Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-18

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-18

மகி ஒரு பக்கம், நிலா ஒரு பக்கமாக பெட்டில் படித்திருந்தினர். இருவரும் வெவ்வேறு மனநிலையில்... நான் அவசர பட்டேனோ கொஞ்சம் டைம் தந்திருக்கலாம், தீடிரென்று முத்தம் கொடுத்தது. அவளுக்கு பிடிக்காம போயிடுச்சோ இந்த மனநிலையில் மகி யோசிக்க.

நெஞ்சம் படபடக்க பயந்து படுத்திருந்தாள் நிலா. கடவுளே இது என்ன மனநிலை , எனக்கு ஏன் பயம் வருது கை, கால் நடுங்குதே என்று நிலையில் நிலா படுத்திருந்தாள்.

அடுத்த நாள் கதிரவன் உதயமாக, மெல்ல எழுந்தான் ஈஷ்வர். பக்கத்தில் நிலா இல்லை, அவளை சமாதானம் படுத்த கீழே இறங்கினான். பார்த்தி நீயூஸ் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். கிச்சன்ல இருப்பா நினைத்து உள்ளே சென்றான். அங்கேயும் நிலா இல்லை, கமலா மட்டுமே இருந்தார்.

என்ன தம்பி..

அக்கா நிலா எங்கே...

இன்னும் கீழே இறங்கி வரலப்பா..

தன் அப்பாவிடம் கேட்டான், நிலா எங்கேப்பா, வெளியே எங்காவது போயிருக்காளா.

இல்ல மகி காலையிருந்து நிலாவ பார்க்கவே இல்லை, மேல தூங்கற நினைச்சேன்...

வீட்டை சுற்றி தேடினான், தோட்டத்தில் போய் பார்த்தான். பதட்டம் வந்தது. பார்த்தி கையை பிடித்துக்கொண்டு அப்பா நிலாவ கானோம் ,எனக்கு பயமா இருக்கு. போன் போட்டும் பார்த்தான் ,போன் ஸ்சுட் ஆப் வருது.

பவன், விக்கி எழுந்து வந்தனர், அண்ணா பயப்படாத அண்ணி கோவிலுக்கு போயிருப்பாங்க. தன் வண்டியை எடுத்து தேட சென்றான் விக்கி...

மணி காலை பத்தாகிவிட்டது எல்லா இடமும் தேடினார்கள். பித்து பிடித்தது போல் உட்கார்ந்திருந்தான் ஈஷ்வர்.. அப்பா என் பிரண்ட் இன்ஸ்பெக்டர் மூலமா தேட சொல்லட்டும்மா.

ராமுக்கு போன் போட்டு கேட்கலாம் ஈஷ்வர், கிராமத்திற்கு போயிருந்தா..

கேளுங்க..

அந்த பக்கம் ராம் போனை எடுத்து , பார்த்தி நல்லாயிருக்கியப்பா, நிலா எப்படியிருக்கா கேட்டார்.

அய்யோ அப்ப அங்கே வரலையா இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சு. நான் செஞ்சது அவளுக்கு பிடிக்கல, என்னை நாலு அடிக்கூட அடிச்சிருக்கலாம். இப்படி என் உயிர துடிக்கவிட்டு எங்க போனா தெரியிலையே. காலையிலிருந்து பச்சை தண்ணி கூட குடிக்காமல் வாடினான் ஈஷ்வர்.

ஈஷ்வருக்கு போன் வர, அந்த பதட்டத்தில் யார் பேசவது தெரியாமல் போனை ஆன் செஞ்சான். என்ன ஈஷ்வர் மச்சான், பொண்டாட்டி ஒடி போயிட்டாளா. அப்படியா.

டேய் வேணா முரளி...மகி கத்த..

பச்சி சொல்லிச்சு ஈஷ்வர் , நீ எங்க குடுப்பத்திற்கு பண்ண பாவம்..

ஆத்திரத்தில் போனை தூக்கி உடைத்தான் ....

ஈஷ்வர்... ஈஷ்வர். என்னாச்சு ஏன் போனை உடைச்ச யாருடா போன்ல.

இரு கையும் தலையில் வைத்து உட்கார்ந்தான், எனக்கு ஏன்ப்பா கல்யாணம் செஞ்சி வச்சிங்க . முரளி என்ன கேவலாமா பேசறான். உன் பொண்டாட்டி ஒடிட்டாளா கேட்கிறான்ப்பா.

ஈஷ்வர், நிலா எங்கயும் போக மாட்டா, பயப்படாத நீ மொதல்ல உன் பிரண்டுக்கு போன் போடு.

மதியம் சென்றது ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம் எல்லா இடத்திலும் தேடினார்கள். கூட வேலை செய்யும் டீச்சர் விட்டிற்கு சென்று விசாரித்தான் பவன்.

மதியும் மணி மூன்று, அவர்கள் வீட்டின் லேன்ட் லைன் அடிக்க, போனை எடுத்தார் பார்த்தி.

மாமா நிலா அழைக்க...

நிலா நிலா எங்கம்மா போனே பார்த்தி கத்த.. சோபாவில் சாய்ந்து படுத்திருந்த ஈஷ்வர் பார்த்தி நிலா சொன்னவுடன் எழுந்து வந்தான்.

மாமா நான் திருச்சிக்கு போயிருந்தேன். ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்திருவேன் . போன் வீட்டிலே விட்டுட்டு வந்தேன் அதான் கால் பண்ண முடியில.

சரிம்மா .. நிலா போனை வைக்க. எங்க போனாலாம்.

திருச்சிக்காம் ஈஷ்வர், காரணமில்லாமல் போகமாட்டா, கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும். முதல்ல பவன், விக்கிக்கு சொல்லுடா.

கண்னை மூடி சோபாவில் அமர்ந்தான் ஈஷ்வர்.

தட்டில் சாப்பாடு போட்டு வந்து ஈஸ்வரிடம் கொடுத்தார் பார்த்தி, சாப்பிடுப்பா காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடாத தன் மகனை சாப்பிட வைத்தார். இதற்கிடையில் ராமும் வந்துவிட்டார் ஊரிலிருந்து.

இரவு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் நிலா. அவள் இறங்கி வந்தவுடன் பவன் ஒடி சென்று அண்ணியென்று நிலாவின் கையை பிடித்தான். அண்ணா கூட சண்டையா மூன்....

அதெல்லாம் இல்ல பவன் ஒரு முக்கியமான வேலை அதான் யாருக்கிட்டையும் சொல்ல முடியில ஸாரி மாமா.

பரவாயில்லம்மா.. நாங்க பயந்திட்டோம்..

மாமா, மகி எங்கே..

மேல ரூமூல இருக்கான் போய் பாரு..சாப்பிட்டு போம்மா..

நான் வர வழியிலே சாப்பிட்டேன் மாமா.

ரூமின் கதவை திறந்து உள்ளே சென்றாள் நிலா. ஜன்னலை வெறித்து பார்த்து நின்றிருந்தான்.

மகி... ஸாரி போனை வேற இங்கே வச்சிட்டேன்... அதான் சொல்ல முடியில இப்ப ஒரு ப்ராபளம் இல்ல மகி ஐயம் ஆல் ரைட். இப்பதான் மனசு கிளியரா இருக்கு மகி என்று அவன் முதுகில் கை வைத்தாள்.

கையை எடுடி...

மகி என்னாச்சு.

திரும்பி ப்ளாரு ஒரு அறை நிலாவின் கண்ணத்தில் அறைந்தான். என்னை தொட்ட அசிங்க படுத்திடுவேன் சொல்லிட்டேன். கல்யாணம் செய்யும் போது என்ன நினைச்ச , எந்த எதிர்ப்பார்ப்பு இல்லதான , அதே மாதிரி இரு. நீ யாரோ, நான் யாரோ. அவ்வளவு தான் நமக்குள்.. கண்கள் முழுவதும் சிவப்பாக இருந்தது.

மகி நான் சொல்றதை கேளு..

காதை மூடி போடி வெளியே .. அவளை திரும்பி பார்க்காமல் பெட்டில் படுத்துக்கொண்டான்.

கண்ணத்தில் கை வைத்து மாடி படிக்கட்டில் அமர்ந்தாள்...ஹாலின் லைட்டை போட்டு பவன் நிலாவின் பக்கத்தில் உட்கார்ந்தான். ராமுவும், பார்த்தியும் பவனுக்கு பக்கத்தில் அமர்ந்தார்.

என்னம்மா நிலாவின் கண்ணத்தை தடவி , நால் கோடு போட்டிருக்கு..

ம்ம் நிலா முகத்தை பாவமாக மாற்றி அடிச்சிட்டான் மாமா.

பின்ன உன் கொஞ்சுவாரா மாப்பிள்ள இங்க எல்லாம் துடிச்சி போயிட்டாங்க நீ பண்ண கூத்துக்கு.

அதவிடுப்பா அவன சமாதான படுத்த வழிய சொல்லு. ஈஷ்வர் வெளியே வந்து பார்க்க எல்லாரும் ஒவ்வொரு படியிலும் உட்கார்ந்து விட்டதை பார்த்து கொண்டிருந்தன.

கூட்டு களவானிங்க, இவ இப்படி ஆடுறதே இதுங்க கொடுக்கற செல்லம்தான். உள்ளே சென்றுவிட்டான்.

பேசாம கால்ல விழுந்துடும்மா, அதான் நமக்கு செட்டாகும் பார்த்தி சொல்ல.

நீ அம்மாகிட்ட செஞ்சதை சொல்லாதப்பா. அவன் மண்ணிக்க மாட்டான்-பவன்

இவனுக்கு என் மூக்க உடைக்கிறேதே வேலை மனத்தில் பார்த்தி நினைக்க..

அண்ணி நீ சாப்பிடதா சோகமா இருக்கிற மாதிரி நடி, அப்பறம் மயக்கம் போட்டு விழு அண்ணா பயந்துடுவான். நாங்க அவனை திட்டி பேச வைக்கிறோம்.

வயசான ஆளுகிட்ட ஐடியா கேட்டா இப்படிதான் சொல்லுவாங்க..யூத் கிட்ட கேட்கனும் தொண்டையை செருமிக் கொண்டு படிகளில் வந்து நின்றான் விக்கி.

டேய் விக்கி நீயாவது சொல்லுடா நிலா கேட்க...

நான் சொல்ல மாட்டேன், உன் செல்லம் பவன் தானே, அவன தான கொஞ்சுவ எனக்கு ஆட்டுக்கால் சூப் வச்சி தந்தியா. என்னவோ அவன் ஒல்லியா இருக்கிற மாதிரி பில்டப் செய்விங்க... ஆதனால நான் ஹெல்ப் பண்ண மாட்டேன். ஹம் முகத்தை திருப்பிக்க.

விக்கி கண்ணா,நீயும் தான்டா என் செல்லம் அவன் முகத்தை திருப்பி பவன் ஒரு கண்ணுன்னா நீ இன்னொரு கண்ணுடா. இந்த அண்ணி உங்க இரண்டு பேரையும் ஒண்ணாதான் பார்ப்பேன் புரியுதா. என் செல்லம் ஐடியா கொடுடா.

அப்ப அண்ணா...

என் ஹார்ட் உன் அண்ணா...என் உயிர்...

அப்ப நாங்க பார்த்தி கேட்க.

நீங்க அண்ணியோட மூக்கு இருக்கிற இரண்டு துவாரம். ஓகேவா பவன் விளக்க, சரி பீ சிரியஸ்...

ம்ம் நல்லா கேளுங்க...விக்கி விளக்க., இப்ப நீயூ டிரெண்ட் தான் பாலோ செய்யனும். புருஷன்ல இரண்டு வகை... ஒண்ணு பொண்டாட்டி பின்னாடியே சுற்றுவாங்க. இரண்டாவது பொண்டாட்டி நம்பளையே சுற்றனும் நினைப்பாங்க. இதில நம்ப ஈஷ்வர் இரண்டாவது வகை. அவனை நீ கெஞ்சனும் நினைப்பான். சோ நீ அவனை நெருங்கிட்டே இருக்கனும். அப்பறம் நீங்க அண்ணாகிட்ட மனச விட்டு பேசுங்க, நாளை நாங்க எல்லோரும் வெளியே போயிட்டு ஈவினிங் ஐந்து மணிக்கு வரோம். அதுக்குள் அண்ணனை வழிக்கு கொண்டுவாங்க. அப்பறம் ரொம்ப பிகு பண்ணா, போடான்னு சொல்லிட்டு வந்துடுங்க. என்னடா நம்மிள கண்டுக்கவேயில்ல நினைச்சு

அவன் உங்க பின்னாடியே வருவான். சில பாட்டுங்க அண்ணா மனச டச் செய்ற மாதிரி போடுங்க. எப்படிப்பா நம்ம வீட்டில ஹீரோ,ஹீரோயின் ரோமன்ஸ் சீன் நடக்க போகுது.

செம...விக்கி ரொம்ப புத்திசாலி மாமா.

ஆமாம் .போன செம்முல நாலு ஹரியர் பேப்பர் இருக்கு...விக்கி தன் அப்பாவை முறைக்க. எல்லாம் நான் கிளியர் பண்ணிவேன் நைனா..

பாட்ட நான் செலக்ட் செய்யறேன் விக்கி எனக்கு தெரியும்...பவன் மொபைலில் தேட ஆரம்பித்தான். இது எதுவும் தெரியாமல் நிலா வீடு சேர்ந்ததே போதும் என்ற நிம்மதியில் தூங்கிக்கொண்டிருந்தான் ஈஷ்வர்.

காலையில், குட் மார்னிங் மகி என்று நிலா எழுப்பி காபி கொடுக்க..

நான் கேட்டேன்னா.. இந்த வேலையெல்லாம் நான் செஞ்சிக்குவேன். நகரு காபி எடுத்திட்டு வந்துட்டா.. உடனே நிலா செல்லில் பாட்டு ஒலிக்க...

ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா

நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு

ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு​

நிலா கெஞ்சற மாதிரி நேராக மிகியை பார்க்க... என்ன அப்படி பார்க்கிற இதெல்லாம் வேற யாருகிட்டனாச்சம் வெச்சிக்கோ என்கிட்ட வேணா.. பாத்ரூமிற்கு சென்று கதவை முடினான்.

புருஷன் உன்கிட்டதான வச்சிக்க முடியும். ரொம்பதான் அலட்டிக்கிறான்...

-நிலாவை பிடிப்பான்....
 
Top