Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-23 - அக்த்தியின் பிறந்தநாள்

Advertisement

Crazy Queen

Well-known member
Member
அடுத்த நான்காவது நாளில்.... அகத்தியனின் பிறந்தநாள்....!

அந்த நாளுக்காகத் தானே.... கனி ஸ்ரீ ஆவலாய் காத்திருந்தாள்?

அந்த 'இனிய செய்தி' இன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தால்?

ஆனால்.... கடந்த நான்கு நாட்களாய்.... கணவன் போக்கை கண்ட அவன் அரண்டு போய் இருந்தாள்.

முகத்தில் அப்படி ஒரு விரக்தி....!

தடையை இறுக கோபாவேசமாய்.... சதா தாங்கு கட்டைகளை வைத்து நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான்.

சில சமயங்களில்...‌. தாங்கு கட்டைகளை தவிர்த்துவிட்டு.... வாக்கிங் ஸ்டிக் ஊன்றிப் படி நடக்க ஆரம்பித்தான்.

அதீத வலியினாலா ? கோபத்தினாலா? என்று தெரியவில்லை.

அவனது விழிகள் கோவைப் பழமாய் சிவந்திருந்தது.

என்னங்க ஓவர் ஸ்ட்ரெயின் பண்றீங்களே? வேணாம் அகத்தியன்....! நிதானமாக பிஸியோதெரபி எடுத்துக்கங்க.... அப்புறம் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போது....

விழிகள் கலங்க... அவள் சொன்னதை அகத்தியன் செவிசாய்க்கவில்லை .சொல்ல போனால் அவன் திரும்பி கூட பார்க்கவில்லை.

வேதனையிலும் அவமானத்திலும் அவள் துடித்து போனாள்

என் மீது என்ன கோபம் இவருக்கு? ஏன் இப்படி வெறுப்புடன் பாராமுகமாய் இருக்கிறார்? நான் என்ன தவறு செய்தேன்?

பேஷண்ட்டாய் இருப்பவர்களுக்கு.... இனம் புரியாத தாழ்வு மனப்பான்மையும், அதீத கோபம் வந்துவிடும் என்று வாசித்திருக்கிறேன்....

அகத்தியனுக்கு அப்படி வந்திருக்குமோ?

அவரை நம்பி வந்திருக்கும் பேதைப் பெண்ணிடம் உதாரணம் நடந்து கொள்வாரரே?

என் மனம் என்ன பாடுபடும்? என்று இவருக்கு ஏன் தெரியவில்லை....

நினைத்து நினைத்து உள்ளுக்குள் அழுது உண்ணாமல் உறங்காமல் தவித்தாள்.

"விஷ் யூ..... மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே அகத்தியன்.....!"

அன்று அவள் விடியற்காலையில்
..."அறம் காத்த நாயகி என்ற குலதெய்வ கோவிலுக்குச் சென்று அவனது பெயருக்கு அர்ச்சனை செய்து வந்தாள்.

அவனது நெற்றியில் குங்குமம் பிரசாதத்தை தீற்றி விட வேண்டும் என்ற ஆசை தான்...!

தாடை இறுக.... ரௌத்திரம் சிவந்த விழிகளுடன் இருப்பவனே அருகில் நெருங்குவதற்கே... அதற்கே அவளுக்கு தயக்கமாக இருந்தது.

"கோவில் பிரசாதம்....! இந்த குங்குமத்தை...." அவள் பேசி முடிப்பதற்குள்....

"அப்படி வச்சிட்டு போ....!" என்று குரலில் வெறுப்பும் கோபமும் தெரிந்தது.

கீழ் உதட்டை அழுத்தி கடித்து... கொண்டு வந்த அழுகையை அடக்கியவாறு அறையை விட்டு வெளியேறினாள்.

அந்த இனிய செய்தி சொல்வதற்கு.... அவளுக்கு எப்படி துணிவு வரும்?

இவரது மனதில் ஏதோ இருக்கிறது? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கொட்டி தீர்த்தாள் என்ன?

மனதுக்குள் போட்டு புதைத்து... தன்னை வருத்திக்கொண்டு.... என்னையும் ஏன் இப்படி வாட்டி வதைக்கிறார்?

நான் என்ன பாவம் செய்தேன்?

ஒரு அறைக்குள் புகுந்து கட்டிலில் குப்புற படுத்து சத்தமில்லாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.

டியூட்டி முடித்துவிட்டு காந்த மணி... வேலைக்காரியை பார்த்து ஸ்ரீ எங்கே? என்றாள்.

"அதோ அந்த அறைக்குள் போனாங்க ரொம்ப நேரம் வெளியே வரவில்லை என்றதும்... அந்த அறைக் கதவை திறந்து பார்த்தாள்.

முதுகு குலுங்கி விம்மிக் கொண்டிருந்த கனி ஸ்ரீ கண்டதும்..... அவள் ஸ்தம்பித்துப் போனாள்.

என்ன பிரச்சினை? இவர்களுக்கு....? கேட்டு விடலாமா? கணவன் மனைவியின் அந்தரங்க விஷயத்தில் மூக்கை நுழைப்பது நாகரீகம் இல்லையே? என்ன செய்யலாம்...?

அகத்தியின் முகம்.... சில நாட்களாய் சரியாக இல்லையே? ஏன்...‌?

அவனிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது மெதுவாக அவனை கிளறி பார்க்கலாம்...'

வந்த சுவடு தெரியாமல் கதவை சாற்றி விட்டாள். கனி ஸ்ரீ அழுகை.... அவரது அடி வயிற்றை பிசைந்தது பாசத்திற்கும் மனம் வாகாய் கரைந்தது.

❣️இன்னும் 3 அப்டேட் கதை முடிச்சு விடுவேன்❣️

? ஸ்ரீ அந்த நல்ல செய்தி எல்லோரிடம் சொல்லுவாளா ??

? அகத்தியன் குழப்பங்களை வெளியே செல்வானை??

? அடுத்து என்ன நடக்கும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்? ?
 
Top