Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன்வசந்தன்அத்தியாயம் 5

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன்வசந்தன்
அத்தியாயம் 5
விக்கி, பூர்ணா அபி மூவரும் கேன்டீனில் அமர்ந்து மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுக்கொண்டே கதைஅடித்துக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கே வந்த நித்யா.. “ஹாய் கைஸ் ..” என்று உற்சாகமாக அழைத்துஅவர்களுடன் சேர்ந்து கொண்டாள். “ என்ன நித்தி ரொம்பசந்தோஷமா இருக்க போல ..” என்று தனது வழக்கமானகேலியுடன் கேட்டான் விக்கி.
“ ஆமாம் என்னோட செல்லம் வந்துட்டான்ல அதான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் .”என்று முகம் முழுவதுவும்பூரிப்புடன் நித்யா சொல்ல , விக்கி மனதிற்குள் “செல்லமா ..? டேய் அருண் ..உனக்கு மட்டும் எப்படிடா எல்லாமேசெட் ஆகுது ..?ம்ம்ம் பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான்..” என்று பொறாமையில் புகைந்தான் .
பிறகு , நித்யா அபியின் பக்கமாக திரும்பி , “அபி நான் உன்னை பார்க்க தான் வந்தேன்..”என்றாள்.
“ என்னை பார்க்கவா..?என்ன விஷயம் ..?” என்ற அபியின் புருவங்கள் யோசனையில் நெரிந்தது .
இவ என் கிட்ட என்ன கேக்க போறா ?” எப்பவும் பார்த்தும் பார்க்காத மாதிரி போகிறவள் , இப்போ வலிய வந்துபேசுவது ஆச்சரியமாக இருந்தது .
“அபி நாம ரெண்டு பேரும் இடத்தை மாத்திக்கலாமா ?” என்று வினயமாக கேட்டாள்.
“ எதுக்கு ?” என்று அபி மேலும் குழம்பினாள் . “இப்ப எதுக்கு திடீர்ன்னு இவ வந்து இடத்தை மாத்த கேக்குறா ?”
ஒரு கணம் தயங்கினாலும் மறுகணமே உறுதியுடன் நிமிர்ந்து .. “உன்னோட எடத்துல இருந்து அருணை நல்லாபார்க்க முடியுது அதான் ..” என்று லேசான முகசிவப்புடன் கூறவும் , அபிக்கு உள்ளுக்குள் கொதித்தது . “ இவளுக்குஎன்னை பார்த்தா எப்படி தெரியுது ? இவ யாரையோ சைட் அடிக்க நான் என் இடத்தை விட்டுத்தரணுமா ? இப்படிகூட ஒருத்தி வெட்கமில்லாமல் இருப்பாளா ?” என்று அவளை வெறுப்புடன் நோக்கினாள்.
நித்யாவிற்கு அபியின் எண்ணஓட்டம் புரிந்தது , அவளை மிக மட்டமாக நினைப்பதும் தெரிந்தது ,இதற்கெல்லாம்வருந்தினால் அப்புறம் அவள் நினைத்த காரியம் நடப்பதேது..

அதனால் அபியிடம் நயமாக பேசி சம்மதிக்க வைக்க செய்ய தீர்மானித்தாள்.
“அபி, தப்பா எடுத்துக்காத , அருணை எனக்கு ரொம்ப புடிக்கும் .காலேஜ் டேஸ்ல இருந்தே அவன் மேல அப்படிபைத்தியமா இருந்தேன் . ஆனா அவன் தான் கண்டுக்கவே இல்லை .சரி நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான்னு மனசைதேத்திகலாம்னு நினைக்கும் போது , இப்போ ஒரே ஆபீஸ்ல வேலை செய்யற மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு,இது கடவுளா கொடுத்த வாய்ப்பா நெனைச்சி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்னு நெனைக்கிறேன் .உன்னோடஇடத்துல இருந்தா அடிக்கடி அவனை பார்க்கற மாதிரி இருக்கும் .அப்போ அவனுக்குள்ளையும் ஒரு பீலிங்ஸ் வரலாம்இல்லையா ?அதனால தான் கேக்குறேன் ப்ளீஸ் அபி ..” என்று
..கெஞ்சலாக கேட்டாள் .

“என்ன உளறல் இது ? எதிர் எதிராக உட்கார்ந்தால் உடனே லவ் வந்துவிடுமா ? என்று ஏளனமாக நினைத்தாள். அபி..
“ நீ நெனைக்கறது எனக்கு தெரியுது ...என்ன இவ இப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம கேக்கறாளேனுநினைக்காத ..என்னால அருண மறக்க முடியல ..அதான் இப்படி பைத்தியகாரதனமா நடந்துக்கறேன்…ஐ அம்மேட்லி இன் லவ் வித் ஹிம் ..”என்று அவளது மனது முழுவதையும் கொட்டினாள்.
அபி தனக்குள் யோசித்துப்பார்த்தாள்.. “இவள் கேட்பது அவளுக்கும் பயனளிக்க கூடியதாகவே இருந்தது .எப்படியும்அவளும் இடம் மாறவேண்டும் என்று தானே ஆசை பட்டாள். இப்போது அவளது முயற்சி எதுவும் தேவை இல்லாமல்தானாகவே அவளது கைக்கு ஒரு வாய்ப்பு வருகிறது .இதை பயன்படுத்தி கொண்டால் என்ன ?”
நித்தியாவின் நம்பிக்கை நிறைந்த விழிகளை பார்த்து “.சரி.” என்றுகூறிவிட எண்ணியவளின் மனத்திரையில் நித்யா , அபியின் இடத்தில் அமர்ந்து கொண்டு அருணை மையலாக பார்ப்பது போன்ற ஒரு தோற்றம் பளிச்சிட்டது .
ஏனோ அந்த கற்பனை காட்சியையே அவளால் சகிக்க முடியவில்லை ..பிறகு இதை நிஜத்தில்எப்படி பார்ப்பது? முகம்இறுக, “சாரி முடியாது” என்று உறுதியாக அறிவித்தாள்.

நித்தியாவின் முகம் காற்று போன பலூனாக சுருங்கியது .., அபி இப்படி ஒரேடியாக மறுக்கக்கூடும் என்று அவள் சற்றும்எதிர் பார்க்கவில்லை .

“ஏன் அபி ? ஏன் முடியாது ? ஒரு சின்ன இடமாற்றம் , இதுக்கு போய் இப்படி பிகு பண்ற?” என்றாள் எரிச்சல் மண்டியகுரலில் .. அவளது குரலில் அபிக்கு கோபம் வந்த போதும் , அதை அடக்கி கொண்டு “இங்க பாரு நித்தி, உனக்குவிளக்கம் தரணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை , இருந்தாலும் சொல்றேன் ..
அது எனக்கு லக்கி ஆனா இடம் அதை யாருக்கும் விட்டு கொடுக்க மனசு வரலை, அங்க உக்காந்து ப்ராஜெக்ட்பண்ணும் போது தான் எனக்கு நெறைய புது ஐடியாஸ் வருது அது மாட்டும் இல்லாம வெளிய போறதுக்கு வர்றதுக்கு அந்த இடம் தான் வசதியாக இருக்கு
“ என்று உப்பு பொறாத காரணங்களை தேடி அடுக்கினாள்.

"முடிவா என்ன சொல்ற…அப்போ நீ இடத்தை மாத்திக்க மாட்டியா அபி ...?"என்று எங்கோ ஒட்டிக்கொண்டிருந்தசிறு நம்பிக்கையுடன் கெஞ்சுதலாக கேட்டாள்.அபி சற்றும் இலகாமல்..

"நான் ஏற்கனவே என்னோட முடிவை சொல்லிட்டேன் நித்யா , இதுல வேற பேச்சுக்கே இடமில்லை…” என்றுஇம்மியும் அசராமல் ஒரேடியாக மறுத்துவிட்டாள் .நித்யா மனதிற்குள் குமைந்து கொண்டே ஏமாற்றத்துடன் எழுந்து சென்றுவிட்டாள் ..

இந்த நாடகம் முழுவதையுமே பார்வையாளராக அதுவரை பார்த்துக்கொண்டிருந்த பூர்ணா .. அபியிடம் “ஏண்டி இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டே..?பாவம் அவ .."என்று நித்திக்காக பரிந்தாள்.
"பின்ன அவ என்ன கேக்குறா பாரு..?இவ சைட் அடிக்க நான் வழி விடணுமாம் ..இது ஆஃபீஸா இல்லை லவ்வர்ஸ்பார்க்கா ..?” கோபமாக பொங்கினாள் அபி .

"ஓகே.. ஓகே.. கூல் டௌன் .." என்று விக்கி அவளை சமாதான படுத்தினான் .

"பாவம் அவ .. லவ்வுக்கு தானே ஹெல்ப் கேட்டா.. போனா போகுதுன்னு பண்ணி இருக்கலாம் அபி நீ” என்றுபூர்ணாமீண்டும் நித்யாவுக்கு ஆதரவாக பேசவும் .. அபி இன்னும் கொதி நிலையை அடைந்தாள் ...
"எனக்கு லவ்னாலே பிடிக்காது ... போதுமா ..?"என்று எரிச்சலாக மொழிந்துவிட்டு கோபமாக வெளியேறினாள்.
“இப்ப எதுக்கு அபி “ காதல் தண்டபாணி” மாதிரி பேசிட்டு போறாங்க ?” என்று அதிசயித்தான் விக்கி .
“விக்கி.. நீ சொன்னப்ப கூட நான் நம்பலை டா ,ஆனா இப்ப கன்பார்ம் டா..
அவ இடத்தை மாத்தாதது கூட ஒரு விஷயம் இல்லை…ஆனா அதுக்கு அவ சப்பையா சொன்ன ரீசன் இருக்குபாரு …அப்ப தான் விக்கி நான் கன்பார்ம் பண்ணினேன் …
கண்டிப்பா சம்திங்.. சம்திங்…”
என்று எல்லாம் தெரிந்தவள் போல சிரித்துக்கொண்டாள் …

“ஆமா இப்ப வந்தவங்களுக்குலாம் சம்திங்..சம்திங் …
ஆனா ஒரு வருஷமா கஷ்டபடுற எனக்கு நத்திங் …”
என்று விக்கி எரிச்சலாக உதட்டை பிதுக்கினான் .
“நேத்து வந்தவன் கதைலாம் ரேஸ் பைக் ஸ்பீட்ல போகுது ஆனா என்னோட ஸ்டோரி மட்டும் கட்டைவண்டி ஸ்பீட்லபோகுது ……காலகொடுமை டா சாமி …” என்று விக்கி மேலும் கூறிவிட்டு பெருமூச்சு விட …
“அதுக்கு நீ இன்னும் வளரனும் தம்பி …”என்றாள் பூர்ணாஅவனை சீண்டும் புன்னகையுடன்….

……………………​

அருண் இன்போடெக்இல் வேலை சேர்ந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது ,அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை..காலையில் பத்து மணிக்கு மேல் தாமதமாக கண் விழித்தவன் ,சோம்பலாக கிட்சனுகுள் சென்று ஒரு காபிகப்புடன்திரும்பினான் ,சூடான காபியின் மனம் நாசியை தொட்டதும் அவனது சோம்பிய செல்கள் எல்லாம் உயிர்தெழுந்தன ,
காபியை ஒரு கையில் ரசித்தவாறு மறுகையினால் கதவை திறந்து தினசரி பேப்பர் எடுப்பதற்காக வெளியே வந்தான்,எதிர் பிளாட்டில் சத்தமான பேச்சு குரல்கள் கேட்டது ,ஏதோ வாக்கு வாதம் போல் இருந்தது ,அவனறிந்த வரையில்எதிர் பிளாட்டில் அவ்வப்போது கேட்கும் இனிமையான பாடல் இசையை தவிர ,மற்ற நேரத்தில் கிட்ட தட்டநிசப்தமாகவே இருக்கும்.. அதனால் வழக்கத்திற்கு வினோதமான இந்த அதிகபடி சத்தம் அவனை தயங்க வைத்தது,அதுவும் உரத்து ஒலித்தது அபியின் குரல் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை ,அவள் யாரிடம் இப்படிகத்தி கொண்டிருக்கிறாள் ,ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ ?என்னவாக இருந்தால் எனக்கென்ன என்று தோளைஅலட்சியமாக குலுக்கிவிட்டு கதவை சாத்தபோனவன் ,என்ன தோன்றியதோ எதற்கும் இருக்கட்டும் என்று கதவைலேசாக திறந்து வைத்துவிட்டு அருகிலேயே ஒரு சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டே ஒரு காதைதீட்டிவைத்து காத்திருந்தான் ,அதாவது நாசூக்காக ஒட்டு கேட்டான் எனலாம்..

ஏதோ தெளிவில்லாமல் இரைச்சலாக கேட்ட குரல்கள் இப்போது அருகில்பேசுவது போல் தெளிவாககேட்டது..பேசிக்கொண்டே கதவின் அருகில் வந்திருப்பார்கள் போலும் ,அருண் ஓரக்கண்ணால் நோக்கும் போது,அபியும் அவளுடன் ஐம்பது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவரும் எதிர் பிளாட்டின் வாயிலில் நிற்பது தெரிந்தது,அந்த ஆள் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் பார்ப்பதற்கு ஊர்ப்பக்கம் ஏதோ பெரிய மனிதர் போல கவுரவமானதோற்றத்துடன் இருந்தார் ,இவரிடம் அபி ஏன் கத்தினாள் ?என்று அவன் யோசிக்கும் போது , அந்த மனிதர் பேசுவதுஅவன் காதுகளில் விழுந்தது…

"அபிமா ப்ளீஸ்…வாமா ,அப்பாவுக்காக "என்று அவர் கெஞ்சிக்கொண்டிருந்தார் ..

"அப்பா…எத்தனைமுறை சொல்றது ?நான் வரமாட்டேன் ,என்னை பார்க்க யாரும் வராதீங்க போன் கூடபன்னாதீங்கன்ன ,ஏன் கேக்க மாட்டேங்குறீங்க? என்னை கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா?”என்று ஆத்திரத்தை அடக்கி அடிக்குரலில் நெருப்பாய் சீறினாள்..

“அப்பாவா.. ?” அருணுக்கு அதிர்ச்சியாக இருந்தது… “சொந்த அப்பாகிட்டயும் இதே மாதிரி தான் பேசுமா இந்தஆங்கிரி பார்ட்டு ,பாரபட்சம் பார்க்காம திட்டுறா…”என்று ஏளனமாக எண்ணியவனுக்கு ஏனோ அபி இப்படிஇரக்கமில்லாமல் நடந்து கொள்வது ஏமாற்றத்தை அளித்தது…
“அபிம்மா ப்ளீஸ்…”என்று அவர் மீண்டும் பாவமாக அவள் முகம் பார்க்கவும்…."அப்பா நீங்க கிளம்புங்க..”என்று கல்மனதுடன் அசையாமல் நிற்பதை பார்த்தான்.
அந்த மனிதர் ,மனம் சோர்ந்து தொய்ந்த நடையுடன் தலையை தொங்க போட்டு கொண்டு செல்வதை பார்த்தவனுக்குஅதற்கு மேல் அந்த கட்சியை பார்க்க முடியாமல் ஓசையில்லாமல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தான்
“பெத்த அப்பா கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாதா? என்ன பொண்ணு இவ? ச்ச.. இவளாம் என்னபடிச்சாலோ..?அந்த ஆளு வேற …பொண்ண இழுத்து வச்சி ரெண்டு அரை விடாம …கெஞ்சிட்டு இருக்காரு …”
அருணின் மனதில் அபி பல படிகள் கீழிறங்கி போனாள்,இவளை போய் ரொம்ப இன்னசென்ட்னுநெனைச்சோமே!!”என்று தன் மீதும் காரணமில்லாமல் கோபம் வந்தது அவனுக்கு ,வீட்டுக்குள் மூச்சு முட்டுவது போல்தோன்ற பால்கனி கதவை திறந்து வெளியே வந்தான் உள்ளே எரிந்து கொண்டிருக்கும் தனலை அணைப்பவன் போல்வேகமாக உள்மூச்சை இழுத்து காற்றை உள்நிறைத்தான்…

சில வேகமூச்சிழுப்புகளின் பின்னும் மனம் சமாதானம் அடைய மறுத்தது, “அபியா இப்படி..” என்று மனம் அதிலேஉழன்றது கொண்டிருந்த போது,

திடீரென்று ,இவனது பால்கனியை ஒட்டி அமைந்த எதிர் பிளாட்டின் பால்கனி கதவு திறக்கும் ஓசையில் அனிச்சையாய்அவன் அந்த பக்கம் பார்க்க ,அபி வெடித்துவரும் அழுகையை அடக்கி கொண்டு பால்கனி வழியாகவெளிவருவதைகண்டான்…

அவளது இந்த நிலையை கண்டவுடன் சூரியனை கண்ட பனி துளி போல அருணின் கோபம் இருந்த இடம் தெரியாமல்கரைந்தது ,அவளது கண்களில் இருந்து வரும் கண்ணீர்,அவன் இதயத்தில் யாரோ கத்தியை திருகுவது போல் வலியைஏற்படுத்தியது ,

“என்ன ஆச்சு இவளுக்கு.. அவரை திட்டிட்டு இவ அழுதுட்டு இருக்கா ?” என்று கவலையடைந்தான்…என்னகாரணமாக இருந்தாலும் அவள் அழுவதை அவனால் தாங்க முடியவில்லை ,அவளை எப்படியாவது சமாதானம்செய்துவிட வேண்டும் என்று மனம் துடித்தது ,ஆனால் அதை அபி விரும்பமாட்டாள் என்பதும் அவனுக்கு நன்றாகதெரியும் ,கவலையுடன் அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போது ,அபி தன் கண்களில் வழிந்த கண்ணீரைபுறங்கையால் துடைத்துக்கொண்டே இடதுபுறம் திரும்பியவள் அங்கே அருண் நிற்பதை பார்த்து அதிர்ந்தாள்,சட்டென்று எதிர்புறமாக திரும்பி அவனுக்கு முதுகுகாட்டி நின்று முகத்தைத் துடைத்தாள் ,அப்படியே எதுவும்நடவாதது போல மெதுவாக உள்பக்கமாக திரும்பி உள்ளே போக எத்தனித்த போது ,
“ஹாய் அபி…” அவனது குரல் அவளை நிறுத்தியது.
விரைவாக தன்னை சமாளித்துக்கொண்டு ,அவன் புறமாக திரும்பி "ஹாய் அருண் "என்றாள் மெல்லிய குரலில் "நான்அழுததை பார்த்திருப்பானோ ?ஏன்னு கேட்டா என்ன சொல்றது?”என்று தர்மசங்கடமாக உணர்ந்தாள்…

“உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா? தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?” என்று தயங்கினான்.

“ஏன் அழுதீங்கன்னு கேட்பான் அப்போ… “இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினெஸ்”னு சொல்லி நோஸ்கட் பண்ணனும்..” என்று திருப்பி கொடுக்க அவள் தயாராக இருந்தாள்..

“என்ன.. ?” என்று அவனை நேராக பார்த்து கேட்க …

“உங்கள பார்த்த நாள்ல இருந்து… உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் …” என்று அவன்பீடிகையுடன் மீண்டும் தயங்கவும் ,இவன் என்ன கேட்க போகிறான் ,அதுவும் பார்த்த நாள்ல இருந்து என்னகேக்கணும்னு நெனைச்சிருப்பான்..?” என்று அபி குழம்பிப்போனாள்…

“என்ன கேக்கணும்னு நினைசீங்க..? ” என்று அவள் யோசனையாக அவனை பார்த்தாள்…
“நீங்க போடுற டிரஸ்லாம் எந்த ஷாப்ல வாங்கறீங்க ?” என்று எதிர்பாராமல் அவன் வேறு பேசவும்,அவளால் எதுவும்யூகிக்க முடியவில்லை.

“எதுக்கு கேக்கறீங்க? “என்று புரியாமல் திருப்பி கேட்டாள்.

“இல்லை உங்க ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப காலாவதியா, அவுட் டேட்டடா இருக்கு…நீங்க ஏன்மெகாமார்ட்..வேவ்ஸ்…மாக்ஸ்னு ட்ரெண்டியா ட்ரை பண்ண கூடாது?”என்று மிகவும் சீரியஸான குரலில் கூறினான்ஆனால் அவன் கண்களில் மின்னிய குறும்பு ,அவன் அவளை பார்த்து கேலியாக சிரிக்கிறான் என்பதை வெட்டவெளிச்சமாக காட்டிவிட ,அவளுக்கு கோபம் பொங்கியது …

“யூ…யூ….”என்று அவனை திட்டுவதற்கு அவசரத்திற்கு வார்த்தை கிடைக்காமல் தவித்து விட்டு ,பிறகு கோபமாகதரையை ஒருமுறை காலால் உதைத்துவிட்டு, குமைந்து கொண்டே உள்ளே சென்றாள்,
"குரங்கு,குரங்கு நான் எப்படி டிரஸ் பண்ணா இவனுக்கு என்ன..?”என்று முணுமுணுப்பாக அவனைதிட்டிக்கொண்டே போனவளை ,அவனது நகையொலி பின் தொடர்ந்தது…

அருண் மனதிற்குள் நினைத்து கொண்டான்.. “கண்டிப்பாக அபி இப்போ அவளுக்கு தெரிஞ்ச பேட் லாங்குவேஜ்ல என்னைத் திட்டிஅபிஷேகம் பண்ணிகொண்டு இருப்பா ,அதே சமயம் என்ன திட்டுற பிஸில வேறஎதையாவது நினைத்துஅழாமலும் இருப்பா.. எனக்கு அது போதும் ..” என்று நிம்மதியடைந்தான்..
ஒரு திருப்தியான புன்னகையுடன் தனது எஞ்சியிருந்த காபியை குடிக்க போனான் ,அந்த ஆறி போன காபி ஏனோஅவனுக்கு தேவாமிர்தமாக இனித்தது…

தொடரும்



Author’s note
வணக்கம் மக்கள்ஸ்
Weekend la no update .. sorry
Meendum Monday sandhikaren ..
Adhu varaikkum neenga indha update padichittu yeppadi irukkunnu sollunga ...??
 
Top