Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-7

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-7
அன்று அபிநயாவின் பிறந்தநாள் என்பதால் கல்லூரியை கட் அடித்துவிட்டு வேழவேந்தனை பார்ப்பதற்காக மகாபலிபுரத்தில் கிளம்பிவிட்டாள்.
இவளுக்கு நிறைய சர்ப்ரைஸ் வைத்திருந்தான் வேழவேந்தன். ஓரளவுக்கு இத மாதிரி ஏதாவது செய்வான் என்று முன்னமே தீர்மானித்து வைத்ததால் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை ஆனால் கடைசியாக அவள் சொன்ன விஷயம் அவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.

“உன்னுடைய பிறந்தநாளை செலிபரேட் பண்ண பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கிறேன். அங்கு போய்தான் பர்த்டே செலிப்ரேஷன்.” என்றான். அவன் பேச்சைக் கேட்டவுடன் மிகுந்த அதிர்ச்சியடைந்தாள் அபிநயா.

“அங்கெல்லாம் வேணாம் வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்.” என்று சிறு குழந்தை போல முகபாவனை மாற்றிக் கொண்டு அவள் சொல்லுவதை கேட்டவனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

“அப்படின்னா நம்ம விஷயம் உன் அப்பா அம்மாவுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறியா? அல்லது கொஞ்சநாள் பழகிட்டு கழட்டி விட்டுவிடலாம்னு...”

“ஐயோ... ப்ளீஸ் நான் அப்படி சொல்லலையே இப்போதைக்கு தெரிய வேணான்னுதான் சொல்றேன்.”

“தெரிஞ்சா தெரியட்டுமே”

“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க வேழவேந்தன். தெரிந்தால் பிரச்சனையாயிடும். தகராறு பண்ணுவாங்க. வெளியில் எங்குமே போக முடியாது. இருக்கவே இருக்கான் எங்க அத்தை பையன் அவனை என் தலையில் கட்டி வைப்பாங்க. அட்லீஸ் அதற்கு முயற்சியாவது பண்ணுவாங்க. அதற்கு அதிகமா வாய்ப்பு இருக்கு. நேரம் பார்த்து நானே பக்குவமா அங்ககிட்ட பேசலான்னு இருக்கேன். இந்த நேரத்துல ஏடாகூடமாக நம்மள அவங்க பாத்துட்டாங்கன்னா பிரச்சினை ஆயிடும்னு. அதுக்குதான் பயப்படுறேன்.”

“ஓகே உன் பக்கத்து நியாயத்தை நீ சொல்ற ஆனா என் குடும்பத்திலேயும் அதே மாதிரியான பிரச்சனைகள் இருக்கத்தானே செய்யும். இந்த லட்சணத்துல என் பாட்டி வீடு வேற பாண்டிச்சேரியில் இருக்கு. அவர்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை பூதாகரமாக மாறிடும். நம்ப வேந்தன் யாரோ ஒரு பொண்ணு கூட சுத்திக்கிட்டு இருக்கான். அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் கல்யாணம் கூட ஆயிடிச்சின்னு கேள்விப்பட்டேனே அதெல்லாம் உண்மையா? என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா இவ்வளவு பிரச்சினையும் தாண்டி உன்னை கூப்பிடுறேன்னா உன்னுடைய சந்தோசம் முக்கியம் அப்படின்னு தானே அதையே புரிஞ்சிக்க மாட்டுறே? பிரச்சனைகளைக் கண்டு பயந்த நம்மளால அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியாது. எது வந்தாலும் சமாளிக்கலாம் என்ற மனநிலையை வச்சுக்கோ. சரி எதுவும் வராது முதல்ல அதை நம்பு. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு நான் போய் என்னோட பிரண்டோட கார் எடுத்துட்டு வந்துர்றேன்.”
இவளுடைய மறுப்பை காதில் வாங்காமல் வெளியில் சென்றவன் பத்து நிமிடத்தில் காரை ஓட்டிக் கொண்டு திரும்பி வந்தான்.

“பைக்கில் போனாதான் பிரச்சனை காரில் போயிட்டா எந்த பிரச்சனையும் இல்லை. இப்படி முன்னால் வந்து உட்காரு.” என்று உரிமையோடு சொன்னவனின் பேச்சை மறுக்க முடியாமல் முன் கதவை திறந்து கொண்டு அமர்ந்தாள் அபிநயா.
சுமார் ஒன்றரை மணிநேரத்தில் பாண்டிச்சேரி சென்றுவிட்டார்கள் இவனுடைய நண்பன் ஒரு உயர்தர ஹோட்டலில் ரூம் புக் பண்ணியிருந்தான்.

"ஜஸ்ட் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு பிரஸ் ஆயிட்டுவா நான் வெளியில வெயிட் பண்றேன். ஏன்னா நானும் நீயும் ஒரு ரூமுக்குள்ள போனா பிரச்சினை ஆயிடும். என்று குறும்பு சிரிப்பு சிரித்தபடி சொன்ன வேழவேந்தனை பார்த்து கோபத்தோடு முறைத்தாள்.

“நான் இங்க...நெருப்புமேல நின்னுகிட்டு இருக்கேன். உங்களுக்கு கிண்டலா இருக்கா” இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவள் சொன்ன விதம் இவனுக்கு மேலும் சிரிப்பை உண்டாக்கியது. வாய்விட்டு உரக்க சிரித்தான்.
கோபத்தோடு அவனை முறைத்துப்பார்த்துவிட்டு அந்த அறைக்குள் சென்று பிரஷ்சாயிட்டு அவள் வெளியில் வந்தாள். இருவரும் இணைந்து சென்று எதிர் புறம் இருந்த டேபிளில் அமர்ந்து இரண்டு காபி வரவழைத்து சாப்பிட்டார்கள். என்னுடைய நண்பர்களை கூப்பிட்டிருக்கேன். அவனுங்க வரதுக்குள் நாம பக்கத்துல எங்காவது போயிட்டு வரலாமா?”

“ம்ம்....வேற வழியில்லை நீங்க சொல்லுரத்துக்கெல்லாம் தலையாட்டிதானே ஆகணும்.”

“ஏய்...என்னாச்சி? உனக்கு விருப்பமில்லேன்னா இப்பவே கிளம்பிடலாம்.”என்றவன் பாக்கெட்டிலிருந்து கார் சாவியை கையிலெடுக்கவும்,

“ஓகே...ஓகே போகலாம்” என்றாள் அவனை சமாதனப்படுத்தும் விதமாக.
இவர்கள் முதலில் சென்றது பாண்டிச்சேரியில் புகழ் பெற்ற தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம்.

அந்த பூங்காவில் இருக்கும் அரிய தாவர இனங்கள் அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளன என்று அங்கிருந்த கைடு கூறவும், இவளுக்குள் ஒரு சுவாரசியம் தொற்றிக்கொண்டது. ஒவ்வொரு இடமாக கண்டு ரசிக்க ஆரமித்தாள். 22 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் ஆகியவை பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவரும் தெற்கு புற நுழைவாயிலுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. என்று மேலும் ஒரு தகவலை கூறியவருக்கு மீண்டும் ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பினார்கள்.

“பாண்டிச்சேரியிலுள்ள புகழ் பெற்ற மற்றும் முக்கியமான தேவாலயங்களில் ஒன்று இருக்கு. சிறு வயதில் நான் என் பாட்டி வீட்டுக்கு வரும்போதெல்லாம் இந்த ஆலயத்துக்கு கூட்டிட்டு வருவாங்க, வந்ததுதான் வந்தோம் ஒரு எட்டு அங்கேயும் போய் பார்த்துட்டு போயிடலாமா?”
மறுப்பு தெரிவிக்காமல் ‘சரி’ என்று தலையசைத்தாள்.
சற்று நேரத்தில் அந்த ஆலயத்தை அடைந்தவர்கள் காரை பார்க் பண்ணிவிட்டு உள்ளே நுழைந்தார்கள்.

“இந்த ஆலயத்தின் பெயர் ‘தூய இருதய கிறிஸ்து தேவாலயமாகும்’. கோதிக் கட்டிடக்கலையையொட்டிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள அந்த தேவாலயம் வருடம் முழுவதும் பார்வையாளர்களை வர வைக்கும் இடம் என்றான். இந்த தேவாலயத்தில் இருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் காலங்களை பிரதிபலிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கிறது.” என்று ஆலயத்தை பற்றி தனக்கு தெரிந்த தகவலை சொன்னான்.
பிறகு அங்கிருந்து கிளம்பினார்கள். வரும் வழியில் இவளுக்கு சங்கு மாலை ஒன்றை வாங்கி பரிசளித்தான். மழிழ்ச்சியோடு அதை வாங்கி தன் கழுத்தில் அணிந்துக்கொண்டாள்.
ஓட்டலை வந்தடைந்தபோது நண்பர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். இவளை கட்டாயப்படுத்தி வெளியில் அழைத்துச்சென்றதுகூட இந்த ஆரேஞ்மென்ட்காகத்தான் இருக்கும் என்பதை அபிநயா புரிந்துக்கொண்டாள். காரணம் இவர்கள் வருவதற்குள் லஞ், கேக் எல்லாம் ரெடியாக இருந்தது. அவனுக்கு தெரிந்த மூன்று நண்பர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் நான்கு பேர் சேர்ந்து கேக் வெட்டி லஞ்ச் பகிர்ந்துகொண்டு சாப்பிட்டார்கள் மணி பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.

“மணி மூனு ஆயிடுச்சு வேழவேந்தன் நாம கிளம்பலாம் இப்ப போனா தான் நான் கரைட்டான நேரத்துக்கு வீட்டுக்கு போக முடியும்.” என்றாள்.

“போலாம் கண்டிப்பா போகலாம் நான் கொஞ்சம் பேஸ்வாஷ் பண்ணிட்டு வந்துர்றேன். அதுவரைக்கும் இங்கே இருக்கியா?”
பிரண்ட்ஸ் எல்லாம் போய் விட்டதால் தனியாக அமர்ந்து இருக்க தயங்கியவள்,

“இல்ல ஒன்னும் பிரச்சனை இல்ல நானும் உங்க கூட வர்றேன் ஒரு பைவ் மினிட்ஸ்ல கிளம்பிடுங்க.” என்றபடியே அவனோடு அறைக்குள் நுழைந்தாள்.
இந்த காட்சியை தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு ஜோடி கண்கள் குரூரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது.
வேழவேந்தனை பொருத்தவரை தப்பி தவறி கூட தவறாக இவளிடம் முறைதவறி நடக்க முயற்சித்ததில்லை. கிண்டலாகவும் கேலியாகவும் பேசுவானே தவிர அவனுக்குன்னு ஒரு வரைமுறையும் கட்டுப்பாட்டோடும் தான் பழகினான். தன்னை மறந்து சில நேரங்களில் அபிதான் அவனோடு ஒட்டிக்கொண்டு செல்வாள். ஆனால் அவன் எப்பொழுதுமே ஒரு டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணுவான். அதனால் அவனோடு ஒரு தனி அறையில் இருப்பதால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காது என்று நம்பிக்கையோடு அறைக்குள் சென்றவள் அவன் பிரஷ்சாகிட்டு வரும் வரை வெயிட் பண்ணினாள். ஒரு பத்து நிமிஷத்தில் அவர்கள் ஹோட்டலிலிருந்து கிளம்பினார்கள். இவளுக்கு தான் மனசு ஒரு மாதிரி இருந்தது. பல ஆயிரங்கள் செலவாகியிருக்கும் பாவம் வேழவேந்தன் அவனுடைய கடை வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது. திடீரென்று பல ஆயிரங்களை செலவு பண்ணினால் அதை அவன் ஈடு கட்டுவது கொஞ்சம் கஷ்டமே ஆனாலும் நமக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு பண்ணி இருக்கிறான் என்று நினைக்கும்போது பெருமையாக இருந்தது.

இவள் தயங்கி நிற்பதை பார்த்து விட்டு என்ன ஆச்சு என்றான் ஆசை மிகுதியில் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிவிட்டு தலையை கவிழ்ந்து கொண்டாள். அவனின் கைகள் அவள் தோள்களைப் பற்றியது. பின் கண்களை மூடி தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டவன்

“வேணாம்...வேணா....கல்யாணத்துக்கு அப்புறம்தான் இந்த நெருக்கம் இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனால் என்னுடைய பொறுமையை நீ ரொம்பவும் சோதிக்கிறே! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடைய காதலி நீதான் என் மனைவியும் நீதான். அதில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. கல்யாணம் நடந்தா அது உன் கூடத்தான். ஆனா அவசரப்பட்டு எந்தத் தப்பும் பண்ண கூடாது நினைக்கிறேன். எனக்குள்ள ஒரு கண்ட்ரோல்ல போட்டு வச்சிருக்கேன் தவிர இந்த நிமிஷம் நீ ஓகேன்னு சொன்னா என்னுடைய மீறுதல்கள் எல்லை மீறக்கூடும். மிகவும் சிரமப்பட்டு மனதை கட்டுக்குள் வைத்திருக்கேறேன். என்னை இப்படி சோதிக்கலாமா?” என்று கண்களை சிமிட்டி துரு துரு பார்வையோடு கூறியவன் அடுத்த நிமிடமே கதவை திறந்து மட மட வென்று வெளியில் வந்து காரில் ஏறி ஸ்டியரிங்கை பற்றியப்படி அமர்ந்தான்.
சற்று தாமதித்து தன்னை நிலைபடுத்திக்கொண்டு இவளும் காரில் ஏறி அமர்ந்தாள்.

சொன்னபடியே அவளை அழைத்து வந்து காலேஜ் போகும் பஸ்ஸில் ஏற்றி விட்டான் வேழவேந்தன்.
இவள் வீட்டுக்குள் நுழையும் போது அப்பா வாசலில் நின்றிருந்தார் கூர்கா பார்ப்பது கூட கவனிக்காமல் காட்டுக்கத்தல் கத்தி கொண்டிருந்தார்.

“என்னப்பா புதுசா கேக்குறீங்க காலேஜ்க்குதாம்பா போயிட்டு வரேன்.”

“இல்ல வாய மூடு பொய் சொல்லாத நீ எங்க போயிட்டு வர யார் கூட போன அப்படிங்கிற அப்டேட் எல்லாமே எனக்கு வந்துச்சு. இனிமே நீ என்கிட்ட பொய் சொல்ல முடியாது. சொல்லு அவன் யாரு” எத்தனை நாளா இந்த பழக்கம்? பாண்டிச்சேரி போற அளவுக்கு அவன் கூட பழக்கமா?” கத்திவிட்டு இவள் பதிலுக்காக காத்திருந்தார்.

“அப்பா தப்பா பேசாதீங்க...நீங்க நினைக்கிற மாதிரி இல்ல...அவரை நான் லவ் பண்றேன் அதுதான் உண்மை. வேற எந்த தப்பும் நாங்க பண்ணலை. நேரம் வரும் போது நானே சொல்லலாம்னு நெனச்சேன் அதுக்குள்ளே யாரோ உங்ககிட்ட வத்தி வச்சுட்டாங்க.?”

“அப்படிலாம் ஒன்னும் இல்ல நீ அவன்கூட ரூம்ல இருந்து வெளியில் வருவதை. போட்டோ எடுத்து என் பிரண்டு ஒருத்தன் போட்டிருக்கான். நாக்க புடுங்கிட்டு செத்துடலாம் போல இருக்கு வாட்ஸ் அப்ல அனுப்பிருக்கான்.” என்றவர் தன் கையிலிருந்த செல்லை அவளிடம் நீட்டினார்.

“போனது உண்மைதான்ப்பா ஆனால் தப்பா எதுவும் நடக்கல. என்னோட பர்த்டே செலிப்ரேஷனுக்காகதான் குறிப்பிட்டிருந்தார்.”

“வாய மூடு பொய் மேல பொய் சொல்லாத...உன் பர்த்டேக்கு சென்னையில எங்குமே இடமில்லை பாண்டிச்சேரிதான் போகணுமா?”
உள்ளேயிருந்து அம்மா எட்டிப்பார்த்தாள்.

“என்னங்க வெளியில வச்சிதான் இந்த கதையெல்லாம் பேசுறதா? உள்ள கூப்பிட்டு வாங்க எதுவா இருந்தாலும் வீட்டுக்குள் வந்து பேசட்டும்.”

அன்று நடு இரவு வரை பயங்கர போராட்டம் அப்பா அம்மாவுடன் சண்டை போட்டாள். அவனைதான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று ஒத்த காலில் நின்றாள். அவர்களும் முடியவே முடியாது என்று மறுத்தார்கள். வெகுநேர போராட்டத்துக்கு பிறகு, ஒருவழியாக இரண்டு பேரும் சமாதானம் அடையவே நடு சாமத்தை தாண்டியது.

“சரி அவனையும் குடும்பத்தையும் நான் பார்க்கணும். அவங்க கிட்ட நான் பேசனும். நீஎனக்கு ஒரே பொண்ணு இவ்வளவு சொத்துக்கு ஒரே வாரிசு உன்னை முன்னபின்ன தெரியாத ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்க முடியாது. அப்படியே அவன் தான் முக்கியமுன்னு நீ நெனைச்சேன்னா எங்ககிட்ட இருந்து சல்லிக்காசு கூட பெறாது புரிஞ்சுக்கோ..”
பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள். உங்க காசும் வேணாம். நீங்களும் வேணாமுன்னு பேசிடலாம். ஆனா அப்படி பேச முடியாது. ஆயிம்தான் இருந்தாலும் பெத்தவங்களாச்சே.

“நாளைக்கு அவங்க பெத்தவங்களை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வர சொல்லு. முதல்ல பேசலாம் சரிப்பட்டு வருமா இல்லையான்னு அதுக்கு அப்புறம் தான் முடிவெடுக்க முடியும் என்று கடிஷனோடு வேழவேந்தனை பெண் கேட்க வருவதற்கு சம்மதிச்சார் அபிநயாவின் அப்பா.
ஆனால்....நடந்தது வேறு...???
 
வேழவேந்தன் அபிநயாவை பாண்டிச்சேரி கூப்பிட்டுப் போனது எனக்கும் பிடிக்கலை
வீணா காசு வேஸ்ட் பண்ணிட்டு எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்?
அபியின் அப்பா சொல்ற மாதிரி ஒரு கேக் கட் பண்ண அவ்வளவு தூரம் போகணுமா?
அந்த சர்ச்சுக்கு போனது ஒண்ணுதான் உருப்படியான விஷயம்
 
Last edited:
பாண்டிச்சேரி தூய இருதய கிறிஸ்து தேவாலயம் ரொம்ப நல்லாயிருக்கும் போலவே
புனிதமான இயேசு பெருமானின் ஓவியங்கள் கண்ணாடியிலா?
அவசியம் பார்க்கணும் போல இருக்கு, டெய்சி டியர்
 
Top