Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 37

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 37
அபி மயங்கி விழுவதைப் பார்த்ததும் அருண் வேறு எதைப்பற்றியும் யோசியாமல் சட்டென்று மேடையிலிருந்து குதித்தோடினான் ..அவன் கையிலிருந்த மோதிரம் கீழே விழுந்து சிதறியது..

பூர்ணாவிடமிருந்து அபியை தன் கையில் ஏந்தி “அபி என்ன ஆச்சு?”என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான்..

“அருண் அபிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம்..” என்றாள் பூர்ணா…

ஒரு கணம் யோசித்தவன் ..கூர்முனை கத்தியாய் பார்க்கும் பல நூறு கண்களையும் பொருட்படுத்தாமல்.அபியை கைகளில் ஏந்தி நடக்கத்தொடங்கினான்..
அதிர்ச்சியில் உறைந்து போன ராஜாராம் கணநேரத்தில் நிகழ்வுகள் நடந்துவிட அதை தடுக்க முடியாமல்..செய்வதறியாது அத்தனை உறவுகளின் முன்பும் தலைகுனிந்து நின்றார்.

அவரது தொழிலில் ராஜாவாக வாழ்பவர் ,எப்போதும் நண்பர் வட்டதிலும் சரி ,தொழில்முறை தொடர்பினர் மத்தியிலும் நற்பெயர் கொண்டவர்.ஒருநாளும் யார் முன்னரும் கூனிகுறுகி நின்றதில்லை..இன்று தன் சொந்தமகனாலேயே கௌரவம் குன்றி அவமானத்தில் முகம் கன்றி நிற்க நேர்ந்தது..

வீட்டினுள் சென்றதும் அபியை ஒரு அறையில் படுக்க வைத்துவிட்டு
அருண் தங்களது குடும்ப டாக்டருக்கு ஃபோன் செய்தான் .

அவரும் அன்றைய விருந்தில்தான் இருந்த படியால் உடனே வந்து அபியை சோதித்துவிட்டு அவளுக்கு வெறும் பலவீனத்தினால் வந்த மயக்கம்தான் நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுத்தால் போதும் என்றுவிட்டு,போகிறபோது, “பெத்தவங்க மனசு நோகாம நடந்துக்கோ..” என்று அறிவுரை கூறிவிட்டு சென்றார்.

அருணின் பின்னோடு வந்து அதுவரை பொறுமையாக இருந்த ராஜாராம் டாக்டர் போனதும்
“அருண் ,வீ நீட் டூ டாக்.”என்றார் கடுமையாக

அருணும் அதே கடுமையுடன்”கண்டிப்பா பேசனும் அதுக்கு முன்னாடி அபிக்கு கண்முழிக்கட்டும்..”என்றான் .

“அதான் ஒன்னுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாருல.. உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ் பார்த்துப்பாங்க, நீ வா,அங்க எல்லார் முன்னாடியும் என்னை தலைகுனியவச்சிட்ட அட்லீஸ்ட் கொஞ்சமாவது போன மானத்த காப்பாத்த முடியுதா பார்க்குறேன் ..நீ சும்மா வந்து நில்லு போதும் ..”என்று அழைத்தார்.

“முடியாது பா.. உங்க கெஸ்ட்கிட்ட சொல்லுங்க பார்ட்டி முடிஞ்சிடுச்சி வீட்டுக்கு கிளம்பி போங்கன்னு..”

“என்னடா இப்படி பேசுற?”

“நீங்க பண்ண காரியத்துக்கு வேற எப்படி பேசுறது?”
என்றான் குரலை உயர்த்தி..

அவனுடைய அம்மா எதோ பேசமுயல",விடு சித்ரா
“இப்ப அவன்கிட்ட பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை,வா அங்க போய் இருக்கறகொஞ்சம் நஞ்சம் மான மரியாதையையாவது காப்பத்துவோம் ..”என்று மீண்டும் விருந்தினர்களை பார்க்க சென்றனர்.

அருண் அபியின் கையைப் பற்றிக்கொண்டு அவள் கண்விழிப்பதற்காக காத்திருந்தான் .வெளியே பார்ட்டி அரைகுரையாக முடிக்கப்பட்டு பல கார்கள் கிளம்பிச் செல்லும் அரவம் கேட்டது..

அபி சிறிது நேரத்தில் கண்விழித்தாள்.அருகில் அருண் இருப்பதைப் பார்த்து விழிநீர் தானாக வழிந்தது.

அருண் அந்த கண்ணீரைத்துடைத்துவிட்டு,”அழக்கூடாது..ஒன்னும் நடக்கலை..மொதல்ல நீ சாப்பிடு..” என்று சிறிய கின்னத்தில் சாதம் கொண்டு வந்து தானே ஊட்டிவிட்டான் .

பேசமுயன்ற அபியை அவன் உறுத்துவிழித்து அடக்கினான்.

அவள் உண்டு முடித்ததும், அருகில் அமர்ந்து அவளையே ஆழ்ந்து பார்த்தான் ..அபி அந்த பார்வையை தாங்க முடியாமல் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

அருண் சட்டென்று எலுப்பு நொறுங்கிவிடும் போல அவளை இறுக அணைத்தான் ..அவள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தன் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற உணர்வே அவனுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.அபிக்கும் அந்த அணைப்பு மிகத்தேவையாக இருந்தது..அருணின் கையணைப்பைவிட அவளுக்கு நிம்மதி அளிக்கக்கூடியது எதுவும் இல்லை.

“சாரி”என்றான் ஆழ்ந்த குரலில்

அபி ஏன் என்று புருவம் சுருக்கினாள்..

“சாரி ..என்னால நீ இவ்வளவு கஷ்டப் படுறமாதிரி ஆகிடுச்சி..”

அபிக்கு தொண்டையை அடைத்து கண்ணீர் முட்டியது.

அவன் குடும்பத்திற்கு அத்தனை பேர் முன்னிலையில் தலைகுனிவு,பெற்றோருடன் கருத்து மோதல் ,இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறானே ..இத்தனைஅன்பிற்கு நான் தகுதியானவளா?இந்த சிக்கலின் மூல காரணமே நான் அருணிடம் உண்மையை கூறாமல் மறைத்தது தான் என்பது தெரியும் போது அருண் என்ன நினைப்பான்..?என்னை மன்னிப்பானா?இல்லை இந்த பிரியம் அனைத்தும் வெறுப்பாக மாறிவிடுமா? அவள் இதயம் வெடித்துவிடும் போல வலித்தது..

“அருண்..” என்று தளுதளுத்த குரலில் அபி பேசத்தொடங்க ,அவள் வாயில் கை வைத்து தடுத்தான் ..

“நீ எதுவும் பேச வேணாம் ..தூங்கு.. எல்லாம் நான் பார்த்துக்கறேன்..” என்று அவளை கண்ணை மூடித்தூங்குமாறு கூறிவிட்டு ,பூர்ணாவையும் அழைத்து அவளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ,ஒரு பெருமூச்சுடன் தன் பெற்றோரை எதிர்கொள்ளக் கிளம்பினான் .

அருணின் பெற்றோருடன் ரம்யாவின் பெற்றோரும் அருணின் வரவுக்காக இறுகிய முகத்துடன் காத்திருந்தனர்.ஆனால் ரம்யா கண்ணில் தென்படவில்லை..

“என்னடா நர்சிங் வேலைஎல்லாம் முடிஞ்சதா இல்லை இன்னும் பாக்கி இருக்கா?”என்று ஏளனமும் கோபமுமாக வினவினார் அப்பா.

அருண் மௌனமாக இருந்தான்

“ஏன் டா நாங்க ஒன்னு நினைச்சா நீ ஒன்னு பண்ற?”என்று அம்மா கோபமாக கேட்க

“நீங்க என்ன நினைச்சீங்கன்னு எனக்கு என்ன தெரியும்?”என்றான் அருண் எரிச்சலாக

“உன்னால இன்னிக்கு அப்பாவுக்கு எவ்வளவு அவமானம் தெரியுமா? சொந்தக்காரங்க ,பிசினஸ் பார்ட்னர்ஸ், பெரிய வி ஐ பி ஸ் எல்லார் முன்னாடியும் தலைகுனிய வச்சிட்ட..இதுக்காக எப்பவுமே உன்னை நான் மன்னிக்க மாட்டேன் ..” என்றார் கோபதில் கொதித்தபடி

“அம்மா இதுல என் மேல என்ன தப்பு இருக்கு ?பர்த்டே பார்ட்டின்னு சொல்லிட்டு அதை திடீர்ன்னு எங்கேஜ்மென்ட் பார்ட்டியா மாத்தினா என்ன அர்த்தம்?நான் என்ன நாய்குட்டியா நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்ட..?எனக்குன்னு ஃபீலிங்க்ஸ் இருக்காதா?”என்றான் அவனும் அதே கோபத்துடன்

“என்னடா மண்ணாங்கட்டி ஃபீலிங்கு..போன முறை வந்தப்ப..நீங்க பார்க்கற பொண்ணை கண்ணை மூடி கட்டிக்கறேன்னு சொன்னியா இல்லையா?”
“ஆமாம் சொன்னேன் ..அதுக்காக என் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம ,இப்படியா ஊரைக்கூட்டி மேடைல நிக்க வச்சி கைல ரிங்க் போடுன்னு சொல்லுவீங்க?
“சரி டா நாங்க பண்ணது தப்பாவே இருக்கட்டும் ,ஒரு மரியாதைக்காவது நீ மேடையில நின்னிருக்கலாமே ?ஆனா நீ எங்க மூஞ்சில அடிச்ச மாதிரி ஓடிவந்துட்ட ..நாங்க அத்தனை பேர் முன்னாடி கூனி குறுகி நிப்போம்ன்னு உனக்கு கொஞ்சம் கூட தோனலையா?”
என்றார் அப்பா ஆதங்கத்துடன்.

“அப்பா ,அப்போ அபிமயங்கி விழுந்துட்டா நான் எப்படி மேடையில நிக்கறது?அவளுக்கு உதவி செய்ய போனது கூட தப்பா?”

“அதை தப்புன்னு சொல்லலை… என்னமோ நீ பெரிய ரட்சகன் மாதிரி கையில தூக்கிட்டு போகனுமா? ஏன் அந்த அபிய உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ் பார்த்துக்க மாட்டாங்களா? “

“அப்படிலாம் யாரோ மாதிரி அவளை மத்தவங்க கிட்ட விட முடியாது “
என்றான் அருண் உறுதியான குரலில்

“ஏன் விட முடியாது?

“ஏன்னா அவளை நான் விரும்பறேன் ..என்னோட வாழ்க்கைய நான் அவ கூட வாழத்தான் ஆசைப்படுறேன்..”
என்று போட்டு உடைத்தான்..

அதை கேட்ட ரம்யாவின் பெற்றோர் இனி அங்கு நின்று பயனில்லை என்பது போல் எழுந்து சோர்ந்த நடையுடன் வெளியேறினர்.

“இப்ப உனக்கு நிம்மதியா?” என்று ராஜா ராம் அருணை குற்றம் சாட்ட..

“நீங்க தப்பு பண்ணிட்டு,இப்ப எதுக்கு என்னை குற்றவாளி ஆக்குறீங்க..?இந்த மாதிரி நிலைமையில சொல்லனும்ன்னு நான் நினைக்கலை ..ஆனா என்னை இந்த அளவுக்கு பேச வச்சதும் நீங்க தான் ..”

“உன்னை பெத்து வளர்த்து ஆளாக்கினதுக்கு நல்ல மரியாதை செஞ்சிட்ட டா.. மனசு குளிந்து போச்சு ..”
என்றார் வெறுப்புடன்

“அப்பா நீங்க ஒரு பிசினஸ்மேன்,சும்மா விளையாட்டுக்கு சொல்றதுக்கும் உண்மையா சொல்றதுக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு?நான் ஏதோ விளையாட்டா சொன்னதை வச்சிகிட்டு இவ்வளவு ஏற்பாட்டை பண்ணிட்டு ,இப்ப என்னையே குற்றவாளியாக்குறீங்க..

நீங்க நினைச்சிருந்தா என் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் ,ஆனா சொல்லை ,ஏன்னா நான் மறுத்துடுவேன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும் .அதான் நான் தப்பிக்க வழியில்லாதபடி என்னை லாக் பண்ணப் பார்த்தீங்க ,
அது நடக்கலைன்னதும் என் மேல தான் தப்புங்கற மாதிரி டிராமா போடுறீங்க..”

“டிராமா போடுறமா?டேய் பெத்தவங்கள பார்த்து பேசுற பேச்சா இது ?பாருங்க எப்படி பேசுறான்னு இவன் நம்ம அருணே இல்லைங்க..ஆறு மாசத்துக்கு முன்னாடி இவன் இப்படி இல்லை..இப்போ உங்களையே எதிர்த்து பேசுற அளவுக்கு மாறி இருக்கான்னா?அவ எப்பேர்ப்பட்ட பொண்ணா இருப்பா?அவ வீட்டுக்கு வந்தா இந்த வீடு விளங்குமா?”
என்றார் அம்மா ஆத்திரமாக

“அம்மா என்னை பத்தி என்ன வேணா பேசுங்க.. ஆனா அபிய பத்தி தப்பா பேசாதீங்க, அவ ரொம்ப நல்ல பொண்ணு..”

“பாருங்க அவ இவன எப்படி மாத்திவச்சிருக்கான்னு..”

“போதும்மா பிளீஸ்.”
என்றான் அலுத்த குரலில்

“விடு சித்ரா..அவனுக்கு நீ பேசுற எதுவும் இப்ப ஏற போறதில்லை..”என்றவர் அருணிடம் திரும்பி

சரி டா நாங்க தான் தப்பு பண்னிடோம் ..ரம்யா என்ன பண்ணா?உன்கூடவே சின்ன வயசுல இருந்து சுத்தி திரிஞ்சாளே அவமேல கூட உனக்கு அனுதாபம் இல்லையா?அவளுக்கு என்னடா குறைச்சல்?அழகு,,அறிவு அந்தஸ்து எல்லாத்துலையும் உனக்கு ஏத்த பொண்ணுடா..”

“இருக்கலாம், ஆனா நான் அபியைதான் விரும்பறேன்..என்னோட லவ்வ சொல்லி உங்க கிட்ட சம்மதம் வாங்கலாம்ன்னு வந்தேன் ..ஆனா அதை இப்படி ஒரு நிலையில சொல்றமாதிரி ஆகிடுச்சி..நான் அவளைத்தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன் நீங்க சம்மதிச்சாலும் சரி ,இல்லாட்டியும் சரி ”
என்றான் தீர்மானமாக..

“அப்போ இந்த பொண்ணுக்கு யாருடா பதில் சொல்றது?”

“அப்பா ரம்யா கிட்ட நான் பேசுறேன் ..”
என்றுவிட்டு அவளைத்தேடி சென்றான் ..

ரம்யா ..அவளது வீட்டுத்தோட்த்டதில் சோகமே உருவாய் நின்றிருந்தாள்.கண்களில் மை அழுது கரைந்து தேய்ந்திருந்தது..

அருணின் வரவை அறிந்ததும் அவள் உள்ளம் உலைக்கலமாக மாறியது..

“அருண்..போ ..கொஞ்ச நேரம் என்னைத்தனியாவிடு “என்று விரட்டினாள்.

“ரம்மி நீயாவது புரிஞ்சிக்கோ ..இதுல என்னோட தப்பு என்ன இருக்கு ?”

தப்பு தான்.. என்னோட ஃப்ரெண்டுன்னு உன்மேல நம்பிக்கை வச்சேனே அது என்னோட தப்பு தான் ..”என்றாள் கைப்புடன்

“ரம்மி நீயும் அப்பா அம்மா மாதிரியே பேசாத,என்னோட நிலைமையில இருந்து யோசிச்சி பாரு ,இப்படி திடீர்ன்னு எங்கேஜ்மென்ட் ,மேரேஜ்ன்னா எனக்கு எப்படி இருக்கும்?”

சரி இப்படி திடீர்ன்னு வேணாம் ,கொஞ்சம் பொறுமையா யோசிச்சி சொல்லு ,உனக்கு எப்ப விருப்பமோ அப்ப நிச்சயம் பண்ணிக்கலாம்
“என்றாள் ரம்யா.

“இல்ல ரம்யா ,எப்பவுமே நான் உன்னை கல்யானம் பண்ணமுடியாது ..சாரி “ என்றான்
“ஏன் நான் உன்னைக் கட்டிக்க தகுதி இல்லைன்னு நினைக்கறியா?”

“அப்படிலாம் இல்லை ரம்மி ,உன்னை கட்டிக்கற தகுதி எனக்கு தான் இல்லை ..நான் அபிய லவ் பண்றேன்..அவ தான் என் உயிர் “


அதைக்கேட்டதும் ரம்யாவின் மனம் இன்னும் அதிகமாக கொதித்தது.இருப்பினும் சமாளித்துக்கொண்டு,

“அப்போ உன் பெத்தவங்களோட விருப்பத்துக்கு ஒரு மதிப்பும் இல்லையா?”என்று கேட்டாள்...

“அப்பாவுக்கு என்னை எப்படியாவது இங்க கட்டி வைக்கனும் அவரோட தொழிலை பார்த்துக்க, அதுக்கு தான் என்னை கேட்காம இந்த ஏற்பாடு பண்ணி இருக்கார்..மத்தபடி இந்த கல்யாணம் அதுக்கான ஒரு வாய்ப்பு அவ்வளவு தான் ”

“அதுல என்ன தப்பு இருக்கு?அவங்க உன் மேல வச்சிருக்கற பாசத்துனால இப்படி செய்யுறாங்க..”

“அவங்க இஷ்டத்துக்கு அவங்க விருப்பத்தை என் மேல திணிக்க நினைக்கறது பாசம் இல்லை ,அதிகாரம் ,சுயநலம்..”

“ஓ ..உனக்கு நல்லது நின்னைக்கற அவங்க கெட்டவங்க ..ஆனா எல்லா உண்மையும் தெரிஞ்சி உங்கிட்ட மறைச்சி நாடகம் ஆடினவங்க நல்லவங்க .அப்படித்தானே..?”
என்றாள் எகத்தாளமாக

“நீ யார சொல்ற ரம்யா..”என்றான் புருவமத்தியில் முடிச்சுடன்

“ம்ம்..நீ யார லவ் பண்றேன்.என் உயிர்ன்னு பெருமையா சொன்னியோ அதே அபி தான் “என்றால் ஏளனமும் வெறுப்புமாக

“அபியா?அவ என்ன பண்ணா?”

“நேத்தே அவ கிட்ட நான் இந்த நிச்சயதார்த்த விஷயத்தைப்பத்தி சொல்லிட்டேன் .ஒரு ஃப்ரெண்டுன்னு நம்பிதான் சொன்னேன் ,ஆனா அவ இப்படி முதுகுல குத்துவான்னு நினைக்கலை..அவ உண்மையிலையே நல்ல ஃப்ரெண்டா இருந்திருந்தா என்கிட்ட உங்க லவ் மேட்டரை சொல்லி இருக்கணும் ,இல்லை உன்கிட்டயாவது சொல்லி இருக்கனும்..எங்க அப்பா அம்மா வேதனை பட்டாமலாவது தடுத்திருக்கலாம் ..ஆனா இப்போ பாரு இவ்வளவு பெரிய அவமானம் மனகசப்புனம் ரெண்டு குடும்பத்துக்குமே நடந்திருக்காது..
இது எல்லாம் அவ உண்மைய சொல்லாம மறைச்சதால..
எங்களுக்கு தான் எதுவும் தெரியாது ஏதோ சர்ப்ரைஸ் பண்றோம்ன்னு நினைச்சிகிட்டு உங்கிட்ட சொல்லைல..ஆனா அபி சொல்லி இருக்கலாமே தெரியாம பண்ண நாங்க கெட்டவங்க ..ஆனா தெரிஞ்சே உண்மையை மறைச்ச அபி நல்லவ அப்படித்தானே நல்லா இருக்கு உன்னோட நியாயம் அருண்..”
என்று முழு தப்பும் அபியினுடையது தான் என்று திருப்பிவிட்டாள்.

அருணின் முகத்தில் திரைவிழுந்தது..

“அபியா? என்று அதிர்ச்சியடையும் போதே ,முதல் நாள் அவள் அழுதது,சோர்ந்திருந்தது..ஏதோ சொல்ல முடியாமல் தவித்தது என்று அடுக்கடுக்கான நினைவுகள் தோன்றி ரம்யா கூறும் குற்றச்சாட்டிற்கு சாட்சியமளித்தது..

அவன் குழம்பி நிற்பதைப் பார்த்த ரம்யா இதையே தனக்கு ஒரு வாய்ப்பாக பயன் படுத்தி அருணின் மனதை மாற்றலாம் ,அப்படி இல்லாவிட்டாலும் அபியை அருணிடம் இருந்து பிரித்த திருப்தியாவது மிஞ்சும் என்று நினைத்து மேலும் குற்றச்சாட்டை அடுக்கத் தொடங்கினாள்.

என்ன யோசிக்கற நான் சொன்றது அத்தனையும் உண்மை..உன் முகத்தை பார்த்தா உனக்கும் புத்தி தெளிவு வந்த மாதிரி தான் தெரியுது
இப்பவாவது புரிஞ்சிக்கோ உன்னோட அபியோட லட்சணத்தை..?இவளுக்காகவா உன்மேல உயிரையே வச்சிருக்கற எங்களை தூக்கிப்போடுற?

நீ எனக்கு கிடைக்கலைன்னு பொறாமையில சொல்றேன்னு நினைக்காத அருண் அவ உனக்கு பொருத்தமானவ கெடையாது…நான் என் மனசுல இருக்கற ஃபீலிங்க்ஸ சொல்லும் போது கேட்டுகிட்டு சும்மாதானே இருந்தா?அப்பவே சொல்லி இருக்க வேண்டியது தானே..அவ என்னை பார்த்து உள்ளுக்குள்ள சிரிச்சிருப்பான்னு நினைக்கும் போது எனக்கு உடம்பெல்லாம் கூசுது..

என்னை விடு, உங்க குடும்பம் எவ்ளோ அன்பானது அதை இப்படி சிதைச்சிட்டளே நான் கூட அவளை நல்லவன்னு நினைச்சேன் ஆனா இப்படி அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி அதுல சந்தோஷப் படுற கேவலமானவளா இருப்பன்னு எதிர்பார்க்கலை..என்ன மாதிரி ஜென்மம் அவ.. .”
என்று அடுக்கிக்கொண்டே போனவளை கைஉயர்த்தி நிறுத்தினான் .

“போதும்..இன்னும் ஒரு வார்த்தை அபியை பத்தி பேசக் கூடாது..தெரிஞ்சோ தெரியாமலோ என்னால நீ பாதிக்க பட்டிருக்கியேன்னு உன்னை சமாதானப் படுத்த வந்தேன் ,அதனால நீ கோபமா பேசுறதையும் பொறுத்துக்கிட்டேன்..ஆனா நான் பேசாம இருக்கேன்னு நீ என்ன வேணா சொல்லுவியா..எனக்கு தெரியும் என் அபியை பத்தி.நீ சர்டிஃபிகேட் தர வேணாம்..”

என்ன சொன்ன ..?உன்னைப் பார்த்து உள்ளுக்குள்ள சிரிச்சிருப்பாளா?உன்மனசை உடைச்சிட்ட கூடாதேன்னு ஒவ்வொரு நிமிஷமும் உனக்காக அவ தவிச்சிருப்பா....ஒருநாளும் அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி பார்க்கனும்ன்னு நினைக்க மாட்டா..”..”

என்றான் அருண் கடுமையாக..

“ஓ அப்படியா?சரி எங்கிட்ட மறைச்சதுக்கு ஒரு காரணம் சொல்லிட்ட ,அப்படியே உங்கிட்ட சொல்லாதுக்கும் ஒரு காரணம் வச்சிருப்பியே அதையும் சொல்லிடு…”என்றாள் ரம்யா வெருப்புடன்.

“வேற என்ன பைத்தியக்காரத்தனம் தான்,,நான் என் அம்மா அப்பா கூட சண்டை போட்டு எங்க குடும்பத்துல மன்ஸ்தாபம் வர கூடாதுன்னு சொல்லத்தயங்கி இருக்கா .எனக்கு நல்லதுன்னு சொன்னா எனக்காக அவ லவ்வ கூட தியாகம் செஞ்சிடுவா?ஊர் முழுக்கத் தேடினாலும் இப்படி ஒரு பொண்ணை எங்கப்பாவால கண்டுபுடிக்க முடியாது..அன்பு மட்டுமே காட்டத் தெரிஞ்ச தேவதை அவ..”என்று அவன் சிலாகித்து கூறிக் கொண்டிருக்கும் போதே.. அவனது ஃபோன் ஒலித்தது,

மறுமுனையில் விக்கியின் அவசர குரல்கேட்டது
“டேய் அருண் அபியை காணோம் டா.எங்க தேடியும் கிடைக்கலை அவ பாக்கை கூட காணோம்ன்னு பூர்ணா சொல்றா டா...”
அருண் ஒருகணம் தலைசுற்றிப் போய் சிலையாகி நின்றுவிட்டான்..
தொடரும்
அடுத்த பகுதியில் முற்றும்​








 
சூப்பர்..சூப்பர்...அருண் அபியை சந்தேகப் படமாட்டான்னு எதிர்பாத்தேன்...ரமிக்கு நல்ல நோஸ்கட்....இப்ப அபி எங்க போனா....
 
அருமையான பதிவு
அபி மீது வைத்திருக்கும் நம்பிக்கை
உண்மை காதல சொல்லுது
 
Top