Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-36

Advertisement

praveenraj

Well-known member
Member
அஸ்ஸாமில் திவேஸுக்கு இருப்பே கொள்ளவில்லை. காதல் எல்லோருக்குள்ளும் இருக்கும். இருக்கிறது. என்ன அதை சிலர் அப்படியே வெளிகாட்டிக் கொள்வர் சிலரோ அதை தம் மனதிற்குள்ளே வைத்து பத்திரப்படுத்திக் கொள்வார்கள். நாம் ஒருவரை தீவிரமாக விரும்பும் போது அவரோ மற்றொருவரை விரும்புவது தெரியவருகையில் இனம் புரியாத வலி வரும். சமயங்களில் நம் வாழ்க்கை அடுத்தவர் அவரின் வாழ்வில் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதைப் பொறுத்தே அமைந்துவிடுகிறது. அவர் நமக்கு வேண்டியதை விட்டுச்செல்லும் போது தான் நம்மால் அதை எடுக்க முடியும். ஆனால் இதில் அடுத்தவர் விட்டுச் சென்றால் மட்டுமே தனக்குக் கிடைத்துவிடும் என்று அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. ஏனெனில் பொருளாயின் நாம் உடனே எடுத்துக்கொள்ளலாம். அது ஒன்றும் சொல்லாது. இங்கோ மனம் ஆச்சே? மனம் விரும்ப வேண்டும். அவளுக்காக, அவளின் முடிவிற்காக காத்திருக்கிறான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த அவளுக்கும் 'அவனின்' முடிவை பொறுத்தே அவள் வாழ்வும் ஊசலாடுகிறது. இது திவேஸுக்கு தெரிந்தாலும் என்ன செய்ய முடியும்? காத்திருக்க மட்டும் தான் அவனால் முடியும். அதுவும் காத்திருந்தால் நிச்சயம் கிடைத்துவிடும் என்றும் சொல்ல முடியாதே? இதுவே கடந்த இரண்டு நாட்களாய் உண்மையில் சொல்லப்போனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவனின் நிலை. இரண்டு மாதங்கள் சட்டென கடந்து விட்டது தான். ஆனால் இந்த இரண்டு நாட்கள் தான் அவன் வாழ்வில் மிகவும் மெதுவாக நகர்வதைப்போல் இருக்கிறது.
இதை முன்னாலே அவளிடம் சொல்லியிருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் அங்கு தான் ட்விஸ்ட். அவனுக்கு 'அந்த' நிகழ்வு நடந்து முடித்ததுமே தெரிந்துவிட்டது.அப்போதிருந்து அவனால் சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இருக்கிறான். அசாம் வரும் பிளான் என்று தெரிந்ததுமே எல்லோரையும் பிளைட்டில் தான் வரவைக்க முடிவெடுத்திருந்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் ட்ரைனில் வருவதாகச் சொல்லிவிட அவனால் மறுத்து பேசமுடியவில்லை. சென்னையிலிருந்து கொல்கத்தா இரண்டரை மணிநேரம் கொல்கத்தாவிலிருந்து அசாம் ஒன்றரை மணிநேரம். மொத்தமே நான்கு மணிநேரத்தில் இந்தப் பயணம் முடிந்திருக்கும். இது தான் அவனின் கோவத்திற்குக் காரணம். அன்னையிடம் திருமணத்தைப் பற்றிய கேள்விக்கு பத்துநாளில் பதில் அளிப்பதாகச் சொல்லியிருந்தான். அதில் ஒரு நாள் முடிந்தது. இரண்டாம் நாள் முடியும் தருவாயில் இருக்கிறது. கடிகாரம் நகர மறுக்கிறதா இல்லை ட்ரெயின் செல்லவில்லையா என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று ஒவ்வொரு நொடியும் அவனுக்கு ஒரு யுகமாய்த் தான் சென்றுகொண்டிருக்கிறது. சும்மா சும்மா அவர்களுக்கு போன் செய்து,"எங்கடா இருக்கீங்கன்னு?" கேட்பது அவனுக்கே பிடிக்கவில்லை. 'வேர் இஸ் மை ட்ரெயின்?' உபயோகித்தாலே அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்துவிடும். இப்போதும் அப்படியே அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டான்.
..................................................
"அப்புறோம் என்ன ஆச்சு? இளங்கோ சொல்லுடா சீக்கிரம்" - ஹேமா
"அப்புறோம் என்ன? அன்னைக்குக் கொஞ்சம் பேசிட்டு அவளை பத்திரமா வழியனுப்பிட்டு நான் காலேஜ் வந்தேன்"
"ஏன்டா பஸ் ஏத்தி அனுப்பிச்ச? நீயும் கூடவே போய் அவளை காலேஜ்ல இறக்கிவிட்டு இருக்கலாமே?" என்று நக்கலாய்க் கேட்டான் தியா. அதை உணராத இளங்கோ,"நானும் அப்படித் தான் நெனச்சேன் அப்புறோம்..." என்று சொல்வதற்குள் எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரிப்பதை உணர்ந்து நிறுத்த,"டேய் நீங்களும் கிண்டல் பண்றீங்களா?"
"பார்ரா துரைக்கு எவ்வளவு அறிவு? நாம கிண்டல் பண்றது கூட தெரிஞ்சிருக்கே?' என்று ஜிட்டு சொல்ல இப்போது நித்யாவே ஜிட்டுக்கு ஹைப்பை கொடுக்க, இளங்கோ நித்யாவை முறைத்தான்.
"என்ன பண்றது இளங்கோ இன்னைக்கு பையன் (ஜிட்டு)செம பார்ம்ல இருக்கான். நமக்கும் என்டெர்டெய்ன் மென்ட் ஆகவேணாமா?" என்று நித்யா கேட்க பார்வதி தான் தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
"நானே சொல்றேன்" என்றவள்,"அதற்கு அப்புறோம் நாங்க மீட் பண்ணல இருந்தும் நான் தான் அப்போ அப்போ அவருக்கு மெசேஜ் அனுப்புவேன்"
"வாவ் சூப்பர்! என்ன மெசேஜ் அனுப்புவ?" - மிரு
"காலையில குட் மார்னிங் நயிட் குட் நைட்"
"ஏன் நடுவுல குட் ஈவினிங்கை விட்டுட்டே?" என்று மிரு சொல்ல, அப்போது தான் தன்னையும் சேர்த்து கலாய்க்கிறார்கள் என்று உணர்ந்தவள் பாவமாய் இளங்கோவைப் பார்க்க,
"ஏன் நிறுத்திவிட்டாய் பார்வதி? சொல் இந்த பார்வர்ட் மெசேஜ், இதை 10 பேருக்கு அனுப்பினா பாபா அருள் புரிவார், இதுல நம்பர் இப்படி கமெண்ட் பண்ணா சாமி சிரிக்கும் கண்ணைத் திறக்கும் இப்படியா?" என்றான் ஜிட்டு.
"எல்லோரும் ரொம்ப தான் ஓட்டுறீங்க போங்க" என்று பார்வதி முகம் திருப்ப,
"ஏ ஏ பார்வதி சும்மா தானே ஜஸ்ட் பார் ஃபன். சொல்லு அப்புறோம்?"
"அப்போ எங்க காலேஜ்ல அந்த ஜோனல் மேட்ச் நடக்க இருந்தது. அதுல காம்பீட் பண்ண இவங்க காலேஜ் வந்திருந்தது. அப்போ தான் விவான் அண்ணா,துவாரா அண்ணா, சபரி அண்ணா (சபரி இவர்கள் வகுப்பில் இருந்த இன்னொரு மாணவன்) இவங்க எல்லா எனக்கு பழக்கம். ஏனோ விவான் பெயரைச் சொன்னதும் நித்யா கதை கேட்க ஆவல் காட்ட,
"அப்போ எங்க ஜோனல் பேட்மிட்டன் நடந்தது. உங்களுக்குத் தெரியுமா? அன்னைக்கு சிங்கிள்ஸ் பைனல் ரொம்ப அருமையான மேட்ச்.அநேகமா எங்க காலேஜ்ல மட்டுமில்ல அந்த ஜோனே அந்த மேட்சை மறந்திருக்காது. அப்படியொரு மேட்ச்..."
"அப்படி என்ன நடந்தது?"
"சிங்கிள்ஸ் பைனல் விவான் வெர்சஸ் துவாரா. ஒன்னேகால் மணிநேரத்துக்கு மேல போச்சு மேட்ச். செம"
"யாரு வின் பண்ணா?"
"முதல் செட் விவான் அண்ணா அதும் 30 -29.(ஷட்டில் தெரிந்தவங்களுக்கு புரியும் 21 பாயிண்ட்ஸ் எடுத்தாலே அவங்க வின். ஆனா அப்போ நீங்க ஆபோனென்ட் பிளேயரவிட ரெண்டு பாய்ண்ட் லீட் எடுக்கணும். அதாவது 21 -19. இல்லைனா ரெண்டு பாய்ண்ட் லீட் வரவரை விளையாடிட்டே இருக்கனும். அதையும் மீறி 29 -29 வந்தா யாரு அடுத்த பாயிண்டை எடுக்கறாங்களோ அவங்க தான் வின்னர்) சோ அன்னைக்கு முதல் செட்டே செம டப்"
"செகண்ட் செட் துவாரா அண்ணா அது 25 - 23. அண்ட் கடைசி செட்டும் 30 -29 தான் ஆனா ஜெயிச்சது விவான் அண்ணா"
"செம மேட்ச் அது. எங்க pet மாஸ்டர் இந்த மாதிரி ஒரு மேட்சை பார்ததில்லைனு சொன்னாரு. அப்போதான் தெரியும் அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல இருந்தே நல்லா விளையாடுவாங்கலாம். அவங்க ரெண்டுபேரும் ஸ்கூல் மேட்ஸ்னும் அப்போதான் தெரியும். இன்பெக்ட் இன்னொரு ட்விஸ்ட் என்னன்னா டபிள்ஸ் கேம்ல ஜெயிச்சதும் அவங்க ரெண்டு பேரும் தான்.முதல ரெண்டு பேரும் எதிர்ல விளையாண்டதைப் பார்த்தா அவங்க ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்னு யாருமே சொல்லியிருக்க மாட்டாங்க. செம போட்டி ஆனா அவங்க டபிள்ஸ் விளையாடும் போது அதைவிட செம அண்டர்ஸ்டாண்டின். 21 - 11 21 -13 னு துவம்சம் பண்ணிட்டாங்க"
"சரிசரி அதுனால உங்க காதலுக்கு என்ன நல்லது நடந்தது?"
"நடந்ததே. அன்னைக்கு மேட்ச் முடிஞ்சி நாங்க அஞ்சு பேரும் ட்ரீட் போனோமே"
"அடப்பாவிகளா? நாங்க அந்த மேட்ச் ஜெயிச்சதுக்கு எத்தனை முறை கைல கால்ல விழாத குறையா கெஞ்சி ட்ரீட் வாங்கினோம். ஆனா உங்களுக்கு நோகாம ட்ரீட் தந்து இருக்கானுங்களா? விடமாட்டேன் இதை நான் சுப்ரீம் கோர்ட்டுக்கு போயாவது நீதி வாங்கி அவங்களை பழிவாங்குவேன்" என்று சூளுரைத்தான் ஜிட்டு.
"டேய் இது உனக்கே ஓவரா இல்ல? என்னைக்கோ ஜெயிச்சதுக்கு இன்னைக்கு இந்த ஆக்ரோஷம் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே ஓவர்" என்றான் ஹேமா.
"அப்போ நாங்க மட்டும் போறோம். நீ சும்மா இரு" என்றதும்,"மச்சி நான் சும்மா சொன்னேன்டா. ட்ரீட் எங்கள் பிறப்புரிமை. அதை யாருக்காகவும் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று ஹேமா சொல்ல உடனே மிரு தியா,செபா,ஜிட்டு ஏன் இளங்கோ உட்பட பிலட்ஜ் செய்ய அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவர்களை விந்தையாய்ப் பார்த்தும் ஜிட்டு கையை நீட்ட எல்லோரும் அவர்கள் கையை அவன் கையில் வைத்து சத்தியம் செய்தனர்.
இது பார்க்க வேடிக்கையாய் இருந்தாலும் ஒன்றுபோலவே எல்லோரும் செய்ததை நித்யா, இதி, பாரு, அனேஷியா எல்லோரும் ஆச்சரியமாய்ப் பார்த்தனர்.
"என்ன பாக்கறீங்க? இது எங்க காலேஜ் டேஸ் பிலட்ஜ் (pledge - சபதம்). யாருடைய பர்த்டே கூடவே அவங்க ஆளோட பர்த் டே, பாஸ் ஆனாலும் அரியர் வெச்சாலும் சஸ்பென்ஷன் வாங்குனாலும் ப்ரைஸ் வாங்கினாலும் எங்க வாழ்க்கையில மாறாதா ஒன்னுனா அது ட்ரீட் தான். அதும் பிரியாணி தான் மெயின் டிஷ் மீதியெல்லாம் சைட் டிஷ்" என்றான் செபா.
உடனே ஜிட்டு கையைத் தூக்கி வலிப்பு வந்தவன் போல் ஆட்ட பெண்கள் எல்லோரும் ஒருகணம் பதற, ஆண்களோ செபாவை முறைத்து,"ஏன்டா" என்றனர்."அது ஒண்ணுமில்ல ஜிட்டுக்கு பிரியாணி வீக்னஸ் இருக்கு"
"அப்படினா?"
"அதுவா அவன் முன்னாடி யாராச்சும் பிரியாணி பத்தி பேசிட்டா அவனுக்கு உடனே பிரியாணி வாங்கித் தரனும். இல்லைனா இப்படித் தான் அவனுக்கு உடம்பு எல்லாம் நடுங்கும்" என்று சிரித்துக் கொண்டே சொல்ல,
"நிஜமாவா?" என்று சீரியஸாக பார்வதி கேட்க,
"பாரு என்ன பத்தி என்ன சொன்னாலும் நீ மட்டும் தான் அதை யோசிக்காம செய்யாம உடனே நம்புற. ஐ லைக் யூ மா" என்று ஜிட்டு சொல்ல பெண்கள் எல்லோரும் அவனை கொலைவெறியில் முறைத்தனர்.
"அது ஒண்ணுமில்ல பாரு, இவன் நான்வெஜ் சாப்பிட்டதே இல்ல. நாங்க எல்லோரும் பர்ஸ்ட் செமெஸ்டர்ல இவனுக்கு சிக்கனை மீல் மேக்கர்ன்னு சொல்லி ஏமாத்தி கொடுத்துட்டோம். இவனும் சாப்பிட்டான். அப்படியே மீனை கூட முள்ளில்லாம பிளஸ் (flesh)ஆ தந்தோம். அவனும் சாப்பிட்டு பழகிட்டான். அதுக்கப்புறோம் தான் அதெல்லாம் தெரிஞ்சு அவனுக்கு அதைச் சாப்பிடவும் முடியில அதேநேரம் சாப்பிடாம இருக்கவும் முடியில. அந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட நிலையில ரொம்ப தவிப்பான். அப்புறோம் பேசி சமாளிச்சு சாப்பிட வெச்சிட்டோம். நாயி நான் வெஜ் சாப்பிடணும்னு தோணுச்சுனா வாயால கேட்காது, அது பாவமாம்! அதுக்கு இந்த மாதிரி வலிப்பு வந்த மாதிரி சீன் போடும். நாங்களும் அதை புரிஞ்சிகிட்டு வாங்கி தருவோம்" என்று சொல்ல எல்லோரும் இப்போது ஜிட்டுவைப் பார்த்துச் சிரிக்க,
"ஸ்டாப் ஆல் நான்சென்ஸ். என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? ஒரு அப்பாவி பையனுக்கு எல்லா டேஸ்ட்டையும் பழக்கிவிட்டுட்டு திடீர்னு கைவிடச் சொன்னா எப்படி?" என்று சீரியஸாக கேட்க,
"கரெக்ட் அதை சொந்த காசுல சாப்பிடணும்" என்று ஹேமா கவுன்ட்டர் கொடுக்க,
"என்ன அசிங்க படுத்தரையோ? கமான். இந்த அசிங்கத்துக்கெல்லாம் ரியாக்டே பண்ண மாட்டான் இந்த ஜிட்டு" அப்போது மதியம் லஞ்ச் டைம் நெருங்கும் முன்னே ட்ரைனில் பிரியாணி விற்றுக்கொண்டு செல்ல அதையே ஏக்கமாய்ப் பார்த்தான் ஜிட்டு. எல்லோரும் அவனைக் கண்டுசிரித்தனர்.
அவனின் பார்வை சென்ற திசையை யூகித்த தியா,"டேய் மதியம் இன்னும் ஆர்டர் பண்ணல. எதுனாலும் நாம அசாம் போய் சோதித்து பார்க்கலாம்டா. ப்ளீஸ் ஜிட்டு..."
"என்னது இன்னும் ஆர்டர் பண்ணலியா? அப்போ உடனே எல்லோருக்கும் பிரியாணி ஆர்டர் பண்ணு" என்று பொங்கினான் ஜிட்டு .
தியா புரியாமல் எல்லோரையும் பார்க்க, பிரியாணியா இல்ல வேற எதுவானு வந்தால் எப்போதும் தராசு முள் போல மனம் பிரியாணியைத் தானே குறிக்கும்? எல்லோரும் ஆமோதிக்க,"சரி ஆர்டர் பண்ணுறேன்" என்று சொல்லிவிட்டு எதற்கும் யாரேனும் ஆட்சேபிக்கிறார்களா என்று பார்க்க எல்லோரும் கல்லுளி மங்கங்கள் போல் இருக்கவும் தலையில் அடித்துக்கொண்டவன் எல்லோருக்கும் சேர்த்து பிரியாணி ஆர்டர் பண்ண நித்யா தனக்கு வேண்டாம் என்று சொல்ல (அவள் இன்னும் சைவம் தான்!) அனேஷியாவும் முதலில் மறுக்க பாரு தான்,"அதெல்லாம் கிடையாது நித்யா அக்காக்கு மட்டும் தான் எக்ஸெப்சன். வேற யாருக்கும் இல்ல. நீங்க ஆர்டர் பண்ணுங்க தியா அண்ணா" என்று சொல்ல அவனோ விவான்,விவி, துஷி ஆகியோரைக் கேட்க, "இதெல்லாமா கேட்பாங்க? பிரியாணி தின்ன யாருக்குத் தான் கசக்கும்? ஆர்டர் பண்ணுடா"என்றார்கள். துஷி தான்"மச்சி நல்லா மட்டன் பிரியாணியா ஆர்டர் பண்ணு" என்று சொல்ல "சிக்கன் தான் இருக்கு பார்க்கறேன்" என்று சொல்லி தியாவும் ஆர்டர் செய்தான்.
அங்கே விவான்,யாழ்,விவி, சித்தாரா, துஷி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த சரித்திராவின் தாத்தா கையில் இளவேனிலை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தான் தியா போன் செய்ய எல்லோரும் ஆளாளுக்கு ஆர்டர் தர யாழ் தான் அப்படியே சிக்கன் 65 மட்டன் சுக்கா என்று சொல்ல, கடுப்பான தியா,"நான் ஒன்னும் இங்க ஹோட்டல் நடத்தல. மேலும் நான் ஒன்னும் இங்க ஆர்டர் எடுக்கல" என்று யாழுக்கு பதிலளிக்க,"ஐயோ சைட் டிஷ் இல்லமா எப்படி பிரியாணி சாப்பிடறது?" என்று மீண்டும் உச் கொட்டிய யாழுக்கு,"வேணுனா நான் உனக்கு தயிர் சாதம் ஆர்டர் பண்றேன். அதுலையே ஊறுகா இருக்கும் இருந்தும் உனக்காக ஒரு சிப்ஸ் பேக்கெட் கூட வாங்குறேன்" என்று சொல்ல,"என்ன கிண்டலா? கொன்றுவேன். ஒழுங்கா பிரியாணியை வாங்கு" என்றாள். சரித்திராவின் தாத்தா மட்டும் தயிர்சாதமே போதும் என்று சொல்ல மீண்டும் பேச்சில் தீவிரமானார்கள்.
"தாத்தா அப்போ சரித்திரா உங்க கூட வரமாட்டா இல்ல? பேசாம அவளை நாங்க எங்க கூட கூட்டிட்டுப் போகட்டுமா?" என்று கேட்டாள் யாழ்.
"எருமை பாவம் தாத்தா மட்டும் தனியா என்ன பண்ணுவாரு? அவருக்குத் துணை வேணுமில்ல?"-துஷி,
"எந்த ஹாஸ்பிடல்ல தாத்தா?" என்று கேட்க அவர் சொன்ன இடத்தை செக் செய்தவன் "ஹே இது கெளஹாத்தி பக்கம் தான் இருக்கு. அப்போ நீங்க பார்த்திட்டு அங்க வந்துடுங்க எல்லோரும் கொஞ்சம் சுற்றிபார்க்கலாம்.ஆமா நீங்க எப்போ ரிட்டர்ன்?" என்று கேட்டான் துஷி.
"எனக்கு எதுவுமே தெரியாது கண்ணா. எல்லாம் என் பேத்திக்குத் தான் தெரியும். அவ தான் பிளான் போட்டா. அவளைக் கேட்டுச் சொல்றேன்" என்று சொன்னதும் தான் அங்கே சரித்திரா இல்லாதது புரிய, "எங்க போனாங்க உங்க பேத்தி?" என்றான் விவி.
"அவங்க பேச ஆரமிச்சதும் எழுந்து அந்தப் பக்கம் போயிட்டாங்க"
"துவாரா?"
"அவனும் ரெஸ்ட் ரூம்" என்று சொன்னவர்கள் அப்போது தான் துவாராவைத் தேட,
"நான் ஒன்னு கேட்கட்டுமா?" என்றார் அந்தப் பெரியவர்.
"தாராளமா கேளுங்க தாத்தா..."
"ஏன் அந்த தம்பி மட்டும் ஒருமாதிரியே இருக்கு? இன்னைக்கு விடு நேத்துல இருந்தே ஒரு மாதிரி இருக்கார். என்ன பிரச்சனை?" என்று துவாரவைப் பற்றி அறிய கேள்விகளைக் கேட்டார் அவர்.
விவி, சித்தாரா இருவரும் விவானைப் பார்க்க, துஷியும் அவனை உலுக்க,"அது நேத்து எங்களுக்குள்ள ஒரு சின்ன பிரச்சனை" என்றவன் பேச்சை மாற்ற அவரோ மேலும் துவாரவின் குடும்பத்தைப் பற்றி அறிய கேள்வியைக் கேட்க முதலில் எல்லோரும் தயங்க, பெரியவர் இதுவரை சரித்திராவின் நடவடிக்கைகள் எல்லாமும் சொல்லிவிட்டு,"நிச்சயமா தம்பி உங்களுக்கு எதோ தெரியும். உங்களுக்கும் சரித்திராவுக்கும் துவாராவுக்கும் ஏதோ ரகசியம் இருக்கு? தயவு செய்து சொல்லுங்க. நீங்க சொன்னா தான் நான் ஒரு முடிவு எடுக்க முடியும். என் காலத்துக்குள்ள இவளுக்கு ஒரு நல்லது பண்ணிட்டா சந்தோசமா நிம்மதியா நான் போவேன்" என்று சொல்ல இப்போதும் விவானின் மௌனம் என்னவோ அங்கிருந்த விவி துஷி யாழ் மூவருக்கும் சந்தேகங்களை எழுப்ப, எல்லோரும் அவன் பதிலுக்காகக் காத்திருக்க, அப்போது பார்த்து துவாராவும் சரித்திராவும் வந்துவிட பேச்சை மாற்றினார்கள்.
*************
சாப்பாடு வர இன்னும் இருவது நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்பதால் மீண்டும் இளங்கோ பாருவின் கதையைத் தொடர எல்லோரும் விரும்ப ஜிட்டுவோ,"நோ கதை. நான் இப்போ கலாய்க்கிற மூடுல இல்ல. சோ சாப்பிட்டு கேட்போம். அப்போதான் நல்லா தரமான சம்பவங்களை எல்லாம் செய்ய முடியும்" என்றதும் இளங்கோ முறைத்தான்."மச்சான் நீ ஒரு பழமொழி கேட்டதில்லை? யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும். இப்போ என் டைம்" என்று கெத்தாக கால் மேல் கால் போட்டு கைகளை நீட்டி ஸ்டைல் செய்தான் ஜிட்டு.
"அண்ணா நீங்க செம கேரக்டர் தெரியுமா? உங்க கூட இருந்தா டைம் பாஸ் ஆகுறதே தெரியறதில்லை" என்று பாரு சொல்ல,"ஏய் அவன் உன் புருஷனைத் தான் கிண்டல் பண்றான். நீ என்னனா அவனுக்கு சப்போர்ட் பண்ணுற?" என்று இளங்கோ பொரிய,
"இந்த ஏரியா அந்த ஏரியா ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி தான்" என்று ஜிட்டு கெத்தா சொல்ல,
"வேணாம் அமைதியா இருடா" என்றான் இளங்கோ.
"அண்ணா அப்போ காலேஜ் லைப்ல நீங்க நிறைய சம்பவங்கள் பண்ணியிருப்பீங்க போல?"என்று சொன்னதும் சட்டென ஞாபகம் வந்தவனாய் இளங்கோ,"ஆமா ஆமா செமயா சம்பவம் பண்ணியிருக்கான்" என்றான். ஏனோ உள்ளுக்குள் ஜிட்டுவுக்கு கிலி வந்தது,'ஆஹா அப்போ நம்மள இப்போ டேமேஜ் பண்ணப் போறான். தப்பிச்சிடுடா கைப்புள்ள' என்று சொல்லிக்கொண்டு வராதா போனை எடுத்து காதில் வைத்து, "ஹலோ துபாயா என் பிரதர் மார்க் இருக்காரா? டேய் நீதான் பேசுறியா?" என்றபடி ஜிட்டு நழுவப் பார்க்க ஹேமா எட்டி அவனின் போனை பிடுங்கி,"மச்சி புது மாடலா? எப்படி கால் வராமலே பேசலாம் போலயே?" என்று வார,
எல்லோரும் சிரித்தனர்."அது முக்கியமான கால் வரும் கொடு நான் வேற லீவ் போட்டு வந்திருக்கேனா அதுனால எனக்கு ஆபிஸ்ல இருந்து கால் மேல கால் வரும். யூ நோ நான் இல்லனா அங்க ஒருவேளையும் நடக்காது" என்று பிலிம் காட்ட உண்மையிலே ஒரு அழைப்பு வர அதில் மேனேஜர் என்று காட்டவும்,"மச்சி நீயே மேனேஜர் இதுல யாரு இன்னொரு மேமேஜர்?" என்றான் ஹேமா.
"டேய் கொடுடா, அது எங்க ஜோனல் ஆபிஸ்ல இருந்து வரும் கொடுடா" என்று பிடுங்கப் பார்க்க' சிக்கிட்டான்' என்று நினைத்த ஹேமா காலை ஸ்பீக்கரில் போட்டு, 'இப்போ பேசு' என்பது போல் சைகை செய்ய,ஜிட்டுவோ திருத்திரு என்று முழித்தான்.
"ஹலோ ஜிட்டேந்திரன், இருக்கீங்களா மிஸ்டர்?"
"ஆம் சார் சொல்லுங்க. குட் அப்டேர்நூன்"
"என்ன கிண்டல் பண்றீங்களா மிஸ்டர்?"
"நோ சார். நான் சீரியஸா சொல்றேன். குட் அப்டேர்நூன்"
"ஏன் சார் நீங்க எத்தனை வருஷமா மேனேஜரா இருக்கீங்க?"
"சார் மூனு வருஷம் ப்ரொபெஸன், இப்போ ஒன்றரை வருஷமா மேனேஜர். ஏன் சார்?"
"நீங்க உண்மையிலே படிச்சு தானே பாஸ் பண்ணீங்க?"
எல்லோரும் சிரிக்க 'உஸ்' என்று எல்லோருக்கும் சொன்னவன்,"என்ன சார் என்ன கிண்டல் பண்றீங்களா?" என்று கேட்டான் ஜிட்டு. அவன் இடையில் எவ்வளவோ போராடியும் அவனால் ஹேமா கிட்ட இருந்து போனை வாங்கவே முடியவில்லை.
"நானும் இந்த ஜோனல் ஹெட்டா வந்ததிலிருந்து உங்க ப்ராஞ்சில மட்டும் எப்பயும் தப்பு தப்பா பைல் வருது. போன் பண்ணிக் கேட்டா எல்லோரும் மேனேஜரை கேளுங்கன்னு சொல்றாங்க. நீங்க லீவ்ல இருக்கீங்க? என்ன சார்" என்று சொல்ல,
"சார் அது என் மேல எந்த தப்பும் இருக்காது. நீங்க வேணும்னே என்ன கார்னெர் பண்றீங்க" என்றதும் அவரும் விடாமல் அவனின் தவறுகளைச் சொல்லிவிட்டு வைக்க,"ஆபிசர் ஆபிசர் என்ன இது?" என்றான் தியா,
"டேய் ஆனைக்கும் அடிசறுக்கும்"
"யானைக்கு சறுக்கினா பரவாயில்லை, இங்க பூனைக்கு அல்லவா சறுக்குதே?" என்று அவன் சற்று முன் தன்னைத்தானே பூனை என்றதைச் சொல்லி குத்திக்காட்டினான் இளங்கோ.
எல்லோரும் சிரிக்க,"டைமிங் காமெடி? உங்களையெல்லாம் வந்து வெச்சிக்கிறன்" என்றவன் போன் செய்யப் போக,
"மச்சி யாரு அம்சாவுக்கா போன் பண்ற?"
"ஆமாம் உனக்கெப்படி...?" என்றவன் திரும்பி இதித்ரியைப் பார்த்து,"இதி உண்மையிலே ஆபிஸ் விஷயமா தான் இதி" என்று சொல்லிவிட்டு அவன் இளங்கோவை முறைத்துச் சென்றான்.
அவன் சென்றதுமே,"மச்சி இவன் இன்னும் திருந்தவே இல்ல அதே ஆர்வக்கோளாராவே இருக்கான் போல" என்றான் ஹேமா.
"என்னடா செபா அந்த நாள் ஞாபகம் இருக்கா?" என்று கேட்க,
பாய்ஸ் எல்லோரும் சிரித்தனர்."என்ன விஷயம் ஏன் நீங்க மட்டும் சிரிக்கறீங்க? சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போம் இல்ல" என்றாள் நித்யா.
"அதுவா? அது ஜிட்டுவின் லீலைகள்" என்று சொல்லிவிட்டு அந்த நிகழ்வைச் சொன்னான்,
"எங்களுக்கு அப்போ கேட் லேப் (cad - computer aided designing) மெக்கானிக்கல் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ரொம்ப முக்கியம் அது. (ஜில்லுனு ஒரு காதல் சூர்யா மெக்கானிக்குனு திட்டுனதும் கம்ப்யூட்டர்ல டிஷைன் பண்ணுவாரே அது!) அப்செர்வேசனில் எல்லோரும் அவரவர் வரைந்ததை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டனும். மற்ற லேப் மாதிரி ஈஸி இல்லை. என்ஜின், முதலிய எல்லா பாகங்களும் வரைந்து அசெம்பிள் செய்யனும். பொதுவாக இதை கிளாசுலையே இருவரோ மூவரோ தான் செய்வோம். அவர்களுடையதையே எல்லோரும் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்வார்கள். இதுதான் நியதி. அன்று யூனிவர்சிட்டி பிராக்டிகல் நெருங்க எல்லோரும் பிரிண்ட் அவுட் எடுத்து அதை ஒட்டி சைன் வாங்கிட்டாங்க"
"எங்க கேங்கில் எல்லோரும் எடுத்து ஒட்டிட்டோம். மறுநாள் கையொப்பம் வாங்க சப்மிட் செய்ய வேண்டும்.செபா மட்டும் எடுக்கவில்லை. ஜிட்டு மட்டும் எடுத்து ஒட்டாமல் வைத்திருந்தான். அதை நாளை காலை செபா ஜெராக்ஸ் போட்டுவிட்டு தருவதாகச் சொல்லிக் கேட்க ஜிட்டுவோ தன்னிடம் கம் இல்லை என்றதும் செபா தன்னிடம் இருக்கிறது நாளை காலை தருகிறேன் என்று ஒன்றுக்கு பலமுறை சொல்லிவிட்டு செல்ல மறுநாள் காலை வந்து கேட்டால் ece பையன் கம் வெச்சியிருந்தான் அதுனால நான் ஒட்டிட்டேனு கூலாக சொல்லவும் செபா உட்பட எல்லோருக்கும் செம கோவம். ஜிட்டுவும் ஹேமாவும் ஒரே ரூம்.அன்று முதல் அடுத்து எப்போது ஜிட்டு எதைச் செய்தாலும் அவனை அதைச் சொல்லிக்காட்டியே வெறுப்பேத்திக்கொண்டு இருப்போம்.எதற்கெடுத்தாலும்,'உனக்கென்னப்பா நீ ஒரு காரியவாதி. உனக்கு உன் வேலை தான் முக்கியம். யாரு எக்கேடோ கெட்டு போனாலும் பரவாயில்லை'னு சொல்லிச் சொல்லி வெறுப்பேத்த ஒருகட்டத்தில் 'தெரியாம அன்னைக்கு ஒட்டி தொலைஞ்சிட்டேன் ஏன்டா?' என்று அவன் நொந்து நூடில்ஸ் ஆகும் வரை செஞ்சிட்டோம். ஆனால் அதைவிட ஒரு பெரிய விஷயம் அதற்கு பிறகு சிக்கியது..."
"அது என்ன விஷயம்டா?" - நித்யா
தியா தான் சிரித்துக்கொண்டே,"நீங்க எப்படிவேணுனாலும் போங்கடா"என்று ஆரமிக்க,"தயவுசெய்து என்னை மட்டும் எப்படியாவது எஸ்கேப் பண்ணிவிடுங்க டா" என்று இளங்கோ ஹேமா இருவரும் கோரஸாக ராகம் பாட ஒன்றுமே புரியாமல் பெண்கள் விழித்தனர்.
"புரியல?' என்றனர் பெண்கள் எல்லோரும்.
"எப்படி அப்பாங்கறது ஒரு வார்த்தை ஆனால் டேய் தகப்பா என்பது ஒரு எமோஷனோ அது மாதிரி தான் 'நீங்க எப்படிவேணுனாலும் போங்கடா தயவுசெய்து என்னைமட்டும் எப்படியாவது எஸ்கேப் பண்ணிவிடுங்க டா' என்பது ஒரு எமோஷன். அதுவும் ஜிட்டுவோட எமோஷன்" என்று சொல்ல,
"ஏன்?"
"அது ஒரு அடல்ட் ஒன்லி கதை"
"புரியல?"
"என்னடா சொல்வோமா?" என்று ஹேமா கேட்க தியா ஆமோதிக்க இளங்கோ தான் பாரு இங்கே இருக்கிறாள் என்று தயங்க அவர்கள் சொல்லலாமா வேணாமா என்று யோசனையில் இருந்தனர். (பயணங்கள் முடிவதில்லை...)
 
இளா,பாரு பிளாஷ் பேக் பிறகு....
துவா,சரித்திரா வோடதா...?
துவேஷ் வேற ஒருதலை ராகம் போல....
யாரை விரும்புறான்...? மிரு?
 
இளா,பாரு பிளாஷ் பேக் பிறகு....
துவா,சரித்திரா வோடதா...?
துவேஷ் வேற ஒருதலை ராகம் போல....
யாரை விரும்புறான்...? மிரு?
சரித்திராவைப் பற்றி முதலில் வரும். துவாரா பற்றி பிறகு தான் வரும். இல்லை சொல்றேன். அசாம் போனதும் நிறைய ட்விஸ்ட்ஸ் இருக்கு. நன்றி?
 
Top