Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-39

Advertisement

praveenraj

Well-known member
Member
தியானேஷ் பேசியதில் கோவமாக அவ்விடத்தில் இருந்து அதற்கடுத்த கம்பார்ட்மெண்ட் சென்று அங்கே அமர்ந்து சரித்திராவின் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்த துவாராவின் அருகில் அமர்ந்தாள். அவள் முகமே அவள் ஹர்ட் ஆகியிருக்கிறாள் என்று காட்ட, சரித்திராவின் தாத்தா அவளையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தார். அவரிடம் எக்ஸ்குஸ் கேட்பதைப் போல் சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு தூரம் வந்தான்.
"என்ன ஆச்சு மிரு?"அவள் ஒரு மாதிரி இருக்க,"யாரு என்ன சொன்னாங்க? ஏன் இப்படி உர்ருனு இருக்க?"
அவள் கோவமாக முகத்தைத் திருப்ப,
"மிருதுளா லுக் நீ குழந்தையுமில்லை, நான் மனோதத்துவ நிபுணனுமில்ல. சோ என்ன ஆச்சுன்னு நீயாவே சொன்னால் தான் எனக்குத் தெரியும்"
அவளும் நடந்ததை (தியா சொன்னதையெல்லாம்) சொல்ல,"இவ்வளவு தானே? அவன் ஒன்னும் தப்பா சொல்லவேயில்லையே?"
அவள் முறைத்தாள்.
"நீ என்ன நெனச்சிட்டு இருக்க மிரு? இன்னும் நீ உன் குழப்பத்திலிருந்து வெளியே வரலையா? தியாவை நீ இன்னும் மன்னிக்கலையா?"
அவள் இன்னும் கோவமாக முறைக்க,"இங்க பாரு மிரு, நமக்குள்ள என்ன ரிலேஷன்னு நமக்கு மட்டும் தான் தெரியும். அண்ட் வெளியிலிருந்து பார்க்கும் நபர்களுக்கு நம்ம ரிலேஷன்ஷிப் தப்பா தான் தெரியும். அதுக்கு என்ன பண்ண முடியும் சொல்லு? நீயும் நானும் கிண்டர் கார்டென்ல இருந்து செகண்ட் ஸ்டேண்டர்டு வரை ஒண்ணா படிச்சவங்க. நான் உன்னோட முதல் ஃப்ரண்ட். நீயும் எனக்கு அப்படித்தான். அதுக்கப்புறோம் நடந்த சில விஷயங்கள்..." என்று துவாரா கொஞ்சம் அமைதியாகி (அவன் அன்னையின் மரணம்)"நான் அங்க இருக்கவே பிடிக்காம ஊட்டி போய் அங்க படிச்சேன். அதுக்கப்புறோம் நீங்களும் வீடு மாற்றி எங்கெங்கோ ஷிப்ட் ஆகி போக எதிர்பார்க்கா விதமா நாம ரெண்டு பேரும் நம்ம காலேஜ் அட்மிசன் அப்போதான் திரும்ப மீட் பண்ணோம். அது ஞாபகம் இருக்கா உனக்கு?" என்று துவாரா நிறுத்த, மிரு அந்நாளின் நினைவில் மூழ்கினாள்.
"காலேஜ் அட்மிசன் அப்போது மாணவர்கள் எல்லோரும் வரிசையில் நிற்க நீ ரொம்ப நேரம் நின்னு தலைவலின்னு சொல்லி உங்க அப்பாவைக் கூப்பிடுவதற்குள் மயங்கிட்ட. நானும் உன்ன சரியா கண்டுபிடிக்க முடியாம உன்னைத் தூக்கி உட்கார வைத்ததும் தான் உன் அப்பிளிக்கேஷன் பார்த்து ஒருவேளை நீயாக இருக்குமோனு திரும்பினா உன் அப்பா எதிர்ல நின்னாரு.கண்விழித்து உன் தந்தை வாங்கிவந்த ஜூஸ் குடித்து முடித்ததும்,"மிரு இது யாருனு ஞாபகம் இருக்கா?" என்று புதிர்போட்ட உன் தந்தையிடம் புரியாமல் விழித்தையே மிரு?"
துவாரா அவனின் இடது கை ஆட்காட்டி விரலை எடுத்து வாயில் வைக்க டக்கென ஸ்பார்க் ஆனவளாய்,"டேய் துவாரா? நீயா?" என்று ஆச்சரியப்பட,"நானே தான்டி கைசூப்பி. எப்படி இருக்க? என்ன இது கண்ணாடியெல்லாம் போட்டு ஆளே மாறிட்ட?" என்றவன் அவளை அருகில் அழைத்து,"இன்னமும் நைட் கை சூப்பினால் தான் தூக்கம் வருதா?" என்று இழுக்க, அவன் தன்னை கிண்டல் செய்வது புரிந்து,"பிச்சிடுவேன். நான் இப்போல்லாம் அப்படி இல்ல. ஐ ஹேவ் குரான் அப்" என்று சொன்னாலும் அவளுக்கு ஒரு மாதிரி எம்பேரேசிங்கா இருந்தது என்னவோ உண்மை."எனக்கு நம்பிக்கை இல்லை. இரு நான் அங்கிள் கிட்டயே கேட்கறேன்" என்று கேட்க,
சிரித்தவாறு,"அதெல்லாம் இப்போ கை சூப்பறதில்லை. ஆனா அந்தப் பழக்கத்தை மறக்கவைப்பதற்குள் பெரும் பாடு ஆகிடுச்சு துவாரா" என்றவரிடம்,"எப்போ அங்கிள் நிறுத்துனா?" என்று கேட்க மிரு அவள் தந்தையை பதில் சொல்ல விடாமல் செய்வதற்குள்,"எட்டாவது படித்து முடித்து சம்மர் லீவ்ல தான் துவாரா நிறுத்தினா" என்று அவர் சொல்லிவிட்டார்.
"அப்பாபா பா" என்று சிணுங்கிக்கொண்டே இழுத்தாள் மிரு. சிரித்துக் கொண்டே துவாரா,"என்ன" என்பதைப் போல் அவளிடம் தலையைத் தூக்க, வெட்கத்தில் தலை குனிந்து எம்பெரஸ் ஆகினாள் மிரு. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அவர்களின் நட்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அன்றைய ப்ரொசீஜர்ஸ் எல்லாம் முடிந்து மிரு துவாரா அவள் தந்தை என்று மூவருமாக கேன்டீன் சென்று சாப்பிட எதிரே தியானேஷ் அவன் பெற்றோர்களுடன் வந்தான். ஏனோ தியானேஷின் அன்னையின் கண்கள் மிருவையும் துவாராவையும் முறைக்க அவன் தந்தை தான் மிருவின் தந்தையைப் பார்த்து புன்னகைக்க அவரும் பதிலுக்குச் சிரித்தார்.
மிருவின் அன்னையும் தியானேஷின் தந்தையும் அண்ணன் தங்கை. ஆரம்ப
காலத்தில் இரு குடும்பமும் லோவர் மிடில் க்ளாஸ் ஆகா தான் இருந்தது. மிருவின் தந்தை தொழிலில் ஒருமுறை பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட நிறைய கடன் பிரச்சனைகள் வந்து விட்டது. அந்தச் சூழலில் தன் தங்கையின் கணவருக்காக அவர் மனைவியின் நகைகள் எல்லாம் விற்று உதவினார் தியாவின் தந்தை. வழக்கமாக குடும்பங்களில் இருக்கும் அந்த ஈகோ பிரச்சனை தான். அதில் தியாவின் அன்னைக்கு துளியும் விருப்பமில்லை.அவர் மறுக்க தியாவின் தந்தை தான் மீறி கேட்டு,"நமக்கு இரண்டும் பசங்க தானே? பாவம் அவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. கொடு" என்று வாங்கி கொடுத்து விட்டார். அங்கே மிருவிற்கு ஒரு அக்கா என்று இரண்டும் பெண் பிள்ளைகள். இருந்தும் வாங்கிய நகைகளுக்கு உரிய வட்டியை மிருவின் தந்தை செலுத்த முயற்சிக்க தியாவின் தந்தை தான் மறுத்து விட்டார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் தொழில் மேலோங்க அந்த குடும்பத்திற்குள் சண்டை ஈகோ என்று புகைச்சலில் தான் இருந்தது. இவர்களின் (தியாவின் குடும்பம்) நிலையில் பெரியதாக மாற்றம் ஒன்றும் வரவில்லை.
கொஞ்ச நாட்களில் வாங்கிய நகைகளை எல்லாம் மீட்டு கொடுக்க, அப்போது வட்டிக்காக அதிகம் நகை தருவார் என்றும் இல்லையேல் பணமாவது கொடுப்பார் என்றும் தியாவின் அன்னை எதிர்பார்க்க அவரோ நகைகளை மட்டும் கொடுக்கவும் அதிலிருந்து அவர்களின் முன்னேற்றம் வளர்ச்சி அவருக்கு ஒருவித பொறாமை தந்தது. உரிய காலத்தில் உதவியதால் தற்போது அவர்கள் மீண்டும் தங்களுக்குச் செய்வார்கள் என்று தியாவின் அன்னை எதிர்பார்க்க உண்மையில் மிருவின் தந்தை செய்ய தான் முன்வந்தார், ஆனால் தியாவின் தந்தை அதை புரிந்தவாரா புன்னகையுடன் மறுத்து விட்டார். இதற்கு நடுவில் மிருவின் அக்காவும் மிருவும் அடுத்தடுத்து வயதிற்கு வர அவர்களுக்கு சீர் அப்படி இப்படி என்று தியாவின் தந்தை செய்தது எதுவும் அவன் அன்னைக்குப் பிடிக்கவில்லை. இருந்தும் இறுதியாக ஒரு நம்பிக்கையில் இருந்தார். தியாவின் அண்ணாக்கு மிருவின் அக்காவை திருமணம் செய்யலாம் என்பது தான் அது. நன்றி மறக்க மாட்டார்கள் என்று நம்பி அவர்கள் பெண் கேட்க ஜாதக பிரச்சனை அதுயிது என்று காரணம் காட்டி மிருவின் அக்காவிற்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் முடிய அந்தக் கோபம் எல்லாம் ஒன்று திரண்டு அந்தக் குடும்பத்தைக் கண்டாலே தியாவின் அன்னைக்கு ஆகாமல் போய்விட்டது. மிருவுக்கும் அவள் அக்காக்கும் நான்கு வருட வித்தியாசம். அதே போல் தியாவுக்கும் அவன் அண்ணனுக்கும் ஆறு வருட வித்தியாசம் என்று இருக்க, அந்த சூழலில் தான் தியாவின் அண்ணாக்கு திருமணம் முடிய அவன் தந்தையும் எதிர்பாரா விதமாக இறந்து விட்டார். தியா அப்போது ஜர்னலிசம் படித்துக்கொண்டு இருந்தான். (இன்ஜினியரிங் முடித்து விட்டு தான்) தியாவும் அவன் இண்டிபெண்டெண்ட் ஜர்னல் (சுயமான ஆன்லைன் பத்திரிக்கை) ஆரமிக்க அப்போதாவது மிருவின் தந்தை ஏதாவது உதவுவார் என்று அவன் அன்னை எண்ண மாறாக அப்போதும் அவர்கள் உதவாதது என்று நிறைய கோவம் அவன் அன்னைக்கு. தியா காலேஜ் சேரும் போது மிருவின் அக்காவிற்கு திருமணம் முடிவானதால் இரு குடும்பமும் சண்டையில் இருந்தது.
இதனாலே மிருவைக் கண்டால் தியாவின் அன்னைக்கு ஆகவே ஆகாது. இந்த நிலையில் தான் துவாராவும் மிருவும் தங்கள் பழைய நட்பை புதுப்பித்துக்கொள்ள முதல் நாளிலிருந்து துவாரா மிரு இருவரின் நட்பு ஏனோ தியாவுக்கு பிடிக்காமலும் புரியாமலும் போனது. இதே கல்லூரியில் தான் மிருவும் படிக்கிறாள் என்று தெரிந்ததும் தியாவின் அன்னை அவனை நன்றாக மூளை சலவைச் செய்தார். ஆனால் தியாவிற்கு மிருவைப் பிடித்திருக்க கூடவே மிரு துவாராவிடம் நெருங்கி பழகுவது அவனுக்குப் பிடிக்காமல் போனது.
மிரு துவாரா இருவரின் நட்பு உண்மையில் விவானுக்கே சந்தேகம் தான் தந்தது. பின்னே விவானும் துவாராவும் ஒரே ஸ்கூலில் படித்தவர்கள் நெருங்கிய நண்பர்கள் வேறு. விவானுக்குத் தெரிந்து துவாராவிற்கு பெண்கள் என்றால் ஒரு பத்தடி தள்ளியே நிற்பான். மேலும் துவாராவின் மனம் கவர்ந்தவள் யாரென்றும் 'அவளை' விடுத்து யாரையும் அவன் பார்க்க மாட்டான் என்றும் விவானுக்குத் தெரியும், ஆயினும் இருவரின் நட்பு நிறைய சந்தேகங்கள் தந்தது. மிரு பெரும்பாலும் துவாராவிற்கு உணவு எடுத்து வருவாள் (மிரு டேஸ் ஸ்காலர். துவாரா ஹாஸ்டெல்) துவாரா மூலம் தான் மிருவிற்கு விவான், இளங்கோ, ஜிட்டு, ஹேமா, செபா என்று மெக்கானிக்கல் பசங்க எல்லோரும் நட்பானார்கள். தியாவுக்கு இது சுத்தமாக பிடிக்காமல் போனது
.
"இல்ல துவாரா எனக்கு அவன் மேல எவ்வளவு காதல் இருக்கோ அதே அளவு கோவம் வெறுப்பும் இருக்கு. அவனை விடு அவன் அம்மாக்கு என்னைக் கண்டாலே சுத்தமா ஆகாது." தியாவின் அம்மா எதையும் பட்டென்று சொல்லிவிடக் கூடியவர். அவரின் வார்த்தைகள் மிருவை நிறைய காயப்படுத்தி இருக்கிறது. இன்ஃபேக்ட் துவாராவை கண்டாலே தியாவின் அன்னைக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஏனெனில் துவாராவும் மிருவும் காதலிப்பதாலாம். அது அவரின் அனுமானம். ஆக்சுவல்லி இந்த சாதரண சிக்கல் இடியாப்பச் சிக்கல் ஆனதிற்கு காரணம் மிரு தான். ஆம் நட்பாகச் சென்றுகொண்டிருந்த அவர்கள் வாழ்வில் அன்று திடீரென்று ஒரு நாள் துவாரவிடம் அவனை தான் காதலிப்பதாக மிரு சொல்லிவிட இந்த விஷயத்தை அவர்கள் வகுப்பு மாணவன் வினோத்தும் ரஞ்சித்தும் எதர்ச்சையாக ஒட்டுக் கேட்டு அது அதற்குள் காட்டுத்தீயாக கல்லூரியில் பரவியது.
மிரு மீது இருந்த கோவம் தவறான அபிப்ராயம் கொஞ்ச கொஞ்சமாக மாறி தியாவிற்கு அவள் மீது காதல் வரும் சமயத்தில் இந்த விஷயம் அவன் கதை எட்ட கோவத்தில் அவர்களை இணைத்து கண்டதைப் பேசிவிட்டான் தியா. ஆனால் அன்று துவாரா மற்றும் மிரு இருவருக்கும் நடந்த உரையாடலை யாரேனும் முழுவதுமாய்க் கேட்டிருந்தால் இந்தக் குழப்பம் வந்து இருக்காது. என்ன சொல்வது சிலர் நம் அருகே இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நாம் அவரை காதலிப்பதாக நினைக்க பின்பு தான் அதற்கு பெயர் காதல் இல்லை என்றும் அது இன்னும் ஆழமான நட்பு என்ற உண்மை என்று துவாரா அவனின் நிலையை மிருவுக்கு விளக்கவும் தான் புரிந்தது.
மிரு எவ்வளவு வேகத்தில் துவாரவிடம் தன் காதலைச் சொன்னாளோ அதே வேகத்தில் அவள் செய்த தவறும் புரிந்தது. அண்ட் அதிர்ஷ்ட வசமாக துவாரகேஷ் மிருதுளா இருவரும் அதை அந்த கணமே கடந்து வந்து விட அது அங்கிருக்கும் யாருக்கும் புரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை துவாராவும் மிருவும் காதலிக்கிறார்கள். அதிலும் மிரு துவாராவை தான் காதலிக்கிறாள் என்று அறிந்து அவர்களை மேலும் இணைத்துப் பேசி கலாய்க்க இருவரும் தங்கள் உறவை புரிந்துகொண்டதால் ஏனோ அதை அவ்வளவு உறுதியோடு மறுக்காமல் சென்று விட்டனர். மிருவுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தியாவின் குடும்பத்திற்கும் இருக்கும் பிரச்சனை முழுவதும் தெரியாமல் இருந்தவள் பின்பு எல்லாம் புரிந்து தியாவின் தந்தை மீதும் தாயின் மீதும் (என்னயிருந்தாலும் உதவியவர்கள் தானே?) நன்மதிப்பு தான் ஏற்பட்டது.
அதன் பின்னும் நிறைய களேபரங்கள் நடந்து விட்டது.
துவாரவின் வாழ்வில் மிருவுக்கும் விவியனுக்கும் என்றுமே ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு. காரணம் மிரு மற்றும் விவி இருவரும் அவனின் சந்தோசமான நாட்களில் (அவன் அன்னை இருந்த நாட்கள்) அவனுடன் இருந்தவர்கள். அதன் பின் ரொம்ப டவுனாக இருந்தவன் வாழ்வில் வந்தவன் தான் விவான். ஆனால் அதையும் கடந்து ஒருத்தி வந்தாள் அவனின் சந்தோஷங்களை இரட்டிப்பு ஆக்குவாள் என்று அவன் நினைத்திருக்க மாறாக அவளோ அவனை அனைத்து ரூபத்திலும் நசுக்கிப் பிழிந்தாள். இருந்தும் அவளுக்காகவே அவள் பின்னாலே அவன் மனம் சென்றது. 'அந்த' நிகழ்வின் போது தான் அவனுக்கு அவள் தன் வாழ்வின் வரம் அல்ல சாபம் என்றும் இன்று இல்லை எப்போதும் அவளுக்கு அவனைப் பிடிக்கவும் பிடிக்காது புரியவும் புரியாது என்றும் விளங்கியது. உண்மையில் வரமா சாபமா என்பது பற்றி பிறகு ஒருநாள் தெரிந்துக்கொள்ளலாம். இந்த நிலையில் தான் அவன் வாழ்வில் புதையலாக ஒருத்தி வந்திருக்கிறாள். ஏனோ அந்த புதையலான சரித்திராவிடமிருந்தாவது அவன் தேடும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அவனுக்கு கிடைக்குமா? அவளால் வாழ்வு சிறக்குமா? என்பதைப் பொறுத்துப் பார்ப்போம்.
அதற்கு முன்பு வரையே தியானேஷிற்கும் துவாராவிற்கும் அவ்வளவு நெருக்கும் எல்லாம் இல்லை. அதே நேரம் அவர்களுக்குள் வெறுப்பும் இல்லை தான். தியானேஷ் விவானுக்கு கொஞ்சம் க்ளோஸ். தியானேஷும் மிருதுளாவும் உறவினர்கள் என்பதே பின்பு ஒரு நாளில் தான் எல்லோருக்கும் புரிந்தது. இடையில் துவாரா மற்றும் மிருவின் நெருக்கம் அங்கிருக்கும் எல்லோரைக் காட்டிலும் விவானுக்கும் முதலில் சந்தேகம் தான் தந்தது. ஒரு விதத்தில் விவானுக்கு இதில் ஆறுதல் தான். எங்கே துவாரவின் வாழ்வில் கல்யாணம் குடும்பம் என்று ஒன்று நடக்கவே நடக்காதோ என்று பயப்பட்ட வேளையில் மிரு இருக்கிறாள் என்று நினைத்து அவனும் அவர்கள் உறவிற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தான். அதென்ன வெளியிலிருந்து ஆதரவு? அதாவது அவர்கள் சேர வேண்டும் என்று மனதில் நினைத்து அவர்களைப் பற்றித் தவறாக யாரேனும் பேசினால் அவர்களுக்காக சண்டை போடுவது மேலும் நாளை ஒருவேளை அவர்கள் இருவரும் விரும்பினால் கூட அவர்களுக்கு பக்க பலமாக இருப்பது என்று எண்ணி செயல்படுவது தான் வெளியில் இருந்து ஆதரவு தருவது. அப்போது அவர்கள் கேங்கிலே a அணி b அணி என்று இரு குழுக்கள் இருந்தது. வெளிப்படையாக இல்லை என்றாலும் மறைமுகமாக விவான், ஹேமா, ஜிட்டு முதலியோர் a அணியிலும், செபா இளங்கோ முதலியோர் b அணியிலும் இருந்தனர். அதாவது a அணி துவாராவுக்கும் b அணி தியானேஷுக்கும் ஆதரவு தெரிவித்தது.
ஆனால் கொஞ்சம் தெளிவாக பேசியிருந்தால் இந்த இரு அணிகளும் அவசியமில்லை என்றும் மேலும் இதில் சம்மந்த பட்ட மூவர் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்றும் அவர்கள் அப்போது நினைக்கவில்லை. இதுவும் காலேஜில் சகஜம். அதற்காக அவர்களின் நட்பில் விரிசல் என்று சொல்ல முடியாது. என்ன சொல்ல? தியாவும் மிருவும் சேரவேண்டும் என்று b அணி விரும்பியது. இல்லை துவாராவும் மிருவும் தான் பெர்பெக்ட் என்று a அணி விரும்பியது . கடைசியில் துவாரா - மிரு காதல் பற்றியப் புரளி பரவியதும் ஆட்டோமேடிக்கா b அணி கலைந்தது. இது தான் துவாரா தியா இருவருக்கும் இடையே இருந்த கோல்டு வாருக்கு (cold war - நிழல் யுத்தம்) காரணமாக இருந்தது.
இந்த நேரத்தில் தான் ஒருமுறை தியா அவன் அன்னையிடம் மிருவைப் பற்றியும் மிரு மற்றும் துவாரா இருவரும் விரும்புவதாவும் சொல்ல,மகனின் மீது இருந்த அலாதி அன்பானது அந்த கணமே மிரு மற்றும் துவாரா இருவரை பற்றியும் தவறான அபிப்ராயத்தை அவருக்குத் தந்தது.
அங்கே மாறாக மிருவுக்கோ தியா மீதும் அவன் அன்னை மீதும் நன் மதிப்புகள் தான் வளர்ந்தது. ஒரு முறை ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் கேசுவலாக பேசிக்கொண்டிருக்க செபாவும் இளங்கோவும் தான் தியா மிருவை விரும்புவதைப் பற்றிச் சொல்ல அந்த கணம் வரை தியானேஷ் மீது இல்லாத அந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்த்தத . மிரு தியாவை நெருங்க அவனோ அவளை விட்டு விலக விஷயத்தை துவாரா அறிந்து இருவருக்கு இடையில் பேசப் போய் அது எங்கெங்கோ சென்று ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல் தியா கோவத்தில் மிருவையும் துவாராவையும் பற்றி தவறாக இணைத்துப் பேச, கோவத்தில் துவாரா தியாவை அடிக்க அவன் மீண்டும் இவனை அடிக்க அதுவோ வேறு மாதிரி ஒரே பெண்ணுக்காக இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று பரவ அன்று தான் மிரு கோவத்தில் தியாவைப் பார்த்து,"நீ இவ்வளவு கேவலமானவன்னு எனக்கு இப்போ தான் தெரியுது. நல்ல வேளை உன்ன நான் விரும்புவதை உன் கிட்ட சொல்லல. சந்தோசம்" என்றவள் இனி அவள் முன்னே அவன் ஒரு போதும் வந்து விடக் கூடாது என்று சொல்லவும் தான் தியாவுக்கு அவன் செய்த முட்டாள் தனமும் அவன் செய்த செயலின் வீரியமும் புரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை மிருவிடம் அவளின் மன்னிப்பிற்காகவும் அவளின் காதலுக்காகவும் தவிக்கிறான்.
இடையில் இதுவெல்லாம் தெரிந்து தியாவின் அன்னை மிருவின் இல்லம் சென்று கண்டபடி பேசிவிட்டு வர ஏனோ இரு குடும்பத்துக்குமான விரிசல் வளர்ந்தது. அதே நேரத்தில் தான் அவர்களின் கல்லூரி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அநேகமாக அன்று தியாவுக்கும் துவாராவிற்கும் நடந்த சண்டை தான் தியா துவாரா இருவரும் கடைசியாக உரையாடியது. அதன் பிறகு நேற்று ட்ரைனில் தான் துவாராவின் கம்பார்ட்மெண்ட் வந்து தியா பேசினான். (பழைய எபிகளை கொஞ்சம் ரெபெர் செய்தால் துவாரா - மிரு -தியா பிரச்சனை தெளிவாக கனெக்ட் ஆகும். இவர்களின் பிரச்சனைகளை நான் ஏற்கனவே மேலோட்டமாகச் சொல்லி விட்டேன். சாரி உங்களுக்கு சிரமமாக இருக்கும் தான். ஆனால் என்ன பண்ண இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸ் ரைட்டிங்.) இப்போது பிரச்சனை இதுதான் மிருவுக்கும் தியாவைப் பிடிக்கிறது தான். ஆனால் அவன் செய்த செயலை முழு மனதாக மன்னிக்க முடியவில்லை. அதேநேரம் தியாவின் அன்னைக்கு தன்னை துளியும் பிடிக்காது என்றும் மிரு அறிவாள்.
அன்று தான் செய்த செயலால் மனம் வருந்திய தியானேஷ் அழுது சாப்பிடாமல் குடித்து நிறைய களேபரம் செய்ய மகனின் இந்த நிலைக்கு காரணம் அந்த மிரு தான் என்று எண்ணிய தியாவின் தாய் ஏற்கனவே மிரு மீதும் அவள் குடும்பம் மீதும் இருக்கும் கோவம் காரணமாக அன்று மிருவின் இல்லம் சென்று வீதியில் நின்று கண்டபடி கூச்சலிட்டு தவறாகப் பேசி விட அதனால் மிருவும் அவள் குடும்பமும் பட்ட அவமானம் அவளே அறிவாள். மறுநாள் தியாவிற்கு விஷயம் தெரிந்து வந்து மிருவின் வீட்டில் மன்னிப்பு கேட்டும் அவர்கள் எதுவும் பேசாமல் போக, ஏனோ தன் தாயின் பேச்சைக் கேட்டு உண்மை எது பொய் எது என்று முழுவதும் அறியாமல் தவறு செய்து விட்டோமே என்ற ஞானம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்கரமாக அவனுக்குக் கிடைத்தது. இவ்வளவு நடந்த போதும் தியா தன்னுடைய ஜார்னல் ஆரமிக்க பணமில்லாமல் திண்டாட மிருவின் தந்தை விஷயம் அறிந்து உதவ முன்வந்தார் . ஆனால் எப்படி அவரிடம் கைநீட்டி காசை தியாவால் வாங்க முடியும்? அவன் அன்னை செய்து வைத்த காரியம் அப்படி ஆச்சே? உண்மையிலே தியாவின் அன்னை இந்த பிரச்சனை எதையும் செய்யாமல் இருந்திருந்தால் மிருவின் தந்தை தியாவிற்கும் மிருவிற்குமே திருமணம் செய்து வைத்திருப்பார். அவருக்கும் அந்த எண்ணம் இருக்கத் தான் செய்தது. ஏனோ போன முறை தான் முடியாமல் போய் விட்டது இந்த முறை அதை சரி செய்யலாம் என்று இருக்க தியாவின் அன்னை செய்த ரகளையில் யாரு தான் மீண்டும் பெண் கொடுக்க சம்மதிப்பார்கள்? அதனால் வெறும் பண உதவியை மற்றும் செய்ய வர அதையும் அவன் மறுத்து விட்டான். இங்கே மிரு தியாவை வெறுத்தாலும் ஏனோ உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் அவன் மீதான ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் அவனின் அன்னைக்கு தான் இப்போதும் தன்னைக் கண்டால் ஆகாதே? அதும் முன்பைக் காட்டிலும் இப்போது அதிக கோவத்தை வெறுப்பை தானே உமிழ்கிறார். தியா இரண்டு முறை தான் செய்த செயலுக்காக மிருவிடம் மன்னிப்பு கேட்டு விட்டான். அது தான் அவளுக்கு அவன் மீது இன்னமும் சாப்ட் கார்னெர் இருப்பதற்கு காரணம்.
மிருவின் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரமித்த போது அவள் இப்போது வேண்டாம் இப்போது வேண்டாம் என்று மட்டும் ரெண்டு முறை மறுத்து விட்டாள். மகளின் எண்ணம் புரிந்தாலும் தியாவின் அன்னையை நினைத்து தான் இன்னும் அவளின் திருமண வாழ்க்கைக்கான கேள்விக்கு விடை எழுதப் படாமலே இருக்கிறது. இந்தப் பயணத்தில் எப்படியாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று அவள் வீட்டில் அவளுக்கு கடைசி ப்ரெஷர் தரப் பட அவளும் ஏதோ ஒரு ஹோப்பில் பயணிக்கிறாள். அதற்கு இன்னொரு காரணம் துவாரா. அவன் தான்,"ஒரு முறை தியாவிடம் பேசிப் பாரேன் மிரு" என்று சொல்லி அழைத்தான் (அவன் எப்படி இதைச் சொல்லலாம் அவன் முதலில் ஒழுங்கா? என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. என்ன செய்ய பக்கத்துக்கு இலைக்கு பாயசம் என்றால் உடனே கேட்க முடிகிறதே?)
மிரு தன்னை மன்னிப்பாளா என்று தியாவும், தியா உண்மையிலே தன்னை விரும்புகிறானா? அப்படி விரும்பினால் அவன் அன்னையை எதிர்த்து தன்னை கரம் பிடிப்பானா? என்று மிருவுக்கும் கேள்விகள் இன்னும் இருக்கிறது தான். இந்தக் கேள்விகளுக்கு விடைதேடித் தான் அவர்களின் இந்தப் பயணம் தொடர்க்கிறது. இந்தப் பயணம் அவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.(பயணங்கள் முடிவதில்லை...)
 
ஒரு வழியா, விவான்அண்ட்கோ, பிளாஷ் பேக் ஸ்
அல்மோஸ்ட் ஓவர், துவாவைத் தவிர...
செபா,ஜெஸி நேரே பார்த்து பேச வேண்டியது தான்..

அந்த அஸ்ஸாம் கலெக்டர், அனுவிற்காக வெயிட்டீங்..
 
ஒரு வழியா, விவான்அண்ட்கோ, பிளாஷ் பேக் ஸ்
அல்மோஸ்ட் ஓவர், துவாவைத் தவிர...
செபா,ஜெஸி நேரே பார்த்து பேச வேண்டியது தான்..

அந்த அஸ்ஸாம் கலெக்டர், அனுவிற்காக வெயிட்டீங்..
கரெக்ட் துவாரா மட்டும் பாக்கி... அவர்கள் ட்ரைனிலே பேசுவார்கள்... பின்றீங்களே போங்க... சூப்பர் அண்ட் நன்றி?
 
Top