Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி...! - அத்தியாயம் - 28

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம் 28


டாக்டர் மாதவியின் கார் வேழவேந்தனின் கார் மீது மோதி விட. அதை கண்ட வேழவேந்தன் நடு ரோடு என்று கூட பார்க்காமல் டாக்டர் மாதவியோடு உரக்க கத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.


காருக்குள் அமர்ந்திருந்த அபிநயா காரிலிருந்து இறங்கி வந்தாள். வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தவன் அபிநயாவை பார்த்த அடுத்த நிமிடம் பட்டென்று பேச்சை நிறுத்தி ஆச்சரியத்தோடு அபியை பார்த்தான். அதேபோல் அவனை அந்த இடத்தில் எதிர்பார்க்காத அபிநயாவின் மனநிலையும் அவனைப் போலவே இருந்தது. ஒரு நிமிடம் இருவரின் முகங்களிலும் அதிர்ச்சி பரவி பின் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

"டாக்டர்... எனி ப்ராப்ளம்...?"
என்று இவள் தன்னை சமாளித்துக்கொண்டு கேட்க,

" அபிநயா நீங்க உள்ளேயே இருங்க.. நான் ஒரு பைவ் மினிட்ஸ் இவர் கிட்டே பேசிட்டு வரேன்..'" என்று பதில் சொன்னாள் டாக்டர் மாதவி.

" சார் சொல்லுங்க இந்த காரோட நம்பர் பிளேட், பம்பர் இவற்றை மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும் சொல்லுங்க நான் கொடுத்துடறேன். அதுக்காக வழியை மறைச்சா நல்லா இல்லே.., நான் அர்ஜெண்டா வீட்டுக்கு போகணும். என்னோட பிரண்டு வேற கார்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..."

" ஓகே மேடம்... இது சரி பண்ண எனக்கு ஒரு ஐந்தாயிரம் ஆகும். ஆனாலும் அந்த பணம் எனக்கு வேணாம். நானே சரி பண்ணிக்கறேன். நீங்க கிளம்புங்க பாவம் கலெக்டர் அம்மா ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்..."என்றவன் ,

" போங்கப்பா... போங்க... போங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல எங்களுக்குள்ளேயே பார்த்துக்குறோம் கெளம்புங்க கெளம்புங்க.." என்று சுற்றி நின்றவர்களை விரட்டினான்.

" மிஸ்டர்...அதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் தான் சரியா கவனிக்காம மோதிட்டேன். என் மேலதான் தப்பு. ஒரு நிமிஷம் இருங்க.." என்றவள், முன்பக்க இருக்கையில் இருந்த பர்ஸ்சை கைநீட்டி எடுத்தாள்.

"டாக்டர் சேஞ்சு வேணுமா..? " என்று இவள் தன்னுடைய ஹேண்ட் பேக்கில் கை நுழைத்து பணத்தை எடுத்தபோது பணத்தோடு சிக்கிக்கொண்டு வந்தது அந்த பிரேஸ்லெட், இந்த நேரத்துல இது வேற என்று முகசுளிப்போடு அதை விடுவிக்க முயல,

" இல்ல இல்ல வேணாம் என்கிட்ட இருக்கு..." என்று ஐந்தாயிரத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள் டாக்டர் மாதவி. அவன் வேண்டாம் என்று மறுக்காமல் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு,

"மேடம்... ஒரு நிமிஷம் மேடம்...இனிமேலாவது பாத்து ஒழுங்கா ஓட்டுங்க, எல்லோருமே என்னை மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்க புரியுதா...?" என்று காரின் முன் இருக்கைக்கு அருகே குனிந்து எச்சரித்தான்.

அவன் அப்படி மிக நெருக்கமாக வந்து சொன்னபோதுதான் அபிநயா அவனை கவனித்தாள். அவனுடைய காதோரம் மின்னிக் கொண்டிருந்த ஓரிரு நரைமுடிகள், கடும் உழைப்பின் காரணமாய் தொடர்ந்து கண் விழிப்பின் பலனாய் கண்களை சுற்றியிருந்த கருவளையம் என அந்த ஒரு நிமிட பார்வையில் அபிநயாவின் மனம் அவனை படம் பிடித்தது.

" போகலாமா அபிநயா...?" என்று கேட்டப்படி காரை ஸ்டார்ட் பண்ணிய டாக்டர் மாதவி அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகவே காரை ஓட்டினாள்.

சுமார் இருபது நிமிடத்திற்கு பிறகு அபிநயாவை அவளுடைய வீட்டருகே இறக்கி விட்டவள், தலையை மட்டும் வெளியில் நீட்டி,

" அபிநயா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காரை மோதிட்டேன்னு, ஒருத்தன் எங்கூட சண்டை போட்டானே!! அவனுடைய கண்ணுல எவ்வளவு கோபம் இருந்துச்சு தெரியுமா? பயங்கரமா என்கூட சண்டை போட்டவன் உங்கள பார்த்தா அடுத்த நிமிடமே பொட்டி பாம்பா அடங்கிட்டான். இன்னொன்னு கவனிச்சீங்களா கலெக்டர் அம்மா வெயிட் பண்றாங்க அவங்கள கூட்டிட்டு போங்கன்னு எவ்வளவு பதட்டமா சொன்னான் தெரியுமா? நீங்க வெயிட் பண்றதை அவனால தாங்கிக்க முடியல, டாக்டரை விட கலெக்டரை தான் அவன் மதிக்கிறான்." என்று மாதவி சிரிக்க வேறு வழியில்லாமல் இவளும் சிரித்து வைத்தாள்.


மாதவிக்கு ஒரு நன்றியை உதிர்ந்து விட்டு தன் வீட்டு கேட்டுக்கு அருகே வந்தாள் அபிநயா. அவளைப் பார்த்துவிட்டு ஒரு சல்யூட்டுடன் செக்கியூரிட்டி கேட்டை திறக்க,

வீட்டுக்குள் நுழைந்த அபிநயாவை அவளுடைய அம்மா நிறுத்திவைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கினாள்.

"அபி ஆபீஸ்லே இருந்து எங்க போனே... ஒரு ஹோட்டல்ல உன்னை பார்த்ததா ஒருத்தவங்க சொன்னாங்க, அவ்வளவு தூரம் எதுக்கு போனே? அதுவும் நீ யாரோ ஒருத்தர் கூட போனதா சொன்னாங்க? கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கிற இந்த நேரத்துல இப்படி தனியா ஒருத்தர் கூட போகலாமா...?"

"அம்மா ப்ளீஸ் மொதல்ல என்ன பேச விடு.. ஆபீஸிலிருந்து எங்க போனேன்னு கேளு சொல்றேன். அத விட்டுட்டு ஒருத்தர் கூட தனியா போனேன் அது இதுன்னு இதெல்லாம் தேவையில்லாத பேச்சு."


" அப்போ நீ எங்கே போனேன்னு நான் கேட்க கூடாதா...?"

"நான் அப்படி சொல்லல என்ன பத்தி இவ்வளவு அக்கறையா..., கண்டுபிடித்து சொன்ன அந்த நபர், என் கூட வந்தவரு யாருன்னு உங்ககிட்ட சொல்லலையா..? அப்படியே அவங்க சொன்னாலும் நீங்க உடனே எனக்கு கால் பண்ணி கேட்டிருக்கலாமே? அப்படின்னா உங்களுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை இல்ல அப்படித்தானே."

" இல்ல அபி அவங்க சொன்ன உடனே... எனக்கு உன் மேல கோபம் கோபமா வந்துச்சு சரி வந்தவுடனே கேட்டுக்கலான்னு இருந்தேன்..."

" உங்க அம்மா கேட்டதுல என்ன தப்பு இருக்கு அப்படி யாரு கூட தான் நீ போனேன்னு சொல்லு...?" -இது அங்கு வந்த அபியின் அப்பாவின் கேள்வி.

" சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க சென்னையிலிருந்து கார்த்திக் தான் வந்தார். மத்தியானம் அவர்கூட லஞ்சு சாப்பிட்டு, அவங்க அண்ணிக்கு ஒரு சில்க் சாரி எடுக்கணுன்னு சொன்னதால கூட போனேன். வீட்டுக்கு வாங்கன்னு சொன்னேன் அடுத்த முறை வரும்போது வரேன்னு சொல்லிட்டார். அவ்வளவுதான் வேற ஏதாவது கேட்கணுமா கார்த்திக் நம்பர் தான் உங்ககிட்ட இருக்குமே போன் பண்ணி கேட்டு கன்பார்ம் பண்ணிக்கோங்க..."

விறுவிறுவென்று நடந்து சென்று தன்னுடைய அறைக்குள் நுழைந்தவள் படீரென்று கதவை சாத்திவிட்டு கையில் வைத்திருந்த பார்சலை டேபிள் மேல் வீசினாள். ஆயிரத்தெட்டு கேள்வி ஆயிரத்தெட்டு சந்தேகம்.
இன்னமும் நான் என்ன சின்னப் பிள்ளையா? என்னைப் பற்றின அக்கரை எனக்கு இருக்காதா? என்னை இன்னும் விவரம் அறியாத சின்ன பிள்ளையாத்தான் நினைக்கிறாங்க. அவங்களை சொல்லி ஒன்னும் தப்பில்லை அந்த அளவுக்கு நடந்துகிட்டது என்னுடைய தப்பு தான். திரும்பவும் அந்தத் தப்பை எப்படி பண்ணுவேன்?.

இரவு ஒரு கப் பாலை மட்டும் குடித்து விட்டு மொட்டை மாடிக்கு சென்ற அபிநயா வெகுநேரம் நடந்து கால்கள் சோர்ந்த பிறகு தான் கீழே இறங்கி வந்தாள்.

அறையில் நுழைந்த போது டேபிள் மேலிருந்த அந்த பார்சல் கண்ணில் பட்டது. அது அவளுக்காக கார்த்திக் வாங்கிக்கொடுத்த சில்க் சாரி. வேண்டாம் என்று மறுத்தும் பிடிவாதமாக கொடுத்ததால் மறுக்க மனமின்றி வாங்கிக்கொண்டு வந்தது. பார்சலை எடுத்து பிரித்து உள்ளே இருந்த புடவையை வெளியில் எடுத்தாள்.
அடுத்த நிமிடமே முகம் பேயறைந்தது போல் மாறியது. அவளையும் அறியாமல் கையிலிருந்த புடவை நழுவி கீழே விழுந்தது.

காரணம் இளம் மஞ்சள் நிறத்தில் கருப்பு பார்டரில் பொன்னிற ஜரிகை இழையப்பட்டிருந்த அந்த புடவையை பார்த்தவுடன் வேழவேந்தனை பற்றின நினைவு கண் முன்னால் வந்து நின்று இம்சித்தது.

எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த நிகழ்ச்சிதான் திரும்பத் திரும்ப கண் முன்னால் வந்து நின்று மனதை ரொம்பவும் துன்பப்படுத்துகிறது. இதையெல்லாம் மறப்பதற்கு என்ன செய்யலாம் என்று எண்ணிய மறு நிமிடம், மதியம் மாதவி டாக்டர் சொன்ன அட்வைஸ் நினைவிற்கு வந்தது.

அலுவலகத்திலிருந்து வந்ததும் குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டும். பின் ஏதாவது புத்தகம் படிக்க வேண்டும். இது போல வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத மன சஞ்சலங்கள் எல்லாம் மனதை விட்டு அகன்று விடும் என்று சொன்னதை கடை பிடிக்கும் விதமாக ஆங்கில நாவல் ஒன்றை கையிலெடுத்து படிக்கத் தொடங்கினாள். சற்று நேரத்திலேயே தூக்கம் கண்களைச் சுழற்ற படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அப்படியே தூங்கியும் போனாள்.

அடுத்த நாள்...

அன்று சண்டே என்பதால் அபிநயா வெகு நேரத்திற்குப் பிறகுதான் படுக்கையில் இருந்து எழுந்தாள். சிறுவயதிலிருந்தே சண்டே சண்டே எண்ணை தேய்த்துக் குளிக்கும் வழக்கம். சிறு வயதிலிருந்தே பழகியதால் இன்றுவரை அதை அப்படியே கடைப்பிடித்துக் கொண்டும் இருக்கிறாள் அபிநயா.

ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.

திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.

செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்

- அபிநயாவின் பாட்டி இப்படி அடுக்கிக்கொண்டே போவாள். ஆனால் சண்டே ஒருநாள் தான் ஆற அமர குளித்து கூந்தலை காயவைக்க நேரம் கிடைக்கிறது. அதனால் சண்டே தான் நான் எண்ணெய் தேய்த்து குளிப்பேன் என்று சிறுவயதில் பாட்டியோடு வாதிடுவாள். அன்றிலிருந்து இன்றுவரை சண்டே எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம்.

எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து, கூந்தலை காய வைத்து, டிவியில் ஒரு படத்தையும் பார்த்து முடித்த பிறகு, அம்மா மதிய சாப்பாட்டிற்கு அழைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது,,

" கார்த்திக் ஒரு பங்ஷனுக்கு இன்வைட் பண்ணியிருக்கிறார். அதனால அந்த பங்ஷனுக்கு ஈவினிங் போகணும்பா..." என்றால் எதிரில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த அப்பாவிடம்.

" தாராளமா போயிட்டு வாம்மா.. இதுக்கு என்கிட்ட பர்மிஷன் கேக்கணும்ங்குற அவசியமே இல்லையே!! நான் என்ன உன்ன போக கூடாதுன்னா சொல்ல போறேன்?? தாராளமா போய்ட்டு வா.." என்று உடனே பர்மிஷன் கொடுத்தார்.

இவள் ஈவினிங் போர் ஓ கிளாக் போல வீட்டிலிருந்து கிளம்பிய போது கார்த்திக்கே கால் பண்ணினான்.

"அபி எப்படி வரீங்க..? எத்தனை மணிக்கு வரீங்க...?"

" நான் என்னுடைய காரிலேயே வந்துர்றேன் கார்த்திக்.. ஆல்ரெடி அட்ரஸ் அனுப்பி இருக்கீங்க இல்லே... கூகுள் மேப் போட்டுட்டு கரெக்டா வந்துடறேன். எப்படியும் அங்க வர்றதுக்கு ஒரு ஹாஃப்னவர் ஆகும்னு நினைக்கிறேன். கிட்டே வந்து கால் பண்றேன். என்று போனை கட் பண்ணிவிட்டு அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டு கார் சாவி, கைப்பையோடும், வாசலில் இறங்கினாள்.

வாகன நெருக்கடிக்கு மத்தியில் இவள் அந்த இடத்திற்கு செல்ல கிட்ட தட்ட அரைமணி நேரம் ஆனது. அருகில் வரும்போது கார்த்திக்கு கால் பண்ணினாள். கார்த்திக்கும் உடனே வெளியில் வந்து நிற்க, இவளை ரிசீவ் பண்ணி அழைத்துச் சென்றான் வழிநெடுங்கிலும் கேபின் கேபினாக தடுத்து வித விதமான கலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமல்ல டெல்லி, குஜராத், மும்பை, கொல்கத்தா, ஜோத்பூர், ஜெய்ப்பூர். என்று ஒவ்வொரு ஊரிலும் பிரசித்திபெற்ற கலை பொருள்களை வரவழைத்து தனித்தனியாக பார்வைக்கு வைத்திருந்தார்கள். அதனுடைய விலைகளும் பொருட்கள் மீதே ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அந்தந்த ஊர் பொருட்களை பற்றியும் அதன் பயன்பாட்டை பற்றியும் விளக்கிச் சொல்வதற்கு கல்லூரி மாணவிகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் அந்தப் பொருள்களை பற்றிய விளக்கத்தை ஒவ்வொருத்தரிடமும் சொல்லும்போது மற்றவர்களுக்கு புதிய தகவலை தெரிந்து கொண்டது போலவும் இருந்தது. அது மட்டுமல்லாமல் விரைவான விற்பனைக்கு இது ஒரு புது உத்தியாகவும் தோன்றியது.

அபிநயாவை முன் இருக்கையில் அமர வைத்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான். அப்போதுதான் மேடையில் பேசிக்கொண்டிருந்த கமிஷனரையும் அருகில் நின்று கொண்டிருந்தவனையும் பார்த்தவுடன் அபிநயாவிற்கு முகம் வெளிறிப் போனது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக தன்னை ஒருநிலைப்படுத்தியபடி அமர்ந்திருந்தாள்.

மேடையில் கமிஷனர் பேசிக்கொண்டிருந்தார்.

"இன்று எந்தப் பொருளையும் அமர்ந்த இடத்திலேயே ஒரு கிளிக்கில் வாங்கி விட முடியும். இருந்தாலும் அந்த பொருட்களை நேரில் பார்த்து, ரசித்து வாங்குவதை விரும்புவோர் இன்னமும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. குறிப்பாக அந்தந்த பொருட்களை அந்த இடத்திற்குச் சென்று வாங்கினால்தான் தரமானதாக இருக்கும். நமக்கும் காசு செலவழித்ததில் திருப்தி கிடைக்கும். அப்படி இந்தியாவில் கைவினைப் பொருட்கள் எங்கு சென்றால் சிறப்பாக வாங்கலாம் என்று தேடி கண்டுபிடித்து அவற்றை எல்லாம் இறக்குமதி செய்து ஒரே இடத்தில் கிடைப்பதுபோல் வழிவகுத்து அதை ஒரு கண்காட்சியாக நடத்தி நம்முடைய கலாச்சாரத்தின் பெருமைகளை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறார். இந்த கண்காட்சியின் நாயகன் ஒருங்கிணைப்பாளர் மிஸ்டர் வேழவேந்தன்."
என்று ஒலிபெருக்கியில் வேழவேந்தனை பாராட்டி பேசிக்கொண்டிருந்தார் கமிஷ்னர்.

அவரின் அந்த பேச்சுக்குப் பிறகு வேழவேந்தனிடம் மைக் கொடுக்கப்பட்டது. மைக்கை கையில் வாங்கியவன் அப்போதுதான் எதிரே அமர்ந்திருந்த அபிநயாவை பார்த்திருப்பான் போல, அருகிலிருந்த ஒருவரை அழைத்து காதில் கிசுகிசுவென எதையோ சொன்னான். சற்று நேரத்தில் அவளுக்கு கூல்ட்ரிங் கொடுக்கப்பட்டது.

அவள் தன்னையும் அறியாமல் கூல்டிரிங்கை கையில் வாங்கினாள். அதை பார்த்த பிறகு அவனுடைய பேச்சில் சுவாரஸ்யம் கூடியது.

"வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் நான் வேழவேந்தன். இங்கு வந்திருக்கும் பலருக்கு என்னை தெரியும். சிலருக்கு என்னை தெரியாமலும் இருக்கலாம் அதனால் தான் இந்த அறிமுகம்.

டெல்லியில் சத்ராபூரின் அந்தேரி மோத்தில் பிரசித்திபெற்ற தஸ்தகர் பஸார் வீதி மிகவும் பிரபலம். அங்கு அனைத்து விதமான கைவினைப் பொருட்களையும் வாங்கலாம். மதுபானி பெயிண்டிங், அஸ்ஸாமீஸ் ஷால், எம்பராய்டரி ஆடைகள், அழகுகலை பொருட்கள், சமையலறை பீங்கான், மண் பொருட்களை வாங்கலாம். அதேபோல

கவ்டா என்ற கிராமத்தில் களி மண் கைவினைப் பொருட்கள் வாங்கலாம். ஹோட்கா என்ற இடத்தில் லெதர் பேக்குகள், லெதர் பொருட்கள் வாங்கலாம். நிரோனா என்ற இடத்தில் கிட்சனுக்கு தேவையான வண்ணமயமான பொருட்களை வாங்கலாம். புஜோடி கிராமத்தில் பாரம்பரிய கைத்தறி ஆடைகள், எம்பராய்டரி ஆடைகளை வாங்கலாம்.

மும்பை என்றாலே சோர் பஜார்தான் நினைவிற்கு வரும். இங்கு சென்றால் கலை நயம் மிக்க பொருட்கள் வாங்கலாம். அதாவது நிறைய பழைய காலத்து கிராம் ஃபோன்கள் தொடங்கி மியூசிம் பொருட்கள் வரை இங்கு வாங்கலம். வீட்டை மியூசியம் போல் பழைய பொருட்களால் அலங்கரிக்க நினைப்போர் சோர் பஜார் செல்லலாம்.

கொல்கத்தாவில் ஹாங்ஸ் மார்கெட்டில் நிறைய டெரகோட்டா கலை பொருட்களை வாங்கலாம். அடுத்ததாக தக்‌ஷினாபான் ஷாப்பிங் செண்டர் சென்றால் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட மளிகை சாமான்களை குறைந்த விலைக்கு வாங்கலாம்.

ஜோத்பூரில் முக்கியமாக ராஜஸ்தான் கைவினைப் பொருட்களுக்கும் இங்கு மவுசு அதிகம். கலர்ஃபுல் கைத்தறி ஆடைகள், காலணிகள். வீட்டு அலங்காரப் பொருட்கள் என எல்லாமே இங்கு கிடைக்கும்.

ஆனால் இப்படி எல்லாமே வெளிமாநிலங்களுக்கு சென்று எல்லாராலும் வாங்க முடியாது என்பதால் அந்தந்த இடங்களில் உள்ளதுபோல், ஏன் நாமளே தயாரித்தால் என்ன? என்று புதுவித யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அந்த இடங்களுக்கெல்லாம் சென்று அதனுடைய செய்முறை விளக்கங்களை தெரிந்து கொண்டு, அதே போல் இல்லை என்றாலும் ஓரளவுக்கு அந்த வடிவத்தை ஒத்த, தரத்தில் குறைவில்லாமல் உருவாக்கி இருக்கிறோம். அதுதான் நீங்க பார்க்கிற இந்த பொருட்கள் எல்லாமே.. இவை எல்லாமே நம்ம தமிழ்நாட்டில உருவாக்கப்பட்டது. உருவாக்கியவர்கள் அனைவரும் தமிழர்கள் தான்.

மூலப்பொருட்கள் வேண்டுமானால் சில இடங்களிலிருந்து இறக்குமதி செய்து இருக்கிறோமே தவிர உழைப்பு முழுவதும் நம்முடைய மக்களுடையதுதான். அதனால் இதை வாங்குவதற்கு யோசிக்க வேண்டாம். இது நூறு சதவீதம் தரமான பொருள் என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன். இப்படி கண்காட்சி நடத்தினால் மக்களிடையே இதை பற்றின விழிப்புணர்வு உருவாகும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம். அந்த எண்ணத்தோடு தான் பல லட்சங்கள் செலவு செய்து இந்த கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் இந்த கண்காட்சி நடக்கும். நடக்க வேண்டும். என்பது என்னுடைய நம்பிக்கையாய் இருக்கிறது. இந்த எளியவனின் விழாவை மதித்து அழைத்தவுடன் மறுப்பு தெரிவிக்காமல் வந்து விழாவில் கலந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கமிஷனர் மற்றும் அசிஸ்டன்ட் கமிஷனர் இருவரையும் மன மகிழ்வோடு சிறப்பிக்க விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல சிறப்பு விருந்தினராய் வந்து கலந்து கொண்ட நம்முடைய மாவட்ட ஆட்சியாளர் மிஸ் அபிநயா அவர்களையும் சிறப்பிக்க ஆசைப்படுகிறேன் அவர்கள் தயைகூர்ந்து மேடைக்கு வருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் என்று மைக்கில் உரக்க பேசிக்கொண்டு இருந்தான் வேழவேந்தன்.


அபிநயாவின் முகம் மகிழ்வற்று இருந்தது.
 
Last edited:
எங்கெங்க என்ன ஸ்பெஷல் அப்டினு அழகா தெளிவா குடுத்திருக்கீங்க
 
Top