நினைக்காத நாள் இல்லை அத்தியாயம் 3

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 3RD EPISODE HAPPY READING IN UR LEISURE FRIENDS PLS LET ME KNOW UR FEEDBACK THANKS TO ALL READERS


அத்தியாயம் 3

சந்தியா ஒன்றும் மரியாதை தெரியாத பெண்ணில்லை. வயதில் பெரியவர்களை மதிக்கத் தெரிந்தவள் தான். ஆனால் இன்று பதட்டப் பரபரப்பில் ஒரு அந்நியனை ஒருமையில் கூவி அழைத்துவிட்டாள். எந்த உரிமையில் அப்படி கூவினோம் என்று அவளுக்கே புரியாத ஒரு திகைப்பில் சந்தியா தடுமாறிக் கொண்டிருந்த பொழுது, அவன் மீண்டும் பேசினான்.

"வயதில் மூத்தவர்களை ஏகவசனத்தில் அழைப்பது தான் இந்த ஊர் வழக்கமோ?"

இந்த முறை அவன் குரலில் எள்ளி நகையாடிய ஏளனத்தில், சந்தியாவின் தலை குனிந்தது.

"ஐ ஆம் சாரி........."முணுமுணுத்தாள் சந்தியா.

"எங்கே புதைகுழியில் காலை வைத்து விடுவீர்களோ என்ற பயத்தில் பதட்டத்தில் கத்திவிட்டேன் இருந்தாலும் நான் செய்தது தப்பு தான் மன்னித்து விடுங்கள்......."

"பரவாயில்லை".....என்று முறுவலித்தான் அவன்.

"அடுத்தவன் விழுவதை வேடிக்கை பார்க்கும் அநேகம் பேர்களைக் கொண்ட இந்த உலகத்தில் உன்னை மாதிரி நல்ல மனம் கொண்ட ஒரு சிலராவது இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி தான் எனக்கு நீ என் மீது காட்டிய அக்கறைக்கு நன்றி ஆமாம் அது நிஜமாகவே புதைகுழி தானா? நான் சாதாரண குட்டை என்று நினைத்தேன்......."

"இல்லை அது புதைகுழியே தான். எத்தனையோ பேரை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. பக்கத்திலேயே எச்சரிக்கைப் பலகையும் வைத்திருக்கிறார்களே. நீங்கள் பார்க்கவில்லையா? இல்லை உங்கள் கண்ணில் ஏதும் கிட்டப் பார்வை கோளாறா?"

"அம்மாடி......கொஞ்சம். விட்டால் என்னைக் குருடன் என்றே முடிவு கட்டிவிடுவாய் போலிருக்கிறதே. உண்மையைச் சொல்லிவிடுகிறேன். ஆபத்து என்று தெரிந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிப்பது எனக்கு அல்வா சாப்பிடுவது போல் ரொம்பப் பிடித்தமான காரியம் ஆமாம் யாருமில்லாத இந்த வனாந்தரத்தில் இப்படித் தனியே சஞ்சரிக்கிறாயே. நீ யார் பெண்ணே?

வனதேவதையோ?"

குறும்பாய் கேட்டவனின் பார்வை இப்பொழுது அவளை தலையிலிருந்து கால் வரை ஊடுருவியது. முதன்முதலாய் தான் ஒரு பெண் என்பதை அந்த கணத்தில் உணர்ந்தாள் சந்தியா.

கன்னத்தில் ஏறிய சிவப்பை மறைக்கத் தலை குனிந்தவள் மெதுவாய் முணுமுணுத்தாள்

"என்னை மரியாதை தெரியாதவள் என்று சொன்னவர் இப்பொழுது ரொம்ப மரியாதையுடன் பேசுவதாக நினைப்பா?"

" நான் உனக்கு மரியாதை கொடுக்க வேண்டுமா?......."அவன் விழிகளை விரித்தான்.

"ஏன் நீ என்னை விடச் சின்னவள் தானே? சிறுமிகளுக்கெல்லாம் நான் மரியாதை கொடுப்பதில்லை"

அலடசியமாய் அவன் தலையைச் சிலுப்ப, சந்தியா இப்பொழுது வெகுண்டாள்.

"நான் ஒன்றும் சிறுமியில்லை. இந்த மாருதி எஸடேட்ஸின் எஜமானி. சந்தியா பெரியவர் அனந்தராமனின் பேத்தி மருமகளாகவும் போகிறவள்........."

சந்தியா சட்டென்று உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

'தப்பு ஒரு முன்பின் தெரியாத அந்நியனிடம் இவ்வளவு தூரம் விவரம் சொல்லியிருக்க வேண்டியதில்லை. அப்படியெல்லாம் சட்டென்று வாய் விட்டுவிடும் விவரமில்லாத பெண்ணுமில்லை அவள். ஆனால் அவன் சிறுமி என்று சொன்னது அவளை எந்த விதத்திலோ பாதித்தது. ஏன் என்று தெரியவில்லை.'

"சந்தியா.?.......ஓ.......அது நீ தானா? " மெலிதாய் விசிலடித்தான் அவன்.

"அருமையான பெயர். ஆனால் உன் தாத்தா சமீபத்தில் இறந்துவிட்டதாக நான் தங்கியிருக்கும் பண்ணை வீட்டில் பேசிக் கொண்டார்களே. அவர்கள் உயில் திருமணம் என்றெல்லாம் பேசியதை வைத்து நான் உன்னை இந்த எஸ்டேட்டின் முடி சூடாத மகாராணி என்று நினைத்தேன். ஆனால் நீ என்னடாவென்றால்..............."

அவன் சொல்லாமல் விட்டதை அவளை ஏற இறங்கப் பார்த்த அவன் பார்வை சொல்லியது.

சாதாரண மலைப்பாதை நடை தானே என்று பிரத்யேகமாய் அலங்காரம் ஏதும் செய்து கொள்ளாமல் அப்படியே அசட்டையாய் வந்ததன் விளைவு அவன் பார்வையில் அவள் ஒரு வேலைக்காரச் சிறுமியாய் தோன்றுகிறாள்.

சந்தியாவுக்கு எரிச்சல் வந்தது.

'இவன் அவளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் அவளுக்குக் கவலையில்லை.'

"உன்னை வேதனைப்படுத்தவென்று நான் எதுவும் சொல்லவில்லை சந்தியா. ஆனால் உண்மையிலேயே நீ திருமண வயதை எட்டாத சிறுமி தானே? அப்படிப்பட்ட உன்னை உயில் என்ற பெயரில் வயதான உன் மாமனுக்கு உன் தாத்தா கல்யாணம் செய்து வைக்க நினைத்தது தப்பில்லையா?"

'ஓ.............இவனுக்கு இவளைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது. அதில் ஆச்சரியமுமில்லை. குன்னூரைப் போன்ற ஒரு சிறிய ஊரில் பெரிய வீட்டு ரகசியங்கள் என்று எதையும் பொத்தி ஒளித்து வைக்க முடியாது.'

"மாமாவிற்கு அப்படியன்றும் வயதாகி விடவில்லை. இருபத்தேழு வயது என்பது இன்றைய நிலையில் ஒரு பெரிய விஷயமேயில்லை........"

தன் வீட்டினரை விட்டுக் கொடுக்க மனமின்றி சந்தியா பேச, அந்தப் புதியவனின் உதடுகள் ஏளனமாய் ஒலியெழுப்பின.

"ஓ.......அப்படியென்றால் உனக்கு உன் மாமாவை மணப்பதில் எந்த வித ஆட்சேபணையுமில்லை அப்படித்தானே?"

இவன் யார் இதைப் பற்றியெல்லாம் கேட்பதற்கு என்ற சீற்றம் எழுந்தாலும், அவன் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று அவளை பதில் சொல்லத் தூண்டியது.

"இறந்தவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதில் தப்பில்லை. தாத்தா என் நன்மையை விரும்புகிறவர். எனக்கு எது நன்மை பயக்கும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?"

"ஓ....அப்படியானால் தாத்தாவிற்காக மட்டுமே நீ இந்த ஏற்பாட்டிற்கு சம்மதித்திருக்கிறாய். அப்படித்தானே?"

"நான் சம்மதித்து விட்டதாக யார் சொன்னது?"

வெகுண்டெழுந்த சந்தியாவின் சினமே அவளைக் காட்டிக் கொடுத்தது அவளுக்கு இந்த ஏற்பாட்டில் துளியும் சம்மதமில்லை என்பதைச் சொன்னது.

யோசனையுடன் அவன் பார்வை அவளை ஊடுருவியது. அதன் தீட்சண்யம் தாங்க முடியாமல் தலை திருப்பினாள் அவள்.

"உன் மாமாவை நீ பார்த்திருக்கிறாயா சந்தியா? "

" இல்லை........."சந்தியா தலையசைத்து மறுத்தாள்.

"ஆச்சரியமாயில்லை?......முன்னே பின்னே பார்த்தறியாத ஒரு அந்நியனுடன் உன் வாழ்க்கையைப் இணைத்து வைக்கிறது இந்த உயில். நீ வாழ்க்கை புத்தகத்தை இன்னும் புரட்டவே ஆரம்பிக்கலே ஆனால் உன் மாமா புத்தகத்தைப் படித்தே முடித்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் ஏராளம் உண்டு."

அவன் இப்பொழுது தன் பேச்சை நிறுத்தி அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் பார்வையிலிருந்த குழந்தைத்தனம் அவனைக் கவர்ந்திருக்க வேண்டும்.

"நான் சொல்வது உனக்குப் புரியவில்லை என்பது உன் பார்வையிலிருந்தே தெரிகிறது நீ இன்னும் சிறுமி தான் என்ற என் கணிப்பு தவறில்லை என்றும் புரிகிறது..........."

அவன் ஏதோ ஹாஸ்யத்தைச் சொன்னது போல வாய் விட்டு சிரிக்க, சந்தியாவிற்கு இப்பொழுது தாங்க மாட்டாமல் கோபம் வந்தது.

"என் வாழ்வு என் விருப்பம். இட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்......"

அவன் சிறுமி என்று சொன்னது போல் தானில்லை என்று நிரூபிப்பதற்காகவே வயதுக்கு மீறிய கம்பீரத்துட்ன மிடுக்காய் மொழிந்த சந்தியாவைப் பார்த்துத் தோளைக் குலுக்கினான் அவன்

"அஃப் கோர்ஸ் யங்லேடி இட்ஸ் நன் ஆஃப் மை பிஸினஸ். ஆனால் உன்னைப் பார்த்தவுடன் ஏதோ பல நாள் பழகிய உணர்வு எனக்கு ஏற்படக் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.......சம்திங் ஸ்ட்ரேஞ்ச்...."

சந்தியாவிற்கும் அதே உணர்வு ஏற்பட்டிருந்ததால் அவளையுமறியாமல் நெகிழ்ந்தவள் பதிலேதும் சொல்லவில்லை. பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவள் பக்கத்தில் வந்தவன் மெதுவாய் அவள் முகவாய் தொட்டு உயர்த்தி அவள் கண்களை ஊடுருவினான்.

"உன்னுடைய கண்களில் ஏதோ ஒரு வசிய சக்தி இருக்கிறது. உன்னுடைய மாமாவை நினைத்து நான் பொறாமைப்பட ஆரம்பித்து விட்டேன் என்று சொன்னால் நீ நம்புவாயா பெண்ணே?"

அவனுடைய பார்வையிலும் பேச்சிலும் லயித்துப்போனவளாய் சந்தியா நின்ற அந்த கணத்தில் சற்றும் எதிர்பாராத விதமாய் அவன் உதடுகள் அவள் தலையுச்சியில் பதிந்து மீண்டன.

அனிச்சைச் செயலாய் பெண்ணுக்கே உரிய எச்சரிக்கை உணர்வுடன் அவனைக் கோபத்துடன் தள்ளி விட்டாள் சந்தியா.

"என்ன தைரியம் உனக்கு? பண்ணை வீட்டுக்குக்காரர்களுக்கு தெரிந்தவன் என்றதாலேயே உன்னிடம் சற்று நின்று பேசினேன். ஆனால் அப்படி பேசியதற்காக நீ என்ன வேண்டுமானாலும் பண்ணுவாயா? எந்த உரிமையில் நீ இப்படியரு காரியம் செய்யத் துணிந்தாய்? "

மரியாதையைக் கைவிட்டு ஊசிப் பட்டாசாய் வெடித்தவளைப் பார்த்து தோளைக் குலுக்கினான் அவன்.

"அஃப் கோர்ஸ் எனக்கு உரிமையில்லை தான். ஆனால் உன் தாத்தாவையும் மாமாவையும் தவிர உலகத்தில் வேறு ஆண்களும் இருக்கிறார்கள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகத் தான்........."

அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னவன் போகிற போக்கில் அவள் காதருகில் குனிந்து,

"இந்த முத்தம் என்னை உனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தும் என்றால் அது நான் செய்த பாக்கியம்............."என்று குறும்பாய் கிசுகிசுத்து விட்டுப் போக, மலைத்துப் போய் நின்றாள் சந்தியா.
 
டேய் என்னடா பேசிட்டு இருக்கும் போதே பொசுக்குன்னு முத்தம் குடுத்துட்ட படவா ராஸ்கல்
 
டேய் என்னடா பேசிட்டு இருக்கும் போதே பொசுக்குன்னு முத்தம் குடுத்துட்ட படவா ராஸ்கல்
THANKS MA
 

Advertisement

Back
Top