Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-33

Advertisement

daisemaran

Well-known member
Member

அத்தியாயம்-33


காட்டு யானையிடம் அபிநயா சிக்கிக்கொண்டாள் என்ற செய்தியை கார்த்திக் சொன்னவுடன் கார் ஓட்டிக் கொண்டிருந்த வேழவேந்தன் அதிர்ச்சியோடு பிரேக்கில் கால் வைக்க, மறுநிமிடம் கார் கிரீச் என்ற சத்தத்தோடு நின்றது.

” கொஞ்சம் சீக்கிரமா அந்த ஸ்பாட்டுக்கு போனால்தான் என்ன ஏதுன்னு தெரியும். அதனால் இங்கே இருந்துகிட்டு டென்ஷன் ஆறதை விட கொஞ்சம் சீக்கிரமா போனா அபிநயாவுக்கு நல்லது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அபிநயாவை காப்பாற்றிவிடலாம்." என்றான் கார்த்திக்.

யோசனையோடு காரின் வேகத்தை அதிகரித்தான் வேழவேந்தன்.
காட்டு எல்லையில் கார்நுழைந்த சற்று நேரத்தில் காரின் வேகத்தை குறைத்து ஒரு குடிசைக்கு எதிரில் நிறுத்தினான்.

"சார்...எனக்கு தெரிந்த கைடு ஒருத்தர் இங்க இருக்கிறார். நான் என் பிள்ளைகளோடு காட்டுக்குள் வரும் ஒவ்வொரு முறையும் இவரைத்தான் கூட கூட்டிட்டு போவேன். இவருக்கு இந்த காட்டில் இருக்கும் ஒவ்வோரு இடமும் அத்துப்படி. அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் நான் போய் அவர் இருக்காரா இல்லையான்னு பார்த்துட்டு வறேன்.."


வேழவேந்தன் போன ஒரு சில நிமிடங்களில் டிரைவர் குமாரிடமிருந்து கால் வந்தது பதற்றத்தோடு ஃபோனை ஆன் பண்ணினான் கார்த்திக்.

"சொல்லுங்க குமார் என்ன ஆச்சு அபிநயாவை கண்டுபிடிச்சிட்டீங்களே இப்ப எங்க இருக்கீங்க...?"

"சார் மேடத்தை இன்னும் கண்டு பிடிக்கல.., அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிடுச்சு சார் மேடத்தோட காரு இங்கதான் நிக்குது சார். இங்க இருக்கறவங்க கிட்ட விசாரிச்சதுல அவங்களுக்கு சரியா தெரியலன்னு சொல்றாங்க, ஆனா இங்க இருந்த ஒரு பையன் மட்டும் பார்த்ததா சொல்றான். அதாவது அவங்கள யாரோ ரெண்டு பேர் ஆட்டோல ஏத்திட்டு போனதா சொல்றான். பாரஸ்ட் ஆபீசர் போல இருந்தாங்கலாம். அவங்க போன கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து விசாரித்தார்களாம். அவங்க கிட்டயே இதே பதிலை சொல்லி இருக்கான். மத்தபடி வேற யாருக்கும் எதுவும் தெரியல..."

"அப்பாடா இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. "என்று மனதைத் தேற்றிக் கொண்டான் கார்த்திக். உடனே அபிநயாவின் செல்லுக்கு கால் பண்ணினான். தொடர்புகொள்ளும் எல்லையில் இல்லை என்றது. ஒருவேளை சிக்னல் கிடைக்காமல் கூட இருக்கலாம் என்று கார்த்திக்கு தோன்றியது.

"எந்த இடத்துக்கு கூட்டிட்டு போனாங்கன்னு கேட்டீங்களா? பக்கத்துல விசாரிச்சீங்களா...? நீங்க இப்போ இருக்கிற இடம் எந்த இடம் நாங்க அங்க வந்துட்டு தான் இருக்கோம்..." என்று பதற்றத்துடன் பேசினான் கார்த்திக்.

"நான் ஆழியாறு அணை திருப்பதில நிக்குறேன் சார்... நீங்க அதுக்கு கிட்ட வந்து எனக்கு கால் பண்ணுங்க சார். அந்த பையன் சொல்றதை பார்த்தா கேரளா காட்டுப்பகுதிக்கு போற வழியில் பாரஸ்ட் ஆபீஸ் இருக்கு சார் ஒரு வேளை அங்க கூட்டிட்டு போய் இருக்கலாம்..."

" சரி நீங்க அங்கேயே இருங்க நாங்க ஒரு ஹாஃப் பனவர்ல அங்க வந்துடறோம்..." என்றான் கார்த்திக்.

சற்றுநேரத்தில்...

அந்த குடிசையின் உள்ளிருந்து வெளியில் வந்த வேழவேந்தன் கருப்பா, சற்று உயரம் குறைவா, பரட்டைத் தலையோடு இருந்த ஒருவரை அழைத்து கொண்டு வந்தான். காருக்கு அருகில் வந்து உள்ளே அமர்ந்திருந்த கார்த்திக்கிடம்,

"இவர்தான் சார் முருகன். இந்த வால்பாறையில் இவருக்கு தெரியாத இடமே இல்லை என்று கூட சொல்லலாம். இவரை நாம்மோடு கூட்டிட்டு போகலாம் சார்..."

"டோன்ட் டெல் ஷிம்.. த ரீசன் ஃபார் வாட் வீ ஆர் கோயிங்... வேழவேந்தன்..."
எந்த காரணத்துக்காக நாம போறோம் அப்படின்னு அவர் கிட்ட சொல்ல வேணாம்... வேழவேந்தன்... என்று சொன்னான். காரணம் அபிநயா பற்றிய சின்ன விஷயம் கூட தவறாக சித்தரிக்க படலாம். என்று எண்ணிய கார்த்திக் வேழவேந்தனிடம் கண்ஜாடை காட்டினான்.

"ஓகே சார் நோ ப்ராப்ளம்... பட் முருகனுக்கு இங்கிலீஷ் நல்லா தெரியும் சார்... நாம எதுவா இருந்தாலும் அவனுக்கு தெரியாமல் பேசுறது நல்லது."

"ஓ...'அவன் சொன்னதை அக்சப்ட் பண்ணியபடி,

"ஓகே அப்போ அந்த டிரைவர் குமார் ஒரு இடம் சொன்னார் அங்க போயிடுங்க ஆழியாறு அணை..."

"சரி சார் அப்படின்னா இந்த முருகனை காருக்குள் உட்கார சொல்லட்டுமா?" காருக்கு வெளியே நின்றிருந்த முருகனை சுட்டிக்காட்டி கேட்டான் வேழவேந்தன்.

"சரி" என்று தலையை அசைத்தவுடன் முருகனை பின் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு டிரைவர் இருக்கைக்கு வந்து காரை ஸ்டார்ட் பண்ணினான்.

முருகனைப் பொருத்தவரை காட்டை சுற்றி காட்டத்தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்ற மனநிலையோடு இருந்தான். அதனால் கார் நகர்ந்தவுடன் அந்த காட்டை பற்றியும் அங்குள்ள ஊர்களைப் பற்றியும் சொல்ல தொடங்கினான். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர மேற்கொண்டு அவனுடைய பேச்சை தடுக்கவோ மடக்கவோ முயலவில்லை.

"மனித கால் தடங்களே படாத இடங்கள் கூட இந்த காட்டில் இருக்கிறது. இருளின் வாசம் இன்னும் பிறக்காத குழந்தையின் சுவாசத்தைக் கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒரு முறை கடவுள் வந்து விட்டு போனதாக கூட ஞாபகம்.. " என்று ஆரம்பித்தான் முருகன்.

இந்தியாவில் இரண்டே இடங்களில் இருக்கும் சிங்கவால் குரங்குகள் இருக்கும் இரண்டாவது இடம் அல்லது முதல் இடம். அந்தம் கொண்ட ஆதியில் ஆதி கொண்ட அந்தமும் இருப்பது போல.

40 கொண்டை ஊசி வளைவுகள்.....50 க்கும் மேற்பட்ட சிறு வளைவுகள் தாண்டி மெல்ல ஊர்ந்து நிமிர்கையில்... "கார்வர் மார்ஷ்" காட்டிய சொர்க்கம் கண்முன்னே விரியும். உங்கள் நிறம் எதுவோ அந்த நிறத்தில் மின்னும் இந்த "வால்பாறை"..... வாழும் போதே சொர்க்கம் தரும். இங்கு வாழ்ந்தவர்களின் கடைசி ஆசை இந்த மண்ணுக்கே உரமாக வேண்டும் என்பதே. அத்தனை நிம்மதி. நான், என் அப்பா, என் தாத்தா, முப்பாட்டன் என்று நான்கு தலைமுறையாய் இங்கேதான் வசித்துக் கொண்டிருக்கிறோம்.

எப்போதும் மிதமான வானிலை. மழையும் மலையும் சூழ... லத்தீன் அமெரிக்க நாடான "சிலி"யின் தோற்றத்தை ஒத்த ஒரு மலைப் பிரதேசம். கோவையில் இருந்து ஜஸ்ட் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊர்.... இன்னும் பெரும்பாலான சுற்றுலா விரும்பிகளின் கண்களில் அவ்வளவாக படவில்லை என்பது ஆனந்த கூத்து எனக்கு. நான் இன்னமும் தனியனாய் வால்பாறை புற பகுதி சாலைகளில் ஒற்றையாக நடக்கும் காட்டு யானையின் தும்பிக்கையில் தும்பிகளின் நிழல் பற்றி அலைய யாரும் அங்கே வராமல் இருக்கவே வேண்டுகிறேன். பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோ மீட்டர்கள். "ஆழியார்" அணை தாண்டி "குரங்கு" அருவி தாண்டி... மலையை குடைந்து போட்ட கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி உச்சியை அடையும் போது "அட்டகட்டி" வரவேற்கும். அதை தொடர்ந்து... "புலி பள்ளத்தாக்கு" தாண்டி.. "வாட்டர்பால்" கடந்து "ரொட்டிக்கடை" கடந்து கீழே இறங்க இறங்க தலை கிறு கிறுக்கும். தனிமை மொறு மொறுக்கும். இருந்தும் உள்ளே பரபரக்கும்.

ஆங்கிலேயன் காலத்தில் "கார்வர் மார்ஷ்" என்ற அறிஞன் ஆனைமலை காடுகளுக்குள் ஓர் ஊர் இருப்பதை கண்டு பிடித்தார். அந்த ஊர் யாருமற்ற புல்வெளியாக.....மரங்களின் அற்புத வனமாக மலை சரிவின் ஆத்மார்த்தமாக இருந்தது. மலையை வெட்டி வெட்டி சாலை போட்டார். வளைந்து வளைந்து மேலே சென்றார். காடு நகர்ந்தது. கண்கள் நிறைந்தது. காபியும் தேயிலையும்......பனித்துளிகள் சில்லிட.. புலிகளும் யானைகளும்.....பளிங்கு பாறைகள் துள்ளிட.... நதிகளும்.... ஓடைகளும்..... வான் நிறத்தில் வெள்ளியிட........ஆகா......அற்புத வானம் அவர்கள் மேல் விரிந்தது. அற்புத வனம் பக்கவாட்டில் பிரிந்தது.

பசிக்கும் பஞ்சத்துக்கும் மாட்டிக் கொண்ட மக்கள் பழனியிலிருந்து...... திருநெல்வேலியிருந்து.....கோவையிலிருந்து.... ஈரோட்டிலிருந்து......மைசூரிலிருந்து.....தர்மபுரியிலிருந்து...இலங்கையிலிருந்து.....என்று அங்கே குடி புகுந்தார்கள். கருங்கற்களால் ஆன லைன் வீடுகள் கட்டப்பட்டன. அது "சிலி"யின் வீடுகளை ஒத்திருந்தது. சிலியை போல இருக்கும் இந்த இடத்துக்கு சிலியின் முக்கியமான ஊரான "வால்பாறைஸோ" என்ற பெயரையே இங்கும் வைத்தார்கள். காலப்போக்கில் வால்பாறைஸோ "வால்பாறை"யாக மாறி இருக்கிறது. " என்று பேசிக்கொண்டே போன முருகன் ஒரு இடத்தில் காரை நிறுத்தும்படி சத்தமாக குரல் கொடுத்தான்.

வேழவேந்தன் யோசனையோடு காரை ஓரம் கட்டினான்.

"சார் இங்க சுத்தமான தேன்,மிளகு, கலப்படம் இல்லாத தேயிலை கிடைக்கும் இங்கேயே வாங்கிக்கோங்க வரும்போது இருட்டிச்சுன்னா இந்த இடத்தில் கடை இருக்காது.." என்றான்.

" சரி தேன் மிளகு எல்லாம் வாங்கிட்டு வாங்க.." என்று தன் பாக்கெட்டில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினான் கார்த்திக்.

"சார் இப்படி காரை நிறுத்தி நிறுத்தி போனா ரொம்ப லேட்டாயிடும் சரியான நேரத்திற்கு போக முடியாது..." என்று பதற்றமடைந்தான் வேழவேந்தன்.

"இல்ல வேழவேந்தன் எனக்கு ஒரு யோசனை தோணுது இந்த முருகனை தேவை இல்லாம நாம கூட்டிட்டு போறோன்னு தோணுது. அதை சொல்லத்தான் காரை நிறுத்த சொன்னேன். வாயத் தொறந்தா மூடவே மாட்றான். அவனுக்குத் தெரிந்த எல்லா விஷயத்தையும் லொடலொட ன்னு சொல்லிகிட்டே வரான். அதுவே ரொம்ப டிஸ்டபன்ஸா இருக்கு அபிநயாவிற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சப்போஸ் அவ எங்கேயாவது மாட்டிக்கிட்டான்னா ஐ மீன் அவளுக்கு எதாவது ஒரு பிரச்சனைன்னு தெரிஞ்சா இது மாதிரி ஆட்களால் அந்த விஷயம் பஃப்ளிக்கிடம் லீக் ஆயிடும். அதனாலதான் முருகனை இப்படியே அனுப்பிவிடலாம் என்று யோசிக்கிறேன்."

"நீங்க சொல்றத பார்த்தா கலெக்டர் மேடம் ஏதாவது பிரச்சனையிலே மாட்டிக்கிட்டு இருக்காங்களா? அந்த டிரைவர் என்ன சொன்னார்..? அந்த டிரைவர் கிட்ட நான் பேசறேன் போன் போட்டு குடுங்க சார்...?" என்றான் தன்னையும் அறியாமல் பதற்றத்தோடு கூறினான் வேழவேந்தன்.

"டிரைவர் குமார் சொல்வதை வைத்துப் பார்த்தால் அபிநயாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தான் தோன்றுகிறது... அதனால் கொஞ்சம் ரிலாக்ஸ்சாகவே போகலாம்..." என்றான் கார்த்திக்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது தேயிலை, தேன், மிளகோடு காருக்கு அருகில் வந்தான் முருகன்.

"சார் எல்லாம் கொஞ்சம், கொஞ்சம், சாம்பிளுக்கு வாங்கி இருக்கேன். நல்லா இருந்தா அடுத்த முறை வரும்போது நிறைய வாங்கிட்டு போங்க சார்..."

"சரி டைம் ஆகுது... சீக்கிரம் வாங்க... முருகன்" என்று பரபரப்போடு கூறினான் வேழவேந்தன்.

காரில் ஏறி அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்துவிட்டான் முருகன்.

“காட்டுயிர்களுக்கு மனிதனால் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது, பல உயிரினங்கள் மனிதனின் செயல்களால் அழிந்தும், அற்றும் போய்க்கொண்டிருக்கின்றன, காட்டுயிர்களையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது நாம் அனைவரின் கடமை, இதற்காக பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? திருட்டு வேட்டையில் ஈடுபடுவோரை பிடிக்க எப்படி பொதுமக்கள் வனத்துறைக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றியெல்லாம் படங்கள், திரைப்படங்கள், நாடகம் மூலமாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவை யாவும் புலி எப்படி கூண்டு வைத்து பிடிக்கப்படுகிறது என்று விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் மிகவும் அவசியமானதும், முக்கியமானதும் ஆகும் சார். அதுமட்டுமல்ல காட்டு மலர்களின் நறு மணத்தைச் சுமந்து வரும் சில்லென்ற காற்று பட்டவுடன் உடல் சிலிர்க்கிறது. நகரத்துப் புகையால் மாசுபடாத அந்தக் காற்று, புத்தம்புது ஆக்சிஜனைத் தந்து உடலுக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது. இடம்: சமீபத்தில் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்த மேற்குத் தொடர்ச்சி மலை.
இங்குள்ள ஆனைமலை காட்டுப் பகுதி, ஆனைமலை புலிகள் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. 1900களில் ரயில்வே ஸ்லீப்பர் கட்டை, தந்திக் கம்பம், ஃபிரான்சுக்கு எதிரான பிரிட்டனின் போர் போன்றவற்றுக் காக இப்பகுதியில் இருந்த மரங் கள் வெட்டப்பட்டு, பெருமளவு காடு அழிக்கப்பட்டது. இதைத் தடுத்து நிறுத்த ஆங்கிலேய அரசு ஹியுகோ உட் என்ற அதிகாரியை அனுப்பியது. அவரது ஆலோசனையின்படி காட்டை முற்றிலும் அழிக்க ஆங்கிலேய அரசு தடை விதித்தது. அப்பகுதியில் வாழ¢ந்த காலத்தில் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத் திருக்கும் மரவிதைகளை, போகும் வழியெல்லாம் ஊன்றிக் கொண்டே போவாராம் ஹியுகோ உட்.

கர்ஜிக்கும் நீர்வீழ்ச்சி…
சிறைப்பிடிக்கும் பசுமை…
உலகில் இன்பமயமான விஷயங்களில் ஒன்று, பயணம் போவது!
ஆம், அடர் சிவப்பு நிறப் பூக்களை ஏந்தியபடி வரவேற்றன மலைப்பாதைகள். வால்பாறை சாலையோர மரங்கள். அந்த வரவேற்பில் அன்றைய மாலை மிகுந்த உற்சாகமாகவே தோன்றியிருக்கும் இந்த தேடுதல் மட்டும் இல்லையென்றால்.

நீண்ட ஏற்ற இறக்கம்கொண்ட அந்தச் சாலையில், கடல் அலைகளில் மிதந்து செல்லும் படகைப்போல இவர்களுடைய வாகனம் சென்றது. வழியில் சாலையோர இளநீர்க்கடையில் சற்று இளைப்பாறிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தனர். சில மணி நேரப் பயணத்தில் உயரமாக வளர்ந்த வனமரங்களின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்ட சில கடைகளும் ஆங்காங்கே மக்கள் கூட்டமும் வாகனங்களும் தென்பட்டன. சாலையின் இடதுபுறம் ஆலமர விழுதுகளுக்கு இடையே `நல்வரவு ஆழியார் அணைப் பூங்கா’ என எழுதப்பட்ட நீலநிற நுழைவாயில். உள்ளே சென்றனர். அங்கு நின்று டிரைவர் குமாருக்கு கால் பண்ணினான் கார்த்திக். குமாரின் செல் சுவிட்ச் ஆப் இல் இருந்தது. குழப்பமான மனநிலையோடு அணையின் உயரமான கரையின் மீது போடப்பட்ட சாலையில் நின்று பார்த்தனர். பசுமையான மலைகளும், அதன் அடியில் பரந்து விரிந்து கிடந்த அணையின் நீர்ப்பரப்பும், செழிப்பான தென்னைமரங்களும்... ரம்மியமான காட்சி! என்று சுகமான அந்த மனநிலையை இருவரின் மனமும் ஏற்காததால் அங்கிருந்து வெளியில் வந்து பயணத்தைத் தொடர்ந்தனர்.

சமவெளியில் பெரும்பாலும் கோணல்கள் இல்லாத அந்தச் சாலை, மலையின் மீது தன்னை வளைத்து நெளித்துக்கொண்டது. அடர்ந்த காடுகளின் இடையே பல கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்ட சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. இரைச்சல் குறைந்து அமைதி பரவியது. 9-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள அந்தக் காட்சி முனை, மழையால் மலையில் வழிந்தோடிய ஆழியாறு அணையின் நீர்த்தேக்கத்தைக் காட்டியது. சாலை ஓரங்களில் வனவிலங்குகளின் படங்களை ஏந்திய ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தட்டிகள், வளைவுகளில் `ஒலி எழுப்பவும்’ என்ற நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புத் தட்டிகள். எல்லாவற்றையும் கடந்து கார் மேலேறத் தொடங்கியது. வீசிய காற்றில் ஈரப்பதம், சூரிய ஒளியல் குளிர், மலை பாறைகளின் மீது போர்த்தப்பட்ட பச்சைப் போர்வைபோல் தேயிலைத் தோட்டங்கள். அந்தச் சூழல் மனதை லேசாக்கியது. இறுகிய பிடியிலிருந்து விடுபட்ட உணர்வு . அங்கு உள்ள மாசற்ற தெளிவான கூழங்கல் ஆற்றில் கடந்து சென்றபோது, கார்த்திக்கின் செல்லிற்கு புது நம்பரில் இருந்து ஒரு கால் வந்தது.

யோசனையோடு போனை எடுத்து" ஹலோ.." என்றான். மறுமுனையில் யாரோ ஒரு இளைஞனின் குரல்,

"அபிநயா மேடம் இங்கதான் இருக்காங்க அவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, பத்திரமாக இருக்காங்க நாங்க சொல்ற முகவரிக்கு நீங்க வந்தீங்கன்னா அவங்கள கூட்டிட்டு போகலாம். நீங்க சீக்கிரம் வந்தீங்கன்னா நல்லா இருக்கும்...என்றவன் முகவரியை சொன்னான்".

" என்னுடைய நம்பர் எப்படி தெரியும்...?"

"குமார்னு ஒருத்தர் கொடுத்து உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்ல சொன்னார்." என்றவன் மறுமுனையில் பட்டென்று போனை கட் பண்ணினான்.

"ஹலோ... ஹலோ..." என்று அழைத்துப் பார்த்துவிட்டு திரும்பவும் அதே நம்பருக்கு கால் பண்ணினான் கார்த்திக் ஆனால் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

கார்த்திக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் ஏதோ ஒரு தைரியம் மனதுக்குள் தோன்றியது.

***

சற்று நேரத்திற்குப் பிறகு அவர்கள் சென்ற பாதையில் மனித நடமாட்டங்கள் காணப்பட்டன ஓரிரு விலங்குகளும் கண்ணில்பட்டது அற்புதமான இயற்கை அழகு, ஒருபோதும் சலிப்பூட்டியதில்லை.

உயரமான கட்டடங்களால் நிறைந்த குறுகிய வானம்கொண்ட நகர வீதிகளில், நிரந்தரமற்ற இலக்கை நோக்கி ஓடும் மனிதர்களை இங்கே காண முடியவில்லை. இவர்கள் வானம் பெரிது. நெருக்கிய கட்டடங்களுக்குள் யாரும் வாழவில்லை. வீசும் காற்றில் விஷமில்லை. திரையரங்குகளோ, மால்களோ இல்லை. பொழுதைப்போக்க இவர்களுக்கு அந்தச் சூழல் போதும். பச்சை, அம்மக்களின் வாழ்வை முழுமையாக ஆக்கிரமித்த வண்ணம். அது அவர்கள் நிராகரிக்க முடியாத இயற்கையின் அன்புக் கட்டளை! இங்கே இயற்கையிடம் நவீனம் தோற்றுப்போயிருந்தது. இவர்கள் வாழ்கிறார்கள்.
சுமார் ஐந்து கி.மீ தொலைவிற்கு பிறகு அழகான வண்ணமயமான கோயில் ஒன்றிருந்தது. உயரமான மலைகளுக்கு நடுவே அமைதியான சூழலில் அமைந்துள்ள அழகான இடம். பிறகு அங்கிருந்து தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே போடப்பட்ட குறுகிய சாலையை கடந்து காரின் பயணம் தொடர்ந்தது. சிறிது தூரத்தில் இடதுபுறம் மலைகளுக்கு இடையேயான பள்ளங்களை நிரப்பிய அகலமான ஆறு ஒன்று பயணித்தது. சில மணி நேரத்தில் அந்த இளைஞன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே மலைகளுக்கு இடையே காட்டாற்றைச் சிறைபிடித்து பிரமாண்டமாக நின்றது ஓர் அணை. சில கி.மீ தொலைவில் சோதனைச் சாவடி, அதைக் கடந்து கேரள வனப்பகுதி என்றான் ஒரு வழிப்போக்கன்.

அவரை நிறுத்தி மேற்கொண்டு விசாரித்ததில் அங்கே தேயிலைத் தோட்டங்கள் இல்லை. பல தலைமுறைகளைக் கடந்து விண்ணுயர வளர்ந்து நிற்கும் மரங்களைக்கொண்ட அடர்ந்த காடுகள் அவை. அந்த முல்லை நிலக் காடுகள் சூரிய ஒளியை முழுமையாக உள்ளே அனுமதிப்பதில்லை. அங்கே எல்லாம் போகாதீர்கள் மனிதர்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும்.." என்றார் அந்த மனிதர்.

கார்த்திக் மூன்று நம்பருக்கும் முயற்சி செய்து பார்த்தான். மூவரின் போனும் சுவிட்ச் ஆஃபில் இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்வையை ஓட விட்ட போது காருக்குள் இருந்த முருகன் வெளியில் இறங்கினான்.

" சார் நீங்க யாரையோ தேடிக்கிட்டு இருக்கீங்கன்னு புரியுது எங்கிட்ட சொன்னா என்னால முடிஞ்ச உதவி களை செய்றேன் சார்..." என்றான்.

வேறு வழி தெரியவில்லை அபிநயா பற்றி சொன்னான் கார்த்திக்.

"சார்... நாம இங்க வந்ததே தப்பு. காரை இந்த பாதை வழியா திருப்புங்க...அப்பதான் அந்த இடத்துக்கு போக முடியும்." என்றான் முருகன்.

இருவர் முகத்திலும் யோசனை படிந்தது. முருகன் சொன்னது போல் அவன் காட்டிய பாதை வழியாக காரைத் திரும்பி ஓடினான் வேழவேந்தன்.

பயணம் தொடர்ந்தது. சிறிது தூரத்தில் சாலையோரங்களில் நிறைய வாகனங்கள், மக்கள் கூட்டம், பெரும் நீர்வீழ்ச்சியின் ஒலி.

மூங்கில் மரங்களால் அமைக்கப்பட்ட அழகிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றனர். ஒரு நதி உயரமான மலைப்பாறையைக் கடந்து பெரும்பள்ளத்தில் விழும் பிரமாண்டமான காட்சி. அந்தக் காட்டில் அது கர்ஜித்துக்கொண்டிருந்தது. அதன் ஓசை, அந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. இயற்கை, தன்னுள் எத்தனையோ அற்புதங்களை ஒளித்துவைத்துள்ளது.

கரடு முரடான மலைப் பாதையின் வழியாக வந்த காரை ஓரிடத்தில் நிறுத்தச் சொன்னான் முருகன். அதுதான் பாரஸ்ட் ஆபீசர் தங்கியிருக்கும் இடம் என்றான்.

அந்த கோட்ரஸிலிருந்து வெளியில் வந்த ஒருவரை அழைத்து பொதுவாக விசாரித்தனர்.

தமிழக வனத்துறையை நன்கு அறிந்தவர்களுக்கு தவிர்க்க இயலாத பெயர் தங்கராஜ் பன்னீர்செல்வம். இன்றைய ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர். அண்மையில் ஓய்வு பெற்ற வனச்சரகர். யானை, சிறுத்தை , புலி போன்ற காட்டுயிர்கள் மனிதக் குடியிருப்பு பகுதிக்கு வந்து உடமைக்கும் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்போது அந்த விலங்குகளை திரும்பவும் காட்டுக்கு அனுப்பும் சிக்கலான பணி நடைபெறும் பெரும்பாலான இடங்களில் தங்கராஜ் பன்னீர்செல்வம் முன்னணியில் களப்பணியாற்றிக் கொண்டிருப்பார்.

அவருடைய தந்தையும் வனத் துறையில் இதே பகுதியில் பணியாற்றியவர். எனவே பள்ளிப்பருவம் முதல் டாப்சிலிப், வால்பாறை போன்ற இடங்களில் இருந்தவர் .

காட்டு யானைகளைப் பிடித்து பழக்கும் பணியும் இங்கு நடைபெறுகிறது . எனவே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த இடமாக இருந்தது. அப்போது அப்பகுதியில் வனவிலங்குகளை காண்பது மிகவும் அரிது என்கிறார் திரு தங்கராஜ்.

ஆனால் இன்று பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகமாக மாறியுள்ளது.

என்று தனக்குத் தெரிந்த தகவலை சொல்லிக்கொண்டிருந்தவரிடம் அடுத்ததாக அபிநயாவை பற்றி விசாரித்த போது அவர் முகம் மாறியது. எதையோ சொல்ல தயங்குவது போல் தெரிந்தது. ஆனாலும் விடாமல் அவரை கேட்டபோது வேறு வழி தெரியாமல் தயக்கத்தோடு சொல்ல துவங்கினார்.
 
Top