Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-42

Advertisement

praveenraj

Well-known member
Member
எல்லோரும் அங்கிருந்து ஓடிவிட துவாராவும் சரித்திராவும் மட்டும் அங்கே நின்றுகொண்டு இருந்தனர். தங்களின் உறவைப் பற்றி மிரு சரித்திராவிடம் சொல்லிவிட்டதை நினைக்கையில் அவனுக்கு நிம்மதி தான் என்றாலும் இவளிடம் நேராக தன் விருப்பத்தைச் சொல்லாமல் மிரு மூலமாக எல்லோருக்கும் சொல்லப்பட்டதை நினைத்து அவன் யோசனையில் இருந்தான். நீண்ட மௌனம். சருவே ஆரமித்தாள்,"செம்ம ஃப்ரண்ட்ஷிப் இல்ல? ஐ லைக் இட் வெரி மச்" என்று சொல்ல துவாராவின் முகத்திலும் ஒரு சிரிப்பு வந்தது. அதைக் கண்டுக்கொண்டு ரசித்தவள்,"நீங்க சிரிச்சா செம அழகா இருக்கீங்க. பின்ன ஏன் சிரிக்கிறது இல்ல?" என்று கேட்க அவன் சிரிப்பு மறைந்தது.
"துவாரா நான் கீர்த்தியோட ஃப்ரண்ட்" என்று சரித்திரா சொல்லவும்,
"கீர்த்தியை உனக்கு எப்படித் தெரியும்?"
அவள் பதில் பேச ஆரமிக்கும் முன்னே கொஞ்சம் யோசித்தவனுக்கு எல்லாம் புரிய ஆரமித்தது."வெயிட் இப்போ நான் அசாம் போறதும் கீர்த்தி சொல்லித் தான் உனக்குத் தெரியுமா?"
அவள் எதையும் பேசாமலே இருக்க,
"சொல்லு சரித்திரா"
"துவாரா உங்களுக்கு என்ன தெரியணும்னு நெனைக்கறீங்களோ அதை வெளிப்படையாகக் கேளுங்க. நான் பதில் சொல்றேன்" என்று அவனை நோக்கினாள்.
"விவானுக்கு இது ஏற்கனவே தெரியுமா?"
"தெரியும்"
அவன் ஏதேதோ யோசிக்க அவனின் குழப்பத்தைக் கண்டவள் அவனை நெருங்கி அணைத்துக்கொண்டு,"துவாரா என்னைப் பாருங்க. லுக் அட் மீ. உங்க குழப்பம் எல்லாம் நியாயம். திடீர்னு ட்ராவல் பண்ணும் போது நம்ம கம்பார்ட்மெண்ட்ல நம்ம சீட்டுக்கு பக்கத்துல ஒரு பெண் வந்து உட்கார்ந்து அவளை ஏனோ பார்த்ததும் உங்களுக்கும் பிடிச்சி இருக்க அவ கிட்ட எப்படிப் பேசறதுனு நீ தயங்க, மெதுவா பேச ஆரமித்து அடுத்தநாளே அந்தப் பொண்ணு உங்ககிட்ட உங்களை அவ விரும்பறதாகவும் உங்களுக்காகத் தான் அவ இந்த ட்ராவல் செய்வதாகவும் சொன்னா நிச்சயம் உங்களுக்கு சந்தேகம் வரும் தான். அதிலும் இதுல உங்க பெஸ்ட் ஃப்ரண்ட் விவான், யா ஸ்கூல்ல இருந்து காலேஜ்லையும் ஏன் இப்போ வரை உங்க ஃப்ரெண்டா இருக்கும் விவான் அண்ணாவும் இதுல சம்மந்தம் பட்டிருகாங்க, மேலும் உங்க கூட பிறந்த தங்கையும் இதுல இருக்கானு தெரியும் போது கொஞ்சம் குழப்பமும் இருக்கலாம். ஒன்னு சொல்றேன், நம்பிக்கை அது தான் இங்க அவசியம். கல்யாண் ஜுவெல்லர்ஸ் விளம்பரம் மாதிரி நம்பிக்கை அதுதானே இங்க எல்லாம்! நீங்க நம்பனும். என்னை, என் காதலை, உங்க நட்பை, உங்க தங்கையோட பாசத்தை. உங்களுக்கும் என்ன பிடிச்சிருக்கு" அவன் அவளை ஆச்சரியமாய்ப் பார்க்க,"இதுல எனக்கு சந்தேகமே இல்ல"
"கிட்டத்தட்ட நீங்களும் நானும் ஒரே மாதிரி. செய்லிங் ஆன் தி சேம் போட். காலம் முழுக்க கிடைக்காத அம்மா பாசத்துக்காக நீங்களும் அப்பா பாசத்துக்காக நானும் இன்னைக்கு வரை கஷ்டப்படுறோம். என்னைப்பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாமல் இருக்கலாம். ஆனா உங்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். 'எல்லாம்'." ஏனோ அவளின் கூற்றில் அவனையே அறியாமல் அவன் உடல் நடுங்கியது. அவன் உடல் நடுக்கத்தைக் உணர்ந்தவள் அவனை நெருங்கி அணைத்துக்கொண்டு, "ஐ யம் வெயிட்டிங் பார் யுவர் நாட் (nod - தலையாட்டுதல், சம்மதம் தெரிவித்தல்)" அவனை சமம் செய்தவள் அவனை விட்டு விலகி,"துவாரா சில விஷயங்களை மறந்திடனும். சில விஷயங்களை கடந்து வந்திடனும். அது தான் எல்லோருக்கும் நல்லது. வாழ்க்கையில ஒரே முறை நடந்த சில கசப்பான நினைவுகளை தினமும் ஒவ்வொரு நிமிஷமும் நெனச்சி நெனச்சி கஷ்டப்படுறதோ இல்ல வருத்தப்படுறதோ எந்த விதத்துலையும் நியாயமில்லை. some mistakes have to be forgiven. some mistakes have to be forgotten. (சில தவறுகள் மன்னிக்கப்படவேண்டும் . சில தவறுகள் மறக்கப்பட வேண்டும்) ரெண்டுமே செய்யாம தூக்கி சுமக்கக் கூடாது. அது நமக்கு மட்டுமில்ல நம்ம கூட இருக்கும் எல்லோருக்கும் தான் கெடுதல். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட். நான் அங்கப் போறேன். யோசிங்க" என்றவள் அங்கிருந்து விலகி வந்துவிட்டாள்.
முதலில் சரித்திரா தனக்கு எல்லாம் தெரியும் சொன்னதில் கூட அவனுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் அவளின் இறுதி வார்த்தைகளில் அவை ஊர்ஜிதப் படுத்தப்பட்டு விட்டது. ஏனோ அவனையே அறியாமல் அவன் உடல் நடுங்க இருந்தும் அவள் சொன்ன வார்த்தைகள் தான் ரீங்காமிட்டுக்கொண்டு இருந்தது. கீர்த்திக்கு அழைத்தான்.சரித்திரா தன் காதலை துவாராவிடம் சொன்னதை கீர்த்திக்கும் தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. இருந்தும் இப்போது அவன் அழைப்பது அவளுக்கு ஒருமாதிரி இருக்க எடுத்தவள்,"ஹலோ" என்றாள் பட்டும் படாமல்.
"சாப்பிட்டியா கீர்த்தி? நீ ஒன்னும் ஃபாஸ்டிங் இருக்கல தானே?" அதில் உண்மையான வருத்தம், எதிர்ப்பார்ப்பு இருந்தது.
"ஹ்ம்ம் சாப்பிட்டேன்"
"நிஜமா தானே சொல்ற? எனக்காகப் பொய்ச் சொல்லல தானே?"
"டாக்டர் பாப்பா வயித்துல இருக்கறதுனால ஃபாஸ்டிங் எல்லாம் இருக்கக் கூடாதுனு சொல்லிட்டாரு"
அவனுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
"நீ சாப்பிட்டாயா?"
"இல்ல. குட்டிப் பையன் எங்க ஸ்கூல்ல இருந்து வந்துட்டான்னா?"
"மணி ஆறாகப் போகுது. வந்துட்டான். தரட்டா?"
"கீர்த்தி என்னை மன்னிச்சுடு. நான் உன்ன நிறைய கஷ்ட படுத்தறேன் இல்ல?"
ஏனோ அவன் இப்படி கேட்டதும் அவளையே அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது.
"நீ மட்டும் அம்மாவை இழக்கல. நானும் தான் இழந்திருக்கேன். சொல்லப்போனா நீயாவது அம்மா கூட தூங்கியிருக்க, விளையாடி இருக்க, பேசியிருக்க, பழகியிருக்க அவங்க கையாள சாப்பிட்டும் இருக்க. ஆனா நான்? எனக்கு விவரம் தெரிந்து இது எதையுமே அம்மா கிட்ட அனுபவிச்சது இல்ல துவாரா. ஒரு ரெண்டரை வயசு குழந்தைக்கு என்ன தெரியும்? அம்மா இல்லைனு தெரியும் அவ்வளவு தான்" கீர்த்தியின் நிலையை நினைக்க துவாராவிற்கு மனம் ரொம்ப வலித்தது."சாரிடா குட்டிம்மா. அழாத ப்ளீஸ் கீர்த்தி"
"நான் அழறது அதுக்காக இல்ல துவாரா. நீயும் மாறமாட்டேங்குற. ஒரு கல்யாணம் பண்ணுனு சொன்னாலும் மாட்டேங்குற" என்று சொல்ல,
"கீர்த்தி எனக்கு கல்யாணத்துல சம்மதம். உன் ஃப்ரண்ட்ட... நீ பார்த்த சரித்திராவை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. இந்த டூர் முடிஞ்சு வந்ததும் அவ அம்மா கிட்ட நானே போய்ப் பேசுறேன். ஓகேவா? ஹேப்பியா?"
"துவாரா? நிஜமாவா சொல்ற? அப்புறோம் பேச்சி மாறக்கூடாது சொல்லிட்டேன்"
"உன் மேல பிராமிசா சொல்றேன். எனக்கு இதுல சம்மதம். ஓகேவா?"
ஏனோ இந்த வார்த்தை கீர்த்திக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது.
"எனக்கு இப்போ எவ்வளவு ஹேப்பியா இருக்குனு தெரியுமா? என்ன நீ அப்பாகிட்ட பேசினா நான் முழு சந்தோசமா இருப்பேன்" என்று அவள் சொல்ல, அவளின் கூற்று அவனுக்கு சட்டென எரிச்சல் தந்தாலும் இன்று மிரு தன்னிடம் சொன்னதையெல்லாம் அசைப்போட்டவன் அதை வெளியே காட்டாமல்,"ஊருக்கு வந்ததும் உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு கீர்த்தி" என்று சொல்லி நிறுத்த,
"என்ன சர்ப்ரைஸ்டா? துவாரா ப்ளீஸ் ப்ளீஸ் எதுனாலும் இப்போவே சொல்லு ப்ளீஸ்" என்று அவள் கெஞ்ச,
"இப்போவே சொல்லிட்டா அது பேரு சர்ப்ரைஸ் இல்ல கீர்த்தி. அண்ட் அதுக்கு நானும் கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணனும். என் மனசும் முழுமையா மாறனும். அதுக்கு இந்த டூர் ரொம்ப அவசியம். இந்த காலம் ரொம்ப அவசியம்"
சில சர்ப்ரைஸ்கள் அது என்ன விஷயத்தைப் பற்றி என்பதில் இருப்பதில்லை. அது அந்த விஷயம் நடக்கும் போதும் இல்லை எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. கீர்த்திக்கும் ஓரளவுக்குப் புரிந்தது. அவன் தங்கள் தந்தையுடன் பேசுவது தான் அவளுக்கு பெரிய சர்ப்ரைஸ் என்று அவளும் அறிந்திருந்தாள். சோ அவன் பேசப் போறான். ஆனால் எப்போது? 'ஐயோ இன்னும் ஏழு எட்டு நாட்கள் காத்திருக்கணுமே?' இருந்தும் அவளுக்கு அளவில்லாதா மகிழ்ச்சி. "ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா. தேங்க்ஸ் அண்ணா" என்று சொல்ல,
"நான் உனக்கு சர்ப்ரைஸ் தரலாம்னு நெனச்சா நீ எனக்கு இப்படி சர்ப்ரைஸ் தருகிறாயே கீர்த்தி?" என்று சொன்னவன,"எங்க இன்னொரு முறை சொல்லு?" என்று கேட்க,
"தேங்க்ஸ்டா அண்ணா! போதுமா?" என்று கேட்க அவனும் நீண்ட நாட்கள் இல்லை வருடங்கள் கழித்து மனம் நிறைய சிரித்தான். அவளின் அண்ணா என்ற விளிப்பு தான் அவனுக்கான சர்ப்ரைஸ். எப்போதும் 'டேய் வா டா துவாரா' இது தான் அவள் அவனை அழைக்கும் விதம். போனை வைத்தவன் அவனின் இன்றைய சந்தோசத்திற்கு காரணமான அந்த மூன்று பெண்களுக்கும் மனதால் நன்றி தெரிவித்தான். தங்கை, காதலி, பெஸ்டி மூவரும் தான் அவனின் இன்றைய சந்தோசத்திற்கு காரணம். சில நேரங்கள் செல்ப் ஹீலிங் (சுயமாக குணப்படுத்துதல்) காலங்கள். நம் தவறுக்கும் நம் கேள்விகளுக்கும் நாமே சரியாகவும் விடையாகவும் இருக்கிறோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! மனம் நிறைந்தது. சென்று அவன் இருக்கையில் அமர்ந்தான். சரித்திரா தான் அவனைச் சாப்பிடச் சொல்ல அவனோ மணியைப் பார்த்துவிட்டு, "இன்னும் டூ ஹவர்ஸ் தான். நான் சாப்பிட்டுடுறேன்" என்று சொல்லி கண்களை மூடினான்.
எல்லாவற்றையும் விட கீர்த்திக்கு தான் இன்றைய நாள் உண்மையில் பொன்னாளாக இருந்தது. அது தன் அன்னையின் திதியிலே துவாரா திருமணத்திற்கும் கூடவே தங்கள் தந்தையிடம் பேசுவதற்கும் சம்மதம் சொல்லிவிட எல்லாம் போட்டத் திட்டப்படி நன்றாக நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
.....................................................
அங்கிருந்து கோவமாகத் திரும்பினாள் ரேஷா. அவள் உதடுகள் துஷிக்கும் யாழுக்கும் சாபங்களை அள்ளித்தந்தது மட்டும் நிஜம். கோவமாக சிடுசிடுவென வந்து அமர்ந்தவளைக் கண்ட லோகேஷ்,'என்ன ஆச்சு? போகும் போது ஹேப்பியா தானே போனா?' என்று நினைத்துக்கொண்டு,"ஆமா எங்க நீ மட்டும் வந்திருக்க பெனாசிர் எங்க ஆளைக் காணோம்? என்ன ஆச்சு? ஏன் ஜெசி திடீர்னு போனா?"
சற்று நேரத்திற்கு முன்பு :
அங்கே அவர்கள் ஐவரும் ஒன்றாக அமர்ந்து கதைபேசிக்கொண்டு இருக்க அப்போது தான் ஹேமாவிடமிருந்து ஜெசிக்கு அழைப்பு வர பேசியவள் உடனே துள்ளிக்குதித்து ஓடினாள். நீண்ட நேரம் ஆகியும் வராததால் தான் பெனாசிரும் ரேஷாவும் சென்றனர்.
அமர்ந்தவள் கையிலிருந்த நகங்களைக் கடித்து துப்பிக்கொண்டு இருந்தாள். ஒருபக்கம் அவளுக்கு துஷி வேண்டும். ஆனால் மறுபக்கம் அவனுக்கு இவள் ஒரு வாய்ப்பைக்கூட த் தர தயாராக இல்லை. துஷிக்கும் பாவம் ஏழரை கூடவே சுற்றித்திரிவதால் அவனுக்கும் எந்த நல்லதும் நடக்க மாட்டேங்குது. கோவத்தில் தன் செல்போனை தேடியவள் அதைக் காணவில்லை என்றதும் கத்த,
"என்ன ஆச்சு ரேஷா ஏன் இவ்வளவு கோவம்?"
"நான் வீட்டுக்குப் பேசணும் என் போன் எங்க?" என்று கேட்க,
"எதுக்கு இப்போ வீட்டுக்கு?"
"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு சொல்லணும்" என்று சொல்ல,
"என்ன ரேஷா ஆர் யூ சூர்?"
"ஆமா. அவன் சரியான சீட் பிராட்" என்று முணுமுணுத்தாள்.
"உன் பெர்சனல் விஷயத்துல நான் எந்த தலையீடும் செய்யப்போறதில்லை. ஆனா ஒரே ஒரு சஜஷன். கோவத்துல எந்த முடிவும் எடுக்கக் கூடாதுனு சொல்லுவாங்க. நாளைக்கு காலை வரை பொறு. அசாம் சென்று இறங்கிடுவோம். அதுகாப்புறோமா முடிவு எடுப்பியாம். என்ன ஓகேவா?"
அவள் திருதிருவென விழிக்க,
"நீ ஏன் இப்படி அவசரத்துல எப்பயும் முடிவெடுக்குற?"
அவள் முறைக்க,
"சரி நான் சமோசா சாப்பிடப் போறேன். உனக்கு வேணுமா?"
"எனக்கு கட்லெட் தான் வேணும்" என்று சொன்னாள்.
"சரி வாங்குவோம்" என்று சொல்லி அவர்கள் இருவரும் சாய் வாங்கிப் பருகினார்கள். போன் பேசிக்கொண்டிருந்த இஸ்மாயில் வர,"அச்சச்சோ உன்னை மறந்துட்டோமே?" என்று சொல்லி இன்னொன்றை வாங்கினார்கள்.
செபாவுக்கு மனமெல்லாம் மகிழ்ச்சிப் பொங்க ஒரு வித நிம்மதி அவன் மனமெங்கும் பரவியிருந்தது. என்னதான் அருகருகே அமர்ந்திருந்தாலும் இன்னமும் ஜெஸ்ஸியின் வலது கரம் அவனின் இடது கரத்தில் கோர்க்கப்பட்டு தான் இருந்தது. இதை அங்கிருந்த எல்லோரும் கண்டும் காணாமல் தான் இருந்தனர். ஜிட்டு தான் மிக தீவிரமாக அவர்களின் கைகள் கோர்க்கப்பட்டிருப்பதையே பார்த்துக் கொண்டு சாரி சாரி வெறித்துக் கொண்டு இருக்க அதை தற்செயலாகப் பார்த்த ஜெஸ்ஸி அவளின் கையை செபாவின் கரத்திலிருந்து விடுவிக்க முயன்றாள். ஆனால் அவளவன் விட்டால் தானே? அவளோ ஒரு மாதிரி எம்பேரேஸாக பார்க்க இதி தான் ஜிட்டுவின் கண்ணாடியை வெடுக்கென கழட்டிவிட அந்தோ பரிதாபம் ஜிட்டுவும் எதுவும் தெரியவில்லை (அவனுடைய பவர் ரொம்ப ஜாஸ்தி. மயோப்பியா எனப்படும் கிட்டப்பார்வை அவனுக்கு. தூரத்தில் இருப்பது தெரியாது. இருந்தும் பவர் ஜாஸ்தி என்பதால் அருகிலிருப்பதே சற்று திண்டாட்டம் தான்) அதை கவனித்த ஹேமா,"ஓகே கைஸ் லிசென் இப்போ நம்ம ஜிட்டு நான் காட்டுறதை எல்லாம் டக்குடக்குனு சொல்லுவாரு" என்று சொல்லி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தான்.
ஏனோ பேசிக்கொண்டிருந்த அனைவரும் திரும்ப அவன் சொன்னதில் எல்லோரும் சிரித்தனர். பின்னே ஜிட்டுக்கு பகலிலே பசுமாடு தெரியாது. இதில் இருட்டில் எருமைமாட்டைத் தேடச் சொன்னால் எப்படி? கண்ணாடி இல்லையேல் ஒரு அணுவும் அசையாது அவனுக்கு. "டேய் ஜிட்டா இது எத்தனை விரல்?" என்று ஹேமா காட்ட கடுப்பானவன்,"இது விரலா எங்க கொடு" என்று வாங்கியவன் நறுக்கென்று கடிக்க, "டேய் டேய் டேய்" என்று ஹேமா அலறினான்.
இப்போது எல்லோரும் மீண்டும் கோரஸாக சிரித்தனர்.
சித்து தான்,"ஜிட்டு உண்மையிலே உங்களுக்கு அதாவது கண்ணாடி போட்டிருக்கவங்களுக்கு கண்ணாடி இல்லைனா கண்ணு தெரியாதா?" என்று தீவிரமாக டவுட் கேட்டாள்.
எல்லோரும் தன்னையே ரவுண்ட் கட்டுகிறார்கள் என்று உணர்ந்த ஜிட்டு,"டேய் விவானு ரூம்ஸ் எல்லாம் போட்டாச்சா?" என்று கேட்டான்.
கடுப்பான விவான்,"இல்ல" என்றான்.
"என்னடா சொல்ற அப்போ எங்கத் தங்குறது?"
"அதுதான் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாம் இருக்கு தானே? அங்கயே தங்கிக்கலாம்" என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
"டேய் இப்போ என்ன கேட்டேன்னு இப்படி கோவிச்சுக்கற?" என்றான் ஜிட்டு,
"ஏன்டா ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணவன் டூருக்கு பிளான் பண்ணவன் அதை அரேஞ் பண்ணவன் உங்க எல்லோரையும் கூட்டிட்டுப் போறவன் நான். இவ்வளவு பண்றவன் உங்கள என்ன நடுத்தெருவுலையா விட்டுடுவேன்?" என்றான் சற்று எரிச்சலாய்.
"சரிப்பா நான் கேட்டது தப்பு தான்" என்று சொல்ல, அவனோ எழுந்து தனியாகச் சென்றான்.
"என்னாச்சி நித்யா? ஏன் இப்படி இருக்கான்?" என்றான் இளங்கோ
"இதென்ன வம்பா போச்சு? என்னமோ எல்லாமே என்னிடம் சொல்லிட்டுப் பண்றவன் மாதிரி என்னைக் கேட்கறீங்க?"
"நீங்கதானே ஆதர்ச கபிள்ஸ் ஆப் அவர் கேங்க்" என்றாள் இதித்ரி.
ஏனோ நித்யாவுக்கே ஒரு மாதிரி ஆனது. இதி கேட்டதால் இல்லை அவளும் தானே பார்த்துக்கொண்டு இருக்கிறாள் இந்த ரெண்டு நாளாக அவன் கொஞ்சம் டிஸ்டர்ப்டாய் அல்லவா இருக்கிறான்? இருந்தும் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணி விட்டு விட்டாள்.
இங்கே எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கதைபேச தியாவும் மிருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஏனோ அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. ஹேமா தான் அங்கிருந்து வந்ததும் தியாவை அழைத்து,"இங்கப் பாரு மச்சி அவளும் ரொம்ப ஹர்ட் ஆகியிருக்கா. அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடு. நிச்சயம் உன்ன மன்னிப்பா" என்று சொல்ல அதுவே சரியென்று பட்டது.
யாழ் அப்படியே துஷியின் தோளிலே சாய்ந்து உறங்கி விட்டாள். மற்றவர்கள் எல்லோரும் அவரவர் செல் போன்களை எடுத்துக்கொண்டு அதில் பொழுதைப் போக்கினார்கள். நீண்ட நெடிய பயணம் என்பதால் எப்போதடா விடியற்காலை ஆகுமென்று காத்துக் கொண்டு இருந்தனர். காலை 04 . 55 க்கு வண்டி கவுஹாத்தி சென்றடையும். இப்போது மணி மாலை ஏழை தாண்டியிருந்தது. சித்துவும் தன்னுடைய படுக்கைக்குச் செல்ல எல்லோரும் அங்கிருந்து கலைந்தனர். எல்லோரின் முகத்திலும் பயணத்தின் சோர்வு அப்பட்டமாகத் தென்பட்டது.
செபாவும் ஜெஸ்ஸியும் செபாவின் கம்பார்ட்மெண்டுக்கு வந்து அருகருகே இருந்த செபா மற்றும் விவியனின் கம்பார்ட்மெண்டில் அமர்ந்து கொஞ்சம் கதை பேசினார்கள். அப்போது வந்த விவி இவர்களைப் பார்த்துவிட்டு அடுத்த கம்பார்ட்மெண்ட் போக முயற்சிக்க அவனை தன் இருக்கையில் அமரவைத்துவிட்டு துவாரா, ஹேமா மற்றும் ஜிட்டுவின் கம்பார்ட்மெண்ட் சென்றான். விவியனுக்கு ஹேமா, ஜிட்டு இருவரும் அந்தளவுக்கு நெருக்கமில்லை என்பதால் துவாரா இதைச்செய்தான். மேலும் இரண்டு நாட்களாய் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது துவாராவுக்கும் சற்று அலுப்பைத் தந்தது.
சரித்திரா வந்து தன் தாத்தாவின் அருகில் அமர்ந்து மெல்ல தன் காதல் விஷயத்தை அவரிடம் சொன்னாள். பின்னே இவரை வைத்து தானே தன் அன்னையிடம் பேசி சம்மதம் வாங்க வேண்டும் என்று எண்ணி கேட்க அதற்கு அவசியம் இல்லை என்பது போல் இதைப்பற்றி தன் மருமகளிடம் பேச ஏற்கனவே அவர் யோசித்து விட்டார். துவாராவை இரண்டு நாட்களாக அருகிலே பார்க்கிறாரே? இவன் தன் பேத்திக்கு ஏற்றவனா இல்லையா என்று அவர் அனுபவத்திற்குத் தெரியாதா என்ன? இருந்தும் அவனின் குடும்பத்தைப் பற்றி எல்லாமும் விவானிடம் பேசிவிட்டார்.
கோவமாக எழுந்து சென்ற விவான் தன் கம்பார்ட்மெண்ட் சென்று அங்கே தன் இருக்கையில் படுத்து கண்ணையர்ந்து விட்டான். ஜிட்டுவும் ஹேமாவும் கூட தங்கள் இருக்கைக்குச் செல்ல அவர்களைக் கண்ட ரேஷா ஜெஸ்ஸியைப் பற்றி வினவ அவள் செபாவோடு இருக்கிறாள் என்று சொல்லிவிட்டு அவர்களும் ஓய்வெடுக்க சென்றனர். செல்லும் முன்னே நியூ ஜல்பாய்குரி (மேற்கு வங்கம்) நிறுத்தத்தில் தங்களுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டான் தியா.
காலையிலிருந்து அமர்ந்தபடியே கதை பேசியதால் முதுகு வலிக்க பெண்களும் அவரவர் இருக்கையில் நீட்டிப் படுத்தனர் . ஏனோ இதையெல்லாம் கணக்கிட்டு தான் நித்யா அப்போதே பிளைட்டில் சென்று விடலாம் என்று சொல்ல எல்லோரும் மறுத்து ட்ரைனில் செல்லலாம் என்று சொன்னார்கள்.
அங்கே சென்ற துவாரா சற்று நேரம் முன்பு சரித்திரா தன்னிடம் கூறியதை எல்லாம் நினைவுப் படுத்தினான்.
"துவாரா நான் என் தாத்தாவோட போய் அவரைப் பார்த்திட்டு அப்புறோம் நீங்க தங்கியிருக்கும் இடத்திற்கு வரேன். இந்த தாத்தா வேற என்ன திட்டம் வெச்சியிருக்காருனு எனக்குத் தெரியில. போறோம் பார்க்கிறோம் கிளம்பறோம்னு தான் சொன்னாரு. இருந்தாலும் ஒரு நாளாவது உங்க கேங் கூட நான் வந்து சுத்துவேன்" என்று சொல்லி கண்ணடித்தாள்.
சிங்கிள் பேரெண்ட்ஸ் கூட வளர்வதில் உள்ள அனைத்து சிக்கலும் துவாராவும் நன்கு அறிவான். அதும் ஒரு பெண் பிள்ளையின் நிலை அவன் நன்கு உணர்வான். எத்தனை துன்பங்களை சந்தித்து இருப்பாள் என்று எண்ணியவன் அதையெல்லாம் தகர்த்து தானே இன்றொரு பேட்மிட்டன் பிளேயராக வலம் வருகிறாள். அவளின் நிலை அவளின் தன்னம்பிக்கை, துணிச்சல், தைரியம் எல்லாவற்றையும் நினைத்து வியந்தான் துவாரகேஷ்.
அதிலும் அவள் சொன்ன அந்த வார்த்தை உண்மையில் அவன் அவளுக்குச் சொன்ன வார்த்தையையே அவள் மீண்டும் சொன்னாள். என்றோ தான் சொன்னதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாள் என்று நினைக்கையில் மனம் குதூகலித்தது. அவள் சொன்ன அந்த nss கேம்ப். துவாரா விவான் எல்லோரும் பத்தாவது படிக்கிறார்கள். அந்த கேம்புக்காக இவர்கள் ஒரு மலைக்கிராமத்தில் தங்கியிருந்து அருகே இருக்கும் குக்கிராமங்களில் வேண்டிய சேவைகளைச் செய்தனர். பொதுவாக இந்த மாதிரியான கேம்ப்களில் இரவு கேம்ப்பையர் (campfire - சுடரொளிக் களியாட்டம். நடுவில் நெருப்பை மூட்டிவிட்டு அதைச் சுற்றி அமர்ந்து இரவு முழுக்க கதை பேசுவது. இது அசாம் சென்றதும் தினம் இரவு நடைபெறும். மீதியை அங்கே பார்ப்போம்) போட்டு எல்லோரும் அமர்ந்து கதை பேசினார்கள். இவர்கள் பள்ளி மற்றுமின்றி இன்னும் இரண்டு பள்ளிகள் வந்திருந்தது. அதில் தான் சரித்திரா படித்தாள். இவனை விட மூன்று வருடம் சிறியவள். அவர்கள் பள்ளியிலிருந்து சில பெண் ஆசிரியர்களும் வந்திருந்தார்கள் தான். அது மூன்று நாட்கள் நடந்த கேம்ப்.
சுற்றி அடர்ந்த காடு என்பதால் இயற்கை உபாதைகளுக்கு வெளியே தான் செல்லவேண்டும். அருகருகே அமைக்கப்பட்டிருந்த கேம்ப்களில் எல்லோரும் தங்கியிருக்க அன்று இரவு உறக்கமில்லாமல் வெளியே சுற்றியவன் கண்களில் அந்த நிகழ்வு தென்பட்டது. தனியே செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சில மாணவர்கள் செல்ல அதைக் கண்டவன் தன் நண்பர்களோடு சென்று அவர்களை அடித்து விரட்ட அப்போது அங்கே அழுது கொண்டிருந்த ஒரு சிறுமியைத் தன்னோடு அழைத்து அவளை சமாதானம் செய்தான். அந்த இருள் சூழ்ந்த வெளியில் தூரம் எரியும் நெருப்பின் ஒளியில் யாரென்று தெரியாமலே அவளை அழைத்து அவளின் பயம் போக்கி நிறைய பேசினான். பொதுவாகப் பேசலாம் என்று அழைத்தவனுக்கு அவள் ஒரு சிங்கிள் மதர் வளர்த்தும் பெண் என்று தெரிந்ததும் நிறைய பாதுக்காப்பு முன்னெச்சரிக்கைகளும் குட் டச் பேட் டச் முதலியவற்றையும் (இன்றைய காலகட்டத்தில் தான் சின்ன குழந்தைகளுக்கே இதைச் சொல்லித்தரும் சூழ்நிலையில் இருக்கிறோம். அன்று இது பற்றி பெரிய விழிப்புணர்வு இல்லாத காலம்! 2007) நிறைய கான்பிடென்ஸ் கதையும் சொன்னான். ஏனோ அதற்கு முன்னதாகவே அந்த கேம்பில் அவன் பேட்மிட்டன் விளையாடுவதையும் அவனின் திறமையையும் கண்டு ரசித்தவளுக்கு அவனின் இந்த செய்கை ரொம்ப பிடித்தது. அவன் பெயர் எந்த ஸ்கூல் எந்த வகுப்பு படிக்கிறான் என்பது முதல் அவள் அவனை நன்கு அறிவாள். ஆனால் துவாராவும் அவளிடம் பெயரைக் கேட்டான் தான் அது அவனுக்கு நினைவு இல்லை. ஆனால் அவள் முன்னெற்றியின் தழும்பு மட்டும் அவன் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
ஒருவேளை அன்றே அவள் அவனிடம் அவளுக்கு அவனைப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தாலும் நிச்சயம் அவன் மண்டையில் அது ஏறியிருக்காது. அது ஒரு கனாக் காலம்! காலப் போக்கில் அந்த நிகழ்வை அவன் மறந்தே விட்டான். சில கசப்பான சம்பவங்கள் நடந்த பின்பு அவனால் எதிலும் முழு மனதோடு ஈடுபட முடியாமல் போனது. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து ஆம் பதிமூன்று பதினான்கு வருடங்கள் கழித்து அவன் முன் வந்து அவனை இத்தனை வருடங்களாக தான் காதலிப்பதாகவும் தன்னைத் தேடியதாகவும் தனக்காக காத்திருப்பதாகவும் அவள் சொன்னது தான் அவனுக்கு விந்தையிலும் விந்தையாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் துவாராவிற்கு நன்றாகப் புரிந்தது. இப்படி ஒரு பெண், இப்படி ஒரு காதல், இப்படி எதிர்பாரா ஒரு பயணத்தில் அதும் பார்த்த மாத்திரமே தனக்கும் அந்தப் பெண்ணின் மீது ஒரு ஈர்ப்பு தோன்றவும் அவளே தன்னை விரும்புவதாகச் சொன்னது முதல் எல்லாமே ஒரு ஆச்சரியமாகவே அவனுக்கு இருந்தது. இதற்கெல்லாம் மேல், எந்த தினத்தில் தன் அன்னை தன்னை விட்டு சென்றார்களோ அதே தினத்தில் தன் வாழ்வில் மீண்டும் ஒரு பெண் பிரவேசித்தாள் என்பது அவனுக்கு சென்டிமென்டலாகவும் ஒரு பிணைப்பைத் தந்துச் சென்றது. இதை விட இப்போது இந்த கொஞ்ச நேரமாக அவன் மனதில் இருக்கும் நிம்மதி, அவன் தந்தை மீது அவனுக்கிருக்கும் அந்த கெட்ட பிம்பம் விலகும் வேளையில் ஒரு மெரமைட் (கடற்கன்னி) போல் தெரிந்தாள். (பயணங்கள் முடிவதில்லை...!)
 
சில விஷயங்களை கடந்து போகணும் ன்னு சொல்றது சுலபம், கடந்து போவதுதான் கடினம். ஆனாலும் அதை உண்மையான நண்பர்கள் சொல்லும் போது சாத்தியமே..
காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும்.. துவாரா காதல் அழகு.
Nice update.
 
Last edited:
நைஸ். துவரா, சரித்திரா சரித்திரம்....
சர்ப்பரைஸ் எந்த விஷயம் என்பது பற்றியல்ல...
எந்த நிமிடம் நடக்கப் போவது என்பது தான்....
Nice lines....
ஹீரோ Fb ஓவர்...?
ஹீரோயின் யார்...? அனேஷியா வா..?
அவளுக்காக வெயிட்டீங்க..

அனு,துவாரா இருவரும் தான் ...இதுவரை
சந்திக்கவில்லை இந்த பயணத்தில்....
 
சில விஷயங்களை கடந்து போகணும் ன்னு சொல்றது சுலபம், கடந்து போவதுதான் கடினம். ஆனாலும் அதை உண்மையான நண்பர்கள் சொல்லும் போது சாத்தியமே..
காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும்.. துவாரா காதல் அழகு.
Nice update.
கண்டிப்பா சொல்வது சுலபம் கடைபிடிப்பது கடினம். நன்றி??
 
எல்லாம் கடந்து போகும், சரி....ஆனால் மனதின் நினைவுகள் மாறாது....துவா,சரித்ரா ஜோடி super ...
நினைவுக்களை அழிக்க முடியாதே? நன்றி?�
 
நைஸ். துவரா, சரித்திரா சரித்திரம்....
சர்ப்பரைஸ் எந்த விஷயம் என்பது பற்றியல்ல...
எந்த நிமிடம் நடக்கப் போவது என்பது தான்....
Nice lines....
ஹீரோ Fb ஓவர்...?
ஹீரோயின் யார்...? அனேஷியா வா..?
அவளுக்காக வெயிட்டீங்க..

அனு,துவாரா இருவரும் தான் ...இதுவரை
சந்திக்கவில்லை இந்த பயணத்தில்....
இன்னும் பிளாஷ்பேக் இருக்கு. அவளுடைய பிளாஷ்பேக்கும் இருக்கு. சந்திப்பார்கள் கூடிய விரைவில். நன்றி?
 
என்னதான் மறக்க நினைத்தாலும் கடக்க நினைத்தாலும் நாமே எதிர்பாராத வேளை நம் சிந்தையை நிறைக்கும் நினைவுகளை என்ன செய்வது :unsure: :unsure: :unsure:
அருமையான பதிவு ??
 
Top