Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-11 விதி விளையாட்டு

Advertisement

Crazy Queen

Well-known member
Member
கனி ஸ்ரீ நடுவில் நிற்க வைத்து இந்தப் பக்கம் அந்தப் பக்கம் காந்தமணி நின்றபடி.... போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்....

"அகத்தியன் ! இப்படி ஒரு திறமையான டான்ஸர் வரவழைத்து அற்புதமான நாட்டியத்தை நாங்க எல்லாரும் பார்த்து ரசிக்கும் படி ஏற்பாடு பண்ணியிருக்கியே ? முதல்ல உன்ன தான் பாராட்டனும்....."

மெல்லிய குரலில் அவனது பூஜை தட்டி சிரித்தார் காந்தமணி.

அகத்தியன் பெருமிதத்துடன் ஏதோ சொல்ல வாயை எடுத்த போது.... உதவியாளர் அவசரமாக ஓடி வந்த அவனது காதில் ஏதோ கிசுகிசுத்தான்.

அதைக் கேட்டதும்.... அகத்தியனின் முகத்திலிருந்த பெருமிதம் சந்தோஷமும் மாயமாய் வற்றி வறண்டது.

கோபம் , ரோஷம், பொறுமையும் ஏககாலத்தில் தலை தூக்கியது.

"இல்ல... அதை நான் அனுமதிக்க முடியாது...." என்று உதவியாளர் மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

மறுகணம் வேகமாய் உதவியாளர் ஓடிப்போய்.... மேடையின் ஓரமாய் வந்து நின்றிருந்த அனுஷ் தடுத்தான்.

உங்கள் இளைய ஜமீன்தார் மட்டும் கனி ஸ்ரீ சன்மானம் தருவாரா.‌...

அவளோட கலைக்கு நானும் சன்மானம் தருவேன் அதை ஏன் நீங்கள் தடுக்கிறீர்கள் ?

இது ஜமீன் வம்சத்துக்கு உரிய அரங்கம் புரோக்ராம் எற்பாடு பண்ணியதை இளைய ஜமீன்தார் தான்.

இது அவங்க இடம்..‌‌. "அவங்களை மீது யாரும் கனி ஸ்ரீ நெருங்க முடியாது....."

"உங்கள் இளைய ஜமீன்தார் கிட்ட நாம் இதைப்பற்றி பேசுறேன்"

"முடியாது"

"ஏன் முடியாது?"

" அதற்கு இதுல உடன்பாடு இல்ல.... 'இதை அனுமதிக்க முடியாது என்று..... அவர் இப்பதான் என்கிட்ட சொன்னாரு..."

"இது நியாயமில்லை.....‌ அநியாயம்...."

நாட்டியத்தை காண வந்தவர்கள்.... கனி ஸ்ரீ வின் அற்புதமான நாட்டியத்தைப் பற்றியும் அவள் வெகு சிறப்பாக ஆடியது பற்றியும் சிலிர்த்து பேசிக் கொண்டிருந்தனர்.

கூட்டத்திலிருந்து சலசலப்பு சத்தம் பெரிதாய் வந்ததால்..... அனுஷ்க்கும் , உதவியாளர் இருக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் தெளிவாய் காதல் விழாவிட்டாலும்.... அவர்கள் அதில் உதட்டு அசைவை வைத்து.... அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார் என்பது புரிந்து கொண்டான் அகத்தியன்..

இனி ... அடுத்த கணத்தில் உதவியாளர் அடித்தாலும் திமிறிக் கொண்டு வந்த அனுஷ் மேடையின் நடு மையத்துக்கு வந்து.... கனி ஸ்ரீ விடம் ஏதாவது தர முயற்சிப்பான் என்று அவனது உள் மனம் சொன்னது.

அவ்வளவுதான்!

மறுகணம் தனது கழுத்தில் கிடந்த செயினை வேகமாக கழற்றினான்.

அதை கனி ஸ்ரீ வின் கழுத்தில் படக்கென்று போட்டுவிட்டான்.

கூட்டத்தில் இருந்து வந்த சலசலப்பு சத்தம் சற்று அடங்கியது.

ஸ்தம்பித்துப் போனாள் கனி ஸ்ரீ.

அது மட்டுமா? தனது கையில்...... மோதிர விரலில் இருந்த வைர மோதிரத்தை உருவி.... கனி ஸ்ரீ வின் கையை பற்றி அவளது விரல்களில் அணிவித்து விட்டான்.

அணிவித்த கையோடு..... அவளது தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான்.

இவள் என்னவள் ..... இவள் எனக்கு மட்டும் தான் சொந்தம்.....

இவளை நான் மனதார நேசிக்கிறேன்..... என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது அகத்தியனின் செயல்...‌!

அத்தை கௌந்தமணி வாயடைத்துப் போய் போனால்.

கனி ஸ்ரீ திக் பிரமை பிடித்தவளை போல் செய்வதறியாமல் கற்சிலையாய் நின்று விட்டாள்.

இவர் உருகி உருகி பேசும்போதெல்லாம்.....‌‌ என்னை ஆசை நாயகியாக ஆக்கிக் கொள்வதற்காக தான் ..... திட்டம் போடுகிறார் என்று நினைத்தேனே ?

நான் நினைத்தது மாபெரும் தவறாய் போய் விட்டதே ?

இவள் காதல் ஆத்மார்த்தமானது.... நேசம் உண்மையானது என்று நிரூபித்து விட்டார் ?

சப ஜனங்களுக்கு முன்.... பகிரங்கமாய் தனது உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தி விட்டார் !

தன் அப்பா, அத்தையின் முன்பாக... தைரியமாக இது செய்து விட்டாரே ?

இவரை நான் சந்தேகப்பட்டேனா ? ஐயோ...! இனி.... பெரிய ஜமீந்தார் என்ன முடிவு எடுப்பார் ?

என்னை மனப்பூர்வமாய் நேசித்து மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கிறார் அகத்தியன் ?

அதற்கு நான் தகுதியானவளா?

பாரம்பரியத்துக்கும் கவுரத்திற்கும் பேர்போன ஜமீன் பரம்பரை...!

இந்த குடும்பத்திற்கும் மரங்கள் அந்தஸ்து எனக்கு இருக்கிறதா?

அப்படிப்பட்ட குலத்தின் பிறந்தவளை.... எப்படி மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள் ?

சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.... இதற்கு முன் வர மாட்டார்களா ?

பேரும் புகழும் செல்வாக்கும் அந்தஸ்தும் மிகச் குடும்பத்தினர் எப்படி முன் வருவார்கள்?

இது நடக்கக்கூடிய காரியமா ?

ஊகம் ‌.‌‌.... சாத்தியமே இல்லை.

ஐயோ....! பெரிய ஜமீந்தார் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் ?

நாட்டியகாரி மகன் மனதை மயக்கி விட்டாளே ? என்று தான் எண்ணுவார்கள் ?

இவரது அத்தை காந்த மணி வேறு.... அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் என்னையும் அவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் இருக்கிறாரே?

அகத்தியனின் அரவணைப்பில் இருந்த என்னை விடுவித்துக் கொண்டு....‌ விலகி மேடை இறங்கி ஓடி விடலாம் என்றால்..... என்னால் அசையக் கூட முடியவில்லையே ?

கனி ஸ்ரீக்கு குப்பென்று என்ற வியர்த்து வழிந்தது.

கால்கள் பலமின்றி துணியாய் துவண்டு இருந்தது.

யாரையும் ஏறிட்டுப் பார்க்க தெம்பின்றி .... பார்வையை தாழ்த்திக் கொண்டு இருந்தாள்.

சில கணங்கள்..‌. ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் வண்ணம் அங்கே நிசப்தம் நிலவியது.

மறுகணம்‌..... சொல்லி வைத்தார் போல் அனைவரும் பலத்த கரவொலி செய்து ஆரவாரம் செய்தார்கள்.

"ஆஹா.... ஜோடி பொருத்தம் பிரமாதம்...!"

"இளைய ஜமீந்தாரரோட காதல் வாழ்க".

சூப்பர்....! எங்க எல்லாருக்கும் கனி ஸ்ரீ ரொம்ப பிடிச்சிருக்கு..... இவங்களே 'சின்ன எஜமானியை வரட்டும்...'

"எங்களைப் போல..... சாதாரண உழைப்பாளர் வர்க்கத்தை சேர்ந்த பொண்ணு..... பெரிய ஜமீன் குடும்பத்திற்கும் மருமகளே வர எங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான்...."

அகத்தியன் கனி ஸ்ரீ விரைவில் மணமக்களா நாங்க பார்க்க விரும்புகிறோம்.

"இளைய ஜமீன்தார் கனி ஸ்ரீ ஜோடி வாழ்க.... வாழ்க.... வாழ்க..." வாழ்க....

ஆவாரம் செய்து குரல் ஒலி எழுப்பி ஆர்ப்பரித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கூட்டத்தைப் பார்த்து... நெஞ்சம் நெகிழ கரம் கூப்பி நன்றி தெரிவித்தான் அகத்தியன்.

? பெரிய ஜமீன்தார் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரா ??

? விதியின் விளையாட்டு தொடருமா ??
 
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 
Last edited:
Top