Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாயகனோ நானறியேன் – நாயகன்4

Advertisement

Kokilavaniarjunan

Well-known member
Member
மாலை மயங்கி இருள் கவிழத் துவங்க.. முத்துவோடு கரட்டுக் கோவிலுக்கு வந்திருந்தாள் மகிழினி.. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதாய்.. இந்தச் சிறு குன்றின் மீதும்.. முருகன் முத்துக்குமார சுவாமியாய் அருள் கொடுத்துக் கொண்டிருந்தார்.

முத்துவே வீட்டிற்குச் சென்று மகிழினியை.. அவள் வண்டியில் அழைத்து வந்திருந்தாள்.. பூஜைக் கூடையைக் கூடையைக் கையில் பிடித்தபடி அந்தி சாயும் வேளை.. உலாவரும் நிலவென.. கோவிலின் உள்ளே வந்தவளை ஒரு ஜோடி கண்கள் சுவராஸ்யமாய் நோக்க.. அவளோ தான் இல்லாத இந்தக் கோவிலின் திருக்குடமுழுக்கு பற்றி முத்துவுடன் பேசிக் கொண்டே.. கோவிலின் அமைதியையும் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

முருகனுக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு.. தனித்தனியே இருந்த நவகிரகங்களையும் பார்வையிட்டு விட்டு.. முருகன் சன்னிதிக்கு சற்றே பின்புறம் தள்ளி இருக்கும் சித்தர்களின் சன்னிதிக்குச் சென்றனர் இருவரும்.. முத்துவிற்கு அவள் ஸ்டூடன்ட்டின் பெற்றோர் வந்திருக்க.. அவரிடம் நின்று இருவார்த்தைகள் பேசிக் கொண்டிருக்க.. மகிழ் சற்றே நகர்ந்து சென்றாள்.

கோவில் இருந்தது அந்தக் கரட்டின் உச்சியில் என்பதால்.. முன்புறம் பக்தர்கள் வருகைக்காக மண்பாதை அமைக்கப்பட்டிருக்க.. பின்புறச் சரிவு முழுதும் சுத்தம் செய்யப்படாமல்.. வேலி மரங்கள் முளைத்திருந்தன.. கிட்டத்தட்ட ஒரு காடு போலத்தான் அது.

வெளிச்சத்தை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும் இரவுப் பொழுதில்.. மின் கம்பங்கள் வழங்கிய ஒளியில்.. தங்கள் ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.. மாலை அம்மாவோடு நேர்ந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

இத்தனை நடந்ததற்குப் பின்னும் அவனோடு ஏன் தன்னை சேர்த்து வைக்க இவர்கள் முயல்கிறார்கள் என அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது.. தந்தை தாத்தாவை எதிர்த்துப் பேச முடியாமல்.. அம்மாவிடம் சென்றாள்.
புடவை மடித்துக் கொண்டிருந்தவரின் பின்புறமாக முட்டியவளைக் கண்டு புன்னகைத்த தனம் "கன்னுக்குட்டிக்கு இப்ப என்ன வேணுமாம்" என கேட்க.. முகத்தை தூக்கி வைத்தபடி அவர் எதிரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

இவ்வளவு நேரம் வெளியே பேச்சைக் கேட்டிருந்தபடியால் "வேலைக்குப் போக பிடிக்கலைன்னா.. வீட்ல இருக்கலாம்.. அதைச் சொல்ல என்ன தயக்கம்" தனம் தன் வேலையைக் கவனித்தவாறே சொல்ல.. "ம்மா.. வேலைக்குப் போக எல்லாம் இஷ்டம் தான்.. ஆனா அங்க போகப் பிடிக்கலை.. நான் வேற எங்கயாவது போறேன்.. அதான் எங்க காலேஜ்லயே நவம்பர் மாசம் வர சொல்லிருக்காங்களே" என்றாள் மகிழ்.

"நீ நவம்பர்ல போய் கேட்டாலும்.. அடுத்த ஜூன்ல வர சொல்லுவாங்க.. இன்னுமா உனக்குப் புரியலை.. உன்னை என்னமோ நான் புத்திசாலின்னு இல்ல நினைச்சேன்" என வியப்பாய் அம்மா கேட்க.. "அம்மா எல்லாரும் சுயநினைவோட தான் இருக்கிங்களா.. எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி அவன் முன்ன போய் நிக்கட்டும்" என கலங்கியவளை

சற்றும் இரக்கம் இல்லாமல் பார்த்த தனம் "ஏன் அவங்க கூப்டறாங்க இல்ல.. எல்லாத்தையும் மறந்துட்டு.. நீயும் அப்படியே இரு.. ஒரு சின்ன விஷயம் அதுக்கு ஏன் நீ இவ்வளவு யோசிக்கிற.. ஒருவேளை நம்பிக்கை இல்லையோ.. எங்க மறுபடியும் எதாவது" என இடையில் நிறுத்தி விட.. அவரை நிஷ்டூரமாக முறைத்தாள் மகிழ்.

"நீங்க என்னை ப்ரெய்ன் வாஷ் பண்றிங்கன்னு க்ரீனா தெரியுது.. உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்.. நான் போறேன்.. ஆனா நீங்க நினைக்கறது எப்பவும் நடக்காது.. சும்மா வாய் வார்த்தையா சொன்னா உங்களுக்கு நம்ப கஷ்டமா தான் இருக்கும்.. நான் அங்க போயும் எதுவும் சரி ஆகலைன்னா அப்புறம் எல்லாருக்கும் புரியும்ல" என உறுதியுடன் கூறியவளை.. அசால்ட்டாகப் பார்த்த தனம் "போ.. போ.. எல்லாம் உனக்கு ஒரு கல்யாணம் ஆகற வரை தானே.. அது வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்றார்.

வீட்டினரின் எண்ணம் அவளுக்கு பளிங்கு போலத் தெரிந்தாலும்.. இதெல்லாம் இனி நடக்க சாத்தியமே இல்லாத ஒன்று.. இது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை என யோசித்தவாறே நிமிர்ந்தவளுக்கு.. வானில் சிறு கீற்றாய் மூன்றாம் பிறை தெரிய.. மீண்டும் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

'மாமா.. காந்தி தாத்தா ஃபோட்டோ குடு' என குதித்தவளைக் கண்டு மெல்லச் சிரித்தவன்.. இருநூறு ரூபாய் நோட்டை அவள் கையில் கொடுக்க..

அதை வாங்கியவள் பிறையைப் பார்த்துவிட்டு அந்த இருநூறு ரூபாயைப் பார்த்துவிட்டு 'என்ன மாமா.. பிங்க் கலர் குடுப்பேன்னு பாத்தா.. ஆரஞ்ச் கலர் தர.. சரியான கஞ்சூஸ் மாமா நீ' என கலாய்த்துவிட்டு.. கையோடு அதை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்ற நியாபகம் வர.. இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

திடீரென தன் மீது விழுந்த வெளிச்சத்தை மறைத்து.. அந்த நெடிய நிழல் விழ.. தன் யோசனைகளில் இருந்து வெளிவந்து.. அனிச்சை செயலாய் ஓரெட்டுப் பின் வைத்தாள் மகிழினி.. அவள் நின்றிருந்த இடம் சற்று மேடான பகுதி.. பின்னால் கவனிக்காமல் கால் வைக்க.. வெறும் கால் கல்குத்தி இடறப் பார்க்க.. தடுமாறிப் போனாள்.

பார்வை அந்தப் பள்ளத்தை நோக்கிச் செல்ல 'இன்னைக்கு டிரஸைக் கிழிச்சுட்டுத் தான் வீடு போவோம் போல.. அய்யோ.. வலிக்கும்' என கண்களை மூடிக் கொள்ள.. நிழலுக்குரியவன் இரண்டெட்டில் இவளை நெருங்கி.. இடைபற்றி தன்னோடு சேர்த்து நிலை நிறுத்தினான்.

'விழுந்துவிட்டோம்' என்ற நினைப்பில் கண்களை இறுக மூடியவள்.. நெஞ்சுக்கூட்டின் சீரான ஓசையில் கண்களைத் திறக்க.. அந்த முகம் தான் கண்ணில் பட்டுத் தொலைத்தது.. இப்போது மூன்றாம் பிறையைப் பார்த்துவிட்டு ஒருவர் மற்றொருவர் முகத்தையே பார்த்தனர்.. இன்று காலையில் இருந்து தன்னை ஆட்டி வைக்கும் அதே முகம்.. அதுவும் இத்தனை அருகாமையில்.. தொண்டை உலர்ந்து போனது அவளுக்கு.

அதுவும் அவ்வளவு நெருக்கமாக.. ராஜாவின் மூச்சுக் காற்று இவள் முகத்தில் வந்து மோத.. அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை.. அவனோ.. 'தோள் கண்டார்.. தோளே கண்டார்' என்பதைப் போல அவள் வலது புருவத்தின் முடிவில் இருக்கும்.. அந்தச் சிறு மச்சத்தின் மீது பார்வையைப் பதித்திருந்தான்.

அவர்கள் பழகிய காலம் முதலே அவன் அதற்குப் பெரிய விசிறி.. குழல் கற்றை சிறிது மறைத்தாலும் அதை ஒதுக்கி.. அந்த மச்சத்தை வருடிப் பார்ப்பான்.. இப்போதும் அந்த யோசனையிலேயே அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நீண்ட நெடுநாட்களுக்குப் பின் அவன் முகம் பார்க்க.. அவளுமே ஒரு கணம் தன்னை மறந்தாள்.. மணிச் சத்தம் கலைக்க.. சுற்றுப்புறம் உணர்ந்தவள்.. வலுக்கட்டாயமாக அவன் நெஞ்சில் கை வைத்து விலக்க.. தன் தாடிக்குள் புன்னகைத்தவன்.. அவள் இடையில் தன் கரத்தின் இருப்பையும்.. அவள் அருகில் தன் இருப்பையும் அழுத்தமாகப் பதிவு செய்து விலகினான்.. கூடவே வில்லத்தனமான ஒரு சிரிப்புடன்.

நடந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு.. மெதுவாக முத்துவைத் தேடி வந்தாள்.. இருவரும் முன்புற பிரகாரத்திற்கு வரவும் அங்கே ராஜாவின் அத்தை ரேவதி அமர்ந்திருக்க.. மகிழ் "சித்தி மா" என ஆசையாக ஓடிப் போய் பின்னிருந்து அவரைக் கட்டிக் கொள்ள.. அவள் கையைப் பற்றி முன்னே இழுத்த ரேவதிக்கு ஆனந்தக் கண்ணீர்..

"எப்படி டி இருக்க.. எப்ப வந்த" என அவள் தலையைத் தடவிக் கேட்க.. "சூப்பரா இருக்கேன் சித்தி மா.. நீயும் உன் வீட்டு அனகோண்டாவும் எப்படி இருக்கிங்க" என பதில் கேள்வி கேட்க.. "அடிங்.. எங்கம்மாவை என்ட்டயே கலாய்க்கிறியா.. நீ ஊருக்கு வரதையே அவங்க தான் சொன்னாங்க.. அத்தையும் அம்மாவும் கோவில்ல பாத்து செம சண்டை போல" என்றார் ரேவதி.

"என் அவ்வா எல்லாம் ஒன்னும் பண்ணியிருக்காது.. எல்லாம் உன் வீட்டு அனகோண்டா வேலை தான்.. ஒரு நாள் இல்லை ஒரு நாள் அபிஷேகத்தில பசையைப் போட்டு கொடுத்து அது வாயை க்ளோஸ் பண்ண வைக்கப் போறேன் பாரு" என்ற மகிழை இடைவெட்டிய முத்து "அப்படியே மீதத்தை உன் பாட்டிக்கும் கொடுத்துடு டி.. இந்த அப்பாவியை வச்சுத்தான் சண்டை இழுத்தாங்க.. கொஞ்சம் மனசாட்சியோட பேசு.. உன் அவ்வாக்கு பேசவே தெரியாதா.. ரெண்டும் எச்சுக் கம்மியில்லாம சரியா இருக்கும்" என நொடித்துக் கொண்டாள்.

அவள் பிறந்தநாள் அன்று பட்ட பாட்டைக் கூற.. இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.. அதற்குள் மூக்கு வேர்த்தவனாய் ராஜா வந்துவிட.. சித்திமா ஒரு எதிர்பார்ப்புடன் இருவரையும் பார்க்க.. மகிழினி அவளிடம் தலையசைத்துவிட்டு முத்துவை இழுத்துக் கொண்டு செல்ல.. முத்துவும் "வரேன் அத்தை.. வரேண்ணா" என விடை பெற்றுக் கொள்ள.. ரேவதியும் ராஜாவின் பின் சென்றார் ஒரு பெருமூச்சுடன்.

முத்து அழைத்து வந்தபடியே வீட்டு வாசலில் மகிழை இறக்கிவிட.. முன்புற தோட்டத்தில் ஃபோன் பேசியபடி உலவிக் கொண்டிருந்த முகிலன்.. இவர்கள் வந்ததை கவனித்தும்.. அறியாதது போல பேச்சைத் தொடர்ந்தான்.
நாளை பள்ளியில் யாரை சந்திக்க வேண்டும்.. எத்தனை மணிக்கு வர வேண்டும் என்பனவற்றை முத்து சொல்லியபடியே கேஷூவலாக பார்ப்பது போல அவனைப் பார்க்க.. அவனோ அரளிச் செடியை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

முத்து காண்டாகி 'இந்த ஜென்மத்துல இது சாமியார் தான்' அவனைக் கண்டு கொள்ளாமல் மகிழிடமே பேசிவிட்டு.. விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காமல்.. நிலவை ரெஸ்ட் எடுக்க அனுப்பி வைத்த சூரியன்.. தன் ஏழு குதிரைகளையும் விரட்டி வேக வேகமாக வந்து பிரசன்னமானான்.

வீடே அமைதியில் மூழ்கியிருக்க.. தினப்படி வேலைகள் மட்டும் அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தது.. குளித்து தயாரானவள் பேபி பிங்க நிற காட்டன் புடவையில் வெளியே வந்தாள்.

மேற்கொண்டு யாரும் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.. கேட்டால் 'உனக்கு ஒரு கும்பிடு.. வேலைக்கு ஒரு கும்பிடு' என கம்பியை நீட்டி விடுவாளோ என்ற பயத்தில் அமைதியைக் கடைபிடித்தனர்.
தாத்தாவோ.. நைனாவோ வேண்டாம் என்பது போல ஏதாவது சொல்லுவார்களா என ஏக்கமாக அவர்கள் முகம் பார்க்க.. அப்படி ஒன்றும் நடக்கவில்லை..

சரியான நேரத்திற்குக் கிளம்பி வந்த ராகவனுடன் அவளும் வெளியேற.. "பிடிச்சுகிட்டியா" எனக் கேட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய.. வேறு எந்தப் பேச்சும் இன்றி அந்தப் பயணம் கழிய.. பள்ளியும் வந்துவிட்டது.

ஶ்ரீ சாரதா வித்யாஸ்ரமம்.. என்ற பெயர்ப் பலகையைத் தாங்கி இருபத்து ஐந்து ஏக்கர் பரப்பளவையும் தன்னுள் அடக்கி கம்பீரமாக அந்தப் பள்ளி நின்றிருக்க.. நைனாவின் பைக்கில் இருந்து இறங்கியவள் 'கேட்டைப் பாத்தாலே பயமாயிருக்கே.. போயிரலாம் நைனா' என்பது போல அவரைப் பார்க்க.. "சரி வா போலாம்" என அவர் உள்ளே அழைக்க.. 'உள்ளே இல்லை வெளியே நைனா' என மனதில் பேசியபடி அவரைப் பின் தொடர்ந்தாள்.

பலியாடு போல பின்னாலேயே இவள் நடக்க.. அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெரும்பான்மையோர் தங்கள் ஊர்க்காரர்களாய் இருக்க.. அவர்கள் வணக்கத்தை தலையசைத்து ஏற்றபடியே அலுவலகம் எங்கே என விசாரித்தபடி நடந்தனர்.. அனைவருக்கும் தாங்க முடியாத வியப்போ வியப்பு.. பின்னே இரு குடும்பத்துக்கும் இருக்கும் பகை என்ன.. பிரச்சனை என்ன.. ஆனால் வாயை விட்டுக் கேட்க தைரியம் தான் வரவில்லை.

ஆஃபிஸை அடைந்தவர்கள்.. அங்கே விஷயம் சொல்லிவிட்டு.. இருவரும் காத்திருக்கத் துவங்கினர்.. ராகவன் கண்களால் பள்ளியை அளவெடுக்க.. மகிழினி அங்கே மீன் தொட்டியில் நீந்தியபடி இருந்த மீன்களை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தாள்.. இருவரது கண்களும் அங்கே பெரிய சைஸ் புகைப்படமாய் சிரித்துக் கொண்டிருந்த குமாரசாமியில் நிலைபெற.. சற்றே கண்கள் கலங்கியது.. சரியாய் அந்த நேரம் உள்ளே நுழைந்தான் யது நந்தன்.

மாமனைக் கண்டதும் நடையின் வேகம் குறைய.. ஒரு மரியாதையான உடல்மொழி அவனிடத்தில்.. 'அதுசரி.. பொண்ணைப் பெத்த மாமன் இல்லையா.. அப்படித்தான் இருக்கும்'.. தேங்கிய நடையை எட்டிப் போட்டு.. தனது ரூமிற்குள் நுழைந்தவன்.. சிலபல உத்தரவுகளைப் பிறப்பிக்க.. ஹெட்மாஸ்டர் அவன் அறைக்கு ஓடி வந்தார்.

சரியாக ஐந்தாம் நிமிடம் ப்யூன் ஒருவர் வந்து மகிழினியை அழைக்க.. நைனாவைப் பார்க்க 'போ' என்பதாய்த் தலையசைக்க.. எதிர்ச்சுவற்றில் இருந்த அப்புச்சியும் 'போ கண்ணா' என்பது போலத் தோன்றியது.
மனதை நிலைப்படுத்தியவள்.. டாக்டர். எஸ். யதுநந்தன்., எம்.எஸ்சி., பி.ஹெச்டி., பிஜிடிசிஏ., பிஜிடிபிஏ., என ஒன்றரை முழ நீளத்திற்கு டிகிரி பொறிக்கப்பட்டிருந்த என்ற கதவில் கை வைத்து அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள்.. 'அதான் டாக்டர்னு போட்ருக்கே.. இன்னும் எதுக்கு அனுமார் வால் மாதிரி பேருக்குப் பின்னாடி அவ்வளவு.. பேரு தான் பெத்த பேரு.. தாகத்துக்கு நீலு லேது' என மனதுள் அவனை வசைபாடிய படியே.. தன் ஃபைலை ஹெட்மாஸ்டரிடம் கொடுத்தாள்.

அந்த விசாலமான அறையில்.. அவன் டேபிளைத் தவிர்த்து.. இருந்த சோஃபாவில் இருவரும் அமர்ந்திருக்க.. அவளுக்காக போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தாள் மகிழினி.. அவள் பதட்டத்தை உணர்ந்தவர் முதலில் சற்றே இலகுவான கேள்விகளைக் கேட்க.. ராஜாவின் புறம் திரும்பாமலேயே அனைத்திற்கும் பதில் அளிக்க.. ஆனாலும் அவன் பார்வை இவள் மேல் படிந்திருப்பதை அவளால் உணர முடிந்தது.

அவள் எண்ணப்படி அவனும் அவளிடம் இந்த நான்கு வருடங்களில் குவிந்திருந்த மாற்றங்களை கணக்கெடுத்தபடி இருந்தான்.. அவன் அவளை இறுதியாகப் பார்த்த போது.. இருபது வயது இளங்கொடியாக இருந்தாள்.

குழந்தைத் தனம் மாறாத முகமும்.. எப்போதும் டாப்ஸூம்.. ஸ்கர்ட்டுமாய்.. விரல் வைத்தால் பதியும் கன்னத்துடனும்.. அலைந்தபடி இருக்கும் துறுதுறு விழிகளுடனும் கொழு கொழுவென்று இருப்பாள்.

இப்போது நன்றாகவே இளைத்து இருந்தாள்.. இதை நேற்று அவளிடை தாங்கிய போதே உணர்ந்திருக்க.. கன்னம் சற்றே ஒட்டிப் போய்.. அலைபாயும் விழிகள் அறிவு சுமந்திருக்க.. அன்று இடை வரை இருந்த கூந்தல் இப்போது முதுகு வரையில் மட்டுமே இருக்க.. இருபத்து நான்கு வயது தளிர்க்கொடியாய் அவன் கருத்தை அள்ளினாள்.

பெருமூச்செறிந்தவன்.. ஹெட்மாஸ்டரிடம் இருந்து அவள் ரெஸ்யூமை வாங்கி "மிஸ் மகிழினி" என அவளைத் தன்புறம் திருப்ப.. பார்வையில் அக்னி நட்சத்திரத்தை அவன் எதிர்பார்த்திருக்க.. அவளோ சலனமற்ற விழிகளால் அவனை வெறித்தாள்.

அவனுக்குப் புரிந்தது.. நேற்றையை நிகழ்வின் தாக்கத்தில் இருந்து அவள் வெளிவந்துவிட்டாள் என.. இவனும் இறுக்கமான முக பாவத்துடனேயே "வாட் ஆர் தி அப்ளிகேஷன்ஸ் ஆஃப் நானோ டெக்னாலஜி" என தன் முதல் கேள்வியைத் துவங்க..

"ஆப்டிகல் என்ஜினியரிங் அன்ட் கம்யுனிக்கேஷன், டிஃபென்ஸ அன்ட் செக்யூரிட்டி, அக்ரிகல்சர் அன்ட் ஃபுட், எனர்ஜி ஸ்டோரேஜ், டெக்ஸ்டைல், பயோடெக்னாலஜி" என ஆரம்பித்து அவன் கேள்விக்கு விடை பகன்றாள்.. கடமையே கண்ணாக.. ஒன்றாம் வகுப்பில் படித்த 'பொம்மை பொம்மை.. பொம்மை பார்' பாடலைத் தவிர்த்து.. இத்தனை வருடங்களில் அவள் படித்த அத்தனையையும் கேட்டு விடுவான் போல.. மேலும் சில கேள்விகள் கேட்டு.. அவள் பதிலில் திருப்தி பெற்றவனாய்.. தன் முன்பிருந்த டீபாயில் வைத்திருந்த மார்க்கரை எடுத்து நீட்டி.. அங்கிருந்த ஸ்டேண்டிங் போர்டில்.. ஒரு டெமோ க்ளாஸ் எடுக்கச் சொன்னான்.

'அடியே.. முத்து.. முதல்ல உன்னை டிவோர்ஸ் பண்ணனும்டி.. நான் உனக்கு என்னடி பாவம் பண்ணேன்.. இவன்ட்ட கொண்டுவந்து என்னைக் கோர்த்து விட்டுட்டிங்களே' என புலம்பியபடியே.. ஏற்கெனவே ஆங்காங்கு கிறுக்கல்கள் இருந்த போர்டை ரஃப் செய்தவாறே என்ன சொல்வது.. எப்படிச் சொல்வது என யோசித்தாள்.

பின் முடிவுக்கு வந்தவளாய்.. தன் பிஜி பிராஜெக்டை க்ளியராக எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி முடிக்க.. மீண்டும் அதில் கேள்வி கேட்கத் துவங்கினான் யது நந்தன்.

'வைவால கூட இவ்வளவு கேட்கலைடா ராசா.. மெத்தப் படிச்சேன்ற திமிரு' என மனதில் கருவியவாறே அவன் கேள்விகளுக்கு பதில் அளிக்க.. தெரியாத கேள்விக்கு மழுப்பலாய் பதில் சொன்னவளைக் கண்டு சிரிப்பு எழ.. அதுவும் அவள் கண்ணில் பட்டு அவனுக்கான க்ரைம் ரேட் கூடிக் கொண்டே சென்றது.
ஒரு வழியாய் அவன் முடித்துவிட.. கோப மூச்சுடன்.. அவன் மேல் உள்ள கோவத்தில் தான் எழுதியை அழுத்தித் துடைத்தவளின் வெறியை சற்று ஏற்ற ஹெட்மாஸ்டர் "உங்க ஹேண்ட் ரைட்டிங் நல்லாருக்கு.. எதாவது அந்த போர்டுல எழுதிடுங்க" என்றார்.

'ம்ம்.. அசிங்க அசிங்கமா எழுதறேன்.. ஒரு பச்சைக் குழந்தையை இவ்வளவு நேரம் வறுத்து எடுத்துட்டு.. இப்ப எழுதனுமாம்' என கடுப்பானாள் மகிழினி.. அவளுக்குப் பிடிக்காது எனத் தெரிந்தும்.. வந்ததில் இருந்து ஆங்கிலத்திலேயே பேசி.. அவளை அவன் வெறுப்பேற்றி இருக்க.. எனவே வேண்டுமென்றே 'கேடில் விழுச்செல்வம் கல்வி' என சுத்த தமிழில் எழுதிவிட்டு மார்க்கரை அதற்குரிய இடத்தில் வைக்க.. அவள் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் கவனித்துக் கொண்டிருந்தான் ராஜா.

தான் அமர்ந்திருந்த சோஃபாவில் இருந்து எழுந்தவன்.. தன் மேஜையில் இருந்த.. மயில் வடிவ பென்ஸ்டேன்டில் இருந்த பேனாவை எடுத்து.. அவள் ரெஸ்யூமில் எதையோ எழுதி ஹெட்மாஸ்டரிடம் கொடுக்க.. அவரும் ஆச்சரியமாக அதைப் பார்த்தபடி வெளியேறிவிட்டார்.

அவளைப் பார்த்தவன் "ஒரிஜினல்ஸ் எல்லாம் கொடுத்துடுங்க.. ஜூன்ல இருந்து ஜாய்ன் பண்ணிக்கலாம்" என்றான்.

'உங்கிட்ட ஒரிஜினலைக் கொடுத்துட்டு.. நான் எந்த மொட்டைக் கிணத்துல போய் விழ' என எண்ணியவாறே.. "தேங்க் யூ சார்" என அழுத்திச் சொல்லிவிட்டு வெளியேறிட.. அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டு.. சுதந்திரமாக சுவாசிக்க ஆரம்பித்தான் ராஜா.

தான் செய்வது சரியா தவறா என ஒன்றும் புரியவில்லை.. ஏற்கனவே போதும்.. போதும் என்றளவிற்கு அவளைப் படுத்தியிருக்க.. மீண்டும் அவளைத் தன் வாழ்வில் நுழைப்பது சரிதானா என உள் மனம் நச்சரிக்கத் துவங்கியது.

அவள் நெருக்கத்தில் மழைக்கால ஈசலாய் மனம்.. அவளைச் சுற்றி சுற்றிப் பறக்க.. அவளது விலகலில் மறுநாளைய ஈசலாய் சிறகொடிந்து போய்விடுகின்றது.. நான்கு வருடம் அவன் செய்த பாவத்திற்கான தண்டனையையும்.. பிரிவுத் துயரையும்.. அனுபவித்தாயிற்று.. இனி என்ன செய்வது என அவன் வருந்தினான்.

இங்கு அவனின் நாயகியோ.. 'அவனுக்கென்ன நல்லா கெளுத்தியாத் தானே இருக்கான்.. கொஞ்சமாவது செஞ்ச தப்பை நினைச்சு வேதனைப் படறவன் மாதிரியா இருக்கான்' என அவனிற்கு முற்றிலும் எதிர்ப் பதமாய் நினைத்தபடி தந்தையுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள்.
ஆனால் அவனது தாடியும்.. மேஜையை அலங்கரித்திருந்த மயிலும்.. அவள் மன பாரத்தை இன்னவென்றே தெரியாமல் சற்றே.இளகுவாக்க.. "மயிலு" என்ற ஆழ்ந்த குரல் விடிகாலைத் தூக்கமாய்.. சுகமாய் அவளைத் தாக்கியது.

திண்ணையிலேயே அமர்ந்திருந்த அமிர்து அவ்வாவிடம் வேலை கிடைத்ததை சொல்லியவள்.. உள்ளே செல்ல.. அவள் சோர்ந்த முகத்தைப் பார்த்த தாத்தா 'வேற வழி எனக்குத் தெரியலையே கண்ணா' என எண்ணியவாறே.. கொளுத்தும் வெயிலையும் பார்க்காமல்.. வெளியே கிளம்ப.. அவர் சமாதிக்குத் தான் செல்கிறார் என அனைவருக்குமே புரிந்தே இருந்தது.

இரவு நந்தாவின் வீட்டில்.. "அந்தப் பிள்ளையை இப்படிப் போட்டுக் கொடுமை பண்றாளே.. இவனைப் பாரு நாலு ஆட்டை ஒன்னா முழுங்குன மாதிரி நின்னுட்டே இருக்கானே" என சாரதா அப்பத்தா சீரியல் மாமியாரை எதிர்த்து போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்க.. அவனும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.

"கேள்விப் பட்டதெல்லாம் நிஜமா" என சரவணப் பெருமாளின் பொதுவான கேள்வியில்.. அனைவரும் அவனைப் பார்க்க.. நந்தாவோ வாயில் வைத்த பணியாரத்தை மெதுவாக ரசித்து ருசித்து முழுங்கிவிட்டு ஆம் என்பதாய் தலையசைத்தான்.

அவருக்கு கோவம் எகிறியது.. பல்லைக் கடித்தபடியே "இதெல்லாம் தேவை தானா.. சும்மா இருக்க ஊரு வாய்க்கு நீங்களே அவலாப் போகப் போறிங்களா" எனக் கேட்க.. "இதில் பேச என்ன இருக்கு.. அவளே அமைதியே வேலைக்கு வர சம்மதிச்சுட்டா.. நீங்க ஏன் அவளுக்கு மௌத்பீஸா ஓவர்டைம் பாக்கறிங்க" என நக்கலாகக் கேட்க..

'எங்க அவ.. புள்ளைப் பெத்திருக்காளாம் புள்ளை' என மனைவியை முறைக்க.. அவரோ மகனது தட்டில் காரச்சட்னியை வைக்க மட்டுமே பிறந்தவர் போல.. அந்தப் பணியை செவ்வனே செய்தார்.

விளம்பர இடைவேளை வர.. மகன் மருமகளை முறைப்பதைக் கண்ட அப்பத்தா "ஏன்டா வெறைச்ச கோழி மாதிரி உக்காந்துட்டு இருக்க" என அவர் பங்குக்கு கலாய்க்க.. "ஆமா.. உம்பேரன் பண்ற காரியத்துக்கு நான் குளுகுளுன்னு இருக்கேன்.. போவியா" என அவரிடம் பாய்ந்தார்.

பேரனைப் பார்த்து என்னவென விசாரிக்க.. அவனும் மகிழ் இன்று பள்ளிக்கு வந்ததைச் சொன்னான்.. அனைத்தையும் கேட்டவர் "இதுல என்னடா தப்பு இருக்கு.. மேக்கால ஊட்டுக்காரியே சத்தமில்லாம பேத்தியை அனுப்பறா.. நீ ஏன்டா வாய்ல குதிச்சுட்டு இருக்க" என மகனிடம் எதிர்கேள்வி கேட்டார்.

அன்னையை முறைத்தவர் "ஏம்மா ஒன்னுமே இல்லையா.. இவன் மட்டும் அந்தப் புள்ளையை மறுபடியும் எதாவது பண்ணனும்னு நினைச்சா.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என மிரட்ட.. அப்பத்தா அசால்ட்டாக "பண்றாங்க.. சட்டியும் பானையும்.. அவளே ஜில்லாக் கேடி.. அவளை எம்பேரன் எதாவது பண்ணிடுவானா.. போவானா" என்றார்.

"உனக்கே நீ சொல்றது நல்லாருக்கா.. உம்பேரன் ஏற்கெனவே பண்ண பிரச்சினை உனக்குத் தெரியாதா.. சும்மாவே ஊருக்காரங்க ஊறுதுன்னா பறக்குதுன்னு சொல்லுவாங்க.. அவங்களுக்கு நாமளே பேச வாய்ப்பு கொடுக்கனுமா" என நொந்து போனவராகக் கேட்க

"யார் பேசறாங்கன்னு நானும் பாக்கறேன்.. எவளாச்சும் பேசினா அப்புறம் இருக்கு கச்சேரி.. சரி சரி.. சித்த நேரம் கம்முனு இரு.. மாமியாக்காரி வந்துட்டா" என சீரியலில் மூழ்கிப் போக.. நந்தா அவரையும் பார்த்து ஒரு புன்சிரிப்பை சிந்திவிட்டு எழுந்து சென்றுவிட.. பெருமாள் தான் மண்டை குழம்பிப் போனார்.


நாயகன் வருவான்...
 
அருமையான பதிவு
காலம் காலமாக பிரச்சினை போல
 
Top