Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி- 9 அகத்தியன் குடும்பம்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
இனம்புரியாத அச்சம் சங்கோஜம் கனி ஸ்ரீ தோன்றியது.

இவர்தான் எங்க அப்பா..... பேரு
இசைஅமுதன். இதோ இந்தப் படத்தை பாரேன் ..... இவங்க என்.....! அம்மா பேரு அன்புக்கொடி...!

வா இங்க வந்து பாரு....!


ஹாலின் கோடியின் வலது பக்கம் இருந்த பூஜை அறையில் வாசலருகே நின்றபடியே.... வற்புறுத்தி அழைத்தான்.

தர்ம சங்கடமாய் மெல்ல நடந்து சென்று பூஜை அறையில் வெளியே இருந்து படி எட்டிப் பார்த்தாள்.

பூஜை அறையில் தெய்வமாக காட்சியளித்த ஏராளமான அம்சமான தெய்வப் படங்கள்..... இருபுறமும் 6 அடி உயரத்தில் கனத்த வெள்ளி குத்து விளக்குகள்.

தெய்வ படங்களுக்கு கீழ்..... வெள்ளியை சாயம் பூசப்பட்ட படத்தில் அன்புக்கொடி சாந்தமாய் கனிவாய் நேர் பார்வை பார்த்தாள்.

படத்திற்கு ரோஜாமணி சாத்தப்பட்டிருந்தது தந்த காமாட்சி விளக்கு அந்தப் படத்துக்கு அருகில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அன்புக்கொடி என் விழிகள் 'தான் ஒரு ஜமீன் தாரிணி' என்று கர்வமோ தோரணையோ தோன்றிய சிறிதும் தென் படவில்லை என்பதை கவனித்தாள் கனி ஸ்ரீ.

குணத்தில்.... அகத்தியன் தனது அம்மாவை போல் பிறந்திருக்கிறார்.

பெரிய ஜமீன் குடும்பத்தில் ஏகபோக வாரிசு என்ற கவுரவமும் அகத்தியன் என்னிடம் சிறிதும் காணப்படவில்லையே?

சகஜமாய் பேசுகிறார் பழகுகிறார். வெகு சாதாரணமாய் எளிமையாய் ஏழை பணக்காரர் வித்தியாசம் பாராமல் நடந்து கொள்கிறாரே.... இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும்?

ஜாடையில் அப்படியே அவர் பெரிய ஜமீன்தாரை உரித்து வைத்திருக்கிறார்.

ஆனால்..... பெரிய ஜமீன்தாரை படத்தில் பார்த்தாலே.... நடுக்கமாக இருக்கிறதே?

அவர் கோவில் இருந்து நேராக இங்குதான் வருவாரோ? அரண்மனைக்குள் என்னைப் பார்த்தால்..... என்ன என்று நினைப்பார்?

யாரோ ஒரு நாட்டியக்காரியை.... தகுதி தரம் பார்க்காமல்...... அரண்மனைக்குள்ளேயே மகன் அகத்தியன் கூட்டிக்கொண்டு வந்து விட்டானே? என்று கோபப்பட்டு விட்டால்?

ஜமீன்தாரின் தங்கை டாக்டர் காந்தமணி முகத்தை சுழிக்க தானே செய்வார் ?

அவர்கள் இருவரும் வருவதற்குள்.... இந்த அரண்மனையை விட வெளியேறிய வேண்டும்.

இல்லையென்றால் வீண் அவமானத்திற்கு தான் ஆளாக நேரிடும் என்று எண்ணி கனி ஸ்ரீ அந்த படத்தை பார்த்து இரு கரங்கள் குவித்து நமஸ்கரித்தாள்.

"நான் வரேன் சார்....! புரோகிராமுக்கு நேரம் ஆகுது...."

"எங்கப்பா இப்ப வந்துடுவாரு .... பார்த்துட்டு போ...."

"இல்ல சார்.....! புரோக்ராம் நல்லபடியா முடியட்டும்.... அப்புறம் வந்து பாத்துக்குறேன்...."

பாதை சலங்கைகள் ஒலிக்க..... அவசர அவசரமாய் அரண்மனை வாசலில் நோக்கி போனாள்.

"இன்னும் டைம் இருக்கு கனி ஸ்ரீ..‌.! ஒரே ஒரு நிமிஷம் எனக்காக..... இங்கே வா‌...."

அவளது பதிலுக்குக் கூட அவன் காத்திருக்காமல்.... தடதடவென்று மாடிப்படிகளில் ஏறினான் ‌.

ப்ளீஸ் கமான் கனி ஸ்ரீ.....!

மேலே இருந்தபடியே அவளைப் பார்த்து கையசைத்து அழைத்தான்.

ஐயோ இது என்ன தர்மசங்கடம்! டான்ஸ் புரோக்ராமிற்கு சற்று முன்பாக கிளம்பியது தவறாகப் போயிற்றே?

இவரது ஆணையை மீறவும் முடியவில்லை.

ஆணைப்படி நடக்கவும் முடியவில்லை.... பயமாய் இருக்கிறது.

பெரிய ஜமீந்தாரும் அந்த காந்தமணி வந்துவிட்டால் என்ன செய்வது ?

அலங்க மங்கல விழித்தபடி ஒரு கணம் நின்றாள்.

"இப்போ வரப் போறியா இல்லையா?"

அவன் உரிமையாய் அதட்டினான்.

"வ... வரேன்....." பாதச் சலங்கைகள்

ஜல் ... ஜல் என்று சத்தத்துடன் மாடி ஏறி போனாள்.

இந்த விசாலமான அறையில்..... விழிகள் குறும்பு கூத்தாட...... நின்றவனை குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.

"எதுக்காக கூப்பிடுங்க சார்?" என்றவளின் பார்வை எதிர்ச் சுவரில் படிந்து அதிர்ந்து போனாள்.

ஆள் உயரத்தில் பிரமாண்டமான புகைப்படம்! ஒன்றா? இரண்டா? சுவர் முழுவதும் பெரிது பெரிதாய் படங்கள்....!

அத்தனைப் படங்களிலும் கனி ஸ்ரீ விதவிதமான நாட்டிய உடையுடன் நவரசங்கள் வெளிப்படுத்தியபடி அபிநயித்து இருந்தாள்.

'எங்கெங்கு நோக்கினும் சத்தியடா'ன்னு சொல்ற மாதிரி.... எங்கு திரும்பினாலும் உன் அழகு உருவம் தான்...... என் கண்ணில் படணும்னு இப்படி செஞ்சேன்."













"மை காட்! இத்தனை படங்களையும் எங்கே எப்படி கலெக்ட் பண்ணீங்க?"

திகைத்துப் போய்விட்டாள் கனி ஸ்ரீ.

இது என்ன பெரிய விஷயமா? மனம் இருந்தால் மார்கம் உண்டு கனி ஸ்ரீ....!

தேனி மாவட்ட வட்டார பத்திரிகையில.... உன்னோட டான்ஸ் ப்ரோக்ராம் பத்தி அப்பப்போ செய்தி உன் படத்தோட வெளியிடறாங்கல்ல?

பத்திரிக்கை ஆபீசுக்கு ஒரு செக்குல 'சைன்' ( check book sign) பண்ணி கொடுத்து விட்டேன்.

பதிலுக்கு அவங்க உன் படங்களை சி.டியில் (c.d) போட்டோ (photo) குடுத்துட்டாங்க தட்ஸ் ஆல் (that's all).

இந்தப் படங்களை என் செல்போன்களிலும் பதிவு பண்ணி வச்சிருக்கேன்.

முதல் தடவை உன்னைப் பார்த்த போதே உன்னை எனக்கு பிடிச்சுப் போச்சு.... மறுநாளே... இந்த போட்டோஸ் என் ரூமுக்கு வந்துருச்சு. ஒரு செகண்ட் கூட... என்னோட மனக் கண்ணை விட்டு.... உன் உருவம் மறையறது இல்ல தெரியுமா? மறைவும் விடமாட்டேன்.

அப்படி ஒருவேளை மறைஞ்சுடுச்சுன்னா... அது என்னோட மரணத்துக்கு அப்புறம் தான் நடக்கும். கனி ஸ்ரீ ! இது சத்தியம்....! இன்று நெஞ்சம் நெகிழ பேசிவிட்டு.... உள்ளங்கையில் தனது உச்சன் தலையில் வைத்தான் அகத்தியன்.

அவனது பரந்த மார்பில் சாய்ந்த அவனை ஆரத் தழுவி.... "அகத்தியின்! ஐ லவ் யூ அகத்தியன்" என்று கூறி அவனது கண்ணங்களில் முத்தமிட வேண்டும் போல் இருந்தது.

சண்டிக் குதிரையாய் பாய்ந்து அவனிடம் தாவப் பார்த்து மனதை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

ஊகம்....! அதை நம்பி விடாதே பேதை மனமே! என்னைய ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள.... இவர் இப்படி எல்லாம் உள்ளம் உருகி பேசுகிறார்.

காய் நகர்த்திக் கொண்டு வருகிறார் இதை நம்பி விடக்கூடாது விட்டால் என் கதி.... அதோ கதி தான்....!

மனதிற்கு கடிவாளம் போட்ட அடுக்கி வைத்தவளுக்கு... அவனை ஏறிட்டுப் பார்க்க தெம்பில்லை என்பது நிஜம்....!

அவளது விழிகளில் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் தான் வைத்திருந்த வைராக்கியம் சுக்குநூறாக உடைந்துவிடும்.... கண்ணீர் மங்கல அவன் தோளில் சாய்ந்து விடுவோமோ ? என்ற உள்ளூர் பயந்தாள்.

அவளும் அவனை மனதார நேசித்தாள்.

இந்தக் காதலை எவ்ளோ வெளிப்பட்டு விடாதபடி அடக்கி வைத்தாள்.

?அவளையும் மீறி அரங்கத்தில் வெடித்துக் கொண்டு வெளியே வரும் என்று கனவிலும் கருதவில்லை ?

?
 
Top