நினைக்காத நாள் இல்லை அத்தியாயம் 1

Advertisement

parvathi

Active member
Member
DEAR FRIENDS HAPPY TO MEET U AGAIN AFTER A SHORT INTERVAL HERE WE GO WITH THE IST EPISODE OF NINAIKATHA NALLILAI IT IS A ROMANTIC MILLS N BOON TYPE STORY AND I HOPE U ALL WILL LOVE THE FLOW OF IT. THANKS FOR UR GENUINE SUPPORT READERS N PLEASE LET ME KNOW UR FEEDBACK


அத்தியாயம் 1

அன்று பள்ளியிறுதி தேர்வு எழுதி முடித்து நன்றாகவே செய்திருப்பதாக மனதில் எழுந்த திருப்தியுடன் சந்தியா விடுதி நோக்கி நடந்தாள்.

"சந்தியா.......கொஞ்சம் நில்லுடி..........."

பின்னோடு ஓடி வந்த தோழி சங்கீதாவின் குரலில் திரும்பிப் பார்த்தவள்

சட்டென்று நின்றாள். அவசரமாய் ஓடி வந்ததில் சங்கீதா சற்றே மூச்சு வாங்கினாலும், சமாளித்துக் கொண்டு தன் தோழியைக் கடிந்து கொண்டாள்.

"என்னடி அவசரம் அப்படி? காலில் சக்கரம் கட்டாத குறையாய் பறக்கிறாய்.

எனக்காகக் கொஞ்ச நேரம் காத்திருந்தால் என்ன குறைந்தா போய்விடுவாய்?"

"சாரிடி சங்கீ.....போய் மூட்டை முடிச்செல்லாம் கட்டி எடுத்துட்டு ஊருக்குக் கிளம்பனும் இல்லையா? இருட்டறதுக்குள்ளே எங்க எஸ்டேட் போய் சேரனும்னா நேரத்தோட கிளம்பினால் தானே முடியும். அதான் சீக்கிரமே புறப்பட்டேன்."

" ஏன் சந்தியா அருமை பேத்தியை அழைச்சுட்டுப் போக உங்க தாத்தா வர மாட்டாரா?"

"ப்ச்சு தாத்தாவுக்கு உடம்பு சரியில்லேன்னு அம்மா செல்லில் பேசினப்போ

சொன்னாங்கடி. அதான் ஏன் அனாவசியமா வயசான பெரியவரை அலைய வைக்கனும்னு நானே பேருந்தில் போவதாய் முடிவு பண்ணிட்டேன். கோவையிலிருந்து குன்னூர் என்ன அதிக தொலைவிலா இருக்கிறது? பஸ்ல போனா அதிகபட்சம் அரை மணி நேரம் தான். பொழுது சாயறதுக்குள்ளே போய் சேர்ந்திட மாட்டேனா? பாவம் தாத்தாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு வேற.......இப்பவே தாத்தாவுக்கு பயப்படும்படியாய் ஒண்ணும் இருக்கக்கூடாதேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கறது தெரியுமா?"

தாத்தாவைப் பற்றிய நினைவில் அந்த பேத்தியின் மனம் கவலையில் ஆழ்ந்தது.

அனந்தராமன்.........சந்தியாவின் அருமை தாத்தா.

பெயருக்கேற்றாற் போலவே மனிதர் குணத்திலும் அந்த இராமரைப் போன்று

சத்தியசந்தர் தான் ஆசைக்கும் ஆஸதிக்குமாய் பெற்றெடுத்த அவருடைய குலக் கொழுந்துகள் இருவரும் அவருடைய விருப்பத்தையும் மீறி சுயநலமாய் முடிவெடுத்து அவரிடமிருந்து விலகி வீட்டை விட்டும் வெளியேறிய அந்த இக்கட்டான தருணத்தில் கூட நிதானமிழக்கவில்லை அவர்.

"உன் வாழ்வு உன் விருப்பம் நன்றாய் இரு......."

மகள் சத்யா காதலித்து அவர் சம்மதம் கேட்காமலேயே கல்யாணமும் செய்து கொண்டு ஆசிர்வாதம் வாங்குவதற்காக மட்டுமே வந்து காலில் விழுந்த பொழுது, அனந்தராமன் சொன்ன வார்த்தைகள தான் இவை.

அப்பாவின் ஆசிர்வாதம் கிடைத்தாலும் அவர் அனுமதியும் ஆலோசனையும் இன்றி தான் தேர்ந்தெடுத்ததால் தான் தன் இல்லற வாழ்க்கை இடையிலேயே தடைபட்டுவிட்டதோ என்று சத்யா இன்றைக்கும் எண்ணி வருந்தாத நாளில்லை.

சந்தியா கூட அம்மாவிடம் வேடிக்கையாய் வம்பு வளர்த்து வாயாடுவாள்.

"அப்பா அல்பாயுசுல போகனும்னு விதியிருக்கறப்போ தாத்தாவால மட்டும் அதை எப்படிம்மா தடுக்க முடியும்? நீ சொல்றது எப்படியிருக்கு தெரியுமா? என்னவோ தாத்தா அந்த காலத்து பிரம்ம ரிஷி மாதிரியும் அவர் பிடி சாபம் கொடுத்து உன் புருஷன் பொட்டுனு போய்ட்ட மாதிரியும் ரொம்ப அதிகமாயில்ல உருகறே....... இத்தனைக்கும் தாத்தா உன்னை ஆசிர்வாதம் தான் பண்ணினார்னு வேற சொல்றே. அப்புறமும் எதுக்கும்மா இந்த ஓவர் பில்டப்பெல்லாம்?"

"ப்ச்சு உனக்குச் சொன்னாப் புரியாதுடி செல்லம். பெரியவங்க அனுமதி ஆசிர்வாதத்தோட கிடைக்கற வாழ்க்கை சொறப காலமே நீடிச்சாலும் கூட சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால் அவங்க ஆதரவில்லாமல் கிடைக்கற வாழ்க்கை பூரணமாய் நீடிச்சாலும் மனசுல ஒரு உறுத்தல் மட்டும் எப்பவுமே இருக்கும். அதை சாகற மட்டும் நம்மால தவிர்க்க முடியாது..."

பெற்றவளின் பக்குவமும் பேச்சும் புரியாத வயசு சந்தியாவிற்கு.

"அடப் போம்மா நீயும் உன் வியாக்கியானமும்..........."

சந்தியா பெரிதாய் அலுத்துக் கொண்டு அகன்று விடுவாள். அம்மாவின் பேச்சைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சந்தியாவிற்கு தாத்தா அனந்தராமனின் மீது எப்பொழுதுமே அதிக மதிப்பும் மரியாதையும் பாசமும் அளவில்லாமல் உண்டு.

விபத்து என்ற பெயரில் விதி அவளுடைய தந்தையை வாரிக் கொண்டு போனபொழுது, சந்தியாவின் தந்தையாய் தோழனாய் ஆசானாய் எல்லாமாயும் இருந்தவர் அனந்தராமன் தான்.

விதவையாய் பத்துவயசு சந்தியாவுடன் சத்யா தன் அப்பாவிடம் அடைக்கலம் தேடி வந்த பொழுது அனந்தராமன் தன் மகன் அரவிந்தனைப் பிரிந்த சோகத்திலிருந்தார்.

மகன் எஸ்டேட்டைப் பார்த்துக் கொண்டு தன்னுடனேயே இருப்பான் என்று அனந்தராமன் எண்ணியிருக்க, அரவிந்தனோ வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்தான்.

அதற்கேற்றாற் போல் சரஸ்வதி தேவியும் அவனை செல்லப் பிள்ளையாய் த்த்தெடுத்துக் கொள்ள ஸகாலர்ஷிப் என்றும் யூனிவர்சிட்டி ரேங்க் என்றும் வாய்ப்புகள் அரவிந்தனின் வாசல் தேடி வந்தன.

அதன் விளைவாய் அப்பனை மகன் பிள்ளைப் பாசத்தில் தவிக்கவிட்டு வெளிநாட்டிற்குப பறந்து விட்டான். வருஷங்கள் எட்டு ஓடிவிட்டாலும் இன்று வரை பிள்ளையைப் பற்றி ஒரு தகவல் தெரியாது பெற்றவருக்கு. தான் இருக்கும் இடத்தின் முகவரியைத் தான் பெற்றவருக்கு தெரிவித்தானே தவிர தன் முகத்தை ஒரு முறையாவது பெற்றவருக்குக் காட்டிவிட்டுப் போக அந்த பிள்ளைக்கு மனமில்லை.

இன்றைக்கும் சந்தியாவிற்கு தன் தாய் மாமனின் மீது கோபம் கொந்தளித்துக் கொண்டு வரும்

'என்ன தான் வெளிநாட்டு மோகமிருந்தாலும் இப்படியா ஒருவன் சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு வெளிநாடே கதியென்றிருப்பான்? இதே சந்தியாவால் அதிகபட்சம் அரைமணி நேரப் பிரயாண்ம் தானென்றாலும் கூட அவளுடைய தாத்தாவையும் அம்மாவையும் விட்டு விலகி இருக்க முடியவில்லையே.'

'எப்பொழுதடா பரீட்சை முடியும் ஊருக்குக் கிளம்பலாம் என்று காலில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக சந்தியா பறக்கத் தானே செய்கிறாள்? இவ்வளவு ஏன்? கோவையில் பிரசித்தி பெற்ற அந்தப் பள்ளியில் அவளைச் சேர்க்க தாத்தா முடிவெடுத்தபொழுது, சந்தியா தான் எவ்வளவு அடம் பிடித்தாள்? அவளுடைய தாய் சத்யாவும் தான் என்ன கொஞ்சமாகவா அழுதாள்?'

"எல்லாரும் பிள்ளைங்களை ஊட்டி கான்வென்ட்ல சேர்க்கனும்னு தான் ஆசைப்படுவாங்க. நீங்க என்னடான்னா இவளை இங்கேயிருந்து சிட்டிக்குப் போய் அங்கே விடுதியில் தங்கி படிக்கச் சொல்றிங்களேப்பா. விதி புருஷனைத் தான் பறிச்சிடுச்சு இப்ப இவளையும் பிரிஞ்சு இருக்கனும்னா எப்படிப்பா?"

சத்யா கண்கலங்கி அழுதபொழுதும் கூட அனந்தராமன் அசைந்து கொடுக்கவில்லை.

"அப்பா எப்பவும் யோசிச்சுத் தான் முடிவெடுப்பேன்னு உனக்குத் தெரியாதா சத்யா? சந்தியாவிற்கு வெளியுலகம் தெரியனும். இவளை நீ பொத்தி பொத்தி இங்கேயே உன் கையணைப்பிலேயே வெச்சுகிட்டேன்னா அவளுக்கு எப்ப பொறுப்பு வர்றது? எனக்குப் பின்னால் இந்த எஸ்டேட்டையே நிர்வாகம் பண்ணப் போற பொண்ணுக்கு முதல்ல தன்னைத் தானே நிர்வாகம் பண்ணிக்கத் தெரிஞ்சிருக்கனும். தன் சொந்தக் காலில் நிற்கத் தெரிஞ்சிருக்கனும். அதற்கான முன்னேற்பாடு தான் இப்போ இந்த விடுதி வாசம். புரியுதா?"

சத்யாவிற்குப் புரிந்ததோ இல்லையோ சந்தியாவிற்கு புரிந்தது பிள்ளையின் இடத்தில் பேத்தியை நிலைநிறுத்த பெரியவர் பிரயாசைப்படுவது நன்றாகவே புரிந்தது. அதனாலேயே தாத்தாவின் விருப்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டாள்.

இதோ இப்பொழுது யார் துணையும் இன்றி தனியே பேருந்தில் பயணப்பட கிளம்பியதும் கூட தாத்தாவை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலுமாய் அசத்தத் தான்.

"என் பேத்தியைப் போல் வருமா? ஏய் சத்யா என்னவோ பயந்தியே எப்படி என் பொண்ணு தனியா இருக்கப் போறாளோன்னு? இப்பப் பார் அவளே தனியா பிரயாண்ம் பண்ற அளவுக்கு முன்னேறிட்டா......."

தாத்தாவின் உற்சாகக்குரல் காதருகில் ஒலிப்பது போன்ற பிரமையில் சந்தியாவின் முகம் பாசத்தில் கனிந்தது.

பேருந்து இப்பொழுது தம் பிடித்து மலைப் பாதையில் ஏறத் தொடங்கியது.

விருட் விருட்டென்று பின்னே சென்ற சிறு குன்றுகளும் மலைச்சரிவுகளின் பசுமைப் போர்வைகளும் சலசலத்த ஓடைகளுமாய் நீலகிரி மலை தன்னுள் அடங்கியிருந்த அற்புத இயற்கை அழகை வெளிப்படுத்திய வனப்பில் சிந்தையைப் பறிகொடுத்து அமர்ந்திருந்த சந்தியாவை செல்லின் அழைப்பு செல்லமாய் சிணுங்கி அழைத்தது.

யாராகயிருக்கும் என்ற யோசனையுடன் செல்லைப் பார்த்தவள் திரையில் தெரிந்த வீட்டு நம்பரில் சற்றே மகிழ்ச்சி கொண்டவளாய் பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ தாத்தா.... நான் தான் சந்தியா பேசறேன் நம்ம வீட்டுக்குத் தான் வந்துட்டேயிருக்கேன். இன்னும் அரை மணியில் உங்க முன்னால வந்து நிற்பேன். உங்களை ஆச்சரியத்தில் அசத்தனும்னு தான் முன்கூட்டியே தகவல் கூட கொடுக்கலே. ............."

பேசிக் கொண்டே போனவள் மறுபக்கம் பேச்சில்லாத மௌனம் கண்டு திகைத்தவளாய் சற்று உரக்க கத்தினாள்.

"ஹலோ.......யார் பேசறது? போன் பண்ணிட்டு பேசாமலிருந்தால் என்ன அர்த்தம்? தாத்தா என்னாச்சு உங்களுக்கு? ஏன் பேச மாட்டேன்றிங்க?"

"உங்க தாத்தா இனிமேல் பேச மாட்டார்மா. அவர் இறந்து போய் அரை மணி நேரமாகிறது. உனக்குத் தகவல் சொல்லத் தான் உன்னைக் கூப்பிட்டேன்........சாரிம்மா சந்தியா"

மறுமுனையில் ஒலித்த குரல் சொன்ன தகவலில் சந்தியா சித்தம் கலங்கிப் போனாள்.
 

Advertisement

Back
Top