Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-20

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-20

தலைப்பு செய்தி...

"இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாக ஏற்கனவே 78 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்க, கடந்த வாரம் தமிழகத்தை சேர்ந்த குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றிருந்தது. அந்த நான்கு பேரும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

கொழும்பு, 4 தமிழக மீனவர்களை இலங்கை கோர்ட்டு நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் 4 பேரும் நாடு திரும்பும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு செய்து உள்ளது. விடுவிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களும் இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள் ஒப்படைத்தனர். குடியுரிமை அதிகாரி அவர்களை அவர்கள் ஊருக்கு அனுப்பி வைத்தார்.""


என்ற செய்தி அன்றைய தினசரி நாளிதழில் வெளி வர அதை படித்த வள்ளி உடனே அந்த பத்திரிகையை எடுத்துக் கொண்டு சுந்தரி அம்மாவைத் தேடிச் சென்றாள்.

சுந்தரி அம்மாவின் அறை கதவை தட்டியவுடன் கதவைத்திறந்த சுந்தரி அம்மா,

"என்னாச்சு வள்ளி முகமெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கு...!!" என்றார்கள்.

"அம்மா இந்தப் பேப்பர்ல வந்த செய்தியை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்... அவரை விடுதலை பண்ணிட்டதா போட்டு இருக்கு!!... அதுதான் கார்த்திக்கையாவுக்கு இந்த விஷயம் தெரியுமான்னு எடுத்துட்டு ஓடியாந்தேன்... கார்த்திகையா இந்நேரத்துக்கு எழுந்திருச்சு இருப்பாரா...?"

"இப்படி கொடு... !" என்று தினசரி பத்திரிக்கையை அவளிடமிருந்து வாங்கிய சுந்தரி அம்மா அதை மேலோட்டமாக படித்தார்.

" நல்ல விஷயம்தான் வள்ளி... தம்பிக்கு இந்த விஷயம் தெரியாமல் இருந்திருக்காது. காலையிலேயே கிளம்பி போச்சு. சரி போகும்போது எங்க போறேன்னு கேட்கக்கூடாதுன்னு பேசாம இருந்துட்டேன். இப்பதான் புரியுது உன் வீட்டுக்காரரை கூப்பிட தான் போய் இருக்கும்னு. போன் வருதான்னு கொஞ்ச நேரம் பார்ப்போம்... இல்லன்னா நான் போன் பண்ணி கேட்கிறேன் சரியா..."

"சரிங்கம்மா...!!" மகிழ்ச்சியோடு தலையசைத்த வள்ளி தூங்கிக் கொண்டிருக்கும் தன் மகன் வினோத்தை எழுப்புவதற்காக வேக வேகமாக பின் பக்க அறையை நோக்கி சென்றாள்.

சுமார் பத்து மணி வாக்கில் கார்த்திக்கிடம் இருந்து போன் வந்தது.

"ஹலோ... கார்த்திக் சொல்லுப்பா எங்க இருக்கிற...?"

"அம்மா நான் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன், எங்கூட வள்ளி ஹஸ்பண்ட் ராஜேந்திரனும் இருக்குறாரு... நாங்க ரெண்டு பேரு தான் வீட்டுக்கு வந்திட்டு இருக்கோம். மத்த விஷயத்தை வீட்டுக்கு வந்த பிறகு சொல்றேன்..."

"சரிப்பா... சரிப்பா... பார்த்து வாங்க." என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிய மறுநிமிடம்,

" வள்ளி... வள்ளி..." என்று உரக்க குரல் கொடுத்தப்படி படுக்கை அறையை விட்டு சுந்தரி அம்மாள் வெளியில் வந்தாள்.

சுந்தரி அம்மாவின் குரலுக்காகவே காத்திருந்த வள்ளி,

"அம்மா கூப்டீங்களாம்மா ? கார்த்திக்கையா கிட்ட இருந்து போன் வந்துச்சா...? என்ன சொன்னார் அம்மா?" என்று ஆர்வத்தோடு கேள்விகளை அடுக்கினாள்.

"கார்த்திக்தான் பேசினான் குட் நியூஸ் தான் சொன்னான்... உன் வீட்டுக்காரரை அழைச்சிகிட்டு ரெண்டு பேருமா கார்ல வந்துகிட்டு இருக்காங்களாம் அவ சொன்ன மாதிரி நிமிடமே அந்த விஷயத்தை சொல்ல உன் கிட்ட ஓடி வந்துட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னுடைய புருஷன் வந்துருவாரு இப்போ உனக்கு சந்தோஷம்தானே வள்ளி...? என் பையன் பார்த்தியா எப்படியோ போராடி ராஜேந்திரனை வெளியில் கொண்டு வந்துட்டான் பாத்தியா? எம்புள்ள உண்மையிலேயே ரொம்ப திறமைசாலி தான். சரி சரி அவங்க எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க இளமதி கிட்ட சொல்லி சாப்பாடு எடுத்து டேபிளில் வைக்க சொல்லு...நீ இளமதிக்கு கூட மாட உதவிப்பண்ணு...போ...போ"

"அவ்வளவுதானே.... அதைவிட எனக்கு என்ன வேலை இதோ போறம்மா." என்று ஒரு துள்ளலோடு ஓடினாள்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு...

போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க முதல் மாடியில் தன் அறையில் இருந்த சுந்தரி அம்மா இருக்கையில் இருந்து எழுந்து திரைச்சீலைகளை விலக்கி பார்க்க, அவர்களுக்கு அருகில் கீழே தரையில் அமர்ந்திருந்த வள்ளியும் வினோத்தும் ஆர்வத்துடன் சுந்தரி அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"கார்த்திக் கார் தான் வாங்க கீழ போகலாம்..." என்றாள் சுந்தரியம்மா.

மூவரும் கீழே இறங்கி ஹாலுக்கு வந்தபோது கார்த்திக்கும் ராஜேந்திரனும் வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்தார்கள்.

அப்பாவை பார்த்த மகிழ்ச்சியில் வினோத் ஓடிச்சென்று கட்டிக்கொண்டான். வள்ளி கண்களில் நீரோடு சுந்தரி அம்மாவையும் கார்த்திக்கையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

"ஐயா நீங்க செஞ்ச இந்த உதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேங்க... என் வீட்டுக்காரரு இல்லாம நாங்க ரெண்டு பேரும் தவியா தவிச்சிட்டோம் இதுக்கெல்லாம் மூலக்காரணம் நீங்கதான். நீங்க நல்லா இருக்கணும்."

"ஆமாங்க வள்ளி சொல்றது உண்மைதான் நீங்க மினிஸ்டர் லெவல்ல பேசலனா எங்களை இந்த ஜென்மத்துக்கு விடுதலை பண்ணியிருக்க மாட்டாங்க. உங்க முயற்சியால்தான் இவ்வளவு சீக்கிரமா நான் வெளியே வந்தேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல...!!?" என்றான் ராஜேந்திரன்.

"சரி சரி மாறிமாறி இரண்டு பேரும் நன்றி சொன்னது போதும். முதல்ல போய் தலையில தண்ணிய ஊத்தி குளிச்சிட்டு வா ராஜேந்திரா. வள்ளி ராஜேந்திரனுக்கும் கார்த்திக்குக்கும் சாப்பாடு பரிமாறு நான் சம்பந்தி கிட்ட நாளைக்கு கோயம்புத்தூருக்கு வர்றதைப் பத்தி பேசிட்டு வரேன். இனிமே இந்த போலீஸ் கேசு இதுக்கெல்லாம் எதுக்கும் நீ போககூடாது புரியுதா? நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருக்கணும். முக்கியமா உன்னுடைய குடும்பத்தை பாரு உன் மேல உசுர வச்சு இருக்கிற உன் பிள்ளையை பாரு, நீ இல்லாம இந்த ரெண்டு மூணு நாள்ளா தவியா தவிச்சுகிட்டு இருக்குற உம் பொண்டாட்டிய பாரு அதுக்கு அப்புறம்தான் உழைப்பு வருமானம் எல்லாம்..." என்ற சுந்தரி அம்மாவின் பேச்சுக்கு கைகட்டி தலை வணங்கினான் ராஜேந்திரன்.

"ராஜேந்தர் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க... எனக்கு பசி இல்ல லேட்டா சாப்பிடுறேன். அதுக்கும் முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு பக்கத்துல தான் போயிட்டு ஒரு ஒரு மணி நேரத்துல வந்துடறேன். வந்து மத்த விஷயங்கள் எல்லாம் பேசலாம் ஓகேவா..?"

"சரிங்க சார் சரிங்க போயிட்டு வாங்க நான் சாப்பிட்டுவிட்டு வெயிட் பண்றேன் என்றான் ராஜேந்திரன்."

"ஏம்பா டீ காபியாவது குடிச்சிட்டு போறியா...?"

"அல்ரெடி லேட் ஆயிடுச்சு லஞ்ச் டைம் குள்ள அங்க போகணும் வந்து சாப்பிடுறேம்மா..." தனுஷ் அம்மாவிடம் சொல்லி விட்டு அவசர அவசரமாக கார் சாவியை கையில் எடுத்தவன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த பொருள் இருக்கிறதா என்று ஒருமுறை தொட்டுப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டான். பிறகு வேக வேகமாக போர்டிகோ வந்து காரை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

சுமார் அரை மணி நேர பயணத்திற்கு பிறகு கார்த்திக் வந்து சேர்ந்த இடம் ராகவன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த முதியோர் இல்லம்.

அப்போதுதான் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு கை கழுவுவதற்காக வெளியில் வந்த ராகவன் படியேறி உள்ளே வந்து கொண்டிருந்த கார்த்திகை பார்த்துவிட்டு அவசர அவசரமாக கைகழுவிக்கொண்டு வந்தார்.

" வாங்க சார் வணக்கம்... நல்லா இருக்கீங்களா?" என்றார்.

"நான் நல்லா இருக்கேன் ராகவன் சார் நீங்க எப்படி இருக்கீங்க? உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் நேத்து உங்கள எங்க ஏரியா பக்கம் பார்த்தேனே அங்க என்ன விஷயமா வந்தீங்க...?
என்று நேரடியாக கேட்டான் கார்த்திக்.

உன் ஏரியா பக்கமா... இல்லையே நான் அந்தப்பக்கம் வரலையே... நீங்க என்ன மாதிரி வேற யாரையாவது பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்." என்று சமாளிக்க முயன்ற ராகவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான் கார்த்திக். கார்த்திக்கின் கூர்மையான பார்வையை பார்த்தவுடன் பேச்சை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.

இவனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு இல்லேனா இந்த அளவுக்கு நேரிடையாக கேட்பானா? பொய் சொல்லி மாட்டிகிட்டு முழிப்பதை விட ஓரளவுக்கு நம்புற மாதிரி விஷயத்தை மேலோட்டமாக சொல்லி சமாளிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார் ராகவன்.

ஆமாம் சார் இப்பதான் ஞாபகத்துக்கு வருது அந்த சைடு வந்தேன் தான் நீங்க திடீர்னு கேட்டவுடனே எனக்கு நேத்து போன விஷயமே மறந்து போச்சு அதுதான் இல்லன்னு சொல்லிட்டேன் சரி வாங்க உக்காந்து பேசலாம்." என்று தன்னுடைய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்.

"இப்ப சொல்லுங்க ராகவன் சார்... அங்க எதுக்காக வந்தீங்க உங்க கூட வந்த அந்த பெண் யார்? ரொம்ப நாள் பழகின மாதிரி ரொம்ப அன்னியோன்னியமாக பேசினாங்க அதான் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க வேண்டாம் நான் உங்களை சந்தேகப்பட்டு எதையும் கேட்கல ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்லியா தான் கேட்கிறேன்..." என்று சமாளித்தான் கார்த்திக்.

"அன்னியோன்னியமாக வா அப்படி எல்லாம் ஒன்னுமில்ல கார்த்திக் சார்... அவங்க அப்பா எனக்கு ரொம்ப நாள் பழக்கம். ஆனா அவரு இப்ப இல்ல அவரை பத்தி பேசணும்னு எப்பையாவது நினைச்சேன்னா அவரோட பொண்ணுக்கு கால் பண்ணி பேசுவேன். அவ என்னுடைய பொண்ணு மாதிரிதான் என் மேல பாசமா இருப்பார் எப்பவாவது இங்க வந்தான்னா இப்படி ஹோட்டல் மாதிரி ஒரு இடத்துக்கு வந்து பேசுவோம். அந்தப் பொண்ணு அவுட் ஆஃப் சிட்டில இருக்கிறாள். எப்பவாவது சிட்டிக்குள்ள வந்தானான்னா,

" அங்கிள் ஒரு காபி சாப்பிடலாம் அப்படின்னு கால் பண்ணுவா... நானும் அவ கூப்பிடா மறுக்காமல் போயிடுவேன். அவளைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய பெரிய பொண்ணு பாக்குற மாதிரி இருக்கும் அதுக்காகவே அவ கூப்பிட்ட உடனே மறக்காம உடனே கிளம்பி போயிடுவேன். சேர்ந்து சாப்பிட்டுவிட்டு அவங்க அப்பா பத்தி பேசுவோம் மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி வேற எந்த அன்னியோன்னியமும் இல்லை." என்றார் ராகவன்.

அவர் பேச்சில் இவனுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. பாதி உண்மையும் பாதி பொய்யையும் கலந்து பேசுகிறார் என்பது அவருடைய பேச்சிலிருந்து கண்டுகொண்டான். ஆனாலும் அவருடைய வாயிலிருந்து மொத்த விஷயத்தையும் வாங்க வேண்டும் என்று எண்ணினான். சரி மனுஷன் எங்க போய்ட போறார்... கொஞ்ச விட்டுதான் பிடிப்போமே என்ற முடிவோடு அடுத்து விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்தான் அது என்னவென்றால்,

"மிஸ்டர் ராகவன் சார் உங்களுக்கு ரெண்டு நல்ல விஷயத்தை சொல்லப் போறேன்."

"நல்ல விஷயமா.. சொல்லுங்க சொல்லுங்க சார்..." என்றார் ஆர்வத்துடன்.

முதல் விஷயம் எனக்கும் அபிநயாவுக்கும் நாளைக்கு ஈவினிங் என்கேஜ்மென்ட் நடக்கப்போகுது. நாங்க நாளைக்கு மதியானம் பிளைட்ல கோயமுத்தூர் கிளம்பறோம்.

இதைக் கேட்ட மறுநிமிடம் ராகவனின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததை இவனால் பார்க்க முடிந்தது.

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சார்... உங்க எங்கேஜ்மென்ட்டுக்கு என்னுடைய மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..." என்று கார்த்திக்கின் கைப்பற்றி குலுக்கினார் ராகவன்.

"நன்றி ராகவன் சார் அதற்கடுத்தாக இரண்டாவது ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.'"

"சொல்லுங்க சார்... ரொம்ப நேரம் சஸ்பென்ஸ்சை தாங்க முடியாது சொல்லுங்க சார்...?"

"ஒரு நிமிஷம்..." என்றவன் தன்னுடைய சட்டை பாக்கெட்டில் கையை நுழைத்து பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பொருளை எடுத்து அவரிடம் நீட்டினான் கார்த்திக்.

"என்ன சார் இது...?" என்று குழப்பத்தோடு அதை கையில் வாங்கினார் ராகவன்.

"முதல்ல பிரிச்சுப் பாருங்க..."

பாலித்தீன் கவரை பிரித்து அதிலிருந்த அந்த பொருளை வெளியில் எடுத்தவரின் முகம் சட்டென்று மாறியது.

"மிஸ்டர் ராகவன் சார் இது என்ன.. இது யாருடையது என்று ஞாபகம் இருக்கா?"

"இது.. இது.. இது எப்படி உங்ககிட்ட வந்துச்சு? உங்ககிட்ட யாரு இத கொடுத்தா ப்ளீஸ் ப்ளீஸ் கார்த்திக் சார் உண்மையை சொல்லுங்க நீங்க சொல்ல போற உண்மையில் தான் என்னுடைய மீதி வாழ்க்கையும் அடங்கி இருக்கு .. ப்ளீஸ்... சொல்லுங்க சார்..." என்று கெஞ்சியவரின் கண்களில் கண்ணீர் கசிந்து நின்றது.
 
Last edited:
Top