Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்- 34

Advertisement

daisemaran

Well-known member
Member
"நீதான் எந்தன் அந்தாதி…!”
அத்தியாயம் 34

புலிகள் காப்பகமாக மாறியுள்ள வால்பாறையை பற்றின
தகவல்களைச் சொல்லிக்கொண்டிருந்த தங்கராசுவிடம்,

"ஐயா... தங்கராசு ஐயா...கலெக்டர் அபிநயா மேடம் இங்க வந்ததா சொன்னாங்க.., அதை பற்றி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்." என்று அபிநயாவை பற்றி நேரிடையாக விசாரித்த போது அவர் முகம் மாறியது. கார்த்திக்கின் போலீஸ் மூளை அதை படம்பிடிக்கத்தான் செய்தது.

தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.., எனக்கு இதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. என்பது போல் மழுப்ப தொடங்கினார் வனசரகர் தங்கராசு.

ஆனால் கார்த்திக் விடுவதாக இல்லை. முதலில் சாதாரணமாக பேசிய கார்த்திக் அதன் பிறகு குரலை உயர்த்தி மிரட்டும் தொனியில் கேட்டான்.,

"உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும்... அப்படின்னு சொல்லி தான் எங்களை இந்த இடத்துக்கே அனுப்பினார்கள். யாரு என்னன்னு கேட்க வேண்டாம் அது உங்களுக்கு தேவையில்லாத விஷயமும் கூட, நீங்க உண்மையை சொல்லலைன்னா கம்பி எண்ண வேண்டி வரும் ஜாக்கிரதை." என்று அடித்தொண்டையில் மிரட்டியப்படி தன்னுடைய ஐடி கார்டை எடுத்து அவர் முகத்திற்கு நேராக நீட்டினான். அதை பார்த்தவுடன் தங்கராசுவின் உடல் மெல்ல நடுங்க தொடங்கியது. உமிழ்நீரை விழுங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு காய்ந்த உதட்டை ஈரப்படுத்தியபடி, சுற்றிலும் ஒருமுறை பார்வையைச் சுழல விட்டார்.

எதிரில் கர்ண கொடூரமாய் கையால் தாடையை தடவியபடி நெருங்கிக் கொண்டிருந்த வேழவேந்தன் கண்களில் தென்பட்டான். அவனுடைய கை முஷ்டிகள் இறுகியதை பயத்துடன் கவனித்தார். வேழவேந்தன் தன்னுடைய கைவிரல்களை மூடி மூடி திறந்த படி அவரை நெருங்கவும், உயிர் பயம் அவர் கண்களில் நன்றாகவே தெரிந்தது. இதற்கு மேலும் அமைதி காத்தால் அடி நிச்சயம் விழும் என்பதை உணர்ந்த தங்கராசு தனக்கு தெரிந்த விஷயத்தை மெல்ல சொல்லத் தொடங்கினார்.

தங்கராசு சொன்ன ஸ்டேட்மெண்ட் இதுதான்...

வால்பாறை எல்லையைத் தாண்டி சோலையாறு அணை வரை தான் தமிழ்நாட்டின் எல்லை அதற்கு அந்த பக்கம் கேரள எல்லை ஆரம்பித்துவிடும்.

வால்பாறையில் சுற்றுலா எல்லைக்குள் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் அரசாங்கமே பார்த்து பார்த்து செய்து கொடுத்திருக்கிறது. அதற்கு காரணம் பெரும்பாலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்கள் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நேரிடையாக வந்து செல்லக்கூடிய சுற்றுலா தலங்களுக்கு உட்பட்டே இருந்தது. அவர்களின் தேவைகள் என்ன என்பதை அவர்களிடமே விசாரித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க இது வசதியாக இருந்தது. தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் இந்த மலைவாழ் மக்களுக்காக இயன்ற உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் வெளி மனித நடமாட்டமே இல்லாத, அதுவும் அரசு அதிகாரிகளின் பாதங்கள் படாத மலைக்கிராமம் ஒன்று இங்கு இருக்கத்தான் செய்தது. அந்த கிராமத்தில் மொத்தம் நூறு வீடுகள் இருந்தன. மூங்கில் கொம்பாலும் காட்டு பனை ஓலைகளாலும் கட்டப்பட்ட சிறு சிறு குடிசைகள் தான் அவர்களுடைய குடியிருப்புகள். அவர்களைப் பொறுத்தவரை வீடு என்பது உண்பதற்கும் உறங்குவதற்குமான ஒரு இடம். அவர்களின் உலகம் வீட்டிற்கு வெளியே தான்.

கல்வியறிவு மற்றும் மின்சார வசதி இரண்டுமே இல்லாத இருள் சூழ்ந்திருக்கும் மலை கிராமம் அது. அதைப் பத்தின விஷயம் மீடியாக்களிலோ, தினசரிகளிலோ ஒருமுறைகூட வெளிவந்தது இல்லை.

வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர் மற்றும் மலைசார் என ஆறு வகை மக்கள் வசித்து வருகின்றனர்.



காலங்காலமாக மலைங்காட்டுக்குள்ளே இருந்து கடுக்காய், பூச்சக்காய், நெல்லிக்காய், வேங்கைப் பால், மலைத்தேன், கொம்புத் தேன்னு எடுத்துட்டு வந்து சுமார்


காலங்காலமாக மலைங்காட்டுக்குள்ளே இருந்து கடுக்காய், பூச்சக்காய், நெல்லிக்காய், வேங்கைப் பால், மலைத்தேன், கொம்புத் தேன்னு எடுத்துட்டு வந்து
சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்று விட்டு செல்கிறார்கள். அதுவும் இருட்டுவதற்குள் அவர்கள் வீடு திரும்பி விட வேண்டும். இல்லையென்றால் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து விடும். இதனால் இழந்த உயிர்ப்பலிகள் ஏராளம். அதனாலேயே சூரிய வெளிச்சம் இருக்கும்போது அவர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை விற்று காசாக்கிக் கொண்டு வீடு திரும்பி விடுவார்கள். இவர்களின் தின வருமானமும் இதுதான்.

இப்ப அது எல்லாம் திருட்டு விற்கக்கூடாதுன்னு தடை போட்டுட்டாங்க. அதுக்கு பதிலா கோயில் வாசல்லயே கடை வச்சு பொழைக்க பாரஸ்ட் அதிகாரிக லோன் எல்லாம் கொடுப்பதா சொன்னார்களே தவிர அந்த மலை கிராம மக்களுக்கு ஒரு ரூபாய் கூட இதுவரை வந்து சேரவும் இல்லை எந்த அதிகாரிகளும் அவர்களை தேடி போனதும் இல்லை என்பதுதான் உண்மை.

இப்படி யாருமே கண்டுகொள்ளாத ஒரு கிராமம் இருக்க ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் வால்பாறை எல்லைக்கும் கேரள எல்லைக்கும் இடைப்பட்ட மலைப்பிரதேசத்தில் இருக்கும் மலை கிராமம்தான் அது. அதாவது அந்த மலைக்கிராமம் பாதி கேரள எல்லை சார்ந்தும் மீதி பாதி வால்பாறை அதாவது தமிழ்நாட்டு எல்லையை சார்ந்தும் இருக்கிறது. இந்த இரு மாநில எல்லைகளுக்கு நடுவில் இருக்கும் மலை கிராமத்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மின்சாரமும் மற்ற அத்தியாவசிய தேவைகளை எதுவுமே கிடைப்பதில்லை. கேரள அரசு இந்த மலை கிராமம் தங்கள் எல்லைக்குள் இல்லை என்று சொல்கிறார்கள் தமிழ்நாடு
அரசும் அதே மாதிரி தங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது என்று சொல்ல, இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இந்த மலைகிராம மக்களுக்கு தேவையான எந்த உதவியும் செய்வதில்லை. விபத்துக்கள் ஏற்பட்டாலும் உரிய சிகிச்சை அவர்களுக்கு கிடைப்பதில்லை. நல்ல குடிதண்ணீர் பொதுக்கழிப்பிடம் இது எல்லாம் கூட அவர்களுக்கு பகற்கனவு தான். அதனாலேயே தாங்களே மலையில் இருக்கும் மூலிகை செடி கொடிகளை மருந்தாக உட்கொண்டு நோயை குணப்படுத்தி உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு விதத்தில் தொலைந்துபோன கிராமமாக தான் இது கருதப்படுகிறது.

இந்தப் பிரச்சனைகள் பல வருடங்களாய் தொடர்வதால் அங்கிருக்கும் மக்கள் அடிப்படைக் கல்வி வசதியும் மின்சார வசதியும் இன்றி மிகவும் இன்னலுரும் நிலைமையில் இருக்கிறார்கள். அங்கிருக்கும் இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பலமுறை இரண்டு மாநில கலெக்டரிடம் மனு கொடுத்தும் அதற்கான எந்த ஒரு வழிவகையும் அவர்கள் செய்யவில்லை. இதற்கிடையில்தான் நேற்று நடந்த விபத்தை பார்வையிட வந்திருந்த கலக்டர் அம்மாவிடம் அந்த நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மனு கொடுக்க போயிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் அந்த மனுவை வாங்கி தன்னுடைய காரில் பின் சீட்டில் தூக்கி வீசி விட்டிருக்கிறார். கலெக்டரிடம் அந்த மனு சென்று சேரவே இல்லை என்றவுடன் தங்கள் பிரச்சினைகளை கேட்க ஆள் இல்லை என்ற நிலையில்தான் அந்த இளைஞர்களின் கோபம் எல்லை மீறி இருக்கிறது. எப்படியாவது கலெக்டரிடம் தங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை நேரில் பேசி விட வேண்டும் என்று முயற்சி செய்தும் முடியாமல் போகவே அடுத்த கட்டமாக அவர்கள் எடுத்த அதிரடி முடிவு தான் கலெக்டர் அம்மாவை கடத்தும் அந்த திட்டம்.

இது வரைக்கும் தான் சார் எனக்கு தெரியும் மற்றபடி அந்த இளைஞர்கள் கலெக்டர் அம்மாவை எங்கே கடத்திக் கொண்டு போய் வச்சிருக்காங்க என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இது கூட எனக்கு தெரிஞ்சதா நான் காட்டிக்க கூடாதுன்னும், மீறி வெளில யார்க்கிட்டயாவது சொன்னா நர்ஸ்சு வேலை பார்க்கிற உங்களுடைய பொண்ணு உங்களுக்கு திரும்ப கிடைக்க மாட்டாள் அப்படின்னு மிரட்டிட்டு போயிருக்கானுங்க.. ஆனாலும் அரசாங்கத்திடம் கைநீட்டி சம்பளம் வாங்குற நான் ஒரு அரசாங்க அதிகாரியை அதுவும் ஒரு பெண் அதிகரிக்கு ஆபத்துன்னா வெளியில் சொல்லாமல் இருக்க முடியுமா? இவ்வளவு நேரம் என் குடும்பத்துக்காகவும் என் பொண்ணுக்காகவும் தான் பயந்துகிட்டு வாய மூடிக்கிட்டு இருந்தேன். இனிமே என்னோட பொண்ணுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை சார்... கலெக்டர் அம்மாவை காப்பாத்துங்க. அந்த அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. நான் வணங்குகிற புலீஸ்வரி அம்மன் என்ன கைவிடமாட்டாள். அந்த அம்மாவையும் காப்பாத்துவாள்னு அவ மேல பாரத்தைப் போட்டுட்டு தான் உண்மையை சொல்றேன் இல்லாட்டி எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு ஒரேடியா சாதிக்க முடியும். ஆனால் அப்படி நான் பண்ண விரும்பல..., நீங்க அந்த பசங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சி அவங்ககிட்ட விசாரிச்சாக்க அவங்க எங்க கொண்டுபோய் வச்சிருக்கானுங்கன்னு தெரியும்.." என்று சொன்னவரின் கண்களில் கலக்கம் தெரிந்தது. அவர் பொய் சொல்லவில்லை என்பதை உணர்ந்த கார்த்திக் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி துரித கதியில் யோசித்தான்.

" இனிமேலும் பொறுமையாய் இருந்தால் சரிப்பட்டு வராது சார். வால்பாறை இன்ஸ்பெக்டர், அடுத்தது கமிஷனர் எல்லாருக்கும் கால் பண்ணி காட்டுக்குள்ள போலீசை விட்டு தேட சொல்லுங்க, இப்பவே இருட்ட ஆரம்பிச்சிடுச்சு நேரம் ஆக ஆக அபிநயா மேடத்துக்குத்தான் ஆபத்து. இந்த காட்டுவாசி பயலுங்கள் அவனுங்களோட முரட்டு குணத்ததான் காட்டுவானுங்கள். அவனுங்களுக்கு மூளைங்குறது கம்மிதான் மூர்க்கத்தனம் தான் அதிகம்.."என்று கோபத்தோடு குரலை உயர்த்தி பேசினான் வேழவேந்தன்.

வேழவேந்தனின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கின் கண்களில் மெல்லிய திரை ஒன்று படிந்தது. வேழவேந்தனிடம் எதையோ கேட்க நினைத்த கார்த்திக் ஒரு நிமிட யோசிப்பிற்கு பிறகு அமைதியானான். முதலில் அபிநயாவை கண்டுபிடிக்க வேண்டும் அதன் பிறகுதான் மற்ற விஷயங்களைப் பற்றி பேசிக்கொள்ளளாம். என்ற முடிவோடு வேழவேந்தன் சொன்னதுபோல் உடனே எல்லாருக்கும் கால் பண்ணி விஷயத்தை சொல்லி "இதை இப்போதைக்கு வெளியில் யாரிடமும் சொல்லிக்க வேண்டாம் இந்த விஷயத்தை சீக்ரெட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்குத் தெரிந்தால் பதற்றமும் கொந்தளிப்பும் அதிகமாகிவிடும்." என்றான் கார்த்திக்.

'கவலைப்படாதீங்க.. கார்த்திக் சார்... அபிநயா மேடத்துக்கு ஒன்னும் ஆகாது. அவங்கள சீக்கிரமா கண்டுபிடித்துவிடலாம். இன்னிக்கி ராத்திரிக்குள்ளே காட்டையே வலை போட்டு அலசித் தேடி கண்டுபிடிச்சிடலாம். மேடத்துக்கு எதுவும் ஆகாது தைரியமா இருங்க... மினிஸ்டர் கிட்ட மட்டும் இந்த விஷயத்தை பத்தி ஒரு வார்த்தை சொல்லிடலாம். ஏன்னா இப்போதைக்கு அவரோட பர்மிஷன் இல்லாம காட்டுக்குள்ள போலீஸ்சை இறக்க முடியாது. அதனாலதான் அவர் கிட்ட சொல்லிட்டு செய்யலாம்னு நினைக்குறேன். மத்தபடி மீடியாக்களுக்கு இந்த விஷயம் போகாம நான் பாத்துக்குறேன்.." என்று தைரியம் சொன்னார் டிஎஸ்பி கந்தன்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கெல்லாம் ஐம்பதிற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களை ஏற்றிக்கொண்டு போலீஸ்
ஐந்து போலீஸ் ஜீப்பும் ஒரு போலீஸ் வேணும் வந்து நின்றது. எல்லாரிடத்திலும் போலீஸ் துப்பாக்கி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு சோடியம் விளக்குகள் இருந்தது.

ஆளுக்கு ஒரு பகுதியாகப் பிரிந்து காட்டுக்குள் இறங்கி தேடத் தொடங்கினர்கள். காட்டு இலாகாவில் தேர்ச்சி பெற்ற காவலர்களும் உடன் சென்றார்கள்.

இவர்களுடன் கைடாக வந்த முருகனை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கார்த்திக் வேழவேந்தன் இருவரும் தங்கள் காரில் அந்த மலை கிராமத்தை நோக்கி செல்ல, அவர்களை பின் தொடர்ந்து சென்றது மற்றொரு போலீஸ் ஜீப்.

விலங்குகளை விரட்டுவதற்கு நாட்டுத்துப்பாக்கி, கண்ணி வெடிகளும், காட்டுப் பாதைகளில் செல்லும்போது இருளை விரட்டுவதற்கு பெரிய பவர் உள்ள பேட்டரி லைட் களும் காவல்துறையினர் எடுத்து வந்து இருந்ததால் இருள் கிழித்துக்கொண்டு பாதை தெளிவாக தெரிந்தது. காரின் வெளிச்சத்தையும் மீறி சோடியம் விளக்குகள் ஒளி வீசியது. இடது பக்கமும் வலது பக்கமும் பாதை செல்லும் அமைப்பை பார்த்துக்கொண்டு அந்த இருளை கிழித்துக் கொண்டு மலை கிராமத்திற்குள் சென்றது கார்த்திக்கின் காரும் போலீஸ் ஜீப்பும். வழிகாட்டுவதற்காக உடன் வந்தார் வனக்காவலர் தங்கராசு.

அவர்கள் அந்த மலை கிராமத்தை நோக்கி பயணித்த சற்று நேரத்திற்கு பிறகு இதுவரை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்திருந்த தன்னுடைய பர்சனல் மொபைலை ஆன் பண்ணினான் கார்த்திக். அடுத்த நிமிடமே அவனுடைய மொபைலுக்கு அவன் அம்மா சுந்தரியம்மாவிடமிருந்து கால் வந்தது.

அடுத்து அவர்கள் எதைப் பற்றி விசாரிப்பார்கள் என்பதை யூகித்த கார்த்திக் அவர்களாக கேட்பதற்கு முன் மடமட என்று ஒப்பித்தான்.

" ஹலோ அம்மா... நான் இங்க அபிநயா கூட தான் இருக்கிறேன் ஒரு மீட்டிங் ஒன்னு போயிட்டு இருக்கு அபிநயாவால் இப்போ பேசமுடியாது. லேட் ஆனாலும் நான் கூட இருந்து அபிநயாவை கூட்டிட்டு வந்துர்றேன் அவங்க பேரன்ட்ஸ் கிட்ட இன் ஃபார்ம் பண்ணிடுங்க ஓகே பாய்..."


காரை ஓட்டிக் கொண்டிருந்த வேழவேந்தன் கார்த்திக் பக்கம் திரும்பி லேசாக புன்னகைக்க முயன்றான்.

"என்ன பண்றது கார்த்திக் இந்நேரத்துக்கு அபிநயாவை காணோம்னு எல்லாரும் ஒன்று கூடிப் பேச ஆரம்பிச்சுருப்பாங்க.. அவ என்கூட சேஃபா இருக்கான்னு தெரிஞ்சா அவங்களாவது கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க இல்லையா? அதுக்காகத்தான் இப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு என்ன பண்றது...? என்றான் சோர்வான குரலில்.

வேழவேந்தன் மிகவும் சோர்ந்து இருப்பது போல் தோன்றியது. ஆனால் அதை கொஞ்சம் கூட வெளியில் காட்டிக்கொள்ளாமல் சுறுசுறுப்பாக காரை ஒட்டிக்கொண்டு இருந்தான்.

வேழவேந்தன் இவ்வளவு நேரம் தொடர்ந்து கார் ஓட்டிட்டு இருக்கீங்க ரொம்ப சோர்வா தெரியுதுங்க ஏதாவது சாப்பிடுறீங்களா? பிஸ்கட் இருக்கு இதையாவது சாப்பிடுங்களேன்...," என்று பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து வேழவேந்தனிடமா நீட்டினான் கார்த்திக்.

"சார்... வேணாம் சார், பசி எல்லாம் ஒன்னுமில்ல டென்ஷன் தான் அதிகமா இருக்கு..." என்றான் குரலில் வெளிப்பட்ட நடுக்கத்தை மறைத்தபடி.

சுமார் அரைமணி நேரத்தில் அந்த மலை கிராமத்திற்குள் காரும் ஜீப்பும் நுழைந்தது. இருளாக இருந்த அந்த இடம் முழுவதும் இவர்கள் கையில் வைத்திருந்த சோடியம் விளக்கு வெளிச்சம் பட்டு ஒளி வீசியது. விளக்கு வெளிச்சம் தீயாய் பரவி இருக்கவேண்டும். அடுத்த ஐந்து நிமிடத்தில் எல்லா குடிசைகளிலும் திரி போட்ட எண்ணெய் விளக்குகள் எரிய ஆரம்பித்தது.

போலீஸ்காரர் வைத்திருந்த மைக்கை வாங்கிய பேசத் தொடங்கினான் கார்த்திக்.

"ஹலோ... ஹலோ... இந்த இடத்துல இருக்கற மலை கிராமத்து மக்கள் அனைவரும் நாங்க இருக்கிற இந்த காளி கோவில் அரசமரத்து அடிவாரத்துக்கு ஐந்து நிமிடத்திற்குள் வந்து சேரும்படி கேட்டுக்கொள்கிறோம். போலீஸ்காரங்கள் உங்களுடைய நண்பர்கள் தான். அவங்களால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. ஒரு விசாரணைக்காக தான் நாங்க இங்க வந்திருக்குமே தவிர உங்களை துன்பப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ அல்ல. எங்களுக்கு நீங்க சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுத்தால் நாங்க விசாரிக்க வேண்டிய விஷயத்தை விசாரிச்சுட்டு பத்து நிமிஷத்துல இங்க இருந்து கிளம்பி போயிடுவோம். மீறி யாராவது ஏதாவது பிரச்சனை பண்ணினா...எங்க எல்லார்கிட்டேயும் துப்பாக்கி இருக்கு அதுவும் ரொம்ப பவர்ஃபுல்லான துப்பாக்கி அதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும். அந்த அளவுக்கு போகவேண்டாம்னு நினைக்கிறேன். அதனால நீங்களா வந்துடறது நல்லது. திரும்பவும் சொல்றேன் நாங்க உங்கள கொல்லவோ துன்பப் துன்புறுத்தவோ வரல உங்க கிட்ட ஒரு விசாரணைக்காகத்தான் வந்திருக்கிறோம். தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்க என்று மைக்கை அலற விட்டு கோண்டிருந்தான் கார்த்திக்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தீப்பந்தத்தை கையில் ஏந்தியபடி இவர்கள் நின்ற அந்த இடத்திற்கு ஒவ்வொருவராய் வரத் தொடங்கினார்கள். ஊர் தலைவர் என்று ஒருவர் முன்னால் வந்தார். சட்டை போடாத வெற்று மார்பில் பழுப்பேறிய காவி நிற துண்டு ஒன்றை போர்த்தியபடி முன்னால் வந்து நின்றார்.

"ஐயா வணங்குறேன் ஐயா... என்னுடைய பெயர் மாயன். இந்த மலை கிராம மக்களுக்கு எல்லாமே நான்தான். என்ன விசாரணை சொன்னீங்கன்னா நான் பதில் சொல்றேன்..." என்று சொன்னவரின் பேச்சில் மலையாளமும் தமிழும் கலந்து வீசியது.

இது ஒருத்தர்கிட்ட மட்டும் விசாரிக்கிற விஷயம் இல்லைங்க மொத்த மக்களும் இங்க வரணும். எல்லார்கிட்டயும் நாங்க விசாரிக்கணும். ஒருத்தர் பாக்கியில்லாமல் அது குழந்தையாக இருந்தால் கூட பரவாயில்லை அத்தனை பேரும் இங்கே வந்தாகனும்..." என்றார் உடன் வந்த இன்ஸ்பெக்டர்.

"ஐயா... குறுக்கே பேசுறேன்னு தப்பா எடுத்துக்க கூடாது. எங்க ஊர் மக்கள் மொத்த பேரையும் நான் இங்க கூட்டியாந்து உட்கார வைக்கிறேன். ஆனா நீங்க ஏதோ ராணுவத்துல இருந்து இறங்குன மாதிரி துப்பாக்கி காட்டி மிரட்டுறீங்க..., அத பார்த்தா தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
எங்களை எதிரியை நினைக்காதீங்க உங்கள மாதிரி எங்களையும் மனுஷனா நினைங்க.., அப்பத்தான் உங்க விசாரணைக்கு எங்களால ஒத்துழைப்பு கோடுக்க முடியும்." என்றார் அந்த ஊர் தலைவர்.

ரொம்ப விபரமான ஆள் தான் என்று எண்ணினான் கார்த்திக்.

அடுத்து அந்த ஊர் தலைவர் அங்கு நின்றிருந்த ஒரு பெண்ணிடம் கண்ணைக் காட்டி அருகில் வரச் சொல்லி அவள் காதருகில் குனிந்து எதையோ சொன்னார். சற்று நேரத்தில் ஓலையால் பின்னப்பட்ட பெரிய தட்டில் வேக வைத்த மரவள்ளி கிழங்கும், தேன் கலந்த திணை மாவையும் எடுத்துட்டு வந்து அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டு சென்றால் அந்த பெண்.

ஊர் தலைவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட கார்த்திக் ஒரு துண்டு கிழங்கை பிட்டு வாயில் போட்டுக்கொண்டான். அதன்பிறகுதான் அந்த ஊர்த்தலைவர் மாயன் பேசவே தொடங்கினார்.

"சொல்லுங்க சாமி என்ன தெரியனும் உங்களுக்கு...?"

கோவை மாவட்ட கலெக்டர் அம்மாவை உங்க மலை கிராமத்துல இருக்கிற இளைஞர்கள் கடத்திட்டு வந்துட்டாங்க அதை விசாரிக்க தான் இங்கே வந்திருக்கோம். அந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா அத பார்த்துட்டு அரசாங்கம் சும்மா இருக்காது. சம்பந்தப்பட்டவர்களை அரசாங்கம் சும்மாவும் விடாது. சூட்டிங் ஆர்டர் கொடுத்துடும். கண்ணு மண்ணு தெரியாம அத்தனை மக்களையும் சுட்டுத்தள்ளிடுவாங்கள்.

அதனால நீங்களா அந்த பசங்கள முன்னாடி கொண்டுவந்து நிறுத்துங்கள். கலெக்டர் அம்மா எங்க இருக்காங்கன்னு உடனே எங்களுக்கு தெரியணும். அதுக்காகத்தான் நாங்க இங்க வந்து இருக்கோம்.

தீ பந்தத்தின் வெளிச்சத்தில் அந்த மலைகிராமத்து மக்களின் முகம் மட்டும் அல்லாமல் தலைவர் மாயனின் முகமும் வெளிறிப் போய் இருந்தது.
 
Last edited:
அபிநயாவை அந்த நாலு பேர் கடத்தியது மலைஜாதி மக்களுக்கே தெரியாதா?
சுத்தம்
வெளங்குனாப்புலதான்
 
Top