட்டான் அவளை என்கூட அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க நானும் வேலைக்கு வெளியூர் வந்துட்டேன்.அப்புறம் செழியன் பிறந்து ஆறு மாசம் செண்டு தான் வந்தா கொஞ்சம் நாள் கூட அவளோட வாழ முடியல சொல்லப் போனா இருந்த நாளுல என்ன வாழ்ந்தோம்னு மறந்து போச்சு.அப்புறம் நடந்தது எல்லாமே கற்பனைக்கு அப்பாற்பட்டது அதைப் பத்திப் பேச விரும்பல இன்னும் எங்க அப்பா அம்மா இப்பவும் எனக்குக் கல்யாணம் பண்ண தயாரா இருக்காங்க. நான் தான் வேணான்னு சொல்லிட்டேன் புரியுதா.இப்ப சரினு சொன்னாலும் இளசுங்க கட்டிக்கக் காத்து கிடக்கு நான் தான் பிடிவாதமா நிக்கிறேன் இனி வம்பு பண்ணாம இரு இப்ப போய்த் தூங்கு என்றவர் தனது நண்பர்களைப் பார்க்க செல்லசெல்லும் அவரை “அடேயப்பா பாருடா கிழவனுக்குப் பவுச மனதுக்குள்” துறையைப் பலித்துக் கொண்டாள் செல்வி.மனம் சற்று லேசாக உணர்ந்தது துரை பேசியது வலித்தாலும் உண்மை அது தான் போக இடமில்லை என்று தானே இங்கு வந்தது.தனித்து வாழ பயந்து தானே திருமணம் செய்து கொண்டது பிறகு எதற்கு இந்த அழுகை இனி இவர்களுடன் ஒத்து போவது தானே முறையும் கூட என்று தெளிவாகச் சிந்தித்தவள் எப்போது தூங்கி போனாள் என்றே தெரியவில்லை.வெகு நேரம் நண்பர்களுடன் தீர்த்தம் ஆடி விட்டு வந்தவர் தனது படுக்கையில் படுத்து தூங்கும் செல்வியை ஒரு நொடி பார்த்து விட்டு தானும் அவளுடன் படுத்து கொண்டவர்.ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் செல்வியைப் பார்த்து "வயசு போனாலும் இருக்கிற கொஞ்சம் காலம் நல்ல வாழனும் நான் தொலைச்ச வாழ்க்கையை” என்றவர் அவள் நெற்றியில் இதழ் பதித்து உறங்கிப்போனார்.

துரை ரசனைக்காரர் அவருக்கும் சில கல்யாண கனவுகள் உண்டு தான் ஆனால் மனைவியின் இறப்பிற்குப் பிறகு பொறுப்புகள் அணி வகுத்து நிற்க மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.செழியனை தவிர ஆழ்ந்து உணர்வுகள் கொண்ட நினைவுகள் எதுவுமே இல்லை அவரது திருமண வாழ்க்கையில்.இப்போது அனைத்தும் சரி செய்து பிள்ளைகளிடம் கொடுத்த பின்பு புதிதாகத் தனது இளமையைத் தேடினார்.சும்மாவா சொன்னார்கள் அறுபதில் தான் ஆசை கூடுமென்று துரையின் ஆசை நியாயமாக இருக்கவே நண்பர்கள் இத்திருமணத்தை நடத்தி கொடுத்தனர்.இதனை அறியாத செல்வி நிம்மதியான தூக்கத்தில் இருந்தாள்.

*************************

அங்குக் காயத்திரி இமை மூட வில்லை இன்று நடந்தது அனைத்தும் அதிரிச்சியின் உச்சம் தான்.வீட்டுக்கு வந்தது முதல் தனது அன்னை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவள் தப்பு தப்பாகப் பதில் சொல்ல விமலா தான் சமாளித்து அவளுக்கு அலைச்சல் அதான் கொஞ்சம் படுக்கட்டும் என்று அவளது அறையில் விட்டுவிட்டு சென்றாள்.இரவு உணவையும் தவிர்த்து உறங்கியது போல் கண் மூடி கொண்டவளை எதுவும் சொல்ல முடியாமல் அவளது பெற்றவர்கள் விட்டுவிட. நள்ளிரவில் நர்த்தனமாடியது மனம் பாசிலை எண்ணினாலே அடி வயிற்றில் ராட்டினம் சுற்றியது.“பெருமாளே என்ன அவரான்டா இருந்து காப்பதிவிற்று நேக்கு வேலை முக்கியம் .... கொஞ்சமாவது பெத்தவா இருக்காளேன்னு பயம் இருக்கா உரசிண்டு உட்காரர் யார குத்தம் சொல்லவா என்ன தானே.... “அவளுக்கு மனம் ஆறாமல் புலம்பி தள்ள தண்ணீர் எடுக்க வந்தா அவளது அன்னை அவள் தனியாகப் பேசுவதைப் பார்த்து விட்டு.“ஏன்னா இங்க வாங்கோ உங்க பொண்ணு தனியா பேசிண்டு இருக்கா நேக்கு பயமா இருக்கு” என்று நள்ளிரவில் கூச்சல் போட வாரி சுருட்டி எழுந்தவள் “அம்மா செத்த சும்மா இருங்கோ நேக்கு தலை வலி அதான் புலம்பினேன்”நெஞ்சில் கை வைத்துத் தன்னை ஆசுவாசம் பண்ணி கொண்டவர் “நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன்.வந்ததுல இருந்து நீ சரியில்லை இரண்டு நாள் வேலைக்குப் போக வேணாம் என்ன உடம்ப பார்” என்றவரை பார்த்து

“சரிம்மா” என்றவள் படுத்துக் கொள்ள மீண்டும் அவன் மதிமுகம் ஆட்டோவில் தன்னை நெருங்கி வந்து போன் செய் என்ற பாசில் தோற்றமே வந்து போகக் கண்ணை இறுக்க மூடி கொண்டாள் மாமி....மாமி செய்த அதே வேலையைத் தான் விமலா செய்து கொண்டு இருந்தாள் ஐயோ செல்வி அக்கா என்ன பண்ணுதுனு தெரியல இவ என்ன பண்ணுறான்னு தெரியலையே என்று தவித்துக் கொண்டு இருந்தாள் அவளுக்கும் பாசில் நடந்து கொண்டது அதிர்ச்சி தான் ஆனால் வெளி காட்டி கொள்ளவில்லை.


நாளை முதல் வேலையாகக் கார்மெண்ட்ஸ் சென்றவுடன் இதனைப் பற்றி மாமியிடம் பேச வேண்டும் முடிந்தால் இருவரும் செல்வி அக்காவை பார்த்தோ அல்லது போன் செய்தோ பேசி முடிவெடுக்க வேண்டும்.சாத்திய மாகாத ஒன்றை வளரும் முன்பே கிள்ளி எரிவது தான் நன்று என்று எண்ணி கொண்டாள் விமலா.


ஆனால் இவர்கள் இருவரையும் பற்றி யோசிக்க முடியாதடி பெண்ணே நாளை விடியல் தனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்குமென்று விதி மௌனமாக சிரித்தது.
 
Last edited:
Top