Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-37

Advertisement

praveenraj

Well-known member
Member
"ஓகே எங்க கூட படிச்சவன் தான் ஜெகன். நித்யா உனக்குத் தெரிந்திருக்குமே தேர்ட் இயர் கல்சுரல்ஸ்ல எங்களுக்கும் ece க்கும் சண்டை வர அடிதடி வரை போச்சே? அப்போ அடிச்சிகிட்டத்துல ஒருத்தன் மண்டை உடைஞ்சு ஹாஸ்பிடல் எடுத்திட்டு வந்தோமே?" என்று சொன்னான் ஹேமா. ஏதோ புரிந்தவளாய்,"ஆமாம் ஆமாம் பெரிய பிரச்சனை ஆகி சஸ்பென்ஷன் வரை போச்சே அதுவா?" என்றவள் திடீரென தோன்றிய எந்துவில் தன் கணவனைத் தேட அவன் தான் இங்கு இல்லையே? அன்றைய தினம் இவர்கள் எல்லோரும் ரகளை செய்ய விவான்தன்னை நித்யா அழைத்தாள் என்று அவளைப் பார்க்கப் போக அதற்குள் அவசர காரணத்தால் நித்யாவால் அவனைப் பார்க்க முடியாமல் போய்விட என்றைக்கும் இல்லாமல் விவான் அன்று கோவித்துக்கொண்டு வெளியேறிட்டான். பின்னே இவள் கூப்பிட்டாள் என்று அவன் தன் ஃப்ரண்ட்ஸோடு இல்லாமல் இங்கே வந்து காத்திருக்க அவள் வராத கடுப்பில் அவன் கோவித்துக்கொண்டு சென்றான். இது நித்யாவிற்கு ரொம்ப ஸ்பெஷல் ஈவென்ட். அவனின் இரண்டாவது ஒதுக்கம். அவனை மீண்டும் சமாதானம் செய்ய அவள் பட்டப் பாடு அவளுக்குத் தான் தெரியும்.
"சொல்லு தெரியும்"

"அவனுக்கு ஒரு டைரக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. நிறைய ஸ்க்ரிப்ட் எல்லாம் அடிக்கடி எழுதிட்டு இருப்பான். அவனால் தான் நாங்க நிறைய நல்ல வேர்ல்ட் சினிமாஸ் பார்த்தோம். ஆனாலும் அவனை நாங்க எல்லோரும் பங்கமா கலாய்ப்போம்..." என்று சொல்ல வந்தவன் பெண்கள் இருப்பதால் நிறுத்த,

"புரியில?"

"நீயெல்லாம் 'அந்த' மாதிரி படம் தான் எடுக்க லாக்கி.'அந்த' மாதிரி படம் வேணுனா எடு நாங்க எல்லோரும் வந்து பார்ப்போம்னு" சொல்லி ஓட்டிட்டு இருப்போம்.

பாரு இளங்கோவையும், இதி ஜிட்டுவையும், மௌனி ஹேமாவையும் முறைக்க நித்யா மற்றும் மிரு பொதுவாக எல்லோரையும் முறைத்தனர். "பாரு இதுக்குத் தான் வேணாம்னு சொன்னோம். இது பசங்க சமாச்சாரம்" என்று ஹேமா சொல்ல,

"நீங்கயெல்லாம் கூட கேடிங்க தான் ஒத்துக்கறேன் ஆனா இவன்?(ஜிட்டு)"என்று மிரு சொல்ல, ஜிட்டுவுக்கு அப்படிச் சொன்னதில் ஒரு கர்வம் வர,

"யாரு இந்த நாயி? இந்த நாயி போனை வாங்கி..." என்று சொன்னவன் அருகில் அனேஷியா இருப்பதால் நிறுத்தி,"அதெப்படி நீங்க ஒருத்தனைப் பார்த்ததும் ஒரு ப்ரீஜூடிஸ்க்கு (முன் அபிப்ராயம்) வரலாம்?" என்றான் தியா.

ஜிட்டு தான்,'ஆஹா. நம்ம இமேஜை நாமளே கெடுத்துக்க வேணாம்' என்று நைசாக நழுவப் பார்க்க, உடன் செபாவும் போக,"டேய் நில்லுங்க டா.சொல்லு?"

"வேணாம் தாயிங்களே. நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன் இது அடல்ட் சமாச்சாரம்னு நீங்க தான் சொல்லு சொல்லுன்னு சொல்லிட்டு இப்போ எங்களை கேவலமாப் பார்க்கறீங்க" என்றான் தியா.

"ஓகே கைஸ் சில். இங்க நாம யாரும் கைசூப்பும் குழந்தை இல்ல எல்லாம் 25 + சிலர் முப்பதே தொட்டுட்டாங்க" என்று நித்யாவைப் பார்த்துவிட்டு கிண்டல் தொனியில் சொன்னான் ஹேமா."சோ நோ ஹெஸிடேசன். நான் சொல்றேன். விருப்பமில்லாதவங்க எல்லாம் எழுந்து போலாம்" என்று கேப் விட ஒருவர் கூட அந்த இடத்திலிருந்து நகரவில்லை."பார்ரா அப்போ ஓகே நீ சொல்லுடா தியா" என்றான் ஹேமா.

"அவன் அடிக்கடி பிலிம் எடுக்கணும்னு ஸ்பாட் லொகேஷன் சீன் எல்லாம் சொல்லுவான். யோசிப்பான். ஒரு நாள் நைட், நாங்க எல்லோரும் துவாரா ரூம்ல ஒன்னா இருந்தோம். பொதுவா நைட் சாப்பிட்டதும் நாங்க எல்லோரும் ஒரு ரூம்ல சேர்ந்து கதை பேசுவது வழக்கம். இங்க நாங்கங்கறதுல நான் இல்ல கைஸ் நான் டேஸ்ஸ்காலர்" என்றான் தியா .

"அப்போ நீ நிறுத்து, டேய் ஹாஸ்டல் கைஸ் நீங்களே சொல்லுங்க"

"அப்போ எங்களுக்கு பொழுதே போல. பேச்சு ஒவ்வொருத்தரா வர அப்படியே ஜெகனிடம் அவனோட ஸ்க்ரிப்ட்டை சொல்லச் சொன்னோம். நாங்க தான் ப்ரடுசெர்ஸ் நீ கதை சொல்லி எங்களை கன்வீன்ஸ் பண்ணனும்னு சொன்னோம். அந்த நாயி இந்த தூம் கதையை (ஹிந்தி மூவி) ஒரு மாதிரி பட்டி டிங்கேரிங் பார்த்த மாதிரி ஒரு கதை சொன்னான். செம மூட் அவுட். அப்போ இதோ இவன் (செபா) சும்மா இல்லாம,'என்னடா கதையை சொல்ற? இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி ஒண்ணுமே இல்லைனு' சொல்லி பேச்சு அப்படியே அவனை ஓட்டி ஒரு பலானக் கதை சொன்னான்."
இப்போது பாய்ஸ் எல்லோரும் சேர்ந்து பிரசாந்த் என்னும் அவர்கள் தோழனை திட்டினார்கர்."அந்த பிரசாந்த் நாய் எங்களுக்கே தெரியாம நாங்க அங்க பேசிட்டு இருந்ததை எல்லாம் வீடியோ எடுத்திட்டு இருந்தது. அப்படியே ஒரு குத்து பாட்டுக்கு ஸ்டெப்ஸ் போடுறோம்னு சொல்லி நாங்க எல்லோரும் கொஞ்சம் ஓவரா ஸ்டெப்ஸ் போட்டுட்டோம். அதுல ஹைலேட்டே ஜிட்டு தான் கொஞ்சம் ஓவர் குஷி ஆகி நல்லா ஸ்டெப்ஸ் எல்லாம் போட்டுட்டான். அது நடந்து ரொம்ப நாள் கழிச்சு ஒருநாள் நாங்க எல்லோரும் அதே ரூம்ல நைட் கார்ட்ஸ் விளையாண்டோம். அதும் எத்தனைபேர்? பதினெட்டு பேரு ஒரே ரூம்ல. நாங்க ஆஸ் விளையாட உன் ரவுண்டு இவன் ரவுண்ட்னு இப்படிச் சொல்லி விளையாட்டிட்டு இருந்தோம். அப்போ திடீர்னு எங்க ரூம் கதவை யாரோ தட்ட நாங்க முதல பக்கத்துக்கு ரூம் பசங்கனு நெனச்சிட்டு யாருடானு சத்தம் போட அந்தப் பக்கம் சப்தமே இல்லை. உடனே அது வேற யாருமில்ல எங்க ஹாஸ்டல் வார்டன்னு எங்களுக்குப் புரிஞ்சிடுச்சி. ஒரு ரூம்ல பதினெட்டு பேரு. ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது."

"இருந்த கார்ட்ஸ் எல்லாம் எடுத்து ஜன்னலைத் திறந்து கீழ போட்டுட்டு கதவைத் திறந்தோம். அந்த லூசு பக்கி ரவுண்டு ரவுண்டுனு சொன்னதும் நாங்க எல்லோரும் சரக்கு தான் அடிக்கிறோம்னு நெனச்சிட்டு எதாவது பாட்டில் இருக்கானு பார்க்க ரூம் முழுக்கத் தேடுனான். அப்புறோம் எங்க எல்லோரையும் ஊதவேற சொன்னான். நாங்க தான் சரக்கே அடிகளையே தைரியமா ஊதினோம். இருந்தும் ரூம்ல தேடுனவன் அந்த லேப்டாப்பை எடுத்து ஓபன் பண்ணா அதுல நாங்க அன்னைக்கு நைட் பேசுன பலான கதை விடியோவா இருக்கு"

"அடப்பாவிங்களா?"

"உடனே அவன் அந்த விடீயோவைப் பார்த்திட்டு அதுல இருந்த எங்க ஏழு பேரை மட்டும் கொக்கா பிடிச்சிட்டு மத்தவங்களை அவங்க ரூம்க்கு அனுப்பிட்டான்"

"அப்புறோம்?"

"அப்புறோமென்ன? லேப்டாப்பை பிரின்சி ரூம்ல கொடுக்கப்போறேன் அங்க வந்து பேசிக்கோங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டான்"

"அச்சச்சோ!"

"எங்களுக்கு என்ன பண்றதுனே புரியில. மத்த பிரச்சனையா ஈஸியா எங்க வீட்டுலையே சொல்லி சமாளிச்சிடுலாம் ஆனா இதுவோ பலான விஷயம். அதும் உண்மையிலே எதாவது தப்பு பண்ணியிருந்தா கூட பரவாயில்ல, நாங்க எல்லோரும் அக்மார்க் இன்னொசென்ட் பசங்க. எல்லோருக்கும் பயம்"

"அதுல ஜிட்டுவும் இருந்தானா?"

ஹேமா செபாவைப் பார்க்க, செபா இளங்கோவைப் பார்க்க, இளங்கோ ஜிட்டுவைப் பார்த்தான்.

"அதுல ஹைலைட்டே அவன் தானே? அவனை நடுவுல வெச்சி தானே டேன்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் போட்டிருந்தோம்" என்றவர்கள் எல்லோரும் ஷேம் ஷேம் பப்பி ஷேமாக உணர, பெண்கள் எல்லோரும் முகம் சுளித்தபடி இருந்தனர்.

"விவானும் இருந்தானா?' என்றாள் நித்யா தயங்கியபடி,

இப்போ பாய்ஸ் இன்னும் பலமா சிரித்தனர். ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு அவர்ளுக்கு...

"ஏன் சிரிக்கறீங்க?"

"அந்த லேப்டாப்பே விவானுது தானே?" என்று கோரஸ் பட,

"துவாரா?" என்றாள் மிரு,

"அந்த ரூம் மெம்பெர்சே விவான், துவாரா, ஜெகன் தானே?"

"அடப்பாவிங்களா?"

"அப்போ இளங்கோ நீங்க?" என்றாள் பார்வதி,

"செபா சொன்ன கதைக்கு மானே தேனே பொன்மானே லிரிக்ஸ் எல்லாம் போட்டது யாரு? நம்ம இளங்கோ அடிகள் தானே?" என்றனர் எல்லோரும். பார்வதி தீயாக முறைத்தாள்.

"போச்சு இன்னைக்கு ரெண்டு டைவர்ஸ் (விவான்-நித்யா, இளங்கோ-பாரு) ரெண்டு பிரேக் அப் (மௌனி-ஹேமா, ஜிட்டு-இதி) கன்பார்ம்..." என்று முணுமுணுத்தான் ஹேமா. "ரெண்டா? எப்படி மூணாச்சே?" என்றான் ஜிட்டு,

"மூணாவது யாரு?"

மிரு தியாவை ஓரக்கண்களால் பார்த்தனர்.

அப்போ நாலு என்றான் தியா செபாவை பார்த்தவாறு,

பெண்கள் எல்லோரும் அவர்களின் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் கோவமாய் இருப்பதாய்க் காட்டி,"அப்புறோம் என்ன ஆச்சு?"

"நெக்ஸ்ட் அந்த வார்டன் பாட்டுக்கு லேப்டாப்பை எடுத்துக்கிட்டு போயிட்டான். நாங்களோ லேப், பிரின்சி, சஸ்பென்ஷனை நினைத்து ஃபீல் பண்ணிட்டு இருந்தா அப்போ இந்த நாய் (ஜிட்டு) எல்லோரையும் கூப்பிட்டு,"டேய் நீங்க எப்படி வேணுனாலும் போங்கடா ப்ளீஸ் என்னைமட்டும் எப்படியாவது இந்த விஷயத்துல இருந்து எஸ்கேப் பண்ணிவிடுங்கடானு" சொல்லி அழுதான் பாரு, எங்க எல்லோருக்கும் எப்படி இருந்தது தெரியுமா?
பெண்கள் எல்லோரும் சிரித்தனர்.

"அப்புறோம் என்ன ஆச்சு?"

"அப்புறோம் என்ன? அடுத்தநாள் பிரின்சி ரூம் போய் அந்த வீடியோல இருந்த நாங்க மட்டும் மாட்டிகிட்டோம்"என்றான் இளங்கோ.

"நாங்கனா?"

"நான், விவான், துவாரா, ஹேமா, ஜெகன், செபா"

"அப்போ ஜிட்டு?"

"நாய் வீடியோல இவன் மூஞ்சு ஷேக் ஆகி க்ளியரா இல்லைனு இவனை விட்டுட்டாங்க" என்றான் இளங்கோ.

"ஆனாலும் அந்த வார்த்தை, அவன் சொன்ன மாதிரியே அவன் மட்டும் உண்மையிலே எஸ்கிப் ஆகிட்டான்"

"நீங்க?"

"வேற என்ன? ஒருவாரம் சஸ்பென்ஷன். பேரன்ட்ஸ் வந்து மீட் பண்ணி அது வேற கதை" என்றான் ஹேமா.

"செபா நீங்க எப்படி பேரண்ட்ஸ்?" என்றாள் மௌனி ஏதோ உணர்ச்சி மிகுதியில்,

"அவன் அத்தைகிட்ட பேசி அவன் மாமா வந்து அவன் அப்பாக்கு விஷயம் தெரியாம மறைச்சி எல்லாம் பெரிய கூத்து"

"அடப்பாவிங்களா? ஆள் மாறாட்டம் வேறயா?"

"வேற என்ன பண்ண?"

ஜிட்டு மட்டும் கெத்தாக மீண்டும் வந்து அமர,"எப்படியோ நீங்க எஸ்கேப் ஆகிட்டிங்க" என்றாள் பாரு.

"ஆனா அந்த டைலாக்கை இன்னைக்கு வரை சொல்லிச் சொல்லி ஏன்டா அன்னைக்கு எஸ்கேப் ஆனேனு வாழ்நாள் முழுக்க ஃபீல் பண்ண வெச்சிட்டானுங்க இவனுங்க எல்லோரும்" என்றான் ஜிட்டு.

நித்யா மட்டும் இன்னும் அமைதியாக இருக்க,"என்ன நித்து ஃபீலிங்கா?"

"என்கிட்ட இருந்து இந்த விஷயத்தை அவன் மறைச்சிட்டான்" என்றாள் நித்யா,

"ஆமா அப்படியே உன் புருஷன் ஆஸ்கர் அவார்ட் வாங்கிட்டு அதை உன்கிட்ட இருந்து சொல்லாம மறச்சிட்டான் பாரு? வாங்குனது சஸ்பென்ஷன் இதுல சொல்லலைனு கம்பளைண்ட் வேற?" என்றான் ஹேமா.

"ஆனாலும் நீங்க எல்லோரும் ரொம்ப கெட்ட பசங்கடா" என்றாள் நித்யா.

"நித்து இதெல்லாம் ஒரு ஃபன். என்ன சொல்ல? சம் குட் மெமரிஸ். இது கூட இல்லைனா அப்புறோம் என்ன காலேஜ் லைப் சொல்லு? டேக் இட் ஈஸி. நீயா இப்படி ஃபீல் பண்றது?"

"ஃபீலிங் எல்லாம் இல்ல. இந்த விஷயத்தை என்கிட்ட இருந்து நீங்க எல்லோருமே மறைச்சிட்டிங்களே, அதுதான். ஆனாலும் இந்த நாய (ஜிட்டு) மட்டும் எப்படி தப்பிக்க விட்டிங்க?"

"ஹா ஹா அதுக்கும் சேர்த்து தான் செய்யாத ஒரு விஷயத்துல சஸ்பென்ஷன் வாங்கி கொடுத்துட்டோமே" என்றான் தியா.

"அதென்ன கொடுத்துட்டோமே? நீங்களும் தானே வாங்குனீங்க?" என்றான் ஜிட்டு.

அதற்குள் ஸ்டேஷன் வர அவர்கள் சாப்பிட ஆயத்தமானார்கள்.
***************
சற்று நேரத்திற்கு முன்பு :
அங்கே தன் தந்தையைப் பற்றியப் பேச்சு அடிப்பட அங்கிருக்க பிடிக்காமல் வெளியேறிய சரித்திரா ஏதேதோ ஞாபகங்களில் உழன்று இருக்க அப்போது வந்தான் துவாரகேஷ். வந்தவன் அவள் யோசனையில் இருப்பதைக் கண்டு, மெதுவாக "சரி..த்..தி..ரா" என்று நிறுத்தி நிதானமாக அழைத்தான். அந்த அழைப்பு அவளின் உயிரின் ஆழம் வரைச் சென்று வந்தது போல் ஒரு உணர்வு அவளுக்கு. அவனையே மெய்மறந்து பார்த்தாள். ஏனோ இதுவரை இருந்த குழப்பமான மனநிலை எல்லாம் அவளை விட்டு விலகியிருக்க இந்த நொடியை ஆழமாய் உணர்ந்து அனுபவிக்க ஆயத்தமானாள். அவள் கண்களைப் பார்த்தவனுக்கு அவள் எதையோ சொல்ல வருவதாய் தோன்ற, மேலும் தன்னிடம் எதையோ எதிர் பார்க்கிறது என்றும் புரிந்தது. 'இது என்ன மனோநிலை? மனதெல்லாம் புதுவித உணர்வு. அவனைப் பொறுத்தவரை அவளை இப்போது தான் நேரில் பார்க்கிறான். இருந்தும் பல வருட பந்தம் போலும்' என்று அவள் எதையோ சொல்லவருவதாக அவனுக்குத் தோன்ற, என்ன நினைத்தாளோ அவனை நெருங்கியவள் அவனை அணைக்க அவனுக்கு தான் ஒருபுறம் ஆனந்தம் மறுபுறம் அதிர்ச்சி. இன்னும் இருவரும் கோர்வையாய் இரண்டு நிமிடங்கள் கூட பேசவில்லையே என்ற அந்த தயக்கம் அவனுக்கு. அதை உணர்ந்தாலோ என்னவோ சட்டென அவனை விட்டு விலகியவள்,"சாரி... ஏதோ... ஞாபகம்" என்று திக்கித் திணறி அவள் சொல்ல அவனுக்கும் ஒரு தேஜாவு (தேஜாவு என்றால் நம் வாழ்வில் தற்போது நடக்கும் ஒரு விஷயமோ இல்லை நாம் பார்க்கும் ஒரு பொருளையோ ஏற்கனவே எங்கோ பார்த்ததைப் போலவும் இல்லை ஏற்கனவே நம் வாழ்வில் நடந்ததைப் போலவும் தோன்றும் ஒரு உணர்வு) உணர்வு நிலை தான். இப்போது நிமிர்த்து தீர்க்கமாய் அவளைப் பார்த்தவன்,"சரித்திரா நாம ரெண்டு பேரும் ஏற்கனவே மீட் பண்ணியிருக்கோமா? இல்லை என்னை உனக்கு ஏற்கனவே தெரியுமா?" என்று சட்டென கேட்டு விட்டான்.
அந்த நேரத்தில் அவளுக்கு கீர்த்தி சொன்ன விஷயம் எல்லாமும் நினைவுக்கு வந்தது. அன்று இந்தப் பயணம் பற்றி கீர்த்தி சரித்திராவிடம் சொல்ல, தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தவளாய்,"சரித்து. நீ உண்மையிலே என் அண்ணனை விரும்புறியா? என்னைக்கோ ஒருநாள் எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடந்த அந்த ஒரு சின்ன விஷயத்தை நம்பி நீ இந்த ரிஸ்க் எடுக்க தயாரா?" என்று உண்மையில் உள்ளுக்குள் இவளும் தன் அண்ணனும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டவள் இருந்தும் இது எந்த அளவுக்கு சாத்தியம்? என்பதன் வெளிப்பாடாக கேட்டு விட்டாள்.
"நீ சொல்றது கரெக்ட் தான் கீர்த்தி. அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சின்ன நிகழ்வு தான். ஒரு தேர்ட் பெர்சன் (மூன்றாம் நபரின்) பாயிண்ட்ல இருந்து பார்த்தா உங்க எல்லோருக்கும் அது ஒரு விஷயமே இல்லாம இருக்கலாம். ஒத்துக்கறேன். ஆனா அந்த விஷயத்துல பர்ஸ்ட் பெர்சன் செகண்ட் பெர்சனான எனக்கும் உங்க அண்ணனுக்கும் நிச்சயம் ரொம்ப பெரிய விஷயம் அது. என் நம்பிக்கை சரினா ஒருவேளை உங்க அண்ணனுக்கு என்னை நினைவு இல்லைனாலும் அந்த நிகழ்வு நிச்சயம் அவர் மனசுல இன்னைக்கு இல்ல என்னைக்கும் மறக்காம அப்படியே இருக்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..."
"சரி அப்படியே இருக்குனு வெச்சிப்போம். ஆனா அதுனால மட்டும் அவன் உன்ன விரும்புவான்னு என்ன நிச்சயம்?" என்றவளிடம் சிரித்து,"கிட்டத்தட்ட ஒன்பது பத்து வருஷம் கழிச்சு நான் ஏன் அவரை திரும்ப மீட் பண்ணனும்? சரி அப்படியே மீட் பண்ணணும்னாலும் நாம ரெண்டு பேரும் ஏன் ஃப்ரெண்டா இருக்கனும்? அதும் உன்ன எனக்கு ரெண்டரை வருஷமா தெரிந்திருந்தும் நான் ஏன் அவ்வளவு லேட்டா அவர் தான் உன் அண்ணனு தெரிஞ்சிக்கணும்? சில விஷயம் எப்போ நடக்கும்னு இருக்கோ அப்போ தான் நடக்கும். ஒருவேளை நாங்க ரெண்டு பேரும் சேரக்கூடாதுனு விதியிருந்தாலும் யாரால அதை மாத்த முடியும் சொல்லு கீர்த்தி? என்னால முடிஞ்சதை நான் செய்யுறேன். அதுக்கு மேல எல்லாம் அவன் செயல் தான்..." என்றாள்
சரித்திரா.
இப்போது நினைக்கையில் அவனாகவே தன்னிடம் வந்து பேசியது அவளுக்கு ஆறுதாலாவும் மேலும் இது ஒர்க் அவுட் ஆகும் என்றும் மனம் சொன்னது.
"சரி துவாரா, உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் சில விஷயங்களை சொல்ல விரும்பறேன். அதை நீங்க கேட்டுட்டு பொறுமையா யோசிச்சு முடிவெடுங்க. ஒருவேளை நான் உங்களை ரொம்ப விரும்பறேன்னு வெச்சுக்கோங்க, நான் உங்களை பல வருடங்களாய்த் தேடிட்டு இருக்கேனு வெச்சுக்கோங்க, திடீர்னு நீங்க என் கண்ணுல சிக்கறீங்க, நான் உங்களை ஃபாலோ பண்ணி உங்களைப் பத்தி தெரிஞ்சிக்கிறேன்னு வெச்சுக்கோங்க, உங்க கிட்ட என் காதலை, ஆம் காதல்னா என்னனு புரியாத வயசுலயே எனக்கு உங்க மேல வந்த அந்த பாதுக்காப்பு உணர்வை நம்பி இத்தனை வருஷம் எந்த உணர்வுல எந்த நம்பிக்கையில உங்களைத் தேடிட்டு இருக்கேனு தெரியிலனு வெச்சுக்கோங்க, உங்களைப் பத்தி எதையும் தெரியாம உங்களுக்கு பேட்மிட்டன்னா ரொம்ப இஷ்டம்னு தெரிஞ்சு உங்களுக்காக உங்களை திரும்பி பார்க்கவைக்க வேண்டும்னு, இல்ல உங்க கூடவே இருக்க வேண்டும்னு, இல்ல உங்க உணர்வுலையே இருக்க வேண்டும்னு இப்படி என்ன வேணுனாலும் காரணமா இருக்கட்டும். ஆனால் அந்த காரணத்தின் காரணம் நீங்களா தான் இருக்கனும், நீங்க மட்டுமா தான் இருக்கணும்னு, இப்படி உங்களுக்காக காத்திருத்து இப்போ உங்க முன்னாடி நின்னு உங்களுக்காக தான் பிடிக்காத ஒரு விஷயம் இன்னும் சொல்லனும்னா என் வாழ்க்கையிலே யாரைத் திரும்ப பார்க்கவே கூடாதுனு நெனைச்சேனோ அந்த ஆளையே பார்க்கப் போறேன்னு ஒரு பொய்யான ரீசனை வெச்சி, நான் உண்மையிலே பாசத்துல தான் வரேன் நம்பிட்டு இருக்கும் என் தாத்தாவையும் ஏமாத்தி, உங்களுக்காகவும் உங்க கூடவே இருக்கனும்னு உங்க கிட்ட என் காதலை உணர்த்தனும் அப்படிங்கறதுக்காக இப்போ இது என்ன ஊரு பேருனே தெரியாம இந்த ட்ரைன்ல அதும் உங்க கம்பார்ட்மெண்ட்ல உங்க சீட்டுக்கு பக்கத்துல உட்கார்ந்து இப்போ உங்களைக் கட்டிப்பிடிச்சு இதெல்லாம் சொல்லுறேன்னு வெச்சுக்கோங்க, இப்போ நீங்க என்னைப் பத்தி என்ன நெனப்பீங்க?" என்றவள் அவன் முன்னே புருவம் உயர்த்த இப்போது தான் அவள் சொன்னதையும் அவள் சொல்ல வருவதையும் மெல்ல கிரகித்துக் கொண்டவன் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாய்,"நீ யாரு? நாம எங்க மீட் பண்ணியிருக்கோம்?"
"சரித்திரா, *****ஸ்கூல், nss (நேஷனல் சர்விஸ் ஸ்கீம்) 2007" என்று சொல்லி முடிக்கவும் துவாராவிற்கு எல்லாமும் புரிந்தது. அவளை அடையாளம் கண்டுக் கொண்டவனாய் அவன் ஆட்காட்டி விரலை அவளை நோக்கி நீட்ட, அவனையே தீர்க்கமாய்ப் பார்த்து விட்டு அவள் முன்னே செல்ல அவளின் கரம் பற்றி நிறுத்தியவன்,"நீ சொன்னதெல்லாம் நிஜமா?" அதில் இன்னும் நம்பாத உணர்வு தெரிய,"நான் யாரையோ மீட் பண்ணப் போறதுக்காக இந்த ட்ரைன்ல வரல. ரெண்டு நாள் உங்க கூடவே இருந்து உங்களைப் பார்க்கலாம்னு தான் வந்தேன்". இப்படி அவள் எல்லாமும் சொல்லிவிட்டு செல்ல, இன்னும் இதையெல்லாம் நம்பாதவனாய் அதே நேரம் அவள் சொன்ன எல்லாத்தையும் கூடவே அன்று நடந்ததையும் நினைத்தவன் அவள் பின்னாலே வந்து அந்த சீட்டில் அமர்ந்தான். அப்போது தான் சரித்திராவின் தாத்தா விவானிடம் கேள்வி கேட்க, விவான் பதில் சொல்ல முனையும் போது அவர்கள் வருவதைப் பார்த்துவிட்டு அமைதியானார்கள்.
இப்போது அடிக்கடி திரும்பி திரும்பி சரித்திராவைப் பார்த்தான். அன்று அழுது,பயந்து உடல் நடுங்க இருந்தவளின் முகம் கண்களில் வந்து மறைய அந்த முகமும் இந்த முகமும் ஒன்று தான் என்பதை அவள் நெற்றியில் இருந்த தழும்பு உணர்த்த அவனால் நடந்த, நடக்கும் எதையும் நம்பவும் முடியவில்லை அதேநேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. யாரோ ஒருவள் என்று நினைத்து அவளைப் பார்க்கும் போதே ஒரு வித ஈர்ப்பு அவனுள் வந்து மறைந்தது. இப்போது இவள் தான் அவள் என்று தெரிந்ததும் ஒரு இனம்புரியா உணர்வு. அவனின் முகத்தை வைத்தே ஓரளவுக்கு அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் விவான். இருந்தும் அவனின் எண்ணவோட்டத்தை அவன் முகத்தில் படிக்க முயன்றான். இத்தனை வருடங்களாய் அவனின் முகபாவத்தை வைத்தே என்ன நினைக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முடிந்தவனாலும் இப்போது முடியவில்லை.
துவாராவின் அகத்திலிருக்கும் இரண்டு விஷயங்களை மட்டும் இதுவரை விவானால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இது தான் இரண்டாவது விஷயம். இப்போது துவாராவை நோக்கி திரும்பிய சரித்திராவின் தாத்தா அவனை நன்கு கண்களால் அளந்தார். அவரின் பார்வையின் பொருள் அங்கு அமர்ந்திருந்த துஷி, யாழ், விவான், சித்து, விவி எல்லோருக்கும் புரிந்தது. ஏன் சரித்திராவுக்கு கூட புரிந்தது. ஆனால் சம்மந்தப்பட்டவனோ அந்த நாளின் நினைவிலும் இதுவரை அவள் சொன்ன விஷயத்திலுமே இருந்தது. இளவேனில் தான் அதுவரை தாத்தாவிடமிருந்தவள் இப்போது துவாராவிடம் தாவினாள்."தூ மாமா ப்ரூட்ஸ்" என்று அவனிடம் இருக்கும் ப்ரூட்ஸை கேட்க,விவான் தான்,"குட்டிமா இன்னும் பைவ் மினிட்ஸ் பொறுங்க லன்ச் வந்திடும். சாயுங்காலம் நாம ப்ரூட்ஸ் சாப்பிடலாம்" என்று சொல்ல சமத்தாய் தலை ஆட்டினாள். விவான் இப்போது சரித்திராவின் புறம் திரும்பி 'சொல்லிவிட்டாயா?' என்பது போல் தலையை அசைக்க அவளும் 'ஆமாம்' என்பது போல் அசைக்க அங்கிருந்தவர்கள் தான் இவர்களின் சம்பாஷணைகளின் பொருளை அறியமுடியாமல் குழம்பினார்கள்.
**************
அங்கே கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்த ஜெஸிக்கு அழைப்பு வர எடுத்தவள் அவள் வீட்டில் தான் அழைக்கிறார்கள் என்று உணர்ந்து அவள் பேச தூரமாகச் சென்றாள்.
"யாருக்கு நல்லது நடக்குதோ இல்லையோ இந்த டூர் ஜெஸியின் வாழ்க்கையில் நிச்சியம் ஒரு மாற்றத்தைத் தந்தே தீரணும். அதுக்காக நாம என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பா செய்யணும். என்ன கைஸ்?" என்றான் லோகேஷ். அவனுக்கு ஆமோதிப்பது போலவும் அவர்களும் அவன் சொன்னதிற்கு சம்மதம் சொல்லவும் தலை ஆட்டினார்கள்.
இப்பொழுது அடுத்த போன் ரேஷாவுக்கு வர, அவள் அன்னை தான் அழைப்பது என்று பார்த்ததுமே ஒரு எரிச்சல் அவளுக்குள் தோன்றியது. பின்னே காலையில் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்தாளா என்பதைப் பற்றி தான் கேட்கப் போகிறார்கள் என்று அவளுக்குப் புரிந்தது. என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் அவளும் ஓரம் போக, "இவளுக்கு என்ன ஆச்சு பெனாசிர்?" என்றான் லோகேஷ்.
"எல்லாம் நேத்து நைட் பார்த்த பார்ட்டியால தான்" என்றதும் ஏனோ லோகேஷிற்கு யாழின் முகம் வந்து மறைந்தது.
அமைதியாக இருந்த பெனாசிரைப் பார்த்துக்கொண்டு இருந்தான் இஸ்மாயில். ஹா ஹா ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கு போடுகிறார்கள். அவரவர் கணக்கும் சரியாகுமா? பார்ப்போம்... (பயணங்கள் முடிவதில்லை...)
 
Top