Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா.. என்..வெண்ணிலா-16

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா.. என்..வெண்ணிலா-16

மாலை ஸ்கூல் முடிந்தவுடன் நிலா தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பவன் பிறந்த நாளுக்கு டிரஸ் எடுக்க அருகிலுள்ள மாலுக்கு சென்றாள். மனம் முழுவதும் சந்தோஷமே காலையில் நடந்த நிகழ்ச்சியை நினைத்து, ஈஷ்வர் தன் ஸ்கூலை வாங்கியது.அவனின் நெருக்கம் வேற ஏதோ உணர்வை தர அந்த நிமிடத்தை ரசித்தவளாக நிலா மாலுக்குள் நுழைந்தாள்.

பவனுக்கு தேவையான டிரஸை எடுத்தாள், அங்கே அலங்கார பொம்மையில் மாட்டியிருந்த ஆகாய நிலத்தின் சட்டை ரொம்பவே அழகாக தெரிந்தது, நிலாவின் கண்களுக்கு. மகிக்கு அழகாகயிருக்கும் என்று அதையும் எடுத்தாள்.

பணத்தை கட்டி பில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவள் பார்வை நிலைக்குத்தி ஒரு இடத்திலே நின்றது. அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி தன் கண்ணத்தில் வழிந்தது. இல்ல என் மகி கிடையாது யாரோ என் மகி போல் ஒருவன்.

தன் கண்களை அழுத்தி துடைத்துவிட்டு திரும்ப பார்த்தாள், கடவுளே என் மகியாக இருக்க கூடாது யாரோவன் என்று மனம் அவளை தேற்றினாலும், அவள் மூளையோ உன் கணவன் அவன் என்று அடித்து சொன்னது.

கடையின் எதிர்பக்கம் உள்ள ஃபுட் கோர்டில் ஈஷ்வர் ஒரு பெண்ணின் தோள்மேல் தன் கையை போட்டுக்கொண்டு பேசினான். சிரித்து சிரித்து அவர்கள் பேசுவதை பார்த்தாள். அப்பெண்ணின் உச்சியில் முத்தமிட்டான் ஈஷ்வர்.

அதற்குமேல் அவர்கள் கொஞ்சி குலாவுவதை பார்க்க விரும்பமில்லாமல் தன் வண்டியை உயிர்ப்பித்து மெயின்ரோட்டிற்கு வந்தாள்.

கடையின் வெளியே நின்ற இருவர் பார்க்க ரௌடி போல் தோற்றம், அதில் ஒருவன், ஏய் அந்த நிலாதானே அது , சீக்கீரம் வண்டியை ஏடுடா , அவள பாலோ பண்ணு, இன்னிக்கு நம்மக்கிட்ட வசமா மாட்டிக்கிட்டா. கடத்திட்டு போய் பாஸ்கிட்ட ஓப்படைச்சிடலாம்.

தன்னை இருவர் துரத்திக் கொண்டு வருகிறார்கள் என்று கூட அறியாத அந்த பேதை பெண், மனமுடைந்து எங்கு செல்லுகிறோம் என்று உணர்வுமில்லாமல் வண்டியை ஓட்டிச்சென்றாள். சிக்னலில் இருவரும் மாட்டிக் கொள்ள, நிலாவோ சிக்னல் தாண்டி பறந்தாள்.
ச்சே, மிஸ் ஆயிட்டா மாப்பிள்ள. பட்சி பறந்திட்டு இருக்கும் இந்நேரம். தன் வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா.
இரவு எட்டு மணிக்கு ஈஷ்வர் வந்தான். தன்னை சுத்தப்படுத்தி சாப்பிட டைனிங் டெபிளில் அமர்ந்தான்.
அனைவரும் உட்கார்ந்திருந்தனர்.பார்த்தி தன் மகனை நோக்கி, “ஏன் ஈஷ்வர் லேட்டு”..
“அதுப்பா... மீட்டிங் முடிய லேட்டாயிடுச்சு”.

உள்ளே கிச்சனில் பாத்திரத்தை டமால் என்று கீழே போட்டாள் நிலா...

என்ன சத்தம் பவன்..

ம்ம்ம் எல்லா அண்ணித்தான் , ஏதோ கோவம்போல...

ஏண்டா அவள கோவப்படுத்திற, நீ ஒழுங்க படிக்க வேண்டியதுதான, படிக்கிற வயசில படிக்காம... இதுக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்.

ஹலோ உன் மேலதான் கோவமே...

என்னடா சொல்லுற என்று ஈஷ்வர் முழிக்க...

பின்ன நீ வந்தவுடன் , அண்ணி உன்ன பார்க்க வந்தாங்களா...

ஆமாம் இதை யோசிக்கவே இல்லையே... எப்படி மறந்தோம்.

எல்லாம் நான் சமாளிச்சிப்பேன் அவ என்னுடைய மூன் ஆக்கும்...சொல்லி கிச்சனுக்குள் சென்றான். உள்ளே சென்ற ஈஷ்வரை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

என்ன நிலா கண்டுக்கவே மாட்டிற..என்னாச்சு உடம்பு சரியில்லையா என்று அவள் கழுத்தில் தன் கையை வைத்தான்.

“கையை எடு மகி” என்று ஈஷ்வரின் கையை தட்டி விட்டாள். சுருக்கென்று கோபம் வந்தது ஈஷ்வருக்கு எப்போதுமே இவளுக்கு என்னையை உதாசினம் படுத்தறதே வேலை.

“என்னடி இப்ப உனக்கு, என்ன பிரச்சனை ஏதுவும் சொல்லாத நான் என்ன நினைக்க”.
“ஐய்யோ, அப்படியே ஓண்ணும் தெரியாத பச்ச மண்ணு”.
ஈஷ்வர் முறைக்க..

“என்ன நீ முறைச்சா நான் பயந்துடுவேன் நினைச்சியா , நான் யாருக்கு பயப்பட மாட்டேன்”.
“விஷியத்தை சொல்லு வேற பேசாத” என்று ஈஷ்வர் கத்த.

“இங்க எதுக்கு கத்திரீங்க, வெளிய எல்லோரும் இருங்காங்க.”.
“அப்படிதான் பேசுவேன்.. லூஸு மாதிரி நீ பேசுனா”.

அவன் கையை பிடித்து ரூமிற்கு அழைத்து சென்றாள்... அவள் பின்னாடியே சென்றான் ஈஷ்வர்.எரிச்சல் எதுவும் சொல்லாமல் கோவப்படுகிறாளே என்று.

“ஏய் கையை விடுடி. எதுக்கு ரூமூக்கு கூட்டிட்டு வர”...கதவை சாத்தினாள்.
“தன் கைகளை இரண்டும் கட்டிக்கொண்டு , ஏன் லேட் மகி”..

எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், ஈஷ்வர் அவள் கண்னை நேராக பார்த்து, மீட்டீங் முடிய லேட்டாயிடுச்சு, அதான் கீழே சொன்னேனே, காதில விழல.

ஓ... ஸ்கூல, பசங்க டீச்சர ஏமாத்த சொல்லுவாங்களே... அந்த மாதிரி நீங்க பேசிறீங்க. பொய் சொல்லாதீங்க மகி.

“உன்கிட்ட ஏன் பொய் பேசனும் நிலா”

“அப்ப மாலுக்கு போகல , ஜோடி போட்டு சிரிச்சு பேசினீயே அந்த பொண்ணு”.
அது..ஈஷ்வர் தடுமாற..

“உன் முதல் மனைவியே நல்லா பேசும் போது ஏன் கல்யாணம் பண்ண.ச்சே” என்று முகத்தை திருப்பினாள் நிலா.

“ம்ம் அப்பறம்.. நான் எவகிட்ட பேசினா உனக்கென்ன, அதான் சொல்லுவியே. நான் எந்த எதிர்பார்ப்பு இல்லாம கல்யாணம் செஞ்சிக்கிட்டேனு...”

“ஆமாம் இப்பவும் அப்படிதான்..எனக்கு உன் மேல எந்த லவ்வும் இல்ல. புரியுதா”

அதுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது நிலா....

ச்சீ உன்கிட்ட பேசினே பாரு என்னைய,தன் தலையில் அடித்துக் கொண்டு பால்கனி நோக்கு செல்ல.

அவள் கையை பிடித்தான் ஈஷ்வர்...நிலா திரும்பி பார்க்காம அப்படியே நிற்க.
பாருடி இங்க,அவள் கண்ணத்தை பிடித்து அவள் கண்னை பார்த்தான். அவ என் தங்கச்சி வைஷ்னவி.

நிலா அதிர்ச்சியாக பார்க்க. ம்ம் நாங்க மொத்தம் நாலுபேர் நிலா. எனக்கு அடுத்தவ தான் வைஷூ. எங்க வீட்டு செல்லக்குட்டி.

என்ன சொல்லுற ஈஷ்வர் யாருமே இதை எங்கிட்ட சொல்லவேயில்ல.
நம்ம கல்யாணம் நடந்ததுயில்ல , அப்ப முரளி வந்தானே அவன்தான் மாப்பிள்ளை என் உயிர் நன்பன் நிலா. கூட தூரமாயிருந்து பார்த்தாலே அவதான் வைஷு என் தங்கை.
ஏன் யாரும் அவங்கிட்ட பேசல.. என்னாச்சு மகி

இன்னும் நீ என்னோட பாஸ்ட்ட கேட்கல, என்னுடைய முதல் கல்யாணம் பற்றி கேட்கலையே நிலா. என் வாழ்க்கையே மாற்றி என் அம்மாவ இழந்து, எல்லாத்தையும் வெறுத்து...என் குடும்பம் இப்படியிருக்க காரணமே என் முதல் திருமணம் தான் நிலா.

நானும் ராகவ் ,முரளியும் காலேஜ் பிரண்ட்ஸ்... மேல எம்.பி.ஏ.வும் அமெரிக்காவில் முடிச்சோம். இங்க வந்து பிஸினஸ் பண்ண யோசிச்சோம். அப்ப நான் சொன்ன ஐடியா தான், இப்ப நம்ம ஃபுட் பேக்டரி ஆரம்பிச்சது .அதில் முரளி பார்ட்னர் ஆனா.

அவங்க குடும்பமும், எங்க குடும்பமும் நல்ல பழக்கம் ஆயிடுச்சு. எங்க வைஷுவும்,முரளியும் விரும்ப ஆரம்பிச்சாங்க...
 
Top