Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-40

Advertisement

praveenraj

Well-known member
Member
மிரு இன்னமும் ஒரு குழந்தைப் போலே சிணுங்கி துவாரவின் மார்பிலே தலைவைத்து அழ, ஏனோ மிருவை ஒரு தோழியாய், குழந்தையாய் நினைத்து அவளை ஆறுதல் செய்தவன்,"ஏய் கைச்சூப்பி இன்னும் என்ன அதே குழந்தை மாதிரி இருக்க? அழாத மிரு" என்று அவன் சொல்ல ஏனோ இப்போது அவள் கண்களில் இருந்து இன்னும் கண்ணீர் அதிகமாக வந்து அவன் சட்டையை நனைத்தது. அவள் தலையை ஆதரவாக வருடியவன்,"உன்ன என்ன சொல்லி இந்த டூருக்கு அழைத்தேன்? தியா விஷயத்துல ஒரு தெளிவான முடிவை எடுக்கச் சொல்லித் தானே கூப்பிட்டேன்? இதுல உன் அப்பா வேற அடிக்கடி எனக்கு போன் பண்ணி,"ஏன் இந்தப் பொண்ணு இப்படி இருக்கா துவாரா? ஒன்னு தியானேஷை மன்னிச்சு ஏத்துக்கச் சொல்லு, இல்ல அவனை மறந்திட்டு நான் பார்க்கற பையனுக்காவது ஓகே சொல்லச் சொல்லு. ரெண்டும் இல்லாம வயசு பாட்டுக்கு ஏறிட்டே போகுது தானே?" கேட்டாரு. நான் என்ன பதில் சொல்லுவேன்?" என்று முடித்தான். இங்கே அவன் பிழைப்பே ஒரு முடிவெடுக்க முடியாமல் தான் தடுமாறுகிறது இந்த லட்சணத்தில் அவன் இவளுக்கு அறிவுரை சொல்ல வேண்டுமாம்? இருந்தும் தன் தோழியின் நல்லதுக்காக அவளையும் இந்தப் பயணத்தில் இணைத்தான். முதலில் வர மறுத்த தியானேஷ், மிரு வருகிறாள் என்றதும் அவனும் வந்தான். இந்த விஷயம் தெரிந்த தியாவின் அன்னை தான் அவனைப் போக விடாமல் செய்ய இப்போது தியாவின் அண்ணனுக்கும் எல்லாம் தெளிவாகப் புரிந்தது.

"அவன் பண்ணது மட்டும் கரெக்ட்டா?" என்று அவன் மீது சாய்ந்த படியே அவள் கேட்க,

"இங்கப் பாரு மிரு யார் பண்ணது சரி, யார் பண்ணது தப்புனு பார்க்க ஆரமிச்சா அது நீண்டுட்டே தான் போகும். ஒரு முடிவு எடு. வேணும் வேணாம். அவ்வளவு தான்" என்று சொல்ல ஏனோ இப்போது நிமிர்ந்து துவாராவை முறைத்தாள் அவள்.

" நீ பார்க்குற பார்வையின் அர்த்தம் புரியுது,"நீ முதல ஒழுங்காடானு" கேட்கற. நிச்சயம் இது வரை நான் கல்யாணம் அப்படினு ஒன்ன பத்தி நெனைச்சதில்லை தான். ஆனா இப்போ வை நாட்டுனு தோணுது" என்று அவன் சொல்ல மிரு தான் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

"ஹ்ம்ம். என்னையும் ஒரு பொண்ணு துரத்தி துரத்தி லவ் பண்ணியிருக்கா மிரு. கேட்கவே ஆச்சரியமா இருக்கு தானே?" என்றவன் சரித்திராவைப் பற்றி அனைத்தையும் ஒப்புவித்தான். ஏனோ கொஞ்ச நேரம் முன்பு பார்த்தா சரித்திராவை ஒரு கணம் இவனோடு சேர்த்து கற்பனை செய்தவள், சிரித்து,

"இதுல ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல துவாரா. நீ நல்லவன். நீ இந்த பைன் ஆப்பிள், பலாப்பழம் மாதிரி வெளிய பார்க்கத் தான் ரொம்ப ரப்பா தெரிவ. ஆனா நீ அது இல்ல. அதுக்குள்ள இருக்கும் பலாச்சுளை மற்றும் அன்னாச்சி மாதிரி ஸ்வீட். எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமில்ல உன் கூட க்ளோசா பழகுனா யாரை வேணுனாலும் கேட்டுப்பாரு. விவான், நித்யா, யாழ், துஷி ஏன் எல்லோரையும் விடு நம்ம இளா குட்டியைக் கேளு. அது சொல்லும். எப்போ பார்த்தாலும் தூ மாமா தூ மாமான்னு உன் கூடவே இருக்காளே? இங்க பெரிய பெரிய ஆளுங்க கிட்ட பேசுறதும் பழகுறதும் ஏன் அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கறதும் அவங்க கூட நட்பா இருக்குறதும் பெரிய விஷயம் இல்ல துவாரா. ஆனா ஒரு குழந்தையை உன் ஃப்ரண்ட் ஆக்கி அந்தக் குழந்தைக்கும் நம்மள ரொம்ப பிடிக்க வைக்கிறது அவ்வளவு சுலபமில்லை துவாரா. ஆனா இளா குட்டி ஆகட்டும் இல்ல உன் தங்கச்சி பையனாகட்டும் அவங்க ரெண்டு பேரைக் கூப்பிட்டுக் கேட்டா இங்க எங்க எல்லோரையும் விட உன்ன தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவாங்க. உண்மையும் அது தான். சில காயங்கள், சில வலிகள், சில ரணங்கள் உன்ன ரொம்ப ரப்பா காட்டிடுச்சி. ஆனா நீ அது இல்ல துவாரா. யூ டீசெர்வ் எவெரிதிங். இன்பெக்ட் யூ டீசெர்வ் தி பெஸ்ட் இன் தி வேர்ல்ட். நீ அவ்வளவு நல்ல பையன் துவாரா..."

ஏனோ தன்னைப் பற்றி தனக்கே இருந்த நெருடல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் விலகுவதைப் போல் அவனுக்குத் தோன்றியது."நீ ஒரு நல்ல மகனா இல்லாம இருக்கலாம். ஆனா நீ கீர்த்திக்கு ஒரு நல்ல அண்ணன். விவான், விவி அப்புறோம் எனக்கு ஒரு நல்ல நண்பன். இளா, சித்துவுக்கு (கீர்த்தனாவின் மகன்) ஒரு பொறுப்பான தாய் மாமா. நீ ரொம்ப நல்லவன்டா" என்று மிரு சொல்ல, ஏனோ தன் மீதும் இவ்வளவு நன் மதிப்புகளை வைத்திருக்கிறாளே என்று துவாராக்கு ஒரு மாதிரி ஆனது. ஆம் அவனிடம் குறைகள் இருக்கிறது தான். அவன் தந்தைக்கு அவன் ஒரு மகனாக இல்லை. ஆனால் எப்போதும் அவனைப் பற்றி பேசினால் அதையே பின் பாயிண்ட் பண்ணி பேசும் நபர்களுக்கிடையில் (நேற்று கூட விவான் அவனைக் கண்டபடி திட்டி அடித்து விட்டான்) தன்னிடம் உள்ள பிளஸ்களை அள்ளி வீசுபவளைக் கண்டு அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது. ஏனோ இப்போது மிருவை அணைத்தான் துவாரா. "தேங்க்ஸ் மிரு. எங்க நீயும் என்னைப் புரிஞ்சிக்காம விட்டுடீயோனு நெனச்சி ஃபீல் பண்ணியிருக்கேன் மிரு" என்று இழுக்க,

"துவாரா. நான் ஒன்னு சொல்லுவேன் பொறுமையா கேட்பியா? என்று அவள் இழுக்க, அவனும் தலையை அசைத்தான்.

"உன்னைப் பொறுத்த வரையில் உன் அப்பா தப்பு பண்ணிட்டாரு. ரைட் அப்படியே வெச்சிப்போம். ஆனா அவர் பண்ணத் தப்பை, அதாவது உன் பாயிண்ட்ல இருந்தே பேசுறேன், அவர் பண்ணத் தப்பை சரி பண்ணத் தான் இந்த இருவது வருஷமா இல்ல அதுக்கும் மேல முயற்சிக்கிறார். ஏன் இப்போக்கூட நீ அவரை மன்னிப்பியானு தவம் கிடைக்கராரு. ஆனா நீ அவரு கிட்ட பேசுறதில்லை, ஏன் ஒரு ஆளாவே மதிக்கறதில்லை. இருந்தும் உனக்கு நல்ல படிப்பு, நல்ல சாப்பாடு, எல்லாத்துக்கும் மேல நீ நல்லா பேட்மிட்டன் விளையாடுறானு தெரிஞ்சு உனக்காக அவர் பேட்மிட்டன் கோச்சிங்" என்று சொன்னவள் அவன் மறுக்கும் முன்னே இவள் மறுத்து,"விவான் அப்பா தான் அதுக்கெல்லாம் ஃபீஸ் கட்டுனாருனு நீ நெனச்சிட்டு இருக்க. ஆனா உனக்காக விவான் அப்பா செஞ்சதுக்கு பணத்தை திருப்ப கொடுத்துட்டாரு. விவான் கிட்ட கேளு. இல்ல கீர்த்திய கேளு. இல்லை நாங்க எல்லோரும் பொய்ச் சொல்றோம்னு நெனச்சா லலிதாம்மா கிட்ட கேளு (விவானின் அன்னை) அவங்கள தான் நீ ரொம்ப மதிப்பியே? கேளு. அவர் பண்ண தப்பு, உண்மையில உங்க அம்மா சாவுக்கு உன் அப்பா தான் காரணமா இருந்திருக்கணும்னு அவசியம் இல்ல. வேணுனா இப்படிச் சொல்லலாம், ஹ்ம்ம் உனக்கு அம்மா இல்லாம போனதுக்கு ஏதோ ஒரு வகையில அவரும் காரணம். இது வேணுனா சரி. ஆனா அதுக்காக உன்னை அவரு வசதிக்கு மீறி ஹாஸ்டெல்ல ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல தான் படிக்க வெச்சாரு. நாம எல்லாம் மிடில் க்ளாஸ் துவாரா. நீ, நான், விவி உங்கப்பா, என் அப்பா, பாவம் விவிக்கு யாருமே இல்ல. எல்லோரும் மாசம் சம்பளம் வாங்குற ஒரு மிடில் க்ளாஸ் பேமிலி. அதுவே விவான எடுத்துக்கோ? இல்ல யாழை எடுத்துக்கோ? இல்ல துஷியை எடுத்துக்கோ இல்ல திவேவை எடுத்துக்கோ? இப்படி உன் கூடப் படிச்ச எல்லோரும் ரொம்ப பெரிய பெரிய இடம். விவான் அப்பா பிசினெஸ் மேன். நாலு ஐஞ்சு தலைமுறைக்கு சொத்து இருக்கு. துஷி, யாழ் எல்லோரும் அப்படித் தான். இவங்க கூட எல்லாம் உன்னையும் சேர்ந்து படிக்க வெச்சாரே அதுக்காகவே நீ உன் அப்பாவை உள்ளங்கையில் வெச்சுத் தாங்கணும். என்னடா இன்னைக்கு இவ்வளவு பேசிட்டாளேன்னு யோசிக்கிறியா? நானும் பல முறை உன்கிட்ட இதைப் பற்றிப் பேச முயற்சி எடுத்திருக்கேன . ஆனா நீ இதைப் பற்றிப் பேச வந்தாலே கோவமா போயிடுவ. என் வாழ்க்கை மேலையும் என் குடும்பம் மேலையும் உனக்கிருக்கும் அந்த அக்கறை, பொறுப்பு எனக்கும் இருக்கும் தானே? நீயும் நல்லா இருக்கனும் துவாரா. அவ்வளவு தான் எனக்கு வேணும். நல்லா பொறுமையா உட்கார்ந்து யோசி, உனக்கே நான் சொல்ல வரது எல்லாம் நல்லா புரியும். நான் வரேன்" என்று சொல்லி மிரு விலக அங்கே தியா, விவான், விவி, ஹேமா, மௌனி மற்றும் சரித்திரா ஆகியோர் இருந்தனர். இருந்தனர் என்பதைக் காட்டிலும் இதுவரை இவர்களுக்கிடையிலான உரையாடலை நன்கு கண்டு கழித்தனர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஏனோ அங்கே நின்ற தியாவை கண்களாலே சுட்டறிதவள் அங்கிருந்துச் செல்ல எதேர்ச்சையா சரித்திராவைப் பார்த்து,"நீங்க தான் துவாராவை விரும்புற ஆளா?" என்று அவள் பட்டென கேட்க, விவானைத் தவிர அங்கிருந்த எல்லோரும் மைல்டாக அதிர்ந்தனர். அதிலும் குறிப்பாக விவி. ஏனெனில் யாருக்கும் விஷயம் தெரியாது.
திருதிருவென விழித்தவள் மெல்ல தலை அசைக்க,"வெரி குட் சாய்ஸ். நீங்க ரொம்ப லக்கி" என்று சொல்ல ஏனோ தியாவுக்கு அவள் தன்னை மறைமுகமாக குத்திக் காட்டுவதைப் போல் தோன்ற தலை குனிந்தான்."நான் உங்க கிட்ட நிறைய பேசணும் ஆனா இப்போ வேணாம், அப்புறோம் பேசறேன்" என்றவள் முன்னே செல்ல எத்தனித்து ஒரு கணம் சிந்தையில் ஏதோ தோன்றியவளாய்,"சரித்திரா ரைட்?" என்று அவள் பெயரைச் சரியாகச் சொல்கிறேனா என்பது போல் செய்ய அவள் தலையசைக்கவும்,
"நானும் துவாராவும் ரொம்ப பழைய நண்பர்கள். இன்னைக்கு மொழியில சொல்லனும்னா என் பெஸ்டி. அவன் மேல எனக்கு இருக்கறதுக்கும் என் மேல அவனுக்கு இருப்பதும் ஒரு டிவைன் மியூச்சுவல் அன்பு அக்கறை ஃப்ரெண்ட்ஷிப் தான். மத்தபடி ஒண்ணுமில்ல. நீங்களும் எல்லோர் போலையும் குறுகிய பார்வையைப் பார்க்காமா கொஞ்சம் விசாலமாகப் பாருங்க உங்களுக்குப் புரியும்" என்றவள் ஏனோ அங்கிருந்த மற்ற எல்லோருக்கும் எதையோ உணர்த்திவிட்டதைப் போல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
தியாவுக்கு அவள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் அவனை சவுக்கால் அடித்தது போல் இருக்க அப்படியே உறைந்து நின்றான். ஹேமா, மௌனி, விவி ஆகியோருக்கும் அதே போல் ஒரு நிலை தான். என்ன விவான் மட்டும் எல்லாம் தெரிந்ததால் கொஞ்சம் அமைதியாக இருந்தான். அவன் எதையும் கேட்காமலேயே அதே நேரம் இவர்கள் எல்லோரையும் போல் தவறாக நினைக்காமல் இருந்ததால் அவனுக்கு ஒன்றும் அவள் சொல்லிச் சென்றது பெரியதாகத் தெரியவில்லை.
போனவர்கள் யாரையும் காணவில்லை என்றதும் செபா, ஜிட்டு, இளங்கோ, யாழ், துஷி ஆகியோரும் இவர்களைத் தேடி இங்கே வந்தனர். அன்று போல் இன்றும் துவாராவுக்கும் தியாவுக்கும் கைக்கலப்பு ஏதேனும் ஏற்பட்டு விட்டதோ என்று எல்லோருக்கும் ஒரு பயம். அவர்கள் வர எதிரில் வந்த மிருவைப் பார்த்து விசாரிக்க அவளோ எதையும் பேசாமல் அங்கே இருந்த இளவேனிலிடமே அமர்ந்தாள். இவ்வளவு நேரம் இளவேனில் சருவின் தாத்தாவிடம் இருந்தாள்.
அங்கே தியாவை நோக்கி வந்த துவாரா,"அவ ரொம்ப காயப்பட்டிருக்காடா. ஆனா இப்பயும் உன்னத் தவிர யாரையும் அவ மனசுல நெனக்கல. கவலைப்படாத நிச்சயம் அவ உன்னைப் புரிந்துப்பா. இந்த டூர் முடியறதுக்குள்ள கண்டிப்பா அது நடக்கும்" என்று சொல்ல தியா தான் அவனை அணைத்து,"தேங்க்ஸ் துவாரா" என்று சொல்ல ஏனோ இவர்களின் இந்த திடீர் பாசப்பிணைப்பு அங்கிருந்தோர்களுக்கும் ஆச்சரியமாகவும் அதேநேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
எல்லோரும் கூட்டமாக நிற்கவும்,"எங்க தள்ளு தள்ளு தள்ளு. என்ன மறுபடியும் அடிச்சிகிட்டானுங்களா? நான் வந்திருக்கேன்னு சொல்லு. ஜிட்டு வந்திருக்கேன்னு சொல்லு. அவங்கள சமாதானம் செய்ய தான் வந்திருக்கேன்னு சொல்லு" என்று அவனுக்கு அவனே பில்ட் அப் கொடுத்துக்கொண்டு முந்தி வர அங்கே இவர்கள் இருவரும் அணைத்து நிற்பதைக் கண்டு முழித்தவன் எல்லோரையும் பார்க்க இப்போது அங்கிருந்த எல்லோரும் அவனை கேவலமான ஒரு லுக் விட (உனக்கு எதுக்கு இவ்வளவு சீன்? என்பது தான் அவர்கள் பார்வையின் அர்த்தம்) அதை உணர்ந்தவனாக, "அதானே ஜிட்டு இருக்கும் போது அடிதடி நடக்குமா? இல்ல நடக்கத் தான் விட்டுடுவேனா? அந்த பயம் இருக்கட்டும்" என்று அவனுக்கு அவனே சமாளிபிகேஷன் செய்ய,
ஜிட்டுவின் தோளில் கைப்போட்ட ஹேமா,"ஆனா ஜிட்டா நல்ல வேளை கடவுள் உனக்கு இந்த வாயைக் கொடுத்துட்டான். ஒருவேளை இந்த வாய் மட்டும் உனக்கு இல்லைனு வெய் உன் பொழப்பை நெனச்சிப் பாரு" என்று அவனை கலாய்க்க,"சரியாகச் சொன்னடா ஹேமா" என்று அவனுக்கு ஆமோதித்தான் இளங்கோ.
"டேய் ஹேமா. நான் சாணக்கியன்டா. என் பலமே இங்க தான் இருக்கு" என்று அவன் நெற்றியைத் தொட்டுக் காட்டி,"அதுக்கெல்லாம் மூளை வேணும் மக்கா" என்று சொல்ல, அவன் பொடனிலே ஒன்று போட்ட விவான்,"வெண்ண வெண்ண மூளை இங்க தான் இருக்கு அங்க இல்ல" என்று சொல்ல ஏனோ ஜிட்டுவுக்கு எப்போதும் பின்னந்தலையில் அடித்தால் செம கோவம் வரும். உடனே கோவம் கொண்டு ஜிட்டு அவனைத் துரத்த, விவானும் இதை எதிர்பார்த்தவனாய்த் தெறித்து ஓட ஜிட்டுவும் சளைக்காமல் அவனைத் துரத்தினான். பாய்ஸ் எல்லோரும் அவர்களைப் பின்தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் காணச் சென்றனர். யாழ் சரித்திரா, துவாரா மட்டும் சிரித்துகொண்டே இதைப் பார்த்தனர்.
அங்கே அவர்கள் ஐவரும் (பெனாசிர், ரேஷா, ஜெஸ்ஸி, லோகேஷ், இஸ்மாயில்) பேசிக்கொண்டு இருந்தனர். ரேஷா துஷியைப் பற்றியும் பின்பு தனக்கு வந்திருக்கும் அலைன்ஸ் பற்றியும் சொல்ல பெனாசிர் தான் இந்தப் பயணம் நிச்சயம் நமக்கு ஒரு மாற்றத்தை தரும் என்று சொல்லவும் வெளியே அவளை கிண்டல் செய்தாலும் உள்ளுக்குள் அவர்கள் எல்லோருக்கும் ஒரு நப்பாசை இருந்தது தான். ஒருவேளை அவரவர் ஆசைப்பட்ட படியே எல்லாம் இந்தப் பயணத்தின் முடிவில் நடந்தால்? நினைக்கையில் ஒரு சிலிர்ப்பு. வெறும் ஸ்நேக்ஸையே சாப்பிட்டதால் அவர்கள் யாருக்கும் லன்ச் டைம் முடிந்தும் இன்னும் பசியெடுக்கவில்லை.
அப்போது ஜெஸ்ஸி அங்கிருந்து கிளம்பி ஹேமாவை அழைத்தாள். அப்போது தான் அங்கே எல்லோரும் நித்யாவின் கம்பார்ட்மெண்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டு இளங்கோவின் கதை கேட்க அப்போது யாழுக்கும் தியாவுக்கும் வாக்குவாதம் முற்றி அதில் மிரு கோவித்து எழுந்து சென்று இருந்தாள். ஜெஸ்ஸியின் எண்ணை மொபைலில் பார்த்தவன் அங்கிருந்து விலகி தனியே சென்றான். செபாவும் தியாவுடன் சேர்ந்து யாழிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு தனியே சென்று அமர்ந்திருந்தான்.
"சொல்லுங்க ஜெஸ்ஸி, என்ன விஷயம்?"
ஜெஸ்ஸிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை,
"ஜெஸ்ஸி லைன்ல இருக்கீங்களா?"
"ஹ்ம்ம் அது இப்போ நான் என்ன பண்ணட்டும்? அவரு அனுப்பின மெசேஜுக்கு இன்னமும் ரிப்ளை பண்ணல"
"ஓ! அப்போ நீங்க இப்போ ரிப்ளை பண்ணப் போறீங்க அது தானே?" என்று சற்று கோவமாகவே கேட்க,
"தெரியிலப்பா. என்ன பண்ண ப்ளீஸ் சொல்லு" ஏனோ ஜெஸ்ஸி டக்கென ஒருமைக்குத் தாவினாள்.
"இங்கப் பாருங்க ஜெஸ்ஸி. அவனே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் யோசிக்க ஆரமித்து இருக்கான். நேற்றுல இருந்து நானும் வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். நித்யா-விவான், இளங்கோ-பாரு, மௌனி-நானு, ஜிட்டு-இதி ஏன் சித்து-விவி வரை (ஹேமாவால் ஓரளவுக்கு செபாவின் நண்பர்கள் கூட்டம் எல்லாம் ஜெசிக்கு அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது. ஜிட்டு, விவான், ஹேமா, மௌனியைத் தவிர மற்ற யாரிடமும் இன்னும் அவள் நேரிடையாகப் பேசவில்லை என்றாலும் எல்லோரையும் தெரிந்திருந்தாள்.) எல்லோரும் கபில்ஸா (ஜோடியா) இருக்கறதைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனசு தடுமாறுது. ஒரு மாதிரிஃபீல் செய்யுறான். அவன் உங்களை மிஸ் பண்றானு நெனைக்கிறேன். அதுமில்லாமல் கொஞ்ச நேரம் முன்பு யாழிடம் அவன் பேசியதையும் சொல்ல, ஜெசிக்கும் இன்னும் அவன் எதையும் வெளிப்படையாகச் சொல்லாததால் ஒரு வித பதற்றம் தொடர்ந்துகொண்டே இருந்தது.
ஜெசியிடம் எந்த பதிலும் இல்லாததால், ஹேமாவே தொடர்ந்தான்,"கொஞ்சம் பொறுங்க ஜெஸ்ஸி. ஐ கேன் அண்டர்ஸ்டென்ட் யுவர் ஃபீலிங்ஸ். ஆனா இப்போ நீங்களும் இந்த ட்ரைன்ல தான் ட்ராவல் பண்றீங்கன்னு தெரிஞ்சா வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறிடும். ப்ளீஸ்"
"ஹேமா கடைசியா ஒரே தடவை கேட்கறேன். சொல்லுங்க எனக்கு நீங்க நிறைய முறை சொல்லிடீங்க, இருந்தும் கேட்கறேன், செபாக்கு என்னைப் பிடிக்கும் தானே?"
"நானும் பலமுறை சொல்லிட்டேன். இருந்தும் உங்களுக்காகத் திரும்பச் சொல்றேன். அவனுக்கு இந்த கல்யாணம் பிடிக்கல, அவன் விருப்பம் கேட்காம நடந்தது தான். ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு மூலையில உங்களை அவனுக்குப் பிடிச்சி இருக்கு. இல்லைனா இவ்வளவு நாள் இவ்வளவு ஸ்மூத்தா போயிருக்காது. யா அன்னைக்கு உங்களுக்குள்ள நடந்த கான்வெர்சேஷன் தவிர இதுக்கு முன்னாடி நீங்க சண்டை போட்டதில்லை தானே?"
"ஹ்ம்ம்"
"நம்ம மனசு ரொம்ப உடைஞ்சு இருக்கும் போது நாம நமக்கு ரொம்ப பிடிச்சவங்களை தான் சட்டுனு காயப்படுத்துவோம். அன்னைக்கு அவன் உங்களைப் பிடிக்கலைனு சொன்னது உங்களைப் பிடிக்காம இல்ல. அவனுக்கு இந்த கல்யாணம் பிடிக்கில. எல்லோரு மாதிரியும் அவனால் இருக்க முடியலங்கற ஒரு ஆதங்கம். அவனுக்கு உங்க லவ் வேணும். ஆனா அதை ஓப்பனா கேட்க அவனுக்கு ஈகோ. யா ஈகோ தான். அதே நேரம் ஒரு வெறுப்பு, இன்னும் தெளிவாகப் புரியணும்னா நாம நம்ம அம்மாகிட்டயோ அப்பாகிட்டயோ சண்டை போட்டதும் அவங்க நம்மள காம்ப்ரமைஸ் பண்ண நமக்கு பிடிச்ச சாக்லேட்டையோ பொம்மையையோ தரும் போது நமக்கு அது பிடிக்குங்கறதைக் காட்டிலும் அந்த நிமிஷம் நம்ம பேரெண்ட்ஸ் மேல இருக்க நம்ம கோவம் அதிருப்தியைக் காட்ட எனக்கு ஒன்னும் வேணாம். எனக்கு இது பிடிக்காதுன்னு கத்துவோம் தெரியுமா? அது தான் அன்னைக்கு நடந்தது"
"மே பி அவன் உங்களைப் பிடிக்காம கூட கல்யாணம் பண்ணியிருக்கலாம். ஆனா நாளடைவில் அவனுக்கு உங்களைப் பிடிச்சி இருக்கு. அதேநேரம் அவன் அப்பாவை எதிர்த்து பேச முடியில, அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்ல முடியில போன்ற கோவம் கூடவே அவன் உங்க லவ்வை எதிர்பார்த்திருக்கலாம். இல்ல அட்லீஸ்ட் உங்க கூட ஒரு ஸ்மூத்தான ரிலேஷனை கூட எதிர்பார்த்திருக்கலாம். அதுவும் கிடைக்காம போக, உங்களை இந்த டூருக்கு கூப்பிட்டும் இருக்கான். அதுவும் நடக்கலைனு உடனே ஒரு வெறுப்பு, ஒரு கோவம், ஒரு இயலாமை, என்ன வேணுனாலும் இருக்கட்டும். அன்னைக்கு அது எல்லாம் அவன் கிட்ட இருந்து பர்ஸ்ட் அவுட் ஆகிடுச்சு. ஹி மைட் ஹேவ் பர்போஸ்ட்லி ஹர்ட் யூ (உங்களை வேணும்னே கூட காயப்படுத்தியிருக்கலாம்) நிச்சயம் இது உண்மையா இல்லாமலும் இருக்கலாம். எல்லாம் என் அஸ்ஸாம்ப்சன் (assumption - அனுமானம்) என்னடா இவன் அவன் ஃப்ரண்டுக்கு சப்போர்ட் பண்றானேனு யோசிக்கறீங்களா?"
ஜெஸ்ஸி அமைதியா இருக்க,
"புரியுது. ஆனா என்ன பண்ண? என் ஃப்ரண்ட் ஆச்சே? அவன் தப்பு பண்ணியிருந்தாலும் அவனுக்காக இப்போ உங்க கிட்ட பேசணுமே. ஜெசி என்ன பிரச்சனைன்னு எனக்குக் கண்டிப்பா தெரியில. ஆனா ஒருவேளை அவன் ஏன் தாழ்வு மனப்பான்மையில் இருக்கக் கூடாது? என்னால எனக்குப் பிடிச்ச எதையுமே செய்ய முடியலையேனு? ஒரு பக்கம் அவன் அப்பா, மறுபக்கம் நீங்க. நான் உங்கள தப்பு சொல்லல. அவனுடைய பாயிண்ட்ல இருந்து சொல்றேன். ஒருவேளை நீங்க அவனைப் புரிஞ்சு அவனுக்கு ஒரு ஆறுதலவோ இல்ல அவனுக்கு ஃப்ரண்டாவோ இருந்திருக்கிருக்கணும்னு அவன் நெனச்சிருக்கானோ என்னவோ? ஸீ எது எப்படியோ இந்த ரெண்டு நாளுல நான் அவன் கிட்ட அப்செர்வ் பண்ணவரை என்ன புரிஞ்சதுனா, இவங்க எல்லோரும் அவங்கவங்க பார்ட்னரோட அது மனைவினாலும் சரி காதலினாலும் சரி சந்தோசமா இருக்கும் போது என்னால ஏன் இப்படி ஒரு லைப் லீட் பண்ண முடியிலங்கற ஆதங்கம் தான் அதிகம் இருக்கு"
"அவனோட இயலாமை காம்ப்ளெக்ஸ் எல்லாம் தான் இதுக்குக் காரணம். எங்க கூட எல்லாம் நல்லா நார்மலா ஜாலியா தான் இருக்கான். ஆனா உங்க கூட மட்டும் ஏன் இப்படி இருக்கான் எனக்குப் புரியில? மே பி எதோ ஒரு இடத்துல நீங்க அவனுக்கு அவன் அப்பாவை நினைவு படுத்துறீங்க. ஒரு சப்மிஸ்ஸைன் (submission-கீழ்ப்படிதல், தாழ்மை) அவன் உணரலாம். எனக்கும் இது தான்னு உறுதியா சொல்ல முடியில. அநேகமா இதுவா இருக்கலாம்னு ஒரு எண்ணம். ஏன் நீங்க ஒரு ஃப்ரண்டா அவன் கிட்ட பழகக் கூடாது? இதெல்லாம் இப்போ ஏன் நான் சொல்றேன்னு நெனைக்கறீங்களா? நீங்க இப்போ போன் பண்ணலைனாலும் நானோ இல்ல விவானோ ஈவினிங் போன் பண்ணியிருப்போம்"
"ஏன்?"
"ஒரு மந்தையில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு ஆடுகள் ஒன்றை ஒன்று சந்தித்தப் போது பேசமுடியவில்லையே மொமெண்ட்டை உருவாக்கத் தான்" என்று அவன் சிரிக்க,
"வாட்? புரியில"
"அட உங்க ரெண்டு பேரையும் ஈவினிங் இல்ல நைட் மீட் பண்ண வைக்கப் போறோம்"
"நிஜமா?" அவளிடம் பேச்சு இல்லை,
"உண்மை தான். பட் அதுக்கு முன்னாடி இன்னொரு கேம் இருக்கு. அது முடிஞ்சதும் தான் மீட்டிங்"
"என்ன கேம்?"
"அது சஸ்பென்ஸ். எனிஹொவ் பிரேஸ் யுவர்செல்ப் (ஒரு கடினமான சூழலை எதிர்க்கொள்ள தயாராக இருங்க) ஈவினிங் சொல்றேன்"
"ஒர்க் அவுட் ஆகுமா?"
"அந்த கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம். எப்படியாவது வேப்பிலை அடிச்சாவது கூட்டிட்டு வரோம்"
"வேப்பிலை?"
"அட என்னம்மா சும்மா சும்மா டவுட் கேட்டுட்டு? அது அவனை சமாதானம் செய்து கூட்டிட்டு வரோம். என்னம்மா இப்படி பண்றீயேமா?"
"சாரி எனக்கு உண்மையிலே புரியில. அது தான்"
"பேயோட்டுறதுக்கு வேப்பிலை அடிக்கறதுனு சொல்லுவாங்க. இப்போ புரியுதா?"
"ஓ!" என்று அவள் சொல்ல,
"ஸ்ப்பா முடியில. என்னால முடியில. என் காதலுக்கு கூட நான் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இதுக்கெல்லாம் சேர்த்து பெருசா கவனிக்கணும் சொல்லிட்டேன்"
"கண்டிப்பா"
"ஓகே பை"
ஹேமாவுடன் நடந்த உரையாடலையே மீண்டும் மீண்டும் அசைபோட்டாள் ஜெஸ்ஸி.
"என்ன ஜெசி பலமான யோசனை போல?" என்றாள் ரேஷா. ஏனோ ரேஷா மற்றும் பெனாசிரிடம் இதைச் சொன்னாள். அவர்களுக்கும் எல்லாம் பெர்பெக்ட்டாக நடந்தால் செம்ம மகிழ்ச்சி தான்."கவலைப் படாத ஜெசி இந்த டூர் யாருக்கு எப்படியோ உனக்கு ஹனிமூன் ட்ரிப் தான்" என்று சொல்லி ஜெஸ்ஸியை வெட்கப்பட வைத்து கலாய்த்தனர் அவர்கள் இருவரும். அவளின் மகிழ்ச்சி இந்த வெட்கம் எல்லாம் ரேஷாவுக்கும் பெனாசிருக்கும் அளவில்லா சந்தோசம் தந்தது. தெம்பாக இப்போது அவர்கள் எல்லோரும் உணவை உண்டனர்.
*****************
இங்கே ஜிட்டு விவானைத் துரத்திக்கொண்டு போக யாழ், சரித்திரா மற்றும் துவாரா மூவரும் சிரித்து வேடிக்கை பார்த்தனர்."டேய் துவாரா நீ செம கேடிடா லவ் பண்றதை எங்ககிட்ட இருந்து மறைச்சிட்ட தானே?" என்று யாழ் அவனை ஓட்ட,
இன்னும் சரித்திராவிடம் அவன் சம்மதத்தை நேரிடையாகச் சொல்லாததால் அவளும் தயங்கி அவனைப் பார்க்க,"அதெல்லாம் ஓகே அப்போ என் வயித்துல வளருற நம்ம பேபிக்கு என்ன பதில் சொல்லப் போற?" என்று சந்தடி சாக்கில் குண்டைத் தூக்கிப் போட்டாள் யாழ். சரித்திரா திடுக்கிட்டு துவாராவைப் பார்க்க, அவனோ அதற்கும் மேல் ஷாக் ஆகி யாழைப் பார்க்க, உண்மையில் இவ்வளவு ஷாக் ஆவார்கள் என்று நினைக்காதவள்,"ஹே ஜஸ்ட் கிட்டிங். என்ன ரெண்டு பேரும் செமயா ஃப்ரீஸ் ஆகிட்டிங்க? ஓ உனக்கு என்னைப் பற்றி தெரியாது இல்ல? நான் யாழ் இவனோட ஃப்ரண்ட். நான் எப்பயும் இப்படித் தான். டோன்ட் டேக் இட் சீரியஸ்" என்று சொல்லிவிட்டு,"துவாரா ஹ்ம்ம் ஹ்ம்ம் டூயட் பாடு...
எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்திடுச்சிடி
டேட் பண்ணவா
இல்ல சேட் பண்ணவா ?
உன்கூட சேர்ந்து வாழ தான் ஆசை வந்திடுச்சிடி
மீட் பண்ணவா இல்ல வெயிட் பண்ணவா ?
ஊருல அவ்வளவு பொண்ணு இருந்தும்
லக் தான் உனக்கு அடிச்சிருக்கு ,
ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்று சொல்லிவிட்டு ஓடினாள் யாழ். இங்கே துவாராவும் சரித்திராவும் அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் நின்றனர். (பயணங்கள் முடிவதில்லை)
இன்னும் மூன்று அல்லது நான்கு அத்தியாயங்களில் ட்ரெயின் அசாம் சென்றுவிடும். அதன் பின் இருபத்தி இரண்டு அத்தியாயங்களில் இந்த கதை நிறைவடையும். சோ இன்னும் இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஆறு அத்தியாயங்கள் இருக்கு.அல்மோஸ்ட் கதையுடைய ரெண்டாவது இண்டெர்வெல் பாயிண்டை நெருக்கிட்டோம். குழப்பமில்லாமல் சுவாரசியமாக தானே கதை நகர்கிறது?
 
இரண்டு ஆட்டை மந்தையில சேர்க்கப்கோறீங்க...
விவான், நித்யா...love with age difference
இளா, பாரு...family enmity and love
செபா, ஜெஸ்....dominating appa, arranged marriage..still with probs

the story of 3 married couples

jittu, ithiri......jolly love , with no probs
hema, mouni...misunderstanding then love

thiya, miru....family probs, but undeclared love...
thushi, reshma....untold love, misundersganding...moving for arranged marriage

thuva and sarithra....one side love, thuva yet to declare...

vivian, sithara.....confirmed but yet to

leftouts.....இவர்களில் யார், யாரோட சேரப்போறாங்க.... :unsure: :unsure: :unsure:
theevaesh....the colletor..
anushiya....team leader
yazh....rowdy baby
logesh....
ismail....
penazir

எனக்கு எந்த குழப்பமும் இல்லை னு நினைக்கிறேன்..
சரிதானே, ரைட்டர் ஜி...?
 
இரண்டு ஆட்டை மந்தையில சேர்க்கப்கோறீங்க...
விவான், நித்யா...love with age difference
இளா, பாரு...family enmity and love
செபா, ஜெஸ்....dominating appa, arranged marriage..still with probs

the story of 3 married couples

jittu, ithiri......jolly love , with no probs
hema, mouni...misunderstanding then love

thiya, miru....family probs, but undeclared love...
thushi, reshma....untold love, misundersganding...moving for arranged marriage

thuva and sarithra....one side love, thuva yet to declare...

vivian, sithara.....confirmed but yet to

leftouts.....இவர்களில் யார், யாரோட சேரப்போறாங்க.... :unsure: :unsure: :unsure:
theevaesh....the colletor..
anushiya....team leader
yazh....rowdy baby
logesh....
ismail....
penazir

எனக்கு எந்த குழப்பமும் இல்லை னு நினைக்கிறேன்..
சரிதானே, ரைட்டர் ஜி...?
Super sis....40 epi yai clear ah sollitinga........ ? ? ?
 
இரண்டு ஆட்டை மந்தையில சேர்க்கப்கோறீங்க...
விவான், நித்யா...love with age difference
இளா, பாரு...family enmity and love
செபா, ஜெஸ்....dominating appa, arranged marriage..still with probs

the story of 3 married couples

jittu, ithiri......jolly love , with no probs
hema, mouni...misunderstanding then love

thiya, miru....family probs, but undeclared love...
thushi, reshma....untold love, misundersganding...moving for arranged marriage

thuva and sarithra....one side love, thuva yet to declare...

vivian, sithara.....confirmed but yet to

leftouts.....இவர்களில் யார், யாரோட சேரப்போறாங்க.... :unsure: :unsure: :unsure:
theevaesh....the colletor..
anushiya....team leader
yazh....rowdy baby
logesh....
ismail....
penazir

எனக்கு எந்த குழப்பமும் இல்லை னு நினைக்கிறேன்..
சரிதானே, ரைட்டர் ஜி...?
அப்பபப்பா இந்த கதைக்கு இதைவிட சுருக்கமாவும் அதேநேரம் பொருத்தமாவும் சினாப்ஸிஸ் கொடுக்கவே முடியாது போங்க... சோ அப்போ கதையில் எந்த குழப்பமும் இல்ல...ரத்தினசுருக்கம் போங்க... அவ்வளவே இவர்கள் எல்லோரும் ஒன்று இணைவார்கள். அவங்களோட எமோஷன்ஸ் கூடவே கொஞ்சம் அஸ்ஸாம்னு கதை வந்து முடியும்... நன்றி? loved your presentation❤ thank you!
 
Nice story
Crystal clear explanation. Comedy tracks awesome.
I felt Second group is unattended.
Show some attention for anoshiya,Lokesh.... pavam ah antha pularum yaathra seyunnu alla.
You r so cautious abt 18 + scenes. Tht s good.
 
Top