Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 60(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
மணி பத்தைக் கடக்க லைட்டா பிரேக் பாஸ்ட் சாப்பிட்டார்கள். அனேஷியாவும் அங்கே வந்துவிட எல்லோரும் ஒன்றுக்கூடி ஒருவரை மற்றொருவர் கலாய்த்து அவர்கள் பார்த்த இடங்களையெல்லாம் சிலாகித்து கதை பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது மிரு அனேஷியாவிடம் சித்தாராவை அறிமுகப்படுத்தி அவளை இன்னும் இரண்டு நாட்கள் சேர்த்து பார்த்துக்கொள்ள சொன்னாள். அனேஷியா அண்ட் கோவும் செவ்வாய் அன்றுதான் ஊருக்குத் திரும்ப உள்ளனர்.

அதைக் கேட்டதும்,"அப்போ செபா நீயும் டியூஸ்டே தான் ரிட்டர்னா?" என்றான் ஹேமா.

"டேய் நான் நாளைக்கு ஜாப்ல ஜாயின் பண்ணல என் சீட்டை கிழிச்சிடுவாங்க" என்று அலறியடித்தபடியே பதிலளித்தான்.

"அப்போ உனக்கு ஜெஸ்ஸியை விட உன் வேலை தான் முக்கியம். அப்படித்தானே?" என்று வசமாகக் கோர்த்துவிட்டான் ஜிட்டு.

"கேட்டுக்கோ ஜெஸ்ஸி, அன்னைக்கு இங்க (அவன் இதயத்தைச் சுட்டி) ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதுனு சொன்னதெல்லாம் வெறும் நடிப்பு தான் போல" என்று என்று மீண்டும் தன் பங்கிற்கு செபாவை ரகளை செய்தான் ஜிட்டு. செபா கோவத்தில் ஜிட்டுவை முறைக்க,"என்னை எத்தனை முறை இந்த மாதிரி என் இதி டார்லிங்கிட்ட மாட்டி விட்டிருப்பீங்க? நல்லா அனுபவி" என்றான் ஜிட்டு. எல்லோரும் ஜிட்டு சொன்ன தொனியில் சிரிக்க,"ஐயோ அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திடுச்சு" என்றான் ஹேமா.அதில் எல்லோரும் மீண்டும் சிரித்தனர்.

"அண்ணா அடுத்த ஜென்மம்னு ஒன்னிருந்தா நான் நீங்களாகப் பிறக்க வேண்டும். எவ்வளவு கலகலப்பானவர் தெரியுமா நீங்க? யூ ஆர் சோ ஃபண்ணி (funny)" என்றாள் மௌனி. "டேய் ஜிட்டு நீ பன்னியாம்டா" என்ற விவான் சிரிக்க,"கரெட்கா சொல்லியிருக்க மௌனி ஜிட்டு ஒரு பன்னி தான்" என்றான் ஹேமா.

"டேய் ஞான சூனியங்களா? இட்ஸ் ஃபண்ணி நாட் பன்னி. அன் எஜுகேட்டேட் பாய்ஸ்னு தெளிவாக் காட்டுறீங்க" என்றான் ஜிட்டு.

"ஓ துரை அப்படியே ஐ ஏ எஸ் படிச்சி கிழிச்சுடீங்கப் பாரு?" என்றான் இளங்கோ.

"ஏன்பா என்னை இதுல இழுக்கறீங்க . நான் பாட்டுக்கு சிவனேனு தானே இருக்கேன்" என்றான் திவேஷ்.

"கலெக்டர் சார். இந்த ஒரு நாள் முதல்வர் மாதிரி என்னை நீங்க ஒரு நாள் இல்லை வேண்டாம் ஒரு மணிநேர கலெக்டர் ஆகுறீங்களா? நான் யாருனு இவங்களுக்குக் காட்டுறேன்" என்றான் ஜிட்டு.

"ஓ இவரு அப்படியே முதல்வன் அர்ஜுன்னு நெனப்பு. போடா" என்றான் இளங்கோ.

"ஓகே ஓகே ஜோக்ஸ் அப்பார்ட். அடுத்து நாம எல்லோரும் எங்க எப்போ சந்திக்கிறது? சீக்கிரம் அதுக்கு இப்போவே பிளான் பண்ணுங்க" என்றாள் இதித்ரி

"ஆமாம் ஆமாம் இப்போவே அடுத்த டூருக்கான பிளான் போடுங்க. அப்போ தான் அடுத்த ரெண்டு வருஷதிலாவது அது நடக்கும்" என்றான் தியா.

"இப்போதைக்கு உடனே நாம எல்லோரும் துஷி-ரேஷா கல்யாணத்துலயும் துவாரா-சரு கல்யாணத்துலையும் சந்திப்போம் ஓகே?" என்றாள் யாழ்.

"அப்போ தியா-மிரு கல்யாணம்?" என்றான் விவான். எல்லோரும் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

"டேய் ஹரிணியோட கல்யாணம் கூட வந்திடும்னு நெனைக்கிறேன்" என்றான் ஹேமா.

"அப்போ எங்க கல்யாணம்?" என்றான் ஜிட்டு.

"மச்சி நாங்க அறுபதாம் கல்யாணம் பத்தியெல்லாம் பேசல" என்றான் செபா.

"டேய் என்ன மறந்துட்டயா? உன்கிட்ட நான் போட்ட அந்த சபதம் இன்னும் என் நினைவுல இருக்கு" என்றான் ஜிட்டு.

"எது ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனா இதுவே முதலிரவா?" என்றான் விவான் சிரித்துக்கொண்டே. அதில் எல்லோரும் அன்றைய நாளின் சம்பவங்களை எண்ணிச் சிரிக்க இதி ஜிட்டுவை முறைத்தாள்.

"மச்சான் வடிவேலு ஸ்டைல் பாண்டியின் நூறாவது திருட்டுனு போஸ்டர் அடிச்ச மாதிரி நாமும் ..."என்று நிறுத்தினான் ஹேமா. அவன் கோடிட்ட இடத்தை எல்லோரும் அவர்களுக்குள் நிரப்பி அதை எண்ணிச் சிரித்தனர். எல்லோரும் எதற்கு சிரிக்கிறார்கள் என்றே தெரியாமல் அவர்களோடு சேர்ந்து இளவேனிலும் உடன் சிரிக்க அவளைக் கண்டு மீண்டும் எல்லோரும் சிரித்தனர்.

"டேய் என்னை பழிவாங்குறதா நெனச்சி இந்த மாதிரி எல்லாம் ஏதும் செஞ்சிடாதீங்கடா??" என்று மன்றாடினான் ஜிட்டு. அதற்குள் அவரவர் வீட்டிலிருந்து அழைப்பு வர,'எல்லோரும் தயாரா?' என்பதைப் பற்றி சிறிது பேசினார்கள். மாலை ஐந்து மணிக்கெல்லாம் பிளைட் என்பதால் மூன்று மணிக்கெல்லாம் அவர்கள் விமான நிலையத்தில் இருக்கவேண்டும். அதனால் எல்லோரும் தங்களின் உடமைகளை ஒருமுறை சரிபார்த்து குளித்துவரச் சென்றனர்.

துவாராவை அழைத்த அனேஷியா ஊருக்கு வந்ததும் தன் தந்தையோடு அவன் தந்தையை வந்து சந்திப்பதாகச் சொல்ல இவனும் அதற்குள் கீர்த்தியிடம் பேசி அவளை சமாதானம் செய்வதாகச் சொன்னான். "கல்யாணத்துக்கு அவசியம் இன்வைட் பண்ணு துவாரா" என்றாள். உடனே கல்யாணம் நடைபெறாது என்றும் முதலில் அவன் தன்னுடைய தந்தையிடம் பேசி, பிறகு அவரோடு சரித்திராவின் வீட்டிற்கு சென்று பேசி சம்மதம் வாங்கி என்று நிறைய வேலை இருக்கிறதென்றவன் அவசியம் அவளை அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். செல்லும் முன் அவள் என்ன முடிவெடுத்துள்ளாள் என்று அறிய எண்ணி அவளிடம் கேட்டான். "நானும் ஊருக்கு போய் அப்பா கிட்ட நிறைய பேசணும் துவாரா. அதுக்கப்புறோம் தான் என்னால திவேக்கு ஒரு பதில் சொல்ல முடியும்" என்றாள்.

தியா, மிரு, அனி, திவே, சித்தாரா, விவி, இஸ்மாயில், பெனாசிர் தவிர எல்லோரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் ஊருக்குத் திரும்புவார்கள். மற்றவர்களுக்கு இந்தப் பயணம் முடிந்ததும் தான் ஒரு முடிவு கிடைக்கும். எல்லோரும் குழித்து ரெடி ஆகி தங்கள் உடமைகளை எல்லாம் பேக் செய்து விட்டு மணி பனிரெண்டைக் கடக்க நான்-வெஜ் பீஸ்ட்டை உண்டுகளிக்கத் தயாரானர்கள். (பயணங்கள் முடிவதில்லை!)
சாரிப்பா ஆஹா என்ன ருசி முடிக்கவேண்டியிருந்தால் அப்டேட்ஸ் கொடுக்க முடியவில்லை. புதனுக்குள் இதை முடிக்கிறேன்.
 
.
மற்ற 3 ஜோடிகளிடையே விருப்பம் பகிரப்பட்டுள்ளது...
இஸ்மாயில் பார்த்தது மட்டுமே...இன்னும் சொல்லவில்லை
 
.
மற்ற 3 ஜோடிகளிடையே விருப்பம் பகிரப்பட்டுள்ளது...
இஸ்மாயில் பார்த்தது மட்டுமே...இன்னும் சொல்லவில்லை
எல்லோரும் ஒன்னு சேரணும்னு அவசியமில்லை தானே? நன்றி??
 
Top