Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 15

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் – 15

தமயந்தி சமையலறையில் காட்டிய கோப உணர்ச்சியை மறைய விடாமல், தொடர்ந்து அவனின் சமையல் திறமையை அவளிடம் காட்டி, பரிசாக அவளின் கோபத்தைப் பெற்றான் நளன்..

தினமும் மாலை நேர சிற்றுண்டி செய்வதையே வாடிக்கையாகவும் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, செய்தவற்றை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று அவளையே ஒட்டிக்கொண்டு அலைந்தான்..

தமயந்தியும் அவனுடன் நன்றாகவே வாயடிக்க ஆரம்பித்தாள்.. அவனுடன் கழிக்கும் அந்த மாலை நேரத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கவும் தொடங்கினாள்..

அந்த ஆவல் நளனின் கண்களிலிருந்து தப்பவில்லை.. அவளிடம் தன்னுடையை காதலை திருமணத்திற்கு முன்னரே தெரிவித்திருந்தாலும், மீண்டும் ஒரு முறை மனதில் இருப்பவற்றை எல்லாம் சொல்லி, அவளுடைய மனக் குழப்பத்தையும் நீக்கி, அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், அந்த நல்ல நேரத்திற்காக காத்திருந்தான் நளன்.

உணவின் மீதான அவளது வெறுப்பை போக்குவதற்கு மருத்துவரின் உதவியை நாடியிருந்தான் நளன்..

அந்த மருத்துவரும் அவளின் மனதை வேறு எதிலாவது திசை திருப்பினால் சீக்கிரமே அந்த வெறுப்பு நீங்கலாம் என்று அறிவுரை கூறினார்.
அதற்காக அவளை மேற்கொண்டு படிக்க சொன்னான் நளன்..

‘படிப்பு’ என்று சொன்னதுமே அவளின் முகம் வேப்பங்காயை கடித்தது போலானது.. அதைப்பார்த்து சிரிக்க தொடங்கினான் அவன்..

“ஹா..ஹா..!! இது என்ன உன் முகம் இப்படி போகுது..!! ஹா...ஹ்ஹா.!!” என்று சிரித்தவனை, முறைத்தாள் தமயந்தி..

“அதான் உங்களுக்கு தெரியுமே..!! நான் பி.காம். கூட ஜஸ்ட் பாஸ் தான் பண்ணினேன்னு, இப்போ எதுக்கு என்னை படிக்க சொல்றீங்க?”

“உனக்கு அறிவு எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. படிப்பு மேல இன்ட்ரெஸ்ட் தான் இல்லை..”

“நான் இப்போ எனக்கு அறிவு இல்லைன்னு உங்க கிட்ட சொன்னேனா?” என்று பொங்கினாள் தமயந்தி..

“கூல்..கூல்..!! மை டியர் பொண்டாட்டி..!! உனக்கு பிடிச்ச சப்ஜெக்டா ஏதாவது செலக்ட் பண்ணி படியேன் தமும்மா..” என்று சமாதானக் கொடியை பறக்கவிட்டான் நளன்..

“அது நா.ன்.. இல்லை.. எனக்கு ப.ப்..படிப்பு எல்லாம் வேண்டாம்..” என்று தயங்கினாள் தமயந்தி.

“உன்னை தத்தின்னு சொல்றதுல தப்பே இல்லை..”

“தத்தியா? யாரு நானா, நானா?”

“ஹா..ஹா. சந்திரமுகி..!! நீங்க தத்தி மட்டும் இல்லை மேடம்.. மந்தியும் தான்.. உன் பேருலேயே மந்தின்னு வச்சுக்கிட்டு இருக்கியே...!! என்னோட அழகு செல்ல மந்திடா குட்டி நீ..!!” என்று அவளின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சினான் நளன்..

“யோவ்..!! நீ என்ன தான் என்னை கோபப்படுத்தினாலும், நான் படிக்க மட்டும் சம்மதம்ன்னு சொல்லவே மாட்டேன்..” என்று சொன்னவளை வாயில் கைவைத்து ஆச்சர்ய பார்வைப் பார்த்தான் நளன்..

‘ஆஹா..!! படிக்க சொன்னதும் என் பொண்டாட்டிக்கு என் மேல ரொம்ப..ப பாசம் பொங்குதே..!’ என்று மனதிலேயே சொல்லிக்கொண்டான் நளன்..

“இங்கப்பாருங்க என்னால படிக்க எல்லாம் முடியாது.. இனிமே அதப்பத்தி பேசவே செய்யாதீங்க..” என்றாள் தமயந்தி..

“அதான் ‘யோவ்’ ன்னு சொல்லி என்னை ஆப் பண்ணிட்டியே..!! இனிமே படிப்ப பத்தி பேசுவேனா?” என்றான் நளன் சற்று பயந்தவன் போல்..

“அய்யோ..!! சாரிங்க..!! அது ஒரு ப்ளோல வந்துடுச்சு.. ”உங்களை ஹர்ட் பண்ணனும்ன்னு நினைக்கல.. ரொம்ப சாரிங்க..!!”

“அச்சோ தமு..!! நான் சும்மா தான் சொன்னேன்.. நீ என்னை வாடா போடான்னு சொன்னாக்கூட எனக்கு கோபமே வராது.. அப்படி கூப்பிட்டா செம கிக்கா இருக்கும்.. நீ இப்போ தான் ‘யோவ்’ ரேஞ்க்கு வந்து இருக்க.. போக போக எல்லாம் வரும்..” என்று கிண்டலடித்தான் நளன்..

“சரி தமு ஜோக்ஸ் அப்பார்ட், டாக்டர் சொன்னதை கேட்ட இல்ல.. உன் உடம்பையும் மனசையும் ஆரோக்கியமா வச்சுக்கிறது உன் கைல தான் இருக்கு.. அதுக்கு கண்டிப்பா நான் பக்கபலமா இருப்பேன்.. உன் மைன்ட டைவேர்ட் செய்ய தான் படிக்க சொல்றேன்.. பட் உனக்கு பிடிக்கலன்னா உன்னை போர்ஸ் பண்ண மாட்டேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்..”

“புரியுதுங்க.. எனக்கு டைம் கொடுங்க, மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு சொல்றேன்..”

“கண்டிப்பாடா தமு..!!” என்று அவளை தழுவி ஆறுதலாக தலையை தடவிக்கொடுத்தான் நளன்..

இப்படியே மேலும் நான்கு மாதங்கள் கடந்தன..

தமயந்தியின் சமையல் மிக நன்றாக இருந்தது.. நளன் தினமும் அவளின் கைப்பக்குவத்தை பாராட்டாமல் இருக்கமாட்டான்.. அவளின் கைமணம் அவள் சமையலில் நன்றாக தெரிந்தது..

அந்த கைமணத்தையே படிப்பாக ஆக்கினான் நளன்.. தமயந்திக்கும் அதில் மிகுந்த விருப்பம் இருக்கவே, அவளை தரமணியில் இருந்த கல்லூரியில், கேட்டரிங் டெக்னாலஜி டிப்ளமோ கோர்ஸ் சேர்த்து விட்டான் நளன்..

உணவு சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க ஆரம்பித்தது ஒரு விதத்தில் தமயந்திக்கு நன்மையாக அமைந்தது.. உணவின் மீதான வெறுப்பும் பெரிதளவு குறைய ஆரம்பித்தது.. மருத்துவரும் அதற்கான மருந்துகளை சற்றே குறைக்க ஆரம்பித்தார்.

சுந்தரமும், மீனாட்சியும் இதில் பெரும் ஆறுதல் அடைந்திருந்தனர்..

தமயந்தி கல்லூரி சேர்ந்ததினால், ‘சுந்தர்தர்மாவை’ முழுவதுமாக நளனேப் பார்த்துக்கொண்டான்.. இதுவரை ரெஸ்டாரென்ட்சை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தவனுக்கு, சுந்தரதர்மா ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது..

எதையுமே எளிதாக கிரஹித்துக்கொள்பவனுக்கு இந்த வியாபார நுணுக்கமும் எளிதாகவே இருந்தது..

திருச்சியில் இருக்கும் ‘சுந்தர்தர்மா’ வில் ஆடைகள் மட்டுமே விற்பனைக்கு இருந்தன.. ஆனால், இங்கு ஆடைகளுடன், அனைத்து விதமான காஸ்மெட்டிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று அனைத்துமே விற்பனைக்கு வைக்கப்பட்டது..

நளனும் தமயந்தியும் இணைந்து எடுத்த முடிவு தான் இது..

சமையல் கலை வல்லூனரான நளனுக்கு, அந்த கடையில் இருக்கும் இடத்தில், எல்லோருக்கும் எல்லாப் பொருட்களும் தெரிவது போல் வைப்பது சற்று சவாலாகத் தான் இருந்தது..

ஒரு சில வாரங்களிலேயே அந்த கடையில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.. அதிலும் நளனின் ஐடியாவான, ‘டெரகோட்டா’ ஜுவல்ஸ் மற்றும் சில்க் த்ரெட் ஜுவல்ஸ் க்கு நல்ல வரவேற்பு நன்றாக கிடைத்தது..

தி.நகரில் மெயினான இடத்தில் அவர்களின் ‘சுந்தரதர்மா’ கடை இருந்ததால், வியாபாரம் மிக நன்றாகவே இருந்தது..

தினமும் அவளை கல்லூரிக்கு அழைத்து சென்று, பின் அங்கிருந்து சுந்தரதர்மாவிற்கு அழைத்து வருவதை மிகவும் ரசனையுடன் செய்தான் நளன்..
நளனுடன் தி.நகரில் இருந்து தரமணிக்கு இருசக்கர வாகனத்தில் தமயந்தி தினமும் பயணித்ததால், அவர்களுக்கிடையே மனதளவில் இருந்த இடைவெளி சற்று குறைய ஆரம்பித்தது..

இன்னும் நளன் தமயந்தியிடம் அவர்களின் வாழ்க்கை குறித்து பேச ஆரம்பிக்கவில்லை.. அந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறான்..
அதற்கான நேரமும் வந்தது..

அவர்களின் குடியிருப்பில் இருந்த சிறு பூங்காவில் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்திருப்பது நள – தமயந்தியின் அன்றாட வழக்கமாக இருந்தது..

அன்றும் ‘சுந்தரதர்மா’ வில் இருந்து வந்தவர்கள் அங்கிருந்த சிறு கல் மேடையில் அமர்ந்து, குழந்தைகள் விளையாடுவதை பார்த்திருந்தனர்.. நடுநடுவே சிறு குரலில் ஏதேதோ பேசி சிரித்தும் கொண்டிருந்தனர்..

அங்கிருந்த சிறுவர்கள் ‘சி கு லி பா’ என்று சொல்லி கைகளில் இருந்த பத்து விரல்களையும் உபயோகித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.. அவ்வப்போது சொல்லும் எழுத்தின் போது அந்த விரல்களின் முத்திரை மாறியது..

கிட்டத்தட்ட பத்து பதினைந்து குழந்தைகள் விளையாடியதால் அவர்கள் அந்த ‘சி கு லி பா’ வை, வேக வேகமாக, ஒரு எழுத்தோடு மற்றொரு எழுத்தையும் சேர்த்து, சொல்லிக்கொண்டே போக, அந்த வேகத்தில் சில குழந்தைகள் தடுமாறி முத்திரையை மாற்றி மாற்றி வைத்து விளையாட்டில் தோல்வியை தழுவினர்..

‘ஹே!!! அவுட்..!!’ என்ற கத்தலுடன் மற்ற குழந்தைகள் விளையாட்டை தொடர்ந்தனர்..

அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த நளன், “தமு உள்ள போலாமா?” என்றான்..

“ஹே..!! இங்க பாருங்கப்பா..!! அந்த சுட்டிப் பையனும் அவுட்..!! அச்சுச்சோ..!! சுட்டி பையன் அழறானே..!!” என்ற தமயந்தியை தாபத்துடன் பார்த்தான் நளன்..

‘ஆமா அந்த பையன் அழறது மட்டும் தான் தெரியும்..!! இங்க ஒருத்தன் கல்யாணத்துக்கு முன்னாடியே காதலை சொல்லிட்டு, அவ பின்னாடியே அலையறது கண்ணுக்கு தெரிஞ்சாலும், கண்டுக்கறதே கிடையாது..!!’ என்று சலித்துக்கொண்டான் செல்லமாக..

“தமு வா..!”

“இருங்க..!! கேம் இன்டரஸ்ட்டிங்கா போகுது..”

‘ரொம்ப முக்கியம்..’ என்று மனதினுள் சொல்லிக்கொண்டான் நளன்..

“சரி நீ பார்த்துட்டு வா..!! நான் டிபன் செஞ்சுட்டு கூப்பிடறேன்..”

“சரிங்க..!!” என்ற தமயந்தியை ‘அடிப்பாவி..!! சும்மா பேச்சுக்காவது ஹெல்ப் செய்ய வரேன் ன்னு சொல்றாளா? பாரு..!’ என்று செல்லமாக திட்டிக்கொண்டே உள்ளே வீட்டினுள் சென்றான் நளன்..

வீட்டினுள் வந்தவனுக்கு அன்றைய சிற்றுண்டியை செய்ய மனமே வரவில்லை.. தமயந்தி மீதான தாப உணர்ச்சியே அதிகமாக இருந்தது..
சற்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டு, அங்கிருந்த பால்கனியில் இருந்து தன் மனையாளையே பார்த்திருந்தான்..

முதன் முதலில் அவளைப் பார்த்த போது, அவள் கண்களில் இருந்த சோகமும், மயக்கமும் இப்போது சற்று குறைந்திருந்தது என்பதை புரிந்துக்கொண்டான் நளன்.

அவளின் கண்களையே பார்த்திருந்தவனுக்கு, இனிமேலும் தள்ளிப் போட விருப்பம் இல்லாததால், அன்றே அவளிடம் அவர்களின் வாழ்க்கை குறித்து பேசுவது என்று முடிவு செய்தான்..

அதை எப்படி ஆரம்பிப்பது என்று சற்று நேரம் சிந்தித்தான்..

அவளின் மனது நோகாமல் அவளிடம் பேசுவது என்று முடிவு செய்துக்கொண்டான்..

இப்படியே மேலும் ஒரு முப்பது நிமிடங்கள் கழிய, குழந்தைகள் அனைவரும் உள்ளே சென்றதால், தமயந்தியும் வீட்டினுள் நுழைந்தாள்..

“என்ன டிபன் செஞ்சிங்கப்பா?” என்று கேட்டவளை உற்றுப்பார்த்தான் நளன்..

“என்ன ஆச்சு? எதுக்கு இப்படிப் பார்க்கறீங்க?” என்று கேட்டவளின் குரலில் நிறைய வெட்கம் தெரிந்தது..

“இன்னிக்கு என்னால ஒண்ணுமே செய்ய முடியலை தமும்மா.. டீ மட்டும் போட்டு தரேன்.. நைட் வெளில போய் சாப்பிடலாம்.. என்ன ஓகேவா?”

“ஏன்மா, என்னாச்சு? டிபன் நானே செய்யறேன்.. உங்க உடம்பு நல்லாத்தானே இருக்கு? உங்களைப் பார்த்தாலே ஏதோ டிஸ்டர்ப்டா இருக்கிற மாதிரி இருக்கு..” என்ற தமயந்தி அவனின் தலையில் கை வைத்துப் பார்த்தாள்.

“பீவர் எல்லாம் இல்லைடா, நான் நல்லாத்தான் இருக்கேன் தமு..!!”

“சரிங்க நானே டீ போடறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க போங்க..!”

“தமு இந்த ‘சி கு லி பா’ கேமை நாம இரண்டு பேரும் விளையாடலாமா?” என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டான் நளன்..

“என்னது? உங்களுக்கு இன்னிக்கு என்னமோ ஆச்சு!! நாம என்ன இன்னும் சின்ன குழந்தையா? போய் வேற வேலை எதாச்சும் இருந்தா பாருங்க..!!” என்று நழுவினாள் தமயந்தி..

நளனின் பார்வையில் இருந்த தாபம் அவளை என்னவோ செய்ததால் அந்த இடத்தை விட்டு அகலுவதிலேயே குறியாக இருந்தாள் தமயந்தி..

“நாம விளையாடப் போற கேம், அடல்ட்ஸ் ஒன்லி கேம் தான்.. சோ இந்த கேம் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்..”

“ஹா..ன்..!!” என்று வாயின் மீது கை வைத்து மூடி, அவனையே பார்த்தாள் தமயந்தி..

அவளின் கையை வாயின் மீதிருந்து எடுத்து, அவளை அருகே இழுத்து, அவளின் தோளின் மீது கைப்போட்டுக் கொண்டபடியே அவளிடம் பேசினான் நளன்.

“இந்த கேம்க்குன்னு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் ஒண்ணும் பெரிசா கிடையாது.. அந்த அந்த டைம்க்கு ஏத்த மாதிரி நாமே ரூல்ஸ் சேன்ஜ் பண்ணிக்கலாம்..” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தபடியே கூறியவன், தொடர்ந்து,

“இந்த கேமை இப்போ உடனே விளையாடனும்ன்னு இல்ல.. பட் இப்போ உனக்கு டெமோ மட்டும் காட்டறேன்.. இப்போ நீ ‘சி கு லி பா’ ன்னு சொல்லு தமு.. என்றான் நளன்..

ஒருவேளை நிஜமாகவே விளையாட்டு தானோ என்று சந்தேகித்தவள், ‘சி கு லி பா’ என்றாள் மெதுவாக..

“இல்லை தமு, இந்த கேம்ல இப்படி சொல்லக் கூடாது.. சீக்கு!!(cheek) லிப்பா!!(lip) ன்னு, கிக்கா சொல்லணும்.. ‘சீக்கு லிப்பா’ ன்னு சொன்ன வுடனே, இந்த சீக்குக்கு இந்த லிப்பால இப்படிதான் செய்யணும்..” என்று சொல்லி அவளின் கன்னத்தில் அவனின் இதழ்களை அழுந்தப் பதித்தான்..

அதில் மயங்கி நின்றிருந்த தமயந்தியைப் பார்த்து, “இப்போ உன்னோட டர்ன்டா குட்டிமா, எங்க செய்ங்க பார்க்கலாம்..!!” என்றான் நளன்..

அவனை நிமிர்ந்துப்பார்த்த தமயந்தி வெட்கத்துடன் ஓட ஆரம்பிக்க, அவளின் கை பிடித்து தடுத்தான் நளன்..

“கேம்ல இந்த மாதிரி சீட்டிங் செய்யறவங்களுக்கு பனிஷ்மெண்ட் கூட உண்டு..!! இப்போ உன்னோட பனிஷ்மெண்ட்..!!” என்றபடியே அவளை அருகே இழுத்து, அவளின் இதழ்களுக்கு அவனின் இதழ்களால் தண்டனை கொடுத்தான் நளன்.
 
Top