Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - இறுதி பதிவு

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் – 16

தமயந்திக்கு நளனின் இதழணைப்பு, வெட்கம் கலந்த மயக்கத்தை கொடுத்தாலும், மனதில் குற்ற உணர்ச்சியே அதிகம் இருந்தது.. அதனால் அந்த இடத்தை விட்டு செல்லவே விரும்பினாள்.

நளனிற்கு தமயந்தியின் ஒத்துழைப்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.. அந்த ஒத்துழைப்பு சிலநொடிகள் தான் இருந்திருக்கும்.. அதற்குள் அவளின் குற்ற உணர்ச்சி தலை தூக்க அவனை விட்டு விலக முயன்றாள் தமயந்தி..

நளனோ அதை உணராமல் மீண்டும் மீண்டும் அவளின் இதழை சிறை செய்வதிலேயே ஆழ்ந்திருந்தான்.. அவனின் தாப உணர்ச்சியே அதிகம் இருந்ததால், தமயந்தியின் விலகலை உணர சில நிமிடங்கள் ஆனது..

தமயந்தியின் விலகலை உணர்ந்ததும், ‘ஏன்?’ என்பது போல் பார்வையாலேயே தமயந்தியிடம் வினவினான்..

“சா..ர்.ரி..!! என..எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..!! அதுக்கு முன்ன எனக்கு கொஞ்சம் பேசணும்..!!”

“சாரி எல்லாம் வேண்டாம் குட்டிமா..!! இன்னிக்கே பேசலாம் தமும்மா..!! எனக்கும் உன் கிட்ட பேச நிறைய விஷயம் இருக்கு..!!”

“முதல்ல நானே பேசிடறேனே..!!” என்று அவசர அவசரமாக கூறினாள் தமயந்தி..

“சரி நீயே பேசு..!!” என்று விட்டுக்கொடுத்தான் நளன்..

“என்னால.. எனக்கு..” என்று சொல்ல ஆரம்பித்தவளுக்கு, அதற்கு மேல் எப்படி பேசுவது என்பது புரியாமல் போனதால், நளனையே அவஸ்தையாகப் பார்த்தாள் தமயந்தி..

“இங்க பாரு தமயந்தி, ஹஸ்பண்ட் அண்ட் வைப்குள்ள பேசறதுக்கு, எந்த வித தயக்கமும் தேவையில்லை.. உன்னோட இந்த அவஸ்தையும் எனக்கு புரியாமல் இல்லை.. ஆனா நமக்குள்ள இது அவசியமில்லாதது.. சரிவிடு..!! நானே பேசறேன்..!!”

“இல்ல இல்லைங்க!! நானே சொல்லி முடிச்சுடறேன் ப்ளீஸ்..!!”

“சரி தமு சொல்லு!!”

“இல்லை நான்.. எனக்கு அந்த முதல் கல்யாணம்..!” என்று ஆரம்பித்தவள் தொடர்ந்து அதைப்பற்றி பேச ஆரம்பித்தாள்..

“அஸ்வினோடான திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க முழு காரணமும் மாமா தர்மா மட்டும் தான்.. அப்பா, அம்மா, மாமா எல்லோரும் முடிவை என்னோட விருப்பத்திற்கே விட்டுடாங்க தான்.. ஆனா எனக்கு தான் எப்படியும் கல்யாணம் செய்யப் போறோம், முதல்ல வந்த வரனே எங்க குடும்பத்துல எல்லாருக்கும் பிடிச்சுருக்கே.! அதிலும் தர்மா மாமாவுக்கு இந்த சம்பந்தம் ரொம்ப பிடிச்சது அவர் கண்ணுலேயே தெரிந்ததால், அவருடைய விருப்பத்தை உடனே நிறைவேற்றும் எண்ணமே எனக்கு இருந்துச்சு.... அதான் கொஞ்சம் கூட யோசிக்காம கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்..

அவன் மீது எந்தவித விருப்போ, வெறுப்போ எதுவும் தெரியலை.. கல்யாணத்திற்கு சம்மதிச்சதுக்கு பிறகு, நிறைய முறை திருமணம் முடிந்தால் அவன் மீது காதல் வருமோ என்று நினைத்திருக்கிறேன்.. என்னுடைய தோழிகள் கூட ‘மஞ்சள் கயிறு மேஜிக் செய்யுமடி தமு..!’ ன்னு என்னை கேலி செய்திருக்கிறார்கள்.. அப்படிப்பட்ட மேஜிக் நிஜமாகவே நடந்து விடும் என்ற அசட்டு தனத்தில் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்..

அதனால் அந்த திருமணத்தை சற்று ஆர்வத்துடனே செய்துக்கொண்டேன்.. அந்த ஆர்வம் எப்படின்னா? என்.. என்ன சொல்றது? புரியலையே..!!” என்று சற்று சிந்தித்தவள் “உங்களுக்கு புரியுதா?” என்று கேட்டாள் தமயந்தி..

“தமும்மா நீயே சொல்லு..!! திரும்பவும் சொல்றேன்.. என்கிட்ட எந்த தயக்கமும் வேண்டாம்மா..!!”

“ம்ம் புரியுதுப்பா..!! நானே சொல்கிறேன்..!! அன்றைய கதாநாயகியா நானே இருப்பேன்.. எல்லோரும் என்னையே திரும்பி திரும்பிப் பார்ப்பாங்க..!! எனக்காக பிரத்யேகமா செஞ்சுருந்த புடவைகள் பத்தி பேசுவாங்க..!! அதுக்கு மேட்சிங்கா வாங்கியிருந்த நகைகளை ஆசையாப் பார்ப்பாங்க..” என்று சொல்லி நளனை நிமிர்ந்துப் பார்த்தவள் முகத்தில் தயக்கம் தெரிந்தது..

அந்த தயக்கத்தை உடனே தவிர்த்து, “ஒரு இள வயது ஆணுடன் கல்யாண மேடையில், முழு அலங்காரத்துடன் தனியே நிற்க போகிறோம்ங்கற ஆர்வம், அந்த ஆணுடன் நிற்கும் போது என் தோழிப் பெண்களின் கண்களில் தெரியும் பொறாமையைப் பார்க்கும் ஆர்வம்..!! இதெல்லாம் தான் நான் ஆர்வமா கல்யாணம் செய்துக்கொண்டதுக்கான காரணங்கள்... இதெல்லாம் தப்பா?” என்று வினவியவளை ஆரத்தழுவிக்கொண்டான் நளன்..

“இல்லை தமு..!! இதெல்லாம் கல்யாணமேடையில் இருக்கும் பெண்ணின் சாதாரண ஆர்வம் தான்.. இதுல தப்புன்னு ஒண்ணுமே இல்லை..!!” என்றான் நளன்..

“உங்களுக்காவது புரிஞ்சுதே..!!” என்றவள், “அந்த ஆர்வத்துலயே இருந்ததுனால பக்கத்துல இருக்கிறவன், என்னை பிடிச்சு கல்யாணம் செய்கிறானா, அன்றைய நாள் அவனுக்கு மகிழ்ச்சியா இருக்கா, இல்லையா? ன்னு எதுவுமே நான் கவனிக்கல.. அவன் என்னை ஆசையா பார்க்கிறானா? இல்லை குரோதமாப் பார்க்கிறானா? ன்னு தெரியாமலே என் உலகத்துல நான் சந்தோஷமா இருந்தேன்..

அம்மா தான் முதலில் அவனைப் பார்த்து கொஞ்சம் பயந்து இருக்காங்க.. கடைசில அம்மா பயந்த மாதிரியே எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு..
அம்மாவுக்கு என் மேல வருத்தம் இருந்தது.. ‘உன் மனசுக்கு பிடிக்காம கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிச்சு இருக்கவே கூடாது..!’ ன்னு அம்மா சொல்லிக்கிட்டே இருந்தாங்க.. அவங்க விசாரிக்காம செஞ்சதுனால தான் என் வாழ்க்கை போயிடுச்சுன்னு ரொம்ப கவலைப் பட்டாங்க.!” என்று பெருமூச்சுடன் கூறினாள் தமயந்தி.

சில நொடிகள் தமயந்தி மௌனமானாள்.. அவளை லேசாக அணைத்தவாறு நளனும் அமைதியாக இருந்தான்..

“அன்னிக்கு ராத்திரி கூட ரொம்ப சந்தோஷமா தான் ரூம்குள்ள போனேன்.. ஆனா அவன் பேசி நடந்துக்கிட்டது என்னை ரொம்ப காயப் படுத்திடுச்சு.. மாமாவோட மறைவு, அம்மா, அப்பாவோட ஹெல்த் இஸ்யுஸ் எல்லாம் சேர்ந்து என் மனச ரொம்ப பாதித்திடுச்சு..
அதிலும் என்னோட பிசிக்கல வச்சு, நான் சாப்பிடற விதத்தை ரொம்ப மட்டமா அவன் பேசியது தான் எனக்கு உணவு மீதான வெறுப்பு வந்ததே.. ஆனா அதை அம்மா கிட்ட சொல்லி ஆறுதல் கிடைச்சு இருந்திருந்தா இந்த அளவு மன நோய் மாதிரி கண்டிப்பா போய் இருக்காது.. என் பிரண்ட்ஸ் கிட்ட என்னால சொல்ல முடியல.. அம்மாவோட ஹெல்த் சரியாயிருந்திருந்தா எனக்கும் ஆறுதல் கிடைச்சிருக்கும்..” என்றவளுக்கு தொண்டை அடைத்து அழுகை வந்தது..

கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தொடைத்து விட்ட தமயந்தி, “நம்ம கல்யாணத்துல கூட என்னால முழு மனசா சந்தோஷமா இருக்க முடியலை.. ஆனா நீங்க அப்போ என் மனசு கோணாம நடந்துக்கிட்டது எல்லாமே மனசுக்கு இதமா இருந்தது.. ஏற்கனவே நடந்த முதலிரவுக்கு நான் ரொம்ப ஆர்வமா, சந்தோஷமா தான் போனேன்.. ஆனா, அது இப்போ தப்புன்னு உணர்ந்ததால, மனசு நிறைய குற்ற உணர்ச்சி மட்டும் தான் இருக்கு.. நான் நல்லவள் இல்லையோங்கற பயம் தான் என்னை கொல்லுது.. கூடவே என்னால உங்களுக்கு எந்த வித சுகமும் கொடுக்க முடியலைன்னு நிறைய வருத்தமும் இருக்கு..

இப்போ கூட நீங்க முத்தம் கொடுத்தது பிடிச்சது.. ஆனா நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லையோங்கற பயமும், தயக்கமும் வருது.. எனக்கு இப்போ என்ன செய்யறதுன்னு புரியல.! அதான் டைம் கேட்டேன்..” என்று முடித்தாள்.

“தமும்மா ப்ளீஸ்..!! உனக்கு குற்ற உணர்ச்சியே வேண்டாம்.. எனக்கு ஏத்தவ நீ மட்டும் தான்..!! அந்த கடவுள் நம்ம ரெண்டு பேருக்கும் தான் முடிச்சு போட்டு இருக்காரு.. அதனால இனிமே எந்த குற்ற உணர்ச்சியும் மனசுல வெச்சுக்காத.. உன் மனசுல என்ன ஓடுதுங்கறதை தயவு செஞ்சு உடனே உடனே என் கிட்ட சொல்லிடு.. மனசுலயே வெச்சு மருகாத.. பயம், தயக்கம் எதுவுமே என் கிட்ட வேண்டாம்.. நான் உனக்கு ஹஸ்பன்ட் மட்டுமில்லை. நல்ல பிரண்டும் தான்!!

அஸ்வின் கூட நடந்த திருமணம் நடக்கவேயில்லைன்னு நினைச்சுக்கோ.. அந்த மாதிரி ஒரு வக்கிரம் பிடிச்ச ஆள் கிட்ட இருந்து, எந்த வித சேதாரமும் இல்லாம தப்பிச்சியே அதை நினைத்து சந்தோஷப் படு டா. சரி நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு.! விதவை மறுமணம், மற்றும் விவாகரத்து வாங்கிய பின் செய்யும் இரண்டாவது கல்யாணம் செய்வது தப்புன்னு நினைக்கறியா?” என்று கேட்டான் நளன்.

“கண்டிப்பா இல்ல.. அவங்களுக்கும் ஒரு துணை அவசியமே..!”

“அப்படி கல்யாணம் செய்யறவங்களுக்குள்ள பிசிக்கல் ரிலேசன்ஷிப் இருந்தா, அது தப்பான விஷயமா இருக்குமா?”

“அது.. தப்பில்லை தான் ஆனா..” என்று ஏதோ சொல்ல வந்தவளை நிறுத்தினான் நளன்..

“தப்பில்லைன்னு புரியுது தானே.!! எத்தனையோ விதமான மனக்குழப்பங்களுக்கிடையே தான் அவர்களின் திருமணம் நடந்திருக்கும்.. அவர்களின் மனக் காயங்களுக்கு, அவர்களுக்கிடையேயான தாம்பத்யம் கூட சில சமயம் மருந்தாக இருக்கலாம்..!!
பட் உன்னை நான் கம்பல் பண்ணமாட்டேன்.. புரியவைக்க தான் நினைக்கிறேன்.. முதல்ல நடந்த திருமணத்திற்கும், முதலிரவுக்கும் நீ ஆர்வமா இருந்தது தப்பே கிடையாது.. அது அந்த வயதுக்கேற்ற ஆர்வம் தான்.. அதனால மனசிலிருந்து குற்ற உணர்ச்சி, பயம், தயக்கம், அது இதுன்னு எதா இருந்தாலும் தூக்கிப்போடு..!!

உன்னோட வாழ அந்த அஸ்வினுக்கு தான் கொடுத்துவைக்கல..!! அந்த வக்கிரம் பிடித்த ஆள் கிட்டயிருந்து தப்பிச்சதுக்கு சந்தோஷப்படு..!!” என்று கூறிய நளன், சிறு அமைதிக்கு பின், தொடர்ந்து அவளிடம் பேசினான்..

“ஹா.ன்..! என்ன சொன்ன மஞ்சள் கயிறு மேஜிக் அது இதுன்னு.. கதை புக் நிறைய படிப்பியோ?” என்று லேசாக சிரித்தபடி வினவியவன், “அந்த மாதிரி மேஜிக் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் எனக்கு அதைப்பற்றி தெரியாது..
பட், திருமணமான புதிதில், கொஞ்சமே கொஞ்சம் பிரியம், மிகச் சிறிதான புரிதல், இது இல்லைன்னா கண்டிப்பா அந்த திருமணம் தோல்வில தான் முடியும். நான் சொல்றது உனக்கு புரியுதா? ”

“ம்ம் கொஞ்சம் புரியுது.. நிறைய புரியல..!!” என்று பதிலளித்தாள் தமயந்தி.

“நம்ம கல்யாணத்திற்குப் பிறகு, ‘இவருக்கு என்னால எந்த சுகமும் கொடுக்க முடியலையே’ ன்னு நீ எனக்காக முதல் நாளே யோசிச்ச பாரு!! அது தான் பேசிக் பிரியம்.!! நாளாக நாளாக அந்த பிரியம் அதிகரிப்பதற்கு, இந்த பேசிக் பிரியம் தான் கை கொடுக்கும். புதிதாக திருமணமானவர்களுக்குள் இது ரொம்பவே அவசியம்..

அந்த அஸ்வின் அப்படி கேவலமா உன் கிட்ட நடந்துக்கிட்டதுக்கு பிறகு, உன்னால இந்த திருமண பந்தத்தையே உடனே உதறிவிட, எளிதாக முடிஞ்சதே அது ஏன்னு யோசிச்சியா? யோசிச்சு பாரு..!” என்று சொன்னவன் அவளை விட்டு சற்று தள்ளி நின்றான்..

சில நொடிகள் யோசித்த தமயந்திக்கு, ஒன்றுமே யோசிக்க முடியாதது போல் இருந்ததால், ‘நீங்களே சொல்லுங்க.!’ என்பது போல் நளனிடமே சரணடைந்தாள்.

“அந்த அஸ்வினை நீ உன் மனசுக்கு பிடிச்சு கல்யாணம் செய்திருந்தா உன்னோட முடிவு வேறா இருந்திருக்கலாம்.. அந்த மஞ்சள் கயிறு மேஜிக் செய்யும் என்ற நம்பிக்கையில், அஸ்வின் உடன் இருந்து அவனை திருத்த முயற்சி செய்து இருக்கலாம்.. உனக்கு இரு வீட்டு பெரியவர்களின் துணை வேறு இருந்தது.. அவர்களின் துணையால் நீ அவனை திருத்தவும் செய்திருக்கலாம்.. இதுல எல்லாமே ‘லாம், லாம்தான்’..

ஆனா இது எல்லாம் நடந்திருக்க முக்கியமான தேவை, அந்த ‘பேசிக் பிரியம்’.. அது இல்லாததுனால தான் உன்னால சட்டுன்னு அந்த திருமண பந்தத்தை உதறிவிட முடிந்தது.. அதில் தவறேதும் இல்லை.. அவன் உன் உடல் அழகை வர்ணித்து மிக கேவலமாக பேசி அடித்ததை சரி என்று சொல்லவில்லை.. நீ செய்தது தான் மிக சரியான் செயல்.. அந்த அஸ்வினிடமிருந்து தூர இருப்பது தான் எல்லோருக்கும் நல்லது..
நல்லவேளை உன் மனசுல அந்த அஸ்வின் மீது எந்தவித ஈடுபாடும் வரல.. இல்லைன்னா உன் மனசு இன்னும் உடைஞ்சு இருக்கும்.. அந்த கடவுள் தான் காப்பாத்தினார்.. திரும்பவும் சொல்கிறேன்.. உன் மனசுல எந்த வித குற்ற உணர்ச்சியும் வைத்துக்காத.. உன்னை கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு காரணம் உன் மேல உள்ள பரிதாபமோ, பச்சாதாபமோ இல்லை!! மனசு நிறைய உன் மேல இருந்த காதலினால் தான் உன்னை கல்யாணமே செய்துக்கிட்டேன்.. என்ன இப்போ புரியுதா மந்தி?” என்று செல்லமாக அழைத்தான்.

“ம்ம் புரியுது.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..”

“டைம் தானே அதை நீயே வச்சிக்கோ.. எனக்கு என் ஆசைப் பெண்டாட்டி மட்டும் போதும்..!” என்றவன் அவளை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்..

“தமும்மா, நமக்குள்ளேயும் சில சிறு சிறு சண்டைகள் வரலாம், கண்டிப்பா வரும் அது தானே குடும்ப வாழ்க்கை.. ஆனா, அப்படி சண்டை வந்தாலும் அடுத்தவர்களின் மனதை குத்தி கிழிக்கிற வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல் இருக்கணும்..!!” என்று கூறியபடியே அவளை விடுவித்தான்.

“சரி நான் போய் டீ போடறேன்.!!” என்று தமயந்தி சமையலறைக்குள் செல்ல முயன்றாள்..

“டீ எல்லாம் போட வேண்டாம்.. போ சீக்கிரம் கிளம்பு.. வெளிலயே டீ, டிபன் எல்லாம் முடிச்சுக்கலாம்.. குவிக் குவிக்! கோ..கோ அண்ட் கெட் ரெடி பாஸ்ட்..” என்றான் நளன்.

அதன் பிறகு தினமும் இதுபோன்ற பேச்சுக்களின் மூலம், அவளின் மேல் அவனுக்கு இருக்கும் காதலை உணர்த்தினான். அவளுடைய மனதில் அவன் மீது இருக்கும் காதலையும் உணர வைத்தான்.

தமயந்தியின் மனதில் இருந்து குற்ற உணர்ச்சியை முழுதாக களைந்த பின், அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையை இனிமையாக தொடங்கினான் நளன். தமயந்தியின் முழு மனதோடு கூடிய ஒத்துழைப்பு அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையை மிக இனியாக கொண்டு சென்றது..

சுந்தரம் மற்றும் மீனாட்சி இவர்களைப் பார்க்க சென்னை வந்து சென்றார்கள்.. ஒற்றைப் படுக்கை அறையாக இருந்ததால் ஓரிரு நாட்களில் திருச்சி சென்றனர்.. தமயந்தி முகத்தில் இருந்த மலர்ச்சி அவர்களின் மனதிற்கு மிகுந்த நிம்மதியைக் கொடுத்தது..

மேலும் நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தமயந்தி கருவுற்றாள்..

நளனின் அம்மா விசாலாட்சி அங்கே வந்திருந்து நளதமயந்தியை ஆசிர்வதித்தார்.

தமயந்தியின் டிப்ளோமோ முடிந்திருந்ததால், அவளை பேக்கரி டிப்ளோமோ கோர்ஸ் சேர்த்து விட்டிருந்தான்.. அது மூன்று மாத கோர்ஸாக இருந்ததால், சுந்தரம், மீனாட்சி மற்றும் அன்னத்தை சென்னைக்கு வரவழைத்திருந்தான் நளன்..

நளன் குடியிருந்த வீட்டிற்கு எதிரே இருந்த வீடு காலியாக இருந்ததால், அந்த வீட்டையும் சேர்த்து வாடகைக்கு எடுத்தான்.. அதனால் அனைவரும் தங்குவதற்கு வசதியாக இருந்தது..

திருச்சியில் இருந்த சுந்தரதர்மாவை பார்த்துக்கொள்ள தகுந்த ஆட்களை வைத்துவிட்டு, சென்னைக்கு நிம்மதியாக வந்தார் சுந்தரம்.

அதேப்போல், நளனின் ‘நளாஸ்’ சை பார்த்துகொண்டிருந்த முகுந்தனுக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால் மேற்கொண்டு நளாசை கவனித்துக்கொள்ள முடியாமல் போனது..

வளவனின் உதவியால் அதற்கு ஒரு நம்பிக்கையான ஒருவரை நியமித்தான் நளன்.

சுந்தரத்திற்கு, தர்மாவின் சொத்துக்களை நளனிடம் சேர்ப்பிக்க ஒரு வழி கிடைத்தது.. அதாவது சென்னையில் இருக்கும் சுந்தரதர்மாவிற்கு அருகிலே இருந்த ஒரு ஹோட்டல் விலைக்கு வந்தது..

அதை குறித்து நளனிடம் பேசிய பின், தர்மாவின் சொத்துக்கள் மூலம் அந்த ஹோட்டலை நளனின் பெயரில் வாங்கினார்.

இந்த வயதில் ஓடியாடி வேலை செய்வதில் இருக்கும் சுக, துக்கங்களை மிக சரியாக புரிந்துக்கொண்டு, அதற்கேற்றார் போல் நடந்துக்கொண்டான் நளன்.

தமயந்தியும் அவனுக்கு துணையாக இருந்து, அனைத்தையும் நளன் திறம்பட செய்வதற்கு உதவினாள்..

சுந்தரம், நளன், தமயந்தி மூவரும் இணைந்து ‘சுந்தரதர்மா’ மற்றும் ‘நளாஸ்’ சை மிக திறமையாக நிர்வகித்ததால் மிகுந்த லாபத்தையே பார்த்திருந்தனர்..

இரு வருடங்கள் கழித்து,

“தங்கக் குட்டி, நீங்க இப்போ பூவா சாப்பிட்டா, அம்மா உனக்கு ஆனை(யானை)க்கு பர்த்டே பார்ட்டி செஞ்ச கதை சொல்லுவேன்.. மம்மு புல்லா சாப்பிடணும்..” என்ற தமயந்தியின் முகத்தில் உணவின் மீதான வெறுப்பு அறவே நீங்கியிருந்தது.. மருந்துகளையும் முழுமையாக நிறுத்தியிருந்ததால், கண்களின் மலர்ச்சி நன்றாக தெரிந்தது..

“ஐ..!! ஆனை கதை.. பாப்பா மம்மு சாப்பு(சாப்பிடுவா)..” என்று மழலை மொழியில் கூறினாள் நள-தமயந்தியின் செல்ல புதல்வி தமிழ்அழகி.

“அழகி அழகா பேசறாங்களே..!! என்று சிலாகித்தபடியே உணவை ஊட்டினாள் தமயந்தி..

“அம்மாவும் பொண்ணும் இந்த அப்பாவை மறந்துட்டாங்களே..!” என்று சோக கீதம் வாசித்தபடியே அங்கு வந்தான் நளன்..

திருச்சி மற்றும் சென்னையில் மாறி மாறி வாசம் செய்யும் அவர்கள் இப்பொழுது இருந்தது சிங்கார சென்னையில்..

மதிய உணவிற்கு வந்த நளன் மனைவி மற்றும் மகளை கொஞ்சிக்கொண்டிருந்தான்..

“தமு, நம்ம பாப்புக்குட்டிக்கு தம்பி பாப்பா வேணுமாம்.. இனிமே ஓவர் டைம் நிறைய செய்யணும்.. நைட் ரெடி ஆகிக்கோ பெண்டாட்டி..!”

“ஆல்வேஸ் நான் ரெடி தான்..!” என்று நளனைப் பார்த்து கண்ணடித்தாள் தமயந்தி..

“ஹே..!! தத்தி எப்போ இவ்வளவு ப்ரைட்டா ஆனாங்க..? ஹா..ஹா..!! என்று சிரித்தவன், இப்போவே ரிகர்சல் பார்த்துடலாமா?”

“ஐ அம் வைட்டிங்..!” என்று விஜய் பாணியில் சொன்னவளுக்கு வெட்கம் வந்ததால் நளனின் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள் தமயந்தி..

“சூப்பர்டி என் செல்ல மந்தி..!!” என்று சிரித்தபடியே அவளின் இதழை நோக்கி குனிந்தான் நளன்..

ஐந்துவருடங்கள் கழித்து,

தமிழ்அழகியை பள்ளியில் விட்டு வந்த தமயந்தியிடம் ஒருவன் வந்து மன்னிப்புக்கேட்டான்..

“மேடம் சாரி..!” என்று தீடீரென்று அருகில் கேட்ட குரலில் நிமிர்ந்துப் பார்த்தாள் தமயந்தி..

“நீங்க யாருன்னு தெரியல! எதுக்கு என் கிட்ட மன்னிப்பு கேட்கறீங்க?”

“அது வந்து மேடம்.! பின்னாடி பார்த்துக்கிட்டே நடந்துக்கிட்டே வந்ததுல உங்க மேல இடிக்க வந்துட்டேன்.. அதான் சாரி கேட்டேன்..” என்றான் அவன்.

“இட்ஸ் ஓகே சார்..!” என்று கூறியவள் மேற்கொண்டு அங்கே நிற்காமல் சென்றாள் தமயந்தி.

“மாமா, நீங்க எதுக்கு அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டீங்க?” என்று கேட்டவனைப் பார்த்தான் அஸ்வின்.

“ஆனந்த், இது பைவ் இயர்ஸா கேட்க வேண்டிய மன்னிப்பு டா, தாத்தாவோட ஆத்மா சாந்தி அடைஞ்சு இருக்கும் ஆனந்த்..” என்று தன் தந்தை முருகானந்தத்தை நினைத்துக்கொண்டான் அஸ்வின்.

தமயந்தியுடனான திருமணத்தை உடைத்து, தந்தையுடன் சண்டையிட்டு சென்ற அவன், மறு திருமணம் செய்துக்கொண்டான் தான். அதிலும் விவாகரத்து ஆன ஒருத்திக்கு வாழ்க்கை கொடுத்ததை அவனின் நண்பர்கள் கூட்டம் புகழ்ந்து தள்ளியதில் மிக சந்தோஷமாக தான் அந்த திருமணத்தை செய்துக்கொண்டான்.

ஆனால், அந்தப் பெண்ணோ அஸ்வினின் மறுஉருவமாக இருந்தாள்.. அதனால் தினம் ஒரு சண்டை.. ஒரே மாதத்தில் அந்த திருமணமும் விவாகரத்து ஆனது..

அடுத்து ஒரு பெண்ணின் மீது காதல் என்ற பெயரில் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் நுழைய முற்பட, முருகானந்தம் தடுத்து, நல்ல மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அஸ்வினின் வக்கிர குணத்தை மாற்றினார்.

ஓரளவு குணம் ஆன பின், அவனுக்கு திருமணம் செய்ய விரும்பிய நேரத்தில் அவரின் அக்காவின் மறைவு அவரை பாதித்தது.. அதிலிருந்து வெளியே வருவதற்குள், அஸ்வின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அக்காவின் பெண், அவளின் கணவருடன் தற்கொலை செய்துக்கொண்டதால் மிகவும் நொடிந்துப் போனார்.

அதில் அவரின் உடல் நிலையும் மிகவும் மோசம் அடைந்தது.. சில நாட்களில் அவரும் இயற்கை எய்தினார்.. இறக்கும் தருவாயில் ‘எப்படியாவது தமயந்தியின் மன்னிப்பை மட்டும் பெற்று விடு.!’ என்று கூறிவிட்டு தான் சென்றிருந்தார்.

தற்கொலை செய்துக்கொண்ட அத்தைப் பெண் பெற்ற மகனை சட்டப்படி தத்து எடுத்துக்கொண்டான் அஸ்வின். அவனை அந்த பள்ளியில் சேர்ப்பதற்காக வந்தபோது தான் தமயந்தியை பார்க்க நேரிட்டது..

கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனேயே மன்னிப்பு கேட்ட அஸ்வின், அந்த பள்ளியில் ஆனந்த்தை சேர்ப்பதை கைவிட்டு, வேறு ஊருக்கு செல்லும் முடிவை எடுத்தான்..

அவனின் மனதில் தன்னை யாரென்றே மறந்த தமயந்தியை நினைத்து மிகுந்த வருத்தம் ஏற்பட செய்தது தான்.. எங்கே இதே ஊரில் இருந்தால் மனதில் இருந்த வக்கிர குணம் தலை தூக்கி தமயந்தியின் வாழ்க்கையை அழித்து விடுவோமோ என்ற பயமும் அதே அளவிற்கு இருந்ததால் அந்த ஊரை விட்டு செல்லும் முடிவை உடனடியாக எடுத்தான்..

“மாமா..! இந்த ஸ்கூல்ல என்னை சேர்க்கலியா?”

“இல்லை ஆனந்த்..! நாம டெல்லி போகலாம்..” அங்க போய் உன்னை ஸ்கூல் சேர்த்து விடுகிறேன்..” என்று சொன்னவன் அவனின் காரில் ஏறி சென்றான் அஸ்வின்.

“என்னங்க தமிழை ஸ்கூல்ல விட்டாச்சு.. இளவழகன் எங்கேங்க?” என்றபடியே வீட்டினுள் நுழைந்தாள் தமயந்தி..

“இளா அவங்க பாட்டிக்கூட விளையாடிட்டு இருக்கான்.. நானும் மதிய சமையலை முடிச்சாச்சு..” என்றான் நளன்..

“அய்யோ.. இன்னிக்கும் நீங்க தான் சமைச்சீங்களா? இந்த கிட்சனை சரி செய்யறதுக்குள்ள போதும் போதும்ன்னு வந்துடுது.. உங்களை தான் அத்தை சமைக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல.. ஏன் நீங்க சமைக்கறீங்க?”

“தமும்மா, அவனை நான் சமைக்க விட்டுடுவேனா?” என்றபடியே பத்து மாத குழந்தையான இளவழகனுடன் வந்தார் விசாலாட்சி.

“ஏண்டா, தமயந்தியும் தான் சமையல் கலை படிப்பு படிச்சா!! இப்படியா சமையலை ஆர்ப்பாட்டமா செய்கிறா? நிறை குடம் தழும்பாது டா மகனே..! என் மருமக கைவேலை அத்தனை சுத்தம்..” என்று மகனை கிண்டல் அடித்து விட்டு, அவர்களுக்கு தனிமை கொடுத்து உள்ளே சென்றார் அவர்.

அவனைப் பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டிருந்த தமயந்தியின் கையைப் பிடித்து அவர்களின் அறைக்குள் இழுத்து சென்றான் நளன்..

“என்ன உங்க அத்தை என்னை கிண்டல் செஞ்சா சிரிப்பு வருதா?”

“ஹா..ஹா..!! விடுங்க விடுங்க இதெல்லாம் உங்களுக்கு புதுசா, என்ன?” என்று சிரித்துக்கொண்டு கூறியவளை இழுத்து அணைத்தான்.

“இப்படி கிண்டலா சிரிக்கிற உதடுகளுக்கு கண்டிப்பா தண்டனைக் கொடுத்து தான் ஆகணும்..!!” என்றவன் அவளின் பூவிதழை நோக்கி குனிந்தான்..

முற்றும்.
 
Super sis semA story
 
Top