Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-38

Advertisement

praveenraj

Well-known member
Member
விவான் சரித்திராவிடம் 'சொல்லிவிட்டாயா?' என்பது போல் சைகையில் கேட்க அவளும் தலையை அசைத்தாள். அதைக் கண்ட யாழ்,"டேய் விவான் உனக்கு அவங்களை ஏற்கனவே தெரியுமா?" என்று பூதாகரமாகக் கேட்க திடுக்கிட்டு யாழை முறைத்தவன் முன்னால் பார்க்க அங்கே துவாராவும் அதே கேள்வியோடு பார்க்க,"அது தான் சொன்னேனே அவங்க பேட்மிட்டன் பிளேயர்" என்று துவாரவைப் பார்த்துச் சொன்னவனது கை யாழின் முழங்கையைக் கிள்ளி சிக்னல் செய்தான். அதைக் கண்ட துஷி அடுத்து,"அதற்கேன் என் கையை கிள்ளுனனு?" தான் கேட்பாள் என்று உணர்ந்தவன் யாழிடம்,"ஆண்ட்டி போன் பண்ணாங்களே பேசிட்டியா?" என்று வராத போனை வந்ததாகச் சொல்ல,"நீ எப்போ என் கிட்ட சொன்ன?' என்று யாழ் கேள்வி கேட்க, அப்பாடா என்று மனதில் மகிழ்ந்தவன்,"இப்போ தான் சொல்லிட்டேனே இந்தா போனை பிடி. அங்க போய் பொறுமையா பேசிட்டு வா" என்று சொல்லி துரத்த விவான் அவனுக்கு மனதில் நன்றி சொன்னான். துவாரா இளவேனிலைக் கொஞ்சிக்கொண்டே இவர்களின் சமாளிப்புகளை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். "இன்னுமாடா ஸ்டேஷன் வரல?' என்று முணுமுணுத்தான் விவி. வண்டி நிற்கும் முன்னே எல்லோருக்கும் அழைத்த தியா,"இங்க வந்துடுங்க எல்லோரும் ஒன்னா சாப்பிடலாம்" என்றதும்,"இல்ல டா துவாரா மட்டும் இங்க இருக்கான்" என்றான் விவான் துவராவைப் பார்த்தப்படி.
"மச்சி அவன் கூட உட்கார்ந்து சாப்பிட்டா அவன் விரதமும் டிஸ்டர்ப் ஆகும். அவனை எதுக்கு டெம்ப்ட் பண்ணிட்டு? இங்க வாங்க எல்லோரும்" என்று அழைக்க அதுவே அவர்களுக்கும் சரியெனப்பட்டது. சரித்திராவின் தாத்தாவை மட்டும் துவாரவிடம் இருக்க சொல்லிவிட்டு சரித்திரா உட்பட விவி, சித்து, யாழ், துஷி, இளா, விவான் என்று எல்லோரும் அங்கே சென்றனர். சரித்திராவுக்கு தயக்கம் வர,அவளைச் சுட்டி,"கைஸ் மீட் மிஸ் சரித்திரா. நம்ம புது கம்பேனியன்" என்று அறிமுகப்படுத்தினான் விவி. நித்யாவின் கம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் ஒரு ஆரவாரம் தந்து அவளை தங்களோடு ஐக்கியம் படுத்திக்கொள்ள இதி தான் சரித்திராவின் தயக்கத்தைப் பார்த்து,"நார்மலா இருங்க சரித்திரா. உண்மையில இங்க நிறைய புது ஆட்கள் இருக்காங்க. அனேஷியா,யாழ், துஷி, மௌனி,பாரு,சித்து, விவி அண்ணா ஏன் நானுட்பட இந்த கேங்குக்கு டைரெக்ட்டா சம்மந்தம் இல்லாதவங்க தான். நாங்க எல்லோரும் நாடோடி ப்ரெண்ட்ஸ் தான்" என்றதும்,"ஏய் நாம எல்லோருக்கும் ஊரு இருக்கு வீடு இருக்கு அப்புறோம் எப்படி நாடோடி ஆவோம்?" என்று சீரியஸாக கேள்வி கேட்டான் ஜிட்டு. அவன் தலையில் கொட்டிய தியா,"மண்டு மண்டு இது அந்த நாடோடி இல்ல,'என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே'னுங்கற" சமுத்திரக்கனி சசிகுமார் நாடோடி."என்ன இதி அதுதானே?"
"அப்புடியா அப்போ நாம எல்லோரும் சேர்ந்து யாரோட காதலைச் சேர்த்துவைக்க போறோம்? சொல்லுங்க" என்று விளையாட்டாய்க் கேட்டான் ஜிட்டு. விவான் ஹேமாவைப் பார்க்க ஹேமா மௌனியைப் பார்க்க மௌனி செபாவைப் பார்க்க செபா தியாவைப் பார்க்க தியா மிருவைப் பார்க்க மிரு சரித்திதாவைப் பார்க்க சரித்திரா புரியாமல் சித்துவைப் பார்க்க சித்து அனேஷியாவைப் பார்க்க, மற்றவர்கள் எல்லோரும் இவர்களின் விசித்திர முக பாவனைகளைப் பார்த்து,"என்னடா நீங்க ஆளாளுக்கு பார்க்கறதைப் பார்த்தா லிஸ்ட் பெருசா போய் பல ஜோடிகளைச் சேர்த்து வைக்கணும் போலவே? அப்போ காது,கால் (நாடோடிகள் படத்தில் நண்பர்கள் இழப்பது) வேலை மட்டுமில்லாம எல்லோருக்கும் எல்லாமும் போயிடும் போலவே?" என்று சொன்ன ஜிட்டுவை எல்லோரும் ஒன்றாக பார்த்துச் சிரிக்க,"சூப்பர் மச்சி அதுல சசிகுமாருக்கு கவர்ன்மெண்ட் வேலை கிடைக்காது இங்க கவெர்மென்ட் வேலையில இருக்க உனக்கு காலு போய் காது போய் வேலையும் போயிடுனமுமாம்" என்று ஹேமா சொல்ல தண்ணீர் குடித்த ஜிட்டு புரை ஏறி துப்பி,"வீணாப்போனவனே உனக்கு எடுத்துக்காட்டுக்கு நான் தான் கிடைச்சேனா? ஆளை விடுங்க டா சாமி" என்று கையெடுத்து கும்பிட,
"அப்போ நம்ம ஃப்ரண்ட்ஸ் லவ்வுல ஒரு பிரச்சனைனா நீ வர மாட்ட?"
"தம்பி நீங்கயெல்லாம் ரொம்ப லேட். நாங்கயெல்லாம் எப்பயோ காதலுக்கு மரியாதை பண்ணிட்டோம்" என்று நித்யாவைப் பார்த்துச் சொன்னவன்,"சோ என் கோட்டா முடிஞ்சது. இனி எல்லாம் உங்க கோட்டா தான்" என்றதும்,"ஜிட்டு வரவர எந்த பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறியே எப்படிடா?" என்று வியந்த இளங்கோவுக்கு,"அதுவா ஆல் பிகாஸ் ஆப் மை பேன்ஸ் க்ளப். யூ நோ வாட் நான் இப்போ சாதா ஜிட்டு இல்ல எமெர்ஜிங் ஸ்டார் ஜிட்டு. ஊருக்குள்ள போய் விசாரிச்சு பாருங்க" என்று சொல்ல, சிரித்துக்கொண்டே எல்லோரும் சாப்பிட அங்கே பார்வதி கொஞ்ச கொஞ்சமாய் கோழியை எடுத்து சாப்பிட," என்ன பாரு இப்படி சாப்பிட்டா அப்புறோம் வயித்துக்குள்ள இருக்கும் குட்டி பாப்பா எப்படி வளரும்? இங்கப் பாரு" என்றவன் அருகிலிருந்த இளங்கோவின் பிளேட்டில் இருந்த லெக் பீஸை எடுத்து ஒரு கடி கடித்து,"இப்படித்தான் சாப்பிடணும்" என்று சொல்ல இளங்கோ கொலை வெறியில் ஜிட்டுவை முறைத்தான்."என்னடா முறைப்பு? உன் கொழந்தை நல்லா புஜ்ஜிட்டிக்கா வளரணும்னு உனக்கு ஆசையே இல்லையா?" என்றவன் திரும்பி பாருவிடம்,"என்னம்மா உனக்காக ஒரு பீஸே தரமாட்டேங்குறான் இவனை நம்பி நீ ஏன் கல்யாணம் பண்ணி இப்போ அம்மாவும் ஆகப் போற?" என்று போறபோக்கில் இளங்கோ வாழ்க்கையில் கும்மியடிக்க,"அப்படியெல்லாம் இல்ல பாரு. இந்த நாய் சும்மா சொல்லுது. எனக்கு நீயும் பாப்பாவும் தான் முக்கியம்" என்றதும்,"அப்போ எதுக்கு இந்த பீஸ் உனக்கு?" என்று அவன் கையிலிருந்த அந்த பீஸை பிடிங்கியவன் அதையும் சாப்பிட்டு,"இப்படித்தான் சாப்பிடணும். எங்க சாப்பிடு பார்க்கலாம்" என்று சொல்ல, இதுவரை ஜிட்டுவைப் பற்றி எதுவும் தெரியாத சரித்திரா கூட ஆச்சரியமாய்ப் பார்க்க எல்லோரும் இளங்கோவின் பரிதாபத்திற்குரிய நிலையை நினைத்து சிரிக்க இளங்கோவோ,'டேய் தெரியாம உன்ன ஒரு முறை அசிங்க படுத்திட்டேன் அதுக்கு என்ன இப்படி வெச்சி செய்யுறியேடா' என்று மனதில் கருவியவன் வெளியில் எதையும் சொல்லாமல் அருகில் செபா தியா ஹேமா மூவரும் பீஸ் சாப்பிடுவதையே ஏக்கமாய்ப் பார்க்க அவர்கள் மூவரும் உசாராக தள்ளி அமர்ந்த்தனர்.
பேசிக்கொண்டே எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு முடிக்கவும்,"எல்லாம் ஓகே கொஞ்சம் தயிர் சாதம் இருந்தா நல்லா இருக்கும்" என்றவன் அங்கே தயிர் சாதம் சாப்பிடும் நித்யாவைப் பார்க்க,"கொன்றுவேன்" என்று கையைத் தூக்கி மிரட்டினாள். "அது சரி அந்த தயிர் சாதம் உனக்கே பத்தாது" என்றவன் இளவேனில் கையிலிருந்த சிப்ஸ் பேக்கெட்டில் இருந்து சிப்ஸ் எடுத்து முழுங்க, தன்னிடம் கேட்காமல் தன் சிப்ஸ் பேக்கட்டை எடுத்த ஜிட்டுவைப் பார்த்து கண்களில் நீர் கோர்க்க இருந்தவள் அழுதுவிட அப்போது தான் மிரு அதை கவனித்து,"எருமை மாடே? பச்சைப்பிள்ளை கிட்ட இருந்து பிடுங்கி சாப்பிடுறியே உனக்கு வெக்கமா இல்ல?" என்றதும் தான் எல்லோரும் அதை கவனிக்க அழுத இளவேனில் நித்யாவைக் கட்டிப்பிடிக்க,"சரி டா வேற சிப்ஸ் வாங்கி தரேன். அழக் கூடாது" என்று சொல்ல நித்யாவைப் பார்த்த ஜிட்டு அவள் பேசுவதற்குள் அங்கே சென்ற ஸ்னேக்ஸ் விற்பவரை மறித்து,"சார் உங்க கிட்ட இருக்கும் எல்லாத்துலயும் ஒன்னு கொடுங்க" என்று அவசரமாக வாங்கி சாக்லேட் பிஸ்கட் என்று ஒவ்வொன்றாய் இளவேனில் முன் வைத்தும் அவள் அழுகை நிற்காமல் போக இறுதியாக சிப்ஸ் எடுத்து வைத்ததும் நிற்க,"அப்பாடா" என்றவன் அந்த பிஸ்கட் சாக்லெட்டை திருப்பி கொடுக்கக் போக அதற்குள் மிரு,தியா,செபா,ஹேமா என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றை எடுத்துக்கொள்ள முறைத்தவன் பர்ஸ் எடுப்பதற்குள் அதிலிருந்த கடலை மிட்டாய், வேப்பர் பிஸ்கெட், ஒண்டர் கேக் என்று மற்றதையும் கொள்முதல் செய்தனர் விவான்,பாரு, இளங்கோ. சுற்றி முற்றி அனைவரையும் பார்த்துவிட்டு,"எவ்வளவு பா ஆச்சு?" என்று ஜிட்டு கேட்க,
"920 சாப்" என்றான் அவன்.
எல்லோரையும் முறைத்து பணத்தைக் கொடுத்தவன்,"ஒரு சிப்ஸ் எடுத்தது குத்தமா? சோத்து மூட்டைங்களா?" என்று எல்லோரையும் பார்த்து முறைத்தான் ஜிட்டு. எல்லோரும் சிரித்துக்கொண்டே சாப்பிட திரும்பியவன்,"இங்க பாரு நான் எடுத்து சாப்பிட்ட சிப்ஸ்க்கு பத்து மடங்குக்கு மேலயே வாங்கிக் கொடுத்துட்டேன். அதை விட்டுட்டு..." என்று அவன் பேசி முடிக்கும் முன்னே,"ஆயிரம் சொல்லு டா ஒரு பச்சைப் பிள்ளைக்கிட்ட இருந்து சிப்ஸ் திருடி அவளை அழ வெச்சவன் தானே நீ?" என்று சொன்னான் ஹேமா.
"ஆஹா அடுத்த டைலாக்கை பிடிச்சுட்டானுங்களே? போச்சா 920 ரூபாய் செலவுப் பண்ணி வாங்கிக் கொடுத்த ஸ்னேக்ஸ் எல்லாம் வீண்" என்று அவன் ஃபீல் செய்ய எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர். திரும்பியன் அங்கிருந்த வேப்பர் (wafer) பிஸ்கட்டை எடுக்க போக அதற்குள் நித்யா அதை எடுத்துக் கொண்டாள். அது நித்யாவின் பேவோரைட். ஜிட்டுக்கும் தான்."ஹே ஹே நித்யா ஒண்ணே ஒன்னு கொடு நித்யா ப்ளீஸ்" என்று கேட்க அந்த பெரிய நபாட்டி பேக்கட்டை பிரித்து அவன் கண் முன்னே அந்த சீஸ் வேப்பேரை கடிக்க நாக்கில் எச்சில் ஊறியது ஜிட்டுவுக்கு. கடுப்பானவன்,"டேய் இளங்கோ உன் கதையை கண்டினு பண்ணு" என்று சொல்ல எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஸ்நேக்ஸையும் சாப்பிட்டு கொண்டே இளங்கோ பாருவின் கதை கேட்க ஆயத்தமாகினர்.
*************
அங்கே போனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ஜெஸ்ஸி."என்ன ஜெஸ்ஸி எத்தனை முறை பார்த்தாலும் அதே மெசேஜ் தான்.(செபா அவளுக்கு வேர் ஆர் யூ என்று அனுப்பிய மெசேஜ் தான்) வா சாப்பிடலாம்" என்று அவர்களும் அவர்கள் ஆர்டர் செய்த உணவை சாப்பிட, இப்போது ரேஸுவின் முகம் தான் சரியாக இல்லாமல் இருக்க, "என்ன ஆச்சு பேபி? வொய் சோகம்?" என்றான் லோகேஷ்.
"அதுவா வீட்டுல மேரேஜ் பண்ணச் சொல்லி ஒரே பிரெஸ்ஸுர்" என்று பொதுவாக பெனாசிர் சொல்லவும் லோகேஷ் ஜெசி இஸ்மாயில் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அது காலையில் துஷி அவர்களிடம் வந்து சொல்லிச் சென்றதில் இருந்தது. 'எனக்கு ரேஷாவை ஏற்கனவே தெரியும்' என்றவனது வார்த்தை தான் அது."சரி அதுக்கா இவ்வளவு சோகம்? ஊருக்குப் போயிட்டு வந்து தானே பதில் சொல்லணும்?" என்றான் லோகேஷ்.
"இல்லை" என்றவள் காலையில் அவளுக்கு அனுப்பப்பட்டிருந்த புகைப்படத்தைப் பற்றிச்சொல்ல,"பிராட் அப்போ போட்டோவை வெச்சிக்கிட்டு தான் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லைனு சொன்னியா?"
"நீ வேற கடுப்பேத்தாத ஜெஸ்ஸி" என்றவள் உதடு சுளித்து சலுப்படைய,
"ஏன் மாப்பிள்ளையை பிடிக்கலையா?" என்று கேட்க இதற்கு மேல் மறைக்க முடியாமல் தனக்கும் துஷிக்குமான பழக்கத்தையும் தற்போது வந்திருக்கும் அலைன்சே துஷி தான் என்றும் சொல்லி புகைப்படத்தைக் காட்டினாள் ரேஷா.
"அடி ப்ளடி @#$% உங்களுக்குள்ள இவ்வளவு இருக்கா?" என்று அவளை வம்பிழுத்தனர் அவர்கள்.
"அந்தப் பொண்ணு தான் அவன் லவ்வெறாம். அப்புறோம் எவ்வளவு தைரியமிருந்தா என் வீட்டுல பேசியிருப்பாங்க? சரியான சீட் தானே அவன்?" என்று சொல்ல, காலையில் துஷி சொன்னதை வைத்து யோசித்த பெனாசிர் ஏதோ மிஸ் கம்யூனிகேஷன் தான் இது என்று புரிந்து<"ரேஷு கவலைப் படாத. அவனும் அசாம் வரை தான் வருவான். பேசிக்கலாம்" என்று சொல்ல,
"உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றாள் ரேஷா,
"அந்த கேங் அசாம் வரை போகுது. ஒரு விஷயம் சொன்னா கேட்கணும் இப்படி க்ராஸ் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது" என்று சொல்ல,
"நம்ம கேங் மட்டும் ஏன்ப்பா இப்படி இருக்கு? ஒருத்தனுக்கு ஒரு நல்லதும் நடக்காது போல" என்று வருந்தினாள் ஜெசி. அவளின் வருத்தம் உணர்ந்தவளாய்,"இப்போ சொல்றேன் இந்த ட்ராவல் முடிவுல நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு நல்லது நடந்திருக்கும். கவலை வேணாம்" என்றாள் பெனாசிர்.
"எப்பயிருந்து நீ ஆருடமெல்லாம் சொல்ல ஆரமிச்ச பெனாசிர்?" என்றான் லோகேஷ்,
"இது நடக்கும் அப்புறோம் பேசலாம்" என்று முடித்தாள் பெனாசிர்.
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை

காதல்!
************

"அன்னைக்கு மேட்ச் முடிஞ்சதும் ஜெயிச்சதுக்கு நாங்க எல்லோரும் ட்ரீட் போனோம். அப்போ தான் பார்வதியை துவாரா விவானுக்கு இன்றோ கொடுத்தேன். வழக்கமா பேசி சிரிச்சி சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பினோம். ஆனா ஏனோ மனசெல்லாம் ஒரு வித பீல். எப்படிச் சொல்ல இவளை என் ஆளுன்னு நம்ம ப்ரெண்ட்ஸ் கிட்ட இன்றோ பண்றப்போ ஒரு கெத்து வரும் பாரு? அப்படி இருந்தது"
"ஏம்மா அப்போவே உன்ன அவன் ஆளுன்னு சொல்லியிருக்கான் உனக்கு கோவமே வரலையா?"
அவள் சுப்ரமணியபுரம் ஸ்வாதியைப் போல கழுத்தை கீழே இறக்கி கண்ணை மேலே உயர்த்திப் பார்க்க அதை கவனித்த எல்லோருக்கும் புரிந்தது,"ஓ ஓ ஓ" என்று அதே சுப்ரமணியபுரம் ஜெய் போல எல்லோரும் தலையை ஆட்டி ஆர்ப்பரிக்க, பார்வதிக்கு வெட்கம் வந்து கண்களை மூட,"அட அட அட ஆயிரம் சொல்லு இப்போவரை கேட்ட நம்ம பசங்களோட லவ் எல்லாம் ஒரு gvm, மணிரத்தினம் மாதிரி சிட்டி பேஸ்ட் லவ் ஸ்டோரி தான் ஆனா முதல் முறை கிராமத்து மண் வாசனை வீசும் எ பிலிம் பை பாரதிராஜா மாதிரி ஒரு காதல் கதையை இப்போ தான் கேட்கறேன்" என்றான் ஜிட்டு.
"சரியா சொன்னடா ஜிட்டா. ககக போ" என்றான் ஹேமா,
உண்மையில் இவர்கள் இப்படி பேசியது பார்வதிக்கு இன்னும் எம்பரசிங்கா இருக்க அவளோ மேலும் வெட்கப்பட்டாள். அவ இன்னமும் ஒரு இன்னொசென்ட் பொண்ணு தான். பின்ன ஜிட்டு உட்ட ரீல் எல்லாத்தையும் உண்மைன்னு நம்புனா இன்னும் நம்புற ஒரே ஜீவன் இவள் தானே?
"அப்புறோம் என்ன ஆச்சு சொல்லுங்கப்பா?"
"அப்புறோம் என்ன அடுத்தடுத்த முறை எல்லாம் ஒன்னாவே ஊருக்குப் போனோம். அப்படியே எங்க காதலை வளர்த்தோம்"
"வெய்ட் வெய்ட் வெய்ட். முக்கியமான விஷயத்தை சொல்லவேயில்லையே?" என்றான் தியா.
"என்னடா?" - விவான்,
"காதலை யாரது முதலில் சொன்னது நீயா?(இளங்கோ) இல்லை அவளா?(பாரு)" என்று பாட்டாவே பாடி கேள்வி கேட்டான் தியா.
"அட என்னம்மா ஒவ்வொரு விஷயத்துக்கும் நீ இப்படி வெட்க பட்டா எப்படி?" என்ற ஹேமா,
"வெயிட் வெயிட் வெயிட் நம்ம கவிஞர் தான் சொல்லியிருப்பார்?" என்ற ஜிட்டு,"என்ன கவிஞரே அப்படித்தானே?" என்றான்,
"அவ தான்டா பர்ஸ்ட் சொன்னா" என்று இளங்கோ சொல்ல இப்போது ஆச்சரியப்பட்ட மிரு,"ஏய் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு பார்த்தா இது பீரே அடிக்குது" என்றதும்,
அவளோ ஒரு மாதிரி எம்பரஸ் ஆகி நெளிய ஏனோ மற்றவர்களைக் காட்டிலும் யாழுக்கு இது ரொம்ப ஸ்ட்ரேஞ்ஜா (விந்தையா) இருந்தது."இந்த காலத்துலையும் இப்படி பொண்ணுங்க இருக்குதா?" என்றாள்.
"அது அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு. பெண்களுக்கு இருக்கக்கூடிய குணம்னு பெரியவங்க சொல்லுவாங்க. பயப்படாதா அது பெண்களுக்குத் தான் உனக்கில்லை" என்று துஷி யாழை வார,"எங்க இவ்வளவு பேசுறியே அதுக்கு விளக்கம் சொல்லு பார்ப்போம்?" என்று அவள் துஷியை பதிலுக்கு வார,
"அச்சம்னா பயம். நாணம்னா வெட்கம்" என்று சொன்னவன் மடம் மற்றும் பயிர்ப்புக்கு விளக்கம் தெரியாமல் முழிக்க பாய்ஸ் எல்லோரும் இளங்கோவைப் பார்க்க,
"டேய் நீங்க தான் என்னை இளங்கோ அடிகளேனு சொல்லியிருக்கீங்க. நான் என்னைக்காவது அப்படி ஒத்துயிருக்கேனா? எனக்கு இளங்கோ அடிகள் என்ன எழுதுனாரேனு தெரியாது. மணிமேகலையா சிந்தாமணியா?" என்று நிறுத்த,
"டேய் குண்டலகேசினு நெனைக்கிறேன்" என்றான் விவான்.
"அடேய் வடிகட்டின முட்டாளுங்களா அது சிலப்பதிகாரம்" என்றாள் இதித்ரி,
"பார்த்தியா என் ஆளு எவ்வளவு இன்டெலிஜென்ட்டுனு. சூப்பர் இதி டார்லிங்"
"உங்களையெல்லாம் கேட்டேன் பாரு என்னைச் சொல்லணும்" என்று சொன்ன யாழ், "மடம்னா யாராச்சும் உன்கிட்ட ஒன்ன சொல்லும் போது உனக்கே அது தெரிஞ்சிருந்தாலும் தெரியாததுப் போல் இருந்து அவங்க சொல்றதைக் கேட்கறது"
"ஓ அப்படியா? அப்போ பயிர்ப்புனா?"
"வேற ஆடவர்கள் தொடும் போது ஏற்படும் அருவருப்பு"
"இது தான் அதுவா?"
"ஏன் இது பெண்களுக்கு மட்டும் வேணும்? பசங்களுக்கும் பொருந்தும் தானே?" என்றான் விவி.
"கரெக்ட் பாஸ். சரியாச் சொன்னீங்க. இதெல்லாம் சும்மா ஆணாதிக்கம் பிடிச்சவங்கள் சொன்னது"
"ஆனா இப்படி இருக்கணும்னு தானே வீட்டுலையும் சொல்றாங்க?" என்றாள் பாரு,
"அப்போ, 'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்' அப்படினு பாரதியார் சொல்லியிருக்காரே? இந்த காலத்துக்கு இது தான் சரி. ஒழுங்கா மாறுற வழியைப் பாருங்க பார்வதி" என்று சொன்னவளை பாய்ஸ் எல்லோரும் ஆச்சரியமாய்ப் பார்த்தனர்.'ஆஹா இவ ரொம்ப படிச்சவ போலயே?' என்று முழிக்க,
"என்ன?" என்றாள் யாழ் ஹேமா இளங்கோ ஜிட்டு விவான் நால்வரையும் பார்த்து.
"அதெல்லாம் சரி யாழ் இப்படி பேசுனா அப்புறோம் உன்ன யாரு கல்யாணம் பண்ணிப்பா?" என்றாள் நித்யா,
"ஏன் நித்யா? எனக்கு ஒருத்தன் இன்னுமா பொறக்காம இருப்பான். சரி உன்ன போலானாலும் ரெண்டு மூணு வருஷ சின்ன பையன் கூடவா இருக்க மாட்டான்?" என்று சொல்ல, விவான் கோவத்தில் அவள் தொடையில் குத்தினான்."என்ன ஏன்டி வம்புக்கு இழுக்குற? நான் பாட்டுக்கு சிவனேனு தானே இருக்கேன்?"
"இல்லடா ஒரு எக்ஸ்சாம்பலுக்கு..."
"என்ன பசங்க யாரும் சப்தமே காணோம்?" என்று ஹேமா, இளங்கோ, விவி மூவரையும் பார்க்க ஜிட்டுவோ இன்னமும் வாயைத் திறந்துகொண்டு ஆவென பார்த்தான்.
"என்ன அப்படிப் பார்க்கற? வாயில பாரு கொசு, ஈ எல்லாம் போயிட்டு வருது" என்று சொல்ல ஜிட்டு வாயை மூடினான்.
யாழைப் பற்றி தெரிந்திருந்த துஷி,விவான்,தியா,மிரு,நித்யா எல்லோரும் அமைதி காக்க மற்றவர்கள் தான் இன்னும் ஆச்சரியமாக இவளைப் பார்த்தனர்.
"விடு அந்த பையன் வாழ்க்கையில இன்னும் கொஞ்சம் காலத்துக்காவது நிம்மதியா இருக்கட்டும்" என்று துஷி முணுமுணுக்க,
"ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க? நீங்க கதை சொல்லுங்க" என்றாள் யாழ்.
"எங்க ப்ரொபோஸ் பண்ணா? எப்படி ப்ரொபோஸ் பண்ணா?"
"அதை ஏன் கேட்கறீங்க நாம காலேஜ் முடிஞ்சி போனதுக்கு அப்புறோம் எனக்கு வேலை கிடைச்சு நான் வேலைக்குப் போக ஒருநாள் ஒரு பெரிய மெசேஜ். எடுத்துப் பார்த்தா பார்வதி கிட்ட இருந்து தான் வந்திருந்தது"
"என்னனு?"
"எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். எங்க வீட்டுல அடுத்த வருஷமே அலைன்ஸ் பார்க்கப் போறாங்க. நீங்க தான் ஏதாவது பண்ணனும்னு. உங்களுக்கும் என்ன பிடிக்குமானு? இருந்தது.
"பாரேன் பிரேவ் கேர்ள் தான் பார்வதி நீ" என்று சொல்ல,
"சரியான கோழை" என்றாள் யாழ்.
எல்லோரும் அவளைப் பார்க்க,"என்ன இப்படி எந்த காலத்துல இருக்கீங்க? வீட்டுல உன்கிட்ட கேட்காம கூட கல்யாணம் பண்ணுவாங்களா?" என்று பொரிய ஏனோ செபாக்கு தான் அவளின் நிலை நன்கு புரிந்தது. "எல்லோர் வீட்டுலையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ரொம்ப படிச்சவங்க வீட்டுலையும் சுத்தமா படிக்காதவங்க வீட்டுலையும் ரொம்ப திண்டாட்டம் தான்" என்று அவன் பதிலுரைக்க, எல்லோரும் செபாவை திரும்பி பார்த்தனர். இப்போது அவனும் பீலிங்க்ஸ் மோடிற்கு சென்றுவிட்டான் என்று புரிந்தது.
"என்ன பேசுறீங்க? சுத்த..." என்று யாழ் முடிப்பதற்குள் தியா பேசியிருந்தான்,"யாழ் நீ பேசுறது தியரி. ப்ராக்டிகலா நிறைய விஷயம் இருக்கு. வீடு,குடும்பம்,சூழ்நிலை, மானம்,அவமானம்,கௌரவம், ஜாதி,அந்தஸ்து இப்படி நிறைய நிறைய இம்பீடிங் பேக்டர்ஸ் (impeding factors - தடுக்கக்கூடிய காரணிகள்). ஏன் பெண்ணின் திருமண வயது 18 ஆனா இங்க எத்தனை சைல்ட் மேரேஜ் நடக்குது? இல்லைனு மட்டும் சொல்லிடாத.நான் ஜார்னலிஸ்ட் என்கிட்ட ப்ரூப் இருக்கு.எத்தனை கண்ஸ்ட்ரைன்ஸ்?" (constraints -கட்டுப்பாடுகள்)
"இருக்கு தான் ஆனாலும்..." என்று யாழ் விதண்டாவதம் செய்ய முற்பட,
"யாழ் நீ பிறந்தது வளர்ந்தது இப்போ வாழறது எல்லாமே ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் லைப். உனக்கு சாப்பாடு, படிப்பு, சுதந்திரம், அடிப்படை உரிமை (fundamental rights) எல்லாமே தெரியும். இருக்கு. அப்படியே அது மறுக்கப்பட்டாலும் எதிர்க்க துணிவிருக்கு. ஆனா எல்லோரும் அப்படி இல்ல. ஏன் என்னை எடுத்துக்கோ, நான் ஒரு பையன். இந்த இடத்துல நான் மேல் சாவுனிசம் பேசல, இருந்தும் சொல்றேன் நம்ம சொசைட்டியில் பசங்க எப்பயுமே அப்பேர் ஹேண்ட் (மேல் நிலை) தான். ஆனா என்னாலே நான் விரும்பற பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் வீட்டுல கட் அண்ட் ரைட்டா பேச முடியில. இத்தனைக்கும் நான் ஒரு ஜர்னலிஸ்ட். ஒரு இண்டிவிஜுவல் ஆன்லைன் பத்திரிகை நடத்துறேன். இத்தனைக்கும் அந்தப் பொண்ணு வேற ஜாதியோ,வேற மதமோ,வேற நாடோ இல்ல, என் சொந்த அத்தைப் பொண்ணு" என்று சொல்லி மிருவைப் பார்த்தான் தியா.
தியா சும்மா வாதாடவில்லை என்றும், உண்மையில் அவன் இயலாமையை இங்கே பதிவிடுகிறான் என்றும் சுற்றியிருந்த மற்றவர்களைக் காட்டிலும் விவான், நித்யாவுக்கு நன்கு புரிந்தது. மிரு எதுவும் பேசாமல் எழுந்தவள் நேராக துவாராவின் கம்பார்ட்மெண்ட் நோக்கிச் சென்றாள். சாதரண பேச்சு இப்படி விவாதம் ஆகுமென்றும் அதில் தியாவும் செபாவும் தங்கள் மனக்குமுறலைச் சொல்லுவார்கள் என்றும் புரியாமல் இருக்க அந்தப் பேச்சு அப்படியே நின்றது.
மிரு கோவமாய்ச் செல்வதைப் பார்த்த எல்லோரும் எதுவும் பேசாமல் போக, சரித்திரா அவள் சென்ற இடத்தைப் பார்க்க,"கவலை வேண்டாம் அவ எப்படியும் துவாரா கிட்ட தான் போயிருப்பா" என்று சொல்ல சரித்திரா கொஞ்சம் கலவரமடைந்தாலும் (அவளுக்குத் தான் மிருவைப் பற்றித் தெரியுமே? இருந்தும் ஒரு சின்ன பொசெசிவ் பயம்.) எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, ஹேமா தான்,"ஜிட்டு கரெக்ட்டா பத்தவெச்சிட்டியேடா" என்று சொல்ல,"அடேய் நான் என்னடா பண்ணேன் நான் பாட்டுக்கு சிவனேனு தானே இருந்தேன்?"
"நீதானே இளங்கோ லவ் ஸ்டோரி கேட்ட" என்று சொல்ல, அவனோ உடனே ஜெகா வாங்கி,"எல்லாம் இதோ இந்தப் பொண்ணு தான்" என்று யாழைச் சுட்டினான்."நேத்து வந்ததும் எங்க எல்லோரையும் பிரிச்சு விட்டு வேடிக்கை பார்த்த இன்னைக்கு..." என்று நிறுத்த,யாழோ கொஞ்சமும் அலட்டாமல் இருந்தாள்."நீ வா தாயி" என்று துஷி அவளை இழுக்க,"டேய் இப்போ நான் போனா நான் தான் காரணம்னு ஆகிடும். நான் எதுவும் சொல்லல. சம்மந்தமே இல்லாம இதோ இவன் பண்ணது" என்று தியாவை அவள் காட்ட, தியா அமைதியாக நின்றான்.
"சரி சரி சமாதானம் ஆகி திரும்ப கதை சொல்லும் போது கூப்பிடுங்க நான் குட்டியா ஒரு தூக்கத்தைப் போட்டுட்டு வரேன்" என்று எழுந்தான் ஜிட்டு. எல்லோரும் அவனை முறைக்க,"ஓ அப்போ இந்த இடத்துல இந்த டைலாக் பேசக் கூடாது போலவே? அப்போ என்ன டைலாக் பேசலாம்?" என்று யோசித்தான்.
"அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை?" என்றாள் பாரு.
"அதுவா?" என்று ஜிட்டு இழுக்க ஏனோ எல்லோரும் ஒருகணம் ஆவலாய் அவனைப் பார்க்க,"இத்தனை வருஷம் கூட இருக்க எங்களுக்கே தெரியில. உனக்கு எதுக்கு இவ்வளவு அவசரம்?" என்றதும் கோவத்தில் ஜிட்டுவை எட்டி உதைத்தான் ஹேமா.
"தெரியாததைத் தெரியிலன்னு தானே சொல்லணும். என்னடா இது வம்பா போச்சு?" என்றான் ஜிட்டு. (பயணங்கள் முடிவதில்லை...)
 
விளையாட்டு யாழ்குள், ஸீரியஸ் யாழ்....
தியா ,தன் குமுறலைக் கொட்டிவிட்டான்,,,,அடுத்து அவன் , பிளாஷ் பேக்கா...?
 
விளையாட்டு யாழ்குள், ஸீரியஸ் யாழ்....
தியா ,தன் குமுறலைக் கொட்டிவிட்டான்,,,,அடுத்து அவன் , பிளாஷ் பேக்கா...?
ரெண்டும் கலந்த கலவை தான் யாழ்! எஸ் அவங்க பிளாஷ் பேக் தான். நன்றி??�
 
செபா தியா சொன்னது நூறு பெர்சென்ட் கரெக்ட் இன்னும் எத்தன பேர் வீட்ல பொண்ணுகிட்ட பிடிச்சிருக்கானு கேக்கறாங்க....ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தைரியமா சொல்லவெல்லாம் முடியாது இவங்களைத்தான் கட்டிப்பேன்னு
 
Top